(இது
கே நபர்களுக்கான பதிவு... பொதுத்தள நபர்களாக இருந்தால், தயவுசெய்து வேறு கட்டுரையை
க்ளிக் செய்து வாசிக்கவும்... நம்ம கே நண்பர்கள், கட்டுரையை முழுவதும் பொறுமையா
படியுங்க... கோபப்படாம, ஒரு நிமிடம் படிச்சதும் யோசிச்சு பாருங்க!)
அப்போ
கண்டமனூர் ஜமீன் என்னை கண்டம் பண்ணிட்டாரு...
அந்த
விஷயம் அவரு அண்ணனுக்கு தெரிய,
தம்பி
பொண்டாட்டிய தான் பொண்டாட்டின்னு
அவர்
எதார்த்தமா கேட்க, நானும் பதார்த்தமா விட்டுக்கொடுத்திட்டேன்...
இந்த
விஷயம் அவர் வீட்டு சமையல்காரனுக்கு தெரிய,
சமயக்காரனோட
முடிச்சுக்கலாம்னு, தோட்டத்து பக்கம் ஒதுங்குனேன்...
அதை
தோட்டக்காரனும் பாக்க...”
இப்டி
போகும் வடிவேலு நகைச்சுவையை நம்மில் ரசிக்காதவர்களே இருக்கமுடியாது... ஆனால், இந்த
குறிப்பிட்ட நகைச்சுவையை நண்பர் ஒருவர், இங்கே சமீபத்தில் அதிகரித்துவரும் கே
நபர்களுக்கு இடையிலேயான காதலைப்பற்றி குறிப்பிடும்போது, உதாரணமாக கூறினார்...
அவரோடு கோபத்தில் வாதம் செய்தேன்... நம்ம நாட்டில் நடக்கின்ற எண்ணிலடங்கா
எதிர்பால் காதலின் தோல்விகளைப்பற்றியும், ஏமாற்றுதல்கள் பற்றியும் உதாரணங்களை
அடுக்கி, நம்மவர்களின் காதலை விட்டுக்கொடுக்காமல் விவாதித்தேன்...
ஆனாலும்,
அதன்பிறகு அவர் சொன்னதைப்பற்றி யோசிக்கும்போது, அதில் உண்மை இருக்கிறதோ? என்றே
தோணுது... இங்கே நண்பர்கள் மத்தியில் நான் பார்த்தவரையிலான 90% காதல்கள்,
குறிப்பிட்ட சில மாதங்கள் கூட நீடிப்பதில்லை... மீதமுள்ள பத்து சதவிகிதத்தை மட்டுமே
வைத்து ஆறுதல் அடைய சங்கடமாக இருக்கிறது... வாழ்நாள் முழுவதும் இணைந்துவாழ,
இல்வாழ்க்கை துணை தேடும் நல்ல உள்ளங்களுக்கும், மேற்கொண்டு குறிப்பிட இருக்கின்ற
‘அப்பாடக்கர்’களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை... உங்களின் காதல் தேடலின்
உண்மைத்தன்மை உங்க மனசாட்சிக்கு தெரியும், அதற்கு விரோதமில்லாமல் மேற்கொண்டு
படித்து, உங்களை பகுத்துப்பாருங்கள்..
சுந்தர்
& வேலு, ரவி & கமல் போன்ற காதல் இணைகளைப்பற்றி கட்டுரைகள் எழுதியபோது என்
நண்பர் ஒருவர், “ஏன் விஜய், எங்க லவ் பற்றியல்லாம் எழுதமாட்டிங்களா?... நாங்களும்
உண்மையான காதலர்கள்தான்”ன்னு கோபித்துக்கொண்டார்... அந்த நண்பர் அப்போதுதான் ஒரு
காதலில் திளைத்திருந்தார்... ‘அங்கே போனோம்... இங்கே வந்தோம்... அவன் கடிச்சான்,
நான் அடிச்சேன்’ன்னு காதல் ஸ்டேட்டஸ்கள் பஞ்சமில்லாமல் பேஸ்புக்கில் சிறகடித்த
அவருடைய காதலின் ‘ஹனிமூன்’ காலகட்டம் அது... “ஒன்னும் பிரச்சினை இல்ல சகோ...
ஒருவருஷத்துக்கு பிறகும் நீங்க இதே காதலோட இருந்திங்கன்னா, நிச்சயம் உங்க
காதலைப்பற்றியும் எழுதுறேன்”ன்னு சொன்னேன்...
நாட்களும்
ஓடியது... எதேச்சையாக ஒருவருடம் கழித்து, அந்த நண்பரை சாட்டில் சந்தித்தேன்...
“என்ன பாஸ், காதல் எப்டி இருக்கு?” என்றேன்... “அது சூப்பரா போகுது... ஆனால்,
முன்ன சொன்ன அந்த பையன் இல்ல, இது வேற ஒருத்தன்...” அப்டின்னு சொன்னார்...
அப்பவும் அதே, ‘அங்க போனேன், இங்க வந்தேன்... அவன் கடிச்சான், நான் அடிச்சேன்’
காதல் ஸ்டேட்டஸ் நிற்காமல் ஓடிக்கொண்டுதான் இருந்தது... அவர் சொன்னபடி அதே
காதலோடுதான் இன்னமும் இருக்கிறார், ஆனால் காதலன்தான் மாறிவிட்டான்...
நான்
சந்தித்த, பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட காதல்கள் எல்லாமே ‘ஐந்தாவது, ஆறாவது,
ஏழாவது’காதலாகவே இருப்பது, இவ்வளவு காதல் கதைகளை எழுதிய பாவத்திற்கு இறைவன் எனக்கு
கொடுத்த தண்டனையோ என்னவோ தெரியல....
ரொம்ப
சாதாரணமாக பலரும் பத்து காதல்களை கடந்தும்,’தன் முயற்சியில் சற்றும் தளராத
விக்ரமாதித்யன்களாக’ காதலன் தேடிக்கொண்டு இருப்பதை நான் மட்டும்தான் அதிர்ச்சியோடு
பார்க்கிறேனா? என்பதும் புரியவில்லை...
“இதென்ன
முட்டாள்த்தனமான பேச்சு?... ஒருத்தனோட காதல் உண்டாகுது... அவனுக்கும், நமக்கும்
ஏதோ சில விஷயங்களில் ஒத்துப்போகல... அவன் கெட்டவனாவே இருக்கான்னு வச்சுக்குவோம்,
அப்டி இருக்குறப்போ அவனைவிட்டு விலகுறது என்ன தப்பு விஜய்?”ன்னு வம்புக்கு
வராதிங்க...
ஒன்னு
ரெண்டு காதல்னா நீங்க சொல்ற மாதிரி உங்க காதல்ல பிரச்சினையா இருக்கலாம்... அட அது
பரவால்ல... நாலஞ்சு காதல்னா கூட, உங்க காதலன்கிட்ட ஏதோ பிரச்சினை இருக்கலாம்னே
வச்சுக்கலாம்... பத்து பதினஞ்சு காதல் தோல்விகள், அதுவும் ஓரிரு வருடங்களுக்குள்
அப்டின்னா, தப்பு உங்ககிட்ட இருக்கா? மத்தவங்ககிட்ட இருக்கான்னு யோசிக்க
வேண்டாமா?...
உங்க
காதலனோட தவறையல்லாம் பொறுத்துகிட்டு, எல்லாத்திலும் சமரசம் செஞ்சுகிட்டு உங்கள
கோவலன் மனைவி கண்ணகி போலவோ, வள்ளுவர் மனைவி வாசுகி போலவோ வாழ சொல்லல... ஆனால்,
எந்த காரணங்களுக்காக உங்க காதல்கள் தோல்வி அடஞ்சுதுன்னு கொஞ்சம் யோசிச்சிருக்கிங்களா?...
ஆனால் யோசிக்கக்கூட நேரம் எடுத்துக்காம, அடுத்த காதலை நோக்கி ஓடத்தொடங்கிடுறீங்க...
நீங்க
இப்போ ஒரு வேலைல இருக்கிங்கன்னு வச்சுக்கலாம்... கண்டிப்பா அதில ஆயிரத்தெட்டு
சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்... ரொம்ப கஷ்டப்பட்டு, சங்கடங்களோடு சிலநேரங்களில்
பணியாற்றும் சூழல் இருக்கலாம்... சிலர் கொஞ்சமும்
பிடிக்காமல் கூட அந்த வேலையை செஞ்சிட்டு இருக்கலாம்... ஆனாலும், அந்த வேலையை
விட்டு நம்மில் எத்தனைபேர் விலகுவோம்?... பெரும்பாலும் மாட்டோம்... காரணம், அந்த
வேலையை விட்டுட்டா, இன்னொரு வேலை எளிதா கிடைக்காதுன்னு நினைக்கலாம்... கிடைக்கும்
இன்னொரு வேலை, இதைவிட கடினமானதாகவும் இருக்கலாம்... அதனால, புத்திசாலித்தனமா
அதிலுள்ள கஷ்டங்களை களைய முயல்வீங்க, சகித்து பணிசெய்ய பழகிக்குவீங்க....
காதலில்
மட்டும் சின்ன சிக்கல்களை காரணம் காட்டி ஓடிப்போற நீங்க, வேலை விஷயத்தில் அதென்ன
இவ்வளவு சமரசங்கள்?... ஒரே காரணம்தான்... காதல் செய்ய நிறைய பசங்க இருக்காங்க,
வேலை அப்டி இல்ல...
உங்ககிட்ட
தூண்டில் இருக்கு, பேஸ்புக் கடலில் தூண்டில் போட்டால், உங்க முள்ளில் சிக்க ஆயிரம்
காதல் மீன்கள் காத்துகிட்டு இருக்கும்ன்குற ஒரு அலட்சியம்... அதனால, ஒன்னைவிட
இன்னொன்னு பெட்டரா கிடைக்கும்போது, காரணங்களை நீங்களே உருவாக்கிக்கிட்டு காதலை
முறித்துக்கொள்கிறீர்கள்... மொபைல் மாடல் போல, இன்னும் இன்னும் புதுசா தேடிட்டே
இருக்கீங்க...
எதிர்பால்
காதல்களில் இது அதிகம் நடப்பதில்லை, நடப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை... அங்கே
பெண்களுடன் ஒரு காதல் உண்டாகவே ஸ்ட்ரைட் பசங்க தலைகீழா நின்னு தண்ணி குடிப்பதால,
அதை அவ்வளவு எளிதா விட்டு இன்னொன்னை தேடிப்போக நினைப்பதில்லை... அதனால, நம்ம
பசங்கதான் ஒப்பீட்டளவில் அதிக பிரேக்கப்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை வருத்தத்துடன்
சொல்லித்தான் ஆகணும்...
அதுவும்
இங்க காதல்ங்குற பேர்ல நடக்குற கொடுமையல்லாம் பார்க்கவே வேதனையா இருக்கு...
உதாரணமா இங்கே நண்பர்கள் மத்தியில் நான் கேள்விப்பட்ட ஒருசில காதல்களை சொல்றேன்..
“அடுத்த வருஷம் எனக்கு திருமணம்... அதுவரைக்கும்
என் லவ்வரா இரு...”
“காதலன் வெளியூரில் இருக்கிறான்... அவன் திரும்பிவரும்வரை என் காதலனா இரு...”
“என்
பார்ட்னரும் டாப், நானும் டாப்... நீ என்னோட பாட்டம் லவ்வரா இருக்குறியா?”
“என்
லவ்வரோட இன்னும் கமிட்மென்ட்லதான் இருக்கேன்... அதுக்காக மத்த பசங்ககூட செக்ஸ்
வச்சுக்கக்கூடாதா என்ன?”
மேலே
சொன்ன தெய்வீக காதல்களைப்பற்றி நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... ஆனாலும், இப்படி
இன்ஸ்டால்மென்ட் முறையில காதல் தேடுற பசங்க பேஸ்புக்ல கொடுக்குற அலப்பறை கொஞ்சம்
நஞ்சம் இல்ல... ரோமியோ ஜூலியட் உயிரோட இருந்திருந்தா கூட இவங்க காதல் ஸ்டேட்டஸ்கள்
பார்த்து பொறாமை பட்டிருக்கணும்...
இப்படி
ஸ்டேட்டஸ்களில் மெல்லிய உளவியல் காரணம் ஒன்னு இருக்குன்னே தோணுது... பொதுவா நம்ம
கே பசங்க மத்தியில ஒரு பிம்பம் நிலவுது... “காதல் பண்றவனல்லாம் நல்லவனாத்தான்
இருப்பான்!” அப்டின்னு ஒரு நம்பிக்கை ... அதனால, காதல் ஸ்டேட்டஸ் போடும் நம்ம
மன்மதன்களை தேடி அப்பாவி பசங்க போறது சகஜமா நடக்குது... வெளிச்சத்தை தேடி பறந்து,
விளக்கின் நெருப்பில் சுட்டுக்கொள்ளும் விட்டில்பூச்சிகளுக்கு இங்கே பஞ்சமே
இல்லை...
பேருந்தில்
ஒரு சீட்டில் உட்கார்ந்துகொண்டே இன்னொரு சீட்டில் துண்டை போட்டு இடம்பிடிப்பது
போல, ஒரு காதலில் இருந்துகொண்டே இன்னொரு காதலுக்கு அடிபோடுவதற்குத்தான் அத்தனை
காதல் ஸ்டேட்டஸ் அலப்பரைகளும்... அடுத்த காதலுக்கான முதலீடாக, இருக்கின்ற காதலை
பயன்படுத்திக்கொள்வது என்று கிட்டத்தட்ட ஒரு வியாபாரமாகவே காதலை
ஆக்கிவிட்டார்கள்... அது என்னவோ நம்ம பசங்களுக்கும் கூட, ஒரு காதலை பிரித்து,
காதலர்களுள் ஒருவனை தன்னவனாக்கிக்கொள்வதற்கு அவ்வளவு ஆசை... அதனாலேயே ‘அண்ணன்
எப்போ எந்திரிப்பான், திண்ணை எப்போ காலியாகும்!’னு பலபேரு காத்துகிட்டு
இருக்காங்க....
“சரி,
ஏன்தான் ஒரு காதல் இருக்கப்பவே இன்னொரு காதலை தேடனும்?... பிடித்துத்தானே
காதலிச்சிருப்பாங்க, திடீர்னு காதலிலிருந்து விலக ஏன் கொள்ளைக்கூட்ட தலைவன் போல திட்டமல்லாம்
போடுறாங்க?”ன்னு உங்களுக்கு தோணலாம்...
முன்பு
சொன்னதைப்போல, அடுத்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை தொட்டுப்பார்க்கனும் என்கிற ஒரு
த்ரில்தான் முதல் மற்றும் முக்கியக்காரணம்... நாலு பேர்கிட்ட லவ் பிரேக்கப் ஆனதை
கூட, ‘ப்ளே பாய்’னு பெருமையோட சொல்ற ஆளுங்ககிட்ட வேற என்னத்த
எதிர்பார்க்கமுடியும்?...
ஆனால்
சிலருக்கு, இருக்கும் காதலில் இருக்கின்ற பிரச்சினைதான் பிரேக்கப்’க்கு சிலநேரங்களில்
அடிகோலுது... சின்ன சின்ன கருத்து முரண்பாடுகளும், சண்டைகளும் பூதாகரமாக
ஆக்கப்பட்டு பிரிந்துவிடும் சூழலும் பலருடைய காதலிலும் பார்க்கமுடியுது... குறைகளை
லென்ஸ் வச்சுப்பார்ப்பதும், நிறைகளை உதாசீனப்படுத்துவதும் நிச்சயம் ப்ரேக்கப்பை
நோக்கி இவர்களை தள்ளுவதில் வியப்பேதும் இல்லை...
திரைப்பட
வசனம் ஒன்றை இங்கே சொன்னால் அதற்கு பொருத்தமா இருக்கும்...
“இங்க
நாம எல்லாருமே Mr.Perfectனு ஒருத்தன தேடிட்டு இருக்கோம்... ஆனால்,
நிஜத்துல அப்டி ஒருத்தன் இல்லவே இல்ல...” இதுதான் நிதர்சனம்கூட.... நாம எல்லோரும்
கூட அப்படி Mr.Perfect நபரைத்தேடி ஓடி ஓடித்தான், நல்ல பல
காதல்களை உதாசீனப்படுத்துறோம்.... வெங்காயத்தை உரிப்பது போல, காதலையும் நீங்க
உரித்துக்கொண்டே போனால், இறுதியில் கண்ணீரை தவிர வேற ஒன்னும் அதில்
இருக்கப்போறதில்லை...
விட்டுக்கொடுத்தல்,
சகிப்புத்தன்மை, நம்பகத்தன்மை இது மூன்றும் இல்லாத பட்சத்தில் என்றைக்குமே நமக்கு
காதலில் திருப்தி ஏற்படப்போவதில்லை.... (இப்போ உண்மையாகவே இறுதிவரை காதலிக்கனும்னு
நினைக்கிற நபர்களுக்கு டிப்ஸ்’களை இந்த "காதலில் சொதப்பாதது எப்படி?" இணைப்பில் பார்க்கவும்)
இறுதியா
ஒன்னே ஒன்னு சொல்றேன்... இந்த உலகத்தில் யாருமே “Made for each other” ஆக பிறப்பதில்லை... ஆனால், நாம நினைச்சா அப்டி நம்ம காதலை ஆக்கிக்கொள்ள
முடியும்!... வேற வேற வேறன்னு வெரைட்டியா தேடி அடையணும்னு நினைச்சா, அதுக்கு
டேட்டிங் தளங்கள் எத்தனையோ இருக்கு... தயவுசெஞ்சு அந்த இச்சைகளுக்கு, காதல்ங்குற
பெயரை பயன்படுத்திக்காதிங்க.... உண்மையாவே காதலிக்கனும்னு நினைத்தால், முதலில்
காதலுக்கு உண்மையா இருங்க... இந்த காதலர் தினம் முதலாவாவது, நல்லதொரு காதல்
அனுபவம் வாய்த்திட வாழ்த்துகள்!...
(இதுவரை
நம்மவர்களை இந்த அளவுக்கு விமர்சித்து கட்டுரை எழுதுனதில்ல.... ஆனாலும், நம்ம
ஆளுங்ககிட்ட இருக்குற தவறை சுட்டிக்காட்டுறது இப்போதைக்கு ரொம்ப அவசியம் என்பதால,
எல்லாத்தையும் மனம் திறந்து கொட்டிட்டேன்... இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக
எழுதல, அப்டி யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்....)
விட்டுகொடுத்தல், சகிப்புதன்மை, நம்பகத்தன்மை ரொம்ப சரியான வார்த்தைகள் இது இல்லாமலும் இதை கடைபிடிகததலும் நிறைய நல்ல காதல்கள் இங்கே பட்டு போகின்றன. இனியாவது நமவர்கள் புரிந்து கொண்டு நடந்தால் நம் நிலைமை மாறும். நமக்கும் இந்த பொது உலகத்தில் கிடைக்கவேண்டிய அங்கிகாரம் கிடைக்கும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை நண்பா. இங்கு நான் FB இப்போ கொஞ்ச நாளாகத்தான் நான் அடிகடி வந்து போகிறேன் அந்த காலத்திலேயே நா இங்கு சில நபர்கள் பல நபர்களை (காதலர்களை) மாற்றி விட்டார்கள். இது எங்கு போகுமோ என்ன ஆகுமோ ????????? வாழ்கையே பெரிய கேள்விகுறி தான் இங்கே
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி நண்பா... நம்மவர்கள் இதை இனியாவது புரிந்துசெயல்பட்டால் நன்மையே!
DeleteKovalanum,valluvanum entha vidhathula onnu nu soldringa? Its a dubious one
ReplyDeleteகோவலனையும், வள்ளுவனையும் எந்த இடத்திலும் ஒன்றுபடுத்தி கூறவில்லை... கண்ணகியும், வாசுகியும் எந்த தருணத்திலும் தங்கள் கணவனை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்ததாக படித்த கதைகளை வைத்து இங்கே உதாரணம் கூறினேன், அவ்வளவே!
DeleteOh ho :)
Deleteவிஜய் உங்க கட்டுரைகள் படிக்கும் முன்பு நான் மனதின் தேடலுகாக என் உடலை மதியாது சுற்றினேன் தெளிவுடன் கூட குழப்பதில். ஆனால் என்று உங்கள் வாசகரானேனோ அன்றுமுதல் இன்றுவரை நான் என் மனதிற்கு மட்டும்மல்ல உடலுகும் மதிப்பு கொடுத்து வாழ்கை துணையை எதிர்பார்த்து மன அமைதியுடன் நம்பிக்கையுடன் இருக்கிரேன் விஜய்.
ReplyDeleteஉங்கள் எழுத்து என்னை மாற்றி இருக்கிறது. நான் உங்கள் எழுத்தின் வாசகர் என பெருமை படுகிறேன்.
எனக்கு வாழ்கை தோழன் கிடைக்கிறாரோ இல்லையோ. தெளிவு கிடச்சிருக்கு விஜய் உங்க எழுத்தால.
நம்ம சழுதாயம் மாறி வருகிறது விஜய். என்ன கொஞ்ச வருஷம் எடுத்துக்கோம்.
உங்கள் சாடல் சரியானதே விஜய்.
இப்படிக்கு
கமல்தாசன்.கு
ரொம்ப மகிழ்வாக உணர்கிறேன் சகோ... இத்தகைய கருத்துகள் அவ்வப்போது என் எழுத்திற்கு கிடைக்கும் எரிபொருள்.... ரொம்ப நன்றி கமல்...
Deletesuper
ReplyDeleteநன்றி தம்பி...
DeleteNice Vijay. This post is also needed for us as most of the times criticisms taken positivelyhelps us correct ourselves better,
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி பிரபு...
DeleteIts very helpful article Vicki, many guys like me are suffered a lot and lost many things from these type of (part time) lovers.
ReplyDeleteU know that I cried a lot in my life for that guy.
Its very true there are part time lovers are there
Today chating, tommorow meeting then status, dating and roaming
If all over breakup
Fore sure. This article will helpful for guys who looking for true love......
well said na.... really straight boys avlo seekiram innoruthangala thedi poga matanga but here it happens like a ritual....
ReplyDelete