Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 27 January 2014

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.......

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.......        

  
தலைப்பை பார்த்ததும் பயந்துடாதிங்க... நீங்க பயப்படற அளவுக்கு தேர்தல்லஎல்லாம் நான் குதிக்கல... அப்புறம் இது என்ன தலைப்பு?...
நாடாளுமன்ற தேர்தல் நம்ம நாட்டுல களைகட்ட தொடங்கிடுச்சு.... கூட்டணி பேரங்கள் பெரும்பாலும் முடிஞ்சாச்சு, அடுத்த மாசம் தேர்தல் தேதியும் அறிவிக்க போறாங்க... அப்புறம் என்ன?... இன்னும் மிச்சம் இருக்கிறது “தேர்தல் அறிக்கைகள்” தானே?... சமீப காலங்களாக அரசியல்வாதிகளின் முக்கிய விவாத பொருளாக இருக்கும், “ஓரினச்சேர்க்கை குற்றமா?” விஷயத்தையும் நம்ம கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இணைக்கும் வாய்ப்பிருக்கு.... “ஓரினச்சேர்க்கை குற்றமே, அதை நம் நாட்டில் அனுமதிக்கக்கூடாது...”ன்னு சொல்லும் கட்சிகளுக்காக, ஏதோ என்னால் முடிஞ்ச “ஓரினச்சேர்க்கை தடுப்பு யோசனைகள்”... இந்த யோசனைகளை அந்தந்த கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இணைப்பதன் மூலம், இந்திய கலாச்சாரத்தை காக்க போராடும் கட்சியாக உங்களை மக்களிடம் வெளிப்படுத்திக்கொள்ளலாம்...
சரி, வெட்டிப்பேச்சு பேசாமல் யோசனைகளுக்கு போவோம்....
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...
1.      ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் வெப் கேமரா பொருத்தப்படும்... ஒவ்வொரு தெருவிலும், அந்த வெப் கேமராக்களை கண்காணிக்கும் கண்காணிப்பகங்கள் அமைக்கப்படும்... இதன்மூலம் படுக்கை அறைகளில் நிகழும் ஓரினச்சேர்க்கை குற்றங்களை நாங்கள் தடுப்போம்... (அப்போ குளியலறை, சமையலறை இங்கல்லாம் நடந்தா என்ன பண்றது?ன்னு கேட்காதிங்க.... அது தொடர்பான அடுத்தக்கட்ட திட்டம் இதன் வெற்றியை தொடர்ந்து தொடரும்...)

2.      கல்லூரிகள், விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற ஒரு பாலினத்தவர் ஒன்றாக இணைந்து வாழும் இடங்களில் “ஓரினச்சேர்க்கை தடுப்பு முகாம்கள்” அமைக்கப்படும்... அங்கு வசிக்கும் ஒவ்வொரு ஆண்களின் இடுப்பையும் சுற்றி இரும்பு ஆடைகள் அணிவிக்கப்பட்டு, அதில் திண்டுக்கல் பூட்டு பூட்டப்படும்... விடியும்வரை எந்த நபருடைய பூட்டும் திறக்கப்பட மாட்டாது... (அவசரத்துக்கு என்னங்க பண்றது?ன்னு குழம்பாதிங்க... டையபர் அணிந்த பிறகே அந்த இரும்பு ஆடை அணிவிக்கப்படும்.... இதன்மூலம் அவசரங்களை பற்றிய கவலைகள் தேவையில்லை)...


3.      ஓரினச்சேர்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், அதற்கென தனியே ஒரு துறை ஒதுக்கப்பட்டு, ஒரு அமைச்சரும் நியமிக்கப்படுவர்... அந்த துறை “ஓரினச்சேர்க்கை விடுவிப்பு துறை” என்ற பெயரில் செயல்படும்... ஒரு அமைச்சர், இரண்டு இணை அமைச்சர், மாவட்ட வாரியான அமைப்பாளர் என்று மிகப்பெரிய துறையாக அது  உருவாக்கப்பட்டு 2020இல் “ஓரினச்சேர்க்கை இல்லாத ஒளிரும் இந்தியா” உருவாக போராடுவோம்...

4.      மாவட்டம் தோறும் ஓரினச்சேர்க்கையிலிருந்து மக்களை மீட்க, விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்படும்.... அந்த முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தவறை உணரும் விதமாக கலை நிகழ்ச்சிகள் வழியாக விழிப்புணர்வுகள் கொண்டுசேர்க்கப்படும்... அதில் முக்கிய நிகழ்வாக விஜய டீ.ராஜேந்தர் அவர்களின் சொற்பொழிவு, பவர் ஸ்டார் அவர்களின் நடனம், இயக்குனர் பேரரசு அவர்களின் “பஞ்ச்” வசனங்கள் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்... (இதன்மூலம் ஆண்டிற்கு ஒரு லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கதறக்கதற திருந்துவார்கள் என்று எங்கள் பதினேழு பேர் கொண்ட குழு ஒருமனதாக நம்புகிறது)...


5.      (மேற்சொன்ன யோசனைகளில் இருந்தெல்லாம் தப்பிப்பவர்கள், இப்போ நான் சொல்லப்போற ஒரு அதிமுக்கிய யோசனையின் மூலம் நிச்சயம் மாட்டுவார்கள்...)                                      ஒவ்வொரு மனிதனின் அந்தரங்க இடத்திலும் ஒரு “சென்ஸார் சிப்” பதிக்கப்படும்... ஆணுக்கு தனி விதமான “சிப்”பும், பெண்ணுக்கு வேறுவிதமான “சிப்”பும் பதிக்கப்படும்... ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணையும்போது அந்த சிப் ஒன்றும் செய்யாது... அதே நேரத்தில் ஆணும் ஆணும் இணையும் போது, அந்த “ஆண்களின் சிப்” இரண்டும் மிக நெருக்கமாக வந்திட்டால், உடனே அதிபயங்கர “சைரன் ஒலி” எழுப்பும்... இதன்மூலம் அந்தந்த தெருவில் செயல்படும் எங்கள் “ஓரினச்சேர்க்கை தடுப்பு முகாம்”களின் அதிகாரிகள் அதிவிரைவாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்வார்கள்....

6.      அப்படி கைதாகும் நபர்களை ஹோபா (HOmosexual Prevention Act)சட்டத்தின் மூலம் எவ்வித விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டு, அடுத்த ஏழே நாட்களில் தண்டனையும் வழங்கப்படும்...  அந்த நபர்களின் தண்டனையாக “விளம்பர இடைவேளையே இல்லாமல் இளவரசி முதல் இந்தி தமிழாக்க சீரியல் வரை அத்தனை மெகாத்தொடர்களையும் ஆறு நாட்கள் தொடர்ந்து காண்பிக்கப்படும்”... அநேகமாக ஏழாவது நாள் அவர்களை கீழ்ப்பாக்கத்திலோ, குணசீலத்திலோ சேர்க்கும் நிலை வந்தாலும், அதற்கான முழு செலவையும் எங்கள் அரசே ஏற்கும்... (ஆமா... அந்த ‘முல்லைப்பூ’ நாடகத்துல வர்ற குணவதியை இப்போ ரமேசு தானே வச்சிருக்கான்???)...
இப்படி கலாச்சாரம் காக்கும் பொருட்டு, நம் தேசநலன் சார்ந்து சிந்திக்கும் எங்கள் கட்சிக்கு வாக்களித்து, எதிர்கால இந்தியா “ஓரினச்சேர்க்கையற்ற ஒளிரும் இந்தியா”வாக உருவாகிட எங்களுக்கு வாக்களியுங்கள்....

11 comments:

 1. Engal otu ungal Irumbu Pootuke! Romba otirukeenga anna!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி.... நாம கட்சி தொடங்கினால் நிச்சயம் "இரும்பு பூட்டு" சின்னம்தான்...

   Delete
 2. sema funny, :D :D sooper !!:)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சிபி...

   Delete
 3. itha ethavathu arasiyalvyadhi( sorry arasiyal vaadhi) paarthuvittu implement seithaalum seivvar. jaakradhai.

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா.... செஞ்சாலும் செய்வாங்க அண்ணா... அப்டி செஞ்சா, காப்புரிமை நமக்குன்னு கேஸ் போட்டுடலாம்..... கருத்துக்கு நன்றி அண்ணா...

   Delete
 4. superb.. it may happen in our country...

  ReplyDelete
  Replies
  1. நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை தம்பி.... மிக்க நன்றி...

   Delete
 5. சரியாக அவர்கள் கோணத்தில் யோசிச்சு சொல்றீங்க...சுத்தி சுத்தி கே மட்டுமே தவறான செக்ஸ் முறைகளை பரப்புவது போல் சொல்லி வருகிறார்கள்...சூப்பர் விஜய்...இன்னும் நிறைய எழுதுங்கள்...நீங்க share செய்த orinam video பார்த்தேன் நிறையவே confident வருகிறது...so சட்டம் வந்தாலும் வராவிட்டாலும் நம்மை வீழ்த்த முடியாது...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சாம்....

   Delete
  2. Ha ha UNGAL THERTHAL ARIKKAI super na.. Diaper matti vittu lock pandradhu, Tani minister poduradhu, mokkai serial, mokkai actors vachi torture pandradhu ellame super na.. Chip vachi alarm adikka vaikiradhu nethi adi.. Unga VISION-2020 neraya vote kedaika kandippa use agum na..

   Delete