Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday, 9 February 2013

"நீங்கள் யார்?" - ஒரு அலசல் ரிப்போர்ட்....


“ஒருபால் ஈர்ப்பினர் (gay & lesbian), இருபால் ஈர்ப்பினர்(bisexual), எதிர்பால் ஈர்ப்பினர்(straight), திருநர்(transgender)” வரிசையாக பட்டியலிடுவதால் குழப்பமாக இருக்கிறதா?.... வரலாறு, அறிவியல், ஆன்மிகம், நிகழ்வுகள் என்று பல திசையிலும் இவ்வளவு நாள் நிறைய தெரிந்துகொண்டும் கூட, இன்றும் சிலருக்கு தான் மேலே உள்ள பட்டியலில் எந்த வகையை சார்ந்தவர்கள்? என்பது புரியவில்லை என்று சொல்றாங்க பலரும்...
நிறைய பேர் இந்த குழப்பத்தில் மன உளைச்சலில் இருப்பதை காணமுடிகிறது.... அதனால், இந்த கட்டுரையில் இவற்றுக்கான விளக்கத்தை கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்....
முதலில் நம்ம விஷயம்தான்.... “கே” என்பவர்கள் யார்?....
ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உறவு கொண்டால், உறவு கொள்ளும் எண்ணம் வந்தால் அவர்கள் கே’யா?.... சிக்மண்ட் பிராயிடு என்ன சொல்கிறார் தெரியுமா?.... “உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளின் உள்ளாகவும் ஒருபால் ஈர்ப்பு எண்ணம் ஆழப்புதைந்திருக்கும்..... அதற்கான வாய்ப்பும், சந்தர்ப்பமும், தேவையும் உண்டாகும்போது அந்த எண்ணங்கள் வெளிப்படும்”.... அப்படியானால் உலகில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கே வகைக்குள் வந்திடுவாங்களா?.... அதுதான் இல்லை.... நம்முடைய தவறான புரிதல்தான் இது.... ஆணுடன் உறவு கொள்ளும் எல்லா ஆணும் கே கிடையாது.... MSM (men sex with men) என்பதையும் கே என்பதையும் நம்மில் பலரும் குழப்பிக்கொள்கிறோம்.... சந்தர்ப்பமும், சூழ்நிலையும், தேவையும் வாய்க்கும் பல ஆண்கள், மற்றொரு ஆணுடன் உறவில் ஈடுபடுவதற்கு பெயர்தான் MSM… STRAIGHT, BISEXUAL, GAY என்று எந்த வகை ஆண்களும், சூழ்நிலையும் தேவையும் உண்டாகும் நிலையில் இன்னொரு ஆணுடன் உறவு கொள்கிறான்.... பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அதிகம் வசிக்கும் பள்ளி கல்லூரி விடுதிகள், ராணுவம், சிறைச்சாலை போன்ற இடங்களில் தங்களின் உடல் தேவையை தீர்த்துக்கொள்ள , வடிகாலாக மற்றொரு ஆணுடன் உறவு கொள்வார்கள்.... அப்போதைய அந்த தேவைகள் நிறைவேறிய பின்பு, வேறு விதமாக தங்கள் உடல் தேவையை பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம் வாய்க்கும் தருணத்தில், அத்தகைய நபர்கள் இந்த விருப்பத்திலிருந்து விடுபட்டு எதிர்பாலின் மீது நாட்டம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.... இத்தகைய நபர்கள் தற்காலிக தேவைக்கான களமாக மட்டுமே இன்னொரு ஆணை பயன்படுத்துவார்கள்...... மேற்குலக நாடுகளில் பள்ளி படிக்கும்போதே ஒரு மாணவன் சக மாணவியுடன் காதல் கொள்வதையும், காமம் கொள்வதையும் நாம் அறியமுடிகிறது.... அவர்களின் பதின்வயது உடற்பசிக்கு தீனி அப்போதே அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது.... ஆனால், நம் நாட்டிலோ பார்த்து சிரித்தாலே குற்றவாளி ஆக்கப்படுறாங்க.... அதனால், அந்த பதின்வயது, இளம் வயது ஹார்மோன் எழுச்சியை தீர்க்க வடிகாலாக மற்ற ஆண்களை பயன்படுத்துவது நிச்சயம் கே கிடையாது....  அப்படியென்றால் கே என்பவர்கள் யார்?.... கே என்பது ஒரு கலாச்சார அடையாளம், அது சமூக அடையாளம்....
ரம்பை ஊர்வசி என்று தேவலோக கன்னிகைகளே அருகில் இருந்தாலும், ஒரு கே’வின் ஈர்ப்பு என்பது இன்னொரு ஆணை தான் தேடி செல்லும்.... உடல் ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வு ரீதியாகவும் இன்னொரு ஆணை எதிர்பார்ப்பவன் கே... ஒரு முழுமையான கே என்பவன் பெண்ணின் மீது நாட்டம் என்பதே கொள்ளமாட்டான்... அன்பு, காதல், உடல் தேவை என்று பலவற்றையும் இன்னொரு ஆணிடம் மட்டுமே முழுமையாக எதிர்பார்ப்பான்....
நிறைய பேருக்கு குழப்பம் உண்டாவது கே மற்றும் இருபால் ஈர்ப்பினர் (bisexual), இரண்டிற்குமான வேறுபாடு தெரியாததால் தான்... இருபால் ஈர்ப்பினர் என்பவர் ஒரே நேரத்தில் ஆண் மற்றும் பெண்ணின் மீது ஈர்ப்பு கொண்டவராகவும் அல்லது, குறிப்பிட்ட காலம் வரை எதிர்பால் நாட்டம் உள்ளவராகவும், அதன்பிறகு சமபால் நாட்டம் கொண்டவராகவும் கூட இருக்கலாம்... இந்த bisexual வகை நபர்களை ஒரு வரையறைக்குள் நாம் கொண்டுவரமுடியாது....
“பதின்வயது வரை பெண்களின் மீது ஈர்ப்பும், அதன் பிறகு ஆணின் மீது ஈர்ப்பும் கொண்ட நபர்”
“இளம் வயது வரை சமபால் ஈர்ப்பினராக இருந்துவிட்டு, அதன்பிறகு எதிர்பாலினர் மீது ஈர்ப்பு கொள்ளும் நபர்”
“ஒரே நேரத்தில் ஆண் மீதும், பெண் மீதும் என ஈர்ப்பு கொண்ட நபர்”
இந்த மூன்று நபர்களுமே bisexual வகையை சார்ந்தவர்கள் தான்.... இத்தகைய நபர்கள்தான் ரொம்பவும் குழம்புவாங்க.... குறிப்பா, இவங்கள பத்தி ஒரு முக்கியமான விஷயம் “BISEXUAL நபர்கள் இருபாலினர் மீதும் ஈர்ப்பு கொண்டு இருந்தாலும், சமபால் மீதே அதிக ஈர்ப்பு கொண்டு இருப்பார்கள்”.... அதாவது, “ஒருத்தனுக்கு ஆண் மற்றும் பெண் இரண்டு பாலினத்தின் மீதும் ஈர்ப்பு இருக்கிறதை அவன் உணர்கிறான்... அதே நேரத்தில் அவன் ஈர்ப்பு ஆணின் மீதே அதிகம் காணப்படுகிறது.... ஆணின் மீது அதிக ஈர்ப்பும், பெண்ணின் மீது குறைவான ஈர்ப்பும் உடையவனாக இருப்பான்....” இப்படிப்பட்ட நபர்கள்தான் bisexual பிரிவில் பிரதானமாக இருப்பார்கள்....
இத்தகைய நபர்களுக்கு அதிக குழப்பம் உண்டாகலாம்.... அதிலும் அவர்களுக்கு திருமண பேச்சு பேசப்படும்போது ரொம்பவே குழம்புவாங்க.... பெண்ணின் மீது நாட்டம் இருந்தாலும், அதிகமாக ஆணின் மீது நாட்டம் இருப்பதால் தான் ஒரு “கே”வாக இருப்பானோ? என்கிற தயக்கமே அந்த குழப்பத்திற்கு காரணம்....
இப்படிப்பட்ட நபர்கள் bisexualஆக இருந்தாலும், தங்களை கே’வாக நினைக்கும் நிலையில், இதற்கு எதிர் மனநிலையில் இருப்பாங்க இன்னும் சிலர்... அதாவது ஒரு கே தன்னை பை’யாக நினைத்துக்கொள்வது..... இது பிறப்பால் உண்டாகும் மாற்றம் அல்ல, சமூகத்தால் உண்டாக்கப்படும் மாற்றம்... இதை விளக்க ஒரு சிறு உதாரணம் சொல்லலாம்...
“ஒரு பதின்வயது கே இளைஞன் தனக்கு இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு வரும்போது குழப்பம் அடைவான்.... பள்ளி பருவத்தில் முறையான பாலியல் அறிவு அவனுக்கு இல்லாமல் இருப்பதால், தான் செய்வது சரியா? தவறா? என்று குழம்புவான்... சுற்றிலும் இருக்கும் தன் நண்பர்கள் பிற பெண்களின் மீது நாட்டம் கொள்வதை பார்க்கும்போது, தனக்கிருக்கும் இந்த பாலீர்ப்பு தவறு! என்று நினைக்க தொடங்குவான்.... அதனால், வலுக்கட்டாயமாக தன்னை மற்ற பெண்களின் மீது நாட்டம் உண்டாக்க பகீரத பிராயத்தனம் செய்வான்... உடலால் உணர்வால் அவன் இன்னொரு ஆணின் மீது விருப்பம் கொண்டாலும், மனதால் தன்னை மற்றொரு பெண்ணின் மீது நாட்டம் கொண்டிருப்பதை போல நடித்து வாழத்தொடங்குவான்.... அந்த நடிப்பு காலப்போக்கில் அவனோடு ஒன்றிவிடும் போது, இயற்கையாக உருவான ஒருபால் ஈர்ப்பு, இவனாக உருவாக்கிய எதிர்பால் ஈர்ப்பு இரண்டும் சேர்ந்து அவனை ஒரு பை போல நமக்கு காட்டும்.... அவனையும் அவ்வாறே நினைக்க வைத்திடும்.... “ இப்படிப்பட்ட நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்... தன்னை பை’யாக நினைத்து தன்னையே ஏமாற்றிக்கொண்டு வாழும் நபர்கள், நிறையபேர் திருமணத்திற்கு பின்பு வருந்துவதை காணமுடிகிறது.... இது அவர்கள் செய்யும் தவறு இல்லை, சமூகத்தால் தூண்டப்பட்டு செயவிக்கப்படும் தவறு...
இன்னும் சிலர் கே என்று சொன்னால் அதில் தகுதி குறைவாக நினைத்துக்கொண்டு, தங்களை “பை”யாக வெளிப்படுத்துவார்கள்.... இப்படி ஒரு ஏற்றத்தாழ்வு எங்கே? ஏன்? உருவானது என்று எனக்கு தெரியல.... புறக்கணிக்கப்பட்ட மக்களில் கூட “மிகவும் புறக்கணிக்கப்பட்ட பிரிவாக கே இங்கே நம்மவர்களால் உருவாக்கப்பட்டு விட்டதுதான் கொடுமையிலும் கொடுமை”.... இப்படி பை என்பதை பற்றி சிலர் பெருமையாக நினைத்தாலும், அவர்களை பலர் “சந்தர்ப்பவாதிகளாக” சித்தரிப்பது இன்னும் பாவமான செயல்....
“பெண்கள் கிடைக்காததால் ஆண்களை நாடி வருகிறார்கள்” என்று பை மீது ஒரு பரவலான வதந்தி உருவாக்கப்பட்டு விட்டது.... நான் முன்பு சொன்னதைப்போல, பெரும்பாலான பை நபர்களுக்கு , சமபாலினத்தின் மீதே அதிகம் ஈர்ப்பு உண்டாகும்.... இது அவர்கள் சந்தர்ப்பவாதத்தால் உண்டாக்கவில்லை, இது இயற்கையே அவர்களுக்கு எழுதிய “விதி”... அதனால் அவர்களை இதில் குற்றம் சொல்வதும் தவறு....
பாலின சிறுபான்மையினர் பட்டியலை பொதுவாக குறிப்பிடும்போது LGBT என்று இணைத்து சொல்வதை நாம் காணமுடியும்.... பாலின ஒடுக்குமுறையில் இந்த நான்கு பிரிவுகளுமே பாதிக்கப்படுவது உண்மைதான்... ஆனால், இதில் LGB என்பது பால் ஈர்ப்பு மட்டுமே....    T என்று சொல்லப்படும் திருநர்கள் (திருநம்பி, திருநங்கை) என்பவர்கள் பாலினம் தொடர்பான மாற்றம் கொண்டவர்கள்.... அதாவது திருநங்கை  என்பவர்கள் தன்னை முழுமையாக ஆணிலிருந்து பெண்ணாக கருதுபவர்கள்.... வெறும் பால் ஈர்ப்பு மட்டும் அவர்கள் உணர்வு கிடையாது.... உடலால், உள்ளத்தால், உணர்வால் பெண்மையை உணர்ந்து பெண்ணாகவே மாறுபவர்கள்.... ஆனால், கே என்பவன் தன்னை ஆணாகவே கருதுபவன்.... எப்போதும் தன்னுள் பெண்மையை உணரமாட்டான்... பால் ஈர்ப்பு விஷயத்தில் மட்டும், சமபால் ஈர்ப்பு கொண்டவனாக இருப்பான்.... அதனால், கே என்பதையும், திருனங்கைகளையும் யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.... இந்த குழப்பம் பெரும்பாலான கே நபர்களுக்கு பதின் பருவத்தின் தொடக்கத்தில் வந்திருக்கும்....
“ஆண் என்பவன் பெண்ணின் மீதுதான் ஈர்ப்புக்கொள்ள வேண்டும், ஒரு ஆண் ஆணின் மீதே ஈர்ப்பு கொண்டால் அவன் திருநங்கை” இப்படிப்பட்ட ஒரு தவறான எண்ணம் பெரும்பாலான நபர்களுக்கு வந்திருக்கலாம்... நண்பர்களுக்கெல்லாம் பெண்ணின் மீது ஈர்ப்பு வரும்போது, தனக்கு மட்டும் ஆணின் மீது ஈர்ப்பு உண்டாகும்போது “ஒருவேளை நான் திருநங்கையா? ஆண் இல்லையா?” என்கிற சந்தேகமும் குழப்பமும் உண்டாகி இருக்கும்... நம் கல்வி முறையில் கூட ஆண், பெண் கடந்து திருநங்கை மட்டுமே குரிப்பிடப்பட்டிருப்பதால், அந்த அறியா வயதில் பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய எண்ணம் உண்டாகி இருக்கும்....
பின்பு “பாலினம் வேறு. பாலீர்ப்பு வேறு” என்கிற உண்மையை உணரும்போதுதான் “தான் திருநங்கை இல்லை, கே என்பதை அவன் உணர்கிறான்”... தன்னுள் நடக்கும் இந்த மாற்றத்தை உணரவே நம்மவர்களுக்கு இத்தனை காலம் ஆகும்போது, நம் உணர்வுகளை மற்றவர்கள் உணர்ந்திட நிச்சயம் இன்னும் அதிக காலம் ஆகும்...
அதனால் திருநர் மற்றும் கே இருவருக்கும் இடையில் இடையில் இருக்கும் வேறுபாடு “மலைக்கும் மடுவிற்கும்” இடையே இருக்கும் வேறுபாடு போன்றது என்பதை உணருங்கள்...
இன்றைக்கு சமபால் மீது ஈர்ப்பு கொள்பவர்களை பற்றி சமூகத்தில் பலரும் திருநர்களாக நினைக்கிறார்கள்.... அது முற்றிலும் தவறு என்பதை முதலில் நாம் உணரவேண்டும், அவர்களுக்கும் உணர்த்த வேண்டும்....
இந்த சிறு விளக்கம் இப்போதைக்கு போதும்னு நினைக்குறேன், கொஞ்சமாச்சும் உங்களுக்கு நான் சொன்னது புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்......
நீங்கள் இவற்றுள் எந்த வகையை சார்ந்தவர் என்பதையும் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.... மேலும் சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்க, தெரிந்ததை சொல்றேன்.... நன்றி...

3 comments:

  1. Actually enaku boys mela neriya interest Ila. Epavachi tha interest erukom And girls keta Na romba free ya feel pannivan... Oru girls keta kedaikura free.. enaku boys keta sela neram kedaikurathu Ila.. sometimes boys keta uncomfortablela feel pAnnuvan.. but neriya time Ena oru girl la nechirukan in normal time and while sex time also... And nowadays I attracted girls materials and dress also sometimes want to wear it... I think if the girls dress are suitable 4 me r not. Now tell Vickey bro actually who I'm????

    ReplyDelete
    Replies
    1. Na girl keta free ya feel pAnnuvan means pesuruthula palagurathula oru friendly ya

      Delete
  2. Sai ur mob no iruntha kudunga.pesalaam. neenga ithuvarari girls kuda sex panni irukeengalaa? Or boys kuda? Ungaluku child pethuka aasai iruka? Oru velai neenga cross dresser ah irukalaam.

    ReplyDelete