Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 3 February 2015

hi, asl, do u have place?... - இது இவங்களுக்கானது....





 பால்வினை நோய்கள் பற்றியும், எச்.ஐ.வி தொற்று பற்றியும் இங்கே அதிகம் எழுதக்கூடாது என்பதுதான் இதுநாள்வரை எனது நிலைப்பாடு... காரணம், இன்னும் பொதுத்தளத்தில் சமபால் ஈர்ப்பை எயிட்ஸ் நோயோடு தொடர்புபடுத்தி பார்க்கும் அணுகுமுறை பரவலாக காணப்படுகிறது... அது தவறு, இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று எழுதத்தொடங்கிய நாட்கள் முதல் வலியுறுத்திவரும் நிலையில், இங்கே பால்வினை நோய் பற்றி எழுதினால் அவர்களின் குழப்பம் இன்னும் அதிகமாகும் என்ற காரணத்தால் எழுதுவதை தவிர்த்துவந்தேன்... ஆனாலும், சூழல் கருதியும், அவசியம் உணர்ந்தும் இப்போது இங்கே எஸ்.டி.டி (Sexually Transmitted Diseaeses) பற்றிய சில விஷயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்... இங்கே நான் குறிப்பிட்ட நோயை பற்றியோ, அதன் தன்மைகள் பற்றியோ மருத்துவ ரீதியாக பேசப்போவதில்லை... ஏற்கனவே அதுபற்றிய விளக்கங்களை “பாலியல் நோய், ஒரு பகீர் ரிப்போர்ட்” கட்டுரையில் தெளிவுபடுத்திவிட்டதால், சமூக நலம் சார்ந்த பொதுப்படை விஷயங்களை மட்டுமே இங்கே பகிரப்போகிறேன்...

சிப்பிலிஸ், கொனரியா முதல் எயிட்ஸ் வரையிலான நோய்கள் யாவும் பாலீர்ப்பு பேதமின்றி, பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொள்ளும் எவரையும் தாக்கும் என்பதை அழுத்தமாக முதலில் பதிவுசெய்ய விரும்புகிறேன்... சமபால் ஈர்ப்பு நபர்களைத்தான் தாக்கும், ஸ்ட்ரைட் நபர்களை தாக்காது என்பதல்லாம் முட்டாள்த்தனமான மூடத்தனம் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்தபிறகு மேற்கொண்டு கட்டுரையை வாசிக்கவும்...
சமீபத்தில் பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்...

·        கடந்த காலங்களைவிட, சமீபத்தில் சமபால் ஈர்ப்பு நபர்களிடம் 35% அதிகமாக க்ளமிடியா (Chlamydia infection)தொற்று அதிகரித்துள்ளது...
·        23% அளவு கொனரியா தொற்று (gonorrhea infection) அதிகரித்துள்ளது...

இந்த சதவிகித அதிகரிப்புகள் யாவும் ஸ்ட்ரைட் நபர்களிடம் அதிகளவில் காணப்படவில்லை என்பதுதான் ஒரு ஆச்சர்யமான உண்மை... அது ஏன் கே நபர்களிடம் இந்த தொற்றுகள் சமீபத்தில் அதிகரித்துள்ளது? என்கிற ஆய்வையும் மேற்குறிப்பிட்ட ஆய்வு நிறுவனம் அலசி ஆராய்ந்தது...

அந்த ஆராய்ச்சியில்தான் கே நபர்களில், ஸ்மார்ட்போன் (smart phone) எனப்படுகிற நவீன அலைபேசியை டேட்டிங் விஷயங்களுக்கு  பயன்படுத்துபவர்களிடம் இத்தகைய பால்வினை நோய்கள் 40% அதிகம் காணப்படுவதாக அந்த அதிர்ச்சித்தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது... இன்றைக்கு ஆண்ட்ராய்டு மென்பொருள் தொழில்நுட்பம் இல்லாத அலைபேசியே இல்லை என்னும் அளவிற்கு, பலரது கையிலும் புழங்கும் சர்வசாதாரண சாதனமாக அலைபேசி ஆகிவிட்டதன் விளைவுதான் இவ்வளவும்...

பிளானட் ரோமியோ, க்ரைண்டர் போன்ற டேட்டிங் தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரும் சேவைகள் (?) எக்கச்சக்கம்... அதன் சமீப வரவுதான் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்... இந்த ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாம் ஒரு இடத்திற்கு செல்லும்போது, குறிப்பிட்ட இடத்தின் அருகாமையில் இருக்கும் கே நபர்களின் இருப்பை அறிந்துகொள்ள முடியும்... பிறகென்ன?... “Are you free?, do u have place?” தொடங்கி இடம், பொருள் எதுவும் பார்த்திடாமல் கச்சேரி களைகட்டும்... அத்தகைய எதேச்சையான சந்திப்புகளில் நம்மவர்கள் பலரும் கடைபிடிக்கும் ஒரு விஷயம், பாதுகாப்பற்ற உடலுறவு... 

“எதார்த்தமா ஊருக்கு போனேன், ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல யாரோ பசங்க இருக்கதா பிளானட் ரோமியோல பார்த்தேன், பிளேஸ் கூட இல்ல, ஆனாலும் பாத்ரூம்குள்ள மேட்டர் முடிஞ்சிடுச்சு!” இப்டி மிக இயல்பாக சொல்லும் நண்பரிடம், காண்டம் பற்றி கேட்டேன்... “அடபோப்பா... அந்த நேரத்துல நான் எங்கபோய் காண்டம் வாங்குறது?... பார்த்தோமா, படுத்தோமா, எந்திரிச்சு வந்தோமான்னு என்ஜாய் பண்ணிட்டோம்.. அவ்ளோதான்...” என்றார் சகஜமாக... இத்தகைய அவசரகால உடலுறவுகள்தான் நாம் மேற்குறிப்பிட்ட “அதிகரித்துள்ள பால்வினை நோய்கள்”க்கு காரணம்... 

“அதுமட்டுமில்லாம, அவன் ஆள் டீசன்ட்டாதான் இருந்தான்... அவனுக்கு எந்த ப்ராப்ளமும் இருக்காது!” என்று படுத்த நபருக்கு பரிந்துரை சான்றிதழ் வேற இவங்க கொடுப்பாங்க... ஒரே விஷயம்தான் அத்தகைய நபர்களிடம் கேட்கிறேன், “அந்த நபருக்கு எந்த தொற்றும் இருக்காதுன்னு மருத்துவ சான்றிதழ் நீங்க பார்த்திங்களா?”...

டீசன்ட்டா இருக்கவன்கிட்ட எந்த பால்வினை நோயும் இருக்காதுன்னு சொல்றதும், வடிவேலு படத்தில் சொல்வதைப்போல “வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு” சொல்றதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல...

அழுக்கு உடையோடு, பீடி குடித்துக்கொண்டு பேருந்து நிலைய கழிவறை வாசலில் கால்கடுக்க ‘அதற்காக’ காத்துக்கொண்டிருக்கும் நபருக்கும், ஏசி அறையில் ஆப்பிள் கணினி முன்பு பிளானட் ரோமியோவில் கை கடுக்க டேட்டிங்க்காக காத்துக்கொண்டிருப்பவனுக்கும் பெரிய அளவில் “தொற்று நோய்களின்” அபாயத்தில் வித்தியாசம் இருக்காது... முன்னவனுக்கு படிப்பறிவில்லாததால் கழிவறை வாசலில் நிற்கிறான், பின்னவனுக்கு இணைய அறிவு இருப்பதால் டேட்டிங் தளத்தில் நிற்கிறான்... அதனால், டீசண்டாக இருக்கிறான் என்கிற காரணத்தை வைத்து, முன்பின் தெரியாத நபர்களிடம் பாதுகாப்பற்ற உடலுறவில் சிக்கி மாட்டிக்கொள்ளாதீர்கள்...

இன்னும் சில வகை நபர்கள் இருக்காங்க... காண்டம் பயன்படுத்தினா, முழுமையா இன்பத்தை உணரமுடியல... அதனால ஆணுறை பயன்படுத்துவதில்லைனு சொல்வாங்க... தங்கள் டேட்டிங் தளத்து ப்ரோபைல்இல் கூட இதுபற்றி தெளிவாக “காண்டம் இல்லாத செக்ஸ் வேண்டியவங்க மட்டும் மெசேஜ் பண்ணுங்க”ன்னு குறிப்பிட்டு இருப்பார்கள்... என்னை கேட்டால் இத்தகைய நபர்கள், நாம் மேலே பார்த்த இரண்டு வகையினரைவிட ஆபத்தானவர்கள்...

ஒரு விஷயத்தை நான் அழுத்தமாக தெளிவுபடுத்த விரும்புறேன்...
“சில பால்வினை நோய்கள் எவ்விதமான அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை... நமக்கே கூட அந்த தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உணரமுடியாத அளவில் கூட இருப்பதுண்டு... அந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் பட்சத்தில், நம்மை அறியாமலேயே பலருக்கு நமக்கிருக்கிற தொற்றை பரப்பிவிடுகிறோம்... இது மிக ஆபத்தான விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கிவரும் ஒரு நிலை...”

ஆகையால், நீங்க ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, நீங்க சந்திக்கும் நபர் “மிஸ்டர் தமிழ்நாடு”வாகவே இருந்தாலும் சரி, பாதுகாப்பற்ற உடலுறவை கண்டிப்பாக தவிருங்கள்...

அதேபோல இன்னொரு விஷயத்தையும் தெளிவாக உணரவேண்டும்.... எச்.ஐ.வி பரிசோதனையை வருடம் ஒருமுறை கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்து பார்த்துக்கொள்ளவேண்டும்... “இது எனக்கானது இல்ல... அதல்லாம் படிப்பறிவில்லாத ஆட்களுக்குதான் இருக்கும்”னு நீங்க நினைச்சா, படிச்சும் நமக்குதான் முழுதான அறிவில்லை என்பதை உணரவேண்டும்... 

உடல் சுகத்துக்காக வருஷம் முழுசும் தயாரா இருப்பவர்கள், அதே உடலின் நலத்துக்காக வருஷத்துல ஒரு பத்து நிமிஷம் செலவழிக்க தயங்கினால், நிச்சயம் அதன் விளைவுகளை நாமதான் அனுபவிக்கவேண்டி வரும்... எச்.ஐ.வி கிருமி எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் உடலுக்குள் நுழைந்துவிட்டதுன்னு வச்சுக்கோங்க, நம்ம விதண்டாவாதத்தால் சோதனை செய்யாமவிட்டுவிட்டு, கடைசியில் கஷ்டப்படப்போவது நாமதான்... உங்களுக்கு எயிட்ஸ் இருக்கும்னு நான் சொல்லவரல, அது இல்லவே இல்லைன்னு ஒரு தெளிவுபடுத்தப்பட்ட மனநிலையில் இருப்பது தப்பில்லையே... குழப்பமில்லாத, குற்ற உணர்வு இல்லாத வாழ்க்கையை கொண்டுசெல்ல இத்தகைய சோதனை செய்வது அவசியம்னு உணருங்க நண்பர்களே...

சரி, உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை தேவைக்கு ஏற்ப சொல்லிவிட்டாச்சு...
கட்டுரையை நிறைவுசெய்வதற்கு முன்பு, நம்மவர்களின் மனநலம் சார்ந்த சில விஷயங்களையும் சொல்ல விரும்புறேன்... உடல்நலத்தை போலவே மனநலமும் நாம் சீரான இடைவெளியில் கவனித்துக்கொள்ளவேண்டிய ஒருவிஷயம்... ஏனோ, உடல்நலத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தருவதில்லை...

அதுவும் குறிப்பாக நம்மவர்களின் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் என்பவை சற்றே அதிகம்...

2007ஆம் ஆண்டுதான் பிரிட்டனில் இதுபற்றிய ஒரு விரிவான ஆய்வு முதன்முதலில் செய்யப்பட்டது... அந்த ஆய்வின் முடிவில் தெள்ளத்தெளிவாக எதிர்பால் ஈர்ப்பினரை காட்டிலும், சமபால் ஈர்ப்பினருக்கு அதிக அளவிலான மனநலம் சார்ந்த பிரச்சினைகள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர்... 7403 இளைஞர்களை கொண்டு செய்யப்பட்ட அந்த ஆய்வில் மனநல பிரச்சினைகள், குறிப்பாக மனச்சோர்வு (Depression), பயப்பதற்றம் (Anxiety), Obsessive Compulsive Disorder (OCD), அதீத பயம் (Phobia), தற்கொலை எண்ணங்கள், போதைப்பழக்கங்களுக்கு ஆட்படுதல் போன்ற பிரச்சினைகள் பல மடங்கு அதிகமாக காணப்படுவதாக கூறுகிறார்கள்...

அதன்பிறகு கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்ட சமீப ஆய்வும், மேற்சொன்ன ஆய்வின் முடிவை வழிமொழிந்துள்ளது... 

இந்த ஆய்வின் முடிவில் 5% எதிர்பால் ஈர்ப்பினர் மனநல பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அதேவேளையில் ஏறத்தாழ 26% சமபால்/இருபால் ஈர்ப்பினர் மனநோய்களின் பிடியில் சிக்கித்தவிப்பதாகவும் கூறியுள்ளனர்... இந்த மலைக்கும் மடுவிற்குமான மனநல வேறுபாட்டை அதிர்ச்சியுடன்தான் உற்றுநோக்க வேண்டியுள்ளது...

தங்கள் பாலீர்ப்பு மீதான குழப்பமும், சமூக புறக்கணிப்பும்தான் இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது...

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்... இந்த ஆய்வுகள் எடுக்கப்பட்ட நாடு பிரிட்டன்.... இன்றைக்கு சமபால் ஈர்ப்பு திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் கூட பாலீர்ப்பு பற்றிய கல்வியை புகுத்திக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் ஆய்வு முடிவுதான் இது... கொஞ்சம் இந்த சூழலை நம் நாட்டோடு ஒப்பிட்டுப்பார்த்தால், இந்த மனசிக்கல்களில் நாம் எந்த அளவிற்கு ஆபத்தான சூழலில் உள்ளோம் என்பது புரியும்...

பாலீர்ப்பு பற்றிய குழப்பமும், சமூக புறக்கணிப்பும் பிரிட்டனை காட்டிலும் இங்கே பன்மடங்கு அதிகமாக நிலவுகிறது எனும்போது, இந்த மனசிக்கல்களும் பன்மடங்கு விஸ்தரித்த சூழல்தான் இங்கே நிலவுது... 

பாலீர்ப்பு காரணங்களால் நித்தமும் நிகழும் தற்கொலைகளுக்கு காரணம் இந்த மன ரீதியிலான பிரச்சினைகள்தான்... ஆகையால், நம்மை அறியாமலே நம்மை சுற்றி ஆட்கொண்டிருக்கும் இவற்றை களைவது பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்...

அப்படி உங்களுக்கு மணம் சார்ந்த குழப்பங்களும், பிரச்சினைகளும் இருக்கும் பட்சத்தில், கொஞ்சமும் தயங்காமல் நம் அமைப்புகளையோ, மனநல மருத்துவர்களையோ அணுகுங்கள்... உடலைப்போலவே மனதும் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொக்கிஷம்....

பாதுகாப்பற்ற உடலுறவை தவிருங்கள், ஆண்டுக்கு ஒருமுறை எச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ளுங்கள், மனநல பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்ய முயலுங்கள் என்கிற மூன்று அதிமுக்கிய வேண்டுகோளோடு இப்போதைக்கு விடைபெறுகிறேன்...

11 comments:

  1. அருமையான பதிவு :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாச்சி...

      Delete
  2. I hope it will create a better awareness to everyone....

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த நம்பிக்கையில்தான் பதிவிட்டேன் தம்பி... விழிப்புணர்வு உண்டானால் மகிழ்ச்சியே... நன்றிப்பா...

      Delete
  3. சரியான காலகட்டத்தில் சரியான பதிவு விஜய்.

    இப்ப இருக்குற பசங்களுக்கு ஆணுரே எப்படி பயன்படுத்துனமுனு கூட தெரியல கிழிஞ்சி போய்டுது சொல்லுராங்கபா.

    பாராட்டுக்கள் விஜய்.

    நெத்தில அடிச்சாபோலா சரியான பதிவு விஜய்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ.... புரிதல் இங்கே பலருக்கும் இல்லை.... அதுதான் நமக்கான சிக்கல்களுக்கு முதன்மை காரணமும் கூட.... கருத்திற்கு மிக்க நன்றி தாசன்...

      Delete
  4. hepatitis b patri pathiyavum

    ReplyDelete
  5. hepatitis B Virus (HBV) are blood-borne and sexually-transmitted infections that have been found in the saliva.

    ReplyDelete