Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday, 8 April 2015

கார்த்திக் weds சந்தீப் - ஒரு அட்டகாசமான திருமணம்!




2012 செப்டம்பர் மாதம் சந்தீப் ஒரு டேட்டிங் தளத்தில் கார்த்திக்கை சந்தித்தபோது, அவர்களின் உறவு இப்படியோர் இன்பமயமான சூழலை அடையும் என்பதை இருவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்... கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்தீப் 2008ஆம் ஆண்டுதான் அமெரிக்கா சென்றார், கார்த்திக்கோ பிறந்தது வளர்ந்தது என எல்லாமே அமெரிக்காதான் (பூர்விகம் கேரளாவின் பாலக்காடு)... நம்மவர்களுக்கான கே டேட்டிங் தளத்தில்தான் இருவரும் முதலில் அறிமுகமாகினர்... ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அறிமுகமாகி, விருப்பங்களை பகிர்ந்துகொண்டு “சரி, நாம ஒண்ணா வாழலாம்! என்று முடிவெடுத்தது ஒரு வருடத்திற்கு பிறகுதான்... இப்போ இவங்க திருமணம்தான் நம்ம மக்கள் மத்தியில வைரல் ஹிட் டாபிக்...

வெளிநாட்டில் குடியேறும் கே இந்தியர்கள் இப்படி திருமணம் செய்துகொள்வது ஒன்றும் புதிதில்லையே?ன்னு நீங்க நினைத்தால், அங்கதான் ஒரு ட்விஸ்ட் இருக்கு.. ஆம், இவங்க திருமணம் நடந்தது என்னவோ கலிபோர்னியா மாகாணத்தில்தான்... ஆனால், ஒரு இந்து மலையாள முறைப்படியான கே திருமணம் இதுதான் முதல்முறை...
 
                              
இவங்க நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்தேறியது... இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் நான் மேற்சொன்ன வரலாற்று சிறப்புமிக்க திருமணம் சுபமாக நடந்துமுடிந்தது...

சொந்தங்கள் புடைசூழ, அக்னி சாட்சியாக, ஒருவருக்கொருவர் மாலையிட்டு, அட்சதை தூவப்பட்டு, வாத்தியங்கள் முழங்க நடந்த திருமணம் நிச்சயம் நமக்கெல்லாம் மனதிற்குள் முளைவிட்டிருக்கும் கனவுத்திருமணம்... அப்படியோர் திருமணம்தான் கார்த்திக் மற்றும் சந்தீப்பிற்கு நடந்தது... அந்த புகைப்படங்கள்தான் இப்போ இணையத்தில் அதிரிபுதிரி வைரல்...
முதலில் அவங்க குடும்பத்தினர் இவங்க காதலை ஏற்கவில்லை... கடும் போராட்டத்துக்கு பின்புதான் எல்லோருக்கும் பாலீர்ப்பை பற்றி புரியவைத்து, திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்... ஆனால் முதலில் எதிர்த்த அதே குடும்பம்தான், இப்படியோர் பாரம்பரிய முறையிலான திருமண சடங்கை நடைமுறைப்படுத்தியதே...

சிலர், இதற்கு முன்பு அமெரிக்காவில் இதேபோன்ற இந்திய முறைப்படியான திருமணம் நடந்திருப்பதாக சொல்கிறார்கள்... அது நாம் முன்பே பார்த்த ஷனோன், சீமா இருவரது திருமணம்தான்... ஆனால், இரண்டு திருமணங்களுக்கும் அடிப்படையில் இரண்டு மிகப்பெரிய வேறுபாடு இருக்கின்றது... முன்னது தென்னிந்திய முறைப்படி நடந்த கே திருமணம், பின்னது வடஇந்திய முறைப்படி நிகழ்ந்த லெஸ்பியன் திருமணம்.. ஆகையால்  இரண்டுமே சமபால் ஈர்ப்பு இந்தியர்களுக்கான “மைல் கல் திருமணங்கள்தான்...

இன்னொரு கூடுதல் தகவலையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்... ஷனோன், சீமா தம்பதிக்கு கடந்த ஜனவரி 21ஆம் திகதி அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது... ஷனோன்தான் அந்த குழந்தையை ஈன்றெடுத்தவர்... அந்த அழகு குட்டி செல்லத்துக்கு நம் வலைப்பூவின் அத்தனை சித்தப்பா, பெரியப்பா, மாமா, சித்தி, அத்தைகளின் சார்பாகவும் அன்பு முத்தங்களை பரிசாக கொடுத்திடுவோம்...

இப்படி சந்தோஷமான விஷயங்களை பார்த்து, கேட்டு ரசிக்குறப்போ, உங்க உதட்டில் லேசான ஒரு புன்னகை தவழும் பாருங்க, அது நமக்கெல்லாம் அரிதாகவே கிடைக்கின்ற அற்புத இன்ப நிகழ்வுகள்... அதை ரசித்து வாழ்வோம்... மீண்டும் ஒருமுறை கார்த்திக், சந்தீப், ஷனோன், சீமா, குட்டிப்பையன் ஆகியோருக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு கட்டுரையை நிறைவுசெய்கிறேன்... நன்றி...

6 comments:

  1. He is my ex-colleague. I know this guy very well. They both are really courageous to take this decision. Surprisingly lot of his friends accepted him. God bless this couple.

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா பிரபு... அவர்கள் நல்லபடியாக வாழட்டும்!...

      Delete
  2. romba santhosam paa.......... magilchi.........

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீதர்...

      Delete
  3. Congratz to both....... Have a great blast yar.......... I m very happy abt this.... Once more happy married life...........

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்து நிச்சயம் அவங்க வாழ்க்கையை மேன்மையடைய செய்யும் தம்பி...

      Delete