“விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வது தனிநபர் உரிமை... அந்த உரிமைக்கு பங்கம் விளைவது போல சிலரை மட்டும் பாகுபடுத்தி ஒதுக்குவது முறையல்ல”
இந்த இரண்டு வரிகளோடு, மேற்குறியிட்ட படமும்தான் இந்த ஓரிரு
நாட்களில் உலகத்தினர் பலராலும் விவாதிக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்பதை நாம்
நம்பித்தான் ஆகணும்... ஆம், இணைய உலகில் கொடிகட்டி பறக்கின்ற “கூகுள்” தளத்தின்
முகப்பில்தான் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கிறது... “ஆயிரம் பக்கங்களை கொண்ட ஒரு
புத்தகம் உண்டாக்காத தாக்கத்தை, கூகுள் போன்ற தளத்தின் இரண்டு வரிகள் உண்டாக்கும்”
என்ற உண்மையை இன்றைக்கு உலகம் நம்புகிறது... உலகின் வல்லரசுகளே அஞ்சும் ஒரு ஆளுமை
மிக்க நாட்டின் அதிபர் சொன்ன கருத்தை எதிர்த்து வெளியான இந்த கூகுளின் டூடுள்
நிச்சயம் ஒரு சத்தமில்லாத சமதர்ம புரட்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை....
ரஷ்யாவின் சோச்சி நகரில் தொடங்கியுள்ள குளிர்கால ஒலிம்பிக்
போட்டிகளுக்காக மிக பிரம்மாண்ட முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... ஆனால்,
ஒருபால் ஈர்ப்பினருக்கு எதிரான ரஷிய அதிபர் புதினின் கருத்தும், அங்கே நிலவுகின்ற
பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையும் ஒலிம்பிக் போட்டிகளின்
பிரம்மாண்டத்தை தாண்டி, சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கிடக்கின்றன.... ஏறத்தாழ 80 நாடுகளுக்கும் மேற்ப்பட்ட
மூவாயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் பங்கேற்கும் ஒருபால்
ஈர்ப்பு விளையாட்டு வீரர்களின் உயிருக்கும் கூட ரஷ்யாவின் இந்த பிற்போக்கான
மனநிலையால் ஆபத்து உண்டாகியிருக்கிறது... (இதைப்பற்றி “ரஷ்யாவின் பிற்போக்கான
ஹோமொபோபிக் சட்டம்” என்கிற கட்டுரையில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்)... இப்படி ஒரு
சூழலில் கூகுள் போன்ற ஆளுமை மிக்க தளம் வெளியிட்டுள்ள இந்த படமும், வாக்கியமும்,
உண்மையை யோசிக்கும் நிலை உண்டாகியுள்ளது....
கூகுளுக்கு இது முதல் அனுபவம் இல்லை... எனக்கு தெரிந்து சில
ஆண்டுகளாகவே கூகுள் ஒருபால் ஈர்ப்பினருக்கான ஆதரவான செயல்பாடுகளில் ஆர்வமாக
ஈடுபட்டுள்ளது... மக்களுக்கான விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கங்கள் என்று உலகம்
தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்களில் இறங்கியிருக்கும் கூகுள் மற்ற “பணம் மட்டுமே
நோக்கம்” என உழைக்கும் நிறுவனங்களிலிருந்து மாறுபட்டு தெரிகிறது.... கூகுள்
நிறுவனத்தின் பணிபுரியும் ஒருபால் ஈர்ப்பினருக்காக “gayglers” என்கிற அமைப்பும் கூட அந்த
நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகிறது... தங்களின் பணியாளர்கள் எந்தவித காரணத்தாலும்
ஏற்றத்தாழ்வோடு நடத்தப்படக்கூடாது என்கிற உயரிய கோட்பாட்டில் இயங்கும் அந்த
நிறுவனம் நிச்சயம் ஆச்சரியத்தை உண்டாக்கும் வித்தியாசமான சக்திதான்....
கூகுளுக்கும் கூட ஒருபால் ஈர்ப்பினருக்கு ஆதரவாக செயல்படவேண்டிய அவசியம் இல்லை...
பல நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து, “எல்லோருக்கும் நல்லவர்” என்கிற இமேஜை
தவிர்த்து இப்படி அவர்கள் நமக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை... ஆனால்,
“இவர்களை போல நல்லவர்களும் இருக்கிறார்கள்!” என்று அடையாளம் காட்டவாவது சில
நிறுவனங்கள் வேண்டுமே, அதற்காகவாவது இப்படி செய்யட்டும் அவர்கள்...
நம் நாட்டில் அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள்,
ரஷ்யாவோ விளையாட்டிலும் அரசியல் செய்கிறது...
கூகுள் போன்ற தளங்களின் பங்களிப்பால் மட்டுமே, நம்
உரிமைகளுக்கான குரல் பல கோடி மக்களை மிக எளிதாக சென்றடைகிறது.... இத்தகைய
அதிகாரவர்க்கத்தின் பிரித்தாழும் சூழ்ச்சிக்கு எதிராக நமக்காக குரல் கொடுக்கும்
கூகுளின் மகத்தான பங்குக்கு தலை வணங்குவோம்!...
திக்கெட்டும் சிறக்கட்டும் கூகுள்!....
புரட்சி மலர்களை தூவட்டும்
அதன் “டூடுள்”!...
வாவ் சூப்பர்...googleக்கு ஒரு salute nd ஒரு பெரிய இந்திய வணக்கம்...
ReplyDeleteரொம்ப நன்றி சாம்...
Deletethanks a lot for accepting my req and writing this article... :D
ReplyDeleteதகவலை சுட்டிக்காண்பித்து, எழுத சொல்ல உங்களுக்குத்தான் நண்பரே நன்றி சொல்லணும்...
Deletenammavargalukkana olympics ondru uruvaaga SOCHI 2014 thalam vagukkum endru nambuvomaaga
ReplyDeleteகே ஒலிம்பிக் பற்றி "பாலீர்ப்பு சர்ச்சையில் டாம் டேலி" ( http://envijay.blogspot.in/2013/12/tom-daley-olympics-to-gay-olympics.html )இணைப்பில் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன் அண்ணா.... அதை இன்னும் அதிக பிரபலமாக்க வேண்டியது மட்டுமே நமது பணி....
Delete@Sundar SGV: டாம் வாடல் (Tom Waddel) என்பவரால் 1982 ஆம் ஆண்டு மாற்று பாலீர்ப்பு கொண்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் (Gay Olympic Games) தொடங்கப்பட்டது. எனினும் சர்ச்சை காரணமாக அமெரிக்க நீதிமன்றம் ஒலிம்பிக் என்னும் பெயரை பயன்படுத்த தடை விதித்தது. நான்காண்டுக்கு ஒரு முறை நிகழும் விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது Gay Games என்று பெயர் மாற்றத்துடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாந்து (Cleveland) நகரில் ஒன்பதாவது முறையாக இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
ReplyDeleteThan k you for the information. Was /is there any indian /asian participation in those Gay games.
ReplyDelete@ Sundar SVG: Yes. There are few. Vasu Ritu Primlani, a well known triathlete might participate. But not very sure. She is otherwise a stand up comedy artist and a healer. It would be nice if you would also participate if you have interests in sports.
Delete