Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 5 August 2013

இதுதான் இயற்கைக்கு புறம்பானது.....!



சமீபத்தில் ஒரு பிரபலத்தின் பேஸ்புக் ஸ்டேட்டஸ்’இல் ஒருபால் ஈர்ப்பையும், சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வையும் (paedophilic) ஒன்றாக இணைத்து செய்தி போடப்பட்டிருந்ததை கண்டு நான் அதிர்ச்சியானேன்... இரண்டையும் ஒன்றாக இணைத்து, ரொம்ப தவறுன்னு சொல்ற அந்த அதிஜீவிக்கு, அடிப்படை அறிவே இல்லைன்னு மட்டும் தெளிவா புரிந்தது... ஒரு விஷயம் பற்றி தெளிவான அறிவு இல்லைனா, அதை பேசாமல் இருப்பதே உத்தமம்... இப்படி நபர்கள் பேசிக்குழப்பித்தான் இங்கே பல சிக்கல்கள் உருவாகி நிற்கிறது..... ஒருபால் ஈர்ப்பு நபர்கள், அப்படிப்பட்ட “சிறுவர் வன்புணர்ச்சி” செய்யும் செயல்களை ஆதரிப்பது போலவும் ஒரு தவறான பிம்பம் அப்படிப்பட்ட மேதாவிகளிடம் இருக்கு... அதுவும் முட்டாள்த்தனமான வாதம் என்பதை இங்கே நாம் விளக்க வேண்டிய சூழல் இப்போ உருவாகிவிட்டது..... “மரணதண்டனைகளே இருக்கக்கூடாது” என்ற ஒரு நிலைப்பாட்டை கொண்டவன் நான்... ஆனால், “குழந்தைகள், சிறுவர்கள் மீதான வன்புணர்ச்சியில்” ஈடுபடும் நபர்களுக்கு தயவு தாட்சன்யமே இல்லாமல் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து... அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையிலும், பொதுவான நிலைப்பாட்டிலும் என்னை போல பலரும் அந்த கொடுமைகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களே!.... (சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வு எத்தகைய விளைவை அவர்கள் மனதில் ஏற்படுத்தும்? என்பதை “தில்லை நகர் கொலை வழக்கு” கதை மூலம் சொல்லி இருக்கிறேன்)...
நம் அறிவியலே ஒருபால் ஈர்ப்பை “மனநோய் அல்ல” என்று சொல்லி, மனநோய்கள் பட்டியலிலிருந்து நம்மை விடுவித்து பல ஆண்டுகள் ஆகுது... ஆனால், அதே அறிவியல் முழுமையா இப்படிப்பட்ட குழந்தை வன்புணர்ச்சியை மனநோய் என்று அடித்து கூறுகிறது... அந்த செயல்களில் ஈடுபடும் நபர்களின் அறிவுத்திறன் குறைவாகவும், மூளைகளில் சில மாற்றங்கள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்... “அப்போ அது மனநோய் தான் என்றால், அதற்கு தீர்வு சிகிச்சை தானே?... எப்படி அதற்கு தண்டனை கொடுக்க முடியும்?”னு நீங்கள் வாதம் வைத்தால், உங்கள் வாதம் தர்க்க ரீதியில் நியாயம் தான்.... ஆனால், மனசாட்சிப்படி அந்த தவறுகளை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.... மன்னிக்க முடியாத குற்றமாகவே அந்த செயல்கள் எனக்கு தெரிகிறது...
யாரோ ஒருவனின் உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள, அவன் ஒரு குழந்தையை பயன்படுத்திக்கொள்ளும் போது, என்றைக்காவது அந்த குழந்தையின் மனநிலையை அவன் யோசித்து பார்த்திருப்பானா?... பாதிக்கப்படும் அந்த குழந்தையின் மனநிலையை உணர்ந்த எவரும் என் கருத்தை நிச்சயம் ஆமோதிப்பார்கள்.... என் மூன்று வயதில் நான் அப்படி ஒரு கொடுமைக்கு உள்ளானேன்... மூன்று வயசுல நடந்த எந்த நிகழ்வும் எனக்கு நினைவில் இல்லை என்றாலும், அந்த நிகழ்வுகள் இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.... மூன்று வயதில் வேலைக்கு இருந்த பெண், பள்ளி செல்ல தொடங்கிய பின்பு பக்கத்து வீட்டு பையன் என்று அந்த புரியாத வயதில் என்னை “என்ன நடக்கிறது?” என்று உணர முடியாத அளவுக்கு கொடுமை படுத்தினார்கள்....
என்ன செய்கிறார்கள்? என்ன செய்ய சொல்கிறார்கள்? என்று எதுவும் புரியாது.... அவங்க சொல்றத கேக்கலைனா திட்டுவாங்க.... ஒருவிதத்தில் அவங்க மீதான பயம், அதே நேரத்தில் அவங்க அதீத பாசமா இருப்பதால அவங்க சொல்றத கேக்கனும்னு ஒரு எண்ணம்... மூன்று வயதில் அதற்கு மேல் என்ன யோசிக்க முடியும் சொல்லுங்க?... பல காலம் அந்த நிகழ்வை எண்ணி ரொம்ப பயந்திருக்கேன்.... அந்த ஒரு மழலை வயதில், அப்படி ஒரு கொடுமையான அனுபவம் என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும்...
அவர்கள் செய்த குற்றத்துக்கு பல காலம் நான் குற்ற உணர்ச்சியை அனுபவித்திருக்கிறேன்.... அந்த நாட்கள் நிஜமாவே ரொம்ப கொடுமை... இங்க பலரும் அப்படி கொடுமைகளை நிச்சயம் அனுபவித்திருப்பிங்க.... அந்த கொடுமைகளை உணர்ந்த யாருமே, நான் சொல்லும் நியாயத்தை மறுக்க மாட்டார்கள்...
இந்த சமூகம் கூட இதை பெரிய தவறா பார்க்கல.... சமீபத்தில் என் நண்பனின் அலைபேசியில், “பத்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்யும் வீடியோ” பார்த்தேன்... அதிர்ந்துபோய் அவனிடம் கேட்டால், அவனிடமிருந்து கொஞ்சமும் பதற்றம் இல்லை, சிறிதளவும் குற்ற உணர்ச்சி அவனிடத்தில் இல்லை...  “அதில என்ன தப்பு?”னு மறு கேள்வி என்னிடமே கேட்கிறான்...
பருவ வயதை எய்திய ஒரு ஆணும், இன்னொரு ஆணும் இணைந்து வாழும் “ஒருபால் ஈர்ப்பு” என்கிற விஷயத்தை தான் நாங்க ஆதரிக்கிறோமே தவிர, மிகப்பெரிய தவறான “சிறுவர் பாலியல் வன்புணர்ச்சிகளை” நாங்க எப்பவும் எதிர்ப்போம்.... ஒரு சிறுவனுக்கோ, குழந்தைக்கோ தான் செய்யும் விஷயங்களில் “சரி, தவறை” ஆராயும் மனப்பக்குவம் கிடையாது... அடுத்தவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிடும் அனுபவம் கிடையாது... அப்படி உலகமே தெரியாத ஒரு நபருடன், நம் ஆசைகளை தீர்த்துக்கொள்ள உறவு கொள்வதென்பது நிச்சயமாக மன்னிக்க முடியாத குற்றம்...
இதற்கு சிகிச்சை இல்லை என்றாலும் கூட, அப்படி காம எண்ணம் தோன்றும் எண்ணத்தை குறைக்க மருத்துவத்தில் வழி இருக்கிறது... உங்களுக்கோ, உங்கள் நண்பருக்கோ அப்படி எண்ணங்கள் இருந்தால் தயவுசெய்து மருத்துவரை அணுகனும்.... யாரோ ஒரு குழந்தையின், சிறுவரின் மனதில் ஆறாத வடுவை சுமக்க வைத்திடும் தவறுகளை செய்யாமல் இருந்திடவாவது முயலலாம்...
அதே போல விலங்குகள் மீதான புணர்ச்சிகளும் (zoophilia) என்னை பொருத்தவரை மிகப்பெரிய குற்றம் தான்... நம் சமூகத்திலேயே என் இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டவங்க நிறைய பேர் இருக்காங்க... என்னை பொருத்தவரைக்கும் நாம் வளர்க்குற நாயும் ஒரு குழந்தைதான்... இப்படி மனிதன் விலங்குகளுடன் புணர்வதுதான் நிஜமாகவே இயற்கைக்கு முரணான விஷயம்...
இது ரொம்பவே இயல்பான விஷயமா நம்ம ஊர்கள்ல நடக்குது.... இதை குற்றமாகவே பலர் பார்ப்பதில்லை... அடிக்கடி நாளிதழ்களில் விலங்குகள் மீதான புணர்ச்சியை பற்றிய செய்தியை பார்க்க முடியுது... சமீபத்தில் நான் வார இதழில் படித்த செய்தி கூட, “வடநாட்டு இளைஞர்கள் மூன்று பேர், கன்று குட்டியுடன் உறவு கொண்டனர்... கன்று அலறியதில், அருகிலிருந்த கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு வாலிபர்களை அடித்து உதைத்தனர்” இந்த நிகழ்வுக்கு பிறகு அடுத்தநாள், அந்த கன்று இறந்தே போய்விட்டது... “சில நேரங்களில் தன் இச்சையை தீர்க்க மனிதன் கிடைக்காத நிலையை” ஒரு காரணமாக சொல்லி, இந்த மூடத்தனத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார்கள்.... ஆனால், நம்ம இச்சையை தீர்த்துக்கொள்ள அப்பாவி விலங்குகளை சித்திரவதை படுத்தனுமா?... இதுவும் மனநோய் தான், இதனை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பதும் ஒருவித மனநல பிரச்சினை தான்....
ஆகமொத்தம் நான் இங்கே முடிவாக சொல்ல வருவது ஒன்றுதான்.... “ஒருபால் ஈர்ப்பு என்கிற விஷயத்தை ,மட்டும்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்”.. மற்றபடி, இயற்கைக்கும், மனிதத்துக்கும் எதிராக இருக்கும் மற்ற முட்டாள்த்தனமான விஷயங்களில் பொதுமக்களை விட, எங்கள் சமூகத்து மக்கள் ரொம்பவே தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள்.... “சரியையும் தவறையும் பிரித்து பார்த்திடும் மனப்பக்குவம் எங்களுக்கு எப்போதோ வந்துவிட்டது, அந்த பக்குவம் என்றைக்கு சில அறிவு ஜீவிகளுக்கு வரப்போகுதோ?!”...
“ஸ்டேட்டஸ்” போடும் அளவிற்கு அறிவளவில் அந்த நபருக்கு எப்போ “ஸ்டேட்டஸ்” வரப்போகுதோ!...

11 comments:

  1. சிறு வயதில் பலரும் பாலியல் ரீதியாக பாதிக்கப் பட்டிருந்தாலும் அதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பே மிக கொடுமையானது!சில மாதங்களுக்கு முன் FACEBOOKஇல் என் நண்பன் ஒருவன் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தான்! மிகவும் டிஸ்டர்பிங்கான வீடியோ!
    http://www.youtube.com/watch?v=DIuAjgp4_9Q

    (சிறு வயதில் என் பக்கத்து வீட்டுகாரர் ஒருவாரால் நானும் இதற்க்கு ஆளானவன்! இன்று வரை இதைப் பற்றி யாரிடமும் பேச முடியவில்லை!! )

    ReplyDelete
    Replies
    1. அந்த காணொளி முடியும் நேரத்தில் என் கண்களில் நீர்..... நான் ஒன்றரை நாளாக யோசித்து, ஒன்றரை மணி நேரமாக தட்டச்சு செய்த ஒரு கட்டுரையின் தாக்கத்தைவிட பல நூறு மடங்கு தாக்கத்தை அந்த ஒன்றரை நிமிட காணொளி உணர்த்திவிடும்.... எனக்கு அந்த இந்தி மொழி புரியவில்லை, ஆனால் அதில் சொல்ல வரும் ஒவ்வொரு விஷயமும் புரியுது.... நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா....

      Delete
  2. இந்த விஷயத்தை பொறுத்தவரை உங்களின் கருத்து தான் என்னுடையதும். குழந்தைகளை பாலியில் கட்டாயத்திற்கு ஆளாக்குபவர்களை பார்த்த இடத்திலேயே சுட்டு தள்ள வேண்டும் மேலும் விலங்குகளிடம் புணர்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது அவர்களை வெறி பிடித்த மிருகங்கள் என்று சொல்லலாம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்தி..... நம் ஆதங்கம் நிச்சயம் சட்டமாகும் நாள் வரும்....

      Delete
  3. great theme.,

    ReplyDelete
  4. if we want to punish that idots means i want to punish nearly 13 people in my life vijay. by kish

    ReplyDelete
    Replies
    1. புரியுது நண்பா..... இனியாவது அப்படிப்பட்ட நபர்கள் திருந்தவேண்டும் என்பதுதான் இங்க நம்ம ஆதங்கம்....

      Delete
  5. வாழ்க்கைகல்வியோட பாலியியல் கல்வியும் இன்றய குழந்தைகளுக்கு தேவை. கன்டிப்பா இன்றய கல்வி கூடங்களோ சமுதாயமோ இந்த கல்விய கொடுக்காது. பெற்றோர்களால் மட்டுமே கொடுக்கமுடியும். அன்புக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு தொடுதல் உணர்த்தும். குழந்தைகளுக்கு அத புரிய வைக்கனும் . இதனால் தன்னை பாதுகாத்துகொள்ளவோ வளர்ந்தவுடன் தன்னால் மற்றவருக்கோ அ முறையற்ற பாலுணர்வை தவிர்க்க வாய்ப்பிருக்கிறது விக்கி.
    சேகர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேகர்..... பாலியல் கல்வியின் அவசியத்தை நம் அரசுகள் எப்போது உணரப்போகிறது? என்று தெரியவில்லை...

      Delete
  6. school la history padikarathuku pathila paaliyal kalvi kodukalam, intha kala kulanthikaluku ithu romba avciyam...................

    ReplyDelete