Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 20 June 2014

கைது படலம் தொடங்கியாச்சு... - முதல் குற்றவாளியானார் பெங்களூரு மருத்துவர்...


இந்திய வரலாற்றில் முதல் முறையாக”ன்னு வாக்கியத்தோட இந்த செய்தியை பகிர்ந்துகொள்வது வருத்தமாகத்தான் இருக்கிறது... இந்த செய்தியே நம் வரலாற்றில் கடைசி முறையாகவும் இருக்க வேண்டும் என்கிற வேண்டுதலோடு விஷயத்துக்கு வரேன்....

பெங்களூரு மருத்துவர் ஒருவர் சட்டப்பிரிவு 377ன் பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதுதான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அச்சமூட்டும் செய்தி... 52 வயதாகும் அந்த மருத்துவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால், இந்த சட்டப்பிரிவு அவர் மீது பிரயோகிக்கப்படுவதாக இணை காவல் துறை ஆணையர் அபிஷேக் கோயல் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்... 

தன் வீட்டிற்கு கேபிள் இணைப்பு கொடுப்பதற்காக வந்த சுபாஸ் என்கிற இளைஞனை  செட்யூஸ் செய்து, உறவு வைத்துள்ளார் மருத்துவர்.... நாளடைவில் மருத்துவருடனான சுபாஷின் பழக்கம் அதிகமானது.... தன்னோடு அதை நிறுத்திடாத சுபாஷ், தனது ஆறு நண்பர்களிடம் மருத்துவர் விஷயம் பற்றி கூறியிருக்கிறான்... அவர்களுள் இருவரும் மருத்துவரோடு இணக்கம் காட்ட, பிடித்தது சனி... ஆம், மருத்துவர் அறியா வண்ணம் அந்த இளைஞர்கள் மொபைல் மூலம் வீடியோ எடுத்துள்ளனர்.... பின்னாளில், அந்த வீடியோவை காட்டி மருத்துவரிடம் பணம் பறித்துள்ளனர்.... பணம் கொடுக்க மறுத்தால், அந்த காணொளி காட்சிகளை இணையத்தில் உலவவிட்டு, அவர் மானத்தை வாங்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.... வேறு வழியின்றி பணிந்த மருத்துவரிடம் கிட்டத்தட்ட பதினாறு லட்சங்களை கறந்திருக்கிரார்கள்....

இந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழத்தொடங்கிய சுபாஷின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகப்பட்ட அவன் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.... விசாரணையின் விளைவாக, மருத்துவர் பற்றிய தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவே, மேற்சொன்ன கைது நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது....
உலகமே பெருமைக்குரிய பேரணி மாதத்தை கொண்டாடிக்கொண்டிருக்கையில், இந்தியா மட்டும் நம்மீதான அடக்குமுறைகளின் கணக்கை இப்போ தொடங்கிருக்கு... ஏற்கனவே மத்திய பிரதேச முன்னாள் நிதியமைச்சர் ராகவ்ஜி மீது ஓரினச்சேர்க்கை குற்றம் சுமத்தப்பட்டு, அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்ட விஷயம் நாம் அறிந்ததே.... இந்நிலையில், இந்த மருத்துவரின் கைது நடவடிக்கை என்பது எதிர்காலத்தில் எத்தனையோ ஆபத்துகளின் முன்னோட்டமாகவே எனக்கு தோன்றுகிறது.... இதில் கொடுமை என்னவென்றால் தவறுசெய்த இளைஞர்களுக்கு அதிகபட்சமாக ஒரு வருடம் தண்டனை கிடைக்கலாம்... ஆனால், பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கு....

இனி பங்காளி தகராறு முதல், வாய்க்கால் வரப்பு பிரச்சினை வரை இந்த சட்டம் பிரயோகப்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது... ராகவ்ஜி போன்று எத்தனையோ அரசியல்வாதிகள், காழ்ப்புணர்வின் விளைவால் குற்றம்சுமத்தப்பட்டு அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படும் ஆபத்தும் இருக்கிறது... யார் யார் மீதும் குற்றம் சுமத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் மிக எளிதாக கைதாகும் வாய்ப்பிருக்கு...

கே டேட்டிங் தளங்களில் பரிமாறப்படும் தகவல்களை சாட்சியாக வைத்தே கூட இந்த சட்டம் பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாக சிலர் சொல்வதை பார்க்கும்போது, எவர் வேண்டுமானாலும் ஆபத்து அப்பட்டமாக இருப்பதை நம்மால் உணரமுடியும்...
இன்னும் உச்சநீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 377க்கு எதிரான மறுசீராய்வு மனு கிடப்பில் கிடக்கும் நிலையில், இப்படிப்பட்ட கைது நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது நிச்சயம் நம் சமூகத்தை அழிவின் பாதைக்கு இட்டு செல்லும்...

புகழ்பெற்ற கணினி அறிவியலின் தந்தை ஆலன் தூரிங் அவர்களுக்கு நூறாண்டுகளுக்கு முன்பு பிரிட்டன அரசாங்கம் இதே போல ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தின் கீழ் தண்டனை கொடுத்து, பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டதும் வரலாற்று நிகழ்வு.... சமீப காலத்தில்தான் பிரிட்டன்  நாடாளுமன்றம் தன் செய்கைக்கு வருந்தி ஆலன் தூரிங் அவர்களிடம் மன்னிப்பு கோரியது நிகழ்கால நிதர்சனம்.... அப்படி பாதிக்கப்பட்ட ஐம்பதாயிரம் நபர்களுக்கு அந்த மன்னிப்பு ஒரு ஆத்ம நிம்மதியை கொடுத்திருக்கும் என்றாலும் அது காலம் கடந்த மன்னிப்பு என்பதை இந்த உலகறியும்....

ஒருபுறம் பிரிட்டன் அந்த செயலுக்கு மன்னிப்பு கூறும் அதே காலகட்டத்தில்தான், அதே தவறை இந்தியா செய்ய தொடங்கியிருக்கிறது.... இந்த தவறுகளுக்கு இன்னும் நூறாண்டுகளுக்கு பிறகு நம் தலைவர்கள் மன்னிப்பு கேட்டு நிச்சயம் பலன் ஏதும் இல்லை... தவறு நடக்கும் முன்பே அதை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது....
இந்திய அரசாங்கம், எங்கள் உயிர்களை பறிக்கும் கணக்கை தொடங்கும் பணியை நிறுத்திவிட்டு, எங்கள் உயிரை காக்கும் உன்னத முடிவை எடுக்கும் என்கிற அடிப்படையே இல்லாத எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்...

9 comments:

  1. உண்மைலயே அவர் ரொம்ப பாவம். இந்த வயசில, இப்படி ஒரு அவமானம் தேவை இல்லை. பணத்தையும் இழந்து, இவ்ளோ நாள் சம்பாதிச்ச (குடும்ப) புகழையும் இழந்து எவ்ளோ கஷ்டப்படுவார். அவரோட ஒரு நிமிஷ சபலத்தோட விளைவு, நிச்சயம் நமக்கெல்லாம் ஒரு பாடம்...

    இனிமே, ஓரினசேர்க்கையாளர்களை வீடியோ எடுத்து மட்டும் மிரட்ட மாட்டாங்க. போலீஸ்கிட்ட பிடிச்சி கொடுத்துடுவோம்னும் மிரட்ட போறாங்க. எப்படி இருந்தாலும், ப்ளாக்மெயில் பண்றவங்களுக்கு தான் வசதி.

    ட்ரைன்ல பக்கத்துல நிக்கிறவன உரசுறது, பஸ்ல பக்கத்துல உக்கார்ந்திருகிறவன் தொடைய அமுக்கி பார்க்கிறது இதெல்லாம் விட்ருங்கப்பா... நான் சொல்றத சொல்லிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்ஜி... இது நமக்கு அடிக்கப்பட்டிருக்கும் அபாய மணி... நாம விழிப்படைந்தே ஆகணும்...

      Delete
  2. nama namma kurigiya sabalatha vittutu.......poratangal moolama nammaloda urimaya peruvatharkana sariana kala kattam ithu........antha dr. oda arrest oru arambam tha....ini 377 pala paer mala paauum................friends so be careful.............konjam vivegamavum ini nama nadanthukanum...........

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு நமது உரிமை என்பது அடிப்படை பாதுகாப்பு மட்டுமே.... அது கிடைக்கும்வரை போராடித்தான் ஆகணும்...

      Delete
  3. India la women harrasment pannura vangaluku yellam red carpet respect... Avangala adaka thoopu illa... Weakest side mela mattum Indian rules will b strictly followed.. Shame on us... One of the techie was gang raped and killed in our office area, till then no justice was given to her family... Wat a shame, ana gay sex mattum kola kutham maathiri treat pannurathu....

    ReplyDelete
  4. India la women harrasment pannura vangaluku yellam red carpet respect... Avangala adaka thoopu illa... Weakest side mela mattum Indian rules will b strictly followed.. Shame on us... One of the techie was gang raped and killed in our office area, till then no justice was given to her family... Wat a shame, ana gay sex mattum kola kutham maathiri treat pannurathu....

    ReplyDelete
    Replies
    1. ஆம் பாலா... இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் அடிப்படையில் நம்மீதான இந்த சமூகத்தின் வெறுப்புதான் காரணம்....

      Delete
  5. பாவம் அந்த மருத்துவர்...அவர் ஒன்றும் கட்டாய படுத்தி துன்புறுத்தவில்லையே...கொஞ்சம் சபலம் எவ்ளோ விபரீதம் ஆச்சு...

    ReplyDelete
  6. So sad...This Country and its rules are terribly irritating... Most of the time i m proud to be an Indian but now i feel ashamed fr being an Indian... Our country will never become a developed country..

    ReplyDelete