நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய பரிமாணத்தில் உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.. ஒரு வரி வாக்கியத்தை கூட, முழுமையாக வாசித்திட முடியாதிருந்த மனநிலையில் இருந்து, ஒரு பத்தியை உங்கள் முன் எழுதிக்கொண்டிருக்கிறேன்... வார்த்தைகள் நிறைய தடுமாறுகிறது.. கால இடைவெளியால் உண்டான தடுமாற்றமல்ல, இந்த இடைப்பட்ட காலத்தினில் உண்டான மனச்சிதறல்களிலிருந்து எனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தமுடியாத மனநிலையினால்..
பத்து வருடங்களுக்கு முன்பு, நான் எழுதிய கதை கட்டுரைகளில் கொண்டிருந்த கருத்துகளிலேயே, இப்போது நிறைய முரண்பட வைத்திருக்கிறது இந்த இடைப்பட்ட நாட்கள்..
34 வயதான திருமணம் செய்துகொள்ளாத, குடும்பத்தினரிடம் பாலீர்ப்பை வெளிப்படுத்தியும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத, சுற்றமும் சொந்தமும் ஏதேதோ காரணங்களை தாங்களாக கற்பித்துக்கொள்ள, காதலையும் அவன் நலத்திற்காக விட்டு விலகி... எதை சொல்வது? எதை விடுவது?....
இன்றோடு உலகம் அழிந்துவிடப்போவதில்லை... இவர்களுக்கு மத்தியில் போராடி, உரிமையை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்துதான் ஆகணும்.. அதனால், நிறைய பேசுவோம்... இனி வாரம் ஒருநாள் உங்களோடு, உங்கள் விஜய் வெர்ஷன் 2வாக நம் வலைப்பூவில் பேசுகிறேன், நிறைய பகிர்ந்துகொள்கிறேன்...
வருக.. வருக...
ReplyDeleteஉங்கள் கதைகள் நிறையவே miss பன்னினேன் plz இனி continues ஆக எழுதுங்க
ReplyDeleteவருக! வருக!
ReplyDeleteWelcome back!
ReplyDeleteCall me Vicki
ReplyDeleteWelcome back bro
ReplyDeleteWelcome Vijay...
ReplyDelete