Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 8 November 2012

ஓரின காதல்- "உஷார்".....

"கண்டதும் காதல்" என்ற நிலை மாறி இன்று பெரும்பாலும் காணாமல் காதல் என்ற நிலை ஆகிவிட்டது..... இணைய புரட்சியின் புது வடிவமான இந்த காதல் வைரஸ் அதிகம் தாக்குவது கே உலக நபர்களைத்தான்.... அவர்களுக்கான ஒரு வார்னிங் சிக்னல் தான் இந்த கட்டுரை.... "இதுவரை பல இடங்களிலும் காதல் செய்யுங்க, நிற்பந்தத்தினால் திருமண பந்தம் போகாதிங்க" என்று சொன்ன நான் நேற்று இரவு மனம் மாற காரணம் என்ன? என்று தெரியவில்லை.... என் இணைய நண்பர் ஒருவர் போன் செய்தார், "விஜய், நான் இப்போ ஒரு பையனை லவ் பண்றேன்.... இவ்ளோ நாள் அப்டி இப்டி இருந்தாச்சு, இப்போ நானும் காதலிக்கிறேன்.... உங்ககிட்டதான் முதல்ல சொல்றேன்" என்றான்.... ஊருக்கு உபதேசம் என்றால் எப்படியோ சொல்லிருப்பேன்... அவன் என் "தம்பி" போல நான் நினைப்பவன்.... அவனை வாழ்த்துவதற்கு பதிலாக அதிகமாக அட்வைஸ் பண்ணேன்.... அவனே "ஏண்டா இவன்கிட்ட சொன்னேன்?" என்று யோசிக்கும் அளவு அவனை பயமுறுத்தினேன் என்றுதான் சொல்லவேண்டும்..... கே காதல் தவறென்று நான் சொல்லவில்லை.... அப்படி காதல் கமிட்மன்ட்'க்கு போகும் முன் இரண்டே இரண்டு கேள்விகளுக்கு உங்களையே பதில் கேட்டுக்கொண்டு செல்லுங்கள்.....

1.வாழ்க்கை முழுவதும் அந்த காதலை உங்களால் வழிநடத்தி செல்ல முடியுமா?
2.எந்த நிலையிலும் உங்கள் காதலர் நீங்கள் கொள்ளும் காதலுக்கு உண்மையானவராக இருப்பாரா?.....

இந்த இரண்டு கேள்விகளும் பார்க்க ரொம்ப எளிதாக இருக்கலாம்.... ஆனால், அதன் வலிமை உங்களுக்கு ரொம்ப தாமதமா புரியும்..... “வாழ்க்கை முழுவதும் அந்த உறவை உங்களால் வழிநடத்தி செல்ல முடியுமா?”…. சமூகம், குடும்பம் எல்லாவற்றையும் தாண்டி காதலனோடு வாழ முடியும் என்றாலோ, சமூக நிர்பந்தத்தால் பெண்ணை திருமணம் செய்துகொண்டாலும் அதன் பின்பும் என்னால் இந்த உறவை தொடர முடியும் என்றாலோ நீங்கள் தாராளமாக காதலில் குதிக்கலாம்.... ஆனால், அந்த வாழ்நாள் முழுவதும் நீங்கள் கொண்டு செல்லும் காதலுக்கான விலையை நீங்கள் யோசித்து பார்த்த பிறகு அந்த முடிவை எடுங்க.... ஒருவேளை உங்கள் திருமணம் வரை அந்த உறவு தொடரும் என்று நீங்கள் நினைத்து காதலித்தால், அது பெரிய எதிர்விளைவை உங்களுக்கு கொடுக்கும்... ஏதோ ஜாலிக்காக, திருமணம் வரை ஒரு காதல் வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசைக்காக நீங்கள் முதலில் காதலிக்க தொடங்கினாலும், அது நாளாக நாளாக உங்கள் மனதிற்குள் வேரூன்றிவிடும்..... இன்று உங்களுக்கு சாதாரணமாக தெரியும் உங்கள் காதல் உங்கள் பிரிவின் போது கடுமையான வலியை கொடுக்கும்.... அது வலி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது.... பலரையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் இருந்தவர்களை பார்த்திருக்கிறேன்.... அந்த வலியை உணர்ந்திருக்கிறேன்.... அதனால், இப்போ காதலித்துவிட்டு அப்புறம் பிரிந்திடலாம் என்ற எண்ணம் இருந்தால் அந்த கொடுமையான வலியை உணர தயாராக இருங்கள்....

அடுத்தது “வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்லும் காதலுக்கு அந்த நபர் தகுந்தவரா?”.... எல்லாவற்றையும் துறந்து காதலுக்காக களம் இறங்க நீங்க தயாரா இருக்கலாம், ஆனால் உங்கள் அதே மனநிலை உங்கள் காதலருக்கும் இருக்கும் என்ற உறுதியும் இல்லை, இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை.... அவர் குடும்ப சூழல் வேறு மாதிரி இருக்கலாம், அதனால் அவரையும் குறை சொல்ல முடியாது..... ஒரு விஷயத்தை சொன்னால் ஏற்க கஷ்டமா இருக்கும், ஆனால் அது உண்மையான ஒன்று... இங்கே பெரும்பாலான காதல்கள் “அழகை” பார்த்து வருபவை.... மனிதனின் கண்ணோட்டத்தில் “அழகு” என்பது நாளுக்கு நாள் மாறுபடலாம்.... இன்று ரன்வீர் கபூர் அழகாக இருக்கலாம், நாளை இம்ரான் காண அழகாக தெரியலாம், நாளை மறுநாள் இன்னொருவன் அழகனாக தோன்றலாம்.... அப்படி அழகை வைத்து வரும் காதல். அடுத்த அழகனை பார்க்கும்வரை மட்டுமே நிலைக்கும்..... மேலும் ஒரு பேரழகனாக இருந்தாலும், சில மாதங்களில் அந்த அழகு அலுப்பு தட்டும் போது, அடுத்த அழகை மனம் நாடி செல்லும்.... அப்போது உங்களுக்கிருந்த காதலில் தேவையற்ற சில சண்டைகள் உருவாகும், அது விரிசலை உண்டாக்கி நிரந்தர பிரிவுக்கு கொண்டு சென்றுவிடும்....

நான் இப்படி சொன்னதும் பலரும் தங்கள் காதல் அப்படி இல்லை என்று நினைப்பார்கள், என்னை மனதிற்குள் திட்டுவார்கள்.... “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பார்கள்... அதைப்போல, ஒவ்வொருவரை பொருத்தும், தத்தமது காதல் அப்போது உயர்வானதாக தோன்றலாம்.... அப்படி தொன்றியதால்தான் இன்றும் அந்த காதல் நிலைத்து நிற்கிறது.... இதே நிலைமை நாளைக்கும் நீடிக்குமா? என்றும் யோசியுங்க..... நீடிக்க வேண்டும் என்றால் இந்த அலார எச்சரிக்கையை கொஞ்சம் அலர்ட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்.....
பெரும்பாலும் சாட்டிங்கில் உருவாகும் காதல், புகைப்பட பரிமாற்றத்தில் மையம் கொண்டு, அலைபேசி பேச்சுகள் மூலம் “காதல் புயலாக” உங்களை சிதறடிக்கும்..... அந்த சிதறடிப்பு அப்போது சுகமாகத்தான் இருக்கும்.... பொதுவாக ஒருவர் பேசுவதில் உண்மையை கண்டுபிடிப்பது அவர்களின் கண்களை வைத்துதான்... ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் இங்கு தொலைபேசி மூலமே காதலை வலுப்படுத்துகிறீர்கள்.... நேரில் பார்க்கும்போதும், ஆராயும் மூளை செயலிழந்து, மனமோ காதல் மயக்கத்தில் மதி மயங்கி கிடக்கும்....

இத்தகைய எல்லா காதலும் அப்படி முடிந்துவிடும் என்று நான் சொல்லவில்லை.... பெரும்பாலும் பலர் அப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் சொல்றேன்.... இந்த கே உலகில் பெரும்பாலும், “ஹாய், ஹலோ” சொல்ல கூட நேரமில்லாமல் காமத்தில் திளைத்திருக்கும் நேரத்தில் ஒருவன் சாட்டிங்கில் வந்து இயல்பாக பேசினால் கூட அவன் மீது ஒருவித நல்ல அபிப்ராயம் உண்டாகிறது.... உண்மைதான், இங்கு செக்ஸ் தவிர இயல்பான பேச்சுகள் பேசும் மனிதர்களை காண்பதும் அரிதான ஒன்றல்லவா?... அப்படி அரிதான நிகழ்வு உண்டாகும்போது இயல்பாக உங்கள் மனம் காதல் கப்பலில் ஏறி பயணம் செய்ய விரும்புவது இயற்கைதான்.....
அப்படி செய்யும்போது மிகுந்த கவனம் கொள்ளுங்கள் என்றுதான் சொல்றேன்.....

இங்கே பலரும் தங்கள் மனதில் புதைத்து வைத்திருக்கும் உண்மைகளை, கஷ்டங்களை பகிர ஒரு வடிகால் தேடுகிறார்கள்.... அந்த வடிகாலாக ஒருவன் வந்து ஆறுதல் சொன்னால், அவன் ஆபத்பாந்தவனாக தெரிகிறான்.....
அதில் ஆபத்தானவனும் இருக்கிறான் என்பதைத்தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.....
ஒரு பிரிவில் நமக்கு அதிக வலி உண்டாக காரணம், அந்த உறவில் நீங்கள் வைத்திருக்கும் பிணைப்பு.... ஒரு துரோகத்தின் வலி என்பது நீங்கள் ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவை பொருத்து....
மனித மனம் குரங்கு என்பார்கள், நிலையற்ற அந்த மனம் புதிய மரங்களில் தாவிக்கொண்டே இருக்கும்... அதே போல மனித மனமும், சல்லாப சலனங்களில் மாறுவது இயற்கை தான்.... அந்த இயற்கையை ஏற்கும் மனப்பக்குவம் இங்கு நமக்கு கிடைத்திருக்கவில்லை... அதனால், வந்த பின் நொந்து போவதைவிட, வரும் முன் சுதாரித்து செயல்படுங்கள் என்றுதான் சொல்கிறேன்.....

முதலில் இத்தகைய தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா? என்று சுய பரிசீலனை செய்துகொள்ளுங்கள்.... அப்படி இருந்தாள் முதலில் உங்களை நீங்கள் மாற்றம் செய்ய பழகுங்கள்....  உலகத்தில் மிகவும் மென்மையானது ஒரு கே’யின் மனம்.... அதை உங்கள் நிலையற்ற மனதாலும், தெளிவற்ற காதலாலும் கசக்கி காயப்படுத்தி விடாதீர்கள்.... அப்படி உங்கள் மனதை யாரும் காயப்படுத்த முடியாமல் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்..... கட்டாயத்தின் பேரில் காதல் வருவதில்லை, காதல் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை.... அதனால், காதலை நீங்கள் தேடிப்போகாமல், வரும் காதலை கொஞ்சம் ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் உங்கள் காதலும் வரலாற்றில் இடம் பிடிக்கும்.... வாழ்த்துகள்....

2 comments:

  1. I agree with u Vijay.
    I want to write this already
    As such I have no belief in this type of love, people will just say that I am wrong and criticize me a lot

    ReplyDelete
  2. Vijay.. Its really acceptable..
    Even at times we fell in love with people who speaks like this..

    ReplyDelete