Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 7 December 2014

இருநூறாவது பதிவு....! - கடந்துவந்த பாதைகள்...





இருநூறாவது பதிவு... மூன்று வருட பயணத்தில் இரட்டை சதத்தை எட்டியிருக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...” வலைப்பூவின் பயணத்தில் தொடர்ந்து உடன்வந்து, ஊக்குவித்து, வெற்றிக்கு வித்திட்ட நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
இந்த சமயத்தில் சில மகிழ்வான தருணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.... 

அதில் முதல் விஷயமாக, என்னுடைய நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த பாலீர்ப்பு தொடர்பான புத்தகம்... “மறைக்கப்பட்ட பக்கங்கள்” என்கிற தலைப்போடு சிருஷ்டி அமைப்பின் சார்பாக வெளிவந்துள்ள அந்த புத்தகத்தின் இணை ஆசிரியராக பணியாற்றி புத்தக உருவாக்கத்தில் எனது பங்களிப்பும் இருந்ததில் நிச்சயம் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.... பாலீர்ப்பு தொடர்பாக இந்திய பிராந்திய மொழிகளில் வெளியாகும் முதல் புத்தகம் இதுதான்... புத்தகத்தின் ஆசிரியர் அன்பிற்குரிய நண்பர் கோபி ஷங்கர் அவர்களுடன் பல மாதங்கள் ஒன்றாக ஆலோசித்து, நிறைய விவாதித்து, பற்பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியான அந்த புத்தகம் குழந்தையை பிரசிவித்த தாயின் மனநிறைவை தருகிறது... 

http://pothi.com/pothi/preview?pFile=44755#preview-top (அந்த புத்தகத்தை இணையம் வழி வாங்கிக்கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்)... 

இந்த புத்தகத்தை வெளியிட்டவர் தமிழக பாஜகவின் துணைத்தலைவர் மதிப்பிற்குரிய வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள், முதல் பிரதியை எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பெற்றுக்கொண்டார் ...

பாலீர்ப்பு தொடர்பாக தமிழில் தொடர்ந்து எழுதிவந்ததால் சிருஷ்டி அமைப்பின் சார்பாக சமீபத்தில் கோவையில் நிகழ்ந்த விழா ஒன்றில், “Tamil Literary Lambda Award” கொடுத்து என்னை ஊக்குவித்த சிருஷ்டி அமைப்பிற்கும், எழுத்தாளர் லீனா மணிமேகலை போன்ற நிகழ்வில் பங்குபெற்றவர்களுக்கும் எனது நன்றிகள்....

                                       
அதே போல எனது இன்னொரு நீண்டநாள் ஆசையாக ஒருபால் ஈர்ப்பு பற்றிய குறும்படம் உருவாக்க வேண்டும் என்ற கனவை, சமீபத்தில் மும்பையை சேர்ந்த குறும்பட இயக்குனர் பொன்.தமிழ்செல்வன் அவர்களின் மூலமாக நிறைவேற்றிக்கொண்டேன்... எனது சிறுகதையான “377”  அந்த நண்பரின் முயற்சியால் குறும்படமாக உருவாகியுள்ளது... பாலீர்ப்பை மையப்படுத்தி ஒரு குறும்படம் எடுப்பதில் இருக்கும் அத்தனை சிக்கல்களையும் தமிழ் அவர்களும் சந்தித்தபோதிலும், காவியா பிலிம்ஸ் தயாரிப்பாளர் மும்பை வினோத் அவர்களின் உதவியோடு அந்த சிக்கல்களை உடைத்து படத்தை உருவாக்கியுள்ளார்... எனது எழுத்து, திரையில் காட்சியாக உருவானதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி... ஒருசில திரைப்பட விழாக்களில் திரையிட இருப்பதால், இன்னும் அந்த குறும்படம் பொதுத்தளத்திற்கு வரவில்லை, வெளியாகும்போது நிச்சயம் அதை உங்களுடன் பகிர்கிறேன்... 
                           
வலைப்பூவில் மட்டுமே இதுகாலமும் எழுதிவந்த என்னை, பொதுத்தள மக்களும் கணிசமாக வந்துபோகும் இணைய இதழ்களில் எழுதவைத்த இதழ்களின் நிர்வாகத்தினர் அத்தனை பேருக்கும் நன்றிகள்...

குறிப்பாக ஆழம், சிறகு, சொல்வனம் போன்ற தளங்கள் ஒருபால் ஈர்ப்பு தொடர்பான எனது கட்டுரைகளை கொஞ்சமும் தயக்கமின்றி வெளியிட்டார்கள்... 


அதுமட்டுமின்றி ஒருபால் ஈர்ப்பு தொடர்பான கருவைக்கொண்ட எனது ஒன்பது கதைகளை கொஞ்சமும் சலனமின்றி வெளியிட்டு, அதில் பல கதைகளுக்கு சிறப்புக்கதை தகுதி கொடுத்த சிறுகதைகள்.காம் தளத்திற்கும், அதன் நிர்வாகி கார்த்திக் அவர்களுக்கும் நன்றிகளை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும்... 

http://www.sirukathaigal.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/ அதில் குறிப்பாக எனது கதை “அட நாயே...!” ஏறத்தாழ பதின்மூன்றாயிரம் வாசகர்களால் படிக்கப்பட்டு, பொதுத்தள மக்களை எமது கருத்துகள் சென்றடைய செய்த அந்த தளம் என்றைக்கும் நன்றிக்கு வித்தான ஒரு தளம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...

நம்மவர்களுக்காக எழுதத்தொடங்கி, இன்றைக்கு ஓரளவு பொதுத்தளத்திலும் நமது கருத்துகளை எடுத்துச்செல்ல கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டதற்கு இந்த வலைப்பூவினை தொடர்ந்து ஆதரித்துவரும் நீங்கள்தான் காரணம்...

எனது இன்னொரு ஆசையும் கூட இருக்கிறது... அதுமட்டும் நிறைவேறிவிட்டால் எனது மகிழ்ச்சி முற்றாக பூர்த்தியாகும் என்றே நினைக்கிறேன்... அது தமிழில் பாலீர்ப்பு தொடர்பான இதழ் வெளிவருவதுதான்... அது மாத இதழாகவோ, மாதமிருமுறை இதழாகவோ இருக்கலாம்... முதற்கட்டமாக மின்னிதழ் வடிவத்தில் இருந்தாலும் கூட பரவாயில்லை... அப்படியோர் இதழ் உருவாகவேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாகவே மனதை அழுத்துகிறது... இதற்காக நானும் முதலில் நண்பர்கள் சிலருடன் முயன்று, லே அவுட், ப்ரூப் ரீடிங் வரைக்கூட முதல் இதழ் சென்று, கடைசி நேரத்தில் சில காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது... அதன்பின்னர் கூட சென்னை தோஸ்த், சிருஷ்டி போன்ற அமைப்புகளுடன் இதுபற்றி கலந்தாலோசித்து ஏனோ அது இன்னும் நிறைவேறவில்லை... இறுதியாக ஓரினம் அமைப்பிடம் கூட இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன்... விரைவில் அப்படியோர் உருவாக்கம் இங்கே நிகழவேண்டும் என்கிற ஆசையோடு காத்திருக்கிறேன்... 

இந்த கட்டுரையை படிக்கும் அமைப்பினரோ, அமைப்பு சாரா தன்னார்வு தொண்டாளர்களோ இதைப்பற்றி தங்களுக்கு இருக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்க அன்போடு வரவேற்கிறேன்...

நேரமின்மை காரணமாக வாரம் ஒருமுறையாக வலைப்பதிவுகள் குறைந்துவிட்டன... அந்த சிரமத்திற்காக வருந்துகிறேன்... நான் சொல்ல நினைத்து வலைப்பூ தொடங்கிய எண்ணங்கள் பெரும்பாலும் எழுத்துவடிவில், இந்த இருநூறு பதிவுகளில் வெளிப்படுத்திவிட்டேன்... இனி சொல்வதற்கான விஷயங்கள் கூட தேடித்தான் பார்க்கவேண்டும்.... ஆகையால் இனி பதிவுகள் கூட அதிக கால இடைவெளியில்தான் வெளிவருமென்று நினைக்கிறேன்.... அந்த தாமதத்தை பொருத்து, வழக்கம்போல உங்களின் ஆதரவை நல்கவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... வாசக நண்பர்கள் யாரும் வலைப்பதிவில் தங்கள் பதிவுகள் இடம்பெற வேண்டுமென விரும்பினால், எனது மின்னஞ்சல் முகவரியை தாராளமாக அணுகலாம்... பாலீர்ப்பு சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்த கட்டுரைகளுக்கு, தளம் என்றைக்கும் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்கும்... 

தொடர்ந்து இருநூறு பதிவுகளிலும் என்னோடு பயணித்து, என்னை ஊக்குவித்து எழுத வைத்த அத்தனை வாசக, நண்பர்கள், தம்பிகளுக்கு, சக எழுத்தாளர்களுக்கு  எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்... தொடர்ந்து உங்களின் ஆதரவு மட்டுமே என் எழுத்திற்கான பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா எல்லாமும்... அதை அவ்வப்போது சரியான சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து என்னை எழுதவைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, அன்பு முத்தங்களோடு விடைபெறுகிறேன்....
                                                                                                                          உங்கள் விஜய்...

19 comments:

  1. Your Stories tells
    more things
    It changes me more

    Congrats

    need more and more stories bro


    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி... என்னால் இயன்ற அளவுக்கு இயங்க முயல்கிறேன்...

      Delete
  2. COngrats vijay. Happy to note that your stories are getting the media lime light. ALL the best. may you see a triple century verysoon

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா... உங்களின் ஆசியோடு அது சாத்தியமானால் மிக்க மகிழ்ச்சியடைவேன்....

      Delete
  3. Congrats Vijay. All the very best in everything and stay successful always. My prayers are with you...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா... அந்த வேண்டுதல்கள்தான் என்னை இன்னும் எழுதவைத்துக்கொண்டு இருக்கிறது...

      Delete
  4. its easy to start something we like to do..but to sustain that for longer time need a real effort & hard work..and you made it that with your awesome stories & articles..You still need to go long way & All the very best for your future successes thozhar Vijay !!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி வெண்பா... உண்மைதான்... தொடங்குவது எளிதுதான், அதை தொடர்ந்து கொண்டுசெல்வது ரொம்ப கஷ்டமா இருக்கு... உங்களை போன்ற சக எழுத்தாளர்களும், என்னோடு இனைந்து பயணித்திருக்காவிட்டால் இந்த பயணம் சாத்தியமில்லை... அதை சாத்தியமாக்கிய அன்பு தோழருக்கு நன்றிகள்...

      Delete
  5. Congratz anna.............. I am so happy to hear this..... And All the Very Best for Future Projects...........:-) Let Change the Country...............!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தம்பி... உங்கள் அனைவரின் அரவணைப்போடு, மாற்றிக்காட்டுவோம்...

      Delete
  6. Replies
    1. நன்றி அபி.. உங்கள் காதலும் சிறக்க எனது வாழ்த்துகள்...

      Delete
  7. வாழ்த்துக்கள் விக்கி :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாச்சி...

      Delete
  8. romba santhosama irruku Vijay Vicky, menmelum ungal eluthu pani thodara kadavulai vendukiren, enagala maranthudathiinga, appo appo time kidaikum poothu inge engalaiyum konjam kavinichukonga..................... all d best to ur writing,.................... WISH U HAPPY WRITING............;-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீதர்.... எப்படி எல்லாத்தையும் மறக்கமுடியும்?... எவ்வளவோ மகிழ்வான தருணங்களை அள்ளித்தந்த இடமல்லவா இது, என்றைக்கும் என் நினைவை விட்டு யாரும் அகலமாட்டீர்கள்!

      Delete
    2. மிக்க நன்றி விஜய் விக்கி

      Delete