சமீபத்தில் “YOU ARE MY BROTHER” என்ற தமிழ் குறும்படத்தை ஒரு நண்பர் மூலம் எனக்கு
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அண்மையில் நடந்த “சர்வதேச பாலின சிறுபான்மையினர்
திரைப்பட விழாவில்” திரையிடப்பட்ட அந்த 11நிமிட குறும்படம்
நிஜமாகவே என்னை ஆச்சரியப்படுத்தியது... அதை எழுதி இயக்கிய நண்பர் லோகேஷ் அவர்களுக்கு இது முதல் முயற்சி... “ஜீரோ” பட்ஜெட், காட்சிகளின்
கோர்வை, சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொன்ன விதம் என எல்லாமே சிறப்பாக இருந்தது...
கதைக்காக பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, குறும்படத்திற்குள் மிகப்பெரிய கதையை
நுழைக்க அவர் முயலவில்லை... ஒரு குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் படிப்பிற்காக
சென்னையில் தனியாக வசிக்கிறார்கள்... அண்ணன் மீது மரியாதையும், கொஞ்சம் பயமும்
உள்ள தம்பி... அண்ணனின் நண்பன் ஒருவன் பணி நிமித்தமாக அவர்களுடன் தங்க வருகிறான்,
பிறகுதான் தெரிகிறது அந்த நண்பனும், தம்பியும் “ஒருபால் ஈர்ப்பு” காதலர்கள்
என்று... இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிய வரவே, முதலில் கோபப்படுகிறான்... இறுதியில்
இனிதே சுபமாக முடிகிறது கதை...
மூன்று பேர் தான் மொத்த கதையிலும், ஒரு வீடு மட்டுமே கதையின் முழு
களமும், என்றாலும் கூட தொய்வில்லாமல் போனது கதை... இதுவரை இந்திய மொழிகளில்
வெளியான எந்த திரைப்படத்திலும் வராத “நேரடி முத்தக்காட்சி” இந்த படத்தில்
வந்துள்ளது... நிஜமாகவே இயக்குனரின் இந்த துணிச்சலுக்கு பாராட்டியே ஆகணும்... இசை,
எடிட்டிங், effects என்று
எல்லாமே கதைக்கு வழு சேர்க்கிறது....
ஒரு விமர்சனம் செய்யும்போது, நல்ல விஷயங்களை மட்டுமே சொன்னால், அது
விமர்சனம் ஆகாது.... அதனால, என்னை பொருத்தவரைக்கும் இந்த படத்தில் சில குறைகள் கூட
இருக்கு, அதை ஒரு பார்வையாளனா சொல்றேன், அவ்வளவே....
ரொம்ப எளிமையான கதை தான், ஏன் வசனங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கலைன்னு எனக்கு தெரியல... காதலை, சொல்லாமலே வெளிப்படுத்தலாம்னு
நினச்சுட்டார் போல இயக்குனர்... குறிப்பா ஒரு வசனம் சொல்றேன்... கதையின் இறுதியில்
வரும் வசனம்...
“சாரி அண்ணா... நான் ஒரு கே, இதை எப்டி என்னால உன்கிட்ட சொல்ல
முடியும்... என்ன மன்னிச்சிடு”
“பரவால்ல விடுடா.... நீ என்னவா இருந்தா எனக்கென்ன, நீ என் தம்பிடா”
என்று முடியும் மொத்த படத்தையும் இந்த வசனம் தான் தாங்கி பிடிக்கிறது....
காதலை முத்தத்தின் மூலமாவும், தழுவல்களில் மூலமாகவும் மட்டுமே
கான்பிக்கனும்னு அவசியம் இல்லை.. இருவருக்கும் உண்டான காதலை, கொஞ்சம் வசனத்தின்
மூலம் ஆழமாக பதிய வச்சிருந்தால், இந்த குறும்படம் இன்னும் இன்னும் பல உயரத்தை
அடைந்திருக்கும்.... எதுக்காக இதை சொல்றேன்னா, அந்த காதலர்கள் இருவரும்
பெரும்பாலும் படுக்கை அறையிலேயே இருப்பதால, காதலை விட காமத்தை தான் அதிகம் உணர
முடியுது... காதலுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்னு
நினைக்குறேன்... ஆனால், அண்ணன்- தம்பி உறவு ரொம்ப அழகா வடிவமைக்கப்பட்டுள்ளது....
படத்தை பார்த்ததும் இயக்குனர் லோகேஷிடம் பேசும் வாய்ப்பு
கிடைத்தது... சின்ன வயசு தான், பேசும்போதே அவர் படத்தில் நான் கண்ட துணிச்சல்
பேச்சிலும் தெரிகிறது.... என் முழு கருத்தையும் அவர்கிட்ட சொல்ல, பொறுமையா
கேட்டார்... அவர்கிட்ட பேசும்போதுதான், இந்த “ஹோமொபோபிக்” சமூகத்தில் ஒரு ஒருபால்
ஈர்ப்பு குறும்படம் எடுப்பது எவ்வளவு சிரமம்? என்பதை நான் உணர்ந்தேன்... இவரின்
இந்த முதல் முயற்சியே இவ்வளவு முரண்பாட்டுடன் கூடிய முயற்சி என்பதால், பல
வழிகளிலும் சிக்கல் இருந்திருக்கு... இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும் தைரியம்,
சத்தியமா எனக்கு இல்லைங்க.... குறும்படத்தில் நடித்த அந்த மூன்று நபர்களையும்
நிச்சயம் இந்த விஷயத்தில் பாராட்டியே ஆகணும்....
நடிகர்களை, டெக்னீசியன்களை என்று இவர் “கன்வின்ஸ்” செய்ய வேண்டிய
பட்டியல் கூட ரொம்ப நீளம்... எல்லாவற்றையும் முடித்து, படத்தை ஒரே நாளில் எடுத்து
விழாவிலும் சமர்ப்பித்து விட்டார் லோகேஷ்... பார்வையாளர்கள் மத்தியில் பலத்த
வரவேற்பும் கூட... திரைப்பட விழா பற்றி அங்கு சென்ற என் நண்பரிடம் நான் முன்பு
பேசியபோது கூட, பெயர் மறந்தாலும் லோகேஷின் குறும்படம் பற்றி அந்த நண்பர்
சொன்னார்... அந்த அளவுக்கு பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளார் இவர்...
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இன்னொரு திரைப்பட விழாவிலும்
பங்கேற்க இருக்கும் லோகேஷின் இலக்கு என்பது, “முழு நீள கே திரைப்படம்” எடுக்கணும்
என்பதுதான்... நம் தமிழில், ஒருபால் ஈர்ப்பு நபர்களில் உள்ள காதலை
வெளிப்படுத்தனும் என்பதுதான் அவர் கனவு... ஒரு குறும்படம் எடுக்கவே இவ்வளவு
சிரமங்கள் அனுபவிக்க வேண்டிய நம்ம சமூக சூழலில், அவரின் கனவு என்பது கரடு முரடான
பாதை தான்... அப்படி நினைத்து சும்மா இருந்திருந்தால், இந்த குறும்படம் கூட அவரால்
எடுத்திருக்க முடியாது....
நான் சில குறைகளை பட்டியலிட்டிருந்தாலும் கூட, படம் முடியும் அந்த
பத்து நிமிடங்கள் என்னால் குறைகளை யோசிக்கவே முடியல.... அந்த அளவுக்கு சுவாரசியமாக
எடுத்திருக்கும் இயக்குனர், வசனத்தில் இனி வரும் படங்களில் இன்னும் கொஞ்சம் கவனம்
கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அந்த குறையை கூட சொன்னேன்... மற்றபடி, நிச்சயம்
இப்போதில்லை என்றாலும், சமூகம் மாற்றம் அடையும் நேரத்தில் இந்த படம் பலரையும்
யோசிக்க வைக்கும்....
எதிர்காலத்தில், ஒரு வண்ணத்திரை இயக்குனராக பல விருதுகளை வாங்கி
குவிக்க இருக்கும், லோகேஷிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.... என் வாழ்த்து
நிஜமாகும் நாளில், என்னை ஒரு சில நொடிகள் நினைத்துக்கொள்ளுங்கள்.....
நன்றி....
அன்புடன், உங்கள் விஜய்
விக்கி....
விக்கி உங்களைப்போன்ற அனைவரது முயற்ச்சிகளும் என்றாவது ஒருநாள் நல்ல மாற்றத்தை உருவாக்கும் இந்த சமுதாயத்தில்.
ReplyDeleteலோகேஸ்க்கு எனது வாழ்த்துக்கள்.
நன்றி விக்கி.
சேகர்.
நன்றி சேகர்.... மிக்க மகிழ்ச்சி...
DeleteThanks u - Lokesh
Deletewhere can I find this movie?
ReplyDeleteஅடுத்த மாதம் சென்னையில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவிலும் லோகேஷின் படம் திரையிட இருக்கிறது... நேரடியாகவே நீங்க திரையில் அங்கு பார்க்கலாம்..
DeleteThank you so much for posting about my movie..... Edhu enaku kidaitha oru periya paaratu.... Mikka nandri... Epdi azhagaga vimarsanam seidhal aayiram padam edukalaam evvalavu thadai vandhaalum.....
ReplyDeleteரொம்ப நன்றி லோகேஷ்... உங்க அடுத்த படைப்பில், நான் குறைகளே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எடுக்கணும்..... வாழ்த்துகள்...
DeleteDear lokesh i read about ur short film i am exited abt seeing that flim
Deletecan u send to my mail id or there wise upload the video in you tube and
post video link on here
thanks and wait for ur reply lokesh
Y you didn't spoke anything about Cinematography, If you find any fault means also you need to spoke out la..???
ReplyDeleteஅப்டிலாம் இல்லங்க... எனக்கு டெக்னிக்கல் விஷயம் அவ்வளவா தெரியாது... ஆனாலும், ஒளிப்பதிவி குறைகள் சொல்ல முடியாத அளவுக்கு நல்லாவே இருந்துச்சு.... நான் கதை எழுதுபவன் என்பதால், திரைக்கதையை அதிகம் பார்த்தேன்... அவ்வளவுதான்...
Deleteஅருமையான விமரிசனம் விஜய்!
ReplyDeleteதுணிச்சல் / சமூக ஆர்வம் / கலை தாகங்களுடன் எடுத்த முதல் முயற்சியே முத்தாக அமைந்தமைக்கு லோகேஷ்-ற்கு மற்றும் அவர் நண்பர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
-சூர்யா
ரொம்ப நன்றி சூர்யா...
DeleteEnaku therinju ithuthan first step,athu muluka muluka lovea pathi soliruntha athu mathavanka purinjika mutiyum.but its ok ithuve thunichalthan .all the best by ajay
ReplyDeleteOoo endha maari padangalku kandipa support panunga pa apa dha lgbt makkalku purium...nandri vicky
ReplyDeleteThanks lokesh for your first step.. This LGBT community needs your efforts..
ReplyDeleteAll the best logesh.unngal annithu padipugal vetrri pentru veruthugali kuvikka eppdona
ReplyDeletespl wishes....RAJESH FROM CHENNAI
Hi Vijay
ReplyDeleteIntha Movie Youtube Irukka?