Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 5 August 2012

கே பற்றிய வரலாற்று ஆய்வுகள்....

கே உறவு பற்றி கொஞ்சம் வரலாற்றை பார்ப்போமா?.....

முதன்முதலில், 1800 முற்பகுதியில் ரிச்சர்ட் வான்க்ராப்டிங் எபிங் இவர்தான் முதன்முதலில் ஓரின சேர்க்கை என்பதும், ஓரின விருப்பம் என்பதும் ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது....... அது தவறில்லை..... உடல் குறைபாடும் இல்லை என்றார்.... முதன்முதலில் மக்கள் ஓரின சேர்க்கை பற்றி அறிந்தது இவர் மூலம்தான்...... குரு விட்டு சென்ற பணியை சிஷ்யர் தொடர்வதுதானே மரபு...... அது போல, இவரின் மாணவர் சிக்மன்ட் ப்ராயிடுதான் இதைப்பற்றி மேலும் ஆய்வுகள் செய்தார்.........


வியன்னாவில் இருந்த சிக்மன்ட் பிராயிடு அடிப்படையில் நரம்பியல் மருத்துவர் என்றாலும் உளவியல் ரீதியாகவும் செக்ஸ் பற்றியும் நிறைய சொன்னவர் இவர்.... கனவுகள் பற்றியும், ஆழமான வேட்கைகள் பற்றியும் கூறிய இவர் கருத்துகளைவிட செக்ஸ் பற்றிய கருத்துகள் இவரை விமர்சனத்திற்கு ஆளாக்கியது.... இவர் சொன்ன இரண்டு கருத்துகள்தான் இன்னும் அருமையானது..... ஒன்று, கே உணர்வு என்பது ஒருவரின் சிறுவயது பாலியல் நிகழ்வுகள்தான் தீர்மானிக்கிறது..... இரண்டு, எந்த ஆணும் சூழ்நிலையின் காரணமாக கே'வாக மாறும் வாய்ப்பு உள்ளது...... இந்த கருத்துகளை நான் நிச்சயமாக நம்புறேன்..... இவருக்கு பின்பு பலர் பல கருத்துகளை கூறினாலும், நான் இந்த கருத்துகளை முழுமையா நம்புறேன்.....ப்ராயிடு இருந்த காலத்தில் இன்னொரு செக்ஸ் ஆராய்ச்சியாளரும் ஓரின சேர்க்கை பற்றி எழுதி பரபரப்பானார்...... அவர் வில்லாதி வில்லன் என்றுதான் சொல்லணும்..... கே பற்றிய கருத்துகளில் புரட்சியை இவர் ஏற்படுத்தினார் என்று சொன்னாலும் அது மிகையாகாது.....



அவர்தான் ஹர்ஸ்ஃபீல்ட் .... ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட ஜெர்மனியில் 1800 களின் பிற்பகுதியில் ஒருவர் பாப்புலராக வாழ்ந்தார் என்றால் அது இந்த ஹர்ஸ்ஃபீல்ட்தான்..... இவர் அடிப்படையில் TRANSVESTISM எனப்படும் பாதிப்பு இவருக்கு இருந்தது..... அதாவது CROSS DRESSERS என்று நாம் சொல்கிறோம் அல்லவா.... அதேதான்.... இவர் ஓரின பிரியர் என்பதோடு மட்டும் இல்லாமல் இவருக்கு இத்தகைய பாதிப்பும் இருந்தது..... இந்த TRANSVESTISM என்கிற வார்த்தையை இதற்கு சூட்டியதே இந்த ஹர்ஸ்ஃபீல்ட் தான்.... இவர்தான் முதல் முதலில் அரவானிகளுக்கும், ஓரின விரும்பிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உலகிற்கு உணர்த்தினார்..... GAY , transvestism , transgender மூன்றும் வேறு வேறு என்று விளக்கம் கொடுத்தவர் இவர்தான்.... ஆரம்பத்தில் மொத்தமாக செக்ஸ் பற்றி எழுதி பேசி வந்தாலும், பிற்காலத்தில் முழுக்க முழுக்க ஓரின சேர்க்கை பற்றி மட்டுமே கருத்தரங்கங்கள் நடத்தினார்....

அந்த கால கட்டத்தில் ஓரின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று ஜெர்மனி அரசு சொன்னது...... ஆனால் கோபமுற்ற ஹர்ஸ்ஃபீல்ட் ஒரு இயக்கத்தை தொடங்கி ஓரின உரிமைகளுக்காக போராடினார்..... அவர் சொன்ன கருத்துகள் பலரையும் யோசிக்க வைத்தது.... அதாவது, "பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதற்காக , இடது கை பழக்கம் உடையவர்களை குற்றம் சொல்ல முடியுமா?... அதைப்போல பெரும்பாலானவர்கள் அடுத்த பாலினத்தின் மீது நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக, ஓரின விரும்பிகளை குற்றம் சொல்ல கூடாது.... அது இயற்கை..... அதை ஏற்பதுதான் மனிதத்தன்மை" என்றார்..... எவ்வளவு ஆழமான கருத்து...... இப்போது இந்தியாவில் நாம் பேச முடியாத கருத்தை, ஒரு மனிதர் 1800 களின் இறுதியில் ஹிட்லர் போன்ற ஒருவன் ஆட்சி நடத்திய நேரத்தில் சொல்ல துணிகிறான் என்றால் உண்மையாகவே ஹர்ஸ்ஃபீல்ட் ஓரின விரும்பிகளின் காவல் தெய்வம்தான்.... இவரின் முன்னெடுப்பால் பெர்லின் மற்றும் பல நகரங்களில் கே நண்பர்களுக்கான பார்கள், நடன அரங்குகள், சந்திப்பு இடங்கள் என்று பட்டவர்த்தனமாக நிறுவப்பட்டது..... கிராமத்து இளைஞர்கள் மத்தியில் கூட விழிப்புணர்வு உண்டானது..... ஆனாலும் இதற்கெல்லாம் ஹர்ஸ்ஃபீல்ட் வாங்கிய பரிசுகள் அடிகளும் உதைகளும்தான்....
ஆனாலும் ஓரின சேர்க்கை பற்றி முதன்முதலாக ஒரு திரைப்படம் வெளிவந்தது இவரின் ஆதரவோடு .... யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஹிட் ஆனது அந்த படம்.... வீடுகளில் கூட ஓரின சேர்க்கை பற்றி பேசும் அளவிற்கு ஹர்ஸ்ஃபீல்ட் அனைவரையும் தன் வசம் ஆக்கி இருந்தார்..... இதெல்லாம் பார்த்த ஹிட்லர் சும்மா இருப்பாரா?..... ஹிட்லருக்கு பிடிக்காத இருவர் யூதர்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் என்று சொல்வதுண்டு..... அவர் வெறுக்கும் பட்டியலில் ஓரின சேர்க்கையாளர்கள் வருவதற்கு முக்கிய காரணமாக ஹர்ஸ்ஃபீல்ட் இருப்பார் என்றே நினைக்கிறேன்..... ஹர்ஸ்ஃபீல்ட் தாக்கப்பட்டார்..... அவரின் நூலகம் சிதைக்கப்பட்டது.... அவரது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்...... பின்னர் பிரான்ஸ் சென்ற ஹர்ஸ்ஃபீல்ட் இரண்டு வருடங்களில் இறந்துவிட்டார்..... ஆனால் விதி ஹிட்லரை வேறு வடிவத்தில் ஓரின சேர்க்கை மூலம் துரத்தியது...... அது ஹிட்லரின் நாஜி  படைத்தளபதி எர்னஸ்ட் ரோம் மூலமாக....  ரோமின் படையில் ஐந்து லட்சத்திற்கும் மேலான குண்டர்கள் இருந்தனர்..... ஹிட்லர் வலிமையே இந்த ராணுவம்தான்..... ரோம் ஓரின விரும்பி என்பதால் அவர் படையில் இருந்த பெரும்பாலானோர் ஓரின விரும்பிகளாகவே இருந்தனர்...... நேரடியாக ரோமை ஹிட்லரால் எதிர்க்க முடியவில்லை..... காரணம் ரோம் சொன்னால் ஹிட்லரையே கொல்லும் அளவிற்கு அந்த படையினர் இருந்தனர்...... ஹிட்லரே ஒரு ஓரின சேர்க்கை விரும்பிக்கு பயந்தார் என்பதுதான் வரலாற்று உண்மை...... ஆனாலும் இதை ஹிட்லர் ரசிக்கவில்லை..... நேரம் பார்த்து ரோம் மற்றும் அவரின் சகாக்கள் பல நூறு பேரை தூங்கும்போது சுட்டுக்கொன்று விட்டார் ஹிட்லர்..... ரோம் பாதுகாப்பாக இருந்திருந்தால், இந்நேரம் வரலாறு தலைகீழாக இருந்திருக்கும்.....

அடுத்தவர், கின்சி 1945 ஆண்டின் ஆராய்ச்சியில் அமெரிக்காவில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓரின சேர்க்கை எத்தகைய இன்பத்தை தரும் என்று அனுபவித்து பார்த்திருக்கிறார்கள்.... அதில் பெரும்பாலானோர் அந்த இன்பத்தில் மயங்கி தொடர்ச்சியாக ஓரின பிரியர்கலாகவே இருந்திருக்கிறார்கள்..... அப்போது அமெரிக்காவில் புறக்கணிக்கப்பட்ட கின்சி  தான் இப்போது உலகமே புகழும் செக்சாலஜியின் தந்தை என்று போற்றப்படுகிறார் ..... பல்வேறு தாக்குதலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளான கின்சி வாழ்க்கை ஆலிவுட் திரைப்படமாக வெளிவந்தது............ செக்ஸ் பற்றிய ஆய்வாளர்கள் எல்லாம் ஒரு முறையாவது அவருடைய ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றுவர வேண்டும் என்பது இப்போது எழுதப்படாத விதி.....
சில வருடங்களுக்கு முன்னால் வாசிங்க்டனில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர் டீன் ஹாமர் என்பவர் ஓரின விருப்பத்திற்கு XQ 28 எனும் ஜீன் தான் காரணம் என்றார்..... அதாவது ஓரினம் விரும்பும் ஆண்களுக்கு மட்டும் இந்த ஜீன் இருப்பதாகவும் கூறினார்..... ஆனால் லேச்பியங்களுக்கு அப்படி எதுவும் ஜீன் இல்லை என்றும் சொன்னார்........ இந்த ஆய்வு இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ஆய்வு அளவில் இருக்கிறது.... இதை நிரூபித்து காட்டுவதாக ஹாமர் உறுதி பூண்டு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்...... இதை மட்டும் அவர் நிரூபித்துவிட்டால் நிச்சயம் மருத்துவ உலகில் பெரிய மாற்றம் நிகழலாம்....
சரி இந்தியாவிற்கு வருவோம்..... இந்தியாவின் ஓரின வரலாற்றை அறிய நிச்சயம் இந்து மதத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்..... அப்படி பார்க்கையில்....

மகாபாரதத்தில் அரவானுடன் கிருஷ்ண பகவான் புணர்ந்ததும் நாம் அறிந்ததே......
அய்யப்பன் என்கின்ற கடவுள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
பதினான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத, பெங்காலி இலக்கியங்கள் (இன்றளவும் மிகப்பிரபலமான கீர்த்திவாச ராமாயணம் உட்பட) பாகிரத மன்னன் (கங்கை நதியைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தவன்) இரண்டு விதவைப்பெண்களுக்குப் பிறந்ததாகக் கூறுகிறது. பாகிரதன் என்ற பெயரே இரண்டு பெண்ணுறுப்புகளுக்குப் பிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது. (Bhaga - Vulva) இந்து மருத்துவ நூல்களும் முதல் நூற்றாண்டிலிருந்தே பால், பால்வேறுபாடு, ஓரினச்சேர்க்கை விருப்பம் ஆகிய அறிவியல் ரீதியான பாகுபாடுகளை விளக்குகின்றன.
காமசூத்ரா நூலும் ஓரினச்சேர்க்கையை மூன்றாம் இயற்கை என்று வருணிக்கிறது.
கணிதமேதை சகுந்தலா தேவி எழுதிய ‘The world of Homosexuals’ (1977) நூலில், திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சீனிவாச ராகவாச்சாரியார் அளித்த பேட்டியில், ஓரினக் காதலர்கள் முன்ஜென்மத்தில் மாற்றினக் காதலர்-களாகத் தான் இருந்திருப்பார்கள். இப்பிறவியில் பால் மாறியிருந்தாலும், அவர்களுடைய ஆன்மாவின் ஈர்ப்பு அப்படியே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
திருமணம் என்பது ஆன்மாவின் கலப்பு, இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்த சைவ அர்ச்சகரின் கருத்து இது.
பண்டைய மன்னர்கள் கட்டிய கோவில்கள் (குறிப்பாக கஜுஹாரோ) சிற்பங்கள் பலவற்றிலும் ஓரின சேர்க்கை தொடர்பான சிற்பங்கள் இருந்ததை வைத்து பார்க்கும்போது அப்போது இது சட்ட விரோதமான செயல் இல்லை என்று புரிகிறது.... அதாவது இதை ஒரு பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்..... ஏனோ இப்போ உள்ளவர்கள்தான் இதை குற்றமாக பார்க்கிறார்கள்.......

அலாவுதீன் கில்ஜியும் அவரின் அடிமை மாலிக் கபூரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது நாம் அறிந்ததே....... பின்னர் மாலிக் கபூர் கில்ஜியையே தூக்கிவிட்டு ஆட்சியில் அமர்க்கலப்படுத்தியது தனிக்கதை...... இந்த கே தான் தமிழகம் வரை ஆட்சியை பிடித்த ஒரே மொகாலய மன்னர்....... எல்லா இடத்திலும் மற்றவர்களுக்கு மத்தியில் கே நபர்கள் தனி சிறப்பொடு இருந்திருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.....

ஆனாலும் சமீபத்தில் வெங்கட் மோகனை போல பலரும் துணிந்து இதில் களம் இறங்கியுள்ளதை பார்க்கும்போது நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்பலாம்...... இந்தியா சிமண்ட்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மகன் அஷ்வின் தன் காதலனோடு மும்பையில் வசித்து வருகிறார்.... தந்தை மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தியுள்ள அஷ்வின் நல்ல முன் உதாரணம்.... கிட்டத்தட்ட இருபது வருடங்களாக தன காதலனோடு வாழ்ந்து வருகிறார்.... எல்லாம் இனி மாறும் என்று நம்பலாம்... இன்னும் கே விருப்பம் உள்ள பிள்ளைகளை குற்றவாளிகளாக பார்க்கும் சித்தாந்தம் மாறவேண்டும்....ஓரின விரும்பிகளே இன்னும் தங்கள் மீது குற்ற உணர்வோடு இருப்பதை நிறுத்த வேண்டும்....... முதலில் நாம் செய்வது தவறல்ல என்பதை நாம் உணர்வோம், பின்னர் மற்றவர்களுக்கும் உணர்த்துவோம்.... சமூகம் தானாக மாறும்...... மாறும் என்று நம்புவோம்......
இந்த தொகுப்புகளை நான் பல புத்தகங்கள், இணையதளம் என்று பல இடங்களிலும் எடுத்து கோர்த்தவை....... நிறைய தேடினேன்...... இனி கிடைப்பதையும் உங்களுக்கு பகிர்கிறேன்..... இதை படித்தபிறகு உங்கள் மனதில் தோன்றுவதை கருத்தாக பதிவு செய்யவும் நண்பர்களே....

2 comments:

  1. thank you frend,இது நமது சமூக கட்டமைப்பைப் பாதிக்காதா

    ReplyDelete
  2. நன்றி ஸ்ரீராம்...... சமூகம் என்பது நாம் நமக்காக உருவாக்கியதுதான்.... சமூகத்தின் பெயரால் பல்வேறு மூடநம்பிக்கைகள் திளைத்திருக்கும் நம் நாட்டில், இந்த கட்டமைப்பையே மாற்ற வேண்டி உள்ளது..... அதில் ஒன்றுதான் ஓரின விருப்பம் பற்றிய புரிதலும்..... நிச்சயம் மாறும் நண்பா...... பொறுத்திருந்து பார்க்கலாம்.....

    ReplyDelete