Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday, 17 May 2014

"Anti-HOMOPHOBIA Day" - நம் பயமும், பிறர் வெறுப்பும் விலகும் நாள் இது...




இன்று (May 17) உலகம் முழுவதும் “ஒருபால் ஈர்ப்பின் மீதான வெறுப்புணர்வுக்கு எதிரான சர்வதேச நாள்” ( International Day Against Homophobia) அனுசரிக்கப்படுகிறது.... உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் ஒருபால் ஈர்ப்பினருக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், பாலீர்ப்பு சிறுபான்மையினரின் நலன் காக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் உலகின் பல்வேறு அமைப்புகள் இந்நாளில் அதிமுக்கிய களப்பணிகளில் ஈடுபடுவார்கள்... குறைந்தபட்சம் இந்த நாளின் நோக்கமான “ஹோமோபோபியா” பற்றி கொஞ்சம் பேசியாவது நம் கடமையை செய்வோம்....
எதற்காக மே பதினேழு?...
குறிப்பிட்ட இந்த நாளில் நம்மவர்கள் இந்த விஷயத்தை அனுசரிப்பதற்கு நிச்சயம் காரணம் இருக்கிறது... 1990 ஆம் ஆண்டு மே பதினேழாம் நாள்தான் உலக சுகாதார அமைப்பு, ஓரினசேர்க்கையை மனநோய்கள் பட்டியலிலிருந்து நீக்கியது.... இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு பிறகுதான், ஒருபால் ஈர்ப்பினர் பற்றிய விழிப்புணர்வும், நல்ல புரிதலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு உருவானது... இன்றைக்கு நம் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் பெரும்பாலான நாடுகளில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கும், சில நாடுகளில் அத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அடித்தளம் அமைத்த மே பதினேழை நாம் கொண்டாடி மகிழ்வதில் தவறில்லை தானே?...
எங்கெல்லாம் இதை அனுஷ்டிக்கிறார்கள்?....
லத்தின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நாள் மிக பிரபலமாகவே பார்க்கப்படுகிறது... உலகம் முழுவதிலும் ஒருபால் ஈர்ப்பை குற்றமாக பார்த்திடும் 76 நாடுகளில் 32 நாடுகளில் இந்நாள் பல்வேறு வழிமுறைகளில் கொண்டாடப்படுகிறது.... கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த நாள் “தேசிய ஒருபால் ஈர்ப்பின் மீதான வெறுப்புணர்வுக்கு எதிரான நாள்”ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது... இந்த நாளில் அமைப்புகள் எடுக்கும் முன்னெடுப்புகளின் விளைவாகவே பல நாடுகளிலும் ஒருபால் ஈர்ப்பு திருமண அங்கீகரிப்பு, குழந்தை தத்தெடுக்கும் உரிமை, காப்பீட்டு உரிமை என எல்லாமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறையவே அரங்கேறியது நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்... நிச்சயம் இந்த ஆண்டும் இந்நாளில் முன்னெடுக்கும் போராட்டங்கள், அமைப்பு சார்ந்த முன்னெடுப்புகளால் புதிய பல மாற்றங்கள் உண்டாகும் என்பதை நாம் உறுதியாக நம்பிடலாம்....
ஹோமோபோபியா தொடர்பாக நம் நாட்டில் சில சர்வே’க்கள் எடுத்திருக்கிறார்கள்...
·        அதில், 80% கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஒருபால் ஈர்ப்பு ஊழியர்கள், தங்கள் சக ஊழியர்களிடமிருந்து வெறுப்புணர்வு மற்றும் கிண்டல் போன்ற செயல்களின் மூலம் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம்....
·        12% மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பாலீர்ப்பு சிறுபான்மையினர் உரிமையை மதிக்கிறார்களாம்...
·        இந்தியாவின் ஹோமோபோபிக் மனநிலையால் ஆண்டொன்றுக்கு நம் நாட்டிற்கு முப்பாதாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது...
இப்போ நாம பார்த்த சர்வேக்கள் எல்லாம் மெத்தப்படித்த பணியாளர்கள் பணிபுரியும் உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களின் நிலைமைதான்... “பாலீர்ப்பு என்பது மரபணு சார்ந்த விஷயம்தான், அது இயற்கைக்கு புறம்பானது அல்ல” என்ற விஷயத்தை படித்து அறிந்தவர்கள் தான் இந்த சர்வேயில் ஈடுபடுத்தப்பட்டவர்கள்... ஆனாலும் கூட அவர்களின் இந்த ஹோமோபோபிக் மனநிலை நம்மை கலவரமூட்டுகிறது... அப்படியானால், தமிழகத்தின் நடுத்தர வர்க்க ஒருபால் ஈர்ப்பாளர்கள் நிலைமையையும், கிராமத்து கே’யின் வாழ்க்கையையும் நாம் யோசித்து பார்த்திட வேண்டும்...
பேருந்தில் சக ஆணிடம் ஜாடை காண்பித்த கே’வை, பேருந்தில் பலருக்கும் மத்தியில் கன்னத்தில் அறைந்த சென்னைவாசியின் முகநூல் பதிவை சமீபத்தில் பார்த்தேன்... ஒரு கே’வை அறைந்ததில்தான் அந்த நபருக்கு எத்தனை பெருமிதம் தெரியுமா?.. அறை வாங்கிய அந்த நபர், முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் அடுத்த நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கி சென்றதில்தான், அந்த நபருக்கு அவ்வளவு பெருமிதம்... ஒரு வேற்றுகிரக வாசியை, ஒரு சைக்கோ கொலைகாரனை கேவலப்படுத்தி அனுப்பியதை போல அந்த நபர் தன் செயலில் அத்தனை கர்வம் கொள்கிறார்.....
இது ஒரு உதாரண நிகழ்வு மட்டுமே... நம்மில் பலரும் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும் வருந்திய எத்தனையோ நிகழ்வுகளை இங்கே சொல்ல துணிந்தால், இன்னும் நூறு பக்கங்களுக்கு மேல் எழுதலாம்... சமீபகால உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நமக்கு எதிராக கிளைகள் பரப்பியுள்ள திருட்டு கும்பல்களின் ஆதிக்கம் பற்றி நிறைய உங்களுக்கு சொல்லிருக்கேன்... இப்படி “ஒருபால் ஈர்ப்புள்ள நபராக இந்தியா”வில் வாழும்போது உண்டாகும் கஷ்டங்களை பற்றி நிறைய சொன்னாலும், ஒரு விஷயத்தை நாம் ஏற்றே ஆகணும்... ஒருபால் ஈர்ப்பு நபர்களின் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படும் ரஷ்யா, உகாண்டா போன்ற நாடுகளை விட, நாம் எவ்வளவோ பாதுகாப்பான சூழலில்தான் வாழறோம்னு பெருமைப்படலாம்... இங்கே “ஒருபால் ஈர்ப்பு தவறா?”ன்னு விவாதிக்குற அளவாவது நிலைமை நமக்கு சாதகமாவே இருக்கு.... காலுக்கு செருப்பு இல்லையேன்னு வருந்தி அமர்வதை விட, காலே இல்லாமல் பலரும் தன்னம்பிக்கையோடு வாழ்வதை பார்த்து நாம் போராட துணியனும்....
இங்கே நம் முக்கிய பிரச்சினை பிறர் நம்மை வெறுப்பது அல்ல, நாமே நம்மை வெறுப்பதுதான்.... ஆமாங்க... உங்களை இந்த நாடு வெறுக்கலாம், சுற்றமும் நட்பும் வெறுக்கலாம், உங்களை பெற்றவர்கள் கூட வெறுக்கலாம்... ஆனால், உங்களை நீங்களே வெறுப்பதுதான் மிகவும் ஆபத்தான நிலைக்கு நம்மை தள்ளும்... எவனொருவன் தன்னுடைய பாலீர்ப்பை ஏற்காமல், சுய வெறுப்பு கொள்கிறானோ, அதன் பாதிப்பானது, பல மடங்கு நம் மனதை பாதிக்கும்...
கே டேட்டிங் வலைதளங்களில் பார்க்கும் பல இளைஞர்களும், “நான் கே இல்ல.... சும்மா என்ஜாய் பண்றதுக்காக மற்ற ஆண்களோட செக்ஸ் வச்சுக்கறேன்... எனக்கு இனி திருமணம் ஆகி, ஒரு பெண்ணுடன் வாழத்தான் விருப்பம்... மற்றபடி பாலீர்ப்பு பற்றியல்லாம் பேசவே நான் விரும்பல” ரகம் தான்...
அவர்கள் கே’வாகவோ, பைசெக்சுவல் நபராகவோ இருக்கலாம்... ஆனால், அந்த மாறுபட்ட பாலீர்ப்பை ஏற்க மறுத்து, தன் சுயத்தை வெறுத்து மனம் வெதும்பி வாழும் வாழ்க்கையை தான் நிறைய நபர்கள் வாழ்கிறார்கள்... உங்களை நீங்களே வெறுக்கும் “ஹோமோபோபிக்” மனநிலையை ஈடுசெய்ய எவ்வளவு சமுதாய மாற்றங்களாலும் முடியாது...
என்னை நம் சமூகத்தை சேர்ந்த நபர்கள் சிலரே “நீ கே’யிசம் ப்ரமோட் பண்ற... ஜாலியா நாங்க என்ஜாய் பண்ற செக்ஸ் விஷயங்களை, நீ உரிமைகள், போராட்டம்னு திசை திருப்புற”னு கொந்தளிச்சு என்னை வசைபாடியது உங்கள் பலருக்கு தெரிந்திருக்கலாம்... நிஜத்தில் அவர்களின் என் மீதான வெறுப்பு, அவர்களின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு... தன் சுய பாலீர்ப்பை ஏற்க மறுத்து, அந்த உண்மையை சொல்லும்போது, அதனால் உண்டாகும் கோபம்தான் அந்த தடித்த வார்த்தைகள்....
“பாலீர்ப்பு” என்பது ஜாலிக்காக சபலத்தில் சங்கமிக்கும் நிகழ்வு இல்லை என்பதையும், அது இயற்கையான ஒன்றுதான் என்பதையும் நம் மக்கள் புரிஞ்சுக்கணும்... இது ஒன்றும் குறைபாடல்ல, இயற்கை நமக்கு கொடுத்த இயல்பான விஷயமே என்பதை உணர்ந்து தெளிவாகனும்.... ஏனோ அதை அவர்களின் மனது புரிந்துகொண்டாலும், சமூக சூழலால் மாசு அடைந்த மனம் மட்டும் குழப்பத்துடன் ஏற்க மறுக்கிறது... அதன் விளைவுதான், உரிமை பற்றி நான் பேசுறப்போ “நீ வாயை மூடு!... எங்களுக்கு உரிமை எதுவும் வேணாம்”னு என் மீது சுடுசொற்களை அள்ளித்தெளிப்பது.... தன்னுடைய பாலீர்ப்பை, தன் மனம் ஏற்க மறுக்கும் அந்த வினையின் விளைவுதான் என்னை தாக்கி அவர்கள் பேசிட காரணம்... இப்போவரை நான் அவங்களை திட்டியோ, அவங்க மீது கோபப்பட்டோ எவ்விதமான பதிலையும் கொடுக்கல.... அவர்கள் தன்னை உணரும் நாளில் நிச்சயம், என் கருத்துகளில் இருக்கும் உண்மை தன்மையையும் அவர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புறேன்.... அந்த ஒருநாளை எதிர்பார்த்துதான் ஒவ்வொரு நாளும், எனக்கு தோன்றுவதை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்....
ஊர் உலகம் நம்மை வெறுக்கும் ஹோமோபோபியா’வைவிட, நம்மை நாமே வெறுக்கும் “ஹோமோபோபிக்” மனநிலையை ஒரு அவசரகால அவசியமாக கருதி, அதை அப்புறப்படுத்தவேண்டும் என்பதே என் முதல் மற்றும் ஒரே வேண்டுகோள்...
ஆகையால், இந்த “உலக ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலைக்கு எதிரான நாளில்” உங்கள் மீதுள்ள வெறுப்பை முதலில் நீங்க விலக்குங்க, உங்க பாலீர்ப்பை முழுமையா ஏற்றுக்கோங்க... நிச்சயம் அந்த “ஏற்பு” நாளைக்கு சமுதாய மற்றும் சட்டத்தின் ஏற்பாக படிநிலை மாறும்....
இந்த நன்னாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி இதுதான்...
“நம்மை நாம் ஏற்போம், நாளை மற்றவர்களையும் ஏற்க வைப்போம்”....

11 comments:

  1. சினம் சற்றும் இல்லாமல் பொறுமை பொங்கும் உங்கள் எழுத்து நடை பாராட்டிற்க்கு உரியது. தன்னை தானாக உணராதவர்கள் மீது எனக்கு ஏற்ப்படும் வெறுப்பை களைவதற்கும் வித்திட்ட இந்த பதிவு பலருக்கும் பயன்பெறும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ... உங்களை போல முதலில் நானும் சினம் கொண்டேன் தான், ஆனால் அது அர்த்தமற்ற சினம் என்பதை அவர்களின் அறியாமையை அறிந்தபிறகு தான் உணர்ந்துகொண்டேன்.....

      Delete
  2. Nice Mr. Vijay...... you are a great person to teach these unknown facts to this society especially for LGBT.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா... உங்களை போன்றவர்களின் இதுபோன்ற தொடர் ஊக்கங்கள் தான் தொடர்ந்து என்னை எழுத தூண்டுது....

      Delete
  3. Nice Vijay nala uraikara mathiri soiliruinga Ana yanaku neriya santheykam irruku nan atha inga pathivituran Vijay mudichaalaviiku pathil soiluinga nan oru gay nu yana na mulu manathodu yathuikuran athunala yan Amma appa Anna thambi yan relation yanoda frnds yailloru ikkum varathamum avamanamum kasatamum avaingalu ikku tharanum ah k etha veduinga inga oru gay innoru gay malanan abipparayam yan sex 90% mala inga Appadi thana Vijay inga oru gay thaingala sex mattum payan paduthikirainga la ethu thappu illaya athuvum orutharoda sex painan paravaillaya aaill mathigita irrukainga. Oru person minimum 4 r 5 person sex vachikurainga than appana inga most of the gay yallam prostitute ah work painraningala yathukuka ippadi sex adimyai irrukanum gay nu oru unairvu nalaya apparam oru bottom gay nu therinja pothum avainga kakura muthail question nee suck painuviya fucking vaingipiya yanaoru elivana question ethu ethunala oru gay oda self-respect yaintha alaviiku kavala matuthu pa ippadi neriya reason irruku. Oru gay innoru gay va avamanam padutha

    YANODA LAST QUESTION. Yanoda Islam religion la gay pathi yathuvum soillaya athula ass hole sex painrathu mega periya pavamnu poituruku so nan gay valanum na aintha pavaitha seiyanum la ethu yallam than yana kolapura kkalvigal Vijay pls yanakum uinga karutha soiluinga yanmala kovam vaintha thitiduinga avoid painidathinga pa :-)

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாட்டில் கே'ன்னு பார்க்கும்போது, காமத்தேடலில் இருக்குறவங்க நிறையபேர் தான் நண்பா.... பெரும்பாலும் இங்க உணர்வுகளுக்கு மதிப்பில்லை என்பதும் கூட உண்மைதான்... ஆனால், உணர்வுகளை மதிக்கும் உறவுகளும் இங்க இருக்கவே செய்றாங்க.... அவங்கள நாமதான் அடையாளம் காணனும்.... அடுத்ததா உங்க குடும்ப நண்பர்களை கஷ்டப்படுத்தனுமா?ன்னு கேட்பதும் நியாயமான கேள்வியே... ஆனால், குடும்ப சந்தோஷத்துக்காக வாழ்க்கை முழுக்க நாம கஷ்டப்படனுமா? என்பதையும் நீங்க யோசிச்சு பார்க்கத்தான் வேணும்...

      மதம் பற்றியதான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லமுடியாது நண்பா.... எந்த மதமும் ஒருபால் ஈர்ப்பை முழுமையாக ஏற்கவில்லை என்பது உண்மைதான்... ஆனால், அதை கடந்துதான் நம் பாலீர்ப்பை ஏற்றாக வேண்டிய சூழலில் இருக்கோம்...

      Delete
    2. Romba nanri Vijay yan kalvi pathil soinanthuikku nan nechayam neeinga soinatha yochipan aana nan yain family & religion yathuthu Nala oru thonaya theiryadupanan yanaku theriyala yana nan 2.5year's ah gay thalathula irrukan yan approach illa nan approach paina vainga ikku priority uadala uravikku mattum than irruku aana nan ethayum othu than aganum inga uinmyana anbu irruku avainga yallam partner oda santhosama irrukainga. Nan inga love vita nala frnds theturan Vijay athuku kuda nan,kuduthu vaikala apart Chennai la clg stu irrukainga yappa yavathu than nan chat painuvan Fb la.

      Yanoda valakai kana mudiva nan thrimanika porathila nan 2ndu tharapu kana vaikai vala nan muyairchi ka poran. Oruvalai yanaku nala oru gay partner kadaichaingana yan kodumbatha meriyo illa avainga samathathoda ya gay valaki arambipan appadi illa nala oru kudumpa valaki ikku selvuvan Vijay nan yaduthuruka decision correct than pa:-o

      Once agaibthanks

      Delete
    3. உங்கள் எண்ணப்படியே எவ்விதமான சிக்கலும் இன்றி உங்க வாழ்க்கை அமைந்திட வாழ்த்துகள் முகைதீன்...

      Delete
    4. Thanks Vijay. Nan uingaloda Fb Frnd than athula name Raja Vijay pa

      Delete
    5. Hi vijay yapadi irrukinga yanaku uingala pathi soiluraingala neeinga yana painringa uinga graduated yainga irrukainga yana work painrainga Appa Amma yana painringa nee ora payana nd needing yapo gay nu fell painiga yapadi story yaluthura aravam vainthathu pa

      Delete
    6. என்னைப்பற்றி இவ்வளவு கேட்குறீங்க.... எல்லாவற்றுக்கும் பதில் இன்னும் நான் வெளிப்படுத்தல நண்பா... சொல்லும் தருணம் வரும்போது நிச்சயம் சொல்றேன்....
      தமிழ் மீதுள்ள ஆர்வம், இங்கே ஒருபால் ஈர்ப்பு நபராக நான் சந்தித்த சவால்கள் இதல்லாம்தான் என்னை எழுத வைத்த காரணிகள்...
      உங்க நண்பர் ஜெய் பற்றி நான் அறிந்ததில்லை நண்பா...
      மிக்க நன்றி...

      Delete