Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 14 June 2013

"தனியாக போராட முடியாதா?" ....



சமீப காலங்களில் நம்ம ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவாக நடக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள் அனைத்திலும், திருநங்கைகளின் பங்கு பிரதானமாக இருப்பதை அதிகம்  பார்க்க முடியுது... என்றைக்கோ, யாரோ உருவாக்கிய LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) என்ற ஒருங்கிணைப்பை வைத்து, பாலின சிறுபான்மையினர் என்கிற அடிப்படையில் இந்த இணைந்த போராட்டங்கள் நடைபெறுகிறது....
இது சரியான வழியா?னு யோசிச்சதுண்டா நீங்க?... திருநங்கைகளும், ஒருபால் ஈர்ப்பாளர்களும் ஒன்றா?.... நிச்சயமா இல்லைங்க.... திருநங்கை என்பவர் “பிறப்பால ஆணாக இருந்தாலும், தன்னை பெண்ணாக உணர்ந்து, பெண்ணாகவே மாறிவிட்டவர்”... ஆனால், கே (gay) என்பவன் “தான் ஆண் தான் என்பதில் ரொம்பவே உறுதியாக இருப்பவன்.... பாலீர்ப்பு விஷயம் ஒன்றில் மட்டும் அவன் மற்ற ஆண்களிலிருந்து கொஞ்சம் மாறுபடுறான்.... மத்த ஆண்கள், பெண்கள் மீது ஈர்ப்பு கொள்ளும்போது, கே என்பவன் ஆணின் மீதே ஈர்ப்பு கொள்கிறான்..”. சுருக்கமா சொல்லனும்னா, திருநர் என்பவர் பாலின மாறுபாடு கொண்டவர், கே என்பவர் பாலீர்ப்பில் மட்டும் மாற்றம் கொண்டவர்.... அதாவது, “பாம்பு படம் எடுக்குறதுக்கும், பாலுமகேந்திரா படம் எடுப்பதற்கும்” எவ்வளவு வித்தியாசம் இருக்கோ, அந்த அளவு வித்தியாசம் “கே மற்றும் திருநங்கை” இரண்டிற்கும் உண்டு...
அதற்காக நான் திருநங்கைகளை குறைவாக மதிப்பிடுவதாக நினைக்காதிங்க.... அவங்க போராட்டம் ரொம்ப நியாயமான போராட்டம்... நம்மைவிட அதிக கஷ்டங்களை அனுபவித்து வாழ்பவங்க அவங்க... ஆனால், சமீப காலமாக அவங்க போராட்டம் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.... இந்த சமூகம் அவங்கள பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொண்டு வந்துகொண்டிருக்குது.... “நலவாரியம் தொடங்கி வாக்குரிமை வரை” போராடி பெற்றுள்ளார்கள்... அவங்க போராட்ட வெற்றியின் உயரத்தை நாம் தொட இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.... அதனால, இனி அவங்களோட சேர்ந்து போராடுவதை விட, நமக்கான தனித்துவமான போராட்டங்கள் உண்டாகனும்னு நினைப்பது தவறல்ல.... இன்னும் நம்மை பற்றிய தெளிவான கண்ணோட்டம் படித்த மேதைகள் மத்தியில் கூட உருவாகல, அதற்கு காரணம் நம் தனித்துவத்தை நாமே இன்னும் சரியா வெளிப்படுத்தல....
தனியாக போராடணும்னு நான் சொல்றதுக்கு முக்கிய காரணங்கள் உண்டு....
முதல்ல, இப்படி இணைந்து போராட்டம் நடத்துவதால, “ஒருபால் ஈர்ப்பு நபர்களும் திருனர்கள்தான்” என்கிற ஒரு பொய்யான பிம்பம் மக்கள் மத்தியில் உண்டாகிடுது... ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு வைத்தாலே, அவன் திருநங்கை என்று நினைத்திடுறாங்க.... இங்கே, ஒருபால் ஈர்ப்பு என்பதற்கான ஒரு விளக்கத்தை மக்கள் மத்தியில் நாம கொண்டுசேர்க்க முடியாம போயிடுது....
பொதுமக்களுக்கு மட்டுமில்லை,படித்தவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், ஊடக துறையினர் என்று பல்துறை வல்லுனர்களுக்குமே அப்படிப்பட்ட எண்ணம்தான் மனதில் இருக்கிறது.... திருநங்கைகளுக்கு ஆதரவா பேசுற முற்போக்கு எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் கூட “ஒருபால் ஈர்ப்பு” என்றால் கருத்து சொல்லவே தயங்குறாங்க.... ஒருவகையில், அவங்களுக்கு இதைப்பற்றிய தனியான ஒரு ஐடியா இல்லாதது காரணமாக இருக்கலாம்...
சில வருஷங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு இப்போ எனக்கு ஞாபகம் வருது... பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரு பதின்வயது சிறுவன், தனக்கு மற்ற ஆண்கள் மீது ஈர்ப்பு வருவதில் குழப்பத்தில் விழுந்தான்... மனரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டவன், ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்து திருநங்கையாக மாறிட சென்றுவிட்டான்.... நல்லவேளையாக அவன் சென்ற இடத்தில் அவனுக்கு “கே” பற்றிய ஒரு விளக்கத்தை கொடுத்த நல்லவர்கள், அவனை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.... இது எவ்வளவு பெரிய சமூக அலட்சியத்தை காட்டுகிறது பார்த்திங்களா?... தன்னால் உணரப்படும் மாற்றத்துக்கு என்ன பெயர்? என்று தெரியாமல் ஒரு பள்ளி மாணவன் இப்படி முடிவெடுத்து இருக்கிறான்....
இது ஒரு சிறுவனின் கதை இல்லை.... இன்னும் “கே” என்ற தனி அடையாளம் தெரியாத எத்தனையோ மாணவர்களின் கதை....
இங்கே அதிகம் விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு தேவைப்படுது.... இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருந்த என் நண்பனை பற்றி அவன் பெற்றோருக்கு தெரியவந்தபோது, அவர்கள் அவனை “பொ**, ஒ**து”போன்ற வார்த்தைகளால் திட்டி, அவனை ஒரு திருனங்கையாகவே நினைத்தனர்.... இத்தனைக்கும் அந்த அப்பா ஒரு அரசு அதிகாரி....
நாம ஊடகத்தை மட்டுமே இதற்கு காரணமாக கூறிவிட்டு, ஒதுங்கி நின்றுவிடுவதில் அர்த்தமில்லை... நமக்கான தனித்துவத்தை நாம் உணர்த்த தவறியதன் விளைவுதான் இதற்கு காரணம்.... நம் போராட்டம் தொடங்கிய நாள் முதலாக, இன்றுவரை பெரும்பாலான போராட்டங்கள் “திருநங்கை” அமைப்புகளுடன் இணைந்துதானே நடக்கிறது... வெளியிலிருந்து பார்க்கும், பொதுவான நபர்களுக்கு “இரண்டும் ஒன்றுதான்” என்றுதானே எண்ணத்தோன்றும்....
1990களில் அமெரிக்காவிலும், இன்றுவரை இந்தியாவிலும் எயிட்ஸ் நோயை “gay disease” என்று மக்கள் நம்பிய காரணம் என்ன தெரியுமா?.... கே விழிப்புணர்வையும், எயிட்ஸ் விழிப்புணர்வையும் ஒன்றாக நடத்திய அமைப்புகள்தான் காரணம்.... இரண்டு வார்த்தைகளையும் அதிகம் இணைந்தே பார்த்திருப்பதால், மக்கள் மத்தியில் கே என்றாலே, அடுத்த நினைப்பாக எயிட்ஸ் வந்துவிடுகிறது....
“பாதுகாப்பற்ற உடலுறவு” கொண்டால் எயிட்ஸ் நோய்க்கு ஆண், பெண் என்ற பேதமல்லாம் இல்லை... யாரை வேணும்னாலும் தாக்கும்.... இந்த உண்மை புரியாமல், புரிந்தும் புரியாதது போல இருக்கும் நம்ம மக்களை அப்படி கோணத்தில் எண்ண வைத்தது “விழிப்புணர்வு” போராட்டங்கள் என்கிற அம்சத்தில் நாம் நடத்திய போராட்டங்களும், நிகழ்வுகளும்தான்.... இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை சொல்லத்தான்....
நாம் இன்னும் சில காலம் ஒருபால் ஈர்ப்பு போராட்டங்களை, திருநர் போராட்டங்களோடு இணைத்தே செய்தோம் என்றால் நிச்சயம் “கே” “லெஸ்பியன்” என்ற வார்த்தைகளுக்கான தனித்துவத்தை நாமே அழித்துவிடும் சூழ்நிலை உருவாகிடும்.... இதை குற்றச்சாட்டாக தயவுசெய்து பார்க்காதிங்க, ஒரு கோரிக்கையாக பாருங்க....
இப்போ இருக்குற நிலைமை, இதே நிலை தொடர்ந்தால் இன்னும் மோசமாகிடும் என்கிற ஒரு பயத்தால்தான் இவ்வளவும் சொல்கிறேன்.... நல்ல விஷயங்களை பாராட்டும்போது ஏற்றுக்கொள்கிற எம் சமூகத்து அமைப்புகள், இதையும் நல்ல விதத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புறேன்..... இனிவரும் காலம் நம் தனித்துவம் நிலைபெறும் காலமாக ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்போம்!!!...

7 comments:

  1. Hi Vijay... Namaskar... I read ur blog... First of all, congratulations for ur write-up.. Ur point is valid.
    U r coming to say that: "LGBT was started as a single union, but now, transgenders have attained some improvement in the society, but not the gays. Why not the gays revolutionize individually rather than joining along with L-G-B-T..???"
    This is ur question, ultimately...
    Wat I personally think is:
    Transgenders are physically affected people. Can they say,"I am a straight"...?
    No.....
    But, can a gay say "I am a straight?"
    Yes....
    So, who is the turncoat here?? (turncoat - santharppavathi)
    Gays are chameleons. But transgenders are very strong that they are transis, than the gays that they are gays... They have no other go.... But, gay have "other" go..
    Coming to ur point, as u desire, revolution by gays and the victory in it would be a mirage.... becos, it would be feeble comparing to transgenders.. Unless or otherwise, gays have no way, they wont / cant come out of the closet... I bet it... Its fact... :)
    -STRUTTIE SHIVA

    ReplyDelete
    Replies
    1. @சிவா....
      உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.... கே நபர்கள் சந்தர்ப்பவாதிகளா?... நிச்சயமாக இல்லை... திருநங்கை தன்னை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு, அதை மறைக்க முடியாது.... ஆனால், கே நபர் தானாக வெளிப்படுத்தாமல் இறுதிவரை கூட வாழமுடியும்.... அதற்கு காரணம் சந்தர்ப்பவாதம் இல்லை, பெரும்பாலான நபர்கள் சூழ்நிலை கைதிகளாக அகப்பட்டு கொண்டதுதான்... திருநங்கை பற்றிய மக்களின் விழிப்புணர்வு கூட, கே பற்றி மக்களிடத்தில் இல்லை.... மேலும், நான் யாரையும் எதற்கும் தவறாக சுட்டிக்காட்டவில்லை....

      Delete
  2. நீங்க சொல்றது 100% உன்மை விஜய். இந்த குழப்பம் என்னுடைய பதின்வயதிலிருந்தது. முதலில் நாம யாருங்கிறது முழுமையா உனரனும். அதற்கு வாழ்க்கை கல்வியோட பாலியியல் கல்வியும் அவசியம் விஜய்.
    பாலின வேறுபாடு, பாலியியல் ஈர்ப்பு என்ற வித்தியாசத்தை சொன்ன இந்த பதிவு நல்ல பதிவு விஜய்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா...

      Delete
  3. Hi Vijay,
    A very valid and to the point thinking. Hats off..... What do you think is the solution to this??? How can we take this further????

    ReplyDelete
  4. சமீபத்தில் விக்கி விஜய் அவர்களின் வலைபதிப்பு கட்டுரைக்கு என்னுடைய பதில்

    பல சமயங்களில் என் மனதுக்குள் ஏற்பட்ட போராட்டங்களை உங்கள் கட்டுரை பதிவு செய்திருக்கிறது, பாராட்டுக்கள்...அதே சமயத்தில், ஒன்றுப்பட்ட பாலின சிறுபான்மையின (LGBT) சமூகமாக நாம் ஏன் போராடிகொண்டு இருக்கிறோம் என்பதையும், அதன் அவசியத்தையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது என் கடமையும் கூட...

    ஆம், திருநங்கைகளுக்கும், ஒர்ப்பால் ஈர்ப்பு (Gay or Lesbian) கொண்டவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அவர்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் சமூகப்பார்வை ஆகியவற்றில் நிறைய வேறுபாடு உள்ளதை நானும் ஒரு சக Gay-வாக அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பாலியல் காரணமாக சமூகத்தின் கண்களில் நாமெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களே. அவர்கள் வேறு யாருமல்ல நம் சகோதரிகளே. ஒரு கூட்டுகுடும்பத்தில் வாழும் மனிதர்கள் வித்தியாசமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அதற்காக தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று சொல்வது, ஏற்கனவே பலவீனமாய் இருக்கும் நமது சிறுபான்மை பாலினம் மேலும் பலவீனப்பட்டு நமது குரல்கள் பெருபான்மை சமூகத்தின் கண்களுக்கு தெரியாமல் போய் விடும்.

    ஆம், நீங்கள் சொன்னது போல சேர்ந்தே இருப்பதால் நம் அடையாளத்தை தவறாக சமூகம் புரிந்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளதை என்னால் மறுக்க முடியாது. அந்த பயம் எனக்கும் இருக்கிறது. ஆனால் காலபோக்கில் சமூகம் கண்டிப்பாக நம் அடையாளத்தை புரிந்துக் கொள்ள நேரிடும். திருநங்கைகள் விழாவாகட்டும், கூத்தாண்டவர் விழாவாகட்டும், திருநங்கைகளுக்கான உரிமைப் போராடங்களாக்கட்டும் அவர்கள் இணைந்தே போராடுகிறார்கள். நாம் அப்படியா இருக்கிறோம்? நமக்குள் தான் எத்தனை பிரிவுகள், எத்தனை பிளவுகள்? கோஷ்டி சண்டையிலேயே நம்முடைய பாதி காலம் கழிந்துப்போகிறது...

    நாம் அனைவரும் (Gay community) ஒன்றுப்பட்டால் நமக்கென போராட்டங்கள், விழாக்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்க முடியும். வெளியே வந்து போராடும் Gay சமூகத்தின் எண்ணிக்கை திருநங்கைகளை விட மிகக்குறைவு தான். அந்த மிகக்குறைந்த எண்ணிக்கையே பிரிந்து நின்றால் நம்மை தனியாக அடையாள படித்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடும்.

    பின்குறிப்பு:-

    1. சென்னை தோஸ்த் போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக Gay and Bisexual சமூகத்திற்காக மட்டும் பல நிகழ்ச்சிகள் நடத்தி வருவதையும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    2. சமீபத்தில் நாங்கள் 'திருநங்கைகள் நல வாரியத்தை' 'பாலின சிறுபான்மையினர் நல வாரியமாக' மாற்ற கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம். Gay , Lesbian அண்ட் bisexuals இதில் சேர்க்க கோரி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் நாங்கள் பேசி வருகிறோம்.

    3. சமீபத்தில் நடந்த சென்னை வானவில் திரை விழாவில் அதன் கருத்தரங்கில் Gay men - ஐ திருநங்கைகளாக ஊடகங்கள், திரைபடங்கள் மற்றும் பத்திரிக்கைகள் சித்திரிப்பதை பற்றியும் அதன் பாதிப்புகளையும் நான் பேசியிருக்கிறேன்.

    அன்புடன்
    விக்ராந்த் பிரசன்னா
    நிறுவனர், சென்னை தோஸ்த்
    ஈமெயில்: vikranth@chennaidost.com
    இணையதளம்: www.chennaidost.com

    ReplyDelete
  5. Hi all,

    I'm posting this for us..as most of us have fear to reveal our freedom few fraudulent activityhttp://envijay.blogspot.in/2013/06/blog-post_14.html?showComment... taking place in PR site..these frauds take our hidden fear as there advantage. I posted my story in PR I got cheated Nov 2017..on seeing my post got response from 8ppl who got cheated by same group..but thy r afraid to reveal in public n crying inside..

    Please help us, mistake is on our side too as few got aspire/desire towards celebrities n get trapped.

    Fraudulent people: kiran -9995211581 , Varun - 9061071102

    Bank -federal bank, A/c # 10180100224656, IFSC CODE : FDR0001018 ,VIPIN P VARGHESE..hotel Ramada egmore.

    They got introduced in planet Romeo.. mentioned thyl arrange for parties with celebrities/fun with actor/ online jobs to different ppl. Asking us to transfer money via paytm or to this federal bank account.

















    ReplyDelete