கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது Mr Gay
World 2014 உலக ஒருபால் ஈர்ப்பு அழகனை தேர்ந்தெடுக்கும் பிரம்மாண்ட
திருவிழா... ஆறாவது ஆண்டாக நடந்திடும் இப்போட்டி இம்முறை இத்தாலி நாட்டின்
வரலாற்று புகழ்மிக்க ரோம் நகரில் நடந்தது நிச்சயம் ஒரு வரலாற்று மாற்றத்திற்கு வழிவகுக்கும்
என்று நம்பலாம்... இம்முறை அப்பட்டத்தை வென்றது இங்கிலாந்து நாட்டின் ஸ்டூவர்ட்
ஹாட்டன் என்பவர்... கடந்த ஆண்டின் அழகனாக தேர்வான நியூசிலாந்து நாட்டின் க்ரிஷ்
ஆல்வேஜ், இந்த ஆண்டின் அழகனாக தேர்வான ஸ்டூவர்ட் ஹாட்டனுக்கு பட்டம் சூட்டி
விழாவினை நிறைவு செய்துவைத்தார்... சைப்ரஸ் மற்றும் அயர்லாந்து நாட்டினை சேர்ந்த
அழகன்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை தட்டி சென்றனர்....
நாமல்லாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த
இந்தியாவின் சுஷாந்த் திவ்கிகர் பட்டம் வெல்லமுடியவில்லை என்றாலும், 32 நாடுகளை சேர்ந்த அழகு மன்மதன்கள் கலந்துகொண்ட போட்டியில், இறுதியில்
தேர்வான பத்து போட்டியாளர்களுள் ஒருவராக தன் இருப்பை பதிவுசெய்துவிட்டார்...
அதுமட்டுமல்லாமல் உலக அழகனை தேர்ந்தெடுக்க
நடந்த ஏழு உட்பிரிவு போட்டிகளில், இரண்டு பட்டத்தை கைப்பற்றிவிட்டார் நம்
சுஷாந்த்... நடனம் மற்றும் பாடும் திறன் வாய்ந்த சுஷாந்த் Mr Art பட்டத்தையும், எல்லோருடனும் இணக்கமாகவும் நம் இந்தியர்களுக்கே உரிய
பரிவுடனும் நடந்துகொண்ட சுஷாந்த் Mr Congeniality பட்டத்தை தட்டி
சென்றதும் ஆச்சர்யப்பட அவசியமில்லாத விஷயம்தான்... இன்னொரு முக்கியமான விருதும்
அவருக்கு கிடைத்திருப்பது ஆச்சர்யமான விஷயமாக எனக்கு தோன்றுகிறது.. ஆம், ஸ்டூவர்ட்
ஹாட்டன் இறுதிப்போட்டியில் வென்றது நடுவர்களின் தீர்ப்பால்தான்... நம் எல்லோருடைய
வாக்குகளின் விளைவாக மக்கள் தேர்ந்தெடுத்த அழகனாக தேர்வாகி People’s Choice
Award பெற்றது என்னவோ நம் இந்தியாவின் சுஷாந்த் திவ்கிகர்தான்...
இதன்மூலம் மக்கள் தேர்வாக வென்று நமக்கு பெருமை சேர்த்துள்ள சுஷாந்த் அவர்களுக்கு
நம் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்வோம்....
மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்த விழா உலகின்
பல நாடுகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது... முன்பைவிட உலக ஊடகங்களால்
முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டிருந்தது... இந்தியாவின் சில நாளிதழ்கள் கூட
இச்செய்தியை வெளியிட்டதன்மூலம் பரவலாக இப்போட்டியை பொதுத்தள மக்கள் அறிந்துகொள்ள
முடிந்தது... அழகுப்போட்டி என்றதும் வெறும் அழகிற்கு மட்டுமே முக்கியத்துவம்
தரப்படும் என்று நினைத்தாலும், நிஜத்தில் அழகிற்கு அப்பாற்பட்டு அவர்களின்
அறிவுத்திறன், பாலீர்ப்பு தொடர்பான தெளிவான கண்ணோட்டம் போன்ற விஷயங்களின்
அடிப்படையிலும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது நாம் கவனத்தில்
எடுத்துக்கொள்ளவேண்டிய நிதர்சனம்...
இப்போட்டியில் வென்ற ஸ்டூவர்ட் ஹாட்டன்
என்னும் 28 வயதான இளைஞர்தான் உலக அளவில் ஒருபால் ஈர்ப்பு
சமூகத்தின் நல்லெண்ண தூதராக அடுத்த ஓராண்டு செயல்படுவார்... வெற்றி விருதுடன்
பேட்டியளித்த ஹாட்டன், “என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி... இந்த
வெற்றி எனது செயல்பாடுகளின் தொடக்கம் மட்டுமே, இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள்
நிறைய இருக்கின்றன... தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட பல்வேறு
நாடுகளை சேர்ந்த ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்காகவும் என் குரல் இனி ஒலிக்கும்...
நாம் எல்லோரும் மனிதர்கள்தான், மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் மனித உரிமைகள்
காக்கப்பட வேண்டும் என்ற கொள்கையோடு போராடுவேன்!” என்று நம்பிக்கையூட்டும் விதமான
வார்த்தைகளை உதிர்த்தார்....
இந்த ஆண்டு வெற்றியின் விளிம்புவரை சென்ற
இந்தியா அடுத்த ஆண்டு அந்த வெற்றிக்கோட்டையும் தொட்டுவிடும் என்ற நம்பிக்கை
எனக்கிருக்கிறது.... இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கூட Mr Gay
World 2015 பட்டம் வெல்லலாம், அப்போது “கடந்த ஆண்டு இந்த
அழகுப்போட்டியை பற்றி எழுதிய கட்டுரைக்கு நான் கருத்திட்டேன், இந்த ஆண்டு அந்த
போட்டியின் வெற்றியாளனாகவே ஆகிவிட்டேன்!” என்று பேட்டி கொடுப்பதற்காகவாவது ஒரு
பின்னூட்டம் பதிந்துவிட்டு சென்றுவிடுங்கள் மக்களே!....
கடந்த ஆண்டு நிச்சயம் இந்த வெற்றியை
ஸ்டூவர்ட் ஹாட்டன் கற்பனை செய்திருக்க கூட மாட்டார், ஆதலால் எதுவும்
நடக்கலாம்...!...
நம்ம பையனை விட ஹாட்டன் பார்ப்பதற்கு ஒன்றும் பெரிய அழகாகவெல்லாம் இல்லை, ஆனாலும் பாராட்டுக்கள். தினமலர் போன்ற ஹோமொபோபிக் பத்திரிகைகள் இறுக்கம் வரை நம் கனவு நிறைவேறுவது சற்று சிரமமே !
ReplyDeleteஹாட்டனை விட அழகா நிறைய பசங்க இருந்தாங்கப்பா... ஆனாலும், பலகட்ட சோதனைக்கு பிறகுதான் இவரை வெற்றியாளரா தேர்வு செஞ்சிருக்காங்க.... நம்ம பையன் சுஷாந்தும் குறிப்பிட தகுந்த விருதோடதான் நாடு திரும்பிருக்கார்..... நம்புவோம், அடுத்த வருடம் நம்ம தமிழ் பசங்க அந்த விருதை பெறுவார்கள்னு...
Delete