Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 5 May 2013

'ஸ்ட்ரைட்' நண்பனை 'செட்யூஸ்' செய்யனுமா?


நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்ன விஷயம்தான்.... ஆனால், இப்போவரைக்கும் ஏனோ பலரும் மறுபடியும் மறுபடியும் என்கிட்ட கேட்குற கேள்வி இதுதான்... “என் ஸ்ட்ரைட் நண்பன் மேல எனக்கு காதல்/ஈர்ப்பு இருக்கு... என்னால அதை மாத்திக்க முடியல.... அதை எப்படி அணுகுறது?”.. இந்த கேள்விதான் இப்போவரை என்னிடம் பெரும்பாலான நண்பர்கள் கேட்ட பிரதான கேள்வி... கேள்விகளின் வடிவம் மாறினாலும், அதன் சாரம் என்னவோ இதான்...
உங்களுக்கு அமுதமா தெரியுற ஒரு விஷயம், இன்னொருத்தருக்கு விஷமா கண்ணுக்கு தெரியலாம்.... பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகமே இருண்டு போயிடுச்சுன்னு நினைக்குமாம்... அதுபோல நமக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு இருப்பதால, மற்ற ஆண்களுக்கும் அந்த எண்ணம் இருக்கும்னு நினைப்பது முட்டாள்த்தனம்....
பொதுவா பொது இடங்களில் பார்க்குற நபர்கள்கிட்ட நம்ம ஈர்ப்பை திணிப்பது ஆபத்தானது... ஆனால் அதைவிட கொடிய ஆபத்து நம் ஈர்ப்பை எப்போதும் நம்மருகில் இருக்கிற நண்பர்கள் மீது திணிப்பது.... பொதுவா ஏதோ ஒரு விஷயம் நம்ம நண்பர்கிட்ட பிடிச்சதாலதான் நம் இருவருக்கும் இடையில் நட்பு உண்டாகும்... அந்த நட்பை நீங்க காதல் என்னும் கோட்டில் இணைப்பதுதான் ஆபத்தானது... நம்ம நண்பன்தான்’னு நீங்க அந்த எல்லையை மீறினால், காலத்திற்கும் மறக்க முடியாத ஆறாத வடுவை உங்க வாழ்க்கையில் உண்டாக்கும்....
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அப்படி ஒரு வடுவை சுமந்துகொண்டு இருக்கிற உங்களை போல ஒருவனாத்தான் இதை உங்ககிட்ட சொல்றேன்.... என்னுடைய “விஜய்” என்ற பெயருக்கான காரணகர்த்தாவான என் விஜயை பற்றி நான் தனிப்பதிவில் முன்பே சொல்லி இருக்கேன்... ஆனால், பெரும்பாலான கதைகளில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் பாலா என்ற கதாப்பாத்திரம் பற்றி நான் இங்க இதுவரை சொல்லவில்லை.... அந்த பாலாதான், அந்த வடுவை இப்போதும் என்னுள்  ஆறாமல் வைத்துக்கொண்டிருக்கும் என் ஸ்ட்ரைட் நண்பன்....
பல வருட நண்பன் அவன்.... நண்பன் என்றால் பெயரளவில் நண்பனல்ல, ஆத்மார்த்தமான நண்பன்.... அவனுடன் பேசிய அந்த கடைசி இரண்டு வருடம் என்னோட ரொம்பவே இணக்கம் காட்டினான்.... அவன் காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்க கூட, பரிசை நான்தான் இறுதி செய்யும் அளவுக்கு எனக்கான எல்லா உரிமைகளையும் கொடுத்திருந்தான்...
இப்போ உங்க மனசுக்குள்ள உங்க ஸ்ட்ரைட் நண்பனை பற்றி நீங்க புலம்புற அத்தனை புலம்பல்களும் என் மனசுக்குள்ளும் இருந்தது.... அவன் சிரிப்பது, பேசுவது, தொடுவது என எல்லாமே என்னை அவனுள் விழவைத்தது... ஆனால், அது காதல் இல்லை... காதல் பற்றிய எண்ணமெல்லாம் எனக்கு அப்போ இல்லை... அவன் இன்னொரு பெண்ணை காதலித்துக்கொண்டு இருக்குறப்போ, அவனோடு காதல் பற்றியல்லாம் எனக்கு யோசிக்க கூட தோன்றவில்லை.... வழக்கமான ஒரு இரவு, வழக்கத்தை மீறி அவன் குடித்திருந்தான்... காதலியோடு ஒரு சிறு வாக்குவாதத்தின் விளைவால், அவனை மீறி குடித்திருந்தான்.... மதுவின் போதையில் நிதானம் இழந்து கிடந்த அவனை “செட்யூஸ்” செய்வதாக நினைத்து எங்கள் நட்புக்கு அந்த இரவில் புதைகுழியை நானே தோண்டிக்கொண்டேன்.... என் இரண்டு வருட ஆசையை தீர்த்துக்கொண்ட ஒரு மனநிறைவில் உறங்க சென்றேன்....
விடிந்தது... எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சியால், நான் அன்று அளவோடு பேசினேன்... அவனோ வழக்கம் போல பேசினான், முந்தைய நாள் இரவு மதுவின் போதையில் நடந்ததால் விடிந்ததும் எல்லாம் அவனுக்கு மறந்ததாய் நினைத்தேன்.... மறுநாள் இரவும் அதே குடி, அதே போதை, அதே புலம்பல்... ஆனால், இன்று அவனே வழிய வந்து என் குழியில் விழுந்தான்...
ஆனால், அந்த இரண்டு நிகழ்வுக்கு பிறகு எங்கள் இருவருக்குமான பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.... எனக்குரிய முக்கியத்துவத்தை அவன் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தான்... ஒரு கட்டத்தில் முற்றிலும் எங்கள் இருவருக்குமான பேச்சு முறிந்தே போனது.... சில முறை நானே வழிய சென்று அவனுடன் பேச வாய்ப்புகளை உருவாக்க முயன்றும், அது நிலைக்கவில்லை.... இன்றோடு அவனோடு நான் பேசி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது...
எங்கள் இருவரையும் சமாதானப்படுத்த அவன் காதலி கடும் முயற்சி செய்தாள்... என்னால் அவங்க இரண்டு பேருக்குள் அவ்வப்போது சண்டை கூட வந்தது... எங்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இப்போவரை எங்க ரெண்டு பேரை தவிர வேற  யாருக்கும் தெரியாது....
“நான் தவறு செய்தது உண்மைதான் .... ஆனால், அந்த தவறுக்கு அவனும்தானே உடந்தையாக இருந்தான்” என்று என்னையே ஏமாற்றிக்கொண்டு அவன் மீது கோபத்தில் இருப்பதை போல என் மனதை அவ்வப்போது சமாதானம் செய்துகொள்வேன்... ஆனால், அது உண்மையில்லை என்பது எனக்கு புரியும்.... இரண்டு முறை என்னோடு உறவு வைத்துக்கொண்டதால் அவன் கே கிடையாது.... ஆங்கிலத்தில் MSM (men sex with men) என்று சொல்வார்கள்.... எந்த ஒரு ஆணும் வாய்ப்பும், சந்தர்ப்பமும், சூழலும் அமைந்தால் ஒரு வடிகாலாக ஓரினசேர்க்கையில் ஈடுபடுவான்... அதனால், அந்த ஆண் கே கிடையாது.... ஸ்ட்ரைட் நபர் அப்படி உறவில் ஈடுபட்டாலும், அதை ரொம்பவே கேவலமான விஷயமாகவும், அசிங்கமாகவும் தான் நினைப்பான்.... அத்தகைய செயலில் அந்த ஸ்ட்ரைட்டை ஈடுபட வைத்த உங்களையும் அவன் அதே அளவு தரக்குறைவாகவும், கேவலமாகவும்தான் நினைப்பான்... ஏதோ ஒருமுறை அவன் ஈடுபட்ட செயலினால் அவனை ஒரு ‘கே’ போல, ‘பை’ போல நினைத்துக்கொண்டது என் தவறுதான்....
சமீப காலங்களில்தான் நான் அவன் வழியில் யோசிக்க தொடங்கினேன்.... எல்லைகளற்ற உரிமைகளை கொடுத்த ஒரு நண்பன், ஒருநாள் இரவு தன்னையே கபளீகரம் செய்யும்போது அந்த நட்பின் உண்மை தன்மை நிச்சயம் தன் பலம் இழந்து போகும்.... இவ்வளவு நாள் நான் பழகியது, பேசியது என எல்லாம் காம நோக்கத்திலா? என்று எண்ண தொடங்கி இருப்பான்.... கே பற்றிய தவறான மனநிலை கொண்ட சமூகத்தின் அங்கத்தினன்தான் பாலாவும்... நான் அவன் கண்களுக்கு காம மிருகமாக தெரிந்திருக்கலாம்... அந்த இரண்டு இரவுகளும் அவனுக்கு அருவருப்பாக தோன்றி இருக்கலாம்....
இப்படி என்ன காரணத்தினாலோ கருகிய எங்கள் நட்பு, மக்கி மண்ணுக்குள் போய்விட்டது இன்று... இங்குள்ள மற்ற நண்பர்கள் என்னிடம் “ஸ்ட்ரைட் நண்பர்களுடனான காதல்” பற்றி சொல்லும்போதெல்லாம் எனக்கு அவன் முகமும், எங்கள் நட்பின் பிரிவும் தான் நினைவுக்கு வரும்....
சமீபத்தில் ஒரு தம்பிக்கு நான் எவ்வளவோ சொல்லியும், பிடிவாதமாக தன் ஸ்ட்ரைட் நண்பனுடனான காதலை விடாமல் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.... அது தவறுன்னு நான் எவ்வளவோ சொல்லியும், கேட்கும் மனநிலையில் அவர் இல்லை... அதற்கு அந்த நபர் சொல்லும் கருத்து “உங்க கதை ஓரினமும் ஓரினம்தான் கதையில பாலா விக்கி காதல் கூட அப்படித்தானே?... அதில் வரும் வசனத்தில் விக்கி தனக்கு காதலின் மீது நம்பிக்கை இருப்பதா சொல்வான்.. அந்த காதலே இருவரையும் சேர்த்து வைக்கும்னு சொல்வான்... அது போல என் காதலில் எனக்கு நம்பிக்கை இருக்கு, நிச்சயம் எங்க காதல் சக்சஸ் ஆகும்” என்றார்.... அந்த தம்பி உட்பட எல்லாருக்கும் நான் சொல்றது ஒண்ணுதான், அந்த கதை எழுதிய காலகட்டத்தில் எனக்கு அந்த அளவுக்கு ஒருபால் ஈர்ப்பு பற்றி புரிதல் கிடையாது.... அதன்பிறகு நான் படித்து, பார்த்து, கேட்டு, அனுபவித்த விஷயங்கள் மூலம்தான் இப்போ நான் தெளிவா பேசிட்டு இருக்கேன்....
அதற்கு பிறகு நான் எழுதிய எத்தனையோ கதைகளில், குறிப்பா “கற்பனை குதிரைகள்”, “அதே குரல்” போன்ற கதைகளில் நான் அழுத்தம் திருத்தமாக ஸ்ட்ரைட் ஆண்களை பற்றி சொல்லி இருப்பேன்.... இப்டி நீங்களா உங்களுக்கு தோன்றியதை கையில் எடுத்துகிட்டா நான் என்னங்க பண்றது?.... நான் சொல்றது ஒண்ணுதான், “உங்க நட்பை நீங்க இழக்க துணிந்தால், தாராளமாக நீங்க செட்யூஸ் செய்ற வேலையை தொடங்கலாம்”... நட்புதான் முக்கியம் என்று நீங்க நினைத்தால், நீங்க ஐம்புலன்கள் மட்டும் இல்லாம, ஆறாவது புலனையும் சேர்த்து அடக்கித்தான் ஆகணும்....
இங்கு நான் சந்தித்த இன்னொரு நண்பரின் அனுபவம் வித்தியாசமானது.... தன் ஸ்ட்ரைட் நண்பரிடம் அவர் காதலை சொல்லிவிட்டார்.... அதனால் உண்டான ஒரு பிரச்சினையில் தற்கொலை முயற்சி வரை போய்ட்டார் அந்த நண்பர்.... இப்போ அந்த ஸ்ட்ரைட் நபர்  தன் நண்பனைவிட்டு விலகவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் தவிப்பதுதான் கொடுமை.... நிச்சயமாக அந்த ஸ்ட்ரைட் நண்பரால் பழையபடி நட்போடு அதற்கு பிறகு அவரிடம் பழக முடியாது... கொஞ்சம் கொஞ்சமாக அந்த நண்பரிடமிருந்து பிரிவதற்கான வழியை அந்த ஸ்ட்ரைட் நண்பர் உருவாக்கிக்கொண்டு இருப்பதுதான் உண்மை....
“அதற்காக நம் எண்ணங்களை ஸ்ட்ரைட் நண்பர்களிடத்தில் வெளிப்படுத்தவே கூடாதுன்னு சொல்றீங்களா?.... மேலும் மேலும் மனதிற்குள் புதைத்து வைத்து கஷ்டப்படனுமா?”னு நீங்கள் கேட்பது புரியுது....
உங்க நண்பர் முற்போக்குவாதியா இருந்தால், தாராளமாக உங்கள் எண்ணங்களை அவரிடத்தில் சொல்லலாம்... என் நண்பன் ஒருவன் அப்படி இருந்தான்... “தீண்டாமை, தனி ஈழம், தமிழினம், பொதுவுடைமை” போன்ற கருத்துகள் பேசுவதுதான் முற்போக்கு எண்ணம் என்று நினைத்த என்னை, பாலீர்ப்பு தொடர்பா பேசுறதும் முற்போக்கு தான்னு புரிய வைத்தான் அவன்.... ஒருநாள் என் கல்லூரி நண்பர்கள் பலர் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில், கே பற்றிய ஒரு புரிதலற்ற தரக்குறைவான பேச்சு அங்கு நண்பர்கள் சிலரால் பேசப்பட்டது... ஏனோ இவ்வளவு பேசும் நான் அங்க வாயடைத்து அமைதியாத்தான் இருந்தேன், ஆனால் அந்த நண்பன் அந்த இடத்தில் மாற்றுக்கருத்து முன்வைத்தான்.... அதன்பிறகுதான் ஒருபால் ஈர்ப்பு பற்றிய பேச்சு வரும்போது, ஓரளவேனும் உண்மைகளை நண்பர்களிடத்தில் சொல்ல துணிந்தேன் நானும்...
அப்படிப்பட்ட நபர் உங்க ஸ்ட்ரைட் நண்பராக இருந்தால், துணிந்து உங்க எண்ணத்தை சொல்லலாம்... அவரே உங்களுக்கு கலந்தாய்வு கூட கொடுக்கலாம்... ஆனால், “ஒருபால் ஈர்ப்பு இயற்கைக்கு முரணானது” என்ற முட்டாள்த்தனமான வாதத்தை சுமந்துகொண்டு நம்மை நித்தமும் கொன்றுகொண்டிருக்கும் இந்த ஆட்டு மந்தை சமூகத்தை சேர்ந்தவர்தான் உங்க நண்பர் என்றால், நிலைமை இன்னும் விபரீதமாகத்தான் முடியும்.... ஒரு பக்கம் நண்பர்களிடத்தில் வேண்டாம்னு சொல்றேன், அப்போ பொது இடத்தில் பழக்கமில்லா நபர்களிடத்தில் செய்யலாமா?.... அப்படி பேருந்து நிலையத்தில் செட்யூஸ் செய்து, பலரது மத்தியில் அடிவாங்கிய நபரை நான் கண்டதுண்டு.... என் “சூழ்நிலை கைதி” என்ற கதையில் வரும் பழனிச்சாமி பாத்திரம் கூட அப்படிப்பட்ட நபர்களின் உருவம்தான்.... அதனால் தெரிந்தவராக இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும் செட்யூஸ் என்கிற பெயரில் மற்றவர்களை இம்சிக்காமல் இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது.... நீங்கள் அத்தனை நாள் சேர்த்து வைத்திருக்கும் நல்ல பெயர்கள் அனைத்தையும், நீங்கள் செட்யூஸ் என்கிற பெயரில் செய்யும் அந்த அத்துமீறலால் ஒரே நிமிடத்தில் இழந்து கெட்ட பெயரோடு காலம் முழுக்க வாழ வேண்டுமா?....
ஒருபால் ஈர்ப்பு சமூகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான நபர்கள் உங்க கண்முன்னால் இணையத்தில் இருக்குறப்போ, எதற்காக வலுக்கட்டாயமாக ஒரு ஸ்ட்ரைட் ஆணை இம்சித்து, ஒரு நட்பை இழந்து, கெட்ட பெயரை உருவாக்கி அந்த காதலில் தோல்வி அடையணும்?... நிச்சயம் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்று தெரிந்தே உங்கள் நிம்மதியை பணயம் வைத்துதான் ஆகணுமா?.... இதனால் உங்க நிம்மதி மட்டுமல்லாமல் உங்க நண்பரின் நிம்மதியும் சேர்ந்து காணாமல் போவதுதான் உங்க விருப்பமா?.... இந்த உலகத்தில் மறக்க முடியாத விஷயம் என்று எதுவுமே இல்லை... மறதி ஒன்றுதான் நம்ம மனித பிறவிக்கு கிடைத்த மிகப்பெரிய மருந்து.... அதனால், காலம் நகரும்போது உங்கள் மனமும் நிச்சயம் மாறும்.... காதல் தோல்வி அடைந்தவர்கள் எல்லாரும் தற்கொலை செய்யனும்னா, இன்றைக்கு உலகத்தில் மனித இனமே இருந்திருக்காது... அதனால வீண் ஆசைகளை வளர்த்துக்கொள்ளாமல், இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்க....
இனியும் ஸ்ட்ரைட் நண்பரை காதலிப்பதாக சொல்லி, அதற்கு யாராவது ஐடியா கேட்டால் நான் அழுதிடுவேன்.....

22 comments:

  1. Thanks anna, Thanks for the post, inimel kaathalum vendam, katharikkayum vendam, samsaara vaalvu, ulakiyal ippadithan irukkum endru purinthu vittathu. en nanbanidamum ithu patri pesinen. inimel nan oruvanai mattum kathalikkap povathu illai, intha ulagathaiye kathalikka pogiren.. intha prapanchathaye kaathalikka pokiren... aam... mudiveduthu vitten... inimel yoga than en vaalvu... ithu than vaalvin arputham endru purinthu vittathu.... !! mikka nandri na !!

    ReplyDelete
    Replies
    1. அதற்காக நான் ஞானியாக ஆக சொல்லவில்லை தம்பி.... ஆனால், நம் எல்லைகளை நாம புரிந்துகொள்ள வேணும் என்பதுதான் பதிவின் சாராம்சம்...

      Delete
  2. very very needful post,,

    ReplyDelete
  3. I m new to this site. I want one clarification brother. Actually i dont know i m gay r straight. But my sexual attraction only man. I told my friend about this problem. He told me that it is a hormonal problem, We go to doctor & take hormonal check up. Pls provide information gay is a whether physical problem or mental problem. Any chance to gay convert to straight.

    ReplyDelete
    Replies
    1. உங்க கேள்விக்கான அனைத்து பதில்களும் நான் முன்பே இங்கு பதிந்ததுதான்... என் கட்டுரைகளை படிச்சு பாருங்க நண்பா, நிச்சயம் உங்களுக்கு எல்லா பதில்களும் கிடைக்கும்....

      Delete
    2. how old are you? if you are a school kid then it's ok if you have doubts. But if you are 18 or older, you should be aware of your sexuality. If you are sexually attracted only to men then you are gay. Period.
      There is nothing wrong with you and you have no mental problem.
      Any qualified doctor will not consider it a 'problem' and treat you. beacause it is not ! It is natural.
      You just have to come to terms with your sexuality. That's all !

      Delete
  4. I m new to this site. I want one clarification brother. Actually i dont know i m gay r straight. But my sexual attraction only man. I told my friend about this problem. He told me that it is a hormonal problem, We go to doctor & take hormonal check up. Pls provide information gay is a whether physical problem or mental problem. Any chance to gay convert to straight.

    ReplyDelete
    Replies
    1. @ Anonymous
      nanum ungaluku bathil solla ninaikiraen.

      indha thalathil ulla padivukalai padithu muzhumaiya thaerindhu kollungal.

      But it not a mental or physical problem, nothing is there like convertion, but its possible to lead a false life....

      Delete
  5. நல்ல பதிவு, இது போன்ற தவறுகள் இனியாவது நடக்காமல் இருக்கட்டும். உங்கள் கதைகளை போல் கட்டுரைகளும் பசுமரத்து ஆணி போல் பதிகிறது. உங்கள் எழுத்துகளுக்கும், சிந்தனைக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல பதிவுவிஜய். எணக்கும் இந்த பிரச்சனை உணடு. எண நணபனின் மீது கடந்த 12 வருடமா பாலியியல் ஈர்ப்பு இருக்கு.நிறைய தட வை அவணிடம் மன்ணிப்பு கேட்டுருக்கேன் அழுதுருக்கேன் போதையில். அவன் இன்னமும் கேட்பான் ஏன் அழுத மன்னிப்பு கேட்டனு, நான் ஏதாவது சொல்லி சமாளிப்பேன். ஆனா என் நணபணிடம் உண்மைய சொல்லி சந்தோஸமா இருக்கனும்ணு தோனும். ஆனா அது எவ்வளவு பெரிய தவறுனு உங்களது பதிவை படித்தவுடன் தெரிந்தது. ஆனா இந்த மாதிரி பிரச்சனைகள் மனதுக்குள் பெரிய போராட்டத்தை உண்டாக்குது. எண்னை நாண் பாதுகாப்பதே போராட்டமாயிருக்கு. யாரிடமாவது தன்னையும் மீறி தவறாக நடந்து கொள்வோமோ என்று. உங்களது இந்த தளத்தை பார்த்ததும் சகமனிதனா வாழமுடியுமுனு நம்பிககை வந்திருக்கு விஜய். நன்றி.

    ReplyDelete
  7. விஜய் எனக்கு ஒரு சந்தேகம். ஒரு கே யால, திருமனம் செய்து தாம்பத்தியத்தில் ஈடுபட வோ குழந்தை பெற்றுகொள்ள முடியுமா. அபபடியே குழந்தை பெற்றாலும் அந்த குழந்தைக்கு பாலியல்ரீதியான பிரச்சனை வருமா. ஏனா
    நிறைய ஓரிணசேர்க்கரிடம் பேசிய போது ஒரு சிலர் தான் திருமணமானவர் குழந்தை உள்ளது எனகறார்ளே இது சாத்தியமா

    ReplyDelete
    Replies
    1. முதலில் உங்கள் மனம் தெளிவானதில் என் பதிவும் ஒரு காரணம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.... ரொம்பவும் நன்றி..... உங்களைபோன்று படித்து புரிந்த ஒருசிலர் மட்டுமே கருத்து சொல்லும் அளவுக்கு எங்கள் பதிவுகளை மதிக்கிறாங்க... அதற்காக நன்றி....

      அடுத்து உங்கள் கேள்விக்கும் நான் முன்பே வேறு பல கட்டுரைகளில் விரிவான விளக்கம் கொடுத்திருக்கேன்.... ஒரு கே'யால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்... ஒரு பெண்ணோடு தாம்பத்யத்தில் ஈடுபட முடியும், ஆனால் அது அவன் முழு மகிழ்ச்சியோடு நடக்காது... கே'க்கு பெண்ணுடனான தாம்பத்யம் என்பது வெறுப்பாகத்தான் இருக்கும்... ஆனால், ஒரு பை'யால் நிச்சயம் பெண்ணோடு சந்தோஷமாக இல்லறத்தில் ஈடுபட முடியும்... ஆனாலும், அவ்வப்போது அவனுக்குள் இருக்கும் அந்த ஒருபால் ஈர்ப்பு அவனையும் மீறி மற்ற ஆண்களை நோக்கி செல்ல வைக்கும்....

      Delete
    2. நன்றி விஜய். உங்களது முளுபதிப்பகத்தையும் படித்தேன். நான் யார் என்பதையும் உணர்ந்தேன். ஆனாலும் மணம் குலப்பமாகவே இருக்கறது திருமண விசயத்தில். பெற்றோர்க்காகவும் இந்த சமுதாயத்திற்காகவும் திருமணம் பண்றதா அல்லது மணசாட்சயோட வாழ்றாதானு தெரியல. போராட்டமா இருக்கு விஜய். இவ்வளவு நாள் குற்ற உணர்வுடன் இருந்த நாண் இந்த தளத்தின் முலமா ஒரு நம்பிக்கை வந்திருக்கு. நன்றி விஜய். இரவு வணக்கம். இப்படிக்கு சேகர்.

      Delete
  8. yep...right.....for you its five years, but for me 9 yrs over since the last day we spoke. The last word he uttered for me after our sex is 'JUST FOR YOU' and those words are killing me since then.

    As his lover, he expected me leaving him and I gave that.....after all he is my .......

    I almost got my name changed after him in all my ID's.......

    Feeling a lot on why that night came at all.......If not, we would be the bestest friends now.....

    What he was able to was stop talking with me, but he cant control me loving him.........which I will be entire this life time........

    ReplyDelete
    Replies
    1. என் மனதின் வலியை நீங்களும் அனுபவித்திருப்பது உங்கள் பதிவுகளில் தெரிகிறது.... அந்த ஓர் இரவு, ஒட்டுமொத்த நட்புக்கும் விடியாத இருளை வழங்கி சென்றுவிட்டது.... இனி, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது... அந்த வலியை மற்றவர்கள் அனுபவிக்காமல் இருந்திட நம்மால் முடிந்ததுதான் இந்த பதிவு.... இதை படித்து ஓரிருவர் தெளிவு பெற்றாலும் அது நன்மைக்கே...

      Delete
  9. anna thanq thanq so much , ippa than oru thelivana mudivu enala eduka mudinchuthu

    ReplyDelete
    Replies
    1. தெளிவான மனநிலைக்கு வந்தமைக்கு நன்றி தம்பி.....

      Delete
  10. GREAT JOB VIJAY., UNGALA ELLAM NALADHE NADAKUMM., HATS OFF.,

    ReplyDelete
  11. I am happy that you are from trichy.. Really a great job vijay.. We need your advices always..

    ReplyDelete
  12. நன்று விஜய்

    நா ஓருபாலுறவில் விருப்பம் உள்ளவன்.என் நண்பன் ஓரு பை-செக்ஸ் இது எப்ப எனக்கு தெரிய வந்ததுனா நம் சமுகத்தை பற்றி விளக்கமாக விளக்கிய போது.பிறகு வந்த நாட்கள அது தொடர்பாக பல கேள்விகள் கேட்டான் நானும் பதில் சொன்னேன்.

    கொஞ்ச நாட்களுக்கு பிறகு என் நண்பன் என்னுடன் உறவு கொள்ள ஆசைபடுவதாக சொன்னாறு.

    அந்த நொடி எனக்கு பேரிடியாக இருந்தது வலியை தந்தது தருகிறது.

    நா ஓரு கேவாக இருக்கலாம் ஆனா என் நண்பன என்னால கே உணர்வோடு பார்க்க முடியாது. அவனுக்கு நா சத்தியமா உன்ன அந்த கலவி உறவோடு பார்க்க முடியாதுடா நீ என் நண்பன்டானு பதில் சொன்னேன். பல நாட்கள் என்ன கேட்டான் நானும் அதே பதில பல வழியில சொன்னேன். ஓரு வழியா அவனும் புரிஞ்சிக்கிட்டான். ஆனா அந்த வலி இன்னும் தொடருது. அது மட்டுமல்ல எங்க மறுபடியம் அந்த கேள்விய மறுபடியும் கேட்டிருவான பயம் இருக்கு.

    'ஸ்ட்ரைட்' நண்பனை 'செட்யூஸ்' செய்யனுமா? என் பதில் கூடவே கூடாது. அப்படியும் இல்ல நா பன்னுவேனு சொன்னிங்கனா ஓன்னு ஞாபகம் இருக்கட்டும். உங்க நண்பனை உங்க கையால துடிக்கதுடிக்க கொள்வதற்கு சமம்.

    நன்றி

    கமல்தாசன்.கு

    ReplyDelete