Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 22 May 2014

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...”

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...”


 ஐந்தாண்டுகளாக கதைகள் எழுதும் உங்கள் விஜய், வலைப்பதிவராக மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறேன்....
தொடக்க காலங்களை போல, இப்போ எழுதுவதில் அதிகம் சிக்கல் ஏற்படுவதில்லை... நான் சரியான திசையில்தான் செல்வதாக உங்கள் தொடர் ஆதரவின் மூலம் அறிகிறேன்...
நம் ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினர் மட்டுமல்லாமல், நம்மை பற்றிய தகவல்களை பொதுத்தளத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற ஆசை, ஓரளவு நிறைவேறிக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சியே.... சிறுகதைகள் தளத்தில் என் சிறுகதைகள், ஆழம் மின்னிதழில் எனது கட்டுரை என்று வரிவடிவம் தாண்டி திரை வடிவில் என் சிறுகதையான “377” குறும்படமாகி வந்திருப்பது வரை பொதுத்தளத்து மக்கள் நம் உணர்வுகளை உணர என்னாலான சிறு பங்களிப்பு செய்திருப்பதில் மனநிறைவு....
84 நாடுகளை சேர்ந்த வருகையாளர்களின் ஒன்றரை லட்சத்தை தாண்டிய பார்வைகள், இருநூறை நெருங்கும் பின்தொடர்பவர்கள், 160 பதிவுகள், அது தொடர்பான 1500 கருத்துகள், சிறந்த LGBT தளமாக கடந்தாண்டு தேர்வு என்று உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு கிடைத்த அத்தனை பெருமையும், உங்கள் அத்தனை பேரையும் மட்டுமே சாரும்....
சமீப கால அரசியல் மற்றும் சட்டத்தின் மாற்றங்கள் நமக்கு எதிரான சூழலை உருவாக்கியுள்ளது... சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே நம் இருப்பை இந்த உலகிற்கு உணர்த்த முடியும்... ஆக, தளர்வில்லாத நடையோடு இனி வரும் காலத்தை கடத்தினால் மட்டுமே சில ஆண்டுகளிலாவது நம் உரிமைகளை பெறமுடியும்... அது நமக்கான முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும் உரிமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...
பொதுவாக நான் சர்வதேச விழிப்புணர்வு சார்ந்த பிரச்சினைகளை அதிகம் பேசுவதில்லை என்றும், சின்ன சின்ன லோக்கல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்... அவர்கள் காண விரும்பும் சர்வதேச தரத்திலான நம் மாற்றம் என்பதற்கு, முதலில் நம் அடிப்படை கட்டமைப்பு பலமாக இருப்பது அவசியம் என்பதால்தான் நான் நம்மை சுற்றியுள்ள அடிப்படை, அடிமட்ட பிரச்சினைகள் பற்றியே அதிகம் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்....
தொடர்ந்து உங்களின் ஆதரவின் மூலம் நாம் இன்னும் பல உயரத்திற்கு செல்வோம் என்ற நம்பிக்கையில் தான் மூன்றாம் ஆண்டிலும் புத்தணர்வோடு களமிறங்க காத்திருக்கிறேன்....
கடந்த ஆண்டு வரை ஒரு கை ஓசையாக வெளியான பதிவுகள், சமீப காலங்களில் மிகத்தேர்ந்த பதிவர்களின் பதிவுகள் மூலம் மிகையான வெற்றியை பெற்றுள்ளது...
எனதருமை நண்பர் ஜான் பால், அருமை சகோதரி கண்ணகி இளமலர் மற்றும் அன்புத்தோழர் வெண்பா ஆகியோரது வருகை நிச்சயம் எனது கனவை இன்னும் வேகமாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன்... பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உங்களுக்காக சமூக அக்கறையோடு பதிவுகளை பகிர்ந்திடும் அந்த தோழர்களுக்கு உங்கள் சிறப்பான ஆதரவை நல்கி, நல்ல உள்ளங்களுக்கு ஊக்கம் தாருங்கள்... இந்த வாய்ப்பை அந்த நண்பர் பெருமக்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்கிறேன்....
எனது பெரும்பாலான கதைகள் மற்றும் கட்டுரைகளுக்கு ஆலோசானைகள், தணிக்கைகள் மற்றும் மேலும் பல உதவிகளை செய்து, நான் எப்போ பதிவை அனுப்பினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் என்னை தொடர்புகொண்டு திருத்தங்களை கூறிடும் ஆருயிர் நண்பர் அவிட் (ராஜு) மற்றும்  அண்ணன் ரோத்திஸ் அவர்களுக்கு எனது சிறப்பான நன்றிகளை உரித்தாக்க விரும்புகிறேன்....
அமைப்புகள் சார்ந்த எத்தனையோ விமர்சனங்களை நான் முன்வைத்திருந்தாலும், இன்றைக்கும் நல்ல நட்போடும், எவ்விதமான பிணக்கும் இன்றி நல்லாலோசனைகளை அளித்து வரும் ஓரினம் அமைப்பினருக்கும் (குறிப்பாக ராம்கி, சுந்தர் மற்றும் பிரவீன்), சிருஷ்டி அமைப்பின் கோபி மற்றும் சென்னை தோஸ்த் விக்ராந்த் பிரசன்னா அவர்களுக்கும் எனது முத்தான நன்றிகள்....
எங்கோ எனது நினைவுகள் கூட நெருங்க முடியாத தூரத்தில் வாழ்ந்தாலும், இன்றைக்கும் என்னை எழுத வைத்திடும் என் விஜய்க்கு நன்றிகள்...
தளராத மனதையும், சிதறாத சிந்தையையும் கொடுத்து என்னை எழுத வைக்கும் அந்த இறைவனுக்கு நன்றிகள்....
“அண்ணா...” என்று பாசத்தோடு விளித்து, என் கவனத்திற்கு பல உலகளாவிய செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும் எனதருமை தம்பிமார்கள் அனைவருக்கும் எனது முத்தாய்ப்பான நன்றிகள்...
தொடர்ந்து பல வேலை பளுவிற்கு இடையிலும், என்னை எழுத தூண்டிடும் எனதருமை வாசக நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.... நிஜத்தில் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் வாசகர்களின் பெயர்களை குறிப்பிட எனக்கும் ஆசைதான்.... ஆரம்ப காலம் முதல் என்னை ஊக்குவித்த நண்பர்களின் பெயர்களை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு கூர்ந்து எழுதி வருகிறேன்.... முடித்ததும் நிச்சயம் உங்கள் முன் அந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தனிப்பதிவில் உரித்தாக்குகிறேன்....
உங்கள் விஜயோடு தொடர்புடைய அத்தனை அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றி...! நன்றி...! நன்றி...!

21 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் விஜய்விக்கி

  ReplyDelete
 3. ஒருவராக ஆரம்பித்தீர்கள். ஒரு குழுவாக மாறியிருக்கிறீர்கள். இந்த வலை மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி. ஒவ்வொரு கதைகளும் கட்டுரைகளும் எழுதுவது எவ்வளவு கடினம் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும், வாசகராக சிலவற்றை கேட்கிறேன்.

  @திரு. விஜய் விக்கி, உண்மைல, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ஜி. ஏன்னா, இங்க பதிவுல அரங்கேறுரதுக்கு முன்னாடியே நான் படிச்சிடுறேன். இன்னும் அதிகமா கலக்குங்க ஜி...

  @ Mr. John Paul, In the past year, I hope you have posted only one article/story every month. Really I enjoyed "SIX EYES" to the core. In this forthcoming year, I am expecting more and more articles as well as stories from yoU in this blog... Keep Rocking...

  @சகோதரி கண்ணகி இளமலர், போன வருடம் உங்களுடைய பதிவுகள் மிக சொற்பமே, நேரமின்மை காரணமாக இருக்கலாம். இந்த வருடம் நீங்கள் இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகின்றேன்

  @Mr. Venba, To my knowledge, yoU have written only one article (Addicted to porn) which is good as well as the theme is fresh and really needed to all of us. So in the forthcoming year, I am expecting more participation from you.

  ReplyDelete
  Replies
  1. இங்க வாழ்த்தை பெறவேண்டிய இடத்தில்தான் நீங்களும் இருக்கீங்க ஜி..... எப்பவும் போல உங்க தணிக்கைப்பணி எனக்கு தொடரணும் ஜி.... அது போதும்...

   Delete
  2. Thanks a ton Avid. I always look forward to your constructive criticism. Good to know that you are behind the editing of Mr. Vijay's articles. My best wishes.

   Delete
  3. @John Paul, Thanks for your Wishes John Paul. I am enjoying your articles and so I need that enjoyment more...

   Delete
 4. Congrats Vijay pls continue this job with ur new entry members pa my best. Wishes to you pa I thank to u to post such a nice short novel and more information ikku we support u always in any situation
  ALL THE BEST KEEP ROCKING:-)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா... தொடர்ந்து உங்களின் ஆதரவை நல்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்...

   Delete
  2. Hmmm I thank to you Vijay we always support u pa neeinga thiruchy la than irrukinga ainga yan namban oeuvair irrukaru avainga name JAI He also writer pa uingaluku avarar therium ah

   Delete
  3. ரொம்ப நன்றி நண்பா... உங்க நண்பர் ஜெய் பற்றி எனக்கு தெரியல நண்பா... எங்க என்ன கதை எழுதினார்?...

   Delete
  4. Paravailla Vijay avainga Jesus pathi story yaluthirukainga yanaku avaingala Fb mulamathan therium romba nala pesuvainga. Avainga gay live la irruinthu normal life valurainga pa Nan avaingala meet painumbothu konjam kashtathula irruinthainga ippo yapadi irrukainga nu theriyala nalathan irrupainga

   Delete
 5. ulagam suzhalum varai, sooriyan than veppaththai kakkuvathai niruththum varai ungal panigal thodara vaazhththukkal.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி அண்ணா... தொடர்ந்து உங்க ஆதரவும் எனக்கு தேவை அண்ணா....

   Delete
 6. Thanks Vijay..for welcoming & motivating me to write more articles..it's really such a boost for me. i have so many concepts in my mind to write about. I will sure give my fullest support to your blog with my works.. Nandri :)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப மகிழ்ச்சி வெண்பா... தொடர்ந்து உங்க சிறப்பான கட்டுரைகளை இங்கே பதிவேற்ற ஆவலோட காத்திருக்கேன்... அப்படி ஒரு அனல் பறக்கும் கட்டுரையோட சீக்கிரம் வாங்க...

   Delete
 7. Congrats and keep it up Vijay

  ReplyDelete
 8. நம் ஒட்டுமொத்த சகோதர சகோதரிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் உங்கள் கட்டுரைகளுக்கு எனது நன்றியையும் அதேநேரம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களிடம் பேசுவதற்கு ஆவலாக உள்ளேன். என் வாழ்வில் மிக முக்கிய முடிவை எடுக்க தங்கள் ஆலோசனையை எதிர்நோக்கியள்ளேன். My email I'd is cselvarajece@gmail.com. I am expecting a mail from you..... Thanks ....

  ReplyDelete
 9. I wish to include myself to your team for blog.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி செல்வா.... தாராளமாக எங்கள் குழவில் நீங்கள் இணையலாம்... இனிதே இருகரம் நீட்டி உங்களை வரவேற்கிறோம்...

   Delete