Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 19 June 2012

உங்கள் விஜயின் "கள்வனின் காதலன்" - பகுதி 2 ...


எடுத்து பேசினால் மறுமுனையில் மராத்தி மொழியில் ஒருவர் கத்தினார்.... "போலிஸ் ஸ்டேசன் என்ற ஒரு வார்த்தை மட்டும் புரிய  , என்ன விஷயமாக இருக்கும் என்று புரியாமல் "வெயிட் ப்ளீஸ்..... வெயிட் ப்ளீஸ்" என்று மட்டும் கூறியபடி அடுத்த அறையில் உறங்கிக்கொண்டிருந்த குருவை எழுப்பி அலைபேசியில் பேசுமாறு பதற்றத்தில் கூறினான்.... அலைபேசியில் இரண்டு நிமிடங்கள் குரு பெசிமுடிக்கும்வரை பதற்றம் தணியாமல் காத்திருந்தான் அருண்.... பேசிமுடித்த குரு, "வா அருண், நாம உடனே ஸ்டேசன்கு போயிட்டு வந்திடலாம்.... கார்த்தியை கண்டுபிடிச்சிட்டான்கலாம், ஸ்டேசன்ல இருக்கானாம்...உடனே போகணும்" என்று சொல்லி முடிக்கையில் அருண் கிளம்பி வெளியே வந்துவிட்டான்..... இந்த பதற்றத்தில் ராகவன் என்கிற ஒருவன் இருந்ததே மறந்துவிட்டு அருணும் குருவும் ஸ்டேசன் கிளம்பிவிட்டனர்....  செல்லும் வழியெல்லாம் , கார்த்தியை காணும்போது என்ன செய்வது?... எட்டு வருட தன் வருத்தத்தை எப்படி புரியவைப்பது?.. தன் தவறை உணர்ந்து மன்னிப்பை எப்படி கேட்பது? என்ற எண்ணங்களெல்லாம் குழம்ப செய்தது..... இப்படி சிந்தித்தபடி கடந்த நேரத்தில், காவல் நிலையம் வந்துவிட்டது..... கார்த்தியை பார்க்கப்போகிற அவசரத்தில் படியில் கால இடறி விழ இருந்தவனை குரு பிடித்து உள்ளே அழைத்து சென்றான்..... கண்கள் அலைபாய கார்த்தியை தேடிய அருண் , இன்னும் குழம்பினான்..... அங்கு கார்த்தியை காணாததால் இன்னும் குழப்பமும், கோபமும் கொண்டவனாக அருண் அந்த காவல் நிலைய அதிகாரிகளை ஒரு புடி புடித்தான்....அருண் தமிழில் கத்தியது யாருக்கும் புரியாமல் விழிக்க, அங்கிருந்த ஒரு காவலர் மட்டும் தமிழ் புரிந்தவனாக "சார், டென்சன் ஆகாதிங்க...... நீங்க சொன்ன ஆள் இங்க இருக்கார்" என்று அந்த காவலர் கை நீட்டிய இடத்தில் நான்கு பேருக்கு மத்தியில் ஜட்டியுடன் நின்றுகொண்டிருந்தான் கார்த்தி என்று காவல் துறை சொல்லும் நபர..... உடல் முழுக்க அடித்ததர்கான ஆதாரங்கள் சேதாரமாகி  கிடந்தன.... நன்கு உற்று கவனித்த அருண் , கார்த்தியின் தொடையின் தழும்பை பார்த்து அதிர்ந்தான்.... ஆம், அது கார்த்தியேதான் ....ஆனால் கார்த்தி என்று சொல்ல அந்த தழும்பை தவிர வேறு பழைய அடையாளங்கள் இல்லை..... உடல் மெலிந்து, கறுத்து, அத்தனை அழகையும் சிதைத்து காணப்பட்டான்..... அருணை கண்டதும் கூட முகத்தில் எவ்வித முகபாவங்களையும் காண்பிக்கவில்லை...... இதைக்கண்ட அருணுக்கு இன்னும் கோபம் பீறிக்கொண்டு வர அங்கிருந்த காவல் துறையினரை கண்டபடி திட்டத்தொடங்கினான்...
ஒருவாராக குருவும், தமிழ் காவலரும் சமாதானப்படுத்தி அருணை வெளியே கொண்டு சென்றனர்..... கார்த்தியை அழைத்த குரு தாங்கள் வந்த மகிழுந்தை நோக்கி அழைத்து சென்றான்... செல்லும்போது கார்த்தியின் கால்கள் நிற்க கூட வழுஇன்றி  இடறி தடுமாற , தன் கையால் தாங்கிய அருணின் கைகளை விளக்கிவிட்டான் கார்த்தி.... இந்த புறக்கணிப்பு ஒன்றும் அருண் எதிர்பாராதது இல்லை..... பின்னர் குருவின் தோள்களை பிடித்துக்கொண்டு வண்டியில் ஏறினான்..... குரு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அடுத்த நாள் வரை கார்த்தியிடம் எதையும் அருண் பேசவில்லை என்று ஒப்புக்கொண்டான்.... கார்த்தியின் கோபம் தணிந்து, இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் பொறுமையாக பேசிக்கொள்ளலாம் என்கிற குருவின் விளக்கம் அருணுக்கு ஏற்புடையதாகவே இருந்தது..... வீட்டிற்கு சென்றவுடன் தன் அறைக்கு அழைத்து சென்று உன்வதற்கு பிரெட் கொடுத்தான்.... பசியின் வலிமையால் கோபமும், ஏமாற்றமும் அங்கு தோற்றுப்போனதால் அவசர அவசரமாக விழுங்கினான் அதை.....உன்றுவிட்டு நன்றாக உறங்கினான் கார்த்தி..... விசாரணைக்காக தேடப்படும் குற்றவாளி என்று கூறியதால்தான் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி உள்ளனர் என்பதை உணர்ந்தான் அருண்..... தவறுக்கு மேல் தவறு செய்து, ஒவ்வொரு முறையும் அருண் கெட்டவனாக ஆகிக்கொண்டே இருப்பதை உணர்ந்து மிகவும் வருந்தினான் அருண்.... இரவெல்லாம் இதே சிந்தனையில் உறக்கம் வரவில்லை.... அவ்வப்போது குருவின் அறையில் கார்த்தி இருக்கிறானா? என்று சொதித்துகொண்டு வந்து, மீண்டும் உறங்க தொடங்கினான்..... மறுநாள் காலை விடிந்தது.....


அந்த இரவு ஒரு அசாதாரண இரவாகவே கழிந்தது..... மறுநாள் காலை வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிட குரு அதிகாலை நேரமே கிளம்பிவிட்டான்..... கழிந்த இரவின் தூக்கமின்மை காரணமாக எட்டு மணிவரை ஆழ்ந்த உறக்கம் கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தான் அருண்..... நடந்து இந்த எந்த எச்சத்தையும் உணராத ராகவன் வழக்கம்போல காலை கடன்களை முடிக்க கழிவறைக்கு சென்ற நேரம், உள்ளே குளிக்கும் சத்தம் கேட்கவே, குருவாகத்தான் இருக்கும் என்கிற எண்ணத்தில் கதவின் ஓட்டை வழியே பார்த்தான்....

ஒரு வருடமாக காய்ந்து போனவன் , குருவை குளிக்கும் போது பார்க்க ஆவல் மிகுந்து பார்த்தான்..... பார்த்தவன் பதறிப்போய் எழுந்தான்.... பேய் அறைந்ததைப்போல முகமெல்லாம் வியர்த்து அச்சத்தில் ஆடிப்போயிருன்தது.... ஒரு நிமிடம் கூட நிற்காமல் குருவை அறையில் தேடினான், அவனையும் காணவில்லை என்றதும் இன்னும் கலவரமானான்..... ஓடி சென்று அருணை பரபரப்பு குறையாமல் எழுப்பினான்..... இன்னும் தூக்கத்தின் தாக்கம் சற்றும்  குறையாதவனாக கண்களை கசக்கிக்கொண்டு "என்னடா?... காலங்காத்தாலையே உனக்கு என்னடா பிரச்சினை?" என்றான் அருண்..... பதற்றம் சற்றும் குறையாத ராகவன், "மச்சான், கார்த்தியோட ஆவியை பார்த்தேண்டா" என்றான்..... "நைட் அடிச்ச சரக்கு இன்னும் தெளியலையா உனக்கு?... உதை வாங்க போற நீ" என்றவாறு மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு உறங்க முற்பட்டான்.... போர்வையை விளக்கி அருணின் முகத்தைப் கையால் தூக்கியபடி, "டேய், நெசமாத்தான் சொல்றேன்.... பாத்ரூம்ல அவன் ஆவி குளிச்சிட்டு இருக்கு.... ரூம்ல குருவை வேற காணும், அவனுக்கு எதாச்சும் ஆகிருக்குமொன்னு பயமா இருக்கு..... எழுந்திருடா....." என்று ராகவன் கூற, என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்த அருண், சிரித்துக்கொண்டே மீண்டும் உறங்க தொடங்கினான்..... இனி அருணை நம்பினால் உபயோகம் இல்லை என்று உணர்ந்த ராகவன், அருகில் இருந்த சாமி படத்தின் விபூதியை கையில் வைத்தபடி வெளியே வந்தான்...." இந்த விபூதி அந்த ஆவியின் மீது பட்டாலே ஆவி ஓடிடும் னு எத்தனை படத்துல பார்த்திருக்கேன்" என்று நினைத்தபடி குளியல் அறையை நோக்கி சென்றான்..... இவன் செல்வதற்குள் குளித்துமுடித்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான் கார்த்திக்.... இதற்கிடையில் காய்கறி மற்றும் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த குரு, அந்த பொருட்களை சமையலறையில் எடுத்துவைத்துக்கொண்டிருந்தான்...... இந்த சத்தத்தை கேட்ட ராகவன், "இந்த ஆவிக்கு எவ்வளவு திமிரு, குளிச்சிட்டு சமயலறைக்கு போயி சாப்பிடுது போல" என்று நினைத்தபடியே சமயலறைக்கு சென்றான்.... அங்கு திரும்பி நின்ற குருவை ஆவி என்று நினைத்த ராகவன், விபூதியை அள்ளி வீசிட, குரு பயத்தில் அலற , அதை கேட்டு ராகவனும் அலறினான்.... அது குருதான் என்று ராகவன் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் முன், இந்த சத்தம் கேட்டு கார்த்தியும் சமயலறைக்கு வந்துவிட்டான்.... திரும்பி நின்ற ராகவனின் தோளில் கார்த்திக் கைவைக்க, திரும்பி பார்த்த ராகவன் மேலும் அலறி அருகிலிருந்த காய்கறிகளின் மீது விழுந்தான்....

குருவின் முகமெல்லாம் விபூதியாகவும், ராகவன் உடலெல்லாம் காய்கறி நசுங்கியதாலும் அழுக்காகி கிடக்க, இன்னும் அதிர்ச்சி விலகாத ராகவனை பார்த்த கார்த்திக், "என்ன ராகவன் ஆச்சு??... நல்லா இருக்கியா?" என்று கேட்க , பயத்தில் வாய் பேச்சு வராமல் உச்சியை விழுங்கியபடி நிற்க, அந்த நேரம் அருண் வந்துவிட்டான்..... அருணை பார்த்த கார்த்தி, சட்டென குருவின் அறைக்குள் சென்றுவிட்டான்..... குருவையும், ராகவனையும் அந்த கோலத்தில் பார்த்த அருண், "என்னடா இங்க நடக்குது?.... கிச்ச்சன்லையே உங்க கச்சேரிய ஆரமிச்சுட்டிங்களா?..... நான் வந்து டிஸ்டப் பண்ணிட்டேனோ" என்று கண்ணாடிக்க, கோபத்தில் அருகிலிருந்த காய்கறிகளையும் அள்ளி ராகவன் மீது போட்டுவிட்டு குளியலறைக்கு சென்றுவிட்டான்..... "டேய், ஒரு வாரத்துக்குள்ள உன் வழிக்கு கொண்டு வந்துட்டியே .... நீ உண்மையாவே மன்மதன் தான்டா" என்று சிரித்தான் அருண்..... "அப்பா சாமி, நீ இதுவரைக்கும் போட்ட பிட்டுக்கே, ஒரு வருஷம் அவன் என் பக்கமே வரமாட்டான்.... இதுக்கு மேல நீ பிட்டு போட்டா, அவன் என்னைய கொலையே பண்ணிடுவான் சாமி..... ஆளை விடு" என்றபடி எழுந்தான்...... அதன்பிறகே நடந்த நிகழ்வுகளை எல்லாம் அருண் ராகவனிடம்  கூறினான்.... எல்லாவற்றையும் ஆச்சரியம் விலகாமல் கேட்டுக்கொண்டிருந்த ராகவன்,"அடப்பாவி, ஒரு ராத்திரியில இவ்வளவு நடந்திருக்கா?..... இதை அப்பவே சொல்லிருந்தின்னா தக்காளியாச்சும் நசுங்காமல் இருந்திருக்கும் " என்றான்..... "நசுங்குனது தக்காளி மட்டும்தானா?" என்று அருண் கேட்க, முறைத்தபடியே எல்லாவற்றையும் துடைத்துக்கொண்டு கார்த்தியை பார்க்க அறைக்கு சென்றான் ராகவன்....... கார்த்தி அவ்வளவாக பழையபடி பேசவில்லை என்றாலும், ராகவன் கேட்டமைக்கு மட்டும் பதில் சொன்னான்.... ஆனால் எந்த நிலைமையிலும் கார்த்தியின் முகத்தில் எவ்வித உணர்ச்ச்யையும் காட்டாதது ராகவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது..... சில நிமிடங்களுக்கு பிறகு குரு , கார்த்தியின் சோர்வை காரணம் காட்டி கார்த்தி உறங்க வேண்டும் என்று கூறியதால் வெளியே வந்துவிட்டான் ராகவன்.... குரு மருத்துவம் சம்மதமாக படித்தவன்.... உளவியல் படிப்பில் முதுகலை பெற்றவன்.... மும்பையில் மருத்துவ காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு கொடுப்பவன்..... பொதுவாக மருத்துவ விஷயங்கள் எல்லாம் அறிந்தவன்..... இப்போதைக்கு கார்த்திக்கு மன நிம்மதியும், ஓய்வும் தேவை என்பதை உணர்ந்தமயால்தான் இப்போதைக்கு ராகவனை வெளியே அனுப்பியதும், அருணை பழைய விஷயங்களை தான் சொல்லும்வரை கார்த்தியிடம் எதுவும் பேச வேண்டாம் என்றதும் கூட அதனால்தான்....... இரண்டு நாட்களும் அருண் எதுவும் கார்த்தியுடன் பேசவில்லை.....

கார்த்தி அருணை பார்க்கும்போதெல்லாம், விலகி தனியே சென்றுவிடுவதால் அருணும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியாகவே இருந்தான்..... ராகவன் மட்டும் அவ்வப்போது கார்த்தியை சந்தித்து இயல்பாக பேசுவான், ஆனால் அளவாக பதில் சொல்வதை மட்டும் வழக்கமாக கொண்டிருந்தான் கார்த்தி..... குருவும் இரண்டு நாட்களும் அருணை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தான்..... பொறுமை இழந்த அருண், அன்று மதியம் கார்த்திக்கான உணவை தானே அவன் அறைக்கு கொண்டு சென்றான்.... மறுத்த குருவும் கூட அப்போது மறுக்காமல் வழிவிட்டான்.....  உணவை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த அருணை கவனிக்காமல் குருவின் பழைய புகைப்பட ஆல்பங்களை எடுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்..... கதவை திறந்து உள்ளே வருவது குரு என்று நினைத்த கார்த்தி, "என்ன குரு இது, சின்ன புள்ளையில இவ்வளவு கருப்பா இருக்கீங்க" என்று ஒரு புகைப்படத்தை எடுத்து திரும்பி பார்த்து அதிர்ச்சியானான்.....  அருணை பார்த்ததும் அறையை விட்டு வெளியேற முயன்றவனை, தடுத்து அறையில் தாழ்ப்பாளை போட்டுவிட்டான்..... எதுவும் பேசாமல் அறையின் ஒரு மூலையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.....

கண்களில் நீர் பெருக கார்த்தியை பார்த்தான் அருண், எவ்வித முக மாற்றமும் இல்லாமல் அமர்ந்திருந்தான் கார்த்தி.... எவ்வளவோ பேசியபோதும் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல்  இருந்த கார்த்தி மீது அருணுக்கு கோபமும் எரிச்சலும் உண்டானது..... கல்நெஞ்சம் என்று இதுவரை கேள்விப்பட்டதுண்டு, அதை கண்ணால் காணும்போது ஆத்திரம் வருவதை தடுக்க முடியவில்லை அருணுக்கு..... ஆனாலும் கார்த்தியின் இந்த புறக்கணிப்பிற்கு அத்தனை  தகுதியையும் அருணின் செயல்பாடுகள் கொண்டதுதான் என்பதை அருண் மறுக்கவில்லை.... அரை மணிநேர பேச்சுக்களுக்கு பிறகும் கூட கார்த்தியிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாததால், அமர்ந்திருந்த கார்த்தியின் கால்களில் விழுந்து அழத்தொடங்கினான் அருண்.... அருணை பற்றி நன்றாக அறிந்தவன் கார்த்தி, தான் செய்தது தவறே என்றாலும் கூட அதற்காக மன்னிப்பு கேட்க தயங்குபவன்....

.
அப்படிப்பட்டவன் இப்போதைக்கு காலில் விழுவதை கார்த்தியால் தாங்க முடியாதவனாக கண்களில் கண்ணீர் அரும்பியது.... காலில் விழுந்தபடியே அருண், "ப்ளீஸ்டா, என்னோட பேசாமல் மட்டும் இருக்காத..... நான் செஞ்ச தப்பு பெரிய தப்புதான்.... ஆனால் எந்த தவறுமே, மன்னிக்கவே முடியாத அளவுக்கு இருப்பதில்லை..... தவறின் விளைவை பொருத்து , மன்னிப்பின் அளவிற்கான காலமும், அதற்கான விலையும் மாறுபடலாம்...... என்ன செஞ்சா என்னை மன்னிப்பியோ, அதை செய்டா..... அடி, கொல்லு என்ன வேணாலும் பண்ணு, பேசாமல் மட்டும் இருக்காதடா..... நான் செஞ்ச தப்புக்காக எட்டு வருஷமா நான் பட்ட கஷ்டம் மட்டும் போதும்.... தயவு செஞ்சு பேசுடா" என்றவாறே தரையில் முகம் பதித்து மீண்டும் அழத்தொடங்கினான்.....
இதற்கு மேலும் கார்த்தியால் தாங்கிக்கொள்ள முடியாதவனாக கார்த்தி, நாற்காலியிலிருந்து கீழே இறங்கி அருணின் மடியில் முகம் புதைத்து அழுதான்..... "உன்கூட நான் பேசவே கூடாதுன்னு இருந்தேண்டா..... உன்னை பார்க்குறப்போ அழவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன், ஆனால் என்னைய அழ வச்சிட்டியேடா....." என்று அழுத கார்த்திக்கு திடீரென மூச்சு வாங்கி, இளைப்பு உண்டாகி, மூச்சு திணறலால் மூர்ச்சையாகிப்போனான்...... உடனே குருவை அழைத்து உடனடியாக குரு தான் வைத்திருந்த மாத்திரை கொடுத்து உறங்கவைத்துவிட்டு அருணை வெளியே அழைத்து வந்தான்..... வெளியே வந்தபிறகு அருணை அழைத்த குரு, "நான் அப்பவே சொன்னேன்ல, கார்த்தி இன்னும் நார்மல் ஆகல..... சரிவிடு, அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்" என்றதை உணர்ந்த அருண் அதை ஆமோதிப்பதை போல  தலை அசைத்தான்.... கார்த்தி தன்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டான் என்பதில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும், கார்த்தியுடன் இன்னும் நிறைய பேசவேண்டும் என்ற ஏக்கமும், ஆர்வமும் அருணை நிலை கொள்ளவைக்கவில்லை.... அடிக்கடி கார்த்தி விழித்துவிட்டானா ? என்று சிறு குழந்தைபோல எட்டி எட்டி பார்த்துக்கொண்டான்.... குருவும் ராகவனும் அருண் இப்படி சிறு பிள்ளை போல  செய்வதை பார்த்து சிரித்தனர்..... மாலை நேரத்ததில் கார்த்தியின் அருகில் அமர்ந்த அருண், கார்த்தியின் தலைமுடியை கோதிவிட்டு கார்த்தியின் அழகை ரசித்தான்.....அப்போது பார்த்தது போலவே எட்டு வருடங்களுக்கு பிறகும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருந்தது.... ஆனால் முகத்தின் பொலிவும், உற்சாகமும் அடியோடு இல்லாமல் இருந்தது.....  கைகளை எடுத்து தன் கண்களில் ஒட்டிக்கொண்டு அழுதான்..... அப்படியே கார்த்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்..... அதே வாசம், அதே உணர்வு.... எட்டு வருடங்களுக்கு பிறகும் இன்னும் மாறவில்லை..... சில நிமிடங்களுக்கு பிறகு அறையைவிட்டு வெளியே வர எழுந்த அருணை பின்னால் ஒரு குரல் அழைத்தது..... "அருண், இனிமேலாவது போகும்போது சொல்லிட்டு போடா" என்ற குரல் கார்த்தியினுடயதுதான்..... திரும்பி பார்த்தால், கண்கள் ஓரம் நீர் கசிய, முகம் முழுக்க காதல் நிரம்ப அருணை ஏக்கத்தோடு பார்த்தான்..... அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள், எவ்வளவோ கேள்விகள் அடங்கி இருந்தன.... உடனே ஓடி சென்று கார்த்தியின் படுக்கையில் அமர்ந்தவாறு கைகளை பிடித்து, "இனி நான் சாகும்வரை உன்னைய விட்டு பிரிய மாட்டேண்டா.... இறந்தாலும் கூட ஆவியாகவாவது வந்து உன்கூடத்தான் இருப்பேன் "  என்று அழுகை தாண்டியும் சிரித்தான்..... "நீ எப்படிடா இருக்க" என்றான் கார்த்தி...

 "அதான் பார்க்குறியே, இப்போதான் மனுஷனா இருக்கேன்" என்று மீண்டும் சிரித்தான்..... "இப்போ என்னடா பண்ற?"
"நான் போலிஸ் இன்ஸ்பெக்டரா இருக்கேண்டா.... "
"போலிசாவா?.... ரொம்ப சந்தோஷமா இருக்குடா.... போலிசாகனும்னு நினச்ச நான் இப்படி ஆகிட்டேன்.... திருட்டுத்தனமா எல்லாத்தையும் செஞ்ச நீ போலிசா ஆகிட்ட...." என்று கார்த்தி சொல்லி மெலிதாக சிரித்தாலும், இந்த பதில் அருணை உறுத்தியது, அவன் மனதை ஊசிபோல குத்தியது.... அருணின் முகமாற்றத்தை கவனித்த கார்த்தி, "ஐயோ சாரிடா.... நான் விளையாட்டா சொன்னேன், நீ சீரியஸா எடுத்துக்காத..." என்றதும் அந்த கவலையை பொய்யாக மறைத்து, சிரித்த அருண், "இல்லடா, புரியுது எனக்கு.... சரி... நீ.... நீ எப்படி?..." என்று இழுத்ததி புரிந்துகொண்ட கார்த்தி, "புரியுதுடா.... நான் எப்படி இப்படி ஆனேன்னுதானே கேட்குற..... சரி, அது இருக்கட்டும் நான் மும்பைல இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?...." என்றான் கார்த்தி..... ராகவன் வாங்கிய சிடி முதல் காவல் நிலைய புகார்வரைக்கும் எல்லாவற்றையும் விளக்கி கூறினான் அருண்..... "இவ்வளவு  ஆகிருக்கா?.... கடைசில நான் வேண்டாம்னு ஒதுக்கிய அந்த அசிங்கமான படம்தான் மறுபடியும் என்னை உனக்கு அடையாளம் காட்டி இருக்கு பார்த்தியா" என்று சிரித்தான் கார்த்தி...
"சரி, நீ சொல்லு இப்போ.... பெங்களூர் லேந்து இங்க எப்படி வந்த?" என்றான் அருண்....
"பெங்களூர்ல உன் நண்பன் சேர்த்துவிட்ட வீடியோ கடை, இந்த மாதிரி அசிங்கமான படம் எடுக்குற இடம்னு நான் சேர்ந்ததுக்கு அப்புறம்தான் தெரியும்.... அவங்க கொண்டுவந்து கொடுக்குற சிடியை எடிட் பண்ணி காப்பி பண்றதுதான் என் வேலை.... உனக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னுதான் உன்கிட்ட கூட அதை சொல்லல.... ஆனாலும் அதுக்கு பிறகு  நான் போட்ட நாலு லெட்டருக்கும் உன்கிட்ட இருந்து பதில் இல்ல, அப்டிங்குரதாள அந்த வேலைலேந்து விலகலாம்னு முடிவு பண்ணேன்.... இது தெரிஞ்ச உன் நண்பன் வினோத் ,நான் அந்த வேலை பற்றி வெளில சொல்லிடுவேன்னு நினச்சு என்னைய போகக்கூடாதுன்னு மிரட்டினான்..... அப்படி ஒருநாள் நான் குடிச்ச கூல் டிரிங்க்ஸ்ல எனக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து , முதன் முதல்ல என்னை கே பட வாழ்க்கையில அறிமுகப்படுத்தினான்.... அந்த சிடியை வச்சு மிரட்டியே அப்படி பல படம் எடுத்தான்..... அப்படியே டைரக்டர் பட்டேல் சார் மூலமா மும்பைக்கு வினோத்துக்கு தெரியாமல் வந்துட்டேன்....  சாக்கடைனு தெரிஞ்சே அதில விழ ஆரமிச்சுட்டேன்.... நாளாக நாளாக அதுக்கு அடிமையாகிட்டேன்..... இனி வாழ்க்கைல இதுதான் ஒரே வழின்னு நினைச்சுகிட்டு எட்டு வருஷமும் அந்த நரகத்துலையே ஓட்டிட்டேன்......

ஒரு வருஷமா எல்லாத்தையும் விட்டுட்டு, தாராவில இருக்குற ஹோட்டல்ல வேலை பார்த்தேன்..... அப்பவும்கூட பலர் என்னை மறுபடியும் அந்த நரகத்துல தள்ளவே முயற்சி பண்ணாங்க, அதான் வேற எங்கயாச்சும் போயிடலாம்னு ரயில்வே ஸ்டேசன்க்கு போனப்போதான் உங்க போலீஸ்காரங்க என்னைய புடிச்சிட்டாங்க" என்று அவ்வளவு நரக வேதனையையும் கூட , வரி பிசகாமல் எவ்வித வார்த்தை பிசிறும் இல்லாமல் சொன்னான் கார்த்தி...... இவற்றை கேட்ட அருணின் மனம்தான் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டி போல குத்தியது.... கண்கள் கசங்கி பேச வாய் வராமல் தலை கவிழ்ந்து இருந்த அருணின் முகத்தை பார்த்து, "டேய் அழமூஞ்சி, நான் அழுதது போதும், இனியாச்சும் என்னைய சிரிக்க வைடா" என்று கன்னத்தை கிள்ளினான்..... "இனி அழ, சிரிக்கவல்லாம் நேரம் இல்லை" என்றபடியே கார்த்தியின் முகத்தை தூக்கி , தன் இதழோடு கார்த்தியின் இதழை அமிழ்த்தினான்..... ஆரம்பத்தில் இதை தடுக்க முயன்ற கார்த்தி, இப்போது எதுவும் சொல்லமுடியாமல் திக்கற்று இருந்துவிட்டான்.... சரியாக அந்த நேரத்தில் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்கவே , சலித்துக்கொண்டே கதவை திறக்க எழுந்தான் அருண்..... கார்த்திக்கு தான் செய்த தவறு புரிந்தது..... இது எதனால் தவறு என்று இப்போதைக்கு கார்த்திக்கு மட்டுமே புரிந்த விஷயம்.... மேலோட்ட முத்தம் கொடுக்கும்போதே கதவு தட்டப்பட்டுவிட்டதால், கதவை திறக்க எழுந்துவிட்டான் அருண்.... கதவை திறந்தாள், அங்கு நின்றது குரு...... "நீதான் அந்த கரடியா?" என்று முனகிக்கொண்டே எரிச்சலுடன் குருவை பார்த்தான் அருண்.....

அறையைவிட்டு வெளியே வந்த அருணை நன்றாக உற்று பார்த்த குரு, "எதுவும் ஆகிடலையே?" என்றான்..... கோபம் தனியாதவனாக, பல்லை இறுக்கி கடித்துக்கொண்டவாறு, "நீ இருக்குறவரைக்கும் எவனுக்கும் எதுவும் ஆகாது" என்றான் அருண்..... சூழலை புரிந்துகொண்ட குரு, "அருண், இரு.... நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றான்.....
இன்னும் கோபம் தணியாத அருண், "அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்...." என்று முகத்தை திருப்பிக்கொண்டு போனான்  அருண்......
"நான் சொல்லப்போற விஷயம் கார்த்தியை பத்தித்தான்......அப்புறம்தான் இதையும் சொல்லனுமா?" என்றான் குரு....  அதற்கு மேல் எங்கும் நகராமல் அப்படியே நின்று, "சொல்லு.... என்ன விஷயம்?" என்றான் அருண்....

தனியாக கூறவேண்டும் என்று சொல்லி வேறு அறைக்கு அழைத்து சென்றான் குரு, கூடவே வர முயன்ற ராகவனையும் தடுத்துவிட்டான்...... அறைக்குள் சென்ற அருணுக்கு குழப்பம் அதிகமானது.... இவ்வளவு ரகசியமாக கூறவேண்டிய அளவுக்கு என்ன விஷயமாக இருக்கும் என்று......  சற்று மவுனத்திற்கு பிறகு குருவே தொடங்கினான், "அருண், நான் சுற்றி வளச்சு பேச விரும்பல...... கார்த்தி மனசால மட்டும் இல்ல, உடலாளையும் பாதிக்கப்பட்டிருக்கான்....  அவன் உடல் ரொம்ப பலவீனமா இருக்கு.... ஒருசில விஷயங்களை வச்சு பாக்குறப்போ, அவனுக்கு ஏதோ பெரிய பாதிப்பு அவனுக்குள்ள இருக்குனு நினைக்கிறேன்..... உடனடியா அவனை ஹாஸ்பிட்டல்ல செக் பண்ணனும்..." என்றான்...... இடி போல சிரித்த அருண், "அடப்போடா லூசு, இதைத்தான் பெரிய ரகசியமா சொல்றியாக்கும்..... அவனுக்கு என்ன பாதிப்பா இருந்தாலும், அதை சரி பண்ண மருத்துவ வசதியும் நம்ம நாட்ல இருக்கு, அதுக்கு செலவு செய்ய காசும் என்கிட்டே இருக்கு..... நீ கவலைய விடு" என்றான்.....
"உனக்கு நான் சொல்றது இன்னும் புரியலையா?..... ஒருவேளை அது உயிரையே கொல்லுற உயிர்கொல்லி நோயா இருந்தா?" என்றவாறு நிறுத்தினான் குரு..... குரு சொல்ல வருகிற விஷயம் ஓரளவுக்கு புரிந்தவனாக யோசித்தான் அருண்..... முகம் அப்படியே சிறுத்து, பழயபடி குழப்பங்கள் நிறைந்த அருணாக மாறினான்..... அப்படி எதுவும் கார்த்திக்கு இருக்குமோ? என்கிற பயத்தைவிட, அப்படி எதுவும் கார்த்திக்கு ஆகிட கூடாது என்கிற எண்ணம்தான் அதிகம் இருந்தது அருணுக்கு..... கடவுள் நம்பிக்கை இல்லாத அருண், முதன்முறையாக கடவுள் படத்தின் முன் கைகூப்பி வேண்டினான்...... இதை பற்றி கார்த்தியிடம் நேரடியாக கேட்க வேண்டாம் என்று நினைத்த அருண், வேறு சில காரணங்கள் கூறி கார்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரத்த மாதிரிகளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தான்.....  அன்று மாலை அனைத்து பரிசோதனை முடிவுகளையும் மருத்துவரிடம் காட்டி விளக்கம் கேட்க அருணும் குருவும் அமர்ந்திருந்தனர்.... பரிசோதனை செய்து முடித்தவுடன் கார்த்தியின் உடல்நிலையை காரணம் காட்டி ராகவனுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் அருணும் குருவும்.... "பேஷன்ட் கார்த்திக்" என்று நர்ஸ் அழைக்க அருணும் குருவும் உள்ளே சென்றனர்..... இருவரும் உள்ளே செல்லும்போது இரண்டு மருத்துவர்கள் கார்த்தியின் பெயர் எழுதப்பட்ட கோப்புகளை பற்றி மராத்தி மொழியில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.... அவர்களுக்குள்ளே ஏதோ கருத்து வேறுபாடு இருப்பதுபோல தோன்றியது அருணுக்கு..... அந்த மருத்துவர் அறையை சுற்றி முற்றி பார்த்தபோது சுவற்றில் நாக்கை நீட்டிக்கொண்டு கோபமாக நின்ற காளியின் படம் கண்ணில் படவே, அதை பார்த்து வணங்கினான்.... ஒருவாறு ஏதோ முடிவுக்கு வந்தனர் இரண்டு மருத்துவர்களும்..... "யார் கார்த்தி?" என்று மராத்தியில் கேட்டார் மருத்துவர்....

தொடர்ந்து மராத்தி மொழியிலேயே பேசியதால் அருணுக்கு ஒன்றும் புரியவில்லை..... குருவும் விடாமல் சில கேள்விகளை கேட்க, இரண்டு மருத்துவர்களும் கொஞ்சம் சீரியசாகவே பதிலளித்தனர்..... பேசி முடித்து கோப்புகளை குரு வாங்கினான்.... அப்போதுதான் அருண் குருவிடம் ,"என்னடா ஆச்சு?.... என்ன சொல்றாங்க?" என்றான் அருண் பதற்றமாக..... பதிலை கூற தயங்கிய குரு எச்சிலை விழுங்கியபடி, "அது..... அது வந்து....."என்று தயங்கியபோது கண்கள் காலனியத்தை கவனித்த அருனின் மனம் இன்னும் படபடப்பானது...... "டேய் எதா இருந்தாலும் சொல்லுடா.....  கார்த்திக்கு ஒண்ணுமில்லைல?" என்றான் அருண்....
. .கலங்கிய  கண்களை துடைத்துக்கொண்ட குரு, "எல்லாம் போச்சுடா.... கார்த்திக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ்டா..... அதான் அவனுக்கு எயிட்ஸ்'டா....." என்று பொறுக்கமாட்டாமல் இன்னும் அழுதுவிட்டான்..... இதை கேட்ட அருனின் இதயம் இடி இறங்கியதைப்போல சுக்கு நூறாக ஆனது....... அழ கூட மறந்தவனாக ஸ்தம்பித்து நின்றான் அருண்.....அருணை தோள் தாங்க அழைத்து சென்ற குரு நேராக வீட்டிற்கு செல்லாமல் ஒரு அமைதியான  இடத்திற்கு அழைத்து சென்றான்... வாகன ஒலிகளும், மக்கள் நெரிசலும் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த இடத்தில் குரு தொடங்கினான், "அருண், டாக்டர்ஸ் சொல்றதை பார்த்தா கார்த்தி இன்னும் இரண்டு மாசம்தான் உயிரோட இருப்பான்..... இந்த நேரத்துல நீயும் இடிஞ்சு போய் உக்காந்துட்டீன்னா கார்த்திக்கு ஆறுதல் சொல்றது யாருடா....இருக்க போற கொஞ்ச நாளை அவன் நிம்மதியா கழிக்கட்டும்" என்றான்..... .."அவன் நிச்சயமா சாக மாட்டான்டா..... அவனை நான் சாக விடமாட்டேன்" என்றான் அருண்.....
"டாக்டர்ஸ் சொல்லிட்டாங்கல்லடா... அதைத்தானே நாம நம்பனும்" என்றான் குரு.....
"சொன்னது டாக்டர்ஸ் தானே, கடவுள் இல்லையே.....எல்லா தப்பையும் பண்ணின நான் நல்லாத்தானேடா இருக்கேன், ஒரு தப்புமே பண்ணாத அவனுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது..... கார்த்திக்கு மட்டும் எதுவும் ஆச்சுன்னா நம்ம நாட்ல இருக்குற ஒரு கோவில் விடாம எல்லா கோவிலையும் இடிச்சிடுவேன்" என்றான் அருண் கோபமும் அழுகையுமாக.....
"உன் கோபம் புரியுது அருண்..... கடவுள் செய்ற எல்லா செயலுக்கும் ஒரு நியாயம் இருக்கும்..... இன்னும் இரண்டு மாசத்துல இறக்க போறவனை உன் கண்ணுல காட்டினதே கடவுள் செயல்தானேடா?... சரி கடவுள் பத்தி பேச்சைவிடு....கார்த்தியை நல்லா பாத்துக்கோ" என்றான் குரு..... சுயநினைவு வந்தவனைப்போல அருண், "இதை எப்படிடா அவன்கிட்ட நான் சொல்ல முடியும்..... இதை தெரிஞ்சா அவன் மனசொடஞ்சு போய்டுவான்" என்று அழுதான் அருண்...
"கார்த்திக்கு இந்த விஷயம் தெரியும்.... அவன் இதை என்கிட்டே முன்னாடியே சொல்லிட்டான் ..... இருந்தாலும் அதை உறுதி பண்ணத்தான் நான் மறுபடியும் டெஸ்ட் பண்ண சொன்னேன்.... அதுனாலதான் உன்னைய ஆரம்பத்துலேந்து அவன் அவாய்ட் பண்ணதும் கூட.......நாம ஹாஸ்பிட்டல் வரும்போதுகூட உன்கிட்ட இந்த விஷயத்தை பக்குவமா சொல்ல சொல்லித்தான் அனுப்பினான் .....  இந்த விஷயத்தை நீ இத்தோட மறந்துடு ..... அவன்கிட்ட இனி எதுவும் இதைப்பற்றி பேசாத ......" என்றான் .....குருவை கட்டிபிடித்த அருண், கண்கள் இன்னும் ஈரமானதை துடைத்துக்கொண்டான்...."சாரிடா..... உன்னைய நான் இப்போதான் சரியா புரிஞ்சுகிட்டேன்..... நான் இன்னைக்கே கார்த்தியை கூட்டிட்டு சென்னை போகணும்.... நீயும் வரியா?" என்றான் அருண்....
"இல்லடா.... நீங்க போங்க.... நான் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்.... அதுவரைக்கும் கார்த்தி வாழுற ஒவ்வொரு நொடியும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கணும்....." என்றான் குரு.... அருண் இப்போது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்தான்.... ஆனாலும் இப்போதும்கூட கார்த்தியை காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை அருண்...... அன்று மாலையே விமானம் மூலம் அருண் , ராகவன்  மற்றும் கார்த்தி சென்னை அடைந்தனர்......
சென்னையில் இறங்கியவுடன் கார்த்தியின் முகம் இன்னும் பொளிவானது..... இத்தனை வருடங்களுக்கு பிறகு தமிழ் வாசத்தை நுகர்ந்ததாலும், தமிழ் மண்ணை சுவாசித்ததாலும் இன்னும் இன்னும் மன தைரியமானான்..... இவற்றை எல்லாம்விட தன் அருகில் அருண் அமர்ந்திருப்பதால் இன்னும் கூடுதல் பலம் கிடைப்பதைப்போல உணர்ந்தான்.... ஆனால், அருணின் எண்ணமெல்லாம் கார்த்தியின் உடல்நிலையை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது..... வீட்டிற்கு சென்றவுடன் சூழ்நிலை அறிந்து ராகவன் தனி அறைக்கு ஒதுங்கிவிட்டான்..... பயனகளைப்புடன் உடல்நிலையும் சரிவர ஒத்துக்கொள்ளாததால் உடனே படுத்துவிட்டான்....
உறங்கிய கார்த்தியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனின் நிகழ்வுகள் எட்டு வருடங்களுக்கு முன்பு உருண்டோடியது..... காலச்சக்கரம்தான் எவ்வளவு கொடூரமான விளைவுகளை விட்டு செல்கிறது என்று நொந்துகொண்டான் அருண்.... இறைவன் மீது கோபம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது..... ஒருவன் வாழ்வில் இழப்புகளை மட்டுமே சந்தித்திருக்கிற நிலைமையில், இப்போது அவன் உயிரையும் இழக்க விதியை தீர்மானித்தால் அது இறைவன் செயலா? என்று கோபக்கனல்களை கடவுள் மீது கொட்டினான்..... இப்போதைய நிலைமையில் கடவுளின் மீது கோபப்படுவதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும்.... இருந்தாலும் தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் இதுபற்றி கேட்கவேண்டும் என்று நினைக்கும்போது அவன் நினைவுக்கு உடனடியாக வந்தது மருத்துவர்.விஜய் தான் (நாங்களும் கெஸ்ட் ரோல் பன்னுவோம்ல)..... ஏற்கனவே ஒரு வழக்கு சம்மந்தமாக அவரை சந்தித்திருக்கிறான் என்றாலும் கூட, அதற்கு பிறகு அடிக்கடி தொடர்புகொண்டு நல்ல நண்பராக இருந்திருக்கிறார்...... இருபதுகளின் இறுதிதான் வயது இருக்கும்.... படித்ததோ தோல் மற்றும் பால்வினை நோய் பற்றிய படிப்பு என்பதால் இப்போதைக்கு கார்த்தி பற்றி தனிப்பட்ட விதத்தில் கேட்கவும், மருத்துவ ரீதியாக அணுகவும் அருணை விட சரியான சாய்ஸ் வேறு யாரும் இருக்க முடியாது என்பதை தீர்மானமாக நம்பினான்.... அன்று மாலையே கார்த்தியை அழைத்து சென்றான் அருண்..... செல்லும் வழியில் அருணின் தோளில் சாய்ந்துகொண்ட கார்த்தி, "ஏண்டா இப்போ புது டாக்டர்லாம்?.... நான் பார்த்த டாக்டர்லாம் என் இறப்பை பற்றி பேசியே என்னை சாகடிச்சிடுவாங்க போல இருக்கு.... நான் இருக்குற வரைக்குமாவது அந்த நினைப்பு வராமல் இருக்கனும்டா..." என்றான்..... அருணுக்கு அழுகை கண்களை மீறி வரப்பார்த்தாலும் கார்த்தி முன்னால் அழக்கூடாது என்கிற வைராக்கியத்தால், "உன்னை அவ்வளவு சீக்கிரம் நான் விட்ருவனா?..... இன்னும் நூறு வருஷம் உன்னை பாடாபடுத்தி எடுத்த பிறகுதான் மத்ததெல்லாம்.....இப்போ பார்க்கப்போறவன் டாக்டர் மட்டுமில்ல, அவன் என் நண்பன்.....சும்மா ஒப்பீனியன் கேட்கத்தான் போறோம்...." என்று பொய்யாக கார்த்தியை சமாதானப்படுத்தினாலும் உள்ளுக்குள் அருணுக்கு உறுத்தியது..... இத்தனை மருத்துவர்கள் சொன்னதை தாண்டியும் கார்த்தியை காப்பாற்றிவிடலாம் என்று விஜய் சொல்லுவான் என்று நம்புவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறதை உணர்ந்தான் அருண்..... இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் மருத்துவர் அருணின் மருத்துவமனை வந்துவிட்டது..... அலைமோதிய கூட்டத்தை தாண்டியும் அருனுக்காக காத்திருந்த மருத்துவரின் உதவியாளர் நேரடியாக உள்ளே அழைத்து சென்றார்..... உள்ளே மாநிறம், நீட்டான டிரெஸ், வாய் முழுக்க புன்னகை, மெலிதான மூக்கு கண்ணாடி என்று அக்மார்க் மருத்துவராக விஜய்  அமர்ந்திருந்தார்... அருணை பார்த்ததும் எழுந்துநின்று கைகொடுத்துவிட்டு கார்த்தியை பார்த்து, "ஹலோ கார்த்தி, நைஸ் டு மீட் யு..." என்றார்.....

இருவரும் அமர்ந்தபிறகு கார்த்தியின் சோதனை சீட்டுகளையும், கோப்புகளையும் இரண்டு முறை மீண்டும் மீண்டும் படித்தார்.... புருவத்தின் இடையில் கைவைத்தபடி சிறிது யோசித்ததை பார்த்து அருணின் மனம் இன்னும் கலங்கியது... சில நிமிட பார்வைக்கு பிறகு கார்த்தியை பார்த்த விஜய், "கார்த்திக், பக்கத்து ரூம்ல ப்ளட் கொடுத்துட்டு வாங்க..... ஒரு பார்மாளிட்டிதான் எல்லாம்...." என்று உதவியாளருடன் அனுப்பி வைத்தார்.... கார்த்தி வெளியே சென்றதை உறுதி செய்துகொண்ட டாக்டர் விஜய், "மும்பைல சொன்னது சரிதான் அருண்.... இந்த கார்த்தி இன்னும் அதிகபட்சமா உயிரோட இருக்கப்போறது மூன்று மாதம்தான்" என்று கூறிய வார்த்தைகள் அருணின் மனதில் பேரிடியாக இடித்தது..... கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு அருண், "என்ன சொல்றீங்க விஜய்?, எயிட்ஸ் இருக்குறவங்க சிலர் வருஷ கணக்கா உயிரோட இருந்து நான் பார்த்திருக்கேனே?" என்றான்...... "அருண் , இன்னும் ஒன்ன நீங்க சரியா புரிஞ்சுக்கல, எயிட்ஸ் ஒரு தனி நோய் கிடையாது.... ஆனால் பல நோய்களை உருவாக்கும் திறன் வாய்ந்த ஒரு நிலை.....  அதாவது நேரடியா கொலை பண்ணாமல், கூலிப்படை மூலம் கொலை பண்ற மாதிரி, இந்த எயிட்ஸ் நம்ம உடலோட எதிர்ப்பு சக்திகளை முழுசா கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிடும், அந்த எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்குற நேரத்துல பல நோய்களையும் உள்ளே அனுமதித்து உடலை செயலிழக்க வச்சிடும்.... எயிட்ஸ் வர்ற யாரும் எயிட்ஸால சாகுறதிள்ள, அதன் மூலம் வர்ற வேற நோய்களாலத்தான் இறக்குறாங்க.... அப்படி பார்க்குறப்போ கார்த்தியோட உடலில் எதிர்ப்பு சக்திக்கான அணுக்கள் பெரும்பாலும் குறைஞ்சிடுச்சு.....  எந்த நோயும் எளிதா தாக்கக்கூடிய நிலைமையில அவனோட உடம்பு இருக்கு.... அதிகபட்சமா மூன்று மாதத்துக்குள்ள அவன் இறக்கத்தான் அதிக வாய்ப்பிருக்கு..... ஆனாலும் அவன் இறந்திடுவான்னு சொல்ல நான் கடவுள் ஒன்னும் இல்லை...... அவனுக்கான வாழ்க்கையை இன்னும் ஒரு மாதம் அதிகரிக்க சிகிச்சை இருக்கு..... அதை வேணும்னா செய்யலாம்" என்றார் விஜய்..... எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட அருண், "புரியுது விஜய்.... அப்போ அவனை வீட்லயே வச்சு அந்த ட்ரீட்மன்ட் கொடுக்கலாமா?" என்றான்..... "வேண்டாம் அருண்.... இப்போதைக்கு மருத்துவமனைல அவரை சேர்த்துடுங்க, அவர் இங்க இருக்குறதால அவர் மனமும் கொஞ்சம் வலிமையாகும்....தனக்கு சிகிச்சை கிடைக்குதுன்னு நம்புவார்.... அப்புறம் வேற நோய்கள் தாக்காமல் இங்க அவரை நாங்க பார்த்துக்குவோம்.... இவற்றோட உங்க அன்பும் , கவனிப்பும் இருந்துச்சுன்னா மருத்துவத்துறை உங்களுக்கு கொடுத்திருக்கிற மூன்று மாத கெடு நிச்சயம் அவரை பாதிக்காது.....நீங்க சொல்றபடி அவர் ஒரு வருஷம் வாழக்கூட வாய்ப்பு இருக்கு..... ஆனால் அதற்கு மேல யாராலையும் அவரை காப்பாற்ற முடியாது" என்று சொல்லி முடித்தார் டாக்டர் விஜய்.... இதற்கு மேல் விளக்கமாக யாரும் சொல்லிவிட முடியாது அருணுக்கு.... விஜய் சொல்வதை முழுமையாக ஏற்பதாக ஒப்புக்கொண்டான்.... சரியாக அந்த நேரத்தில் கார்த்தி உள்ளே வர, விஜய் பேச்சை மாற்றியபடி, "ஓகே  கார்த்தி..... நீங்க நாளைக்கே இங்க அட்மிட் ஆகணும்..... நான்கு மாத சிகிச்சைக்கு பிறகு, பழைய கார்த்தியா வெளியே போகலாம்" என்ற வார்த்தைகளில் கொஞ்சம் நம்பிக்கையை உணர்ந்தான் கார்த்தி....

இதுவரை பார்த்த மருத்துவர் எல்லோருமே, இறப்பிற்கான நாள் குறிக்கும் மந்திரவாதியாக தெரிந்தனர்.... ஆனால் விஜய் சொன்ன வார்த்தைகள் கடவுள் சொல்வதைப்போல உணர்ந்தான்.... இப்போதே பூரண குணம் அடைந்தவனைப்போல உணர்ந்தான் கார்த்தி..... மருத்துவமனையில் இருந்து கொஞ்சம் மனம் தெளிவோடு வெளியே வந்தனர் அருணும் கார்த்தியும்.....
மருத்துவமனை தந்த மன தைரியமும், தன்னம்பிக்கையும் இருவரையும் கொஞ்சம் நிம்மதி அளித்தது..... வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது அருனின் கைகளை பிடித்த கார்த்தி, "வெளிய எங்கயாச்சும் போகலாமா?" என்றான்.....ஆச்சரியம் விலகாமல் கார்த்தியை பார்த்த அருண், "என்னடா ஆச்சரியமா இருக்கு.... எப்பவும் நான் பலமுறை கட்டாயப்படுத்தினால்தான் ஒருமுறை வரவே ஒத்துக்குவ, இப்ப நீயே கூப்பிடுற?" என்றான்..... "நான் என்ன பழைய கார்த்தின்னு நினைச்சியா?.... மும்பை என்னை எவ்வளவோ மாத்திருச்சு...... சரிவிடு, எங்கயாவது தனிமையான இடத்துக்கு போ" என்றான் கார்த்தி..... சிரித்துக்கொண்டே ஈ.சி.ஆர் சாலையில் வண்டியை செலுத்தினான் அருண்..... மூங்கில் காடு போல இருந்த ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே அழைத்துசென்றான்..... அவ்வளவு மயான அமைதி அந்த இடம்..... சாலையின் வாகன சத்தங்கள் கூட கேட்கவில்லை, மனம் இன்னும் இலகுவானதைப்போல உணர்ந்தான் கார்த்தி.... மது புட்டிகளும், புகையிலை காகிதங்களும், பயன்படுத்திய ஆணுறைகளும் சிதறி கிடந்ததிளிருந்து அங்கு சர்வமும் நடக்கும் என்பதை உணர்ந்தான் கார்த்தி..... சுற்றி முற்றி பார்த்துவிட்டு அருணை பார்த்த கார்த்தி, "இங்க அடிக்கடி வருவியோ?" என்றான்...... கேள்வியின் சூட்சமம் புரியாத அருண், "அடிக்கடி வருவேன்தான்"......
"தனியாவா வருவா...... இங்க இருக்குறதெல்லாம் பார்த்தா, அம்சமான துணையோடத்தான்  வருவன்னு நினைக்குறேன்" என்றவாறு ஒரு ஆணுறையை குச்சியால் எடுத்து காட்டினான்..... பதறிய அருண், "அடப்பாவி, நான் அப்படி நோக்கத்துல வரமாட்டேண்டா..... இதுபோல இடம்தான் கொலையே நடந்தாலும் வெளியில தெரியாத இடங்கள்.... அப்படி எதாச்சும் விசாரணைக்காக வந்திருக்கேன்.... மற்றபடி வேற எந்த நோக்கத்துளையும் வந்ததில்ல" என்றான்..... "சரி விடு..... இப்போ நீ சொல்றத நம்பித்தானே ஆகணும்" என்றவாறு ஒரு இடத்தில் அமர்ந்தான்..... கார்த்தியின் தோளில் சாய்ந்தபடி அமர்ந்தான் அருண்...... இலைகள் இன்னிசை இசைக்க, கடற்காற்று கந்தர்வ மனம் பரப்ப, அருகில் கார்த்தி இருக்க , அருண் சும்மா இருப்பானா?...... சில பேச்சுக்களுக்கு பிறகு மெதுவாக கார்த்தியின் முகத்தை திருப்பி முத்தம் கொடுக்க எத்தனித்தான் அருண்.... பதறிப்போய் அருணை பிடித்தே தள்ளிவிட்டான் கார்த்தி.....கோபம் கொண்டவனைப்போல முகத்தை திருப்பிக்கொண்டவாறு, "ப்ளீஸ் அருண், உனக்கு தெரியாதது ஒண்ணுமில்ல..... என் உடல்நிலை இப்போ இருக்குற நிலமையில இதெல்லாம் வேண்டாம்..... ஒருவேளை டாக்டர் விஜய் சொல்றதுபோல எனக்கு குணமானால் அப்புறம் பார்த்துக்கலாம்...." என்றான்...  "சாரிடா....என்னை மீறி நான் தப்பு பண்ணிட்டேன்.... நீ சொல்றபடியே நடக்குறேன்.... ஆனால், எனக்கு அந்த நோய் வந்துடும்னு பயந்து இல்லை, நீ சொல்ற காரணத்தால்தான்" என்றான்..... அப்படியே கட்டிப்பிடித்துவிட்டான் கார்த்தி, கண்ணீர் பெருக நா தழுதழுக்க, "சாரிடா...... உன்னைய நான் இப்போதான் சரியா புரிஞ்சுகிட்டேன்...... உன்ன ரொம்ப அழவச்சுட்டேண்டா" என்றான்.....

  கொஞ்சம்ன் நிதானத்திற்கு பிறகு கார்த்தியே தொடர்ந்தான், "சரி இனிமேல் பழைய விஷயங்களை நீயும் நானும் பேசவேண்டாம்.....இனி இருக்குற நாட்களை எப்படி வாழ்றதுன்னு யோசிப்போம்" என்றவாறு இருவரும் காலாற மனம் திறந்து பல விஷயங்களையும் பேசினார்கள் ........ வானம் இருட்டும் நேரம் என்பதால் , அந்த இடத்தின் விபரீதம் புரிந்த அருண் கார்த்தியை மீண்டும் அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்..... செல்லும் வழியில் உணவகம் சென்று இருவரும் உணவருந்திவிட்டு வீட்டிற்கு சென்றனர்.....  ராகவன் வீட்டில் தனிமையில் ஏதோ சிந்தித்தபடி உட்கார்ந்திருந்ததை பார்த்தபோதுதான் அருணுக்கு ராகவன் நினைவே வந்தது..... இருவரையும் பார்த்த ராகவன் கோபத்துடன், "என்னங்கடா, இப்போவாச்சும் வீடு நினைவிருக்கா உங்க ரெண்டு பேருக்கும்?... மதியத்துலேந்து உங்க ரெண்டு பேர் செல்லுக்கும் கால் பண்ணி, கால் பண்ணி என் செல் கீ பேடே தேஞ்சு போச்சு..... அதை ஏண்டா அணைச்சு வச்சிங்க?" என்றான்.... "சரி விடுடா..... கொஞ்சம் மறந்துட்டேன்..." என்றவாறே ராகவனை கடந்து உள்ளே சென்றான் அருண்.... "சாரி ராகு..... சாப்டியா?" என்றான் கார்த்தி..... "இதாச்சும் கேட்டியே நீ..... இல்லப்பா இனிமேல்தான்..... நீங்க போயி தூங்குங்க" என்றவாறு வெளியே சென்றான்.... சிரித்தபடியே அறைக்குள் சென்ற கார்த்தி உடைகளை மாற்றிக்கொண்டு உறங்க சென்றான்......
அன்றைய தினம்தான் கொஞ்சம் நிம்மதியான உறக்கம் அருணுக்கு..... அருகில் படுத்திருக்கும் காதலனை அவ்வளவு எளிதாக அடையமுடியவில்லை.... இப்போது அடைந்துவிட்டேன் என்கிற நிம்மதி அடைந்தாலும், அது தற்காலிகம்தான் என்ற பயமும் அவன் மனதில் இல்லாமல் இல்லை..... அப்படி சிந்தித்துகொண்டிருக்கயில்தான் அருணுக்கு பிரகாஸ் நினைவு வந்தது.... கார்த்தியின் இத்தனை கலவரங்களுக்கு மத்தியில் பிரகாசை மறந்தே விட்டதன் நினைவு அப்போதுதான் வந்தது அவனுக்கு.... கார்த்தியை அழைத்து வந்திருப்பதை கண்டால் பிரகாஸ் எப்படி ரியாக்ட் செய்வான் என்று கொஞ்சம் குழம்பித்தான் போனான் அருண்.... 

எப்போதும் ஊகித்ததற்கு நேர்மாறாக நடப்பதுதான் பிரகாசின் செயல் என்றாலும், தன் காதலனுக்கு இன்னொருவன் உரிமை கொண்டாடுவதை அவன் பிஞ்சு மனது ஏற்க முடியுமா என்ன?.... பிரகாஸ் ஒன்றும் ஞானி இல்லையே, எல்லாவற்றையும் துறந்து, எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ள.....  தனக்கு உரிய ஒன்றை, பிறருக்கு தாரை வார்க்க ஞானிகளே கூட சம்மதிக்க மாட்டார்கள்..... நாளை பொழுதில் எப்படியாவது பிரகாஸ் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற முடிவோடு உறங்கினான்..... மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்ததைப்போல உணர்ந்தான் கார்த்தி...
..... நேரம் எட்டு மணியென காட்டியது..... படுக்கையில் படுத்தவாறே நேற்றைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு தனக்குள் சிரித்தான்..... இதெல்லாம் கனவா? நினைவா? என்றே புரியவில்லை..... அருணுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும், தான் எட்டு வருடத்திற்கு முன்னாள் சென்றுவிட்டதாகவே உணர்ந்தான் கார்த்தி..... மும்பை வாழ்க்கை முற்றிலும் மறந்ததைப்போல உணர்ந்தான்..... இப்படி சிந்தித்துகொண்டிருக்கும்போது, அருணும் ராகவனும் ஏதோ சீரியசாக விவாதம் செய்யும் சத்தம் கேட்டது.... மெல்ல எழுந்து அறையின் கதவை திறந்து ஹாலில் பார்த்தான்.... அருண் கையில் ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு, அதை ராகவனிடம் கொடுத்து ஏதோ சொல்ல, ராகவனோ மறுத்தான்..... "என்ன அருண்?... ஆள் கிடைக்கலைன்னு ராகவன்கிட்ட லெட்டர் கொடுக்குரியா?..... இல்ல, யார்கிட்டயாவது  கொடுக்க சொல்றியா?..... இவ்வளவு நாள் ஆகியும் ராகு இந்த தரகர் வேலைய விடலையா?" என்றான் கார்த்தி சிரித்தவாறே...... அருணும் சிரிக்க, ராகவனோ, "நீயா இப்படிலாம் பேசுற?... என்ன பண்றது, எல்லான் என் நேரம்..... இது எங்க ஏசிக்கு கொடுக்கவேண்டிய லெட்டர்" என்றான்.....
"ஓஓஹோ....இப்பலாம் ஏசிக்கே லெட்டர் கொடுக்குற அளவுக்கு நீங்க முன்னேரிட்டிங்களா...?" என்றான் கார்த்தி.....
"எதையுமே இந்த ராகவன் முழுசா சொல்ல மாட்டான்.... இல்ல கார்த்தி, அது லீவ் லெட்டர்.... மெடிக்கல் லீவ் ஒரு பத்துநாள் கேட்ருக்கேன்.... அதான்" என்றான் அருண் குறிக்கிட்டு.....
"இவ்வளவுதானா?..... சரி ஏன் லீவ் உனக்கு இப்போ?" என்றான் கார்த்தி.....
"நல்லா கேளுடா.... ஏற்கனவே இந்த மாதத்துல மட்டும் பத்து நாளைக்கு மேல லீவ் போட்டாச்சு ..... இப்போ இந்த லீவும்  எடுத்துட்டா, கண்டிப்பா இவன் மேல தப்பான அபிப்ராயம் வந்திடும்.... இதை நான் பலதடவை சொல்லியும் கேட்க மாட்டேங்குறான்..." என்றான் ராகவன்.....
"ஏன் அருண், இப்படி லீவ் போடுற.... நீபாட்டுக்கு உன் வேலைய பாரு.... தேவை இல்லாமல் லீவ்லாம் ஏன் போடுற?" என்றான் கார்த்தி....
"உன்னைய ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணனும் இன்னைக்கு.... அதான் லீவ் போட்டேன்" என்றான் அருண்....
"அப்போ நான் ஹாஸ்பிட்டல்ல இருக்குற மொத்த நாளும் நீ லீவ் போட போறியா?.... அதெல்லாம் வேண்டாம், ஒழுங்கா டூட்டிக்கு போ... நேரம் கிடைக்குரப்போ ஹாஸ்பிட்டல் வா....ட்ரீட்மன்ட்  பண்ண போறது டாக்டர்தான், நீ கிடையாது..... அதனால ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..... " என்றான் கார்த்தி..... மறுபேச்சு பேசாமல், "சரி கார்த்தி, இன்னைக்கு மட்டும் லீவ் போட்டு நாளைலேந்து டூட்டி போறேன்" என்றான் அருண்..... இதையெல்லாம் பார்த்த ராகவன், "அடப்பாவி, காலைலேந்து நாய் மாதிரி மூணு மணி நேரமா கத்துறேன், கார்த்தி சொன்னதும் உடனே ஒத்துகிட்டியேடா" என்றான் ராகவன் ஆச்சரியம் விலகாமல்.....
"அது உன் தப்புதான்..... மூணு மணி நேரமா நாய் மாதிரி கத்துனதுக்கு, ஒரு நிமிஷம் மனுஷன் மாதிரி பேசி இருந்தின்னா அவன் அப்பவே புரிஞ்சுருப்பான்" என்றான் கார்த்தி..... "நீங்க நடத்துங்கடா...... சனியனை தூக்கி பனியன் குள்ள போடணும்னு எனக்கு விதி போல..... " என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டு கிளம்பினான் ராகவன்....

அருணும் கார்த்தியும் மருத்துவமனைக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்..... கார்த்திக்கு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துவைத்து சிரத்தையுடன் கிளம்பினான் அருணும்..... அடுத்த இரண்டு மணி நேரத்தில் அருண் கார்த்தியுடன் மருத்துவமனையை அடைந்தான்..... டாக்டர் விஜயின் பரிந்துரயினால் கார்த்திக்கு தனிமையான இடத்தில் , அமைதியான இடத்தில் அறை வழங்கப்பட்டது..... அறை எண் உட்பட அனைத்திலும் கவனத்துடன் இருந்தான் அருண்..... எந்த காரணத்தினாலும்  கார்த்தியின் சிகிச்சை தோல்வி அடையக்கூடாது என்ற எண்ணத்தினால், எல்லா மூடநம்பிக்கையையும் நம்பத்தொடங்கினான் அருண்..... எவ்வித தடங்களும் இன்றி, அருண் மனதில் நினைத்தபடி அறையும் கிடைத்துவிட்டது......

அந்த அறைக்கு சென்றவுடன் ஒரு முருகன்  படத்தை மேசை மீது வைத்தான் அருண் .... "என்னடா பக்தியெல்லாம் முத்திடுச்சு போல...." என்றான் கார்த்தி.... "அதெல்லாம் ஒன்னுமில்லடா..... நம்ம நம்பிக்கையையும் மீறிய பயம் வர்றப்போ, கடவுள் நம்பிக்கை அவசியமா ஆகிடுது..... கொஞ்ச நாளாவே இப்படித்தான்" என்றான் அருண்.....  சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும்போது மருத்துவர் விஜய், உதவி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புடைசூழ வந்தார்.... உள்ளே நுழைந்ததும் அருணுக்கு கைகொடுத்து, பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்பு கார்த்தியை பார்த்த விஜய், "ரூம் ஓகேயா கார்த்தி?" என்றார்..... "இங்க என்ன கல்யாணம் பண்ணி குடித்தனமா டாக்டர் வந்திருக்கேன்..... ?.... ட்ரீட்மன்ட் எடுக்க வந்திருக்கேன், ஆனால் இந்த ரூமை பார்த்தால் ஹாஸ்பிட்டல்ல இருக்குற உணர்வே இல்ல..... உங்க ரசனையோ ரசனை டாக்டர்" என்றான்.... அங்கிருந்த செவிலியர்களிடம் கார்த்திக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் பற்றியும், அவருடைய நோயை பற்றியும் விலக்கிவிட்டு அடுத்த இடத்திற்கு சென்றார்..... அப்படியே பேசிக்கொண்டிருக்கும்போதே, கார்த்தி நன்றாக உறங்கிவிட்டான்..... வெகுநேரம் தூங்கிவிட்டதுபோன்ர உணர்வு.... அறைக்கு வெளியே அருனின் குரல் கேட்டது.... "ச்ச.... இன்னைக்கு ஒருநாள்தான் அருண் இங்க முழுசா இருப்பான்.... நாளை முதல் டூட்டி போய்டுவான்.... இன்னைக்கு கூட அவனோட பேசமுடியாமல், இந்த தூக்கம் கெடுத்துருச்சே" என்று தன்னை நொந்துகொண்டான்.... வெளியே கேட்கும் ஒரு குரல் அருனுடயது, இன்னொரு குரல் புதிதாக இருந்தது.... அது நிச்சயம் ராகவன் இல்லை, புதிதாக பார்ப்பவர் எவரிடத்திலும் இப்படி அருண் பேசமாட்டான்.....  குழப்பத்தில், "அருண்.... அருண்....." என்று அழைத்தான்..... கதவு திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தான் ஒரு இளஞன்.....இது அருண் இல்லையே, அப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த வாலிபன் கார்த்தியின் அருகில் வந்து கையை நீட்டி, " ஹாய் கார்த்தி..... நான்.........." என்று சொல்லி முடிப்பதற்குள் , ஆர்வ மிகுதியில், "நீ பிரகாஸ் தானே?" என்றான்...... ஆம், அது நம்ம பிரகாசேதான்...... கார்த்தி தூங்கியபின்பு  சற்றுநேரம் அமர்ந்திருந்த அருணுக்கு பிரகாஸ் நினைவு வரவே, அவனை பார்க்க சென்றான்..... பத்து நாட்களுக்கு பிறகு அருணை பார்த்த பிரகாசின் முகத்தில் பத்தாயிரம் வால்ட் பிரகாசம்.....  ஓடி வந்து, "நல்லா இருக்கிங்களா அருண்?..... பத்து நாளும், பத்து வருஷம் மாதிரி இருந்துச்சு..... எனக்கு மும்பைலேந்து என்ன வாங்கிட்டு வந்திங்க?" என்றான் சிறு குழந்தைபோல..... "ஒன்னும் வாங்கல பிரகாஸ்" என்றான் அருண் அப்பாவியாக..... "உங்க கூடல்லாம் நான் எப்படி காலம் பூரா காதல் பண்றதுன்னு தெரியல..... ஒரு ரொமான்ஸ் கூட உன்கிட்ட இல்லையே..... சரி, கார்த்தி விஷயம் என்னாச்சு?" என்றான்.....

தயங்கியபடியே நடந்த அத்தனை விஷயங்களையும் கூறி முடித்தான் அருண்..... சற்று மவுனத்திற்கு பிறகு பிரகாஸ், "சரி விடுங்க..... நடந்ததை பற்றியே யோசிக்காதிங்க..... நான் உடனே கார்த்தியை பார்க்கணும்" என்றான்..... திட்டுவான், அழுவான் , , அடிப்பான் என்றெல்லாம் யூகித்த அருணுக்கு இம்முறையும் பலப் கொடுத்தபடி கூறியதை வியப்பு குறையாமல் பார்த்தான் அருண்.... கொஞ்சம் யோசித்த பிறகு, "பிரகாஸ், ஒருவேளை கார்த்தி கியூர் ஆகிட்டா... நாம ரெண்டுபேரும்....?" என்று இழுத்தான்....
"லூசு மாதிரி பேசாதிங்க..... நிச்சயம் கார்த்தி கியூர் ஆகிடுவான்.... ஆனபிறகு நீங்க ரெண்டு பெரும் சந்தோஷமா நல்லா வாழ்வீங்க" என்றான்..... மனதில் வருத்தமும் ஏமாற்றமும் இருந்தாலும், தன் காதலைவிட, தான் காதலுக்காக கொடுத்த விலையைவிட கார்த்தி இழந்தது ஏராளம் என்பதால் இந்த முடிவுக்கு வந்தான் பிரகாஸ்.... இந்த வார்த்தைகள் அருணை வியக்க வைத்தன.... "உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே?" என்றான் அருண்.....
"இதுல நான் வருத்தப்பட என்ன இருக்கு?..... கடவுள் உங்க ரெண்டு போரையும் ஒண்ணா இணைக்க முடிவு பண்ணிட்டார்னா, நான் என்ன பண்ண முடியும்.... மற்ற விஷயத்தை போட்டு குழப்பிக்காமல் இப்போ கார்த்தி பற்றி மட்டும் பேசலாம்....  கார்த்தி இப்போ கியோர் ஆகணும்... அதுதான் இப்போ முக்கியம்....மற்ற விஷயங்களை அது அது நடக்குறப்போ பார்த்துக்கலாம்" என்று பேசியது அருணை இன்னும் மனம் இலக வைத்தது..... கட்டிப்பிடிக்க வேண்டும் போல இருந்தாலும், மனம் மறுத்ததனால் அமைதியாக நின்றான் அருண்..... சுற்றும் முற்றும் பார்த்த பிரகாஸ் அருணை கட்டிப்பிடித்தவாறு, "உங்களுக்கே எப்பவாச்சும் ஒருதடவைதான் இந்த மாதிரி தோணுது... அப்படி தோணும்போது கட்டி பிடிங்களே..... நீங்க கட்டிப்பிடிக்கிரதாள நான் ஒன்னும் கர்ப்பம் ஆகிட மாட்டேன்" என்று சிரித்தான்..... அதன் பிறகே கார்த்தியை பார்க்க பிரகாசை அழைத்து சென்றான் அருண்..... பிரகாசும், கார்த்தியும் முதன் முறையாக சந்தித்ததைப்போல அல்லாமல் மிக இயல்பாக பேசிக்கொண்டதை அருண் ரசித்துக்கொண்டிருந்தான்..... அப்போது சரியாக அங்கு வந்த ராகவன், அருண் அவர்கள் இருவர் பேசுவதையும் ரசிப்பதை பார்த்துவிட்டு அருண் அருகில் சென்றவாறு ,"என்னடா நடக்குது இங்க?...... இப்படியே போனால் நீ காதலித்த பசங்க எல்லாரையும் ஒண்ணா வச்சு ஒரு ஸ்கூல் ஆரமிச்ச்சடலாம் போல...... ஒரு பையன்கிட்ட சாதாரணமா பேசுனதுக்கே, அந்த குரு எண் கூட ஒரு வருஷமா பேச மாட்றான்.... ஆனால், நீ....... எப்படிடா?" என்று சிரித்தான்..... அருணும் சிரிக்க, அதை கண்ட பிரகாசும் கார்த்தியும் ராகவனை அடிக்க கை ஓங்கினர்....... இரவு வெகுநேரம் ஆனதால் பிரகாசை அவன் விடுதியில் விட்டுவிட்டு ராகவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்..... இரவு கார்த்தியுடன் அருண் மருத்துவமனை அறையிலேயே தங்கிவிட்டான்..... நள்ளிரவு தாண்டியும் இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர் .... கட்டாயத்தின் பேரில் இருவரும் உறங்க சென்றனர்.....

தூங்கி எழுந்து பணிக்கு செல்வதற்காக கிளம்பினான் அருண்..... முதல் நாள் மருத்துவமனைக்கு வரும்போதே தன் சீருடை உட்பட முக்கியமான பொருட்களை  கொண்டுவந்துவிட்டதால், மருத்துவமனை அறையிலேயே குளித்துவிட்டு பணிக்கு கிளம்பினான்.....



 கிளம்பி செல்லும்வரை உறக்கத்திலிருந்து விழிக்காத கார்த்தியின்  அருகில் வந்த அருண், நெற்றியில் முத்தமிட்டவாறு "கார்த்தி, நான் கிளம்புறேன்.... சாயந்திரம் வரேண்டா" என்றான்.... கண்களை கசக்கிக்கொண்டு விழித்த கார்த்தி, "சரிடா.... போயிட்டு வா" என்று சிரித்தான்..... அருண் அறைக்கு வெளியே செல்லும்வரை அவனையே வைத்த கண் விலகாமல் பார்த்தான் கார்த்தி..... அருனின் உருவம் கண்ணிலிருந்து மறைந்த உடனே, தன் மனதில் ஒருவித வெறுமையும், பதற்றமும், பாதுகாப்பின்மையும் உணர்ந்தான் கார்த்தி...... அந்த உணர்வுக்கு பெயர் தெரியவில்லை..... மீண்டும் உறங்க எவ்வளவோ முயன்றும் தூங்க முடியவில்லை..... மருத்துவமனை செவிலியர் ஒருவர் வந்து அன்று கார்த்தி சாப்பிட வேண்டிய மாத்திரைகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.... படுக்கையில் எழுந்து அமர்ந்தான்..... அருண் மாட்டிய முருகன் படம் கண்ணில் பட்டது..... தனக்குள்ளே சிரித்துக்கொண்டான், எவ்வளவோ முறை தான் கடவுளை வணங்கும்போதேல்லாம் பகுத்தறிவாளி போல பேசுவான்.... அவனே இப்போ இவ்வளவு பக்திமானாக ஆகிவிட்டதை எண்ணி சிரித்தவாறு, எழுந்து சென்று கண்ணாடியை பார்த்தான்..... ஆளுயர கண்ணாடி அது..... இந்த எட்டு வருடங்களில் கார்த்தி அதிகம் பேசியது கண்ணாடி முன்னால் மட்டும்தான்..... எவ்வளவோ அழுகைகள், எவ்வளவோ ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள் என்று அத்தனையையும் உள்வாங்கிக்கொண்டது இப்படிப்பட்ட கண்ணாடிகள் மட்டுமே..... இப்போதும் அந்த கண்ணாடி முன் நின்ற கார்த்தி, தன் முகம் ஒட்டிப்போனதையும், கண்கள் ஒளியின்றி போனதையும், உடல் பொலிவின்றி, தோள்கள் சுருங்கி... அப்பப்பா..... கண்ணாடி பிம்பத்தில் இருப்பது தான்தானா என்று நினைக்கும் அளவிற்கு நோய் வாட்டி எடுத்திருந்ததை உணர்ந்தான்..... எட்டு வருடங்களுக்கு பிறகு அருணை இந்த கோலத்திலா காணவேண்டும்.... எவ்வளவோ எதிர்பார்ப்போடும், ஏக்கத்தோடும் இருந்திருக்கும் அருணுக்கு ஒரு முத்தம் கொடுக்க கூட முடியாதவனாகிவிட்டேனே என்று நொந்துகொண்டான்..... எல்லாம் நினைத்துக்கொண்டிருக்கையில் அவனை அறியாமல் கண்களின் நீர் கால்களில் கொட்டிக்கொண்டிருந்தது..... சிறிது நேர புலம்பலுக்கு பிறகு, கண்களை அருகில் இருந்த துண்டை எடுத்து துடைத்துக்கொண்டான்..... அப்போதுதான் அது அருண் குளித்து துவட்டிய துண்டு என்பதை கவனித்தான் கார்த்தி..... எட்டு வருடங்களுக்கு முன்னால்  இருந்த அதே அருனின் வாசம்..... முகத்தில் தேய்த்தவாறே அமர்ந்தான்..... பழைய நினைவுகள் நினைவில் ஓடின.......
வெகுநேரம் அந்த பசுமையான நிகழ்வுகளில் மூழ்கியவன், சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினான்..... அறைக்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் தெரிந்ததால் கதவினை தாழிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.... இப்போதெல்லாம் புதிய மனிதர்களை சந்திப்பதை கார்த்தி விரும்புவதில்லை..... ஏனோ ஒருவித பயம் அவர்கள் மீது.... அடுத்தவர்கள் தன்னையே பார்ப்பது போலவும், தன்னை பற்றி பேசுவது போலவும் எண்ணங்கள் கார்த்தியின் மனதில் எழுவதால்தான் இந்த குழப்பம் அவனுக்கு..... இதற்கெல்லாம் காரணம், கார்த்தியின் கடந்த கால கசப்பான அனுபவங்கள்தான்.... மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதால் உண்டாகும் உணர்வு இது என்று அவனுக்கு புரியவில்லை.... அருண் அருகில் இருக்கும்போது மட்டும் அந்த குழப்பம் எழாத அளவுக்கு மன தைரியத்தையும், வலிமையையும் அருணின் இருப்பு கொடுக்கிறது... அவன் இல்லாத நேரங்களில் இப்படித்தான் மனநோயாளியாக ஆகிவிடுகிறான்.... தொலைக்காட்சியை ஆன் செய்தவன், கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டு நொடிக்கு நான்கு சேனல்கள் மாற்றினான்.... விரல்கள் ரிமோட்டை அழுத்தியது, கண்கள் தொலைக்காட்சியை பார்த்தது என்றாலும் கார்த்தியின் எண்ணங்கள் அங்கு இல்லை.... அலைபாய்ந்த எண்ணங்கள் அருணை சுற்றியே சுழன்றது... அந்த நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.... யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் கதவை திறந்தான் .... அங்கு நின்றது பிரகாஸ்.... நேற்றுதான் பிரகாசை கார்த்தி பார்த்திருந்தாலும், இருவரும் வருடக்கணக்கில் பழகியதை போன்ற உணர்வு கார்த்திக்கு இருந்தது... இப்போது பிரகாசை பார்த்ததும் மனநிறைவோடும் , முகமலர்ச்சியோடும் பிரகாசை உள்ளே அழைத்தான்... உள்ளே வந்த பிரகாஸ் சுற்றும் முற்றும் பார்த்தபடி, "அந்த உம்மனாம் மூஞ்சி போயிடுச்சா?" என்றான்.... புருவத்தை உயர்த்திய கார்த்தி, "யாரடா சொல்ற?" என்றான்.....
"அதான் சட்டைக்கு போடுற கஞ்சிய வாயில  ஊத்துன மாதிரி வெரப்பாவே திரியுமே அந்த போலிஸ்.... அதத்தான் நான் கேட்குறேன்" என்று சிரித்தான் பிரகாஸ்...
"இத மட்டும் அருண் கேட்டான்னா நீ அவ்வளவுதான்.... சரி நீ காலேஜ் போகலையா?" என்றான் கார்த்தி.....
"அதான் வருஷம் முழுசும் போய்கிட்டு இருக்கேனே.... ரொம்ப போர்.... இப்போ ஸ்டடி லீவ்.... இன்னும் ஒரு மாசம் லீவ் தான்..." என்று விளக்கினான் பிரகாஸ்....
"அப்போ நீ படிக்கலையா?" என்றான் கார்த்தி....



"இப்போ படிச்சால்லாம் மண்டையில ஏறாது.... எக்ஸாம்'கு முந்தின நாள் நைட் படிச்சாதான் பாஸ் பண்ண முடியும்.... அதை அப்புறமா பார்த்துக்கலாம்" என்று சிரித்தபடி  அறையை சுற்றிப்பார்த்தவாறே பல விஷயங்களையும் பேசினான் பிரகாஸ்.......  சிறிது நேரம் கழித்து அருணை பிரகாஸ் சந்தித்தது பற்றி கார்த்தி கேட்க, ஆரம்பத்திலிருந்து இப்போ வரையான எல்லா நிகழ்வுகளையும் அன்று முழுவதும் பேசிக்கொண்டே இருந்தான்.... அத்தனை விஷயங்களை கேட்ட பிறகும் பிரகாஸ் மீது கார்த்திக்'கிற்கு  சிறிதும் கோபம் வரவில்லை.... இன்னும் பிரகாஸ் மீதான அன்பு அதிகமானது.... பிரகாஸ் பேசும்போது எதிர் இருப்பவர்களின் கண்களை பார்த்து பேசுவான்....  கண்களுக்குள் ஊடுருவி அடுத்தவர்கள் மனதை அறிவதில் வல்லவன்... அதற்கு ஏற்றார் போல அவன் பேச்சை வகுத்துக்கொள்வான் .... அப்படி இப்போது கார்த்தியையும் தன் நண்பனாக எளிதில் ஆக்கிவிட்டான் பிரகாஸ்.... இருவரும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.... மணியை பார்த்த பிரகாஸ் பதறியபடி எழுந்தான்.... மணி ஐந்தை தொட்டுவிட்டது, அருண் பணி முடிந்து வரும் நேரம் என்பதால்  அவசர அவசரமாக கிளம்பி கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு அறையின் கதவை திறந்தான்.... பிரகாஸ் கதவை திறப்பதற்கும், அங்கு அருண் வருவதற்கும் சரியாக இருந்தது.... அருணை பார்த்த பிரகாஸ் நாக்கை கடித்தபடி தலையில் கைவைத்தான்.... அதனை கண்டு சிரித்த அருண், பிரகாசை அறைக்குள் அழைத்தான்.... "என்னடா இன்னைக்கு காலேஜ் போகலையா?" என்றான் அருண்....
"ஸ்டடி லீவ் ஒரு மாசம்...." என்றான் பிரகாஸ் தலையை குனிந்தபடி...
"சரி....நீ போயி படி" என்றான் அருண்.... "அதுக்குத்தான் போறோம்" என்று முணுமுணுத்தான் பிரகாஸ்.... "சரி நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு கிளம்பினான் பிரகாஸ்....
பிரகாஸ் சென்றவுடன்தான் அங்கிருந்த கார்த்தியை கவனித்தான் அருண்.... அருணையே கார்த்தி வைத்த கண் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தான்... முதன் முதலாக வெட்கப்பட்டு சிரித்த அருண், "என்னடா பாக்குற?" என்றான்.....
"இந்த போலிஸ் டிரெஸ்ல ரொம்ப அழகா இருக்கடா..... என் கண்ணே பட்டிடும்  போல.... அவ்வளவு ஸ்மார்ட்டா இருக்க... " என்றான் கார்த்தி.... இன்னும் வெட்கத்தில் முகம் சிவந்த அருண், "டேய் சும்மா இருடா" என்றபடி அங்கிருந்த துண்டை எடுத்துக்கொண்டு குளிப்பதற்கு குளியலறை சென்றுவிட்டான் ..... அருணின் வெட்கத்தை அணு அணுவாக ரசித்தான் கார்த்தி.... குளியல் அறைக்குள் இருந்த கண்ணாடியில் தன்னையே பார்த்து ரசித்தான் அருண்.... "அவ்வளவு அழகாவாடா இருக்க நீ?.... இல்ல இல்ல.... கார்த்தியை கம்பேர் பண்ணினா, ரொம்ப கம்மிதான்.... இப்போலாம் முன்ன மாதிரி சிடுமூஞ்சியா இருக்கிறதில்ல, அதனால கொஞ்சம் அழகா தெரியுறேன் போல....." என்று மனதிற்குள் பேசியபடி குளிக்க தொடங்கினான் அருண்....

குளித்துமுடித்து ஆடைகளை மாற்றிக்கொண்டவன் ஏதோ நினைவு வந்தவனைப்போல, "சரி நீ சாப்டியா?" என்றான்.... அப்போதுதான் கார்த்திக்கிற்கே தான் சாப்பிட மறந்ததை உணர்ந்தான் .... உடனே வெளியே சென்று பார்த்தால் அங்கு கார்த்திக்கிர்காக மருத்துவமனையிலிருந்து கொடுக்கப்பட்ட உணவு இருந்தது.... இதை கண்ட அருண், "அடபாவி நீ இன்னும் சாப்பிடலையா?.... சரி அதை இனி சாப்பிடாத... அது ஆறி போயிருக்கும்....நான் போயி வாங்கிட்டு வந்திடுறேன்.... அந்த பிரகாசுக்குத்தான் பேச்சு மட்டும் இருந்தா போதும், சாப்பாடு தூக்கம் எதுவுமே வேணாம்... நீ ட்ரீட்மென்ட் எடுக்குரப்போ நேரத்துக்கு சாப்பிடனும்னு உனக்கு தெரியாதா?" என்று செல்லமாக கோபித்துக்கொண்டான் அருண்...... "உனக்கு அவன் சரியாத்தான் பேர் வச்சிருக்கான்.... உம்மணாமூஞ்சி ... உம்மணாமூஞ்சி..." என்று முணுமுணுத்தான் கார்த்தி...... கார்த்திக்கிற்கு உணவு வாங்கிக்கொண்டு வந்த பிறகு இருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டனர்.... பிரகாஸ் பற்றி நிறைய கேட்டான் கார்த்தி.... பிரகாஸ் கார்த்தியின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தான் அருண்... பிரகாஸ் பேசியதையே சொல்லி சொல்லி சிரித்தான் கார்த்தி.... இன்னும் கொஞ்ச நாளைக்கு பிரகாஸ் கார்த்தியுடன் இருந்தால் மனம் ஆறுதல் அடைவான் , பழைய நினைவுகளை மறப்பான் என்று நினைத்து பிரகாசை தினமும் கார்த்தியை சந்திக்கும்படி கூறினான்.....  அன்று முதல் பிரகாஸ் தினமும் பகலில் வருபவன், மாலை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.... மாதம் ஒன்றானது.... அப்படி ஒருநாள் மாலை நேரத்தில் கிளம்பிய பிரகாசை அன்று தான் கொண்டு சென்று விடுதியில் விடுவதாக கூறினான் அருண்.... அதனால் அருண், பிரகாஸ், கார்த்தி மூவரும் வெகுநேரம் அங்கு பேசிக்கொண்டு இருந்தனர்....

கார்த்தியின்  அருகில் அருண் அமர்ந்தவாறு பிரகாசின் வால் தனங்களை கார்த்தி ரசிப்பதை கண்டு மகிழ்ந்தான்.... அப்போது கார்த்தி அருனின் கைகளை பிடித்தான்.... கரங்களை தொட்டுப்பார்த்த கார்த்தி, "என்ன அருண், உன் கை இவ்வளவு இறுகி போய்டுச்சு.... அப்போலாம் நீ தோட்டா பூவால வருடுறது மாதிரி இருக்கும்... இப்போலாம் ரொம்ப இறுக்கமா இருக்கு" என்றான்.... அதை கண்ட பிரகாஸ், "ஆமாமா இப்போலாம் அருண் கைக்கு ரொம்பவே வேலை கொடுக்குறார் போல ..... சித்திரமும் கைபழக்கம்  தானே" என்று கூறிவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்  பிரகாஸ்.... இதன் உள் அர்த்தத்தை உணர்ந்த கார்த்தி வெடித்து சிரித்தான்.....அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து செல்லமாக பிரகாசை அடிக்க கை ஓங்கினான் அருண் .....

பொய்யாக பதறிய பிரகாஸ், "ஐயோ நான் தப்பான நோக்கத்துல சொல்லல..... பல குற்றவாளிகளையும் பிடிச்சு அடிக்கிரீங்கள்ள, அதைத்தான் சொன்னேன்..... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா , உங்க மனசுக்குள்ள ஏதோ தப்பு இருக்குன்னு அர்த்தம்" என்று சளைக்காமல் கூறினா பிரகாஸ்...."அப்பா சாமி, உன்கிட்ட பேசி நான் ஜெய்க்க முடியாது... ஆள விடு... நாளைக்கு இதே மாதிரி ராகவனை பற்றி சொல்லு, மொத்தமா ராகவன் கதை முடிஞ்சிடும் " என்றான் அருண்..... சிரித்து சிரித்து கண்களில் வலிந்த நீரை துடைத்தபடி கார்த்தி, "சரி ராகவன் எங்க?... ஆளையே காணும்?" என்றான்.... "இன்னைக்கு மும்பைலேந்து குரு வர்றான்.... அவனை ரிசீவ் பண்ண போயிருக்கான்" என்றான் அருண்.....
சிரித்த பிரகாஸ், "அப்போ இன்னும் கொஞ்ச நாளைக்கு ராகவன் அண்ணன்தான் நம்ம அடிமை.... ஆமா, குருதான் ராகவனோட பேச மாட்டார்ல, அப்புறம் ஏன் குருவை கூட்டிட்டு வர ராகவன் அண்ணன் போறார்?" என்றான்....
"அவனுக சண்டையே காமடியாத்தான் இருக்கும்.... ரெண்டு பேருக்கும் பேச ஆசைதான்.... ஆனால் யார் ஆரமிக்கிறது அப்டினுதான் ஈகோ ப்ராப்ளம்.... ராகவனும்  குருவை எப்படியாச்சும் இம்ப்ரஸ் பண்ண தலையால தண்ணி குடிக்கிறான்.... இப்போ குருவை ரிசீவ் பண்ண கிளம்பின என்னை தடுத்து அவன் போயிருக்கான்.... ஆனால், இங்க வர்ற வரை ஒருவார்த்தைகூட ரெண்டு பேரும் பேசிக்க மாட்டானுக...." என்று சிரித்தான் அருண்.....
"அவங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?" என்றான் பிரகாஸ்.....
"அவனோட பில்டப்தான் பிரச்சினை..... ஒரு பையனை பார்த்து ராகவன் சிரிச்சான்னா, அடுத்த நாள் வந்து எங்ககிட்ட அந்த பையனை மேட்டர் பண்ணிட்டேன்னு சொல்லுவான் ... நாங்கல்லாம் அவன் சொல்றதை நம்புவோம்..... ஆனால் குரு வந்ததுக்கப்புறமும் அந்த பில்டப்பை அவன் நிறுத்தல.....  எங்க நண்பர்கள்கிட்ட சொன்னதை எவனாச்சும் குருகிட்ட போட்டு கொடுத்திடுவாணுக.....  குரு, ரொம்ப சீரியசான ஆளு..... ராகவன் ரொம்ப கரக்டா இருக்கணும்னு நினைக்குறவன் ..... ஆரம்பத்துல சொல்லி சொல்லி பார்த்து ஒரு கட்டத்துல திட்டிட்டு மும்பை போய்ட்டான் குரு.... ஒரு வருஷமா எந்த காண்டாக்டும் இல்ல.... அப்பப்போ நான் குருகிட்ட பேசுவேன்...." என்று சொல்லி பெருமூச்சு விட்டான் அருண்.....
"ச்ச.... பாவம் ராகவன் அண்ணன்..... அந்த மங்கூஸ் மண்டைக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கா?" என்று தலையில் கைவைத்தான் பிரகாஸ்......  இப்படி பேசிக்கொண்டிருந்ததில் பிரகாஸ் தாமதமானதை உணர்ந்தான்.....

 பின்னர் அருண் பிரகாசை தன் பைக்கில் கொண்டுசென்று பிரகாசின் விடுதியில் விட்டான்.... செல்லும் வழியில் ஒரு பேலன்ஸ்'காக கூட அருண் மீது கைபடாமல் சென்றான் பிரகாஸ்...... இறக்கிவிட்டு கிளம்பும் முன் பிரகாசை பார்த்த அருண், "ரொம்ப தேங்க்ஸ் டா"என்றான்.... புரியாததுபோல புருவத்தை உயர்த்தி, "எதுக்கு?" என்றான் பிரகாஸ்...... "எல்லாத்துக்கும்தான்" என்றான் அருண்..... "கார்த்தி விஷயத்தை பற்றி சொன்னிங்கன்னா, அதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், இந்த விஷயத்தை நீங்க என்கிட்டே சொல்லி இருக்கணும்னு அவசியம் இல்லை... இருந்தாலும் உங்க மூலமா கார்த்தி மாதிரி ஒரு நல்ல நண்பன் கிடைச்சதுக்கு நான்தான் நன்றி சொல்லணும்" என்றான் பிரகாஸ்..... சிரித்தவாறே வெறும் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு கிளம்பினான் அருண்..... மீண்டும் செல்லும் வழியெல்லாம் பிரகாசின் ஒவ்வொரு செயலும்  அருனின் மனக்கண் முன் நிழலாடியது...... நினைவுகள் மட்டும்தான் எப்போதும் பசுமையானவை என்ற உண்மையை புரிந்துகொண்டான் அருண்...... வழக்கம்போல அடுத்தநாளும் பணிக்கு சென்றான் அருண்.....
மறுநாள் காலை வழக்கம்போல பிரகாஸ் மருத்துவமனை வந்தான்.... கார்த்தியின் அறையில் இதுவரை பார்த்திராத ஒரு புது நபர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த பிரகாஸ், நேராக அவர் முன் சென்று, "ஹாய் நான் பிரகாஷ்.... நல்லா இருக்கிங்களா குரு?" என்றான்.... ஆம், அது நம்ம குருதான்..... முந்தையநாள் இரவு சென்னை வந்தவன், காலையிலேயே கார்த்தியை பார்க்க மருத்துவமனை வந்துவிட்டான்..... பிரகாஸ் இப்படி பேசியதை கண் சிமிட்டாமல் ஆச்சரியத்துடன் பார்த்த குரு, "எப்படி? எப்படி நீ என்னை குருன்னு கண்டு பிடிச்ச?" என்றான்..... "இதுகூட கண்டுபிடிக்க முடியலைனா அப்புறம் எப்படி என்னால உங்க ராகவனை எல்லாம் சமாளிக்க முடியும்" என்றான்..... இதை கேட்ட குருவின் முகம் வாடியதை பார்த்த பிரகாஸ், சூழ்நிலையை உணர்ந்து "விடுங்க குரு...... நீங்க எப்டி இருக்கீங்க?" என்றான்..... "நல்லா இருக்கேன் பிரகாஸ்..... அருண் உன்னை பற்றி நிறைய சொல்லிருக்கான்.....  இப்போகூட கார்த்தி உன்ன பற்றித்தான் சொன்னான்... கரெக்டா நீ வந்துட்ட" என்றான் குரு.....
"அச்சச்சோ.... ரெண்டு பேரும் என்னயப்பத்தி தப்பா எதுவும் சொல்லலையே?" என்றான் குறும்பு சிரிப்புடன் பிரகாஸ்..... கார்த்தியும், குருவும் சிரிக்க வழக்கமான தன் பேச்சை தொடங்கினான் பிரகாஸ்..... பேச்சை சரியாக தான் பேச நினைத்த ராகவன் விஷயத்தில் கொண்டுபோய் நிறுத்தினான் பிரகாஸ்..... "ராகவன் அண்ணனோட எப்பதான் பேச போறீங்க குரு?" என்றான் பிரகாஸ்.... சிறிது அமைதிக்கு பிறகு, "பார்க்கலாம், அதற்கான நேரம் வரும்போது பேசலாம்" என்றான் குரு..... "ஏன் அந்த நேரத்தை நீங்களே அமைச்சுக்கள?" என்றான் பிரகாஸ்.....  பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் திணறினான் குரு....



சிறிது நிதானத்திற்கு பிறகு "இல்ல பிரகாஸ்..... அவன் இன்னும் மாறல..... அவன் எனக்கு நிச்சயம் உண்மையா இருக்க மாட்டான்" என்றான் குரு.... சிரித்த பிரகாஸ், "ஐயோ, ராகவன் அண்ணன் ஒரு காமடி பீசு.... நீங்க அவரை மன்மதன் சிம்பு ரேஞ்சுக்கு பேசுறது ரொம்ப டூ மச்ச்.... இப்போ உங்க கண்ணு முன்னாடியே அதை நான் உங்களுக்கு ப்ரூவ் பண்ணிட்டா நீங்க அவர்கிட்ட பேசுவீங்களா?" என்றான் பிரகாஸ்..... என்ன செய்ய போகிறான் என்று புரியாத குரு, தலையை அசைத்தான்..... அடுத்த நொடியே ராகவனின் அலைபேசிக்கு அழைத்தான் பிரகாஸ்,"ஹல்லோ ராகவன் அண்ணா" என்றான்.....
"சொல்லு பிரகாஸ்.... எங்க இருக்க?"
"நான் இப்போ காலேஜ்ல இருக்கேன்...... ஆமா, நேத்து சாயுங்காலம் ஒரு ஆறு மணி போல யாரோ ஒரு சூப்பரான பையனோட ஈ.சி.ஆர் ரோட் பக்கம் போனிங்களாமே?..."
என்றான் பிரகாஸ்..... கொஞ்சம் அமைதிக்கு பிறகு, "ஓ அதுவா .....? ரொம்ப நாளா எனக்கு ரூட் விட்டுகிட்டே இருந்தான்... அதான்  நேத்து ஈவெநிங் அங்க போனது, இன்னைக்கு காலைல வரைக்கும் கஜ கஜாதான்" என்றான் கொஞ்சம் ஏகத்தாள தொனியில் ராகவன்....
"அப்படியா?... சரி சரி..... சரினா நான் அப்புறம் உங்களுக்கு பேசுறேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் பிரகாஸ்....  அலைபேசியை துண்டித்துவிட்டு குருவின் முகத்தை பார்த்தான் ராகவன்.... கடுகடுவென்று இருந்தது... கடும் கோபத்தில் குரு, "பார்த்தியா பிரகாஸ்?.... அவனுக்கு எவ்வளவு கொழுப்பு?... நான் தான் சொல்றேன்ல, அவன் திருந்தவே மாட்டான்.... நேத்து வரைக்கும் அந்த நாய் இப்படி கூத்தடிச்சிட்டுதான் இருந்திருக்கு" என்று கோபக்கனல்களை கொட்டித்தீர்த்தான்..... இதை கேட்டு பெரிதாக சிரித்தனர் கார்த்தியும், பிரகாசும்..... இருவரும் சிரித்ததை பார்த்து புரியாமல் விழித்த குரு, "ஏன் சிரிக்கிறீங்க?.... இது உங்களுக்கு சிரிக்கிற விஷயமா?" என்றான் கொஞ்சம் ஏக்கத்தோடு......"அட மங்குனி குருவே, இப்போ பிரகாஸ் அண்ணன் சொன்னது நீங்க நம்புறீங்களா?" என்றான் பிரகாஸ்.....
"ஆமா.... அவனேதானே  சொன்னான்" என்றான்  குரு.....
"சரி, நேத்து சாயந்திரம் நீங்க சென்னை வந்தப்போ உங்கள ரிசீவ் பண்ணது யாரு?... " என்று பிரகாஸ் கேட்டவுடன்தான் குருவிற்கு புரிந்தது... ஆம், மாலை ஆறு மணி முதல் விடியும்வரை தன்னுடன் வீட்டில்தானே இருந்தான் ராகவன்....  பின்னர்தான் தன் அவசர புத்தியை நொந்தவனாக சிரித்தான் குருவும்.....

 இதையே தனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்த பிரகாஸ், "எப்பவும் இந்த மாதிரி பில்டப் கொடுத்திட்டு, உங்ககிட்ட மாட்றது அவருக்கு வாடிக்கை..... ராகவன் உங்கள நினச்சு ஒவ்வொரு நிமிஷமும் பீல் பண்றார்... உங்ககூட பேசணும்னு அவர் ரொம்ப தவிக்கிறார்.... காதல்ல எப்பவுமே மன்னிப்பு கேட்பவன்தான் உயர்ந்தவன் ..... அந்த வகையில நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேணாம், அவரோட பேசுங்க போதும்.... சின்ன விரிசல்தான் பெரிய வீழ்ச்சிக்கு முதல் படி..... " என்று பெரிய மனிதனைப்போல விளக்கினான் பிரகாஸ்..... "புரியுது பிரகாஸ்.... ஆனால் அவனை அவன் மாத்திக்கவே  மாட்டானா?" என்றான் குரு.....
"நிச்சயம் மாத்திக்குவார்.....  சின்ன சின்ன தவறுகளை ரசிச்சு பழகுங்க.... அளவுக்கு அதிகமா உங்க காதலை பொழியுங்க, நிச்சயம் அவர் மாறுவார்" என்று அதற்கும் விடை சொன்னான் பிரகாஸ்.....
"சரி பேசுறேன்..... ஆனால் ஒரு வருஷம் பேசாததால ஒரு மாதிரி இருக்கு... அவன் பேசுனா நான் பேசுறேன்" என்று குரு கூற, இங்கு நடந்த அத்தனை நிகழ்வுகளையும் கண் சிமிட்டாமல் பார்த்து அதிசயித்தான் கார்த்தி..... இந்த சின்ன பய்யன், ஒரு வருடத்து பகையை ஒரு மணி நேரத்துல தீர்த்தது கண்டு அதிசயித்தான்.... அதன்பின்பு பிரகாஸ் இந்த விஷயங்களை எல்லாம் ராகவனுக்கு அலைபேசியில் கூறி உடனடியாக அங்கு வரும்படி கூறினான்.... அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்தான் ராகவன்..... நேராக குருவின் முன்பு சென்று, "சாரிடா.... இனிமேல் நான் அப்படிலாம் நடந்துக்க மாட்டேன்" என்றான்..... கன்னங்கள் பழுக்க அரைகளை கொடுத்த குரு, "இனிமேல் அப்படி எதாச்சும் பண்ணினா பேசாமல்லாம் இருக்க மாட்டேன், கொன்னே புடுவேன்" என்றவாறு கட்டிப்பிடித்தான் ராகவனை..... ஒரு வருடத்தின் பிரிவு, ஏக்கம், அன்பு எல்லாம் கண்ணீராக கரைந்தது..... சிறிது தழுவலுக்கு பின்பு பிரகாசை கட்டிப்பிடித்த ராகவன், "ரொம்ப தேங்க்ஸ் டா" என்றான்..... "சரி விடுங்க.... ரெண்டு பேரும் இப்போதான் ஒண்ணா சேர்ந்திருக்கிங்க..... எங்கயாச்சும் குருவை கூட்டிட்டு போங்க ராகவன் அண்ணா" என்றான் பிரகாஸ்.... அதற்கு பின்பு இருவரும் வெளியே சென்றிட, பிரகாசை பார்த்த கார்த்தி, "நீ பெரிய ஆளுடா..... ஒரு மணி நேரத்துக்குள்ள ஒரு வரலாற்று சாதனைய செஞ்சுட்ட" என்றான்..... "ரொம்ப புகழாதிங்க.... இதெல்லாம் நம்ம அருணோட ஐடியாதான்...... அவர் எனக்கு போன் செஞ்சு, இப்படி புகையை கிளப்ப சொன்னார்.....ராகவனோட டயலாக்கும் கூட அருண் சொன்னதுதான்.... இன்னைக்குதான் அவர் குழப்பாம சொல்லி கொடுத்ததை சரியா சொல்லி இருக்கார்.... நான் சொன்ன மாதிரி ராகவன் அண்ணன் ஒன்னும் ஒன்னும் தெரியாத பப்பா இல்ல.... இன்னமும் சில்மிஷம்லாம் செய்றவர்தான்...... இனி எதுவும் அப்படி செய்ய மாட்டார்னு நம்பிக்கைலதான் இப்படிலாம் பேசினேன்" என்றான் பிரகாஸ்,.... சிரித்த கார்த்தி, "ஓஓஹோ... இயக்குனர் அருண், நீங்க நடிகராக்கும்.... இருந்தாலும் நீ இவ்வளவு தெளிவா பேசலைனா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்க மாட்டாங்க" என்று சிரித்தான் கார்த்தி.... இருவரும் அப்படி பேசிக்கொண்டு சிரித்தனர்..... ராகவன் புதுமண தம்பதியைப்போல குருவை அழைத்துக்கொண்டு பல இடங்களிலும் சுற்றித்திரிந்தான்.
எங்கெங்கோ சுற்றி களைப்பில் மாலையில் மருத்துவமனை அறையை அடைந்தனர் ராகவனும் குருவும்... காக்கி ஆடை இல்லாமல் இன்னும் கொஞ்சம் இளமையைகாட்டும் டி.ஷர்ட் அணிந்திருந்தான் ராகவன்.... கண்களில் எப்போதும் அணிந்திராத ஒரு கூல் க்ளாஸ் வேறு......... "என்ன ராகவன் அண்ணே, புது டிரஸ், புது கண்ணாடி, புது ஆளு.... கலக்குறீங்க போங்க..... ஒரே நாள்ல ராகவன் அண்ணனை இப்படி மாத்திட்டிங்களே குரு?" என்று சிரித்தான் பிரகாஸ்.... "ஐயோ நான் ஒன்னும் மாத்தலப்பா..... இதெல்லாம் ராகவனா வாங்கினது....." என்று கூறிவிட்டு கொஞ்சம் விலகி நின்றான்..... "சரி, நீங்க ஒண்ணா சேர்ந்ததுக்கு ட்ரீட் எதுவும் இல்லையா?" என்றான் கார்த்தி.... "ட்ரீட்டா?..... உங்களுக்கும் பிரகாசுக்கும் உயிரையே கொடுக்கலாம், ட்ரீட்டல்லாம் எம்மாத்திரம்?" என்று ராகவன் கூற அதை ஆமோதிப்பதைப்போல குருவும் தலையை அசைத்தான்..... "இப்டி வாயாலேயே வடை சுடாமல், இன்னைக்கு நைட் டின்னர் நாமள்லாம் ஒண்ணா வெளியே போறோம், உங்க செலவுல.... ஓகேயா?" என்றான் பிரகாஸ்..... கொஞ்சம் தயங்கியபடி நின்ற கார்த்தி, "நீங்க போயிட்டு வாங்க" என்றான்..... "அதெல்லாம் இல்ல... நாமள்லாம் ஒன்னாத்தான் போறோம்..... டாக்டர் எதுவும் சொல்வாருன்னு பார்க்குறீங்களா?.... அவரு டம்மி பீசு, நான் பார்த்துக்கறேன்" என்றான் பிரகாஸ்,.... அனைவரும் கொஞ்சம் அழுத்தமாக கூற கார்த்தி ஒப்புக்கொண்டான்..... அப்படியே கலகலப்பாக நால்வரும் பேசிக்கொண்டிருக்கையில் அங்கு வந்தான் அருண்.... இரவு திட்டத்தை பற்றி கூறினால் மறுப்பு தெரிவிப்பானோ என்று நினைத்த பிரகாஸ், ஆச்சரியப்படும்  அளவிற்கு சொன்னவுடன் ஒப்புக்கொண்டதுடன் மட்டும் நில்லாமல், மிகவும் மகிழ்ச்சியானான் அருண் ..... உண்மையில் பல நாட்களாக அருண் கார்த்தியை எங்காவது வெளியில் அழைத்து செல்ல நினைத்துக்கொண்டிருந்தான்.... கார்த்தி எப்போதும் மறுத்துவிடுவான், இப்போது அதற்கான காலம் கனிந்ததை எண்ணி மகிழ்ந்தான் அருண்...... அருண் உடனே ஒப்புக்கொண்டதும் கார்த்தியின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது, ஒருவேளை இதுவும் அருனின் தந்திரங்களில் ஒன்றோ என்று..... ஆனால், பிரகாஸ் தன்னிடத்தில் எதையும் மறைக்க மாட்டான் என்ற நினைப்பினால் அந்த சந்தேகத்தை தள்ளிவைத்து விட்டான்.... அன்று மருத்துவர் விஜயிடம் சொல்லிவிட்டு உயர்தர உணவகம் ஒன்றிற்கு ஐவரும் சென்றனர்..... அறையில் இருக்கும்வரை சகஜமாக இருக்கும் கார்த்தியின் முகம் வெளியே வந்ததும் கொஞ்சம் கலவரமானத்தை பிரகாஸ் கவனித்தான்..... கொஞ்சம் பயம், நிறைய தடுமாற்றம் கலந்து காணப்பட்டது அவன் முகம்..... அதற்கான காரணம் சொல்லித்தான் பிரகாஸ் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.... என்ன காரணம்? அதை எப்படி தீர்ப்பது என்பதில் பிரகாஸ் கெட்டிக்காரனாச்சே..... உணவகத்தில் அமர்ந்து வெகுநாட்களுக்கு பிறகு நல்ல உணவுகளை கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி .... அருணின் முகத்தில் அன்று எப்போதையும்விட அதிகமான மகிழ்ச்சியால் பொளிவானது....அதை ரசித்தபடியே உணவை உண்டுகொண்டிருந்தான் பிரகாஸ்.....

அப்போது பிரகாசிற்கு சைகை மூலம் ஏதோ செய்துவிட்டு ராகவனின் பக்கம் திரும்பினான் அருண்..... அருகில் இருந்த குருவிற்கு கேட்கும்படி ராகவனிடம்,"ராகவா, உன்னையே ரொம்ப நேரமா ஒருத்தன் பார்த்திட்டு இருக்கான்.... ஆளை பார்க்குறப்போ எனக்கே ஒரு மாதிரி இருக்குடா" என்றதும் ராகவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த மிருகம் விழிக்க தொடங்கியது.... தன் அருகில் குரு இருக்கிறான் என்பதையே மறந்த ராகவன் , ஆர்வ மிகுதியால், "எங்கேடா?.... யாரு அது?" என்றவாறு கண்களை அலைபாய விட்டான்..... அப்படியே அவன் எதார்த்தமாக அருகில் இருந்த குருவை பார்த்தான், முகத்தில் கோபம் கொப்புளிக்க ராகவனை எரிப்பதை போல பார்த்துக்கொண்டிருந்தான் குரு.... அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தான் ராகவன்...... "ஐயோ நான் ஒன்னும் பண்ணல...... மறுபடியும் முதல்லேந்து ஆரமிச்சுடாத " என்று குருவின் முன்பு தலையை கவிழ்த்தான் ராகவன்.... சட்டென்று சிரித்துவிட்டான் குரு..... "லூசாடா நீ..... இனிமேல் கடவுளே வந்து உன்னை பற்றி சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.... ஆனால் ஒன்னை புரிஞ்சுக்கோ, இதையே உனக்கு சாதகமா ஆக்கிக்கிட்டு தப்பு பண்ண நினச்ச....." என்று குரு சொல்லி முடிப்பதற்குள் அதை தொடர்ந்த ராகவன், "என்னை கொன்னிடுவ..... அவ்வளவுதானே?" என்றான்....   இதை கேட்டு சிரித்தனர் அனைவரும்.... "நான் சும்மாதான் சொன்னேன் குரு..... இந்த பயலை உன்னாலதான் சரியா கொண்டுவர முடியும்... நீ உன் பாய்ன்ட்ல சரியா இருக்குரியான்னு டெஸ்ட் பண்ணேன், அவ்வளவுதான்.... நீ சரியாதான் இருக்க..... வாழ்த்துக்கள்" என்று அருண் கூற குருவும் பெருமிதத்தால் நன்றி கூறினான்.... "ஏண்டா நீங்க டெஸ்ட் பண்ண, நான் என்ன எலியா?...." என்றான் ராகவன்.... கலகலப்பாக முடிந்தது அன்றைய இரவு கேளிக்கைகள்..... கார்த்தி அன்று மன நிறைவானதை கண்டு மனம் நிறைந்து மகிழ்ச்சியானான் அருண்.... ஆனால் பிரகாசின் மனம் மட்டும் கார்த்தியின் குழப்பத்தை தீர்ப்பதை பற்றியே சிந்தித்தான்.... சிலநேரம் பிரகாஸ் யோசிப்பது அதிகப்ரசங்கித்தனமோ என்று தோன்றும்... ஆனால், இவ்வளவு சிறிய வயதில் பிரகாஸ் கற்றுக்கொண்டதும், தெரிந்துகொண்டதும் நிறைய.... அந்த விஷயங்களை வைத்து பல தன்னை சுற்றி இருப்பவர்களை பல விதங்களிலும் பல விஷயங்களிலும் சிக்கல்களை தீர்ப்பான்.....  அன்று முழு நிறைவோடு அருணும் கார்த்தியும் மருத்துவமனையை அடைந்தனர்.....  மறுநாள் காலை பிரகாஸ் மருத்துவமனையை அடைந்தான்..... எப்போதும் அந்த நேரத்திற்கு பணிக்கு சென்றுவிடும் அருண், அன்று அங்குதான் இருந்தான்.... கார்த்திக்கு ட்ரிப்ஸ் மூலம் மருந்து ஏறிக்கொண்டிருந்தது..... மருத்துவமனையில் இணைந்தது முதல் இப்போதுதான் முதன்முதலாக ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தததை  கண்டு அஞ்சினான்.... காரணம், மருத்துவர்கள் சொன்ன இரண்டு மாத கெடு முடிவுறும் காலம் அது என்பதால் இன்னும் கொஞ்சம் பதற்றமானான் பிரகாஸ்.... மருத்துவர் விஜய் புடை சூழ அவரின் ஜூனியர்கள் மற்றும் செவிலியர்கள் நின்றுகொண்டிருந்தனர்.... ஓடி சென்று அருணிடம் கேட்டான் பிரகாஸ்.... "நேத்து சாப்பிட்டது கார்த்திக்கு ஒத்துக்கலடா... டயரியா மாதிரி இருக்கு" என்று விளக்கிக்கொண்டிருக்கும்போது அதை கவனித்த மருத்துவர், "ஓ.. இவர்தான் ஹோட்டல்ல சாப்பிடலாம்னு சொன்னாராக்கும்..... நீங்கதான் அந்த பிரகாசா மிஸ்டர்?" என்றார்.....

"ஆமாம் டாக்டர்..... இவன்தான் ஹோட்டல்ல சாப்பிட்டா ஒன்னும் தப்பில்லன்னு சொல்லி கட்டாயப்படுத்தினான்" என்று படுத்தபடியே சிரித்தான் கார்த்தி.....
"அப்படியா?..... எங்க ஹாஸ்பிட்டல்ல கொடுக்குற சாப்பாடு டயட் ரிச் சாப்பாடு...... அதுதான் இவருக்கு சரியா இருக்கும்..... " என்றார் மருத்துவர்.....
"சாதாரணமா இருக்குறவங்க உங்க ஹாஸ்பிட்டல் சாப்பாடு சாப்பிட்டா, அந்த கவலையிலேயே நோய் வந்திடும் டாக்டர்.... அதான் கொஞ்சம் அவர் ரிலாக்ஸ் ஆகுரதுக்காக அப்படி பண்ணேன்... சாரி" என்றான் விஜய்.....
"உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி மிஸ்டர்.... ஓகே.... சாப்பிட சொல்லுங்க... பட், ஹோட்டல்ல கிடைக்குற சாப்பாடுல காரம் அதிகமா இருக்குற மாதிரி சாப்பிட வேணாம், அஜினமோட்டோ மாதிரி சில பொருட்கள் தவிர்த்து சாப்பிட்டா நல்லது.... மற்றபடி இவருக்கு வேற எந்த டயட்டும் இல்ல..." என்றவாறு  அடுத்த அறையை நோக்கி நடந்தார் மருத்துவர்.... அவர் சென்றதும் கார்த்தியின் அருகில் வந்த பிரகாஸ், "இவ்வளவுதானா?... நான் பயந்துட்டேன்..... கொஞ்சம் உங்களுக்கு உடம்பு சரி ஆனதுக்கப்புறம் பிரியாணி கொண்டுவரேன்" என்றான் .....
"மறுபடியும் பிரியாணியா?..... டாக்டர் சொன்னதை கேட்டில்ல?.... அவர் சொன்னபடி பிரியாணி எந்த ஹோட்டல்ல கிடைக்கும்?" என்றான் கார்த்தி.....

"ஹோட்டல்லாம் இல்ல.... நான் சூப்பரா பிரியாணி செய்வேன்..... சாப்பிட்டு பாருங்க, அப்புறம் டெய்லி கேட்பிங்க,..." என்று சிரித்தான் பிரகாஸ்.....
"அப்படியா?.... நம்பவே முடியலடா" என்றான் கார்த்தி....
"நெசமாத்தான்.... நம்ம தலை அஜித்துக்கே நான்தான் பிரியாணி செய்ய கற்றுக்கொடுத்தேன்னா பார்த்துக்கோங்க..... வர்ற சண்டே என் பிரியாணிதான் உங்களுக்கு சாப்பாடு" என்றதும் கார்த்தி சிரித்தவாறே, "பார்க்கலாம்.... ஆனாலும் உன் வாழ்க்கை துணை ரொம்ப லக்கிடா..... சமயல்வரை சகலமும் கத்து வச்சிருக்க" என்றதும் வெட்கத்தில் சிரித்தான் பிரகாஸ்..... அருண் வழக்கம்போல பணிக்கு கிளம்பிவிட்டான்...... உடல் களைப்பால் கார்த்தி நன்றாக உறங்கினான்..... பிரகாஸ் புத்தகம் படித்தவாறே பலவற்றை பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தான்..... மாலை நேரத்தில்தான் விழித்தான் கார்த்தி.....
தூங்கி எழுந்த கார்த்தியிடம் "இப்போ பரவாயில்லையா கார்த்தி?" என்றான் பிரகாஸ்.....
"ஹ்ம்ம்... இப்போ ஒன்னும் ப்ராப்ளம் இல்ல" என்றான் கார்த்தி.....
"அப்போ வாங்களே, காலாற வாக்கிங் போயிட்டு வரலாம்.... பக்கத்துலதான் ஒரு சின்ன பார்க் இருக்கு...." என்றான் பிரகாஸ்....



"இல்ல வேணாம் பிரகாஸ்.... ஹாஸ்பிட்டல் வராண்டா'லேயே வாக்கிங் போகிக்கறேன்" என்றான் கார்த்தி.....
"மூணு மாசமா நீங்க அதுலதான் வாக்கிங் போறீங்க.... ஒரு சேஞ்சுக்கு இன்னைக்கு வாங்க வெளில போகலாம்" என்று கையை பிடித்து இழுத்தான் பிரகாஸ்..... கார்த்தியால் அதற்கு மேலும் மறுப்பு சொல்ல முடியாமல் பிரகாசுடன் வெளியே சென்றான்..... செல்லும் வழியெல்லாம் வழக்கம்போல தன்னை யாரும் பார்க்கிறார்களோ?... தன்னை பற்றி பேசுறாங்கலோ ? என்ற அச்ச உணர்வுடனே நடந்தான் கார்த்தி ..... பிரகாஸ் சொன்ன இடத்தை அடைந்தவுடன் கார்த்தி எவ்வளவோ மன மாற்றத்தை உணர்ந்தான்.... பள்ளி முடிந்து அங்கு சிறுவர்கள் விளையாட வந்தார்கள்.... காதலர்கள் களவியல் ஒரு பக்கம், முதியோர்களின் புலம்பல்கள் ஒரு பக்கம், சிறார்களின் விளையாட்டு மறுபக்கம் என்று அந்த பச்சைப்பசேல் இடத்தின் மத்தியில் எவ்வளவு அருமையாக இருக்கிறது!!!....எல்லாவற்றையும் பார்த்து ரசித்து சிரித்தான் கார்த்தி.... அப்படியே தொடர்ந்து சில நாட்கள் அங்கு நடை பயிற்சி செய்வார்கள்.... பின்னர் மருத்துவமனை செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர் கார்த்தியும், பிரகாசும்...... கார்த்தி இப்போது நிறையவே மாறி இருந்தான்..... எப்போதும் வெளியில் செல்லும்போது காணப்படும் கலவரம் அவன் முகத்தில் இல்லை, பூங்காவில் விளையாடும் சிறுவர்களிடம் நிறைய நேரம் பேசி விளையாடுகிறான்... மனதளவில் நிறைய மாற்றம் அவனுள் உண்டானது.... அப்படி ஒருநாள் நடை பயிற்சி முடிந்தவுடன் அறைக்கு கிளம்ப போகும்போது, "கார்த்தி, இன்னும் கொஞ்ச நேரம் இங்க இன்னைக்கு இருக்கலாம்.... அருண் இன்னைக்கு மீட்டிங் இருக்குறதால வர்றதுக்கு லேட ஆகும்னுதானே சொன்னார்.... அதனால இருட்டுற வரைக்கும் இங்கே இருக்கலாமே?" என்றான் பிரகாஸ்.... மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டான் கார்த்தி.... தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்தனர் இருவரும்.... "கார்த்தி, நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?" என்றான் பிரகாஸ்....
"நீ கேட்டு இதுவரைக்கும் நான் எதுக்காவது கோபப்பட்டிருக்கேனா என்ன?.... கேளுடா" என்றான் உரிமையோடு கார்த்தி.....
கொஞ்சம் தயக்கத்திற்கு பிறகு, "நீங்க மும்பைல அவ்வளவு கஷ்டப்பட்டிங்கள்ள, ஏன் அந்த கொடுமைலேந்து நீங்க தப்பிக்க நினைக்கல?" என்றான் பிரகாஸ்.....
சிரித்த கார்த்தி, "அங்கிருந்து நான் தப்பிக்க நினச்சா, என்னை கொன்னிருப்பாங்க...... ஆனாலும் ஒரு பத்து பதினைந்து தடவை முயற்சி பண்ணேன், அடியும் காயங்களும்தான் மிச்சம்.... தற்கொலை செய்யலாம்னு நினச்சேன், ஆனால் அந்தளவுக்கு தைரியம் எனக்கில்லை..... உயிர்மேல ஆசைங்குரதாள இல்ல, என்னைக்காவது ஒருநாள் அருணை பார்த்திடுவேன்னு ஒரு குருட்டு நம்பிக்கையால எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருந்துட்டேன்...." என்று அவ்வளவு வலியான வார்த்தைகளை எளிதாக கூறிவிட்டான்.... கண்களில் ததும்பிய நீரை கார்த்தி பார்க்கும் முன் துடைத்துக்கொண்ட பிரகாஸ், "ரொம்ப கொடுமை பண்ணுவாங்களா?" என்றான் அப்பாவியாக.....



"ஆரம்பத்துல அவங்க சொல்றதை நான் கேட்க  மாட்டேங்குரதாள, ஏதோ ஊசி போடுவாங்க.... அப்படியே போதையில இருக்குறப்போ அவங்க நினைக்குறதை செஞ்சிடுவாங்க.... அப்புறம் நாளாக நாளாக வேறு வழி இல்லாம அதுக்கு ஒத்துக்கிட்டுதான் ஆகணும்னு நிலைமை ஆகிடுச்சு.... மனசை கல்லாக்கிகிட்டு, உடம்பை அடகு வச்சேன்.... பலநேரம் காண்டம் கூட யூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லிடுவாணுக, கேட்டா ரியாளிட்டியா இருக்கும்னு சொல்வாங்க.... இப்போ அந்த ரியாளிட்டிதான் என்னை இப்படி ஆக்கிடுச்சு..... எல்லாம் முடிஞ்சு எனக்கு எச்.ஐ.வி னு தெரிஞ்ச பிறகுதான் என்னைய நிம்மதியா விட்டாணுக.... ஒரு வழில அந்த நோய்தான் என்னைய அந்த நரகத்துலேந்து மீட்டுச்சு.... அப்புறம்தான் தாராவில ஒரு ஹோட்டல்ல வேலை பார்த்தேன்... அங்கயும் சில பேர் என் நிலைமை தெரியாமல் பழைய விஷயத்துக்கே கூப்பிட ஆரமிச்ச்சதால, எங்கயாச்சும் போயிடலாம்னு நான் போயி ரெயில்வே ஸ்டேசன்ல நினப்போதான் அருண் சொல்லி போலிஸ் என்னைய கூட்டிட்டு போனாங்க.... இப்போ நினச்சா கூட அந்த நாளெல்லாம் கொடுமையா இருக்கும்.... இப்படி உன்னைப்போல நல்ல நண்பர்களோட இப்படி அமைதியான வாழ்க்கை வாழ்வேன்னு நான் நினச்சு கூட பார்க்கலா...." என்று சொல்லி முடிக்கும்போது கண்களில் சோகம் இழையோடியது கார்த்திக்கு...... எப்படியாவது பேச்சை திசை திருப்பனும் என்ற முடிவோடு பிரகாஸ், "இப்போ சென்னை பிடிச்சிருக்கா?" என்றான்.....
"பிடிக்காமல் இருக்குமா?..... ஆனாலும் எங்க திருச்சி அளவுக்கு இல்லை....." என்றான் சிரித்தவாறே கார்த்தி.....
பிரகாசும் சிரித்தபடி, "திருச்சி உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?" என்றான்....
"யாருக்குத்தான் சொந்த ஊர் பிடிக்காது?.... எங்க ஊர் காவிரி தண்ணிய குடிச்சாலே ஒரு தெம்பு வரும்" என்று சொல்லும்போதே கார்த்தியின் முகத்தில் ஒரு சந்தோஷமும் ,புத்துணர்வும் பிறந்தது.... மீண்டும் தொடர்ந்த கார்த்தி, "ஆமா, நீ எந்த ஊர்?" என்றான்.....
"நீங்க காவிரி பாயும் ஊர்னா, நான் வைகை பாயும் ஊர்..... உங்க ஊர் தண்ணிய குடிச்சாதான் தெம்பு வரும், எங்க ஊர் பேச்சை கேட்டாலே தெம்பு வரும்" என்று சிரித்தான் பிரகாஸ்.........
"ஓ மதுரையா?" என்றான் பிரகாஸ்......
சிரித்த பிரகாஸ், "ஆமா கார்த்தி.... உங்களுக்கு ஒன்னு தெரியுமா?.... என் பெயர், காலேஜ் தவிர அருணுக்கு வேற எதுவும் என்னைப்பற்றி தெரியாது..... என் ஊர் என்னன்னு கூட இதுவரை அவர் கேட்டதில்ல...." என்று சொல்லும்போது முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது..... பிரகாசின் தோள்களில் கைவைத்த கார்த்தி, "அருனோட கேரக்டரே அதான் பிரகாஸ்..... எப்பவாச்சும் அவன் நிச்சயம் மாறுவான்..... நல்ல மனசு இருக்கு அவன்கிட்ட, அதை வெளிப்படுத்த தயங்குவான்.....  ஒரு சாரி சொல்ல, ஒரு தாங்க்ஸ் சொல்ல கூட ஆயிரம் முறை யோசிப்பான்.... நிச்சயம் மாறுவான், நீ கவலைப்படாத" என்றான் கார்த்தி.... பிரகாசும் கவலையை மறந்து கொஞ்சம் இயல்பானான்.....
காரிருள் அங்கு நிறைக்க தொடங்கியதும் இருவரும் மருத்துவமனை அறையை நோக்கி விரைந்தனர்......



அடுத்த நாள் காலை எப்போதையும்விட கொஞ்சம் சீக்கிரமாக மருத்துவமனைக்கு வந்துவிட்டான் பிரகாஸ்.... கையில் ஒரு பையுடன்.... ஊருக்கு செல்வதற்காக ஆயத்தமானவனைப்போல காணப்பட்டான்..... அருண் இன்னும் பணிக்கு செல்லவில்லை, கிளம்பிக்கொண்டு இருந்தான்.... பிரகாசின் பயண தோற்றத்தை கண்ட கார்த்தியின் முகம் சோகமானது.... தேர்வு முடிந்துவிட்டதாக பிரகாஸ் கூறினான், சொந்த ஊருக்கு போகப்போகிறான் போல என்று நினைத்தவாறே பிரகாசை பார்த்து, "என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?.... அதுவும் கிளம்பி வேற வந்திருக்க?.... எங்க போற?" என்றான்....  பையை கீழே வைத்துவிட்டு அருணை பார்த்த பிரகாஸ், "கார்த்தி கிட்ட இன்னும் சொல்லலையா?" என்றான்..... கண்களால் "இல்லை "என்று சைகை காண்பித்த அருண் அதை காணாதது போல சென்றுவிட்டான்..... "என்ன நடக்குது இங்க?... ஒண்ணுமே புரியல.... நீ ஊருக்கு போறது அருணுக்கு தெரியுமா? " என்றான் கார்த்தி ..... "நான் மட்டும் ஊருக்கு போகல.... அருணும் தான் வர்றாரு..... அவ்வளவு ஏன், நீங்களும் கூடத்தா வரீங்க" என்றான் பிரகாஸ்.... ஒன்றும் புரியாமல் விழித்த கார்த்தி அருணை நிறுத்தி, "கொஞ்சம் தெளிவா சொல்லு.... எங்க அவன் கிளம்பிருக்கான்?.... எனக்கு ட்ரீட்மெண்ட் விஷயமா எதுவும் போறோமா?... வேண்டாம் அருண்.... இப்படியே இருந்திடுறேன்" என்ற போது முகம் மிகவும் வாடிப்போனது..... இதற்கு மேலும் மறைக்க முடியாதவனாக "நாமல்லாம் திருச்சி போகப்போறோம் கார்த்தி" என்றான் அருண்..... பிறை நிலவு முழு மதியாக மாறுவதைப்போல, மல்லிகை மொட்டு மலர்வதைப்போல கார்த்தியின் முகமெல்லாம் புன்னகை தவழ்ந்தது..... கொஞ்சம் குழப்பமும், நிறைய ஆனந்தமுமாக, "நெஜமாவா?... என்ன சொல்ற அருண்?" என்றான் ஆச்சரியம் விலகாமல்..... "உன் மேல சத்தியமா.....திருச்சி மேல நீ அவ்வளவு ஈர்ப்பா இருக்கிறன்னு நேத்து பிரகாஸ் சொன்னான்.... உடனே டாக்டர் கிட்ட பேசுனேன், அவர் தாராளமா போகலாம்னு சொல்லிட்டார்..... அதான் நாம எல்லாம் ஒண்ணா போகலாமேன்னு பிரகாசை வர சொன்னேன்.... நான் போயி லீவ் சொல்லிட்டு, இன்னைக்கு சாயந்திரம் கிளம்பறோம்.... ரெடியா இரு..... மதியம் குருவும் ராகவனும் வந்திடுவாங்க..." என்று சொல்லி முடிக்கையில் அருணை கட்டிப்பிடித்தான் கார்த்தி..... "ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் அருண்.....நான் மறுபடியும் திருச்சி போவேன்னு நினச்சு கூட பார்க்கல" என்று கண்ணீர் விட்டுவிட்டான்.....
கார்த்தி இவ்வளவு நெகிழ்ச்சியாவான் என்று அருண் நினைக்கவே இல்லை..... கண்களால் பிரகாசிற்கு நன்றி கூறினான்.... பிரகாஸ் இதைப்பற்றி சொல்லியிருக்கவில்லை என்றால் கார்த்தியின் ஆசை நிராசையாக ஆகியிருக்கலாம் என்பதால் இப்போது அருண் மன நிம்மதி அடைந்தான்.....  ஆசுவாசமான கார்த்தி பிரகாசை பார்த்து, "உனக்குத்தான் முதல்ல நான் நன்றி சொல்லணும் பிரகாஸ்.... உண்மையா என் மனதில் எங்கோ புதைந்திருந்த என் ஆசையை வெளிக்கொண்டுவந்ததும் நீதான்... அந்த ஆசையை இப்போ நிறைவேற்ற இருப்பதும் உன்னாலதான்...." என்று கண்களை கலங்கினான் கார்த்தி....
"ஐயோ அப்படிலாம் இல்ல.... நீங்க சொன்னதை அருன்கிட்ட சொன்னேன்... அவ்வளவுதான்.... இங்க இருக்குற திருச்சிக்கு போறதை நீங்கதான் நிலாவுக்கு போற ரேஞ்சுக்கு பில்டப் பண்றீங்க" என்று சிரித்தான் பிரகாஸ்..... சிரித்த கார்த்தியும், "ஆமால்ல.... நானும் கொஞ்சம் ஓவராத்தான் எமோஷன் ஆகிட்டேன் போல... இருந்தாலும், நிலாவுக்கு போறதா சொன்னா கூட நான் இவ்வளவு என்தூவா ஆகிருக்க மாட்டேன்..." என்றான்.... "இப்போ பத்து மணிதான் ஆகுது, எப்போ சாயுங்காலம் ஆகும்னு இருக்குது பிரகாஸ்" என்று தன் ஏக்கத்தை கூறினான் கார்த்தி.... ஆம், உண்மையில் மாலை வேளைக்காக காத்திருக்க தொடங்கினான்... பிரகாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் கார்த்தியின் கண்கள் கடிகாரத்தை பார்த்தபடியே இருந்தது.... ஒருவாறு கார்த்தி எதிர்பார்த்த நேரம் வந்து கார்த்தி, அருண், பிரகாஸ், குரு மற்றும் ராகவன் என்று அனைவரும் திருச்சிக்கு கிளம்பினர்.... மகிழுந்தை ராகவன் இயக்க, முன் பக்க இருக்கையில் குரு அமர்ந்திருந்தான்.... பின் இருக்கையில் அருண் நடுவில் இருக்க, ஒருபுறம் கார்த்தியும் , மறுபக்கம் பிரகாசும் அமர்ந்திருந்தனர்.... வாகனத்தை செலுத்தியபடியே திரும்பி பார்த்த ராகவன் அருணை பார்த்து, "மச்சான், இப்போ உன்னைய பாக்குரப்போ திருச்செந்தூர்ல இருப்பார் ஒருத்தர் அவர் மாதிரியே இருக்கடா" என்றான்... புரியாத அருண், "யாரடா சொல்ற?... நம்ம மோகன் அண்ணாச்சிய சொல்றியா?" என்றான்.... குறிக்கிட்ட பிரகாஸ், "அட மெண்டல் போலிஸ்.... அவர் சொல்றது நீங்க திருச்செந்தூர் முருகன் மாதிரி டபில்ஸ் அடிக்குரிங்கலாம்" என்றதும் புரிந்துகொண்ட அருண் ராகவனை பார்த்து, "மச்சான், நீ வரும்போது குருவோட ஒண்ணா வரணும்னு நினைக்குரியா, இல்லை தனியா வரணும்னு நினைக்குரியா?.... " என்றதும் அமைதியானான் ராகவன்.... ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்தையும் கார்த்தி மிகுந்த ஆவலோடு கவனித்து வந்தான்.... திருச்சி எல்லையை தொடும் அந்த நிமிடத்தில் கார்த்தியின் முகம் மிகவும் பொளிவானது.....
கண்கள் விரிய, இதயம் திறக்க ஒவ்வொரு இடத்தையும் பார்த்துவந்தான் கார்த்தி.... காவிரி வளத்தால் சாலையோரமெல்லாம் பசுமை தழைத்து குலுங்கியது..... சிறுகுழந்தையைப்போல ஒவ்வொன்றையும் காட்டி அதற்கு விளக்கம் கேட்டான் கார்த்தி....ஒருவாராக திருச்சியில் அருணின் வீட்டை அடைந்தனர் அனைவரும் .... அருணின் வீட்டிற்கு முன்பு வந்ததைப்போல அல்லாமல் நிறையவே மாறி இருந்தது.... நல்ல செழிப்பான வீடு அது.... முகப்பில் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார் அருணின் அப்பா.... அருனையும் அவர் நண்பர்களையும் பார்த்த அவர், கண்டுகொள்ளாமல் எதுவும் பேசாமல் அவர் அறைக்கு சென்றுவிட்டார்,.... "அருண், அவர்தானே உங்க அப்பா?" என்றான் பிரகாஸ்.... "ஏ ஆமா.... எப்படி கண்டுபிடிச்ச?" என்றான் அருண் வியப்போடு.... "பார்த்தாலே தெரியுது" என்று குறும்பாக சிரித்தான் பிரகாஸ்.... "அது வேற விஷயம்டா" என்று கூறிவிட்டு சமையலறையில் இருந்த தன் அம்மாவை அழைத்துவந்து அனைவருக்கும் அறிமுகபடுத்தினான் அருண்....
அருணின் அம்மா அனைவரிடமும் மிகுந்த கனிவோடு பேசினார் ..... ராகவனை மட்டும்  அவருக்கு முன்னரே தெரியும் என்றாலும், அனைவரிடத்திலும் பாசத்தோடு பழகினார்.... "அருண் இன்னைக்கு காலைலதான் உங்களையெல்லாம் கூட்டிட்டு வரதா சொன்னான், அதான் அவசர அவசரமா வேலை பார்த்திட்டு இருந்தேன்பா.... " என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்....  "பரவாயில்லைமா நீங்க  இப்படி இருக்கீங்க,  ஆனால் அருனோட அப்பா...." என்று இழுத்தான் கார்த்தி.... "ஓ அவரை பார்த்திங்களா?.... ஆரம்பத்துலேந்தே அருனுக்கும் அவன் அப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம்தான்... அவன் போலிஸ் வேலையில சேர்ந்தது முதல் அவர் அருனோட சரியா பேசுரதிள்ள.... அருணை அவர் ஐடி துறைல வேலை பார்க்க சொன்னார்.... அவன் கேட்கல.... இப்போ அருணுக்கு கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப சொல்லியும், இவன் கேட்காமல் இருக்கான்.... எவ்வளவு சொல்லியும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்றான்.... நீங்களாவது கொஞ்சம் அவனுக்கு சொல்லுங்கப்பா" என்று புலம்பினார் அம்மா..... "அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா?....யாராவது  வந்தால்அவங்ககிட்ட புலம்புறதே உனக்கு வேலையா போச்சு" என்று சிரித்துக்கொண்டே திட்டினான் அருண்..... "சரி விடுங்க ஆண்ட்டி.... அருணுக்கு எப்படிப்பட்ட வரன் பாக்கனும்னு சொல்லுங்க, நமக்கு தெரிஞ்ச நாலு எடத்துல பார்க்கலாம்" என்றான் குறும்பாக பிரகாஸ்.... "பணம், காசெல்லாம் முக்கியம் இல்லப்பா..... நல்ல பொண்ணா இருந்தா போதும்" என்றார் கவலையுடன் அம்மா..... "என்னது பொண்ணுதான் வேணுமா?... அப்போ கஷ்டம்" என்று அருணை பார்த்து சிரித்தான் பிரகாஸ்..... குழம்பிய அம்மா "என்னப்பா சொல்ற?.... பொண்ணு பார்க்காம வேற என்ன பாக்குறது?" என்றார்....
பதறிய அருண், "அது .... அது வந்து... பொண்ணுன்னா நகைனு அர்த்தம், பெண்'ன்னு சொல்ல சொல்றான் அவன்..... தமிழில் இலக்கண பிழை இருக்க கூடாதுன்னு நினைப்பான்.... அவங்க அப்பா தமிழ் வாத்தியார்" என்று சொல்லி சமாளித்தான்.... "ஓ அப்படியாப்பா.... சரி சரி..... பெண் பார்க்கணும்... இப்போ ஓகே தானே?" என்றார் அம்மா.... பிரகாசை அடுத்த பேச்சு பேசுவதற்கு முன்னர் பேச்சை திசைதிருப்ப நினைத்த அருண், "முதல்ல ராகவனுக்கு முடியட்டும்மா.... அப்புறம் பார்த்துக்கலாம்" என்றான்.... "டேய் நான் சும்மாதானேடா இருக்கேன், என்னையும் ஏண்டா வம்பிழுக்குற?" என்று சோகத்துடன் குருவை பார்த்தான் ராகவன் .... "அவனுக்கு என்னடா..... ராகவன் மாதிரி ஒரு நல்ல பையனை பார்க்க முடியுமா என்ன?.... ராகவனுக்கு பொண்ணு கொடுக்க நீ, நா'ன்னு போட்டி போடுவாங்க.... இதுவரை ராகவன் ஒரு பொண்ணு கூட சேர்ந்து பேசி நான் பார்த்ததே இல்ல... அவ்வளவு நல்ல பய்யன்...." என்றார் அம்மா..... சிரித்த பிரகாஸ், "ஆமாமா... அவர் பொண்ணு கூட பேசி நான் பார்த்ததே இல்ல..... எல்லா டீலிங்கும் பசங்ககூடத்தான்..." என்றான்....
"ஆமாம்பா.... போனதடவை அவன் ஊருக்கு வந்தப்போ கூட நம்ம தெரு கூர்காவோட படத்துக்கு போனான்..... எந்த பொன்னையும் இதுவரை ராகவனோட வச்சு பார்த்ததே இல்ல" என்றார் அம்மா...... அசடுவழிய சிரித்த ராகவன், "அம்மா சாப்பிடலாமா?" என்றான்.... பின்னர் அனைவருக்கும் இரவு உணவை பரிமாறிய அம்மா அனைவரையும் படுக்க சொன்னார்..... அருணின் தனி அறையில் ஐவரும் படுக்க ஆயத்தமானார்கள்.... அப்போது குளியலறையில் இருந்து குரு ராகவனை அழைத்தான்..... மிகுந்த ஆவலோடும், ஆசையோடும் உள்ளே சென்ற ராகவனை பார்த்து அதிசயித்து நின்றான் பிரகாஸ்.... ஐந்து நிமிடம் கழித்து முகம் வியர்க்க, மிகுந்த கலக்கத்துடன் வெளியே வந்த ராகவனை பார்த்த பிரகாஸ், "அண்ணா, செம்ம மேட்டர் போல..... கன்னங்கள் சிவக்குற அளவுக்கு முத்தம் கொடுத்திருக்கார் போல" என்றான்..... அப்பாவியான முகத்துடன் பிரகாசை பார்த்த ராகவன், "இப்படி உசுப்பேத்தியே ஒண்ணுமில்லாம ஆக்கிட்டிங்கலேடா..... இப்போ அவன், யாரு அந்த கூர்கான்னு கேட்டு அடிக்கிறாண்டா" என்றான்.... வெடி சிரிப்பை உதிர்த்த பிரகாஸ், "ஹா ஹா ஹா..... அதான் விஷயமா?..... அனேகமா சென்னைக்கு போகும்போது தனியாத்தான் போவிங்கன்னு நினைக்குறேன்.... வாழ்த்துக்கள் " என்றான்.... சமாதானப்படுத்திய அருண் அனைவரையும் தூங்குமாறு கூறினான்..... மறுநாள் காலை எழுந்து கார்த்தியை அழைத்த அருண், "உன் விருப்பப்படி திருச்சி வந்துட்டோம்..... எங்கங்க போகனும்னு சொல்லு..... ரெண்டு நாள்ல நாம திரும்பி சென்னை போகணும்..... மலைக்கோட்டை, சமயபுரம், ஸ்ரீரங்கம்...." என்று அடுக்குக்கொண்டே போனான் அருண்......
"நான் என்ன ஆன்மிக பயணம் போகவா திருச்சி வரணும்னு சொன்னேன்.... நான் பார்க்க விரும்புறதெல்லாம் நான் வசித்த வீடு, நாம ரெண்டு பெரும் முதன் முதல்ல பார்த்த அந்த கிராமம், நான் படித்த காலேஜ்.... அப்புறம்....." என்று இழுத்தான் கார்த்தி .....

"அப்புறம்????" என்று புருவத்தை உயர்த்தி கேட்டான் அருண்.... "என் மாமா குடும்பம்" என்றான் கார்த்தி .... "நீ இன்னுமா அவரை நினைச்சுகிட்டு இருக்க?" என்று ஆச்ச்சரியமானான் அருண்.....
"இந்த உலகத்துல இப்போதைக்கு உறவுன்னு சொல்றதுக்கு அவர் மட்டும்தான் இருக்கார்.... எப்படி இருக்கார்னு பார்த்தா போதும்" என்றான் கார்த்தி .... மெல்லிய சிரிப்பை உதிர்த்த  அருண், "உன்ன புரிஞ்சுக்கவே முடியலடா" என்று கூறிவிட்டு ராகவனையும் குருவையும் அழைத்து சுற்றி பார்க்க விரும்பும் இடங்களுக்கு அவர்கள் இருவரையும் தனியாக செல்லுமாறு கூறிவிட்டு வாகனம் ஏற்பாடு செய்துகொடுத்தான் அருண்.... ராகவனும் குருவும் தஞ்சை பெரிய கோவில் போன்ற இடங்களுக்கு செல்ல குளித்துவிட்டு கிளம்பினர்... பிரகாசையும் ராகவன் அழைத்தாலும், அவன் கார்த்தியுடன் செல்வதற்காக இருந்துவிட்டான்..... அருண், கார்த்தி, பிரகாஸ் மூவரும் கிளம்பி அருணின் மகிழுந்தில் கார்த்தியின் கல்லூரியை பார்க்க கிளம்பினார்கள்.... கார்த்தி படித்து சுற்றிய அந்த கல்லூரி வளாகம் முழுவதும் அணு அணுவாக ரசித்தான்....தான் அமர்ந்து படித்த அந்த மரம மட்டுமே இன்னும் மாறாத சாட்சியாக கம்பீரமாக நின்றது..... அடுத்ததாக அருணும் கார்த்தியும் சந்தித்த அந்த கிராமத்திற்கு சென்றனர்..... எட்டு வருடமே ஆனாலும் கூட ஏதோ என்பது வருடங்களுக்கு உண்டான மாற்றத்தை பெற்றிருந்தது அந்த கிராமம்..... பழையபடி ஒரு இடமும் அங்கு இல்லை.... கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தான் கார்த்தி... அப்போது சேவை செய்யும்போது தான் நட்ட செடிகள் மரமாக வளர்ந்திருந்ததை கவனித்தான் கார்த்தி..... குடிசை வீடுகள் எல்லாம் காரை வீடுகளாக மாறி இருந்தது..... கொஞ்சம் ஏமாற்றத்துடன் மூவரும் அடுத்து காண சென்ற இடம் கார்த்தியின் வீடு..... குமரன் நகரில் நுழைந்ததும், பழைய நினைவுகள் எல்லாம் கார்த்தியை சுற்றி சுழற்றி அடித்தது.....
குமரன் நகர் உள்ளே நுழைந்தபோது மாலை நேரமாகிவிட்டது, பள்ளிக்குழந்தைகள் பள்ளி முடிந்து உற்சாகமாக வீடுகளை நோக்கி வந்தது கார்த்தியை பள்ளி வாழ்க்கையை அசைபோடவைத்தது.... அப்படியே நடந்து சென்றபோது சாலையோரத்தில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் தென்பட்டது.... கார்த்தியை அறியாமலேயே அவன் கைகள் வணங்க சென்றன... பள்ளி காலம் முதல் கல்லூரி படிப்புவரை ஒவ்வொரு நாளும் தான் வணங்கிவிட்டு செல்லும் பிள்ளையார் அவர்.... அப்போதெல்லாம் அரசமரத்து அடியில் சுதந்திரமாக இருந்தவர், இப்போதைக்கு மாரியப்பன் செட்டியாரின் உபயத்தால் சிறிய கோவில் கட்டப்பட்டுள்ளது....  தன் வீட்டை தேடினான்.... அடையாளங்கள் மாற்றப்பட்டு இருந்தன.... தன் வீடு இருந்த இடம் இப்போது அழகான பல்பொருள் அங்காடியாக மாறி இருந்தது.... வீட்டு வாசலில் இருந்த அந்த ஒற்றைக்கல் மட்டும் அங்கிருந்தது.... அம்மாவுடன் கோபித்துக்கொண்ட கார்த்தியை பலநாட்கள் அரவணைத்தது அந்த ஒற்றைக்கல்தான்... சிறுவயதில் அந்த கல்லை சாமியாக்கி விளையாண்டது  முதல், கடைசியாக அவன் அம்மா இறந்தபோது ஓடி சென்றபோது அந்த கல் இடறியது முதல் எல்லாம் நிழலாடியது கண் முன்னால்.... அம்மா.... அம்மாவின் நினைவு இப்போது எவ்வளவோ கட்டுப்படுத்தியும் காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு மனதை வருத்தியது...

 வேறுபக்கம் தன் பார்வையை திருப்பினான்.... தெரிந்த முகம் ஒன்றுகூட இல்லை.... தெரிந்தவர்கள் இருந்தாலும் கூட இப்போதைக்கு பேசுவார்களா என்ற எண்ணங்களுடன் சுற்றிப்பார்த்த அவனை ஆச்சரியப்பட வைத்தது ஒரு அரசியல் தட்டி.... ப்ளெக்ஸ் போர்டு ஒன்றுதான் அது.... "அரசியல் ஆசானே, ஏழைகளின் காவலனே,  புரட்சி நாயகனே, வருங்கால வையகமே" என்று நீளும் அந்த பட்டங்களுக்கு சொந்தக்காரர் மதியழகன் அண்ணாச்சி.... இப்போதைக்கு "மலைக்கோட்டை" மதி என்று பெயர் மாற்றி இருக்கிறார்.... எட்டு வருடங்களுக்கு பிறகும் திருச்சியில் மாறாத ஒன்று என்றால் அது மதி அண்ணாச்சியின் உருவம் மட்டும்தான்....  ஆஜானுபாகுவான வணக்கம் சொல்லி நிற்பதை பார்க்கும்போது சிரிப்புத்தான் வந்தது.... கார்த்தி பள்ளியில் படித்த காலம் முதல் நன்றாக அறிமுகமானவர் மதியழகன்.... அப்போதெல்லாம் அந்த தெருவில் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பவன் மதியழகந்தான்.... பல நேரங்களில் கார்த்தியின் அம்மாவிற்கு பண உதவிகள் செய்தார்..... உதவிகள் செய்வதிலும் இவருக்கு ஒரு உள்நோக்கம் உண்டு..... ஒருவருக்கு இவர் உதவி செய்பவர், அதை நூறுபேறுக்காவதுஅதை சொல்லி காட்டும் விளம்பர பிரியர்..... அவர் இப்போது அரசியலில் நுழைந்து இப்போது அந்த பகுதி கவுன்சிலராக இருக்கிறார்.... அவர் இருப்பதில் ஒருவித மகிழ்ச்சி கார்த்திக்கு.... உடனே அவரின் வீட்டை விசாரித்து அங்கு சென்றனர் மூவரும்..... வீட்டு வாசலில் யாருக்கோ பஞ்சாயத்து செய்துகொண்டிருந்தார் மதி..... இவர்கள் மூவரையும் பார்த்த மதி அண்ணாச்சி, "வாங்கப்பா..... பொழுது சாயுற நேரத்துக்கு வந்திருக்கிங்க.... என்ன சமாச்சாரம்?" என்றார் அண்ணாச்சி.... கொஞ்சம் முன்பு சென்ற கார்த்தி முகமலர்ச்சியுடன் , "மதி அண்ணாச்சி, என்னைய ஞாபகம் இல்லையா?" என்றான்.... கண்ணாடியை கொஞ்சம் துடைத்துக்கொண்டு கண்களை சுருக்கிப்பார்த்த அண்ணாச்சி, "புரியலயேப்பா.... ஒன்னும் மட்டுப்படல....தப்பா நினச்சுக்கிடாதிய.... யாரு நீங்க?" என்றார்....
"அண்ணாச்சி, நான்தான் கார்த்தி.... பார்வதி மகன்" என்றான்.... குழப்பத்தில் இருந்த முகத்தை மலர்ச்சியாக மாறிய அண்ணாச்சி, கார்த்தியின் அருகில் வந்து கைகளை பிடித்தவாறு "பிள்ளையார்கோவில் பக்கத்துல இருந்த பார்வதி அக்கா மகன் கார்த்தியா நீ?.....எப்படிப்பா இருக்க?" என்றார்....
"ஆமா அய்யா.... நான்தான்.... நான் நல்லா இருக்கேன்...... நீங்க எப்படி இருக்கீங்க?" என்றான் கண்ணீர் ததும்பிய கண்களுடன் கார்த்தி.... "நல்லா இருக்கேன்பா.... உங்க அம்மா செத்தப்ப பாத்தது, ஏழெட்டு வருஷம் இருக்கும்னு நினைக்குறேன்.... அதுக்கப்புறம் எங்க போன? என்ன ஆனன்னே தெரியலயேப்பா...." என்றார்... கார்த்தியின் மாமா வீட்டை விட்டு விரட்டியதுவரை கூறினான் கார்த்தி..... சிரித்த முகம் இப்போது கடுகடுப்பாக மாறியதுடன் அண்ணாச்சி, "அந்த பயலுக்கு அவ்வளவு திமிரா?....  அவன் வீட்டைவிட்டு தொரத்துனா உனக்கு நாங்கல்லாம் இல்லையா?.... ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல.... அந்த பயலுட்டு சொத்துல உங்கம்மாவுக்கும் பங்கு இருக்குல்ல.... அதையாவது வாங்கி கொடுத்திருப்பேன்ல... நாங்கல்லாம் இருந்தும் நீ அநாதை கணக்கா இவ்வளவு நாள் இருந்திருக்கியே..... சரிவிடு, உனக்கு பண்ண பாவத்துக்கு ஆண்டவன்தான் அவனுக்கு சரியான தண்டனை கொடுத்திருக்கான்" என்றார் அண்ணாச்சி...

. ஒன்றும் புரியாத கார்த்தி, "யாரை சொல்றீங்க?.... மாமாவுக்கா?... அவருக்கு என்ன ஆச்சு?" என்றான் கொஞ்சம் பதற்றத்துடன்..... "என்னப்பா உனக்கு தெரியாதா?" என்றார் ஆச்சரியத்துடன் அண்ணாச்சி..... "தெரியாது.... சொல்லுங்க அண்ணாச்சி" என்றான் பதற்றம் விலகாமல் கார்த்தி.... "உங்க மாமா மகள் எவன்கிட்டயோ ஏமாந்து கர்ப்பமாகிட்டா, என்னென்னமோ செஞ்சும் அவளுக்கு கல்யாணம் பண்ண முடியல.... அந்த சோகத்துலையே போன வருஷம் செத்துட்டான் உங்க மாமன்.... அவன் செத்ததுக்கு பின்னாடி, கடன் அதிகமாகி இருந்த வீட்டை வித்து, இருந்த சொத்தெல்லாம் வித்து, உங்க அத்தை எங்கயோ வீட்டு வேலை பார்த்துட்டு இருக்காலாம்.... போன வருஷம் உங்க மாமன் மகள் பால்வாடி டீச்சர் வேலைக்கு சிபாரிசு செய்ய சொல்லி வந்துச்சு..... எனக்கு அவனை எப்பவுமே பிடிக்காதுங்குரதால நான் கண்டுக்கல.... இப்போ அவள் கையில ஒரு குழந்தை.... உனக்கு துரோகம் பண்ணதுக்கு, உங்க அம்மா நல்ல தண்டனை கொடுத்திருக்கா பார்த்தியா" என்றார் அண்ணாச்சி...... கார்த்தியின் முகம் இன்னும் சோகமானது.... கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு, "அண்ணாச்சி, ஒரே ஒரு உதவி செய்வீங்களா?" என்றான் கார்த்தி..... கைகளை இறுக்கிப்பிடித்த அண்ணாச்சி, "என்னப்பா இப்படி கேட்குற?.... நீ நம்ம புள்ள.... என்ன வேணும்னாலும் கேளு" என்றார் உரிமையுடன்.... "அந்த பால்வாடி டீச்சர் வேலைய எங்க மாமா மகளுக்கு வாங்கி தாங்க அண்ணாச்சி.... ப்ளீஸ்" என்றான் கார்த்தி.... "என்னப்பா இப்படி சொல்ற?... உனக்கு பண்ண துரோகத்துக்கு அவங்க இந்த கஷ்டம் படட்டுமே" என்றார் அண்ணாச்சி.....
"இல்ல அண்ணாச்சி.... என்னதான் பண்ணாலும், என் அம்மாவோட தம்பி அவரு..... சின்ன வயசுல எங்க அம்மா தூக்கி வளர்த்த தம்பி அவரு.... இந்த நேரத்துல அவர் குடும்பம் கஷ்டப்படுறதை நான் வேடிக்கைப்பார்த்தா அது எங்கம்மாவுக்கு நான் செய்ற துரோகமாகிடும்...." என்று அழுகை கலந்த  வார்த்தைகளால் கூற, மனம் இளகிய அண்ணாச்சி, "நீ அழுகாதப்பா.... நிச்சயம் நான் செய்றேன்.... அவங்களுக்காக இல்லைனாலும் உனக்காகவும், உங்க அம்மாவுக்காகவும்வாவது செய்றேன்" என்று உறுதி கூறினார்.... பிறகு சிறிது நேரம் அண்ணாச்சியின் வீட்டில் இருந்த மூவருக்கும், அண்ணாச்சியின் மனைவி தோசை ஊற்றி கொடுக்க சாப்பிட்டுவிட்டு இரவில் வீட்டை அடைந்தனர்.... அன்று இரவெல்லாம் தன் மாமா குடும்பத்தை பற்றியே சிந்தித்தான் கார்த்தி..... தான் தன் அம்மாவிற்காக எவ்வளவோ செய்திருக்கார், தன் அம்மா இறந்தபோதுகூட சொந்தம் என்று வந்து எல்லா காரியத்தையும் செய்தவர் மாமா ..... அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒன்று என்றால், நிச்சயம் தான் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்..... மறுநாள் காலை அண்ணாச்சி சொன்ன தெருவில், பல வீடுகள்ளிலும் தன் அத்தையை பற்றி விசாரித்தான் கார்த்தி....


 வீடு இருக்கும் இடம் தெரிந்ததும் ஆர்வத்துடன் மூவரும் அந்த வீட்டை அடைந்தனர்..... அதை வீடு என்று சொல்ல முடியாது..... காற்று கொஞ்சம் பலமாக அடித்தால் சாய்ந்து விடும் கீற்று கொட்டகை அது..... இருவர் மட்டுமே அங்கு உறங்க முடியும் அளவிற்கு குறுகளாய் இருந்தது..... கதவுக்கு பதில் ஒரு விளம்பர பலகை சாத்து வைக்கப்பட்டிருந்தது...... வெளியில் நின்று "அம்மா... அம்மா" என்று அழைத்தான் கார்த்தி.... கிழிந்த சேலையுடன், உடலெங்கும் அழுக்குப்படிய வந்த அந்த பெண்ணின் வயது இருபது இருக்கலாம்.... ஆம், அது கார்த்தியின் மாமா மகளேதான்..... "நந்தினி" என்றான் கார்த்தி..... "ஆமா சார்.... நீங்க....." என்று இழுத்த அந்த பெண் "அத்தான்.... கார்த்தி அத்தான்" என்றாள் ஆச்சரியத்துடன்.....
"ஆமாம்மா.... நல்லா இருக்கியா?... அத்தை எங்க?" என்றான் கார்த்தி.....
"நான் இருக்கேன் அத்தான்.... அம்மா பக்கத்து வீட்டுக்கு பாத்திரம் விளக்க போயிருக்கு.... நான் கூட்டியாந்து வாறேன்..... நீங்க உள்ள வாங்க அத்தான்" என்று கார்த்தியை வீட்டிற்குள்அழைத்தாள் நந்தினி..... உள்ளே தொட்டிலில் குழந்தை உறங்கிக்கொண்டிருன்தது..... அதைப்பார்த்து கண்ணீர் விட்ட கார்த்தி, நந்தினியை  பார்த்து "குழந்தை பேரு என்னம்மா?" என்றான்.....
"பார்வதி அத்தான்.... அத்தை பேருதான்" என்று நந்தினி கூறியதும், கண்களின் நீரை அடக்க மாட்டாமல் அழுதுவிட்டான் கார்த்தி...... நந்தினி ஓடி சென்று அவள் அம்மாவை அழைத்து வந்தாள்..... படபடப்பும், அழுகையும் கலந்து நடையும் ஓட்டமுமாக வந்தாள் அத்தை.....
அத்தையை பார்த்த கார்த்தி வேறுபக்கம் திரும்பி நின்று கொண்டான்.... நந்தினியை அழைத்த கார்த்தி தன் கையில் வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து அவள் கையில் வைத்தான்.... புரியாமல் விழித்த நந்தினி, "ஐயோ! என்னத்தான் பண்றீங்க?... இதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்தாள்..... "இல்லம்மா, இது உன் குழந்தைக்காக நான் கொடுக்கிற பணம்.... வேணாம்னு சொல்லாத.... உன் வேலைக்கு மதி அண்ணாச்சிக்கிட்ட சொல்லிருக்கேன்.... முதல்ல நல்ல வீடா பார்த்து குடி போம்மா.... அடைமழை பேஞ்சா குழந்தை ரொம்ப கஷ்டப்படும்..." என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை குழந்தையை எடுத்து முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினான்.... "இருங்கத்தான்... சாப்பிட்டுட்டு போங்க.... வந்ததும் போரிங்களே.... எப்போ வருவீங்க மறுபடியும்?" என்றார் வெள்ளை மனம் மாறாமல் நந்தினி.... "இல்லமா என் கடமை முடிஞ்சுடுச்சு.... இனி நான் வரமாட்டேன்.... நான் போறேன்" என்றவாறு விறுவிறுவென்று வெளியே வந்தான்..... எதிரில் குறிக்கிட்ட அத்தை, "என்ன மன்னிச்சிருப்பா......" என்று ஏதோ சொல்ல விழைந்தார்.... குறிக்கிட்ட கார்த்தி, "உங்ககிட்ட நான் எதுவும் பேச விரும்பல..... எனக்கு நீங்க செஞ்ச துரோகத்தை மறக்குற அளவுக்கோ, மன்னிக்கிற அளவுக்கோ இன்னும் நான் ஞானி ஆகல..... இது என் மாமாவுக்கும், நந்தினிக்கும் நான் செய்ய வேண்டிய கடமை.... நான் செஞ்சேன், அவ்வளவுதான்.... இனி எல்லாம் அவ்வளவுதான்" என்றவாறு மகிழுந்தை நோக்கி விரைந்தான்....

இந்த எட்டு வருடத்தில் வாழ்ந்ததற்கு அடையாளமாக தன்னிடம் இருந்த கடைசி பணத்தையும் தன் மாமா குடும்பத்திற்கு கொடுத்த மன நின்னதியில் இருந்தான் கார்த்தி.....பதிலேதும் பேசாமல் அருணும் பிரகாசும் வியப்பு விலகாமல் வண்டியில் ஏறினர்.....மதியம் அருணின் அம்மா சமைத்த உணவை உண்டுவிட்டு மீண்டும் சென்னை திரும்பிட கிளம்பிக்கொண்டு இருந்தனர்.... குருவும் ராகவனும் தங்கள் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்துவிட்டனர்..... அனைவரும் பிற்பகலில் திருச்சியைவிட்டு கிளம்பினர்.... மாலை வரை முக்கொம்பு'வில் இருந்துவிட்டு செல்லலாம் என்ற கார்த்தியின் யோசனைக்கேற்ப கிளம்பினர்.... முக்கொம்புவை அடைந்ததும் குருவிற்கு சுற்றிக்காட்ட ராகவன் தனியாக அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.... சில்லென்ற காவிரி காற்று மேனியை சிலிர்க்க வைத்தது... மரத்தடியில் மூவரும் அமர்ந்து அந்த தென்றல் காற்றை ரசித்தனர்.... அப்போது சென்னையிலிருந்து அருணுக்கு அலைபேசி அழைப்பு வர, அலைபேசியை எடுத்துக்கொண்டு நடந்தவாறே பேசிக்கொண்டிருந்தான்.... "உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டங்களும், மனசும் இருக்குன்னு இப்போதான் தெரியுது கார்த்தி..." என்றான் பிரகாஸ்..... சிரித்த கார்த்தி, "ஏன் உனக்கு கஷ்டமே இல்லையா?" என்றான்..... "அப்டின்னு சொல்ல முடியாது... ஆனால் உங்க அளவுக்கு இல்ல" என்றான் பிரகாஸ்.... "ஆமா, நீ அருணுக்கு முன்னால வேற யாரையாச்சும் காதலிச்சிருக்கியா?" என்றான் கார்த்தி..... கொஞ்சம் தடுமாறிய பிரகாஸ், "என்ன திடீர்னு கேட்குறீங்க?" என்றான்.... "ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சதுதான், இப்போதான் அதுக்கு நேரம் வந்திருக்கு... சொல்லு" என்றான் கார்த்தி.... "ஹ்ம்ம்... காதலிச்சிருக்கேன்.... ஒரு பொண்ணை" என்றான் பிரகாஸ்.... ஆச்சரியத்தில் சிரித்த கார்த்தி, "அப்படியா?.... அப்போ நீ பை'யா?" என்றான்..... "அப்படி இல்ல.... சின்ன வயசுலேந்து பொண்ணுக பின்னாடிதான் சுத்துனேன், ஆனால் அருணை பார்த்தப்போ மட்டும் எல்லாமே தலைகீழா மாறிடுச்சு..... ஆனால், அருனைத்தவிர வேறு பசங்கள பாக்க பிடிக்கல.... நான் கே, பை'னு பிரிச்சு பார்க்க விரும்பல..... " என்றான் பிரகாஸ்..... "ரொம்ப வித்தியாசமா இருக்குடா.... சரி சொல்லு..... உன் முதல் காதல் என்னாச்சு?" என்றான் கார்த்தி.... சிரித்த பிரகாஸ், "நான் தான் அந்த பொண்ணை லவ் பண்ணேன், ப்ரோப்போஸ் பண்ணேன்.... அவதான் வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லி மறுத்துட்டா....ப்ளஸ் டூ'ல நடந்த விஷயம்.... அதுக்கப்புறம் நான் சென்னைக்கு காலேஜ் படிக்க வந்துட்டேன்.... அவளுக்கு மெரிட்ல மெடிக்கல் சீட் கிடைச்சு, கோயம்பத்தூர் போய்ட்டா.... அதுக்கப்புறம் நான் அவளை பார்க்கவே இல்ல... அந்த சோகம் மறந்து இருந்தப்போ எதேச்சையா பார்த்ததுதான் நம்ம கார்த்திய..... பார்த்ததும் பத்திக்கிச்சு..... அவ்வளவுதான்... என் காதல் கதைய திருக்குறள் மாதிரி ரெண்டே அடில சொல்லிடலாம்" என்றான் .....
"இப்பவும் நீ அருணை லவ் பண்றதானே?" என்றான் கார்த்தி.... சற்று அமைதிக்கு பின், "தெரியல... ஆனால் உங்கள அவர் எப்போ லவ் பன்றார்னு தெரிஞ்சிதோ, அப்பவே நான் என்னை மாத்திக்க ட்ரை பண்ணிட்டேன்....." என்றான் பிரகாஸ்.....
"இல்ல பிரகாஸ்.... நீதான் அவனை மாத்தணும்..... வாழ்க்கை முழுசும் நீ அவனோடவே இருக்கணும்.... என்னை பற்றிய நினைவுகள் எல்லாம் அவன் மறக்குற அளவுக்கு நீ மாத்தணும்.... அது உன்னால மட்டும்தான் முடியும்" என்றான் கார்த்தி....

.
"என்ன பேசுறீங்க நீங்க?..... நிச்சயம் நீங்களும் அருணும் ஒண்ணா வாழனும்.... உங்க காதலை கம்பேர் பண்ணினா, என் காதல் ரொம்ப கம்மி..... நீங்க கியூர் ஆனபிறகு நிச்சயம் நீங்க ரெண்டுபேரும் ஒண்ணா வாழ்வீங்க" என்றபோது பிரகாசின் கண்களில் நீர் முட்டியது......
"நடக்காத விஷயத்தை, எந்த நம்பிக்கையை வச்சு நாம நடக்கும்னு நம்புறது..... எனக்கே என் முடிவு தெரியும் பிரகாஸ்..... நான் நிச்சயம் இன்னும் சில நாட்கள்தான் உயிரோட இருப்பேன்.... என் உடம்புக்குள்ள நடக்குற மாற்றம் எனக்கு மட்டும்தான் தெரியும்.... இனியும் நான் அருனோட வாழணும்னு நினைக்கிறது பேராசை.... நீயும் அருணும் ஒண்ணா வாழ்ந்தாவே அதுவே எனக்கு பெரிய ஆறுதல்தான்..... நான் இறந்ததுக்கு பின்னாடி, நிச்சயம் அருணை நீதான் எப்படியாச்சும் மாத்தணும்...." என்று சொன்னபோது கார்த்தியின் கண்களின் நீர் வழிந்தோடியது.... பிரகாஸ் பேச முடியாமல் திகைத்து நின்றான்..... எந்த சூழலையும் எளிதில் சமாளிக்கும் பிரகாஸ் இப்போது திகைத்து நின்றான்..... மேலும் தொடர்ந்த கார்த்தி, "நான் அருன்கிட்டையும் இதுபற்றி ஊருக்கு போனதுக்கப்புறம் பேசுறேன்.... நிச்சயம் நான் சொன்னா அவன் கேட்பான்.... நீயும் நான் சொல்றத கேட்பனு நம்புறேன்" என்றான் கார்த்தி...... பேச முடியாமல் இருந்த பிரகாஸ், தலை அசைத்து தன் முடிவை ஏற்பதாக தெரிவித்தான்..... பின்னர் நேரம் ஆனதால், அனைவரும் சென்னை நோக்கி விரைந்தனர்.... வரும்போது உற்சாகத்துடன் துள்ளிக்குதித்த கார்த்தி, இப்போது சோகம் தழுவவே வந்தான்.... பிரகாசின் எண்ணமெல்லாம் கார்த்தியின் பேச்சை பற்றியே இருந்தது... தான் அழுதுவிடுவேனோ? என்ற அச்சத்தில் தலையை கவிழ்த்தவாறே வந்தான் பிரகாசும்......
சென்னையை அடைந்தனர் அனைவரும் .... மறுநாள் வழக்கம்போல அருண் பணிக்கு கிளம்பினான்....
பணிக்கு கிளம்பிய அருணை தன் அருகில் அழைத்தான் கார்த்தி.... கார்த்தியின் முகம் மிகவும் வாடி இருந்தது, உடல் மிகவும் களைப்பாக காணப்பட்டது.... பயனக்களைப்பாக இருக்கும் என்று நினைத்த அருண், "என்ன கார்த்தி?" என்றான்....  "எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கு அருண்" என்றான் கார்த்தி....... கண்கள் விரிய ஆவலுடன், "என்னடா சொல்லு?" என்றான் அருண்.... "நான் இறக்குரதுக்கு முன்னாடி கடைசியா பார்க்கிறது உன்னோட முகமாத்தான் இருக்கணும், என் உயிர் உடம்புலேந்து பிரியுரவரைக்கும் உன் கையை பிடிச்ச்சவாறே உயிர் பிரியனும், என் கடைசி மூச்சு காற்று உன் சுவாசத்தோட கலக்குற அளவுக்கு நெருக்கமா இருக்குற நேரத்துலதான் நான் இறக்கணும்" என்றான்..... முகம் மாறிய அருண், "லூசு மாதிரி ஏண்டா பேசுற?.... இனிமேல் இப்படி பேசுனா அடிதான்..... உடம்பு சரி இல்லையா?.... நான் இன்னைக்கு லீவ் வேணும்னா போட்டுடவா?" என்றான் அருண்..... "அதெல்லாம் வேண்டாம்..... என்னமோ சொல்லனும்னு தோனுச்சு.... அதான்.... இதெல்லாம் சொல்லவே முடியாமல் போயிடுமோன்னு மனசுக்குள்ள ஒரு உறுத்தல்... அதான்.... அப்புறம், சாயந்திரம் இன்னொரு விஷயம் உன்கிட்ட பேசணும்... அது உன் வாழ்க்கையை பத்திதான்.... சாயந்திரம் வா பேசிக்கலாம்" என்று கூறிவிட்டு அருணை பணிக்கு செல்ல பணித்தான் கார்த்தி.... அரைமனதோடு வேண்டா வெறுப்புடன் பணிக்கு சென்றான் அருண்.... அருண் சென்ற சில நிமிடங்களில் அங்கு பிரகாஸ் வந்தான்.... எப்போதும் பிரகாசின் முகத்தில் காணப்படும் உற்சாகம் அன்று இல்லை.... வராத சிரிப்பை வற்ப்புறுத்தி வரவழைத்து புன்முறுவல் செய்தான் பிரகாஸ்.... கார்த்தி வழக்கத்தைவிட  இன்று மிகவும் சோர்வுடன் காணப்பட்டதை கண்ட பிரகாஸ், "கார்த்தி, ஆர் யூ ஓகே?.... முகமெல்லாம் வீங்கிருக்கே, என்னாச்சு?" என்றான் பதட்டத்துடன்.... "அதெல்லாம் ஒண்ணுமில்ல பிரகாஸ், நான் சொன்னதை நீ யோசிச்சு பார்த்தியா?" என்றான்.... தலையை கவிழ்த்தபடி பிரகாஸ், "ஹ்ம்ம்.... என்னால முடியல கார்த்தி.... நான் உங்களுக்காக ஒத்துக்கறேன்.... ஆனால், அருணை மாற்ற முடியும்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல.... இது நடக்க வாய்ப்பே இல்ல கார்த்தி" என்றான் பிரகாஸ்..... "அருன்கிட்ட நான் பேசுறேன்.... அவன் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டான்தான்... அவன் ஒரு குழப்பவாதி, உண்மையை நாம தெளிவா விளக்கி சொன்னோம்னா நிச்சயம் புரிஞ்சுக்குவான்.... நான் அவன்கிட்ட பேசுறேன்... ஓகேதானே?" என்றான் கார்த்தி.... "சரி கார்த்தி, உங்களுக்காக நான் ஒத்துக்கறேன்" என்றான் பிரகாஸ்.... "எனக்கென்னமோ எனக்கு ஏதோ ஆகப்போகுதுன்னு உள்ளுணர்வு சொல்லுது.... என் எட்டு வருஷ நரக வாழ்வை இந்த எட்டு மாசம் நிச்சயம் மாற்றி இருக்கு....அதனால நான் இறந்தால் கூட மகிழ்ச்சியோடத்தான் இறப்பேன்" என்று கூறிக்கொண்டிருந்த போது கார்த்திக்கு மூச்சு திணறல் உண்டானது....

உடனே ஓடி சென்ற பிரகாஸ் செவிலியர்களை அழைத்து வந்தான்....வந்தவர்கள் அவசர அவசரமாக மருந்தை உடைத்து ஊசி மூலம் கார்த்திக்கு செலுத்தினர்.... ஆனால் மூச்சு திணறல் இன்னும் குறையாததால் ஓடி சென்று செயற்கை சுவாச கருவியை கார்த்திக்கு பொருத்தினர்..... எல்லாவற்றையும் அழுகையுடன் கவனித்துக்கொண்டிருந்தான் பிரகாஸ்.... உடனே அருணை அழைத்து விஷயத்தை கூற , அடுத்த பத்து நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தான் அருண்..... மருத்துவர் விஜயுடன் சில ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கார்த்தியை சுற்றி நின்றனர்.... அறையின் ஓரத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தான் பிரகாஸ்.... கார்த்தியின் முகத்தில் செயற்கை மூச்சு மாஸ்க் பொருத்தப்பட்டுள்ளது, உடலிலிருந்து பல ஒயர்கள் பொருத்தப்பட்டு அனைத்து பாகங்களும் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது..... மருத்துவர்கள் கணினி திரையை பார்த்தபடி தங்களுக்குள் சீரியசாக விவாதித்துக்கொண்டிருன்தனர்.....

சில நிமிடங்களிலேல்லாம் கார்த்தி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டான்.....
தீவிர சிகிச்சை பிரிவில் கார்த்தி அதிதீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தான்..... அருண் வந்து பார்த்தபோது பிரகாஸ் அழுதுகொண்டே  சிறிய கண்ணாடி வழியில் உள்ளே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான்..... வெளியில் இருந்த நாற்காலியில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான் குரு..... பிரகாசை பார்த்த அருண் இன்னும் மனம் உடைந்தான்.... அழுத்தமான அருணின் மனம் அவ்வளவு இலகிப்போய் கண்ணீர் கொட்டியது... யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று புரியாமல் திகைத்து நின்றனர் இருவரும்.... மருந்துகள் வாங்கிக்கொடுப்பது, பணம் கட்டுவது என்று ராகவன் எல்லா வேலைகளையும் சேர்த்து செய்தான்..... கண்ணாடி வழியில் அருணும் உள்ளே நடந்தவற்றை பார்த்தான்.... மருத்துவர் விஜய் வெளியே வருவது தெரிந்தது.... ஓடி சென்று பரபரப்புடன் அவர் முன்பு நின்றான் அருண், உடன் பிரகாசும்... "டாக்டர், என்னாச்சு?.... திடீர்னு ஏன் இப்படி?" என்றான் உடைந்த குரலில் அருண்.....
"சாரி அருண், நான் சொன்னபடி அவர் உடம்பு எல்லா எதிர்ப்பு சக்திகளையும் இழந்துடுச்சு..... இனிமேல் என்ன மருந்து கொடுத்தாலும் அவரை காப்பாற்ற முடியாது.... நுரையீரல் மொத்தமா செயலிழக்குற நிலைமையில இருக்கு.... அதான் மூச்சு தினரலுக்கான காரணம்....  இன்னும் நிமிஷக்கனக்கில்தான் அவர் உயிரோட இருக்க வாய்ப்புண்டு.... உங்களை ஏமாற்றி அவரை இன்ட்டுபேட் செஞ்சு பணம் பறிக்க நான் விரும்பல..... ஐ அம் ரியலி சாரி அருண்" என்றார் மருத்துவர்.... மொத்த உலகமும் உடைந்ததைப்போல உணர்ந்தான் அருண்.... இடிந்துபோய் சுவற்றில் சாய்ந்தபடியே தரையில் அமர்ந்தான்....  உடலின் மொத்து வழுவும் காணாமல் போனதைப்போல உணர்ந்தான்.... பிரகாஸ் ஆறுதல் கூற முடியாத அளவுக்கு உடைந்து அழுதுகொண்டிருந்தான்.... அதை கவனித்த குரு, இருவரையும் அருகில் இருந்த இருக்கையில் அமரவைத்தான்..... கார்த்தியை உள்ளே சென்று ஒவ்வொருவராக பார்க்க அனுமதித்தார் மருத்துவர்.... அருண் முன்னே செல்ல அவன் பின்னால் கொஞ்சம் தள்ளியே சென்றான் பிரகாசும்....

 கார்த்தியின் படுக்கையின் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்த அருண் தன் அழுகையை கார்த்தி முன்பு காட்டக்கூடாது என்பதால் முடிந்தளவு மறைத்தான்....  இப்போது கார்த்தி தன் முகத்தின் மாஸ்க்கை கழற்றி ஏதோ கூற முயன்றான்.... ஆனால் மாஸ்க் கழற்றியபிறகு மூச்சுத்திணறல் அதிகமானது... அதனால் செவிலியர் கார்த்தியின் செயலை தடுத்தார்.... இப்போது எதுவும் கார்த்தியால் பேசமுடியாத சூழல்.... கைகளை பிரகாசை நோக்கி நீட்டினான்.... கார்த்தி என்ன சொல்ல விழைகிறான் என்பது பிரகாசுக்கு புரிந்தது, ஆனால் அதை அருணிடம் சொல்ல அது தருணமல்ல என்பதால் அமைதியாக நின்றான்..... இப்போது அருணின் கைகளை இருக்கிப்பிடித்தான் கார்த்தி.... "கடைசியா உன் கையை பிடிச்ச்சபடியேதான்என் உயிர் பிரியனும் அருண்" என்ற கார்த்தி காலையில் சொன்ன குரல் இப்போது மனக்கண் முன்னால் எதிரொலித்தது..... சில நொடிகல்லுக்கு பிறகு கார்த்தியுடன் பொருத்தப்பட்ட கணினி திரைகள் சத்தம் எழுப்ப தொடங்கியது.... மருத்துவர்களும், செவிலியர்களும் ஓடிவந்து பார்த்தனர்.... அருனையும் பிரகாசையும் வெளியே செல்ல அறிவுறுத்திய மருத்துவ குழு, பல மருந்துகளையும் பரபரப்புடன் கார்த்திக்குள் செலுத்தியது..... ஒருவர் கார்த்தியின் மார்பில் ஓங்கி ஓங்கி அழுத்தினார்..... சில நிமிடங்களுக்கு பிறகு எது நடக்க கூடாது என்று கடைசி நிமிடம்வரை அருணும் பிரகாசும் நினைத்தார்களோ, அந்த கார்த்தியின் மரண செய்தி மருத்துவர்கள் மூலம் வந்தடைந்தது.....  எப்போதும் பொறுமையாகவும், கடுகடுப்புடனும் காணப்படும் அருண் அன்று சிறு குழந்தையைப்போல தரையில் விழுந்து அழுதான்..... குருவும் ராகவனும் எவ்வளவோ முயன்றும் அருணின் திமிரலை கட்டுப்படுத்த முடியவில்லை.... மயக்க நிலைக்கு வந்த அருணை கொஞ்சம் தேற்றியவாறு மின்சார மயானத்திற்கு அழைத்து சென்றனர்..... தன் உடலை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு, உடலை தீயிட்டு கொழுத்தும் அந்த கொடுமையை கண்களால் பார்க்க சகிக்காதவனாக திரும்பிக்கொண்டான் அருண்.... இனி கார்த்தி தன் வாழ்வில் வரப்போவதே  இல்லை, வாழ்க்கை முழுவதும் அந்த சோக வடுவை சுமக்கப்போவதை எண்ணி மனம் நொந்தான்.... இந்த நிமிடமே தன் உயிர் போகாதா? என்று இறைவனை வேண்டினான்.... இறைவன் மீது கோபப்படக்கூட முடியாத அளவிற்கு மனக்குழப்பம் மிகுந்து காணப்பட்டான் அருண்..... வீட்டிற்கு பல யுத்தத்திற்கு பின்பு அருணை அழைத்து சென்றனர் அனைவரும்....  கார்த்தியின் இழப்பு நிச்சயம் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.... தன் வீட்டில் தான் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் கார்த்தியின் தடம் பதிந்திருப்பதைப்போல உணர்ந்தான்.... கார்த்தி முதன்முதலில் அமர்ந்த அந்த இருக்கையில் தலை புதைத்துப்படுத்தான்.... எங்கு பார்த்தாலும் கார்த்தியின் உருவம்தான், எங்கு திரும்பினாலும் கார்த்தியின் குரல்தான், எதை தொட்டாலும் கார்த்தியின் நினைவுகள்தான்.....
ஆண்டவா, ஏன் என்னை உயிரோடு கொல்கிறாய்? என்று தன்னை மீறி அழுதான் அருண்.... எவ்வித பேச்சோ, ஆறுதலோ இல்லாமல் பிரகாஸ் ஒரு மூலையில் படுத்து அழுதான்.... அழுவதைத்தவிற இந்த துக்கத்தை எப்படி குறைக்க முடியும்?.... மறுநாள் காலைவரை அவரவர் பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் அழுகையை மட்டும் அரவனைத்தபடி இருந்தனர்.... காலையில் ராகவன் அனைவருக்கும் குடிக்க தேநீர் வாங்கிவந்தான்.... வாங்கிய தேநீர் மாலைவரை ஆடை படர்ந்து, ஈக்கள் மொய்த்து, காற்றில் கரைந்து போனதே தவிர யாரும் ஒரு சொட்டு கூட பருகவில்லை....
அந்தி சாய்ந்தபிறகு மெதுவாக எழுந்த பிரகாஸ் அருண் உறங்கிக்கொண்டிருப்பதை கவனித்தான்.... தாகத்திற்கு தண்ணீர் அருந்திவிட்டு, மேலும் ஒரு குவளையில் நீர் எடுத்து அருணை எழுப்பினான்.... அப்போதுதான் அருண் மயங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்தான் பிரகாஸ்..... உடனடியாக ராகவனையும் குருவையும் அழைத்த பிரகாஸ், எவ்வளவு முயற்சி செய்தும் அருணை கண்விழிக்க வைக்க முடியவில்லை.... உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான்  அருண்.... நரம்பு வழியாக மருந்தும், சலைனும் ஏற்றப்பட்டது..... மருத்துவரிடம் கேட்டபோது, "இது ஹைப்போக்லைசீமியா.... உடலில் உள்ள க்ளுக்கொஸ் லெவல் ரொம்ப குறைந்ததால மயங்கிட்டாறு..... இன்னும் அரைமணி நேரத்துல சரி ஆகிடுவாறு.... எழுந்ததும் சாப்பிட எதாச்சும் கொடுங்க" என்று கூறினார்....அருணின் பக்கத்தில் பிரகாஸ் அமர்ந்திருக்க, கதவருகில் ராகவனும், மற்றொரு இருக்கையில் குருவும் அமர்ந்திருந்தனர்..... சில நிமிடங்களுக்கு பின்னர் கண்விழித்த அருண், தனக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருப்பதை  கவனித்தான்.... உடலில் கொஞ்சம் வழு வந்ததை உணர்ந்தான்.... கண்களை விழிக்கும் முன்னரே, கார்த்தியின் உருவம் கண் முன்னால் நிழலாடியது.... அழுகையும், கோபமுமாக தன் கையில் ஏறிக்கொண்டிருந்த நரம்பு ஊசியை பிடுங்க முயன்றான்...  பதறிய பிரகாஸ், அருணின் கையை தடுத்து நிறுத்தினான்.... "விடு பிரகாஸ்.... ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து வாழறதுக்கு, ஒரே அடியா செத்திடுறேன்.... என்னை நிம்மதியா போக விடு" என்று அழுதவாறே மீண்டும் ஊசியை பிடுங்க முயன்றான்..... ராகவனும் குருவும் அதைக்கண்டு அருணின் முன்னால் வந்து தடுக்க முயற்சிக்கும்போது, யாரும் எதிர்பாராத விதமாக அருணின் கன்னத்தில் "பளார்" என்று அறைவிட்டான் பிரகாஸ்..... ராகவனும் குருவும் அதிர்ச்சியானார்கள்.... சூழ்நிலை அறிந்து அறையைவிட்டு வெளியேறினர்.... அருண் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.... கன்னத்தில் கைவைத்தபடி, கண்களின் நீரோடு, அதிர்ச்சியோடு வைத்தகண் விலகாமல் பிரகாசையே பார்த்துக்கொண்டிருந்தான் அருண் ....

கன்னத்தில் இருந்த கையை தன் கையேடு இணைத்த பிரகாஸ், "நீ சாகுரதால இறந்த கார்த்தி மறுபடியும் வரப்போறானா?.... நீ இறந்துட்டின்னா, அதனால பாதிக்கப்படப்போரவங்களை நினச்சு பார்த்தியா?.... உன் அம்மா, அப்பா, ராகவன் அண்ணன், நான் எல்லோரையும் நீ நினச்சு பார்த்தியா?.... எந்த விஷயத்துக்கும் இறப்பு மட்டுமே முடிவில்ல..... கார்த்தி எப்படியெல்லாம் உன்னை வாழணும்னு நினைச்சாரோ அப்படி வாழ்றதுதான் கார்த்திக்கு நீ செய்யப்போற உண்மையான காதல் கடன்.... உன்னை போலிஸ் டிரஸ் ல பார்க்குற ஒவ்வொரு முறையும் கார்த்தியோட கண்கள்ள தெரியுற மகிழ்ச்சிய பார்த்திருக்கியா?... அவனுக்காக நீ இன்னும் ரொம்ப நாள் வாழனும்.... இனிமேலாவது இப்படி பைத்தியக்காரத்தனமா எதாவது செய்யாம மத்தவங்களையும் நினச்சு பார்த்து முடிவை எடு.... காதலனோடு வாழ்றது மட்டும் காதல் இல்ல, காதலனுக்காக, அவனோட நினைவுகளோட வாழ்றதுதான் உண்மையான காதல்...." என்று கொட்டித்தீர்த்தான் பிரகாஸ்.... கண்களில் நீர் வழிய பிரகாசை பார்த்த அருண், குழறிய மொழியில் "என்னால அவனை மறந்து இனி வாழ முடியாதுடா..... நீ சொல்றமாதிரி இனி கார்த்திக்காக நான் அவன் விரும்பின போலிஸ் டிப்பார்ட்மெண்ட்'ல நான் அவன் நினச்ச்சபடியே வேலை பார்க்குறேன்.... எனக்கு பிடிக்களைனாலும் இனி அவனுக்காக நான் வாழறேண்டா" என்று அரு கூறியபோது பிரகாசிற்கு கார்த்தி கூறியது நினைவுக்கு வந்தது..... "ஒருவேளை கார்த்தி அருணிடம் என்னுடன் வாழ்க்கை முழுசும் ஒண்ணா வாழனும்னு கேட்டு, அருண் ஒத்துக்கொண்டிருந்தா தன்னையும் இந்த போலிஸ் வேலையைப்போல வேண்டா விருப்பாகத்தான் காதலித்திருப்பான்.... நல்ல வேலையாக அப்படி கார்த்தி சொல்லல.... அருணுக்கு உண்மையாவே என் மீது காதல் வந்தால் அவனை ஏற்றுக்கலாம்... இனியும் அருணை எதற்காகவும் நிர்பந்திக்கும் நிலைமைக்கு கொண்டுபோகக்கூடாது" என்ற முடிவெடுத்தான் பிரகாஸ்.... கார்த்தி தன்னிடம் சொன்னதை இனி ஒருபோதும் அருணிடம் சொல்லக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான்..... சில நாட்களுக்கு பிறகு பிரகாஸ் சொன்னதைப்போல தன் பணிக்கு திரும்பினான் அருண்.... ஒரு மாதத்திற்கு பிறகு குருவும் மும்பைக்கு தன் பழைய வேலைக்கு சென்றுவிட்டான்.... அவ்வப்போது தன் விடுதியிலிருந்து வந்து பிரகாஸ் அருணை கவனித்துக்கொண்டான்.... எவ்வளவோ முயன்றும் அருணை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியவில்லை பிரகாசுக்கு....  நாட்கள் வாரமானது, வாரங்கள் மாதமானது, மாதங்களும் இப்போ ஒரு வருடமானது..... எவ்வளவோ முயன்றும் அருணை சிறிதளவும் மாற்ற முடியவில்லை.... அவ்வப்போது யாரும் அறியாமல் அழுவதும், யாரிடமும் மனம் விட்டு பேசாமலும், முகம் முழுக்க சோகத்தை சுமந்தபடியும் காணப்பட்ட அருணை காணும் ஒவ்வொரு நிமிடமும் பிரகாஸ் மனம் நொந்து வருந்தினான்.....
அப்படி ஒருநாள் பிரகாஸ் அருணின் வீட்டிற்கு வந்தபோது அருண் இன்னும் அதிக மனக்குழப்பத்துடன் காணப்பட்டான்.... அருணுக்கு குழப்பங்கள் புதிதல்ல என்றாலும், கார்த்தி இறப்பிற்கு பிறகு ஓரளவு மாறி இருந்தான் இந்த ஒரு வருடத்தில் இப்போது.... ஆனால் இன்று பழையபடி குழப்பம் அதிகமானதைகண்ட பிரகாஸ் ராகவனிடம் இதைப்பற்றி விசாரித்தான்.... "ஆமா பிரகாஸ்.... ஒரு ரெண்டுநாளா அருண் ரொம்ப மனகுழப்பத்துல இருக்கான்.... அதற்கு காரணம்......" என்று இழுத்தான் ராகவன்.....
"என்ன காரணம் அண்ணே?" என்றான் பிரகாஸ்....
"அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல.... அதனால, அருனோட கல்யாணத்துக்கு வீட்ல அவசரப்படுத்துறாங்க..... அருணுக்கு கல்யாணம் ஆகலைன்குற கவலைலையே அவங்க அம்மாவுக்கு உடம்பு ரொம்ப சரி இல்லாமல் போச்சு.... அதனால என்ன முடிவெடுக்குரதுன்னு தெரியாமல் தினறுறான்" என்று கூற போலியாக சிரித்த பிரகாஸ், "அவனுக்கு காபி வேணுமா? டீவேணுமா?னு கேட்டா கூட சரியா முடிவெடுக்க தெரியாதவன்.... இந்த பிரச்சினைக்கு மட்டும் ஈசியா பதில் சொல்லிடுவானா என்ன" என்று முணுமுணுத்தான்.....  அடுத்தநாள் முழுவதும் அருணை பார்க்கவரவில்லை பிரகாஸ்.... இந்த ஒருவருடத்தில் ஒருமுறை கூட அருனாக பிரகாசிற்கு அலைபேசியில் அழைத்ததில்லை, பிரகாசை பார்க்க வருவதில்லை..... அருணை விட்டு விலகிடலாமா? என்று எண்ணம் பலமுறை தோன்றியதுண்டு பிரகாசிற்கு.... ஒருவேளை அருண் தன்னை காதலித்து, அதை வெளிப்படுத்தாமல் மனதிற்குள் புதைத்து வைத்திருந்தால் தன் பிரச்சினையையும் போட்டு மனதில் குழப்பிக்கொள்வானே என்கிற அச்சத்தால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கார்த்தியின் சொல்லுக்காகவும், அருணின் மனதிர்காகவும் காத்திருந்தான் பிரகாஸ்..... இரண்டு நாட்கள் அருணை பார்க்கவில்லை என்றதும் மனதிற்குள் ஒரு வருத்தம் வழுத்தது.... அந்த நேரத்தில் ராகவனிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.....
நேரம் பத்து மணிக்கு மேல், இந்த நேரத்தில் ராகவனின் அழைப்பு பிரகாசை குழப்பியது.... அழைப்பை ஆன் செய்ததும் ராகவனின் குரலில் பதற்றம் தெரிந்தது......
"ஹலோ பிரகாஸ், நீ இப்போ எங்க இருக்க?" என்றான் ராகவன் பதட்டம் கலந்த குரலில்......
"நான் ஹாஸ்டல் ரூம்ல இருக்கேன் அண்ணா..... என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு பதற்றமா பேசுறீங்க?" என்றான் பிரகாஸ்.....
"உடனே நீ நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒயின்ஷாப் பாருக்கு போ.... ராஜா ஏ.சி பார்.... " என்று குரலில் அவசரப்படுத்தினான் ராகவன் ....



"என்ன ப்ராப்ளம் அண்ணே, இந்த நேரத்துக்கு அங்க எதுக்கு போக சொல்றீங்க?" என்றான் கலவரமான பிரகாஸ்....
"ஐயோ நான் ஒரு கேஸ் விஷயமா செங்கல்பட்டு வந்துட்டேன்..... அங்க பார்ல ஏதோ ப்ராப்ளமாம்.... அருண் இன்னைக்கு கண்ட்ரோல் இல்லாம குடிச்சிருப்பான் போல.....  அடிதடி பிரச்சினையாம்... போயி அவனை வீட்ல விட்டுட்டு வந்துடு.... அவன் தூங்குற வரைக்கும் அங்க இருப்பா..... நான் காலைலதான் வருவேன்..... " என்று படபடவென்று கொட்டி முடித்தான் ராகவன்....
உடனே தன் நண்பனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட மதுபான பாருக்கு சென்றான் பிரகாஸ்..... அங்கு விசாரித்தபோது அலுவலக அறையில் தலையில் கட்டுடன் சுயநினைவு இல்லாமல் மேசையில் தலை வைத்து படுத்திருந்தான்.... அங்கிருந்த மேலாளரிடம் கேட்டபோது, "சாரி சார்.... எங்களுக்கே தெரியாமல் நடந்திடுச்சு.... நாலஞ்சு பேரு அடிச்சு போட்டுட்டாங்க..... சாரை எனக்கு நல்லா தெரியும்... அதான் உடனே ஸ்டேசன்'கு தகவல் கொடுத்திட்டேன்.... தலைல காயம் பட்டிடுச்சு..... இப்போ பரவாயில்ல.... கூட்டிட்டு போங்க சார்.....  இனிமேல் தனியா சாரை விடாதிங்க" என்று அக்கறையோடு அனுப்பிய மேலாளருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அருணை தோள் சாய்த்து தானி மூலம் வீட்டில் சேர்ப்பித்தான் பிரகாஸ்....  தான் எங்கு இருக்கிறேன்?.. என்ன செய்கிறேன்? என்கிற சுயநினைவு எதுவும் இல்லாமல் இருந்தான் அருண்..... எலுமிச்சம்பழம் எடுத்து சாறு பிழிந்து கொடுத்தான் பிரகாஸ்,... சிறிது நேரத்திற்கு பிறகு கொஞ்சம் தெளிவானவனைப்போல காணப்பட்டான்..... கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது.... எதனால் அழுகிறான்? என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்பினான் பிரகாஸ்..... பின்னர் கைத்தாங்கலாக அருனின் படுக்கை அறைக்கு கொண்டுபோய் படுக்க வைத்தான் பிரகாஸ்... ஆனால் படுக்காமல் மீண்டும் மீண்டும் எழ முயற்சித்தான் அருண்.... கட்டாயப்படுத்தி படுக்க வைத்துவிட்டான் பிரகாஸ்..... ஆனாலும் அருண் மீதுள்ள அக்கறையால் அவனும் அங்கேயே படுத்துவிட்டான்..... நன்றாக ஆழ்ந்து உறங்கிய நேரத்தில் தன் மீது ஒருவித அழுத்தத்தை, பாரத்தை உணர்ந்தான் பிரகாஸ்.... திடுக்கிட்டு விழித்த பிரகாஸ் அதிர்ச்சியானான்.... காரணம், பிரகாசை கட்டிப்பிடித்து, தன் கால்களை பிரகாசின் மீது போட்டு முத்தம் கொடுக்க முயன்றான் அருண்..... திமிறி எழ முயன்ற பிரகாசால் ஒரு கட்டத்திற்கு மேல் தடுக்க முடியவில்லை..... இது சரியா? தவறா? என்ற எண்ணம் தெளிவாகும் முன்னரே எல்லாமும் முடிந்துவிட்டது இருவருக்குள்ளும்.....  தன் ஆண்மையை பாய்ச்சிய களைப்பில் அருண் களையப்பட்ட ஆடைகளுடன் கிடந்தான்....  ஏனோ ஒருவித மன்மத மயக்கத்துடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும் பிரகாஸ் அருனுடனான உறவை எண்ணி மகிழ்ந்தான்....தன் மீது அருணுக்கு உண்மையாகவே காதல் இருப்பதால்தான் இவ்வாறு செய்திருக்கிறான் என்ற ஆனந்தம் இன்னும் பிரகாசை செழிப்பாக்கியது..... எல்லா மகிழ்ச்சியையும், இன்பங்களையும் பிரகாஸ் எண்ணிக்கொண்டிருக்கும்போது அருண் ஏதோ புலம்பியது பிரகாசின் காதுகளில் விழுந்தது..... நன்றாக உற்று கவனித்தான் பிரகாஸ்.... "சாரிடா.... உன்னைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.... என்ன மன்னிச்சிடுடா.... ப்ளீஸ் என்னைய மன்னிச்சிடு..." என்ற புலம்பல்கள் பிரகாசின் காதுகளில் விழுந்தது.....

பிரகாசின் மனதிற்குள் மத்தாப்பு படர்ந்தது... இவ்வளவு காலமும் தன் மீது அருண் காதலித்ததை மறைத்தே வைத்திருக்கிறான் என்று எண்ணினான் பிரகாஸ்.... தான் நினைத்ததைப்போலவே தன் மனதிற்குள்ளே இவ்வளவு காலமும் காதலை வைத்திருந்த அருண் இப்போது வெளிக்கொண்டு வரும் வார்த்தைகள் மூலம் காதலை வெளிப்படுத்தினான் என்று மனம் மகிழ்வானான் பிரகாஸ்.... மேலும் புலம்பல்கள் பிரகாசின் காதுகளில் விழுந்தது..... "என்ன மன்னிச்சிடுடா..... என்னையும் உன்கூட கொண்டு போயிடு.... கார்த்தி.... சாரிடா கார்த்தி.....ஐ லவ் யூடா கார்த்தி... உன்ன மறந்துட்டு நான் இனி வாழவே முடியாதுடா...." என்ற புலம்பல்களை கேட்டவுடன் சப்த நாடிகளும் நிலைகுழைந்து போனது பிரகாசிற்கு.... அப்படியானால், இவ்வளவு நேரமும் அருண் மன்னிப்பு கேட்டது கார்த்திக்குத்தான் என்று நினைக்கும்போது பிரகாசின் மனம் ரணமாகிப்போனது..... அருணின் மனதில் தான் இத்தனை வருடங்களும் ஒரு சிறிய தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை என்று நினைக்கும்போது அழுகையும் ஆத்திரமும் தன்னை ஆக்கிரமித்தது பிரகாசிற்கு..... புலம்பல்களை அதற்கு மேலும் கேட்க முடியாதவனாக பிரகாஸ் எழுந்து ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.... இரவெல்லாம் அழுது அழுது கண்களில் கண்ணீர் வற்றிப்போனது, முகமெல்லாம் வீக்கமானது, கண்ணீர் வடிந்த முகமெல்லாம் பிசுபிசுத்து போய் பிரகாசின் முகங்களை கோரமாக்கியது.... எவ்வளவு நேரம் அழுதான்? என்று அவனுக்கே தெரியவில்லை..... வழக்கம்போல காலை ஆறு மணிக்கு எழுந்த அருண் தன் தலையில் கட்டியிருந்த கட்டை தொட்டுப்பார்த்தபோது முந்தைய நாள் இரவு பாரில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்று நினைவுக்கு வந்தது.... யாரோ ஒருவர் உதவி மூலம் வீட்டிற்கு வந்தது நிழல் போல நினைவிற்கு வந்தது.... ஆனால் யார் அது? என்ன நடந்தது? என்று சரியாக புரியவில்லை.... கலைந்திருந்த தன் உடையை பார்த்தும், சிந்தியிருந்த ஆண்மையை பார்த்தபோதும் விபரீதமாக ஏதோ நடந்திருப்பதை உணர்ந்த அருண் அவசரமாக எழுந்து வெளியே வந்தான்.... பிரகாசின் கோலத்தைக்கண்ட அருண் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தான்.... பிரகாசை இப்படி ஒரு கோலத்தில் இதுவரை பார்த்திராத அருண் , இன்னும் கலங்கிப்போய் தயக்கத்துடன் பிரகாசின் முன்பு அமர்ந்து, "சாரி பிரகாஸ்.....
என்ன நடந்ததுன்னு எனக்கு சரியா தெரியல.... ஆனால், என்ன நடந்திருக்கும்னு எனக்கு கணிக்க மட்டும் முடியுது..... ஐயம் ரியலி சாரிடா" என்று பிரகாசின் கைகளை பிடிக்க முயற்சித்தான்.... அருணின் கைகளை தட்டிவிட்ட பிரகாசின் செயல் அருணை குழப்பியது.... இப்படிப்பட்ட செயல்கள் எப்போதும் பிரகாஸ் செய்ததில்லை , இப்போது தன் மீதான இவ்வளவு கோபத்திற்கான காரணம் புரியாமல் நின்றான் அருண்.... சரியாக அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தான் ராகவன்.... அருணின் காயத்தை பார்த்து பதறி அருணின் அருகில் சென்றவன் எதேச்சையாக பிரகாசை பார்த்து மேலும் திடுக்கிட்டான்.....

"என்ன ஆச்சு பிரகாஸ்?... ஏன் இப்படி இருக்க?... எதுவும் சண்டையா?" என்று பதற்றம் கலந்த வார்த்தைகளை உதிர்த்தான் ராகவன்... இன்னும் வழிந்த நீரை துடைக்க திராணி அற்றவனாக அமர்ந்திருந்த பிரகாஸ் அருணை பார்த்து, "நான் போறேன் அருண்.... மொத்தமா போறேன்.... உன்னைவிட்டு நிரந்தரமா விலகி போறேன்" என்ற வார்த்தைகள் அருணை செயலிழக்க வைத்தது.... பிரகாசின் அருகில் வந்த ராகவன், "என்னப்பா ஆச்சு?.... ஏன் இப்டிலாம் பேசுற?.... நீ இப்படி பேசி நான் பார்த்ததே இல்லையே?" என்று கூறிவிட்டு, மேலும் அருணை பார்த்து "என்னடா பண்ணி தொலஞ்ச எருமை?" என்றான் ராகவன்....குழப்பத்தில் வார்த்தைகள் வராமல் தவித்த அருண் திகைத்தபடியே நின்றான்..... "அருண், இவ்வளவு நாளும் உங்க மனசுல ஒரு முறைகூட என் மேல காதல் வரலையா உங்களுக்கு?....  இவ்வளவு வருஷம் ஆனபிறகும் உங்களால கார்த்தியோட நினைவுகளை கொஞ்சம் கூட குறைய வைக்க முடியல.... நான் நிச்சயமா தோத்துட்டேன்..... இனி எப்போதுமே கார்த்தியோட நினைவுகளை உங்களிடமிருந்து என்னால போக வைக்க முடியாது.... என் மேல காதல் இருக்குற மாதிரி எனக்காக நீங்க இவ்வளவு நாள் நடிச்சது போதும்..... ஏற்கனவே இருக்குற குழப்பத்துல நானும் உங்க வாழ்க்கையில குழப்பத்தை ஏற்படுத்த முடியல.... இவ்வளவு நாள் நீங்க உங்க வீட்ல சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்காததுக்கு காரணம் நான்தான்னு நினச்சு ஏமாந்துட்டேன்.... இப்போதான் புரியுது, அதுக்கு காரணமும் கார்த்தியோட நினைவுகள்தான்னு...... கடைசியா ஒன்னே ஒன்னு கேட்டுக்கறேன், இனி கார்த்தி மறுபடியும் வரப்போரதில்ல..... கார்த்தியை மறந்து இனி யாரையும் நீங்க காதலிக்க போரதில்லைனும் எனக்கு தெரியும், என்னை உட்பட..... உங்க அம்மா அப்பாவை இனியாச்சும் கொஞ்சம் நினச்சு பாருங்க..... கார்த்தியை மறந்து நீங்க என்னைய காதலிக்கணும்னு நான் கேட்டா அது என் காதலுக்கே அவமானம்.... ஆனால், இனி உங்களை நம்பி இருக்குரவங்களுக்காக நீங்க வாழனும்..... கார்த்தியை உங்களால முழுமையா மறக்க முடியலைனாலும், கொஞ்சமாவது மறக்க முயற்சி செய்யுங்க.... அப்படி கொஞ்சம் தெளிவானபிறகு உங்க பெற்றோர் சொல்வதை கேளுங்க.... நிச்சயமா இனி என்னால உங்கள மாற்ற முடியாது....கொஞ்ச நாள் திருச்சி போங்க, அம்மா கூட இருங்க.... கண்டிப்பா உங்க மனசுல இருக்குற குழப்பம் குறையும்.... ஆனால், இனியும் உங்க குழப்பத்துக்கு காரணமா நான் இருக்க மாட்டேன்..... நான் போறேன்.... நான் உங்க மேல கோவிச்சுக்கிட்டு போகல.... இனியும் நான் உங்களோட இருந்தா அது நம்ம ரெண்டுபேரோட எதிர்காலத்தையுமே சிதச்சிடும்.... நான் அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கல.... இரவு முழுசும் ஒவ்வொரு நொடியும் யோசிச்சு தீர்க்கமா நான் எடுத்த முடிவு இது..... கார்த்திய உங்க மனசுல இருந்து போகவைக்கனும்னு நான் நினைச்சது எவ்வளவு முட்டாத்தனம்னு இப்போதான் புரியுது..... நான் கூட உங்க விஷயத்துல ரொம்ப செல்பிஷ்’ஆ இருந்ததை நினச்சு வருத்தமா இருக்கு..... இருந்தாலும் நான் இப்போ எடுத்த முடிவு நிச்சயம் சரியான முடிவு.... அதுதான் நம்ம காதலுக்கு நான் கொடுக்கும் மரியாதை, கார்த்தியோட நட்புக்கு நான் கொடுக்குற நன்றி..... இதை நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க..... நிச்சயம் என் நியாயம் உங்களுக்கு புரியும்.... இப்போ நான் போறேன்..." என்று மடை திறந்த வெள்ளம் போல வார்த்தைகளை கொட்டித்தீர்த்துவிட்டு எழுந்து வாயிலை நோக்கி நடந்தான்....

அருண் தடுக்கவில்லை, காரணம் பிரகாஸ் சொன்ன அத்தனை வார்த்தைகளும் இத்தனை நாட்களும் தன்னை சுட்டெரித்த எண்ணங்களும், நினைவுகளும் தான்....... எக்காலத்திலும் கார்த்தியை மறந்து பிரகாசை ஏற்கப்போவதில்லை என்பது அருணுக்கு தீர்மானமாக தெரிந்தபின்பும் பிரகாசை ஏமாற்ற முடியாமல் அவன் போக்கிற்கே விட்டுவிட்டான் அருண்...... பிரகாசை தடுக்க சென்ற ராகவனை மறுத்த பிரகாஸ், "இல்லண்ணே... என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல..... அருணை பத்திரமா பாத்துக்கோங்க..... நிச்சயம் அருண் அவங்க வீட்ல சொல்ற மாதிரி கல்யாணத்துக்கு ஒத்துக்குவான்... அதுதான் இப்போதைக்கு எல்லாருக்கும் நல்லது.... மற்றபடி வேற எதுவும் என்னால பேசமுடியல" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான் பிரகாஸ்.... ஒரு ஆண்டு கடுமையான குழப்பத்திற்கும் சோகங்கலுக்கும் மத்தியில் கழிந்தது... பிரகாஸ் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் முன் இரண்டு மாத காலம் மதுரை வீட்டில் பெற்றோருடன் இருந்தான்.... ஒரு வருடமாக பிரகாஸ் அழுகாத நாளில்லை, அருணை நினைக்காத நிமிடமில்லை..... எப்போதும் தான் எடுக்கும் முடிவில் இவ்வளவு உறுதியாக இருந்ததில்லை பிரகாஸ், இது வாழ்க்கை பிரச்சினை, பல உயிர்களின் பிரச்சினை என்பதால் தன் முடிவில் உறுதியாக இருந்தான் பிரகாஸ்.... அப்படி ஒருநாள் ராகவனிடமிருந்து ஒரு கடிதமும் பத்திரிகையும் வந்தது..... பிரித்த பிரகாசின் இதயத்தில் இடி விழுந்தது.... அது அருணின் திருமண அழைப்பிதல்... தான் எதிர்பார்த்த முடிவானாலும், அதை ஏற்க மனம் இன்னும் பிரகாசிற்கு பக்குவப்படவில்லை.... தலையணையில் முகம் புதைத்து அழுதான்.... தலையணையின் இலவம்பஞ்சுகள் தண்ணீர் பட்டு நசிந்து போகும் அளவிற்கு அழுதான்.... கொஞ்சம் ஆசுவாசமான பிறகு உடன் வந்த கடிதத்தை எடுத்து படித்தான் பிரகாஸ்.... அதில், "அன்புள்ள பிரகாசுக்கு, நீ நலமா? என்று சம்பிரதாயத்திற்கு கூட கேட்கும் மனநிலையில் நான் இல்லை.... இந்த கடிதம் அனுப்பும் நொடியில் பேனாவில் மையயைவிட என் கண்ணீர்தான் அதிகம் செலவானது.... நீ கேட்டுக்கொண்டபடி அருண் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டான்.... கார்த்தியை அவன் இன்னும் முழுதாக மறக்கவில்லை என்றாலும், நீ சொன்ன வார்த்தைக்காக அவன் ஒப்புக்கொண்டுள்ளான்.... உன் முகவரியை உன் கல்லூரியில் வாங்கினேன்.... உனக்கு நான் எதுவும் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை.... நீ அருணை மறந்துவிட்டு உனக்குன்னு வாழ்க்கையை அமச்சுக்கோ..... எப்பவும் நீ கூப்பிடுற மாதிரி அண்ணன்குற உரிமைல சொல்றேன்.... அருண் இனி மாறிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, நீயும் உன்னை மாத்திகிட்டு நல்லா இருக்கணும்.... இப்படிக்கு என்றும் உன் அண்ணன், ராகவன்" என்று இருந்தது..... கொஞ்ச காலம் பித்துபிடித்தவன் போல இருந்த பிரகாஸ், பின்னர் தன்னை மாற்றிக்கொண்டவனைப்போல காணப்பட்டான்... அவ்வப்போது அருனுடனான நினைவுகள் வரும்போது மட்டும் எவரும் அறியாமல் அழுவான்.... பின்னர் மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்வான் ....

தனக்கு கிடைத்த பணியில் இப்போது பிரகாஸ் சேர்ந்துவிட்டான்..... பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனம் அது.... இன்னும் நான்கு வருடங்கள் அப்படியே கழிந்தது..... இப்போது பிரகாசிற்கும் திருமண பேச்சு எழுந்தது.... கொஞ்ச காலம் மறுத்தவன், பின்னர் ஏற்றுக்கொண்டான்.... அப்படி ஒருநாள் தன் நண்பனின் திருமணத்திற்கு திருச்சிக்கு வந்துவிட்டு, திருச்சியிலிருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வதற்காக மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ்'இல் ஏறினான் பிரகாஸ்.....
தொடர்வண்டியில் தான் முன்பதிவு செய்த பகுதியில் இருக்கையில் அமர்ந்தான் பிரகாஸ்.... கடந்த ஐந்து ஆண்டுகளாக திருச்சி வரும் ஒவ்வொரு முறையும் தனியாக வந்தாலும் கூட, திருச்சியிலிருந்து திரும்பி செல்லும் போது சுமக்க முடியாத அருணின் நினைவுகளுடன்தான் செல்கிறான்..... ஐந்து வருட வாழ்வும் அருணின் திருமணத்திற்கு பிறகு  பெரிய அளவில் அருணை நினைக்க வைத்துவிடவில்லை என்றே சொல்லவேண்டும்..... இருந்தாலும் பலநேரங்களில் பல விஷயங்கள் அருணை நினைவுபடுத்தும்போது தாங்க முடியாமல் அழுதுவிடுவான் பிரகாஸ்....இப்போதுதான் ஓரளவு மனதை திடப்படுத்திக்கொண்டு வீட்டின் கட்டாயத்திற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளான்..... ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறே காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி, கண்களை மூடி நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தான் பிரகாஸ்..... இப்போது நாம் பார்க்கும் பிரகாசின் உருவம் கூட பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது..... ஐடி துறையில் பணி என்பதால் சிகை அலங்காரம் அதற்கேற்றார்போல இருந்தது, குருந்தாடியும் ட்ரிம் செய்த மீசையும் இப்போது பிரகாசை இன்னும் விபரம் தெரிந்தவனைப்போல காட்டியது..... கண்களை மூடி இசையில் மூழ்கியபடி இருந்த பிரகாசின் கால்களை யாரோ தொட்டது போல உணர்ந்தான் பிரகாஸ்..... திடுக்கிட்டு எழுந்தவன், அது ஒரு குழந்தையின் கைகள் என்றதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்..... அதே கோச்சிற்கு வருபவரின் குழந்தை அது என்பதை உணர்ந்தான் பிரகாஸ்...இரண்டு மூன்று வயது இருக்கலாம், தட்டி தடுமாறி அவன் அருகில் நின்றது அக்குழந்தை...... எப்போதும் குழந்தைகள் மீது பிரகாசிற்கு ஒருவித ஈர்ப்பு உண்டு என்றாலும் இந்த குழந்தையை பார்த்ததும் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவன் மனதிற்குள் எழுந்தது.... குழந்தையை பார்த்து சிரித்தவன், கன்னத்தில் கையை தொட்டு வருடினான்... அப்போதும் அவன் உடலில் ஒருவித சிலிர்ப்பு உண்டானது..... பெட்டி, பைகளை எல்லாம் எடுத்துவைத்துவிட்டு குழந்தையை தூக்கி தன் மடியில் வைத்த அந்த பெண்மணி, பிரகாசை பார்த்து, "சாரி சார்... டிஸ்டர்ப் பண்ணிட்டான் போல" என்று சம்பிரதாயத்திற்கு மன்னிப்பு கேட்டாள்.... இப்போதுதான் அந்த குழந்தையின் மீதிருந்த தன் பார்வையை அந்த பெண்ணின் மீது திருப்பினான் பிரகாஸ்.... "பரவால்ல.... குழந்தை ஒன்னும் செய்யல.... ரொம்ப அழகா இருக்கான்" என்று கூறியபோது பிரகாசின் மனதிற்குள் ஒரு குழப்பம் உண்டானது.....
சிறிது யோசிப்பிற்கு பின், விடை தெரிந்தவனைப்போல, "நீ... நீங்க..... இந்துதானே?" என்றான்.... பிரகாசை உற்றுகவனித்த  அந்த பெண்ணும் வாய் நிறைய புன்னகையுடன், "ஏய் பிரகாஸ்...... எப்படி இருக்க?.... ஆளே மாறிட்ட.... தாடியும், ஆளுமா இப்படி மாரிட்டியே?" என்றாள்.... சிரித்த பிரகாசிற்கு மனம் இப்போது கொஞ்சம் இலகுவானதைப்போல உணர்ந்தான்.....
இருவரும் தங்கள் பணிசார்ந்த விஷயங்கள் பற்றியும், கல்லூரி வாழ்க்கை பற்றியும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர்..... பிரகாஸ் மனம் வெகுவாக இலகுவாகி இருந்தது..... அப்போது இந்து, "அதுக்கப்புறம் என்னைய எப்போவாச்சும் நினச்சு பார்த்தியா பிரகாஸ்?" என்றாள்... "ஒரு வருஷம் உன்னைத்தவிர வேறு ஒன்னையும் நினைக்கலடி.... கடைசில ஒரு வார்த்தை கூட சொல்லாமல் காலேஜ் போய்ட்ட..." என்று சிரித்தான் பிரகாஸ்... ஆம், பள்ளி பருவத்தில் பிரகாஸ் காதலித்த அதே இந்துதான் இப்போது பேசிக்கொண்டிருப்பவள்... மணமாகி இப்போது ஒரு குழந்தைக்கு தாயான பிறகு தான் சந்திக்கிறான்....இன்னும் குழந்தை பற்றியும், மணவாழ்க்கை பற்றியும் பிரகாஸ் எதுவும் கேட்கவில்லை.... இந்துவாகவே தொடர்ந்தாள், "இப்போதைக்கு இவன்தான் என் உலகமே" என்று அந்த குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.... அப்போதுதான் "செல்வி"இந்து, "திருமதி" இந்து ஆனதே பிரகாசிற்கு நினைவிற்கு வந்தது.... "எப்போடி கல்யாணம் ஆச்சு?... அதுக்குள்ளையும் அம்மாவாகிட்டியே.... ஹஸ்பண்ட் என்ன பண்றார்?" என்றான் பிரகாஸ்... "என் மாமா பய்யன் தான்... நான் படிச்சு முடிச்ச உடனேயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.... அவர் திருச்சில பிஸ்னஸ் பண்ணார்... இப்போ...." என்று கொஞ்சம் இழுத்தபோது இந்துவின் கண்கள் கலங்கியது, முகம் சிறுத்துப்போனது.... இந்த மாற்றத்தை பார்த்த கார்த்தி கொஞ்சம் தயங்கியபடியே, "ஏன் என்னாச்சு?... இப்போ என்ன பண்றார்?" என்றான்.... சிறிது நிதானத்திற்கு பிறகு, வழிந்த நீரை துடைத்தபடி "இப்போ இல்ல.... இறந்துட்டார்...." என்றபோது அழுகையை அடக்கமாட்டாமல் அழுதுவிட்டாள்... அப்போது அவள் கையில் இருந்த அந்த குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டான் பிரகாஸ்.... பிரகாஸ் ஆறுதலுக்கு பிறகு கொஞ்சம் மனதை தேற்றியவள் பிரகாசின் மடியில் இருந்த குழந்தையை பார்த்தவுடன், "பரவால்லையே, உன்கூட இவ்வளவு க்ளோஸ் ஆகிட்டான் போல.... பொதுவா புது ஆளுங்க யார்கிட்டயும் இவன் அவ்வளவு சீக்கிரமா பழகிட மாட்டான்" என்று போலியாக சிரித்தாள் இந்து....

ஆனால் பிரகாஸ் இந்துவின் கவலையை முழுவதும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான், தன்னாலான உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்தான், ரயில் சிநேகிதம் போல பார்த்தோம், பழகினோம், மறந்தோம் என்று இல்லாமல் இந்துவின் மீதுள்ள உரிமையால் மீண்டும் இந்துவிடம், "எப்படி ஆச்சு?.... ஏன் இறந்தார்?.... ஆக்ஸிடன்ட் எதுவுமா?" என்றான்.... பெருமூச்சு விட்டவள், "இல்ல, சூசைட்" என்றாள் இந்து.... அதிர்ச்சியில் பதறிய பிரகாஸ், "என்னது சூசைடா?.. எதனால?" என்றான்.... "ஆமா.... எதனால தற்கொலை செஞ்சுகிட்டார்னு தெரியல.... ஆனால் பிஸ்னஸ் லாஸ்னு அவர் நண்பர்கள் சொன்னாங்க.... அவர் இறந்தப்போ இவன் என் வயித்துல ஆறு மாசம்.....  இவன் பிறந்ததை கூட அவர் பார்க்க இல்லையேன்னு ரொம்ப கஷ்டமா போச்சு.... ஒருவேளை இவன் அவர் அந்த முடிவை எடுக்குரதுக்கு முன்னாடியே இவன் பிறந்திருந்தான்னா நிச்சயம் அவர் அந்த முடிவை மாற்றி இருப்பார்" என்றபோது அவள் பேச்சில் ஒரு இல்லாமையும் இயலாமையும் வெறுமையும் இருந்ததை கவனித்தான் பிரகாஸ்.... "உன் கூட பிரச்சினை எதுவும் இல்லையே?" என்றான் பிரகாஸ்.... "என் கூடவா?.... ச்ச.. ச்ச.... எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனப்போ எங்க ரெண்டு பேருக்குமே அதுல இஷ்டம் இல்ல.... நான் மேல படிக்கணும்னு சொன்னேன், அவர் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னார்... ஆனாலும் கல்யாணம் ஆனபின்னாடி எங்க வீட்ல இருந்ததைவிட என்னை அவர் ரொம்ப நல்லா பாத்துகிட்டார்.... அவர் இறந்து இப்போ வருஷம் மூனாச்சு.... இப்பவும் எல்லாரும் இருந்தாலும், அவர் இல்லாதது ஒரு வெறுமையாத்தான் இன்னும் இருக்கு " என்றாள் இந்து.... பிரகாஸ் இப்போது எதுவும் பேசவில்லை, தன்னைப்போலவே தான் மிகவும் விரும்பும் அத்தனை பேருக்கும் ஆண்டவன் இப்படி சோதனைக்கு மேல் சோதனை கொடுப்பது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை.... பிரகாசின் முகமாற்றத்தை கவனித்த இந்து, "இதுக்குத்தான் இதை நான் யார்கிட்டயும் சொல்றதில்ல.... நானும் அழுது மத்தவங்களையும் அழ வச்சிடுவேன்..... என்னமோ உன்னை பார்க்குறப்போ எல்லாத்தையும் சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன்.... அதோட விட்டுடு..... சரி நீ சொல்லு, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்று பேச்சை திசைதிருப்பினாள்..... சுயநினைவுக்கு வந்தவனைப்போல பிரகாஸ், "இல்லடி.... இன்னும் ஆகல..... பொண்ணு பார்த்துட்டு  இருக்காங்க .... என்னை கட்டிக்கிறதுக்கு எந்த பொன்னும் ஒத்துக்கமாட்ராங்களாம்..." என்று சிரித்தான் பிரகாஸ்.... "ஏண்டா? உனக்கென்ன குறைச்சல்?..... சுயம்வரமே நடத்துற அளவுக்கு தகுதி உனக்கு இருக்குடா" என்றாள் இந்து.....
"இவ்வளவு பில்டப் கொடுக்குற நீயேதான் ஒரு காலத்துல என்னைய வேண்டாம்னு சொன்ன.... இப்போ இவ்வளவு பேசுற ஆளு அப்போ ஓகே சொல்லி இருந்திருக்கலாம்ல?.... " என்று சிரித்தான் பிரகாஸ்....

தன் கவலையை மறந்து சிரித்த இந்து, "ஆமாமா.... நான் பண்ண தப்பு அதான்.... அப்பவே உனக்கு ஓகே சொல்லிருக்கணும்.... ஆனால் எங்க அப்பா, சித்தப்பா அடியெல்லாம் நீ தாங்கி இருப்பியா?" என்று சிரித்தாள் இந்து..... இவ்வாறாக கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கும்போது பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார்..... ஒவ்வொரு சிவபூஜைக்கும் நுழைய காத்திருக்கும் கரடி போல, இப்போதைக்கு இந்த டீ.டீ.ஆர்.....  பயணசீட்டை பரிசோதித்த அவர், "மேடம் உங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?... இங்க ரிசர்வ் பண்ண ஆளுங்க வரல... அதனால உங்க கோச்'ல நீங்க இவரோட வர்றதில்ல ப்ராப்ளம் இல்லையே?" என்றார்.... "இல்ல சார்... இவர் என் ப்ரெண்ட்'தான்.... ஒன்னும் ப்ராப்ளம் இல்ல" என்றதும் நன்றி கூறிவிட்டு கிளம்பிய பரிசோதகரை அழைத்த பிரகாஸ், "சார் அவங்கள்ட்ட கேட்டிங்கள்ள, என்கிட்டே கேட்டிங்களா?.... அப்போ எனக்கு எதாச்சும் ப்ராப்ளம் வந்தா உங்களுக்கு ஓகேவா?... என்கிட்டயும் கேளுங்க சார்" என்றான் ..... முகத்தில் கடுகடுப்புடன் "உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே சார்?" என்றார் டீ.டீ.ஆர்..... சிரித்த பிரகாஸ், "ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, நீங்க போகலாம்" என்றான்.... இதைப்பார்த்து சிரித்த இந்துவுடன் பிரகாசும் சிரிக்க, கடுகடுப்பும் காரமும் குறையாமல் திரும்பி சென்றார் டீ.டீ.ஆர்..... "டேய், நீ இன்னும் மாறவே இல்லையா?.... ஓடுற ட்ரெயின்ல தலைய விடப்போறார் அவர்" என்று சிரித்தபோது குழந்தை, "அம்மா... பாத்தும்" என்று மழலை மொழியில் பேசியது.... "இந்தா வரேன் பிரகாஸ்..... இவனுக்கு வெளில போகும்போதுதான் இதெல்லாம் வரும்.... நான் கூட்டிட்டு போயிட்டு வரேன்..." என்று கூறிவிட்டு கழிவறையை நோக்கி அழைத்து சென்றாள் இந்து.....
இந்து சென்றபிறகு பழைய நினைவுகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் பிரகாஸ்.... அருணின் நினைவு அப்போது வந்தது.... "அருனுக்கும் திருமணம் ஆகி இந்நேரம் இப்படி குடும்பம், குழந்தைன்னு ஆகிருப்பான்.... இம்முறை சென்னைக்கு போகும்போது, அருணை பற்றி விசாரித்துவிட்டு தொலைவில் இருந்தாவது எப்படியாவது அருனையும் அவன் குடும்பத்தையும் பார்க்க வேண்டும்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.... அந்த நேரம் இந்துவின் அலைபேசி மணி ஒலித்தது.... குழந்தையை கழிவறைக்கு கூட்டி சென்றவள் அலைபேசியை தான் அமர்ந்திருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.... இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் மணி அடித்ததால், அலைபேசியை எடுத்து பார்த்தான்.... அதில் "ராகு" என்று பெயர் இருந்தது.... அலைபேசியை கையில் எடுத்தவன், பேசலாமா? வேண்டாமா? என்று தயங்கியபடி இருந்தபோது மூன்றாவது முறையும் மணி ஒலித்தது.... "இந்து குழந்தையை பாத்ரூமுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க... ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கால் பண்ணுங்க" என்று சொல்லலாம் என்று நினைத்த பிரகாஸ் இம்முறை அலைபேசியை ஆன் செய்தான்.... "ஹலோ இந்து.... என்னம்மா ரொம்ப நேரமா கால் பண்றேன், நீ எடுக்கல..... ட்ரெயின் ஏறிட்டியா?.... காலையில உன்னை எக்மோர்ல வந்து கூட்டிட்டு போறேன்மா " என்று மறுமுனையில் இருந்தவர் சொல்ல வேண்டிய எல்லா விஷயத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிட்டார்....

அடுத்த முறை இணைப்பு கிடைக்குமா? என்கிற பதற்றத்தில் பேசியதைப்போல அந்த பேச்சு இருந்தது.... அலைபேசியை எடுத்த பிரகாஸ் எந்த பதிலும் கூறவில்லை.... இந்து பாத்ரூம் போயிருக்காங்க என்று சொல்லாலாம் என்று நினைத்த பிரகாஸ் ஏதோ பெரிய குழப்பத்தில் இருந்தான்.... குழப்பத்திற்கான காரணம், அந்த அலைபேசியில் பேசிய நபரின் குரல்.... எங்கோ கேட்ட குரல், பல காலம் அருகில் இருந்து பார்த்த குரல், யாராக இருக்கும்?.... பலவாறு யோசித்தான்.... மறுமுனையில் பேசிய நபர் "என்னம்மா நான் சொல்லிட்டே இருக்கேன், பதிலே காணும்..... லைன்ல இருக்கியாம்மா?" என்று கொஞ்சம் குழப்பத்துடன் கேட்டார்.... அப்போது பிரகாஸ் ஏதோ யூகித்தபடி , "ஹலோ...." என்றான்.... மறுமுனையில் பதில் இல்லை..... "ஹலோ ராகவன் அண்ணா" என்றான் மறுபடியும் பிரகாஸ்.....
"பிரகாஸ்..... நீயா?" என்றான் ராகவன் மெல்லிய குரலில்....
"ஆமாம் அண்ணே.... நல்லா இருக்கிங்களா?"
"இருக்கேன்பா..... நீ?"
"இருக்கேன்.... இப்போதான் உங்கள நாளைக்கு பார்க்கலாம்னு நினச்சேன், அதுக்குள்ளையும் நீங்களே கால் பண்ணிட்டிங்க"
"என்ன விஷயமா?"
"சும்மாதான்.... அருண் எப்படி இருக்கார்?"
"........."
"என்ன ஆச்சு அண்ணே?.... ஆமா, உங்களுக்கு இந்துவை எப்படி தெரியும்?.... உங்க சொந்தக்கார பொண்ணா?"
"ஆமா.... உனக்கெப்படி தெரியும்?"
"அவ என்னோட ஸ்கூல் மேட் அண்ணே..... அருணும் இப்போ அவன் குடும்பத்தோட நல்லா இருக்கானா?.... அவனுக்கு குழந்தை இருக்கா?"
"இந்து அவளைப்பத்தி சொன்னாளா உன்கிட்ட?"
"சொன்னாலே.... பாவம், அவ கணவனை இழந்து இந்த வயசுல இப்படி ஆகிட்டா..... அவளை மாதிரி நல்லவங்கள மட்டும்தான் இந்த கடவுள் ரொம்ப சோதிக்கிறார்.... நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லல, அருண் எப்படி இருக்கான்?" என்று விடாமல் பேசினான் பிரகாஸ்.....
"அவளோட ஹஸ்பண்ட் யாருன்னு இந்து உன்கிட்ட சொன்னாளா?" என்றான் ராகவன்....
"இல்லண்ணே... நானும் கேட்கல.... அதைப்பத்தி அவகிட்ட கேட்டாவே அழுதிடுறா..... சூசைட் பண்ணிக்கிட்டதா மட்டும் சொன்னா, அவ்வளவுதான்... ஏன்?... அவ ஹஸ்பண்ட் யாரு?... உங்களுக்கு தெரியுமா?" என்றான் பிரகாஸ்.....
"நீ இதுவரைக்கும் கேட்ட ரெண்டு கேள்விக்கும், உன் கேள்வியிலேயே பதில் இருக்கு..... " என்ற ராகவனின் குரல் விம்மி நின்றது.....


"என்ன சொல்றீங்க?.... அருணை பற்றி கேட்டேன், இப்போ இந்துவோட ஹஸ்பண்ட் பத்தி கேட்டேன்..... ரெண்டுக்கும்......" என்று சொல்லியபோது பிரகாசின்  நினைவுகள் பலவாறாக சிந்திக்க தொடங்கியது...... சிரித்தபடி பேசிய பிரகாசின் முகம் இப்போது குழப்பத்தின் உச்சம் சென்றது..... "என்ன சொல்றீங்க அண்ணே?..... எனக்கு என்னவெல்லாமோ தோணுது.... தயவு செஞ்சு சொல்லுங்க ப்ளீஸ் அண்ணே" என்ற பிரகாசின் குரலில் பதட்டம் நிறைந்து காணப்பட்டது..... சிறிது அமைதிக்கு பிறகு ராகவன், "சாரி பிரகாஸ்.... இவ்வளவு நாள் இதை உன்கிட்ட சொல்லாததுக்கு காரணம் அருண் தான்.... அருனோட மனைவிதான் இந்து" என்று கூறியபோது பிரகாசின் தலை சுக்குநூறாக வெடிப்பதை போல உணர்ந்தான்..... இதயம் ஒரு கனம் இடி தாக்கியதைப்போல துடித்தது..... பேச்சும், மூச்சும் திக்கற்று திசை அறியாது நின்றது.... கண்களின் நீர் மட்டும் தாரை தாரையாக கொட்டியது.... அழுகையும், வேதனையும் நிறைந்த பிரகாஸ் குழறிய மொழியில், "என்ன சொல்றீங்க?.... அப்போ அருண்?" என்று நிறுத்தினான்.... மறுமுனையில் பேசிய ராகவன் கதறி அழும் சத்தம் கேட்டது, கொஞ்சம் இடைவெளிக்கு பின்னர், "ஆமாப்பா..... அருண் இறந்துட்டான்...... நம்ம எல்லாரையும் நிம்மதி இல்லாம செஞ்சிட்டு அவன் மட்டும் நிம்மதியா போய்ட்டான்....." என்றான் .....
"எப்படிண்ணே?" என்று அழுகை கலந்த வார்த்தைகள் தடுமாறி விழுந்தது..... அவன் வார்த்தையில் உயிர் இல்லை.... வார்த்தியில் மட்டுமா உயிர் இல்லை....?
"நீ சொன்னபடியும், எல்லாரும் கேட்டுகிட்டபடியும் அவன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்.... அதுக்கப்புறம் போலிஸ் ஜாபை விட்டுட்டு திருச்சியில சொந்தமா பிஸ்னஸ் பண்ண ஆரமிச்சான்.... ஓரளவு மாறினது போல தெரிஞ்சது.... கல்யாணமும் நிம்மதியா முடிஞ்சுது..... ஆனாலும் அவன் நாளுக்கு நாள் மனதளவுல ரொம்ப பாதிக்கப்பட்டான்..... கார்த்தியோட நினைவுகள் அவனை நாளுக்கு நாள் சுட்டெரிச்சது.... ஆனால் இது எந்த விஷயமும் உனக்கு தெரிய கூடாதுன்னு அவன் எனக்கிட்ட சொன்னான்..... அவன் இறந்தா கூட அதை உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு ஒருமுறை சொன்னான்.... நீயாவது நிம்மதியா இருக்கணும்னு  அடிக்கடி சொல்வான்.... நானும் எவ்வளவோ சொல்லியும் அவனோட குழப்பம் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர, குறையல.... தன் மனைவிக்கு துரோகம் பன்றானோ அப்படின்குற எண்ணமும் வந்திடுச்சு..... கார்த்தியின் பிரிவு, உன்னோட பிரிவு, மனைவிக்கு துரோகம்னு அவன் நாளுக்கு நாள் தேவை இல்லாத குழப்பங்களை தனக்குள்ளே போட்டு நொந்து அழுதான்.... அப்படி அவன் மனநோயாளியாவே ஆகிட்டான்.... ஆனால் இது எந்த விஷயத்தையும் என்னால வேற யார்கிட்டயும் பகிர்ந்துக்க கூட முடியல..... அப்படித்தான் ஒருநாள் வீட்ல தூக்கு மாட்டிகிட்டான்.... அவன் இறந்ததுக்கான காரணம் எனக்கும் உனக்கும் மட்டும்தான் இப்போதைக்கு தெரியும்... மத்தவங்கள பொருத்தவரைக்கும், குறிப்பா அவன் அப்பா அம்மா மனைவி உட்பட எல்லாரையும் பொருத்தவரை அவன் இறந்தது பிஸ்னஸ் லாஸ் ஆனதால......" என்று மொத்த கதையையும் கூறிய ராகவன் மீண்டும் அழத்தொடங்கினான்....
சிறிது நேரத்துக்கு பிறகு ராகவன், "நாளைக்கு நான் உன்னையும் எக்மோர்ல மீட் பண்றேன்... ஆனால், இந்த விஷயம் எதுவும் இந்துவுக்கு தெரிய வேணாம்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் ராகவன்.....
பிரகாசின் மனம் மழுங்கி விட்டது, ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிரை விடலாமா? என்று ஒரு கனம் யோசித்தான்...."இன்னொருதடவை தற்கொலை முடிவை நான் நினைக்க கூட கூடாது.... ஒரு அருனோட இழப்பே இன்னைக்கு பல பேரை வாட்டுது, இது தொடர்கதை ஆக கூடாது" என்று நினைத்துக்கொண்டான்.... அருணின் இழப்பே தன்னை இவ்வளவு வாட்டும்போது, கார்த்தியை இழந்தபிறகு அருணின் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தான் பிரகாஸ்.... தான் அருணை விட்டு விலகியது தவறோ? என்று ஒரு முறை யோசித்தான்..... கத்தி அழுதான்... அந்த அழுகையும், சத்தமும் ரயில் சத்தத்தில் கரைந்து போனது..... எவ்வளவு காலம்தான் அருணை நினைத்து அழுதுகொண்டு மட்டும் இருக்க போகிறான் என்பதை அவனே அறிந்திருக்கவில்லை..... எடுத்த முடிவுகளை இனி அலசி ஆராய்வதிலும் நியாயம் இல்லை..... தான் உயிரோடு இருப்பதைக்கூட, அவன் உயிரை கூட சுமையாக கருதிய நேரம் அது..... பத்து நிமிடம் கழித்து அழுகை தானாக ஓய்ந்து, அருணை பற்றிய நினைவுகளை சிந்தித்தபடி இழப்பின் மொத்த உருவமாக அமர்ந்திருந்தான் பிரகாஸ்....கண்ணீர் கூட மிச்சமில்லை.... ஐந்து வருடங்களும், அருண் எங்கோ நிம்மதியாக இருக்கிறான் என்ற நினைப்பில் வாழ்க்கையை ஓட்டியவன், இனி எந்த நம்பிக்கைக்காக உயிர்வாழப்போகிறான் என்பது புரியவில்லை.... இனி இழக்க கண்ணீர் கூட அவனிடத்தில் மிச்சம் இல்லை.... அழுது அழுது அழுகைக்கே அழுத்துவிட்டது போலும்...ரயில் சத்தம் கூட மரண ஓலம் போல கேட்டது அவனுக்கு.... அந்த நேரம் சரியாக இந்து வந்தாள்.... "அப்பப்பா.... ரொம்ப பிடிவாதம் இவன் பிரகாஸ்.....  பாத்ரூம் போயிட்டு இங்க வரமாட்றான் .... வெளில வேடிக்கை பார்க்கணுமாம்.... இந்த வயசுல இவன் பண்ற பிடிவாதம் ரொம்ப ஓவர்" என்றாள் இந்து..... பொய்யாக சிரித்த பிரகாஸ், குழந்தையை கையில் வாங்கியபடி "உன் பேரு என்ன?" என்றான்.... மழலைத்தமிழில் "காட்டி" என்றது குழந்தை........ சிரித்த இந்து, "அவன் பேரு கார்த்தி.... அவன் வயித்துல இருக்குரப்பவே அவங்க அப்பா தனக்கு மகன்தான் பிரப்பான்னும், அவனுக்கு இந்த பெயர்தான் வைக்கனும்னும் சொல்லிட்டாரு..... முருக பக்தர் அவர்" என்றாள் இந்து...... இப்போது அவன் கண்களின் நீரை இந்து பார்ப்பதற்கு முன்னால் துடைத்துக்கொண்ட பிரகாஸ், அந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்தான்.... தான் முதன்முதலில் பார்த்தபோது அந்த குழந்தையின் ஈர்ப்பிர்கான காரணம் புரிந்தது பிரகாசிற்கு.... ஆம், அருண் இறக்கவில்லை, புதிதாக பிறந்துள்ளான்.... அதே கண், வாய், மூக்கு, பிடிவாதம், இடது கை பழக்கம், எல்லாமும்.... அந்த குழப்பம் மட்டும் இவனிடத்தில் இல்லை என்று நினைத்தான் பிரகாஸ்..... பிரகாசின் மடியில் அமர்ந்தபடியே உறங்கிவிட்டது குழந்தை..... இந்துவிற்கு இது வித்தியாசமாக தெரிந்தது.... அவ்வளவு எளிதில் யாரிடமும் பழகிவிடாத தன் குழந்தை, பிரகாசிடம் அட்டை போல ஒட்டிக்கொன்டதை எண்ணி சிரித்தாள்..... அப்படியே இருவரும் தூங்கிவிட்டனர்..... பிரகாஸ் அருணின் நினைவுகள் களைந்து, வெகு நாட்களுக்கு பிறகு அருணுடன் இருப்பதைப்போல உணர்ந்தான்.... அதற்கு காரணம், அந்த குழந்தை..... விடிந்ததும் எக்மோர் ஸ்டேசன் வரப்போகிறது என்று உணர்ந்த இந்து தன் பெட்டிகளை எடுத்துவைத்துக்கொண்டாள்.... "சரி பிரகாஸ்.... நான் போயிட்டு வரேன்.... எக்மோர் வரப்போகுது.... நான் இனி சென்னைலதான் வேலை பார்க்க போறேன்..... அப்போல்லோ ஹாஸ்பிட்டல்ல..... டைம் கிடச்சா வந்து பாரு.... அண்ணன் ஸ்டேசன் கு வருவாரு..... உன் கல்யாணம் இன்விட்டேசன் மறக்காம எனக்கு அனுப்பு" என்று கூறியபடி தன் மொபைல் நம்பரை பிரகாசிடம் கொடுத்தாள்.... எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்ட பிரகாஸ், தலையை மட்டும் அசைத்துக்கொண்டான்....
ஆழ்ந்த சிந்தனை கலைந்தவனாக நடந்து சென்ற இந்துவை அழைத்தான்.... "இந்து ஒரு நிமிஷம்" என்றான்....
"என்னடா?.... சொல்லு.... நேரமாச்சு" என்றாள் அவசரமாக இந்து.....
"இப்பவும் நான் உன்கிட்ட அதையே தான் கேட்குறேன்.... என்னைய கல்யாணம் பண்ணிக்குரியா?" என்றான் படபட வார்த்தைகளில் பிரகாஸ்..... இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்து...ஸ்தம்பித்து நின்ற இந்து சிறிது நிதானம் வந்தவுடன் பிரகாசை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு வெளியே செல்லும் வழியை நோக்கி சென்றுவிட்டாள்.....
திட்டிவிட்டு சென்ற இந்துவை பின்தொடர்ந்தான் பிரகாஸ்..... இன்னும் ஐந்து நிமிடங்களில் எக்மோர் ரயில் நிலையம் வந்துவிடும், அதற்கு பிறகு நிச்சயம் இதுபற்றி விவாதிக்க முடியாது என்பதால் வாயிலை பார்த்துக்கொண்டிருந்த இந்துவை மீண்டும் அழைத்தான் பிரகாஸ்..... எரிச்சலான இந்து, "என்னதான் வேணும் பிரகாஸ்?.... இதெல்லாம் நடக்காது...... உன்ன நல்ல நண்பன்னு நினைச்சுதான் எல்லாத்தையும் சொன்னேன், நீயே இப்படி பேசலாமா?.... நிச்சயம் நான் ஏத்துக்க முடியாது பிரகாஸ்" என்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் இந்து..... சிரித்த பிரகாஸ், "என்னைய எந்த பொன்னும் வேண்டாம்னு சொல்ல மாட்டான்னு சொல்லிட்டு, இப்போ நீயே என்னை வேண்டாம்னு சொல்ற பார்த்தியா?" என்றான்.... இன்னும் எரிச்சலான  இந்து, "உனக்கு என்ன பெரிய தியாகின்னு நினைப்பா?.... ஒழுங்கா வீட்ல சொல்ற பொன்னை கட்டிக்கிட்டு செட்டில் ஆகுற வேலைய பாரு... என் வாழ்க்கையை எப்படி அமச்சுக்கனும்னு எனக்கு தெரியும்...." என்றாள் இந்து..... "நான் தியாகிலாம் இல்ல..... ஒருவேளை உன் இடத்துல வேற பொண்ணு யாராச்சும் இருந்திருந்தாங்கன்னா, நிச்சயம் நான் என் அனுதாபத்தை மட்டும்தான் பகிர்ந்திருப்பேன்.. ......உன்கிட்ட மட்டும்தான் என் வாழ்க்கையையே பகிர்ந்துக்க விரும்புறேன்.. " என்று விடாமல் பேசினான் பிரகாஸ்....
"அது நடக்காது பிரகாஸ்..... இனிமேல் கார்த்திதான் என் வாழ்க்கை..... சாத்தியமே இல்ல பிரகாஸ்..... உன் மனசுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா.... என் நிலைமையை புரிஞ்சுக்கோ .... " என்று தலை கவிழ்ந்து மனம் வருந்தினாள் இந்து... இப்போது இந்த்வின் கோபம் கரைந்து பரிதாபமாக தெரிந்தாள்.....  இந்துவின் தலையை பிடித்து  நிமிர்த்திய பிரகாஸ், " உன் மனச தொட்டு சொல்லு பார்க்கலாம், இதுல உனக்கு விருப்பம் இல்லன்னு..... நிச்சயம் உனக்கு விருப்பம் இருக்கு..... ஆனால் சொசைட்டிக்காகவும், நம்ம  குடும்பத்துக்காகவும் நீ தயங்குற..... ரெண்டையும் நான் பார்த்துக்கறேன்..... கார்த்தி பத்தி கவலைப்படாத..... உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தா நான் இன்னும் ஒரு உறுதி சொல்றேன், கார்த்தியை தவிர வேறு குழந்தை நாம பெத்துக்க வேண்டாம்..... உன் வீட்லயும், என் வீட்லயும் நான் பேசுறேன்..... இன்னொரு தடவையும்  தப்பான முடிவை நீ எடுக்காத......யோசிச்சு சொல்லு" என்று கூறியபோது இந்துவின் கண்கள் கலங்கி இருப்பதை கவனித்தான் பிரகாஸ்.... சரியாக அதே நேரத்தில் எக்மோர் நிலையமும் வந்துவிட்டது..... "யோசிச்சு சொல்லு" என்று மட்டும் மறுபடியும் சொல்லிவிட்டு தன் வழியில் இந்துவை பார்த்தவாறே கிளம்பினான் பிரகாஸ்.....

 இப்போது கதை ஒரு வருடத்திற்கு பின் நிகழ்கிறது...... பெங்களூரு பிரகாஸ் இல்லத்தில், சமயலறையில் இருந்தபடியே கார்த்தியை திட்டிக்கொண்டிருந்தாள் இந்து..... "இன்னைக்கு முதல் நாள் ஸ்கூலுக்கு போற.... இன்னிக்காச்சும் சீக்கிரம் போறதில்லையா கார்த்தி.....?... அப்பா  இப்போ வந்திடுவாங்க, சீக்கிரம் கிளம்பு..... இன்னும் ட்ரெஸ் கூட மாட்டாமல் இருக்கியா?..... நீ நிச்சயம் அடிவாங்கப்போற" என்று திட்டிக்கொண்டிருந்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே வந்தனர் பிரகாசும் ராகவனும்..... இந்துவை பார்த்து சிரித்த பிரகாஸ், "என்னையதான் திட்டிகிட்டு இருந்தியா?.... அடிச்சிடாதம்மா" என்று சிரித்தான்.... "இல்ல பிரகாஸ், இங்க பாரு இவன் இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பாமல் இருக்கான்.... டைம் ஆகிடுச்சு.... முதல் நாளே லேட்டா போனால் நல்லாவா இருக்கும்?" என்று கார்த்தியை நோக்கி கை நீட்டினாள் இந்து.... இந்து கைநீட்டிய திசையில் இடுப்பில் கட்டிய துண்டோடு பல ஆடைகளை உதறிப்போட்டபடி கோபத்தில் அமர்ந்திருந்தான் கார்த்தி..... எல்.கே.ஜி முதல் நாள் போகப்போறார் கார்த்தி... அதற்குத்தான் இவ்வளவு கலவரமும்.....
கார்த்தியின் அருகில் சென்ற பிரகாஸ், அவன் முன்னால் அமர்ந்து கன்னத்தை பிடித்தவாறே, "என்ன சார் பிரச்சினை உங்களுக்கு?.... ஸ்கூலுக்கு லேட் ஆச்சுல்ல , கிளம்புங்களே..." என்று சிரித்தான்.... முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்ட கார்த்தி, "எந்த டிரெஸ் போடுறதுன்னு தெரியலப்பா....." என்று சினுங்கினான்.... "இவ்வளவுதான் பிரச்சினையா?.... இதோ இந்த டிரெஸ் போடுங்க.... இத நீங்க போட்டா அப்படியே துப்பாக்கி படத்துல வர்ற விஜய் மாதிரியே இருப்பிங்க" என்று ஒரு ஆடையை எடுத்து கார்த்தியிடம் கொடுத்தான் பிரகாஸ்.... கொஞ்சம் சிரித்தவாறே அந்த ஆடையை வாங்கிய கார்த்தி, "நெஜமாவாப்பா?" என்றான்.... "ஆமாப்பா.... உனக்கு இந்த டிரெஸ் அவ்வளவு அழகா இருக்கும்" என்றதும் சிரித்தவாறே அந்த ஆடையை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு ஆயத்தமானான் கார்த்தி.... இதைக்கண்டு எரிச்சலான இந்து , ராகவனை பார்த்து, "பார்த்திங்களா அண்ணே, காலைலேந்து  ஒவ்வொரு விஷயத்துக்கும் இவன்ட்ட போராடிக்கிட்டு இருக்கேன், பிரகாஸ் சொன்னவுடன் கேட்டுகிட்டான் பார்த்திங்களா.... எல்லாம் பிரகாஸ் குடுக்குற செல்லம்தான்...." என்று கோபித்துக்கொண்டவளை  ராகவன் சமாதானப்படுத்தினான்.... பின்னர் ராகவனும் பிரகாசும் கார்த்தியை பள்ளிக்கு சென்றுவிட மகிழுந்தில் கிளம்பினார்கள்.... பள்ளியில் இறங்கியவுடன் பிரகாசின் கன்னத்தில் முத்தம் கொடுத்த கார்த்தி, டாட்டாப்பா.... சாயந்திரம் மறக்காம வந்திடுங்க" என்று பிரகாசை  பார்த்து கூறிவிட்டு, பின்னர் ராகவனை பார்த்து, "டாட்டா மாமா" என்று சொல்லிவிட்டு பிரகாஸ் சொன்ன வகுப்பறையை நோக்கி சென்றான் கார்த்தி.... "அவன் அப்பாவுக்குத்தான் நான் மாமான்னா, இவனும் மாமான்னே கூப்பிடுறானே!" என்று சிரித்துவிட்டு பிரகாசை பார்த்தான் ராகவன்.... கார்த்தி சென்ற வழியையே விழித்து பார்த்துக்கொண்டிருந்தான் பிரகாஸ்.... கண்களில் நீர் கோர்த்தது... சிரித்த ராகவன், "ஏய் பிரகாஸ், வா போகலாம்.... சின்ன பய்யன், அவன் பாட்டுக்கு கிளாஸ் போறான், நீ சின்ன புள்ள மாதிரி அழறியே.... வா போகலாம்" என்று மகிழுந்தை நோக்கி அழைத்து சென்றான் ராகவன்....

மகிழுந்து சென்றுகொண்டிருக்கும்போது ராகவன்,"ரொம்ப சந்தோஷமா இருக்குடா.... நம்ம அருண் நம்மகூடையே இருக்குற மாதிரி ஒரு உணர்வு.... காலைல நம்ம கார்த்தி டிரெஸ் பிரச்சினை பண்ணப்போ, ஸ்கூல் படிக்கிறப்போ அருண் அவன் வீட்ல பன்னதுதான் நினைவுக்கு வந்தது.... கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லடா....  கார்த்தி வழியிலேயே போயி அவனை உன் வழிக்கு கொண்டு வந்திட்ட நீ....ஆனால் ஒரு நம்பிக்கை இருக்கு எனக்கு, நிச்சயம் இந்த கார்த்தி அப்படி எதிர்காலத்துல குழம்ப மாட்டான்.... உன்னைப்போல அப்பா இருந்திருந்தா நம்ம அருண் கூட நிம்மதியா இருந்திருப்பான்" என்று பெருமிதம் அடைந்தான் ..... சிரித்த பிரகாஸ், "நான் தான் உங்களுக்கு முதல்ல நன்றி சொல்லணும், ... இந்து, அவ குடும்பம், அருண் குடும்பம் எல்லாரையும் சம்மதிக்க வச்சு எங்களை சேர்த்து  வச்சதே நீங்கதான்.... ஒருவேளை இப்படி நடக்காமல் இருந்திருந்தால், நானும் அருணை மாதிரியே தப்பான முடிவு எடுத்திருக்க கூட வாய்ப்பிருக்கு....  நான் புதுசா பிறந்த மாதிரி உணர்றேன்..... ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..... ஆனால் எந்த காலத்துலயும் அருனோட பழைய கே வாழ்க்கை பற்றி இந்துவுக்கு தெரியாமல் பார்த்துக்கணும்..... இறந்துபோன கார்த்தி சொன்னபடி நான் அருண் கூட கடைசி வரை வாழ முடியலைன்னு இருந்த வருத்தம் இன்னைக்கு வேறு வகையில இந்த கார்த்தி மூலம் நிறைவேறி இருக்கு..... அப்போ இருந்த சூழ்நிலையால என்னால கார்த்தி சொன்னபடி செய்ய முடியாததுக்கும் ஒருவகையில இப்போ  வாழ முடியுது..... நான் அருணுக்கு சொன்ன மாதிரி காதலனோட வாழ்றது மட்டும் காதலின் வெற்றி இல்ல, காதலனுக்காக அவனோட நினைவுகளோட வாழ்றதுதான் உண்மையான வெற்றி...." என்றான் பிரகாஸ்.....
கொஞ்சம் யோசித்த ராகவன், “பிரகாஸ், உண்மையாவே உனக்கு இந்துவை பிடிச்சிருக்கா?... இல்ல, அருனுக்காக இதுக்கு சம்மதிச்சியா?” என்றான் .... சிரித்த பிரகாஸ், “என்னண்ணே இப்படி கேட்குறீங்க?... அருணை லவ் பண்றதுக்கு முன்னாடியே நான் இந்துவை லவ் பண்ணேன்.... அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஒருவேளை இந்து அருனோட மனைவியா இல்லாமல் இருந்திருந்தாகூட நான் அவளை கல்யாணம் செஞ்சிருப்பேன்.... ஆனால் அருனோட நினைவுகள் என்னை அப்போ கொஞ்சம் உறுத்தி இருக்கலாம்.... அருணை மறக்க முடியாமல் மனம் வருந்தி இருந்திருக்கலாம்.... ஆனால் இப்போ ரெண்டு விதத்துளையும் எனக்கு சந்தோஷம்தான்....  அருண் இல்லைன்குற வருத்தம் இருந்தாலும், அருண் இருக்கிரான்குற நம்பிக்கையோட வாழ்றது கொஞ்சம் நிம்மதியா இருக்கு.... அருண் இறந்திட்டான்னு என்னால இப்பவும் ஏத்துக்க முடியல, கார்த்தியை பார்க்குற ஒவ்வொரு நிமிஷமும் அருனோட இருக்குற மாதிரிதான் உணர்றேன்.... இப்போ என் மனசும் நிம்மதியா இருக்கு, என்னை சுற்றி இருக்குறவங்க மனசும் நிம்மதியா இருக்கு.... இந்த விஷயத்துல எனக்கு சந்தோஷமா இருக்கு....ஒரு பக்கம் இந்து, இன்னொரு பக்கம் அருண்.... ரெண்டு பக்கத்தையும் என்னால இப்போ ஒண்ணாதான் பார்க்க முடியுது.... இந்து என் மனைவி, அருண் இப்போ என் பிள்ளை.... அவ்வளவுதான் வித்தியாசம்... இனி இவங்க ரெண்டு பேரும்தான் என் உலகமே .....” என்று கடகடவென்று இந்துவின் மீதுள்ள அன்பை விவரித்தான் பிரகாஸ்..... “அப்போ சந்தோசம் பிரகாஸ்.... எனக்க கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு, அதான் கேட்டேன்.... “ என்றான் ராகவன்.......

சற்று அமைதிக்கு பிறகு பிரகாஸ் தொடர்ந்தான், "நீங்க கனடா போய்தான் ஆகணுமா அண்ணே?" என்றான்.... "எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா பிரகாஸ்?.... என் வீட்லயும் குரு வீட்லயும் எங்க விஷயம் தெரிஞ்ச நாள் முதல் இப்போவரைக்கும் கலவரமே நடந்திட்டு இருக்கு.... ஒரு நிமிஷம்கூட நிம்மதியா இருக்க முடியல.... அதான் குருவுக்கு கனடால வேலை கிடைச்சிருக்கு, ஒரு வருஷம் நானும் அங்க போய் அவனோட இருக்க போறேன்..... ஒரு வருஷம் கழிச்சும் எங்க பிரச்சினை தீரலைனா, நிரந்தரமாவே நாங்க கனடாவுலேயே செட்டில் ஆகலாம்னு இருக்கோம்.... கே வாழ்க்கையை ஏத்துக்கற பக்குவத்துக்கு இன்னும் நம்ம மக்கள் வரல.... எந்த கவலையும், பிரச்சினையும், அவங்களுக்கும் தொல்லையும் இல்லாம இருக்க அவங்கள விட்டு ரொம்ப தூரம் விலகி இருக்கிறதுதான் இப்போதைக்கு நல்லது..... ஒரு வருஷத்துல எங்க குடும்பத்துல இருக்கவங்க எங்களை புரிஞ்சுகிட்டா பார்க்கலாம்... இல்லைனா கனடாவுலேயே செட்டில் ஆகிடுறோம்.... " என்று சொல்லி முடிக்கும்போது கண்களின் நீர் வழிந்து கால்களை நனைத்துக்கொண்டிருந்தது ...... ராகவனின் கையை பிடித்த பிரகாஸ், "நீங்க சொல்றதும் சரிதான் அண்ணே.... நிச்சயம் எல்லாம் மாறும் ஒருநாள்.... நம்பிக்கையோடு இருங்கண்ணே" என்றபோது வாகனம் வெகு தொலைவில் சென்றதைப்போல உணர்ந்தனர் இருவரும்.... எந்த ஒரு கசப்பான விஷயம் நம் வாழ்வில் நடந்தாலும், அதற்கு பின் ஒரு இனிப்பான நிகழ்வு நடக்கப்போகிறது என்பதுதான் கடவுளின் கணக்கு..... உண்மைக்காதல்கள் எந்த விதத்திலாவது வெற்றிபெறும்.... இனி  கார்த்தியாக இருக்கும் அருண் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் பிரகாசின் பங்கு நிறைந்திருக்கும்..... அருண் இல்லை என்கிற உணர்வு இனி பிரகாசிற்கு வராது..... எல்லாருடைய வாழ்க்கைக்கு உள்ளும் இதைப்போன்ற சொல்லப்படாத உண்மைகள் புதைந்திருக்கும்..... நிச்சயம் அந்த உண்மைகள் வெளிப்படாதவரை வாழ்க்கை இனிதாகவே இருக்கும்..... இப்போதும் சொல்கிறேன், காதலனோடு வாழ்வது மட்டும் காதலின் வெற்றி இல்லை, காதலனுக்காக, அவனின் நினைவுகளோடு வாழ்வதுதான் காதலின் வெற்றி..... இனி எல்லாம் சுபமாக இருந்திட வாழ்த்துவோம்.....

19 comments:

  1. Really nice narration. It is the best story I have read yet. I cannot go to sleep now.

    BUT PLEASE DONT RIGHT ANOTHER STORY LIKE THIS. IT IS HARD TO ACCEPT SOMEONE SUFFERRING THIS MUCH PAIN EVEN IF IT IS FICTIONAL.

    Expecting more love stories from you (But where there is happiness atleast at the ending)

    ARVIN

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பா...... இப்போது நான் எழுதிவரும் கதை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து எழுதி வருகிறேன்.... ஆர்குட்டிலும், ஆக்டிவ் போர்டிலும் எழுதி வருகிறேன்.... முற்றுப்பெற்றவுடன் இங்கே பதிகிறேன்.... அதற்குள் படிக்க வேண்டுமானால் அங்கு வந்து படியுங்கள் நண்பரே......

    ReplyDelete
  3. vijay... en idhayam kanapadhu pol unarukirean,,,,

    "காதலனுக்காக, அவனின் நினைவுகளோடு வாழ்வதுதான் காதலின் வெற்றி "

    kadhalukaga pirindhu vaaldhal kuda yerpadum vali,,mikavum sugamana vali...

    ReplyDelete
  4. . atleast ending la edhaavdhu oru happiness vainga...... inniku poora aludhu enakku kan rendum red aayiruchu!!!!!!
    "kaadhal- vali migundha sugam"
    verum story dhaana nu padikka aarambicha ennoda 1st story adhu!!!!! appo madhan moolama azha vachinga!!!! ipo arun moolamaa
    neenga really great na!!!!!!
    idhu varaikum naa 2 yrs love panni vittutu pona ennoda lover kaga kooda ivlo aludhadhu illa adhum oru naal nite fulla
    i love ur stories na
    i respect u honestly
    hatssss off
    salute!!!!!

    ReplyDelete
  5. Nice story... Nan miguvum rasithu paditha story... ithu kadthi ah ila nizama

    ReplyDelete
  6. i like ur story bro....☻ ☻ ☻

    ReplyDelete
  7. ippo than full story padichen romba nala iruku vijay anna,,,thanks for ur story,i like it very much....plz inimel indha madiri story venadam ennala marubadium azha mudiyadhu anna.........

    ReplyDelete
  8. mela sonna maathirir Enakkum remba alugaya irunthathu but very nice but inmel ippadi vendaam pls

    ReplyDelete
  9. Really a nice story..The love between arun and prakash,the characterization of prakash, the climax,the dialogues are really good.. But the love between arun and karthi was not so touching and the story is too lengthy.. Anyhow it is an awesome story which everyone should read..

    ReplyDelete
  10. wow..superb story mr.vijay

    ReplyDelete
  11. காதலனோடு வாழ்வது மட்டும் காதலின் வெற்றி இல்லை, காதலனுக்காக, அவனின் நினைவுகளோடு வாழ்வதுதான் காதலின் வெற்றி

    really fantastic lines vijay

    ReplyDelete
  12. very nice...vijay anna intha stroy la vara arun,parkash,karthik,raghu 4num of caracter awesome
    and at the same time intha strory la vara ella incidendu reala kanmunadi nataramathiri irruku
    so really very nice....apparum enna solla super!!!



    rajesh

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. அருண், பிரகாஷ் ரெண்டு பெரும் சேர்ந்திருக்கலாம். இத்தனை பிரிவுகளையும் இழப்புகளையும் ஏற்கும் பலம் என் மனதில் இல்லை, கதையை வாசித்து முடிந்து இன்னும் என்மனதினால் முடிவை ஏற்க முடியவில்லை. உ ங்கள் எழுத்தாற்றலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஒரு முழு திரைப்படம் பார்த்த திருப்தி. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  15. Hi vijay
    Enna soldrathune therriala...nan en azharenu puriala ..ithu oru storyah mattum ennala paka mudiala unmayana unarvamadiriae iruku..varthaiae varala hats off to you. ?.
    :, (

    ReplyDelete
  16. Hai anna, pls kaieduthu kumpadaren ini ippadi oru sokamana climax vasu story eluthathenga night ellam ennala thunka mudiyala remba kastama irukku, enakku kathalanoda ninaivukalla valara pakkuvam innum illa so arun-prakash pirivai thanga mudiyala, kadaisila eppadiyum rendu perum seru vankanu nenasen, ana avanka pirinsathe remba shock athula vera arun death enna remba pathisathu unkalukku venum na sokathil sukam irukkalam athukkaka ippadiya remba emotion akkittenga enna…

    ReplyDelete
  17. Nice narration Vijay. Congrats!

    ReplyDelete
  18. Vijay anna, ningga intha kathaiya ezhuthi 4 varushamm apram tha naa padikire. Satiyama padikumbothu kannorathila kanner vanthathu anna. Thoduvanathuku apram naa padicha 2nd kathai ithu. Namma mathiri pasangaluku ningga ezhuthura kathaigal vaazkaila pala paadangala kaththu kodukuthu. Love u Vijay anna

    ReplyDelete