விஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில்
படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு
போனோம்.... அப்போது ஒரூ அறையில் இருக்க சொன்னார்கள்.... அங்கு விஜயும்
இருந்தான்... விஜய் வேறு பள்ளியில் இருந்து அங்கு டியூசனுக்கு
வந்தான்......... நல்ல கலகலப்பான பேர்வழி..... அந்த டியூசன் பத்தாம்
வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்குத்தான் முக்கியத்துவம்
கொடுப்பார்கள்.... நாங்கள் போவோம், பேசிகிட்டு இருப்போம், இருட்டிய பின்
வீட்டுக்கு வருவோம்..... அப்படி பழக்கமானவந்தான் விஜய்...... அப்போது அவன்
மீது எந்த ஈர்ப்பும் இல்லை.... ஆனாலும், அவன் அந்த குறுகிய காலத்துக்குள்
நெருங்கி பழகினோம்..... ஆனால் அந்த நட்பு சில மாதங்களோடு
முடிவடைந்துவிட்டது...... பிறகு மூன்று வருடங்கள் நான் அவனை எங்கேயும்
பார்க்கவில்லை.... குறிப்பா சொல்லனும்னா, அவனை நான் மறந்துட்டேன்....
பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்பில் நுழைந்தோம்.... நிறைய
புதிய மாணவர்கள் எங்கள் பள்ளியில் இணைந்தனர்.....
அதையெல்லாம் எங்கள் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்து
பார்த்துக்கொண்டிருந்தோம்.... என் நண்பர்கள் அனைவரும் புதிதாக இணைந்துள்ள
ஒருசில மாணவிகளை பற்றி பயங்கரமாக பில்டப் கொடுத்துக்கொண்டிருந்தனர்....
அப்போது நான் பார்த்தது விஜயை.... என் கண்களையே என்னால் நம்ப முடியல.....
அவன் முகம் நினைவிருன்ததே தவிர, அந்த நீண்ட இடைவெளியால் அவன் பெயர் எனக்கு
மறந்துவிட்டது.... எல்லோரும் அங்கு வந்திருந்த பெண்களை
பார்த்துக்கொண்டும், அவர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தபோதும் நான் மட்டும்
விஜயை பார்த்துக்கொண்டிருந்தேன்..... முன்பு அவனை பார்த்ததற்கும்,
இப்போதிற்கும் வித்தியாசம் தெரிந்தது.... இப்போது ஒரு ஈர்ப்பு என்னுள்
எழுந்தது.... ஆனாலும் என் நண்பர்களிடமோ, விஜயிடமோ நான் இதை
காட்டிக்கொள்ளவில்லை..... நன்றாக நினைவுபடுத்திய பிறகு அவன் பெயர் எனக்கு
நினைவுக்கு வந்தது.... ஆனாலும் அவன் என்னை மறந்துவிட்டதை போல
காணப்பட்டான்..... நானாக என்னை அவனிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள
விரும்பவில்லை.... ஒருவேளை அவன் என்னை மறந்துவிட்டதாக கூறிவிட்டால்,
நிச்சயமாக அந்த வார்த்தைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால்....
ஒரு வாரமும் நான் அவனை அவன் அறியாதவாறே பார்த்து ரசித்தேனே தவிர, அவனுடன்
பேச தயங்கினேன்..... ஒரு வாரத்திற்கு பிறகு எப்போதும் தாமதமாகவே பள்ளிக்கு
வரும் நான் அன்று சீக்கிரம் வந்துவிட்டேன்..... என்னை தவிர அங்கு இரண்டு
மாணவிகள் அமர்ந்திருந்தனர்..... நான் என் பெஞ்ச்சில் அமர்ந்து வெளியே
வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.... அப்போது உள்ளே நுழைந்தான்
விஜய்..... என்னை பார்த்ததும் மெலிதாக சிரித்தான்.... நானும் பதிலுக்கு
சிரித்தேன்..... ஆனால், அவன் சிரிப்பிற்கான அர்த்தம் புரியாமல் பயங்கர
குழப்பத்தில் இருந்தேன்.... யோசித்தபடியே அமர்ந்திருந்தேன்.... அப்போது
பின்னாலிருந்து என்னை யாரோ "விக்கி" என்ற பெயர் சொல்லி அழைப்பதைப்போல
உணர்ந்தேன்.... உடனே திரும்பவில்லை.... மீண்டும் அந்த குரல் ஒலிக்கவே,
திரும்பி பார்த்தேன்...... "என்னடா விக்கி, என்னைய மறந்துட்டியா?" என்றான்
விஜய்..... அப்போது எனக்குள் எழுந்த உணர்வுகளுக்கு இப்போதுவரை அர்த்தம்
கண்டுபிடிக்க முடியவில்லை..... ஆச்சரியம் ஒரு பக்கம் சந்தோசம் மறுபக்கம்
என்று திளைத்தவாறே, அசடு வழிய அவனை பார்த்து சிரித்துவிட்டு, "இல்லடா....
நீதான் மறந்துட்டியோன்னு நினச்சேன்.... " என்றவாறு அவன் அருகில் அமர்ந்து
சில நிமிடங்கள் மதிப்பெண்கள் பற்றியும் எங்கள் பள்ளி பற்றியும்
பேசிக்கொண்டிருந்தோம்.... சிவபூசையில் கரடி புகுந்ததைப்போலன்னு
சொல்வாங்க.....ஆனால் எங்கள் பூஜையில் பல கரடிகளின் கூட்டமே புகுந்ததைப்போல
என் நண்பர்கள் ஒவ்வொருவராக வகுப்பறைக்குள் நுழையவே மனதில் கொஞ்சம்
வருத்தத்தோடு என் இடத்திற்கு சென்று அமர்ந்தேன்..... ஏக்கத்தோடு என்
இடத்திலிருந்து அவனை பார்த்தேன்.... அவன் நண்பனோடு அவன் கலகலப்பாக
பேசிக்கொண்டிருந்தான்..... நான் எல்.கே.ஜி முதல் அந்த பள்ளியிலேயே
படிப்பவன், என்னைப்போல சிலரும் அப்படி படிப்பவர்கள்தான்.... அதனால் புதிதாக
பதினொன்றாம் வகுப்பில் இணைந்த மாணவர்களோடு என் நண்பர்கள் அவ்வளவாக இணக்கம்
காட்டவில்லை.... அதனால் நானும் விஜயுடன் அடிக்கடி பேசும் வாய்ப்பு
கிடைக்கவில்லை....
என் பென்ச்சிலிருந்து பின்னால் திரும்பி நண்பனுடன் பேசுவதைப்போல விஜயை
பார்த்துக்கொண்டே இருப்பேன்.... எதேச்சையாக எப்போதாவது என்னை பார்த்தால்
அவன் சிரிப்பான், அவ்வளவுதான்..... அப்படியே சில மாதங்கள் ஏக்கப்பார்வையோடு
கழிந்தன..... நானும் என் நண்பர்கள் சிலரும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை
படிப்பதற்காக வெளியில் டியூசன் செல்ல முடிவெடுத்து, நான் எட்டாம்
வகுப்பில் சேர்ந்த டியூசனில் சேர்ந்தோம்.....
என்னோடு சேர்ந்து என் நண்பர்கள் ஏழெட்டு பேர் ஒன்றாக அங்கு சேர்ந்தோம்.... எங்களை ஓர் அறையில் அமர சொன்னார் அந்த ஆசிரியர்.... முதன்முதலில் நான் விஜயை பார்த்த அதே அறைதான் அது.... ஆனால் அப்போது அங்கு விஜய் இல்லை..... பெருமூச்சோடு அங்கு அமர்ந்தேன்.... ஆசிரியர் வந்து அறிமுக வகுப்பு எடுக்க தொடங்கினார்.... அப்போது வெளியிலிருந்து ஒரு குரல் ஆசிரியரை அழைத்தது.... வெளியே சென்ற ஆசிரியர், "ஏண்டா லேட்டு.... சரி, இன்னைக்கு இன்ட்ரோ கிளாஸ் தான்.... வா உள்ள" என்றார்..... உள்ளே வந்த அந்த மாணவர் வேறு யாருமில்லை, என் விஜய் தான்..... மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி எனக்கது.... அப்போதுதான் தெரிந்தது, விஜய் எட்டாம் வகுப்பு முதல் அந்த டியூசனில் தொடர்ந்து படிப்பதும், அதனால் ஆசிரியரோடு அவன் மிகவும் நெருக்கம் என்றும் தெரிந்தது.... எங்களை பார்த்ததும் சிரித்த விஜய், என் அருகில் அமர என்னை நோக்கி வந்தான்.... அப்போது என் நண்பன் ஒருவன் என் பக்கத்தில் நெருங்கி அமர்ந்து, விஜயை வேறு பக்கம் அமருமாறு கூறினான்..... "பாசத்த காட்டுற நேரமாடா இது?"நு மனதிற்குள் என் நண்பனை நொந்துகொண்டேன்..... விஜயுடன் அங்கு வேறு யாரும் அறிமுகம் இல்லை என்பதால் அமைதியாக யாருடனும் பேசாமல் அமர்ந்திருந்தான்..... விஜயின் வீடும் என் வீடும் ஒரே பக்கம்தான் என்பதால் , டியூசன் விட்டு போகும்போதாவது அவனுடன் பேசிக்கொண்டு போகலாம் என்று ஏழு மணி ஆகும் வரை என் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்..... டியூசன் முடிந்து என் பாசக்கார நண்பர்களை ஒரு வழியாக வழி அனுப்பிவிட்டு விஜய்க்காக என் சைக்கிளில் காத்திருந்தேன்.... ஐந்து நிமிடங்கள் கழித்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்த விஜயோடு இன்னொரு மாணவனும் வந்தான்..... நன்றாக கவனித்தபோதுதான் தெரிந்தது அது விஜயின் தம்பி என்று..... இந்த உலகத்தில் கரடிகளுக்கு பஞ்சமில்லை என்பது அப்போதுதான் நான் உணர்ந்தேன்.... அப்போதும் என்னை தாண்டி செல்லும்போது அதே சிரிப்பு விஜயிடமிருந்து.... வேறு வழியின்றி தனியாக ஏமாற்றத்தோடு என் வீட்டை நோக்கி கிளம்பினேன்.....
நாளாக நாளாக இன்னும் சில நண்பர்களும் அந்த டியூசனில் இணைந்தனர்..... இப்போது விஜய் எல்லாருடனும் ஓரளவு பழகிவிட்டான்..... வகுப்பறையில்தான் அவனுடன் அமரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் டியூசனில் அவன் அருகில்தான் அமருவேன்...... அவனுடன் நான் நன்றாகவே நெருங்கி பழகினேன்....
அவன் நட்பாக என்னுடன் பழக, எனக்குள் இருந்த ஒரு மிருகம் அவனை அடையவேண்டும் என்ற நோக்கத்துடனேயே என்னை அவனுடன் பழக வைத்தது.... விளையாட்டாக அவன் அருகில் அமரும்போது அவனை ஆங்காங்கே தொடுவதை போல தொடுவேன்... ஆரம்பத்தில் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றதும் நான் அத்துமீற தொடங்கினேன்.....என் வயதும், என் ஹார்மோன்களும் நான் என்ன செய்கிறேன் என்பதை மறக்கடித்தன..... என் அருகில் யார் இருக்கிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் பல முறை அவனிடம் அத்து மீறி இருக்கிறேன்..... அந்த நிலைமையில் அவன் எப்படி குறுகி இருந்திருப்பான் என்று இப்போதுதான் எனக்கு புரிகிறது..... அவன் என் அருகில் இருக்கும்போது நெஞ்சு படபடக்கும், மற்ற யார் பேசுவதும் தெளிவாக கேட்காது, அவனை தவிர யாரும் இல்லை என்ற உணர்வே மேலோங்கும்.... சுருக்கமா சொல்லனும்னா , நான் நானாக இருக்க மாட்டேன்..... அவனை அடையவேண்டும் என்ற ஒன்றைத்தவிர அப்போது வேறு எதுவும் முக்கியமாக தோன்றவில்லை..... நான் அவ்வளவு தொந்தரவு செய்தபோதும் அடுத்தடுத்த நாள் அவன் என்னை விட்டு விலகி செல்வதில்லை .... அதை நான் எனக்கு அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு நான் அவனிடம் சில்மிஷங்களை செய்தேன்..... அது தவறா? அவனுக்கு பிடிக்கிறதா? நான் ஏன் இப்படி செய்கிறேன்? என்ற எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை.... இப்படிப்பட்ட கேள்விகளே என்னுள் எழவில்லை என்றுதான் சொல்லணும்..... என் செய்கைகளால் நான் சிலநேரம் அவனுடன் பேச வெட்கப்பட்டாலும், அவனாகவே என்னுடன் சகஜமாக பேசுவான்..... அதுவரை நான் அப்படி அடுத்தவர்களிடம் நடந்துகொண்டதில்லை, அவனை காணும்போது மட்டும் நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்கு புரியவில்லை..... ஆனால் என் எண்ணம் என்ன என்பதை அவனுக்கு புரியவைத்துவிட்டேன், அது புரிந்தும் ஏன் என்னை அவன் இன்னும் வெறுக்கவில்லை என்ற கேள்வியும் என்னை துழைத்தது.... தனியாக சந்தித்து அவனிடம் பேசவேண்டும் (பேசவேண்டும் என்றா நினைத்தாய் என்று நீங்கள் கேட்பது புரியுது) என்று முடிவு செய்தேன்.... அப்போது விஜய் என் சகநண்பர்கள் பலரிடமும் CNC MATHS GUIDE பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம் படிப்பதற்காக கேட்டான் .... என்னிடம் அந்த புத்தகம் இருந்தது .... அவனாக கேட்கட்டும், பிறகு கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்.... ஆனால், இப்போது அந்த புத்தகத்தை சாக்காக வைத்து அவனை வீட்டிற்கு வரவழைக்க நினைத்தேன்.... அன்று மாலை அம்மா ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால், அவனை அன்று மாலை எப்படியாவது வீட்டிற்கு வரவழைத்துவிடவேண்டும் என்று நம்பியார் ரேஞ்சுக்கு திட்டம் தீட்டினேன்......
பள்ளி முடிந்து வீட்டிற்கு எல்லோரும் கிளம்ப போன நேரம் நான் விஜயை அழைத்தேன்...... அவன் நண்பர்களிடம் ஒரு நிமிடத்தில் வருவதாக சொல்லிட்டு வந்தான்..... "MATHS GUIDE செல்வாகிட்ட கேட்டியா?" என்றேன்.....
"ஆமாம்டா.... அவன்கிட்ட இல்லையாம்...." என்றான் அவன்.....
"ஏன் என்கிட்டே கேட்க மாட்டியா?" என்றேன்.....
"உன்ட்ட இருக்கா?.... மறந்துட்டேண்டா..... நாளைக்கு வரும்போது எடுத்துட்டு வரியா?" என்றான்.....
"ஏற்கனவே என் பேக் புல்லா இருக்குடா.... அந்த கைடையும் எடுத்துட்டு வர முடியாது.... சாயந்திரம் வீட்டுக்கு வா.... தரேன்" என்று கொக்கியை போட்டேன்.....
கொஞ்சம் யோசித்துவிட்டு, "டியூசனுக்கு எடுத்துட்டு வாடா" என்று மீண்டும் நழுவினான்.....
"நான் இன்னைக்கு டியூசன் வரமாட்டேன்.....வேணும்னா வந்து வாங்கிக்கோ..... வேண்டாம்னா விட்டுடு" என்று கோபத்தில் கூறுவதைப்போல கூறினேன்.....
"சரிடா வரேன்..... டியூசன் போறதுக்கு முன்னாடி வந்து வாங்கிட்டு போறேன்" என்றான்.... "ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்பதைப்போல இந்த வார்த்தையை கேட்கத்தான் நான் இவ்வளவு நாளா காத்திருந்தேன்
உடனே வீட்டிற்கு ஓடினேன்.... சாதாரணமா நான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு போனவுடன் ஒரு குட்டித்தூக்கம் போடுவேன்... ஆனால்,அன்று அதையெல்லாம் மறந்துட்டேன்..... என் பியர்ஸ் சோப் கரையும்வரை குளித்தேன்..... எனக்கு பிடித்த கருப்பு நிற சட்டை அணிந்து, வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்தேன்.... குறிப்பா என் படுக்கையை சுத்தம் செய்தேன்..... பேசணும்னு சொல்லிட்டு எதுக்கு நான் படுக்கையை சுத்தப்படுத்துறேன்னு திட்டாதிங்க..... எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான்.... வீடு முழுக்க வாசனை திரவத்தை கமகமக்க வைத்தேன்..... எல்லாம் முடிந்து ஐந்து மணி முதல் வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன்.... ஐந்தரை மணிக்கு வழக்கமாக டியூசன் தொடங்கும்.... அதனால் அவன் ஐந்து மணிக்கு வந்திடுவான்னு கணித்திருந்தேன்.... எட்டு மணிக்கு அம்மா வந்திடுவாங்க.... அதற்குள் எல்லாத்தையும் முடிச்சிடனும்னு ஒரு ஐந்தாண்டு திட்டமே தீட்டினேன்.... மணி ஆறை நோக்கி சென்றதும் எனக்கு படபடப்பு அதிகமானது.... இப்போது வீட்டு வாயிலிலேயே உட்கார்ந்துட்டேன்.....இவ்வளவு நேரம் அவன் வரவில்லயேன்னு கொஞ்சம் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தேன்..... ஏழு மணி ஆகிவிட்டது..... இதற்குமேல் அவன் வரமாட்டான் என்று நொந்தவாறே வீட்டிற்குள் சென்றேன்.... சரியாக அந்த நேரம் வீட்டு வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.... மனதிற்குள் படபடப்பு அதிகமானது..... டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்திருக்கான் போல என்று நினைத்தவாறே, அருகில் இருந்த கண்ணாடியை பார்த்து கொஞ்சம் டச்சப் செஞ்சுட்டு கதவை திறந்தேன்..... அதிர்ச்சியாக வேண்டிய நான், பேரதிர்ச்சியானேன்.... காரணம் அங்கு நின்றது என் அம்மா.... எச்சிலை விழுங்கியவாறே, "என்னம்மா அதுக்குள்ள வந்துட்டிங்க?" என்றேன்.....
"பங்க்சன் முடிஞ்சிருச்சு... அதான் வந்துட்டேன்..... நீ எங்க கிளம்பிருக்க?" என்று கேட்டார்கள்....
"எங்கயும் இல்ல.... சும்மாதான்.... " என்றவாறு என் அறைக்குள் நுழைந்தேன்.....
"இன்னைக்கு டியூசன் இல்லையா?..... நான் வர்ற வரைக்கும் வெளிலே உட்கார்ந்திருந்தியாம்.... கலா அம்மா சொன்னாங்க..... அவ்வளவு பாசமா உனக்கு" என்றார்....
"அந்த கலா அம்மாவுக்கு என்னைய கண்காணிக்கிறத தவிர வேற வேலை இல்லையா?..... டியூசன் இன்னைக்கு லீவ்.... அதான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்" என்று சமாளித்துவிட்டு படுக்கையில் படுத்துவிட்டேன்..... விஜய்க்காக விரித்த படுக்கை, இப்படி தனியா புரள விட்டானே என்ற கோபம் இன்னும் எனக்குள் அதிகமானது....
மறுநாள் அவனை பார்த்து இதைப்பற்றி கேட்கனும்னு ஒரு முடிவோட இருந்தேன்..... மறுநாள் அவனிடம் இதைப்பற்றி கேட்க விரைவாகவே பள்ளிக்கு சென்றேன்....
சிறிது நேரத்திற்கு பிறகு விஜய் உள்ளே வந்தான்..... ஆனால் சில மாணவர்கள் அங்கு இருந்ததால் வந்த வேகத்தில் அவனிடம் இதைப்பற்றி கேட்கவில்லை..... ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல என்னை பார்த்து புன்முறுவல் செய்ததோடு தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்..... அவன் வராததுகூட எனக்கு கோபமில்லை, ஆனால் வராததற்கான காரணத்தை கூட சொல்லாமல் அவன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற கோபம்தான் எனக்கு அதிகமானது..... அவன் இருக்கைக்கு அருகில் சென்று அமர்ந்தேன்..... என்னை பார்த்ததும், "ஏய், இன்னைக்கு சாயங்காலம் டியூசன்ல டெஸ்ட் இருக்கு..... நேத்து மாதிரி கட் அடிச்சிடாத" என்றான்.... "நீ ஏன்டா நேத்து கைடு வாங்க வீட்டுக்கு வரல?" என்றேன்..... "ஓ அதுவா, என் வீட்டு பக்கத்துல ஒரு அண்ணன்கிட்ட கேட்டிருந்தேன், அவர் நேத்துதான் தந்தாரு.... அதான் வரல" என்றான் சாதாரணமாக..... "டேய், நீ வருவன்னு எவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா?.... ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல?" என்றேன்.... சிரித்தவாறே, "இதுக்கு நீ ஏன்டா டென்சன் ஆகுற..... கைடு எனக்கு தேவை..... நான் அதுக்காக டென்சன் ஆனா கூட பரவாயில்ல.... " என்றான்..... அவன் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது.... ஆனால் என் கோபத்திற்கான காரணத்தை நான் அவனிடம் சொல்ல முடியாதல்லவா.... அதனால் அமைதியாகிவிட்டேன்..... இப்படியே ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் பதினொன்றாம் வகுப்பு இனிதே முடிந்தது..... இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்துவிட்டோம்..... முன்பு போல டியூசன் போக நேரம் யாருக்கும் இல்லை.... காலை எட்டு மணிக்கு தொடங்கும் வகுப்புகள் மாலை ஆறை தாண்டியும் சில நேரம் நடக்கும்.... அதற்கு மேல் வீட்டிற்கு சென்று படிக்கத்தான் நேரமிருக்கும்.... இதற்கிடையில் நான் எங்கே விஜயிடம் பழகுவது..... இரண்டு மாதங்கள் வறண்ட பாலைவனம் போல சென்றது பன்னிரண்டாம் வகுப்பு..... பின்னர் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு "நைட் ஸ்டடி (NIGHT STUDY ) " பள்ளியில் படிக்க அனுமதி கொடுத்தது.... பெரும்பாலான என் நண்பர்கள் வீடும் என் வீடும் பள்ளிக்கு வெகு அருகிலேயே இருந்ததால் தினமும் இரவு வந்து படித்து அங்கேயே உறங்கி, விடியற்காலை வீட்டிற்கு செல்வதை வழக்கமாக செய்து வந்தோம்..... அவ்வளவு ஜாலியாக இருந்தன அந்த இரவுகள் ..... இதைப்பற்றி வகுப்பில் பல மாணவர்களும் அறிய நாளடைவில் பல மாணவர்கள் இரவு பள்ளிக்கு வந்துவிட்டனர்..... அப்படி ஒரு நாள் விஜயும் அவன் நண்பனுடன் அங்கு வந்தான்..... எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி ..... இன்றைக்கு எப்படியாவது அவனை அடைந்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்..... நள்ளிரவை தாண்டியவுடன் நண்பர்கள் பலரும் படுக்க சென்றுவிட்டனர்... விஜய் படுக்கும்போது அவனருகில் படுக்க வேண்டும் என்பதால் நான் தூங்காமல் விழித்துக்கொண்டே இருந்தேன்.....இரண்டு மணி ஆகிவிட்ட போதிலும் விஜயும் அவன் நண்பனும் உறங்குவதாக தெரியவில்லை.....
அதற்கு மேல் கண்விழிக்க முடியாமல் என் நண்பர்கள் படுத்திருந்த வகுப்பறையில் பென்ச்ச்களை அடுக்கி அதன் மீது படுத்தேன்..... நன்றாக ஆழ்ந்து உறங்கிய நேரம் அருகில் யாரோ புரண்டு படுப்பது தெரிந்தது.... பக்கத்தில் படுத்திருந்தவனின் கை என் மீது இருந்தது..... என்னால் கண்களை திறக்க முடியவில்லை .... எப்படியோ முயன்று திறந்து பார்த்த எனக்கு ஆச்சரியம்..... அது என் விஜய்..... எப்போது அவன் படுத்தான்?... எதற்காக அவன் என் பக்கத்தில் படுத்தான்?... அவனுடைய கை என் மீது போட்டிருப்பதன் காரணம் என்ன?... அவன் நிஜமாகவே இப்போது உறங்கிவிட்டானா? என்ற ஆயிரம் கேள்விகள் என்னை துழைத்தன..... அவன் கைகளை எதேச்சையாக போட்டிருந்தாலும் கூட , அப்போது நான் காரணத்தோடுதான் போட்டிருப்பான்னு நினைத்தேன்..... விஜயிடம் சில்மிஷங்கள் செய்வது ஒன்றும் புதிதல்ல..... முயற்சி செய்து பார்க்கலாம்....என்று நினைத்தவாறே என் வேலைகளை தொடங்கினேன்.... எல்லாம் முடிந்தபிறகும் அவனிடமிருந்து ஒரு பதிலையும் காணவில்லை..... எல்லாம் முடிந்த களைப்பில் சில நிமிடங்கள் படுத்திருந்தேன்.... இப்போது ஓரளவு விடிந்துவிட்டது...... எழுந்து சென்று வெளியில் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்..... அப்போது விஜய் எழுந்து வருவதை கவனித்தேன்..... கண்டுகொள்லாதவனை போல புத்தகத்தை புரட்டினேன்.... அவனுடன் முகம் கொடுத்து பேச என் மனம் உறுத்தியதால் அவ்வாறு செய்தேன்..... வெளியே வந்தவன், என்னை பார்த்ததும் , "என்ன விக்கி, ரொம்ப படிக்காத..... என்ன படிச்சாலும் டெஸ்ட்ல காட்டிரு எனக்கு" என்று சிரித்தான்.... அவன் சகஜமாக பேசியது எனக்குள் குழப்பத்தை அதிகமாக்கியது... அப்படியானால் இரவில் நடந்த எதுவும் அவனுக்கு தெரியாதா?..... அந்த இரவை நினைத்து மகிழ்ச்சியாவதா அல்லது அவனுக்கு இவை தெரியவில்லையோ என்று குழம்புவதா என்பதும் எனக்கு புரியவில்லை.... அடுத்த நான்கு நாட்கள் அவன் நைட் ஸ்டடி வரவில்லை.... ஆனால், வழக்கம்போல என்னிடம் பார்க்கும் நேரங்களில் பேசினான்.... அவன் மனதில் என்ன இருக்கிறதென்று என்னால் புரிந்துகொள்ளவே முடியாமல் குழம்பினேன்.... அதை எப்படி புரிந்துகொள்வது என்றும் எனக்கு தெரியவில்லை.....
சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அன்று இரவு பள்ளிக்கு வந்தான் விஜய்.....
ஆனால் இம்முறை அவன் விருப்பத்தை அறியாமல் எதுவும் இனி செய்ய வேண்டாம் என்ற முடிவோடு பத்து மணிக்கெல்லாம் நான் படுக்க சென்றுவிட்டேன்.... என்னோடு சில நண்பர்களும் படுத்திருந்தனர்..... ஆழ்ந்து உறங்கிய நேரம்.... மணி நிச்சயம் ஒரு மணிக்கு மேல் இருக்கலாம்..... கடந்த முறையை போலவே என் மீது ஒரு கை பட்டது..... மெல்ல விழித்து பார்த்தேன்.... எதிர்பார்த்தது போலவே அது விஜய்தான்.... ஆனால் இம்முறை நான் அவரசப்பட விரும்பவில்லை.... அமைதி காத்தேன்.... அந்த கை என் மீது வருட தொடங்கியது..... என் மனம் முழுக்க மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிரம்பின.... அவன் கைகள் என் கன்னங்களை வருடின.... அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியாமல் அவனை கட்டிப்பிடித்தேன்.... ஆனால் கடந்த முறையை போல எங்களால் சகஜமாக தழுவ முடியவில்லை.... எங்கள் இருபுறத்திலும் நண்பர்கள் சூழ்ந்து இருந்ததால் அமைதியாக இருந்தேன்.... அப்போது விஜயின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி, "மாடில இருக்குற கிளாஸ்'கு போகலாம் வா" என்றேன்..... நான் அவ்வாறு கூறிவிட்டு எழுந்து முன்னே சென்றேன்.... அப்போதும் சில மாணவர்கள் வெளியே படித்துக்கொண்டிருந்ததால் அவர்களுக்கு தெரியாமல் மாடிக்கு சென்றேன்.... நான் அவன் காதுகளில் கூறினேனே தவிர அவன் வருவானா? என்ற ஐயம் எனக்குள் இருந்தது.... நான் சொன்ன வகுப்பறையில் அந்த இருளில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன்..... ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் அவன் வரவில்லை..... அப்படியானால் விஜய் இவற்றை எல்லாம் அவன் தெரிந்தே செய்யவில்லையா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது..... கீழே இறங்கி போகலாம் என்று படிகளில் இறங்கியபோது விஜய் மேலே வருவதை கண்டேன்.... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.... என்னை பார்த்ததும் அவன், "என்னடா இங்க நிக்குற?..... தூக்கம் வரலையா?" என்றான்..... மீண்டும் ஒருமுறை என்னை குழப்பினான்..... அப்படியானால் நான் சொன்னதனால் அவன் அங்கு வரவில்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டவாறு நின்றேன்...... என் பதிலை எதிர்பார்க்காமல் அவன் நேராக நான் சொன்ன வகுப்பறையில் கிடந்த பெஞ்ச்களில் படுத்தான்..... இப்போது நான் என்ன செய்வது என்று குழம்பி நின்றேன்.... இருந்தாலும் ஆனது ஆகட்டும் என்று நினைத்தவாறு நானும் அந்த வகுப்பறையில் அவனருகில் படுத்தேன்.... படுத்து ஐந்து நிமிடத்திற்குள் அவன் உறங்கிவிட்டதைப்போல இருந்தான்.... என்னை முழுக்க சூடேற்றி விட்டதன் விளைவாக அவனை கட்டிப்பிடித்து என் வேலைகளை தொடங்கினேன்..... அந்த இரவும் அவன் உறக்கத்தில் இருந்ததைப்போலவே இருந்துவிட்டான்..... ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது.... அவனுக்கு இவையெல்லாம் பிடித்திருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள தயங்குகிறான் போல என்று நினைத்துக்கொண்டேன்.....
அவனை எப்படியாவது அந்த கூச்ச்சத்திளிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.... அந்த வார ஞாயிற்று கிழமையில் அம்மா ஒரு திருமணத்திற்கு செல்ல போகிறார் என்று தெரிந்தது.... அந்த நாளை நான் அவனுக்கான நாளாக குறித்துவைத்துக்கொண்டேன்...... சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து அவன் வீட்டிற்கு செல்லும் முன் அவன் காதருகில், "நாளைக்கு காலையில வீட்டுக்கு வாடா..... அப்பா அம்மா ரெண்டு பெரும் ஊருக்கு போய்ட்டாங்க..... மதியம்தான் வருவாங்க" என்றேன்..... அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவன் வீட்டிற்கு சென்றான்..... ஞாயிற்றுக்கிழமை அவன் வருவானா ? என்கிற குழப்பத்தில் சனிக்கிழமை மாலை கழிந்தது..... வழக்கம்போல சனிக்கிழமை நள்ளிரவில் சூர்யா டிவியில் போடும் சகிலா படத்தை ரசித்துவிட்டு உறங்க ஒரு மணி ஆகிவிட்டது..... மறுநாள் காலை எழும்போதே விஜயின் நினைவுகளடு எழுந்தேன்.... அவன் வரமாட்டான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது..... மணி ஒன்பது ஆகி இருந்தது..... மெதுவாக எழுந்து குளித்துக்கொண்டிருக்கும்போது வீட்டு அழைப்பு மணி அடித்தது..... அவசர அவசரமாக துண்டை கட்டிக்கொண்டு கதவை திறந்தேன்..... அது எனக்கு இன்ப அதிர்ச்சி..... ஆம், அங்கு நின்றது விஜய்.... ஆனால் வழக்கம்போல அவன் வேறு ஒரு காரணத்துடன் வந்ததாக கூறினான்.... என்னை பார்த்ததும் சிரித்த விஜய், "உன்னோட சயின்ஸ் புக் ஒரு நிமிஷம் தாடா.... என்னொடத ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டேன்" என்றான்.... இவனை திருத்தவே முடியாது என்ற எண்ணத்தில் அந்த புத்தகத்தை நான் எடுத்துக்கொடுத்தேன்.... புத்தகத்தை வாங்கியவன் வீட்டிற்கு செல்லாமல் கொஞ்சம் மருகியபடி நின்றான்.... அதை புரிந்துகொண்ட நான், கதவை தாழிட்டேன்.... அவனை பின்புறமாக நின்று கட்டி அணைத்தேன்....அவன் மறுப்பேதும் காட்டவில்லை..... அதற்கு மேல் அவனும் மறுக்காமல் திரும்பி கண்களை மூடிக்கொண்டு என்னை ஆரத்தழவி முத்தம் கொடுத்தான்.... அந்த நிமிடம் விஜய்க்குள் இருந்த அந்த கூச்சம் காற்றோடு கரைந்துபோனது..... அப்படியே அவனை கட்டிலில் கிடத்தி அவனை முழு நிறைவோடு அடைந்தேன்..... முழுவதுமாக அடைந்தேன்...... அன்றைய நாளை என்னால் மறக்க முடியாது..... பத்து மணி அளவில் வந்தவன், அவன் வீட்டிற்கு திரும்பும்போது பன்னிரண்டு மணியை தாண்டி இருந்தது.... இம்முறை அவன் என்னுடன் எதுவும் பேசவில்லை.... பொதுவாக நான் தான் அவனுடன் பேச தயங்குவேன், இம்முறை வெட்க மிகுதியால் செல்லும்போது கூட சிரிப்பை மட்டுமே உதிர்த்தவாறு சென்றான்......
அதன் பிறகு வாரத்தில் நான்கு நாட்களாவது எங்கள் உறவு பள்ளியில் ஏதேனும் ஒரு வகுப்பறையில் அரங்கேறும்..... இரண்டு மூன்று மாதங்கள் அவ்வளவு இனிமையான வாழ்க்கையை அதன் பிறகு நான் இதுவரை உணரவே இல்லை....
இந்த உலகத்தில் என்னைவிட சந்தோஷமானவன் வேறு யாருமில்லை என்று நான் உணர்ந்த அந்த நாட்களை இன்னும் நினைவு கூர்ந்து மகிழ்வேன்..... ஆனால் அப்போது எங்களை தற்காலிகமாக பிரித்தவர் ஐயப்பன்..... கடவுள் அய்யப்பனைத்தான் சொல்றேன்.... ஆம், சபரிமலை கோவிலுக்கு அவன் மாலை போட்டான்.... நாற்பது நாட்கள் விரதம் என்றதும் மனமுடைந்து போனேன்.... ஆனாலும் நானும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவன் என்பதால் அமைதியாகிவிட்டேன்..... எப்போதாவது சந்தித்து பேசிக்கொள்வோம், மற்றபடி வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை..... அந்த நாற்பது நாட்கள் என்னை மிருகமாக்கியது..... நைட் ஸ்டடிகளில் என் வேலைகள் தொடங்கியது..... விஜய் கொடுத்த தைரியத்தால் வேறு சில நண்பர்களுடன் எனக்கு பழக்கம் உண்டானது..... சிலரை நான் தேடி சென்றேன், சிலர் என்னை தேடி வந்தனர்..... அந்த நாற்பது நாட்களும் விஜயின் பிரிவை நான் உணரவே இல்லாத அளவிற்கு புதுப்புது அனுபவங்கள் என்னை திசை திருப்பியது..... ஏழெட்டு நண்பர்களுடன், தினம் ஒருவன் என்று என் பதின வயதிற்கு விருந்து வைத்தனர்..... அந்த வயது என்னை வேறு திசையை நோக்கி சிந்திக்க வைக்கவில்லை..... எனக்கு அப்போதைய சிற்றின்பம் தான் தேவைப்பட்டதே தவிர, மற்ற எதைப்பற்றியும் யோசிக்க கூட என் மனம் விரும்பவில்லை..... நாற்பது நாட்களுக்கு பிறகு விரதம் முடிந்து பள்ளிக்கு வழக்கம் போல இரவு வந்தான் விஜய்..... அவன் பார்வையில் ஏக்கமும் காமமும் தெரிந்தது.... நானும் அவனை அனுபவிக்க ஆவலாகத்தான் இருந்தேன்.... இருந்தாலும் நான் சீக்கிரம் படுக்க சென்றேன்.... அங்கே ஏற்கனவே ஒரு நண்பன் படுத்திருந்தான்.... விஜய் வரும்வரை அவனை சீண்ட வேண்டாம் என்று உறங்க ஆயத்தமானேன்..... ஆனால், என் அருகில் படுத்திருன்தவன் என்னை சீண்டவே, நான் மறுக்க முடியாமல் அவனுக்கு ஒத்துழைத்தேன்...... எல்லாம் முடிந்து நான் கைகளை கழுவிவிட்டு மீண்டும் உறங்க முயன்றபோது விஜய் என் பக்கத்தில் வந்து படுத்தான்.... எனக்கு தர்ம சங்கடமான நிலைமை.... என்னால் அப்போதைக்கு அவனுடன் கலக்க முடியாது என்பதால் உறங்கிவிட்டதை போல நடித்தேன்.... அவன் கைகளை என் மீது போட்டான்..... ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை..... நான் அவனை புறக்கணிப்பதை போல வேறு பக்கம் திரும்பி படுத்தேன்..... இந்த விஷயம் அவனை எந்த அளவிற்கு துன்புறுத்தி இருக்கும் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.... அதுதான் அவனுடனான என் கடைசி இரவு என்பதையும் நான் அப்போது அறிந்திருக்கவில்லை.... அதன் பிறகு அவன் என்னை தொந்தரவு செய்யவில்லை... நானும் அவனை பொருட்படுத்தாமல் உறங்கிவிட்டேன்.... நள்ளிரவை தாண்டி எனக்கு விழிப்பு வந்தது.... இப்போது விஜயை ஒரு வழி பண்ணிடலாம் என்ற எண்ணத்தோடு திரும்பினால் அவனை அங்கு காணவில்லை..... எங்கு சென்றிருப்பான் என்று எனக்கு புரியவில்லை..... வெள்யே சென்று வேறு வகுப்பறைகளில் படுத்திருக்கிரானா என்று தேடினேன்.... எங்குமில்லை.....
அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்த என் நண்பனிடம், "எங்கடா விஜயை காணும்?..... டீ குடிக்க போயிருக்கானா?" என்றேன்..... அதற்கு அவன், "இல்லடா.... அவன் பதினொரு மணிக்கு வீட்டுக்கு போய்ட்டான்.... இருட்டுல ஏன் போறான்னு தெரியாமல், காலைல போடான்னு சொன்னேன்.... அவன் கேட்காமல் போய்ட்டான்" என்றான்.... அவன் எந்த அளவிற்கு மனம் நொந்திருப்பான் என்று எனக்கு புரிந்தது.... ஆனாலும் அதை அறிந்து அதை களைய எனக்கு தோன்றவில்லை.... காரணம், அப்போதைக்கு எனக்கு தேவைப்பட்டது அனுபவிக்க ஒரு உடல்.... விஜய் இல்லாவிட்டாலும் , அதை எனக்கு கொடுத்திட பலர் இருந்தனர்..... அதனால் விஜயை நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.....
அதற்கு பிறகு இருவரும் சிலநாட்கள் பேசிக்கொள்ளவில்லை...... பொதுவாக நான் உறவு கொள்ளும் நபர்களிடம் பெரும்பாலும் பேச்சு குறைந்துவிடும்.... அப்போதெல்லாம் நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன்.... ஆனால் விஜயுடன் பேசாமல் இருந்த நாட்களில் ஏதோ பெரிய இழப்பை சந்தித்தவனைப்போல காணப்பட்டேன் ..... எப்போதும் ஒருவித எரிச்சலுடனே இருந்தேன்.... விஜயுடன் பேசவேண்டும், பழகவேண்டும் , சண்டை போடவேண்டும் , பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று என்னென்னமோ தோன்றியது .... ஆனால் முன்பை போல எனக்கு அவன் உடல் இப்போதைக்கு பெரிதாக படவில்லை .... அதனால் நானாகவே வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு அவனுடன் பேச முற்பட்டேன்..... சிறிது தயக்கத்திற்கு பின்பு அவனும் என்னுடன் பழையபடி பேசினான்..... நான் பலருடனும் தொடர்பில் இருப்பது அவனுக்கு முன்னரே தெரியும், அவன் என்னை தவிர வேறு யாருடனும் தொடர்பில்லை என்பது எனக்கு தெரியும்.... இப்போது நாங்கள் பழகும் உறவிற்கு என்ன அர்த்தம் என்பது எங்கள் இருவருக்கும் புரியவில்லை.... அவன் நட்பு மட்டும் எனக்கு தேவைப்படவில்லை, அதே நேரத்தில் அவன் உடல் மட்டும் எனக்கு தேவைப்படவில்லை.... நட்பினை தாண்டிய, காமத்திற்கு முந்தைய அந்த உறவிற்கு என்ன பெயர்?.... கே உறவுகளே பெரிய தவறு என்று நான் கருதிய காலம் அது.... எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் கே செயல்களில் ஈடுபட்டார் என்பதால் அவருடன் பேசவே நாங்கள் தயங்கிய நேரம் அது.... அந்த அளவிற்கு கே பற்றிய எந்த புரிதலும் எங்களுக்கு இல்லை.... அந்த நேரத்தில் நான் விஜய் மீது கொண்டுள்ள அந்த ஈர்ப்பை காதலாக என்னால் கருத முடியவில்லை.... நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்பதால் அந்த உறவிற்கு பெயர் சூட்டாமலே இருவரும் பழகினோம்..... அப்போதும் அவன் இரவு படிப்பதற்கு பள்ளிக்கு வருவான்.... ஆனால் அதன்பிறகு நான் அவனை ஒருமுறை கூட உறவு கொள்ளவில்லை..... பள்ளியின் மூன்றாம் தளத்தில் அமர்ந்து சில நாட்கள் விடியும்வரை பேசுவோம்.... நிலவு வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் பேசிய அந்த நாட்கள் இன்றைக்கும் நீங்காத நினைவுகள்தான்..... பலவற்றை பற்றியும் பகிர்ந்துகொண்டோம்..... சில வாரங்கள் அப்படி கழிந்தது..... பொதுத்தேர்வு வந்தது..... அவனுடன் பேசக்கூட நேரமில்லாத அளவிற்கு மன அழுத்தம் இருந்த நாட்கள் அது.... ஆனாலும் அவ்வப்போது பேசிக்கொள்வோம்..... தேர்வுகள் முடிந்து கல்லூரியில் இணைந்த பிறகு எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த அந்த பெயர் இல்லா உறவும் முற்று பெற்றது..... என் நண்பர்களுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலான இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது..... அப்போது அலைபேசியும் புழக்கத்தில் இல்லை என்பதால் தொடர்பற்று போய்விட்டோம்..... என் முதல் வருட விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது அவன் வீட்டு பகுதியில் விசாரித்தேன்......
குடிபெயர்ந்த அவன் குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு போய்விட்டதாக அவர்கள் உறவினர்கள் கூறினார்கள்..... அதற்கு முன்பும் பின்பும் நான் பலருடன் தொடர்பில் இருந்தாலும் கூட இப்போதும் அவன் நினைவை என்னால் அகற்ற முடியவில்லை..... எவ்வளவோ முயன்றும் அவன் அலைபேசி எண்ணை கூட நான் கண்டுபிடிக்க முடியவில்லை..... எட்டு மாதங்களுக்கு முன்பு என் நண்பன் திருமணத்திற்கு சென்றேன்..... அங்கு நான் மீண்டும் விஜயை பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை..... ஆள் கொஞ்சம் கூட மாறவில்லை..... மீசை மட்டும் கொஞ்சம் வளர்ந்திருந்தது..... அவனை பார்த்த அதிர்ச்சியில் திகைத்து நின்றேன்..... வழக்கம்போல என்னை பார்த்த அவன் சிறு அதிர்ச்சியும் ஆகாமல் அவனுடைய வழக்கமான புன்சிரிப்பை உதிர்த்தான்..... அந்த திருமணத்தில் நான் அவனை எதிர்பார்க்கவே இல்லை..... என் பேச்சை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை.... வழக்கம்போல அவனே தொடங்கினான்.... நானும் அவனும் விரிவாக பேச அது நேரமில்லை என்றாலும் அந்த ஐந்து நிமிடங்கள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது..... பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு அவன் அலைபேசி எண்ணை கேட்டேன்..... கொடுத்தான்.... பதிலுக்கு அவன் என் எண்ணை கேட்பான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.... அவன் கேட்கவில்லை.... எல்லாவற்றையும் மறந்துவிட்டானோ என்று கொஞ்சம் மனம் வருந்தியது.... இருந்தாலும் நான் விடுவதாக இல்லை.... என் அலைபேசியிளிருந்து அவன் அலைபேசிக்கு அழைத்தேன்..... அவன் யாருடைய எண் என்று தெரியாமல் குழம்புவான் என்று நினைத்த எனக்கு வியப்பு.... காரணம் நான் அழைத்த மறுகணம் எண்ணை பார்த்து "எதுக்குடா கால் பண்ணின?" என்றான்..... என் எண் அவனிடம் எப்படி என்று புரியாம, "என் நம்பர் உனக்கு தெரியுமா?" என்றேன்.... அவன் அலைபேசி திரையை எனக்கு காட்டினான், அதில் என் பெயர் சேமிக்கப்பட்டுஇருந்தது.... ஆச்சரியத்துடன், "எப்போடா உனக்கு கிடச்சுது?" என்றேன்..... "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி" என்று கூறிவிட்டு சிரித்தான்..... என் முகத்தில் அறைந்ததை போல இருந்தது அவன் பதில்.... இத்தனை வருடங்களாக அவனை தேடினேன், அவன் தொடர்பு எண்ணை தேடினேன்னு சொல்வதெல்லாம் என்னை சமாதானப்படுத்திக்கொள்ளத்தான்...... அவன் எப்படியோ என் அலைபேசி எண்ணை வாங்கி வைத்திருக்கும்போது நான் நிச்சயம் தோற்றுவிட்டேன் என்றுதான் சொல்லணும்.... அவன் இரண்டு மாதம் கழித்து பொங்கலுக்கு ஊருக்கு வருவதாக கூறினான்.... நான் அவன் எண்ணை வாங்கினேன் தவிர அவனிடம் என்ன பேசுவது? எதை பேசுவது? என்று புரியாமல் சில நாட்கள் பார்வட் மெசேஜ்'கள் மட்டும் அனுப்பினேன்.... பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுக்கு நான் குறுந்தகவல் அனுப்பினேன்.....
"ஹாய் விஜய்"
"ஹாய்டா"
"எங்க இருக்க?.... "
"சென்னைல"
"ஊருக்கு எப்போ வருவ?"
"பொங்கலுக்கு அடுத்தநாள் அங்க பாட்டி வீட்டுக்கு வருவேன்..."
"வரும்போது மெசேஜ் பண்ணு.... உன்ன பார்க்கணும்"
"கண்டிப்பாடா"....
இதுதான் நானும் அவனும் கடைசியாக பரிமாறிய குறுந்தகவல் கூட..... போகி அன்று நான் வழக்கம் போல என் நண்பர்களை சந்திக்க போனேன்.... அப்போது கடையில் நின்ற ராஜேஷை கவனித்தேன்..... விஜயின் உற்ற நண்பன்..... அவனை பார்த்து பேசினேன்.... "என்ன ராஜேஷ்.... ஆளே பார்க்க முடியல..... விஜயை நம்ம ராஜா கல்யாணத்துல பார்த்தேன்.... அதுக்கு கூட நீயல்லாம் வரலயேப்பா..." என்றேன்...."ஆமா..... சிங்கப்பூர்ல இருக்கேண்டா நான்.... இப்போதான் லீவுக்கு வந்தேன்.... விஜய் கூட இந்த லீவுக்கு இங்க வர்றதா சொன்னாண்டா" என்றான்.....
நான் அதை தெரிந்ததைப்போல காட்டிக்கொள்ளாமல், "ஓ அப்படியா?.... சரி சரி" என்று பேசிவிட்டு கிளம்ப போகும் முன் அவனிடம், "அடுத்து எப்போடா பார்க்கலாம்??" என்றேன்.....
"அடுத்து நிச்சயம் விஜய் கல்யாணத்துல பார்க்கலாம்" என்றான்.....
அதை கேட்ட நான் அதிர்ச்சியானாலும் அதை காட்டிக்கொள்ளாமல், "என்னடா சொல்ற?... அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் இருக்கோ" என்றேன்....
"இல்லடா..... இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள ஆகிடும்.... பொண்ணு கூட பார்த்துட்டாங்கடா.... கண்டிப்பா எல்லாரையும் கூப்பிடுவான்.... நீயும் வந்திடு" என்றான்.... அந்த கனம் நான் கட்டிவைத்த கனவு கோட்டைஎல்லாம் இடிந்து விழுந்தது.... அவன் பிடிபடாமல் குறுந்தகவல் அனுப்பியதன் நோக்கம் எனக்கு புரிந்தது.... அவன் கூறியதை போல பொங்கல் சமயத்தில் எனக்கு அவன் குறுந்தகவலும் அனுப்பவில்லை.... நானும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்..... இன்னும் சில மாதங்களுக்கு பிறகு அவனுக்கு திருமணம் ஆக இருக்கிறது.... அதற்குத்தான் இனி அவன் என்னை அழைப்பான் என்றும் எனக்கு தெரியும்..... அரும்பும் முன்னரே கருகிய காதலாக மாறிவிட்டது.... ஆனாலும் அந்த நினைவுகளை இப்போது நினைத்து ரசிப்பது கூட ஒரு சுகமான சுமையாகத்தான் இருக்கிறது..... அவனை இனி மறக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.... ஆனா நிச்சயம் வேறு ஒருவரை நினைக்க முடியாது என்பது மட்டும் தெரிகிறது.... கே உறவு என்பது உடல் உறவுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்று தெரியாமல் நான் உண்டாக்கிய விரிசல்தான் இன்றைக்கு பெரியதொரு பிளவாக மாறிவிட்டது..... கரண்ட் கம்பத்தை காணும் நாய் காலை தூக்குவது போல, அழகான ஆண்களை பார்க்கும்போது _ளை தூக்குவது மட்டும் கே அல்ல.... அதையும் தாண்டிய புனித உறவுகளும் உணர்வுகளும் இருக்கிறது என்று சொல்லாமல் சொன்ன என் காதலன் விஜய்தான் நான் எழுதிய இத்தனை கதைகளுக்கும் உயிர் கொடுத்தவன்..... அந்த சூழலையும், சமுகத்தையும், என் வயதையும், ஹார்மோன்களையும் குற்றம் சொல்லிவிட்டு இதிலிருந்து நான் தப்பிக்க விரும்பவில்லை..... என் தவறுதான் பிரதானமானது..... என் தவறுக்காக அவனிடம் ஒரு "மன்னிப்பு" கேட்கும் சந்தர்ப்பத்தையாவது அந்த கடவுள் எனக்கு உருவாக்கி தருவார் என்று நம்புகிறேன்.... மன்னிக்கும் அளவிற்கு சிறிய தவறுகளை நான் செய்யவில்லை என்பதும் எனக்கு தெரிகிறது.... அவன் உடலை மட்டுமே ரசித்து அவன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவு இழிவான செயல் என்று எனக்கு இப்போது தெரிகிறது.... ஆனால் இது காலம் கடந்த சிந்தனை.... இதனால் யாதொரு பயனும் இனி இல்லை.... அதற்கு பின்பு சிலருடன் எனக்கு ஈர்ப்பு உண்டானாலும் அவையெல்லாம் நிச்சயம் காதல் இல்லை என்பது இப்போதுதான் எனக்கு உணர்த்துகிறது விஜயின் நினைவுகள்.... இதுவரை என்றாவது எங்கள் காதல் வெல்லும் என்ற நம்பிக்கை எங்கோ என் மனதின் ஓரத்தில் இருந்தது..... அந்த நம்பிக்கையில் இருந்த நான், இனி மொத்தமாக என்னைவிட்டு விலகப்போகிறான் என்று நினைக்கும்போது மனது வலிக்கிறது..... என் கதையின் தலைப்பு போல காதல் - ஒரு வலி மிகுந்த சுகம்தான்..... விஜய்- என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவன்.......