சென்னை தோஸ்த்
அழைக்கிறது...
வானவில்லின் நிறங்கள்
கொண்டு, சென்னையை வண்ணமயமாக்க போகும் ஒரு “ஒளி”திருவிழா....
நம் எண்ணங்களை திரையில்
நாமே பார்க்கப்போகும் ஒரு மகத்தான பெருவிழா....
பாலீர்ப்பு ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகத்தில்
விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தில் தென்னிந்தியாவில் பல ஆண்டுகளாக
போராடிக்கொண்டிருக்கும் "சென்னை தோஸ்த் " அமைப்பின் அடுத்தக்கட்ட
ஆக்கப்பூர்வமான நகர்வாக "சென்னை வானவில் பட விழா" நடைபெற இருக்கிறது....
உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைத்து, சமூக விழிப்புணர்வில்
உங்களின் பங்களிப்பையும் கொடுக்க இது ஓர் அறிய வாய்ப்பு.... திரைப்பட விழாவின்
இறுதிநாளில் , வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை
பெருமைப்படுத்தும் விதமாக பரிசுகளும் வழங்கப்படும்....
உங்கள் படைப்பு
பாலீர்ப்பு காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை முறைகள், சந்தித்த சவால்கள், எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்
என பாலீர்ப்பு தொடர்பாக இருத்தல் வேண்டும்.... அந்த படைப்பின் காப்புரிமை
உங்களுக்கு உரியதாக இருக்க வேண்டும்...
உங்கள் படைப்பு
குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் என எந்த வகையிலாகவும் இருக்கலாம், ஆனால் சமூக அக்கறையோடு இருக்க வேண்டியது அவசியம்....
உங்கள் படைப்பை அனுப்பிட, கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் விபரங்களை பதியவும்....
நாள்
- சித்திரை திருநாளாம் ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை.....
அந்தி
சாயும் நேரம்....
மேலும்
விபரங்களுக்கு , தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி என்ன.... +91 –
9551630213
அல்லது
மின்னஞ்சல் முகவரி...email us at chennairainbowfilmfest@gmail.com.
-
எப்போதும்
உங்கள் உணர்வுப்பூர்வமான நண்பன்,
சென்னை தோஸ்த்...
where?
ReplyDeletevetri pera en valthukal...
ReplyDelete