Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 31 January 2014

காமம் தப்பில்லைங்க....


காமம் தப்பில்லைங்க....


காமம் தப்பில்லைங்க... ஆமாம், ஏனோ நான் காமத்திற்கு எதிரானவன்குற மாதிரி பலரும் நினைக்குறாங்க... அப்டி ஒரு பிம்பம் எப்படி உருவாச்சுன்னு எனக்கு தெரியல.... காமத்துப்பால் அருளிய வள்ளுவனும், நரி விருத்தம் பாடிய திருத்தக்கத்தேவரும் சொன்ன கருத்துகளுக்கு முரணானவனாகவா நான் இருக்கப்போறேன்?... நிச்சயமா இல்லைங்க....  பசி தூக்கம் போலவே காமும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.. அந்த இயல்பான உணர்வை “இருக்கக்கூடாது”ன்னு சொல்றதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்ல... அப்படிப்பட்ட நம் அன்பர்களோட காமத்தின் தேவைகளை பற்றித்தான் இப்போ பேசப்போறேன்... அதைப்பற்றி பேசுறதுக்கு முன்பு ஒருவிஷயத்தை நான் தெளிவுபடுத்திடுறேன்... எத்தகைய காமத்திற்கு நான் ஆதரவானவன்?ன்னு ஒரு கேள்விக்கு பதில்தான் இங்கே முக்கியம்...
காலை எழுந்தவுடன் “இன்னிக்கு தனியா இருக்கேன், போர் அடிக்குது... யாராச்சும் கம்பெனி தரீங்களா?” என்ற வாசகத்தை பேஸ்புக் ஸ்டேட்டஸ்’ஆக போட்டு, மதியம் வரை “கம்பெனி” எதிர்பார்த்து காத்திருந்து, மதியத்தில் “பிளானட் ரோமியோ” கடலுக்குள் இறங்கி சிதறிக்கிடக்கும் கோடிக்கணக்கான மீன்களில் ஒன்றை “பிக்கப்” செய்து, மாலை முதல் இரவு வரை பேருந்து நிலையத்திலோ, ரயில்களிலோ “உரசல், தடவல், அதையும் தாண்டிய முனகல்” எல்லாம் கடந்து படுக்கப்போகும் போதும் கூட, அருகில் படுத்திருக்கும் நண்பனின் மீது காமப்பார்வையை செலுத்தும் எத்தனையோ “ஒருபால் ஈர்ப்பு நபர்களின்” காமத்திற்கு சத்தியமாக நான் எதிரானவன்தான்...
காமத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும், காமம் உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்...
1)      உங்கள் அன்றாட பணிகளில் காமம் இம்சித்து பிரச்சினை செய்கிறதா?
2)      சதா சர்வகாலமும் காம எண்ணங்கள் மேலோங்கி, உங்கள் மனதை அதிகம் குழப்புகிறதா?
3)      பார்க்கும் அனைத்து மனிதர்களும் போகப்பொருள் போலவே காட்சி தருகிறார்களா?
மேல்சொன்ன மூன்றுக்கும் பதில் “ஆம்!” என்றால், காமத்தின் பிடியில் நீங்கள் கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்... சீக்கிரம் வெளிவர முயலுங்கள் என்பது மட்டுமே என் ஆலோசனை.... அப்போ எப்படிப்பட்ட காமம் சரியானது?... இதற்கு என் நண்பர் ஒருவரின் வாழ்க்கையை பற்றி சொன்னால் தெளிவாக புரியவைக்கமுடியும்னு நினைக்குறேன்... அந்த நண்பர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்... வாரநாட்களில் அவர் இயல்பாக பணிபுரிவார், மாலை வேளைகளில் வீட்டில் குடும்பத்தாருடனும், வெளியில் நண்பர்களுடன் வாழ்க்கையை மகிழ்வாக கழிப்பார்... வாரம் ஐந்து நாட்களும் இப்படித்தான் இருக்கும்... சனிக்கிழமை பொதுவான ஒருபால் ஈர்ப்பு இளைஞர்களை போல பிளானட் ரோமியோவில் தூண்டில் போடுவார், ஞாயிறுகளில் நாள் குறித்து பூஜையும் செய்திடுவார்.... அவ்வளவுதான்... மீண்டும் திங்கட்கிழமை வழக்கமான தன் பணிகளில் ஈடுபட தொடங்கிடுவார்...
அவர் பேச்சில் ஒரு தெளிவிருக்கும், கொஞ்சமும் குழப்பமில்லாத மனநிலையோட இருப்பார்... எந்த தருணத்திலும் அவருடைய காம எண்ணங்கள் அவரின் சராசரி வாழ்க்கையில் குறிக்கிட்டு குழப்பியதே இல்லை... “அப்படி உணவில் உப்பாக காமம் இருக்கும்வரை, வாழ்க்கையில் தப்பாக எதுவும் நடந்திடாது...” (அட! பஞ்ச் நல்லா இருக்கே...!).
சரி, இனி அத்தியாவசிய காமத்தின் அவசியம் பற்றி இப்போ பார்க்கலாம்...
பொதுவாகவே ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மீது வெகுஜன சமூகம் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே, பொது இடங்களில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான்... அவங்க சொல்றது சரிதான், அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தை அவங்க யோசிக்க வேண்டும்... பெற்றோர்களும் உறவினர்களும் ஒன்று சேர்ந்து பெண் பார்த்து, திருமணம் என்கிற ஒரு சடங்கின் வழியாக ஒரு ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபட நம் சமுதாயங்களும், சடங்குகளும் ரொம்பவே பாடுபடுகின்றன... எதிர்பால் ஈர்ப்பு நபர்கள் தங்கள் காம இச்சைகளை தீர்க்க இப்படிப்பட்ட கலாச்சார வழிமுறைகள் வாய்ப்பாக இருக்கும் தருணத்தில், சட்ட மற்றும் சமூக ரீதியான அங்கீகாரம் இல்லாத நிலையில் ஒருபால் ஈர்ப்பாளர்கள் தங்கள் காம உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்கிற நேரடி கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு யார் வேண்டுமானாலும் பொது இடங்களில் அநாகரிகமாக செயல்படும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மீது குற்றம் சுமத்தட்டும்...
படித்த, ஓரளவு கல்வி அறிவு பெற்ற ஒருபால் ஈர்ப்பு நபர்கள் கூட கொட்டிக்கிடக்கும் இணைய உலகின் வாய்ப்புகளை வெகுஜனங்களின் கண்களுக்கு அகப்படாமல் பயன்படுத்தி காம இச்சைகளை தீர்க்க முடிகிறது... ஆனால், கல்வி அறிவில்லாத ஒருபால் ஈர்ப்பாளர்கள் எங்கே சென்று காம உணர்வுகளை தணிக்க வேண்டும்? என்கிற நியாயமான கேள்விக்கு எந்த சமூக பொறுப்புள்ளவர்களுக்கும் பதில் தெரியாது...
நடக்க பாதை உருவாக்காமல், “நடக்கும் நபர்கள் யாரும் முறையாக பாதையில் நடப்பதில்லை!” என்று குற்றம்ச்சாட்டுவது எப்படி முட்டாள்த்தனமான கருத்தோ, அப்படிப்பட்ட மூடத்தனமான குற்றச்சாட்டுதான் பொது இடங்களில் அநாகரிகமாக ஈடுபடுவதாக பாமர ஒருபால் ஈர்ப்பினர் மீதான குற்றம் சுமத்துவதும்...
மற்ற நாடுகளில் நிலைமை இப்படி இல்லை...
ஒருபால் ஈர்ப்பை ஒருகாலத்தில் குற்றமாக கருதிய மேற்குலக நாடுகளில் கூட, அப்போதைக்கு ஒருபால் ஈர்ப்பாளர்கள் ஒன்றாக சந்தித்துக்கொள்ள மதுபான அரங்குகள் (bar), நீராவி குளியல் அறைகள் (sauna), கூடலகங்கள் (clubs) என்று எத்தனையோ வடிகால் வழிமுறைகள் செயல்பட்டன...
இன்றைக்கும்கூட ஒருபால் ஈர்ப்பை குற்றமாக கருதும் எத்தனையோ நாடுகளில், இப்படிப்பட்ட sauna’க்கள், barகள் என்று இயல்பாக செயல்பட்டு வருகின்றன... அத்தகைய நாட்டின் அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் கூட அந்த இடங்களில் நடக்கும் விஷயங்கள்  பற்றி தெரியும், என்றாலும் கூட அடுத்தவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வண்ணம் அவர்கள் யாரும் அதை எதிர்ப்பதில்லை...
ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கான தனிப்பட்ட விடுதிகளில் சந்திப்புகளும், அதனை தாண்டிய “இத்யாதிகளும்” இயல்பாக நிகழ்வதை நாம் பார்க்க முடியும்...  அப்படிப்பட்ட இடங்களில் சிலநேரங்களில் வெளிப்படையாகவே “வானவில் கொடி”யை அடையாளமாக கட்டியிருப்பார்கள், சிலர் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும்கூட “ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கானது” என்கிற நேரடியான வாசகத்தை முன்வைத்திருப்பார்கள்... சில குளியல் கூடங்களில் இலவச ஆணுறைகள் கூட தனிமனித பாதுகாப்பு கருதி வழங்கப்படுகிறது என்பதும் கூடுதல் ஆச்சரியமான விஷயம்... இதைத்தாண்டிய மேலதிகமான தகவல்களை சொன்னால் வலைப்பூவிற்கு “18 வயதிற்கு மேற்ப்பட்டோருக்கு மட்டுமே அனுமதி” என்கிற எச்சரிக்கை வகையான வலைப்பூவாக மாறிவிடும்... “அதனால மாப்பு, sauna பற்றிய விஷயத்துக்கு இத்தோட ஸ்டாப்பு...”
நம்மைவிட சட்டங்களை கடுமையாக கையாளும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட இதே நிலைமைதான் எனும்போது, இந்தியாவில் என்ன நிலை? என்று நான் சொல்லி உங்களுக்கு புரியவேண்டியதில்லை....
இங்கே ஒருபால் ஈர்ப்பு நபர்கள் காதலித்து இணைந்து வாழ்வதற்கான தெளிவான சூழல் இல்லை, திருமணங்கள் என்கிற பேச்சிற்கே வழியில்லை... அப்படி ஒரு நிலையில் குறைந்தபட்சம், ஒரு மனிதனுக்கு இயல்பாக எழும் காம உணர்வுகளை தீர்க்கக்கூட வழியில்லாத கொடுமையான நிலைமையில் எப்படி இந்த சமூகம் அவர்களிடம் “நளினமான, நாகரிகமான” காம அணுகுமுறைகளை எதிர்பார்க்க முடியும்?...
இளைஞர்களுக்கு கூட பரவால்லங்க... வேறு வழியின்றி குடும்ப நிர்பந்தத்தின் காரணமாக பெண்ணை திருமணம் செய்துகொண்ட எத்தனையோ நடுத்தர வயது, ஐம்பது அறுபதுகளை நெருங்கும் வயதினர் எந்த வகையில் வடிகால்களை பெறமுடியும்?... பொதுக்கழிப்பிடங்களிலும், மூன்றாம் தர திரையரங்கங்களிலும் மற்ற ஆண்களை ஏக்கத்தோடு பார்த்து, ஒருவித தயக்கத்தில் எச்சிலை மட்டும் விழுங்கிவிட்டு உங்களை கடந்திட்ட எத்தனையோ நடுத்தர வயதினரை நீங்கள் பார்த்திருக்கலாம்... சில சமயம் எரிச்சலும், பல சமயம் அருவருப்பும் பட்டிருப்பீர்கள்... அவர்களுக்குள்ளும் புதைந்துகிடக்கும் அந்த உணர்வுகளை பற்றி என்றைக்காவது யோசித்திருப்போமா?... நான் அந்த உணர்வுகளை நியாயப்படுத்தவில்லை, அவர்களின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை.... அதேநேரத்தில் அவர்கள் பக்கம் இருந்திடும் ஒரு சிறு இயலாமையை உங்களுக்கு சுட்டிக்காட்டத்தான் இவ்வளவையும் சொல்கிறேன்.... கட்டிய மனைவியின் மாதத்தின் மூன்று நாட்கள் “விலக்கின்” போதும், கருவுற்ற பத்து மாதங்களின் போதும்கூட காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத வெகுஜன கணவன்மார்கள் நிறைந்திருக்கும் சமூகத்தில், வாழ்க்கை முழுவதும் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்கியே வாழ்க்கையை கழிக்கும் பெரும்பாலான ஒருபால் ஈர்ப்பு நபர்களின் குறைந்தபட்ச உணர்வுகளுக்காவது நாம் எப்போது மதிப்பளிக்க போகிறோம்? என்பதை குற்றம்சாட்டும் முன்பு வெகுஜன சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்...
சட்டம் மற்றும் சமுதாய அங்கீகாரம் கிடைப்பது ஒருபக்கம் கிடக்கட்டும்... முதலில் இப்படிப்பட்ட மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நம் நாடு பழகவேண்டும்... அப்படி வடிகால்களாக வாய்ப்புகள் உருவாகியபிறகும் அவர்கள் சொல்லும் “பொது இடங்களில் அநாகரிகம்” தொடருமானால், நிச்சயம் எல்லோருமாக சேர்ந்து அதை எதிர்ப்போம்... அதுவரை, குறைந்தபட்சம் அந்த பாவப்பட்டவர்களின் இயலாமையை மட்டுமாவது எண்ணிப்பாருங்கள்.... அதனால் இனி குறைசொல்வதை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, ஆக்கப்பூர்வமான வடிகால்களை உருவாக்கிட என்ன செய்ய வேண்டும்? என்று கொஞ்சம் யோசிக்க தொடங்குவோம்...
வடிகாலுக்கு வழிவகுக்காமல் குற்றம் மட்டுமே சுமத்துவதுதான் அவர்கள் நோக்கம் என்றால், எம் குருநாதர் சுஜாதா சொல்வதை போல, “புரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்....”

9 comments:

  1. அருமை நண்பா...எனக்கும் அவர்களை பார்க்கும்போது எரிச்சல் வரும்...உங்களின் பெயரில்லா சிறுகதை படித்தபிறகு அவர்களின் உணர்வு புரிந்தது...அதன்பின் bus travel nd train travel போது அவர்கள் சிலரிடம் பேசியிருக்கேன் (saying for a case study)...அதிலிருந்த பாதிக்கும் மேல் gay இல்லாதவர்களே they enjoying the oral sex nd become adict to it...main reason my wife nd even girl prost. won't do it...and shocking true is no need to pay or very less money...nd other half is,as you say middle aged.nd retired..they controlled up to reach a level in their life nd family after that saying any reason staying in mansions started their trap on young guys...whn I m in mansion I came to know all these...they dont have any guilty in this...bcaz everybody knows this but never complained,others enjoyed it...so most of the people knows this nd taking advantage of it...so making nd giving awareness to a gay is the first step...which give confident to them nd face the reality...your writing got that power vijay...do it...really proud of vijay

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாம்... இவ்வளவு நாட்களுக்கு பிறகும் அந்த பழனிச்சாமியை நினைவில் நீங்க வச்சிருப்பது எனக்கு ஆச்சரியம்தான்.... அவ்வளவு தாக்கத்தை அந்த பாத்திரம் ஏற்படுத்தியிருப்பதில் மிகுந்த உவகை அடைகிறேன்...

      Delete
  2. yeah anna, once it has happened to me also.. but this is the precise reason even for well educated indians ( romba theliva decisions edukara straight people ), the idea of being a gay is " desperate to have sex with males, or desperate to have sex with, predominantly males, since they don't find women often" what kind of ideology the society and the media has created in the public about being gay. see.

    and a question for you anna : Is premarital sex legal in indian law ?
    if yes, then y did our Tamil people protested against what kushboo has said.
    they should instead argue for changing it in the constitution.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி....
      திருமணத்திற்கு முன்பான உறவு தவறென்று சட்டம் சொல்லவில்லை... பதினெட்டு வயதை கடந்த பெண்ணும், இருபத்தொன்று வயதை கடந்த ஆணும் உறவு கொள்வதற்கு தடையேதும் கிடையாது... ஆனால் ஏனோ போலி கலாச்சாரவாதிகள் அதை ஏற்க மறுக்கிறார்கள்...

      Delete
  3. Article is very interesting and intellectual. But practical life is different from theory. We can give some suggestions to those people. Cant make them happy physically. Will try our level best in future.

    Warm regards

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா... உடல் ரீதியாக அவங்களை திருப்தி படுத்த நான் சொல்லல... குறைந்தபட்சம் அவங்களையும் மனுஷனா மதிக்க மட்டுமே சொல்றேன்...

      Delete
  4. nice thought.... it clearly shows how u deeply thought of this and posted here...ana onnu sollanum vijay during my childhood while travelling in buses, so many old people harrased me that i dont like..enaku atha ninaichaley aruvarupa irukku vijay... at any cost i will not support that... that incident misguided me... aiyoooo....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாலா... நிச்சயம் நம்மில் பெரும்பாலானோருக்கு அப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்..... தவறு அவர்கள் பக்கம் மட்டுமல்ல என்பது மட்டுமே கட்டுரையின் சாராம்சம் நண்பா...

      Delete
  5. Hi vijay yappadi irrukainga how is ur life. Yanaku oru question kakanum. Kamam thapila nu soiniga athu 2nd Peru thani paita muraila kamam vachikita athu k but oru allu(person) neriya perkuda kamam uravu vachikita athu thappu thana like Fb la yarai Peru appadi thana irrukainga namba enana maya namba la thapana valiki kuititu pokutho nu oru yanam gay people intha gay ulakathula irruinthu valiya vara mudiya tha. Gay na yana athu oru Harmon change ah la vara felling thana atha mathika mudiyatha Vijay Illana athu oru serana valiku koindu poga mudiyuma etha pathi uingaloda karuthu yananu soiluinga Vijay I'm waiting for that

    ReplyDelete