Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 22 February 2013

"நீங்கள் நார்மலா?" - ஒரு சுய பரிசோதனை கட்டுரை...

இன்றைக்கு கே’ன்னு சொன்னதும் உடனே நாம் உட்பட பொதுவா அனைவருக்கும் உடனே தோனுறது “செக்ஸ்” தான்... அப்டி நிலைமையை நம்மவர்களே ஆக்கிட்டோம்.... இதுல மேலோட்டமா பார்த்தா “என்ன தப்பு?”னு தோணலாம்... மத்த உணர்வுகள போல செக்ஸும் இயல்பானதுதானே?னு நீங்க கேக்கலாம்... செக்ஸ் இல்லாம வாழ்க்கை முழுமை அடையாதே’ன்னு நீங்க வாதம் செய்யலாம்... ஆனால், ஒன்னே ஒன்ன புரிஞ்சுக்கோங்க “எதுவுமே அதற்கான எல்லையை தாண்டாத வரைக்கும்தான் நார்மல்”...
உதாரணத்தோட சொல்லனும்னா,
“பயம்”ங்குறது சாதாரண ஒன்னு, அதுவே அதீதமா ஆகிட்டா “போபியா”,
“உற்சாகம்”ங்குறது இயல்பு, அதுவே அதீதமான “மேனியா”
“பதற்றம்”ங்குறது இயல்பு, அதுவே அதீதமாகிட்டா “ஆன்க்சைட்டி”....
பயம், உற்சாகம், பதற்றம் இதல்லாம் எல்லா மனுஷங்களுகும் இருக்குறதுதான்... அது அதீதமா ஆகிடுறப்போ அது “போபியா, மேனியா, ஆன்க்சைட்டி”னு மனநோயுடைய அறிகுறிகளா ஆகிடுது.... அப்டினா செக்ஸ் மீதான அதீத ஆர்வமும் மனநோயா?னு நீங்க கேட்டா, அதுக்கு என் பதில் “ஆம்” என்பதுதான்....
இன்னைக்கு இந்த கே சமுதாயத்துல பலபேர் இந்த மனநோயை நோக்கி போய்கிட்டு இருக்குறத நான் பாக்க முடியுது... உலக சுகாதாரா நிறுவனம் இந்த விதமான நிலைக்கு பெயர் “செக்ஸ் அடிக்ஸன்”னு பெயர் வச்சிருக்கு (The World Health Organization in the International Classification of Diseases (ICD) includes "excessive sexual drive" as a diagnosis of sexual addiction)....
ஆரம்ப நிலையில சாதாரண “ஜாலி”க்காக தொடங்குற காமப்பசி, கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி “காமத்தீ” அளவுக்கு பெருசா ஆகிடுது.... “வாழ்க்கை சந்தோஷமா வாழ்வதற்கே”னு தங்களுக்குள்ளேயே நினைச்சுகிட்டு, இதை தொடருறப்போ ஒரு கட்டத்துல “உறவில் ஈடுபட்டே ஆகவேண்டும்” என்கிற நிலைக்குள் கொண்டு சேர்த்துடுது (The sex addict may initially be involved in a healthy and enjoyable sexual situation which eventually develops into an obsession)....
ஒவ்வொரு நாளும் அந்த கட்டாயம் அவனுக்குள்ள அதிகமாகிகிட்டே இருக்கும்... விதவிதமான மனிதர்களை நோக்கி ஓட சொல்லும்.... ஒருமுறை உறவில் ஈடுபட்டவனோட அடுத்த முறை ஈடுபடுவதில் கூட விருப்பம் இருக்காது.... விதவிதமான ஆட்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்ப்பார்கள்.... ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்புகள் இன்னும் இன்னும் அதிகமாகுறப்போ, அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாவிட்டால், அதன் விளைவுகள் வேறு விதமாக வெளிப்படும்.... முதலில் தன் மீதான மதிப்பை இழப்பார்கள், அதன் மூலம் தாழ்வு மனப்பான்மை அதிகமாகும்.... தேவையற்ற பதற்றம், கோபம் உண்டாகி அதை குடும்ப உறவுகளிடமோ, நண்பர்களிடமோ காட்டுவார்கள்...
செய்யும் பணியில் கவனம் குறையும், இயல்பான சமூக இணக்கம் குறையும்....இவ்வளவையும் தாண்டி பலருக்கு “தற்கொலை” எண்ணங்கள் கூட ஒரு நேரத்தில் உருவாகலாம்.... மனரீதியாக இப்படி பிரச்சினைகள் வரும் அதே நேரத்தில், உடல் ரீதியாகவும் அவங்களுக்கு “பால்வினை” நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்... விதவிதமான ஆட்களிடம் செல்லும் போது, இந்த ரிஸ்க் அவர்களை அடைந்தே தீரும்... உறவு நட்புகள் உடனான உறவு பாதிக்கப்படும், செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாது, உடல் ரீதியான நோய்கள் தாக்கும் ஆபத்துன்னு நிறைய ஆபத்துகள் அவர்களை நோக்கி பேரணியாக செல்லும்...

உங்களிடம் நீங்க மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்க.... மூன்றுக்கும் பதில் “முடியும்” என்றால் நீங்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகவில்லை என்று அர்த்தம்....
1.      உங்களால் உங்கள் செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியுமா?
2.      உங்கள் செக்ஸ் நடவடிக்கைகளால் உண்டாகும் கோபம், வெறுப்பை உங்கள் நட்பு, உறவினர் மீது காட்டாமல் இருக்க முடியுமா?
3.      ஒரு நாளில் பெரும்பாலான நேரம் செக்ஸ் பற்றிய எண்ணம் இல்லாமல் இருக்க முடியுமா?... அதாவது மற்ற வேலைகளை செய்யும் போது, செக்ஸ் எண்ணங்கள் குறிக்கிடாமல் உங்களால் இருக்க முடியுமா?
இந்த கேள்விகளுக்கான பதிலை நீங்கள் உங்கள் மனதிற்கு விரோதமில்லாமல் யோசித்து பாருங்க....
இதற்கான காரணங்களாக நிறைய சொல்றாங்க.... அதில் குறிப்பா “மூளையில் இயற்கையாக இருக்கும் சில வேதிப்போருட்களின் சீரற்ற சுரப்பால் உண்டாகிறது” என்று சொல்றாங்க... (High levels of certain chemicals in your brain (neurotransmitters) such as serotonin, dopamine and norepinephrine may be related to compulsive sexual behavior. These brain chemicals also help regulate your mood.)
இத்தகைய நபர்கள் உறவில் ஈடுபடும்போது, செக்ஸ் தாண்டிய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.... செக்ஸ் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்கும்....
இங்கே நான் பார்க்குற பலரும், ஒரு நபரிடம் அறிமுகமாகும்போது முதலில் கேட்கப்படும் கேள்விகளே “ur likes?, do u hav place?” என்பதுதான்.... உறவுக்கு முன்பும், உறவுக்கு பின்பும் அத்தகைய நபர்களுக்கு எவ்விதமான இயல்பான பேச்சுகளும் தேவைப்படுறதில்ல.... உணர்வுகளுக்கு மதிப்பில்லாத, வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் மக்கள் நிச்சயம் மனநோயை நோக்கி செல்பவர்கள் தான்....
கீழே ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் நிலைகள் இத்தகைய நபர்களுக்கு பொதுவாக காணப்படும் (ஒன்றிரண்டு இல்லாமல் கூட இருக்கலாம்) என்று அறிவியலாளர்கள் சொல்றாங்க....
  • Having multiple sexual partners or extramarital affairs
  • Having sex with anonymous partners or prostitutes
  • Avoiding emotional involvement in sexual relationships
  • Using commercial phone sex conversations for gratification
  • Visiting sexually explicit Internet sites or services
  • Engaging in excessive masturbation
  • Frequently using pornographic materials
  • Engaging in masochistic or sadistic sex
  • Exhibitionism
  • Having a fixation on an unattainable sex partner

என் பேஸ்புக் நண்பர் பட்டியலில் இருக்கும் ஒரு நபர், தினமும் காலையில் தன்னுடைய நிர்வாண படத்தை ஸ்டேட்டஸ் போல போட்டு, “today iam free with place…. Any slim guys below 20, inbox me with ur pic” என்று தினமும் கடவுள் வாழ்த்து போல ஸ்டேட்டஸ் போடுவார்..... காலையின் அவரது தொடக்கமே இந்த ஸ்டேட்டஸ் தான்.... அன்றைய பொழுது முழுக்க இந்த ஸ்டேட்டஸ்’க்கான பதிலில் அவரது முழு நாளும் கழியும்.... எழுத்தாளர் கீரா சமீபத்து தன் பேட்டியில், “ஒரு நாளில் முக்கால்வாசி நேரத்தை காமத்தை பற்றிய சிந்தனையிலேயே கழிப்பது இயல்பானது அல்ல, அது மனநோய்” என்றார்.... ஒருநாளின் முக்கால்வாசி நேரத்து சிந்தனையை கீரா மனநோய் என்கிறார், அப்படியானால் அந்த பேஸ்புக் நபரின் முழு நேர சிந்தனையை என்ன என்று சொல்வது?.... இப்படி நாள் முழுக்க செக்ஸ் பற்றிய சிந்தனையில் இருப்பவர்களை எந்த வகையில் சேர்க்கனும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க... நிச்சயம் இந்த கட்டுரையை படிக்கும் அளவிற்கல்லாம் அவருக்கு பொறுமை இருக்காது, இருந்தாலும் என் நண்பர்கள் பட்டியலிலிருந்து இதுவரை அவரை நான் நீக்காததற்கு காரணம், என்றைக்காவது ஒருநாள் நான் சொல்ல வருவது அவரை சென்றடையும் என்ற நம்பிக்கையால்தான்... அதற்கான வாய்ப்பை நானே இல்லாமல் செய்துவிடக்கூடாது என்பதால்தான் என் நண்பராக இன்னும் அவர் நிலைத்திருக்கிறார்.... மேலும், இது அவரின் தவறு இல்லை... அவரின் அறியாமையால் தன்னையே அறியாமல் அவர் செய்யும் தவறு....
முழுமையான விழிப்புணர்வை இந்த சமூகமும், பாலியல் கல்வியை படிக்கும் கல்வியும் கொடுக்காததன் விளைவுதான் இப்படி நித்தமும் “ஆள் தேடும்” ஆசாமிகளை உருவாக்கி வைத்திருக்கிறது....
காமம் என்பதே தவறா? என்று நீங்கள் சண்டைக்கு வருவீங்க.... தவறே இல்லைங்க.... அறத்தையும், பொருளையும் பற்றி சொன்ன அதே வள்ளுவன் தான் காமத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து குறள்களை வடித்தான்.... பசி, தூக்கம் போல காமமும் ஒரு மனிதனின் இயல்பான உணர்வுதான்... நானும் சாமியார் இல்லை.. எனக்கும் அந்த உணர்வுகள் உண்டுதான்.... ஆனால், அது உங்களை மீறி செல்லாமல் நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்... கட்டுப்படுத்த முடியாத அந்த உணர்வுகள், ஒரு நேரத்தில் உங்களை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிடும்.... ஒவ்வொருநாளும் உங்கள் தேடலும், எதிர்பார்ப்புகளும் அதிகமாகுமே தவிர குறையாது... விளைவு, மனநோய் தான்....
வாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்துவது பெரிய தவறில்லை.... ஆனால், வாய்ப்புகளை உருவாக்குவதிலேயே உங்கள் பொழுதை கழிக்கும் நிலையை தான் நான் தவறென சொல்கிறேன்....
முதலில் உங்கள் தவறுகளை நீங்கள் உணர்ந்தாலே, நீங்கள் இந்த பிரச்சினையிலிருந்து பாதி பிரச்சினையை கடந்துவிடலாம்.... அதன்பிறகு உங்களை நீங்கள் மீட்பது எளிதான காரியம்.... உங்கள் தவறுகளை நியாயப்படுத்தாமல், முறைப்படுத்துங்கள்.... வளமான உங்கள் வாழ்வை, சிற்றின்பத்தால் சீர்குழைக்க வைத்துவிடாதீர்கள்....

5 comments:

  1. HELLO VIJAY I AM KANNAN ACTUALLY TODAY ONLY I READ THIS MASSAGE. I WANT TO DISCUSES WITH U CAN I GET ANY CONT.,I NEED YOUR HELP

    ReplyDelete
  2. hi vicky, ravi kamal here...

    i slowly started loving your words......

    ReplyDelete
  3. very good analysis my friend; tnx for posting this. u r an intelligent.

    ReplyDelete
  4. @green, kamal, roy...
    ரொம்ப நன்றி நண்பர்களே....

    ReplyDelete
  5. Thanks for posting na...... basically i m a phobia person:-(

    ReplyDelete