Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 28 September 2014

"பைசெக்சுவல் நபர்கள் பச்சோந்திகளா?" - விடை சொல்லும் விழிப்புணர்வு வாரம்!
கடந்த வாரம் பைசெக்சுவாலிட்டி நாளான செப்டம்பர் 23ஐ முன்னிட்டு இருபால் ஈர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது, அதன் ஒரு பகுதியாகத்தான் நம்மவர்களுக்கும் அத்தகைய ஈர்ப்பினர் பற்றிய ஒருசிறு விழிப்புணர்வு கட்டுரை...... பாலீர்ப்பு சிறுபான்மையினர்களின் பட்டியலில் அதிகம் கண்டுகொள்ளப்படாத, அதே நேரத்தில் மிக அதிக அளவில் விமர்சிக்கப்படும் வகையினர்தான் பைசெக்சுவல் எனப்படும் இருபால் ஈர்ப்பு நபர்கள்... பைசெக்சுவல் நபர்கள் என்றால் யார்? என்ற கேள்விக்கே அவசியமில்லாத அளவிற்கு அந்த பெயரிலேயே அதற்கான முழு அர்த்தமும் வெளிப்படையாக நமக்கு புரிகிறது... ஆம், ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பாலினத்தை சேர்ந்தவர்கள் மீதும் ஈர்ப்பு கொள்ளும் வகையினர்தான் இந்த இருபால் ஈர்ப்பு நபர்கள்...

ஒருபால் மற்றும் எதிர்பால் ஈர்ப்பு போல இந்த ஈர்ப்புக்கும் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்று பின்புலம் இருக்கிறது... ஆம், கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரத்தில் இருபால் ஈர்ப்பு மிக சாதாரண விஷயமாக பார்க்கப்பட்டதை பல வரலாற்றுப்பதிவு ஆதாரங்கள் வழியே நாம் அறியமுடிகிறது... 

இன்றைக்கும்கூட பாலீர்ப்பு சிறுபான்மையினர் கணக்கெடுப்பில் கணிசமாக இருபால் ஈர்ப்பு நபர்கள் நிறைந்துள்ளதாக பல ஆய்வு முடிவுகளும் கூறுகிறது....

 2002 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் தேசிய சுகாதார புள்ளியியல் நடுவம் எடுத்த கணக்கெடுப்பின்படி 1.8 % ஆண்கள் இத்தகைய இருபால் ஈர்ப்பினர் பட்டியலுக்குள் வகைப்படுத்தப்படுகிறார்கள் எனவும், தான் பைசெக்சுவல்தானா? என்கிற குழப்பத்தில் 3.9% ஆண்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது... இந்த சதவிகிதம் ஒப்பீட்டளவில் ஒருபால் ஈர்ப்பினரைவிட அதிகம் என்பதையும் நாம் கணக்கில்கொள்ளவேண்டும்... அதுமட்டுமல்லாமல் இருபால் ஈர்ப்பு ஆண்களை காட்டிலும் பெண்களுக்குத்தான் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வுகள் ஆச்சர்ய முடிவுகளை தெரிவிக்கின்றன...

இனி இவர்களைப்பற்றி பொதுத்தளத்திலும், ஒருபால் ஈர்ப்பு சமூகத்தில் நிலவும் தவறான பிம்பங்களை பற்றிய விளக்கங்களுக்கு வருவோம்!...

·        பெண்ணை திருமணம் செய்துகொண்ட ஆண்கள் எல்லோரும் பைசெக்சுவலா?
பரவலாகவே இப்படி ஒரு தவறான பார்வை நம் சமூகத்தில் நிலவுகிறது... ஒரு முழுமையான கே, குடும்ப மற்றும் சமூக நிர்பந்தம் காரணமாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் பலராலும் அவன் பைசெக்சுவல் நபராக பார்க்கப்படுகிறான்.... நிச்சயமாக அது தவறான பார்வை... எத்தனையோ கே நபர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களுடைய ஒருபால் ஈர்ப்பு காரணமாக மனைவியுடன் இல்லற இன்பத்தை உணரமுடியாமல் இருப்பதை பல இடங்களிலும் பார்க்கமுடிகிறது.... திருமணம் ஆனபின்பு ஒரு நபரின் பாலீர்ப்பு மாறிவிடும் என்றால், இவ்வளவு காலமும் உரிமைக்காக போராடும் ஒருபால் ஈர்ப்பினரின் போராட்டங்கள் தேவையே இருக்காதே.... திருமணம் என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு... அந்த நிகழ்வால் ஒரு மனிதனின் பாலீர்ப்பை எந்த காலத்திலும் மாற்றிடமுடியாது....

·        பைசெக்சுவல் நபர்கள் யார்?... 
 
 தெளிவாக பலருக்கும் இதுபற்றிய புரிதல் இல்லையோ என்றெனக்கு தோன்றுவதுண்டு... அந்த புரிதலின்மைகளுக்கு காரணம் இந்த பாலீர்ப்பில் காணப்படும் சில குழப்பங்கள்... ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருபாலினரின் மீதும் ஈர்ப்பு உண்டானால் அவர்கள் இருபால் ஈர்ப்பு நபர்களாக வகைப்படுத்தப்பட்டாலும், இதில் ஒருசில குழப்பங்கள் இருக்கிறது... எத்தனை சதவிகிதம் ஒருவன் ஆண்கள் மீது ஈர்ப்பு கொள்கிறான், அதே போல எத்தனை சதவிகிதம் பெண்கள் மீது ஈர்ப்புகொள்கிறான் என்பதை வைத்தும் சில உட்பிரிவுகளை பிரிக்கிறார்கள் (அதுபற்றிய கின்சே ஸ்கேல் பற்றி கட்டுரையின் தொடர்ச்சியில் பார்க்கலாம்)... அதுமட்டுமில்லாமல் அந்த சதவிகிதம் சிலருக்கு மாறும் வாய்ப்பு கூட உண்டென ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.... அதாவது, பதின்வயதுவரை எதிர்பால் ஈர்ப்பு மேலோங்கி இருக்கின்ற ஒருவனுக்கு, மத்திம வயதில் சமபாலினர் மீதான ஈர்ப்பு மேலோங்கியும் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு... அப்படி நிகழும் ஒருவர், “நான் ஸ்கூல் படிக்கிற வரைக்கும் ஸ்ட்ரை’ட்டாத்தான் இருந்தேன், காலேஜ் வந்தப்புறம் எப்டி கே’வா மாறுனேன்னு தெரியல!” என்ற குழப்பத்தில் திளைப்பது இயற்கைதான்... ஆனால், அத்தகைய நபர்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம், பாலீர்ப்பு அவர்களுக்கு மாறவில்லை, மாறாக இரண்டு பாலினத்தை சேர்ந்தவர்களிடம் அவர்களுக்கு உண்டான ஈர்ப்பின் சதவிகிதம் மட்டுமே மாறியிருக்கிறது... இத்தகைய வகைக்குள் வருபவர்கள் நிச்சயம் இருபால் ஈர்ப்பினர்கள்தான்...

·        கின்சே ஸ்கேல்....
புகழ்பெற்ற ஆய்வாளரான கின்சே “ஒரு மனிதனின் சமபால் – எதிர்பால் ஈர்ப்பின் சதவிகிதத்தை வைத்து, குறிப்பட்ட மனிதனின் பாலீர்ப்பை ஏழு வகைகளாக பிரிக்கிறார்”...
கின்சே போலவே பலரும் பலவிதமான அடிப்படைகளை வைத்து பாலீர்ப்பை பிரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டாலும், காலம் கடந்தும் கின்சே ஸ்கேல் தனக்கென தனி இடத்தை பெற்று நிற்கிறது...
கின்சே ஸ்கேலின் முழுமையான விபரம் கீழே கொடுக்கப்படுகிறது....
........
0
முழுமையான எதிர்பால் ஈர்ப்பினர்...
1
எதிர்பால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அரிதாக சமபால் ஈர்ப்பில் நாட்டம் கொள்வோர்....
2
எதிர்பால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அவ்வப்போது சமபால் ஈர்ப்பிலும் நாட்டம் கொள்வோர்...
3
எதிர்பால் ஈர்ப்பும் சமபால் ஈர்ப்பும் சரிவிகிதம் பெற்றிருப்போர்...
4
சமபால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அவ்வப்போது எதிர்பால் ஈர்ப்பிலும் நாட்டம் கொள்வோர்...
5
சமபால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அரிதாக எதிர்பால் ஈர்ப்பில் நாட்டம்கொள்வோர்...
6
முழுமையான சமபால் ஈர்ப்பினர்...
X
எவ்வித ஈர்ப்பும் எத்தகைய பாலினத்தை சேர்ந்தவர்களிடமும் உண்டாகாதவர்கள்...

இதில் கடைசியாக நாம் பார்த்த “எந்த பாலீர்ப்பும் எவரிடத்திலும் ஏற்படாத நபர்கள் ஏசெக்சுவாலிட்டி (Asexuality) என்கிற வகைக்குள் வருகிறார்கள்...”..
இத்தகைய வகையினருக்கு முழுவதும் முரணான இன்னொரு பிரிவினர் பற்றி கின்சே குறிப்பிடவில்லை... அத்தகைய நபர்கள் “பான்செக்சுவாலிட்டி (pansexuality)” வகைக்குள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்...
இந்த பான்செக்சுவாலிட்டி வகை நபர்கள், பாலின பேதமின்றி எல்லா தரப்பு பாலினத்தை சேர்ந்தவர்களிடமும் ஈர்ப்பு கொள்வார்கள்.. அதாவது, ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்று எல்லா தரப்பின் மீதும் ஈர்ப்புகொள்வார்கள்.... நாம் கட்டுரையின் முக்கிய நோக்கம் கருதி இதைப்பற்றிய செய்திகளை இத்தோடு முடித்துவிட்டு, மீண்டும் பைசெக்சுவாலிட்டி பக்கம் திரும்புவோம் ....

சரி, கின்சே ஸ்கேலில் உங்களுடைய பாலீர்ப்பு எந்த வகைக்குள் வருகிறதென்று தெரிந்துகொள்ள ஆசையா?... கீழே உள்ள இணைப்பில் இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க, உங்க பாலீர்ப்பை விளையாட்டாக தெரிந்துகொள்ளுங்க....


·        மன அழுத்தம்  பைசெக்சுவல் நபர்களுக்கு அதிகம்....

ஒப்பீட்டளவில் ஒருபால் ஈர்ப்பு நபர்களை காட்டிலும், இருபால் ஈர்ப்பு நபர்கள் மனதளவில் நிறைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்..  ஒருபால் ஈர்ப்பு நபர் ஒருவர், தனது பதின் வயதுகளில் குழம்பினாலும், பாலீர்ப்பு பற்றிய அடிப்படை புரிதல் அவருக்கு வந்தவுடன், குழப்பங்கள் நீங்கப்பெற்று ஓரளவு தெளிவான மனநிலைக்கு வந்துவிடுகிறான்... “தனக்கு ஆண்கள் மீதுதான் ஈர்ப்பு இருக்கிறது, தான் ஒரு கே” என்பதில் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் ஒருகட்டத்தில் தெளிவடைகிறார்கள்... ஆனால், இருபால் ஈர்ப்பு நபர்களால் அப்படி ஒரு தெளிவான மனநிலைக்கு எளிதில் வரமுடிவதில்லை... “ஆண்கள் மீது சில நேரமும், பெண்கள் மீது சிலநேரமும் எனக்கு ஈர்ப்பு உண்டாகுது... அப்படினா திருமணம் செய்துகொள்ளலாமா? துணிந்து ஒரு ஆணை காதலிக்கலாமா? திருமணம் செய்துகொண்டால், அதன்பிறகு பாலீர்ப்பு விகிதம் மாறும் பட்சத்தில் என்ன செய்வது?... நிஜமாகவே நான் இருபால் ஈர்ப்பு நபர்தானா?” என்ற கேள்விகள் அத்தகைய நபர்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும், விளைவு மன அழுத்தம்.... இரண்டு வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பத்தில், தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையிலும் நிலையாக இருக்க முடியாமல், குழம்பித்தவிப்பது இந்த வகையினர்தான்...


·        செயற்கையான ஒருபால் ஈர்ப்பினர்....

இத்தகைய வகையினர் இந்தியாவை போன்ற பாலீர்ப்பு புரிதல் இல்லாத நாடுகளில் அதிகம் காணப்படுகிறார்கள்.... சிறுவயது முதலாகவே ஆண் என்றால் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற சமுதாய கட்டமைப்புக்குள் வளரும் ஒருவன், தன்னை ஸ்ட்ரைட் நபராகவே பாவித்து வாழ்கிறான்... பதின் வயதுகளில் அவன் நண்பர்கள் பெண்களை ரசிக்கும்போது, தனக்கெழும் ஆண்களின் மீதான ஈர்ப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்துவிட்டு பெண்ணை ரசிக்க முயல்கிறான்... அப்படியே நாட்கள் செல்ல, பெண்களை ரசிப்பது அவனைப்பொருத்தவரை கடமையாகவே ஆகிவிடுகிறது.... ஒருகட்டத்தில் அவனுக்குள் இருக்கின்ற ஒருபால் ஈர்ப்பு மேலெழும்போது, சமுதாய அழுத்தத்தால் தன்னை ஸ்ட்ரைட்டாக அதுகாலம் வரை நினைத்திருந்த அந்த நபர், தன்னை இருபால் ஈர்ப்பு நபராக சித்தரித்துக்கொள்கிறான்.... இயற்கையாகவே அவனுக்குள் இருந்த ஒருபால் ஈர்ப்பு எண்ணமும், செயற்கையாக இந்த சமூகத்தால் திணிக்கப்பட்ட எதிர்பால் ஈர்ப்பு எண்ணமும் அவனை பைசெக்சுவல் நபராக செயற்கையாக உருவாக்கும்போது, அவன் பலியாடாக ஆக்கப்படுகிறான்.... “நான் பைசெக்சுவல்தான்... இப்போ ஜாலிக்காக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுறேன்... கொஞ்ச நாள்ல பெண்ணை திருமணம் செஞ்சிட்டு சந்தோஷமா வாழ்வேன்!” என்று சுற்றித்திரியும் பலரும் இந்த பட்டியலுக்குள் வருவார்கள் என்றே தோணுது... இந்திய கலாச்சாரம், மதங்களின் பாலீர்ப்பு ஏற்காமை போன்ற காரணங்களால் இந்தியாவில் இத்தகைய நபர்கள் நிறைய இருக்கிறார்கள்... இவர்களுக்கு நிச்சயம் திருமணத்திற்கு முன்பு ஒரு கலந்தாய்வு அவசியமாவதை இதன்மூலம் அவர்கள் உணரவேண்டும்....


·        பைசெக்சுவல் நபர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாதிகள், பச்சோந்திகள், நம்பகத்தன்மை அற்றவர்கள்...

இப்படி ஒரு பிம்பம் இருபால் ஈர்ப்பு நபர்கள் மீது அதிகமாக திணிக்கப்படுகிறது.... பைசெக்சுவல் நபர்களால் இரண்டு பாலினத்தினர்மீதும் ஈர்ப்புகொள்ள முடிகிறது என்னும் காரணத்தால் இவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்... ஒரே ஒரு பாலினத்தை சேர்ந்தவர்கள் மீதுதான் ஈர்ப்புகொள்ள வேண்டும் என்ற விதிமுறை நமக்கு இருக்கிறதா என்ன?... எனக்கு உயரமாக இருப்பவனை பிடிக்கிறது என்பதற்காக, உயரத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் காதலை தேர்ந்தேடுப்பவனை நான் சந்தர்ப்பவாதியாக பார்ப்பது முறையாகுமா?...பல இருபால் ஈர்ப்பு நபர்களும் ஆண், பெண் என்று காதலை மாற்றுகிறார்கள் என்று ஒரு வாதம் நிலவுகிறது... நீங்களும் நானும் ஒரே காதலனுடன்தானா சாகும் வரை வாழ்கிறோம்?... நாம் நான்கைந்து ஆண்களை காதலித்தால் அதை பெரிய விஷயமாக நினைக்காத வேளையில், ஒரு பைசெக்சுவல் நபர் ஆண் பெண் என்று இரண்டு நபர்களை காதலித்ததை கொலைக்குற்றமாக பார்ப்பது தவறில்லையா?... கே நபர் தெளிவாக தன் பாலீர்ப்பை உணர நிறைய வாய்ப்பிருக்கு... ஆனால், பாலீர்ப்பு குழப்பத்தோடு சுழலும் இருபால் ஈர்ப்பு நபர்கள் அத்தகைய குழப்பத்தில் காதலில் தோல்வியுறுவது ஒன்றும் பெரிய நம்பகத்தன்மை அற்ற சூழலாக எனக்கு தோன்றவில்லை... உங்களுக்கு இனிப்பு பிடிக்கும், எனக்கு காரம் பிடிக்கும்.. இரண்டையும் பிடித்து சாப்பிடும் ஒருநபரை பச்சோந்தியாக பார்ப்பது சரிதானா? என்பதை நீங்கதான் முடிவுசெய்யனும்....


·        பைசெக்சுவல் நபர்கள் எல்லோரும் செக்ஸ் மேனியா’க்கள்....

இப்படி ஒரு வாதத்தை அதிகமாக திணிப்பவர்கள் நம் பாலீர்ப்பு சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த ஒருபால் ஈர்ப்பு நபர்கள்தான்.... “அவன் ஆம்பிள கூடவும் படுப்பான், பொம்பளைங்க கூடவும் படுப்பான்... செக்ஸ்ன்னா அவனுக்கு அவ்ளோ வெறி” என்று பைசெக்சுவல் நபர்களை பற்றி பட்டவர்த்தனமாக ஒரு பிம்பத்தை உமிழ்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்... அது ரொம்ப தவறு நண்பர்களே... “பெண்கள் கூட படுக்க வாய்ப்பு கிடைக்காததால இவனுக ஆம்பளைங்க கூட படுக்குறாணுக... நாளைக்கு ஆம்பிளைகளும் கிடைக்கலைன்னா எதைத்தேடி போவாங்களோ!” என்று நம்மை காலம் காலமாக கரித்துக்கொட்டும் இந்த ஸ்ட்ரைட் சமூகத்தின் இத்தகைய கருத்திற்கும், மேலே நம்மவர்கள் சொன்ன இருபால் ஈர்ப்பு பற்றிய கருத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம்னு சொல்லுங்க... ஸ்ட்ரைட் நபர்கள் ஒரு கே’வை பற்றி சொன்னா கொதிச்சு போராடுறோம், அதே போன்ற ஒரு அமிலத்தன்மை வாய்ந்த கருத்துகளை இருபால் ஈர்ப்பு நபர்கள் மீது நாம வீசினால் அது எவ்வளவு பெரிய தவறுன்னு பாதிக்கப்பட்ட நமக்கு புரியலையே!....

நீங்க யாரோ ஒரு பைசெக்சுவல் நபரால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது யாரோ சிலர் செக்ஸ் மட்டுமே நோக்கமாக வாழலாம்... ஆனால், அந்த “யாரோ” சிலருக்காக ஒட்டுமொத்த இருபால் ஈர்ப்பு நபர்களையும் குற்றம் சுமத்தவேண்டாம் என்பதுதான் என் கருத்து... பேருந்து நிலைய கழிவறை வாசலில் நிற்கும் வெகுசில நபர்களின் செயலுக்கு இன்றைக்கும் நம் எல்லோரையும் செக்ஸ் மெஷின்களாக பாவிக்கும் இந்த பொதுத்தள சமூகம் செய்யும் அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது இறுதி கோரிக்கை....

“விதிவிலக்குகள் எல்லாம் உதாரணங்கள் ஆகிவிடாது!” என்ற பொன்மொழியின் அர்த்தம் உங்களுக்கு புரிந்தால், கட்டுரையின் சாராம்சம் உங்கள் மனதினை ஓரளவு சார்ந்திருக்கும் என்று நம்புகிறேன்!....

அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தான்...
அவர்களை புரிந்துகொள்ளுங்கள்!..... புரியாமல் கொல்லாதீர்கள்!.....

9 comments:

 1. Nice one Vijay,

  I prefer females, when compare to males.

  At the same time I am not against gay sex.

  Who am I

  Yours

  Ajay

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜய்...
   சந்தேகமே இல்லாமல் நீங்க "எதிர்பால் ஈர்ப்பு மேலோங்கிய பைசெக்சுவல்" நபர்தான் நண்பா...

   Delete
 2. Really nice @Vijay Vicky.. it is helpful

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. Ellaa bisexuals um sex maniacs illa... Ofcourse... Gays ellaarum kooda purely love dhan venum nu kekala..... Bt adhukaava bisexuals "ELLAARUM" or almost 50% nallavanga nu solla mudiyalaye!! Oru bisexual kadasi la oru ponna dhana kalyaanam pannika poraan!?? Bcoz! Indian society or parents love or sacrifice kaaranama oru gay ve kalyanam panni "SANDHOSHAMA" vaalum bodhu oru bisexual um apdi dhan panna mudiyum.... Vera decision edhum illa nu nenakiren.... Apdi oru mudiva eduthaaa!! Enna tthhhukku oru gay va love pannanum!? Othukurom!! Bisexuals nallavanga dhan!! Avangalukku parents society la kedaikira mariyadha dhan mukkiyam na edhukkava oru gay oda life la (love dhan venum.... Oruthan koodave kadasi varaikum irukkanum) apdi nu nenaikira gay vaa thedi love pannanum!? Seri.... Apdiye pannaaalum.... Avanoda kadasi varaikum irukka vendiyadhu dhana!? "Yenga! Unglukku confusion irukundrathukaava aduthavan life ah spoil pannanum nu irukkaa enna!?" Wateva.... :) :) :) :) am not bringing in a gay vs bisexual debate.... Gays esp india are equally horrifying.... bt.... Bisexuals add a 1% extra to the negative scale of 50/50 good bad state... IDHU ENNUDAYA THANI PATTA KARUTHU MATTUME... for those f yu whom i ve offended.. _/\_ I AM SORRY.....

  ReplyDelete
  Replies
  1. எனதன்புத்தம்பி ரவியின் இவ்வளவு நீளமான கருத்தால் முதலில் எனக்கு மகிழ்ச்சியே....
   இப்போ உன் கேள்விகளுக்கு வருகிறேன் தம்பி...
   முதலில் ஒருவிஷயத்தை நீ தெளிவா புரிஞ்சுக்கணும்... "நான் பைசெக்சுவல் நபர்களின் பிரதிநிதியாக இந்த கட்டுரையை எழுதவில்லை... மேலும் எல்லா பைசெக்சுவல் நபர்களும் நல்லவர்கள் என்ற வாதத்தையும் நான் எப்போதும் முன்வைக்கவில்லை... ஒரு நபரின் நல்ல எண்ணத்தை அவருடைய பாலீர்ப்பு தீர்மானிக்காது என்பதை நிச்சயம் நாம் எல்லோரும் அறிவோம்... அப்படி இருக்கையில் யாரோ சில கே நபர்கள் காமத்தேடலில் முழுநேரமும் இருப்பதை வைத்து நம் எல்லோரையும் செக்ஸ் மெஷின்களாக பார்க்கும் ஸ்ட்ரைட் சமூகத்துக்கும், யாரோ சில பைசெக்சுவல் நபர்கள் கே நபர்களை ஏமாற்றினார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த பைசெக்சுவல் நபர்களையும் குற்றம் சொல்லுவது கிட்டத்தட்ட சரியான அளவிலான கருத்துகள்தான்... உங்க வாதத்தில் ஒருவிஷயத்தில் நான் கொஞ்சம் முரன்படுறேன்.... எனக்கு தெரிந்த சில பைசெக்சுவல் நபர்கள் ஆண்களோடு வாழ்வதையும், நான் அறிந்த சில கே'க்கள் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்வதையும் நான் பார்த்திருக்கிறேன்.... ஆகையால் பைசெக்சுவல் நபர்கள் பெண்களை மட்டுமே திருமணம் செய்துகொள்கிறார்கள் என்கிற வாதம் அடிப்படையில் கொஞ்சம் தவறானது...
   இந்தியாவில் ஒருவேளை ஒருபால் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டால், இந்த சதவிகிதம் கூடும் வாய்ப்பும் இருக்கிறது... ஆகையால் தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றம் சுமத்துவது சரியென எனக்கு தோன்றவில்லை...
   "இவங்க ஏன் கே நபர்களை காதலிக்கணும்?" னு உங்க கேள்வி இருக்கு... அதே கேள்வியை கொஞ்சம் மாற்றி நான் கேட்கட்டுமா?... "நாம ஏன் பைசெக்சுவல் நபரை காதலிக்கணும்?"...
   நாம காதலிக்கும் முன்பு நம்மளோட காதலன் எதிர்காலத்தில் திருமணம் பற்றி என்ன திட்டம் வச்சிருக்கான்?ன்னு கூடவா தெரிஞ்சுக்காம நாம லவ் பண்றோம்?... இல்லையே... இன்னும் தெளிவா சொல்லனும்னா, பல நபர்கள் தங்கள் ஸ்ட்ரைட் நண்பனை காதலிப்பதா சொல்வதும் நாம நிறைய பார்த்திருக்கோம்.... காதளிக்குற நபரை தேர்ந்தெடுப்பதில் நாமளும் கொஞ்சம் கவனக்குறைவாக இருப்பதை மறுக்கக்கூடாதுதானே?... அப்படி இருக்கையில், ஒரு காதல் தோல்விக்கு மொத்தமாக ஒரு பை நபரை மட்டுமே குற்றம் சுமத்துவது முறையா?....
   மேலும் நித்தமும் இங்க எத்தனையோ ஸ்ட்ரைட் மற்றும் கே காதல்கள் தொற்றுக்கொண்டு இருக்கிறதே... அதற்கல்லாம் பாலீர்ப்பை காரணம் சொல்லாமல், குறிப்பிட்ட பை நபர்களின் காதலை மட்டும் பார்த்து அவர்களை குற்றம் சொலவது சரியா?
   இப்பவும் நான் சொல்றேன், சில பை நபர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.... ஆனால், அந்த சிலரை உதாரணமாக வைத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை நாம் ஒதுக்கவேண்டாம்! என்பதுதான் என் வாதம்.... நம் எல்லோருடைய லட்சியம் குறிக்கோள் எல்லாமே நமது உரிமைகள்தான்.... அந்த உரிமைகளை மீட்க, இத்தகைய வேற்றுமைகள் மறந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்... இதுகாலம் வரை நாம் உள்ளுக்குள் பிரிந்திருந்து உரிமைகளை இழந்தது போதும்.... ஒன்றாக பயனிக்கணும் என்பதுதான் என் விருப்பம்....
   இவை என் கோரிக்கை மட்டுமே... முடிவுகள் உங்கள் கைகளில் மட்டுமே....

   நன்றி தம்பி...

   Delete
 5. Neenga illa naa... India la irukka 99%gays kalyanam pannikitu avanga panguku parents kaava sacrifice nu onna pannitu oru ponnoda vaalkayavum keduthutu dhan irukaanga!! Avangala thappu solla mudiyadhu..... Inga na solradhu..... Kadhal dhan venum nu irukka ethana gays irukaanga!? Romba minimal strength.. Avanga vaalkai paalai vanama dhan irukku... Engirundho varavan bisexual ah irundhaalum avan namma kooda iruppan nu namburaanga!! "Nee yan kooda kadasi varaikum iruppiya" nu ketaave "ennaye sandhega padriya" nu oru boogambame vedikkidhu.... Adhu Seri.... Unmayaana kadhal la vara prachanaigal la oru gay kum pangu undu dhan..... Illa nu sollala.... Gays oda fragile heart and vulnerability ah use pandradhu oru bi dhan.... [Naa inga solradhu ellame family n Society karanamaa pirivu yerpadra kadhala pathi mattum dhan] oruthan adipadaila nallavanaa kettavana nu avanoda orientation moolam solradhu thappu dhan.... Aana... Naa oru gay nu epdi oru gay ku teen age kullaye theriya varudho adhe mari naa oru bisexual Naa epdiyum oru ponna dhan kalyanam pannippen.... Apdi nu teen age kulla theliva irukka oru bisexual oru gay va love pandradhu dhan koduma!! Indha kirukku pudicha gay avana thiruppi love pandradhu adha vida koduma!!! Avan epdi pattavan nu real life la prachana nu varumodhu dhan theriyum!! Easy ah oru bi vera oru ponna kalyanam pannitu poiruvaan .... Aana oru gay!! [Kaalam poora orthanoda dhan vaalanum nu nenakira andha orthana dhan naa solren] Unglukku therinja sila nalla ullangalaana bisexuals exceptions dhan..... Hats off.... Epdi oru gay naa sex seeker nu trade mark irukko adhu mari dhan.... Bisexuals naa epdiyum oru ponna dhan kalyanam pannipaanga nu oorukulla solraanga... naa munnadi sonnapla pasangala thavara vera attraction eh illadha oru gay ve oru ponna kalyanam panni dhan aavanum nu varpurutha padumbodhu.... Oru ponna kalyanam pannika ellaaaa sathiya koorugalum irukka oru bi edhukku oru paiyan kooda irukka poraan!?[marubdiyum naa inga majority ah pathi dhan solren... Exceptions r divine _/\_ ] oru gay 100% nallavanno illa oru bi 100% kettavanno avan dhan ellaa prachanai kum kaaranamno naa sollala.... Oru paiyanaa ponnaa nu varumodhu avan paiyana choose pannala nu dhan solren[again abt majority]
  Wateva!! One man's food is other man's poison.... Neenga evlo dhan sonnaalum... Bisexual aala badhikka patta oovoru gay vum idha yethuka maataan....

  P.S: Onnum periya badhippu laan illa... Kadhalanaa family n society ah nu paakumodhu kadhalana venaam nu sonnadhu dhan andha badhippu! :P indha valiya anubavikkadha endha gay vum irukka mudiyadhu nu nenaikiren....

  ReplyDelete
  Replies
  1. உங்க இத்தகைய மனநிலைக்கு காரணம், தனிப்பட்ட அனுபவம்தான்னு தோணுது... தனிப்பட்ட முறையில் ஒருவனால் பாதிக்கப்பட்ட காரணத்தால், அவன் சார்ந்த சமூகத்தை குறைசொல்வதில் இப்போதும் எனக்கு உடன்பாடில்லை.... என் கடைமையை கட்டுரையாக கொடுத்தாகிவிட்டேன், அது மனங்களின் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பதை காலம் பதில் சொல்லட்டும்.... அதுவரை இந்த கவலை இல்லாம நிம்மதியா இரு தம்பி... உன் வாழ்க்கை சிறக்க எனது வாழ்த்துகள் தம்பி...

   Delete
 6. Hi naan irukan bro i dont care

  ReplyDelete