Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday, 19 March 2015

உலகின் பேரழகான பத்து GAY Bachelor'களின் தரவரிசை.... - தமிழில் முதன்முறையாக!

 பொதுவா நம்ம சமபால் ஈர்ப்பு சமூகத்தில், நிறைய காதல் ஜோடிகளை பற்றி பார்த்திருப்போம், படித்திருப்போம்... அவ்ளோ அழகா, நம்ம கனவுக்காதலன் போல இருக்குற ஒருத்தன் பக்கத்துலையே அவனோட காதலன் நிக்குறத பாக்குறப்போ கொஞ்சம் காஸ்ட்ரிக் அல்சர் எட்டிப்பார்க்கத்தான் செய்யும்... அப்போ அழகான கே பசங்க, சிங்கிளாவே இல்லையா?ன்னு புலம்பிய நபர்களுக்கான கட்டுரை இது... 

 உங்க கவலையை போக்க இந்த உலகத்தின் பேரழகான கே அழகன்களின் பட்டியலை ‘கே ஸ்டார் நியூஸ்’ தளம் வெளியிட்டுள்ளது... இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பத்து அழகு மன்மதன்’களும் இப்போதைய நிலவரப்படி ‘சிங்கிள்’தான், இன்னும் காதலன் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.... ஆக, அப்ளிகேஷனை தயார்படுத்திக்கொள்ளுங்கள்!...

இந்த பட்டியலின் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் 24 வயதாகும் பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் ஸ்டீவ் கிராண்ட் (Steve Grand)... விக்ரமன் படத்து நாயகி போல ஒரே இரவில் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் தன்வசப்படுத்திய பாடகர்... இவர்தான் தன்னை முதலில் வெளிப்படுத்திக்கொண்ட பிரபலமான அமெரிக்க இசைக்கலைஞர் என்பது இவருக்கு கூடுதல் பெருமை... நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கிராண்ட், “என்னுடைய இசையை நான் திருமணம் செய்திருக்கிறேன்!” என்று கூறியுள்ளார்...  தம்பிக்கு இன்னும் வயசு இருக்கு, ஆனாலும் அப்ளிகேஷன் போடுறவங்க போட்டுக்கலாம்...

ஒன்பதாவது இடம் பிடித்திருக்கும் ஆண்ட்ரூ ரனல்ஸ் (Andrew runnels) அமெரிக்காவின் பிரபல நடிகர் மற்றும் பாடகர்...  டோனி விருது, கிராமி விருதுன்னு வாங்கிய விருதுகளுக்கு பஞ்சமில்லை... பிரபல சேனலான எச்.பி.ஓவில் இவர் நடித்த தொடர் அதிரி புதிரி ஹிட்டாம்... அதனை தொடர்ந்து இவர் மார்க்கெட், கோயம்பேடு மார்க்கெட்டைவிட பரபரப்பாக இருக்கிறதாம்... 37 வயதுன்னு இவர் பிறந்த சான்றிதழை காட்டினால் கூட நம்மால் நம்பமுடியாது, அம்புட்டு அழகு... சார் இன்னும் சிங்கிள்தான் என்பதை கவனிக்கவும்...

45 வயதாகும் பில்லி பார்ட்டர் இன்னும் நிலையான உறவில் இல்லாததால், இந்த கறுப்பின அழகனுக்கு எட்டாவது இடம்... பாப் பாடகர், நடிகர் என்ற பன்முக திறன்மிக்க நபர், டோனி அவார்ட் உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்... பார்ட்டரின் டேட்டிங் தேதிக்காக காத்திருக்கும் பெண்கள், ரேஷன் கடையைவிட நீளமான வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்களாம், என்ன செய்வது அவர் கே’வாக பிறந்துவிட்டாரே!...

ஏழாம் இடம் பிடித்திருக்கும் அழகன் சாம் ஸ்மித் உடைய ஆல்பம் விற்ற சாதனையை இதுவரை வேறு எவராலும் மேற்குலகில் முறியடிக்க முடியவில்லையாம்... 2014ஆம் ஆண்டு மட்டும் இவர் வாங்கிய கிராமி விருதுகளின் எண்ணிக்கை “நான்கு”... “என்னுடைய வருங்கால காதலன், என் கிராமி விருதுகளை மேலும் பட்டை தீட்டுபவனாக இருப்பான்” என்று பேட்டியும் கொடுத்துள்ளார் இந்த 22 வயது பேரழகன்...

45 வயதாகும் கால்மன் டோமிங்கோ நவீன இசை உலகின் ஹாட்ரிக் நாயகன்... நம் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்திருக்கும் இந்த கருப்பழகனுக்கு ஏனோ காதலனில் மட்டும் நிலையாக ஒருவர்கூட வாய்க்கவில்லை... இசையுலகை வசியப்படுத்திய கால்மான்’ஐ இன்னும் எவரும் வசியப்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்!...

இதுவரை பாடகர், நடிகர் என்றே பார்த்துவந்த நமக்கு கொஞ்சம் மாறுதலாக, அதைவிட ஆறுதலாக ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார் பிரபல அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர் ராபி ரோஜர்ஸ்... 27 வயதாகும் இந்த அழகனுக்கு கடந்த வருடம்தான், ஒரு காதல் ‘கட்’ ஆகி பிரேக்கப் நிகழ்ந்தது... “நாங்க இப்போ வெறும் நண்பர்கள் மட்டும்தான்... இனி காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை!” என்று நம்மூர் நடிகைகள் போல அறிக்கையல்லாம் கூட விட்டுவிட்டார்... இதற்கு பிறகுதான் இவருடைய ஆண் ரசிகர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து, காதல் கடிதங்களால் மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார் ரோஜர்ஸ்...

நான்காம் இடம் பிடித்திருக்கிறார் 42 வயதாகும் பிரபல அமெரிக்க நடிகர் வென்ட்வர்த் மில்லர்... இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தன்னை வெளிப்படையாக கே என்று அறிவித்துக்கொண்டதால், இந்த அழகனின் தற்போதய காதல் நடவடிக்கை எதுவும் அவ்வளவாக புலப்படவில்லை... கோல்டன் க்ளோப் விருது உட்பட பல விருதுகளை சுமந்த இந்த அழகனை சுமக்க விரைவில் ஒரு காதலன் கிடைப்பார்னு நம்புவோம்... அப்ளிகேஷன் போட நினைப்பவர்கள், காலம் கடத்தாமல் போட்டுவிடுங்கள்!...

மூன்றாம் இடத்தை பிடித்திருக்கும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர நீச்சல் வீரர் அயன் தோர்ப் தன்னை கே’வாக வெளிப்படுத்திய சில மாதங்களுக்கு முன்பு உலக மீடியாக்களின் முக்கிய செய்தியாக வலம்வந்தார்... கடந்த வருடம் காதலன் இருந்தார், இப்போ இல்லை’னு ஒரு பேச்சு உலா வருது... ஐந்து ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற இந்த தங்க மகனுக்கு இன்னும் காதலன் கிடைக்கவில்லை என்பதுதான் கரண்ட் தகவல்... அப்டியே நம்மாளுங்க கடலுக்குள் குதிச்சு, ஆஸ்திரேலியா வரைக்கும் நீந்தியே போயி அவரை இம்ப்ரஸ் பண்ணலாம்னு நினைக்குறேன்!... நீங்க ரெடியா?..

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்னு நான் பெரிதும் எதிர்பார்த்து, ஏனோ இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட என் விருப்ப நாயகன் ரிக்கி மார்ட்டின்’க்கும் இன்னும் சரியான காதலன் வாய்க்கவில்லை என்பதை கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொண்டுதான் சொல்லவேண்டி இருக்கு... வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகிவிட்ட ரிக்கி மார்ட்டின், தன் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிடவே இப்போ விரும்புகிறாராம்... 44 வயதானாலும் இன்னும் அழகும் ஸ்டைலும் மாறாத ரிக்கியை பார்க்குறப்போ...... ஹ்ம்ம் (இப்பவும் பெருமூச்சு மட்டும்தான் விடமுடியுது!)....

29 வயதாகும் பிரபல அமெரிக்க பாடகர், நடிகர் ஜானத்தன் கிராப் தான் இந்த பட்டியலின் முதல் இடத்தை பிடித்திருக்கும் பேரழகன்... சமீபத்தில் தன் காதலனுடன் உண்டான பிணக்கால் பிரேக்கப் ஆகியதால் இந்த பட்டியலில் படாரென்று நுழைந்து , முதல் இடத்தையும் பிடித்துவிட்டார்... நம்ம ஊர் சிம்பு போல இவர் மீதும் மேற்குலகில் பல காதல் குற்றச்சாட்டுகள் உண்டு... “ஜானத்தன் முதல் சந்திப்பிலேயே உடலுறவில் ஈடுபட்டுவிடுவார், அவருக்கு காதலென்றால் என்னவென்றே தெரியாது!”ன்னு திட்டித்தீர்க்கின்றன சில மீடியாக்கள்... ஆனாலும், இந்த நெகட்டிவ் விளம்பரத்தின் மூலமாகவோ என்னவோ உலகில் அதிகம் தேடப்படும் கே நடிகராக இந்த பேரழகன் வலம்வருகிறார்.... இந்த வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் சிறப்பான காதல் வாழ்க்கையில் திளைக்க இந்த அழகனை வாழ்த்துவோம்...

பத்து அழகன்களையும் பார்த்தாச்சா?... சீரியஸாவே போய்கிட்டு இருக்குற வலைப்பதிவுகளில் கொஞ்சம் இளைப்பாறத்தான் இந்த பதிவு... படத்தை பார்த்து ரசிச்சு, சிரிச்சதோடு நிறுத்திக்கோங்க மக்களே... நீங்கபாட்டுக்கு ரிக்கி மார்ட்டினையும், ஜானத்தனையும் தேடி ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா கணக்கா அமெரிக்கா போய்டாதிங்க... இந்த பதிவை போடும் இந்த நிமிடத்திற்குள் கூட அவங்களுக்கு காதலன் செட் ஆனாலும் ஆகிருக்கலாம்... சரி, இன்னொரு தருணத்தில் இன்னொரு சுவாரசிய கட்டுரையோடு சந்திக்கலாம்.... நன்றி!...

10 comments:

 1. ஏன் எல்லா gay பசங்களும் straight பசங்கள விட கவர்ச்சியா இருக்காங்க?நான் இவங்கள மட்டும் சொல்லல,பொதுவா கேட்டன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லிடமுடியாது... ஆனாலும், பொதுவா கே ஆண்கள் அழகியல் உணர்ச்சி அதிகம் உள்ளவர்கள்... அதனால், இயற்கை அழகை இன்னும் வளப்படுத்தி அதிக நேர்த்தியாக காட்ட முயல்வார்கள்... அதனால், இன்னும் கூடுதலாக சில நேரங்களில் அழகாக தெரியலாம்...

   Delete
 2. Wow.... Everyone are so hottttttt.... but indians dha yaarume illa... seekirama indha list la oru indian aavadhu varanum..:-)

  ReplyDelete
  Replies
  1. நிஜத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை எத்தனையோ அழகன்கள் கே'வாக இருக்கலாம்... இந்த ஹோமொபோபிக் சமூகத்தால, அவங்க வெளிப்படுத்திக்காம இருக்காங்க... நிச்சயம் எதிர்காலத்தில் இந்த பட்டியலில் பல இந்தியர்கள் இடம்பிடிப்பார்கள்னு நம்பலாம்...

   Delete
 3. Apdiye Ungaluku pidicha list ayum post pannungalen; )

  ReplyDelete
 4. Apdiye Ungaluku pidicha list ayum post pannungalen; )

  ReplyDelete
  Replies
  1. நம்ம லிஸ்ட்ல எப்பவும் முதல் இடம் எவர்க்ரீன் அழகன் ரிக்கி மார்ட்டினுக்குதான்... இரண்டாவது, மூன்றாவது எல்லாம் இந்த பட்டியலே ஓகே தான்... உங்க பட்டியல் எது சகோ?

   Delete
  2. உங்க அளவுக்கு எனக்கு நுண்மையான ரசனை இல்லைனு நினைக்கறேன்...
   எனக்கு பத்தாவது அழகன் ஸ்டீவ் கிராண்ட் தான் ரொம்ப பிடிச்சுருந்துது :)
   இப்பலாம் அவன தான் பாத்துட்டே இருக்கேன் :)

   Delete
  3. இதுல நுட்பமான ரசனைக்கல்லாம் வேலையே இல்ல சகோ.. அவங்கவங்க டேஸ்ட் பொறுத்துதான் இருக்கு... நீங்க சொல்ற ஆளும் பேரழகன்தான்..

   Delete
 5. Enaku Sam smith than perazhagan. Avar ah rasikavea enaku tym pathala. Bcz he is so so so cute n hot.... Enaku avar ah pakanum epdi achum athu matum pothum...

  ReplyDelete