Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 16 August 2013

சிறந்த LGBT வலைப்பூ விருது..... "India Blogger Award 2013".

Indian Blogger என்ற இந்திய வலைப்பூக்களுக்கான குழுமத்தின் சார்பாக 2013ஆம் ஆண்டிற்கான  LGBT பிரிவின் சிறந்த வலைப்பூவாக “உங்கள் விஜய் பேசுகிறேன்...” வலைப்பூ தேர்வாகி விருது பெற்றிருக்கும் விஷயத்தை என் அன்பு நண்பர்களுக்கும், வலைப்பூவின் வெற்றிக்கு வித்திட்ட அத்தனை நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.... பல்வேறு ஜாம்பவான் வலைப்பூக்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு மத்தியில் என் வலைப்பூவிற்கு பெருமைப்படுத்தும் விதமாக “சிறந்த வலைப்பூ விருது” கொடுத்திருக்கும் India Blogger தளத்திற்கும், தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கும் எனது மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....
(விருது பெற்ற வலைப்பூக்களின் விபரங்களை பார்க்க... http://www.indiblogger.in/iba/spotlight.php)
நிச்சயம் இந்த விருது என்னுள் இருந்த பல தாழ்வுமனப்பான்மைகளை விரட்டி இருக்கிறது என்பது உண்மை.... அப்படி என்ன தாழ்வு மனப்பான்மை?.... வலைப்பூ தொடங்கிய காலத்தில், நான் தேர்ந்தெடுத்த “ஒருபால் ஈர்ப்பு” பாதை சரிதானா? என்கிற குழப்பம் எனக்குள் நிறைய இருந்தது.... அடுத்ததாக, நான் சொல்லும் விஷயத்தை தமிழில் சொல்வதால் அதனை ஏற்பார்களா? அங்கீகரிப்பார்களா? என்கிற சந்தேகமும் எனக்கு இருந்தது.... ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் எழுத தொடங்கினேன், இன்றைக்கு நான் செல்லும் பாதை சரிதானென கலங்கரை விளக்கமாக விருது வழிகாட்டி இருக்கிறது....
இதில் தாழ்வுமனப்பான்மை எங்கிருந்து வந்தது? என்று நீங்கள் நினைக்கலாம்.... யாரிடமோ அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்ததில்லை, என் நண்பர்களிடமிருந்துதான் வந்தது.... ஒருபக்கம் தமிழார்வலர்கள், நான் சொல்லும் ஒருபால் ஈர்ப்பு பற்றிய கருத்தால் என்னை நிராகரித்தார்கள்... இன்னொரு பக்கம், ஒருபால் ஈர்ப்பு அமைப்பு மற்றும் ஆதரவாளர்கள், நான் எழுதும் மொழியால் என்னை புறக்கணித்தார்கள்.... நான் சொல்ல வேண்டிய விஷயம், சென்று சேரவேண்டிய இரண்டு பிரிவினரும் என் வலைப்பூவை கொஞ்சம் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தனர்...
சில நேரங்களில் நண்பர்களால் பகிரப்படும் சில வலைதள பக்கங்களை நான் பார்த்திருக்கிறேன்... அதில் சில விஷயங்கள் என்றைக்கோ நான் எழுதிய விஷயத்தை ஒத்திருக்கும்... ஆனால், ஆங்கிலத்தில் போடப்பட்ட பதிவை பகிர்வதில்தான் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.... தமிழில் சொல்வதால் அவர்கள் நான் சொல்லும் விஷயங்களை படித்ததாக காட்டிக்கொள்ள கூட விரும்புவதில்லை, கருத்திடுவதை கூட கேவலமாக பார்த்தார்கள்....
இதே India Blogger விருதுக்கான பரிந்துரைகள் அண்மையில் வாசகர்களிடமிருந்து பெறப்பட்டது.... இங்கிருக்கும் தமிழ் அமைப்புகள் மற்றும் நண்பர்களே கூட வேறுசில தளத்தினை ஆதரிக்கக்கோரி விளம்பரம் செய்தனர்.... விளம்பரம் செய்வது அவர்கள் உரிமை, நான் அதில் தலையை நுழைக்கக்கூடாது.... என் வலைப்பூ அவர்கள் விளம்பரம் செய்த தளத்தைவிட சிறந்த வலைப்பூ என்று நான் சொல்ல மாட்டேன்... அப்படி சொன்னால் அது என் கர்வம்... என்னைவிட நிறைய மற்ற தளங்களில் எழுதி இருக்காங்க, நிறைய மக்களை அந்த தளங்கள் சென்றடைந்திருக்கிறது... என்னோடு பரிந்துரைக்கப்பட்ட சில வலைப்பூவின் தீவிர வாசகன் நான்... இன்னும் சொல்லப்போனால், என் தளத்தைவிட சிறந்த தளமாகவே அவை இருக்கட்டுமே, பரிந்துரைகளில் கடைசியாக இருந்த இந்த விஜய் வலைப்பூவை பார்த்த நண்பர்கள் ஒரு சின்ன வாழ்த்து கூட ஏன் சொல்லவில்லை? என்று எனக்கு புரியவில்லை..... நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை...அப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் நான் நிச்சயம் தளர்ந்துவிடவில்லை, ஆனால் கொஞ்சம் சோர்வானேன்....
ஏதோ ஒரு நம்பிக்கையில் அமைதி காத்தேன், விருதும் கொடுத்திருக்கிறார்கள்.... LGBT பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே பிராந்திய மொழி வலைப்பூ என்னுடையது மட்டும்தான்... ஏதோ ஒரு நம்பிக்கையில், ஒரு உத்தேசத்தில் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.... இப்போ நான் என் தாழ்வுமனப்பான்மையை விரட்டிவிட்டேன்.... ஒன்று தெளிவாக புரிந்தும்கொண்டேன், தமிழால் இலக்கியம் மட்டும்தான் பேசமுடியும் என்று நான் நினைக்க மாட்டேன், தமிழால் முடியாதது வேறு எந்த மொழியாலும் முடியாது என்கிற நம்பிக்கை எனக்குள் உருவாகி இருக்கிறது.....
டெக்னிக்கல் விஷயங்கள் எனக்கு தெரியாது, வலைப்பூவின் முகப்பை நான் வண்ணங்களால் நிரப்பவில்லை, வாசனை திரவியங்களால் கககமக்கப்பட வைக்கவில்லை, கவர்ச்சி படங்களால் கிளுகிளுப்பை ஏற்படுத்தவில்லை... சொல்ல வரும் விஷயத்தை மட்டும்தான் சொல்கிறேன், அந்த விஷயங்களை மட்டுமே ஏற்று இத்தனை காலம் என்னுடன் பயணித்த அத்தனை வாசக நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.... இன்னும் பல தூரம் நாம் கடக்க வேண்டி உள்ளோம், பயணக்களைப்பை கண்டு நான் தயங்கவில்லை... உற்சாக பாணமாய் உங்கள் வழிநடத்தல்கள், ஆதரவு, கருத்துகள் என்று நிறைந்து இருக்கும் நான் ஏன் களைப்பை பற்றி யோசிக்க வேண்டும்....
நம் உரிமைக்குரல், ஒரு கிராமத்து கடைநிலை மனிதன் வரை சென்றடையும்வரை நான் சென்றுகொண்டே இருப்பேன், என்னோடு பயணிக்க நீங்களும் இருக்கிறீர்கள் என்ற ஒரே நம்பிக்கையோடு!...

33 comments:

  1. வாழ்த்துக்கள் விஜய் விக்கி :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாச்சி...

      Delete
  2. mikka magishchi, vazhthukkal nanbare - SINEHIDHAN

    ReplyDelete
  3. மீண்டும் வாழ்த்துக்கள் நண்பா. நேத்துதான் ஜெயமோஹனோட அங்கீகாரத்தை பத்தி வாழ்த்து சொன்னேன்... அதுக்குள்ளே அடுத்த பாராட்டை சொல்ல வச்சுடீங்க :-)
    பெருமையா இருக்குது... நான் எல்லாம் ஒரு timepass க்காகத்தான் கதை எழுதிக்கிட்டு இருந்தேன் ... நீங்க எங்கேயோ போயிட்டீங்க. மென்மேலும் உயரங்களை தொட வாழ்த்துக்கள்... ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள், ஒரு பொது மேடையில உங்களோட எழுத்தை பத்தி எல்லோரும் பேசி உங்களை பாராட்டி பேசுவாங்க... அன்னைக்கு நானும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அந்த செய்தியை கேட்டு சந்தோஷப்பட்டு .."உங்களை எனக்கு தெரியும்" அப்படின்னு என்கூட இருக்கிறவங்கக்கிட்ட பெருமையா சொல்லிப்பேன்... (எப்படி தெரியும்னு கேட்டா அதுக்கு நான் உங்கள் வாசகன் அப்படின்னு சொல்ல தைரியமும் சூழலும் இருக்குமான்னு தெரியல)

    -Cupid.Taurus

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... பெரிய வார்த்தைகள்... இதற்கு நான் உகந்தவனா? என்று தெரியவில்லை... இங்கு கதைகளும் எழுதப்படுகிறது என்று நான் புரிந்துகொண்டதே உங்களை போன்ற சிலர் எழுதியதை பார்த்த பிறகுதான்... அதனால் நீங்கள் எனக்கு சீனியரும் கூட.... ரொம்ப நன்றிப்பா...

      Delete
  4. வாழ்த்துக்கள் அண்ணா.. வரிசையா புதிய அங்கீகாரங்கள் குவியுது. இப்பதான் உங்க நீண்டகால உழைப்பின் பயன் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இது ஆரம்பம்தான். இன்னும் நீங்க நிகழ்த்த வேண்டியது, அடைய வேண்டியது நிறைய இருக்கு. Keep going..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிப்பா.... உண்மைதான்.... நீண்ட நாளைய உழைப்புக்கு இத்தகைய விஷயங்கள்தான் மிகப்பெரிய அங்கீகாரம்...

      Delete
  5. You deserve more than that vijay...this is just a beginning...all the best..prasad, madurai

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பிரசாத்...

      Delete
  6. வாழ்த்துகள் நண்பரே..இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். என்னை மாதிரி எத்தனையோ பெயரின் ஐயங்களை தீர்த்து வைத்தவர் நீங்கள். உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்போ நான் வாங்கிய விருதைவிட... உங்க ஐயங்களை தீர்த்ததா நீங்க சொன்னதுதான் எனக்கு மிகப்பெரிய விருது... அந்த வகையில் பார்த்தால் இன்னும் நான் நிறைய விருது வாங்கணும்...

      Delete
    2. கண்டிப்பாக நீங்க இன்னும் பல பேருடைய வாழ்வில் தெளிவை ஏற்படுத்த வந்தவர். ஓருபால் ஈர்ப்பின் காரணமாக நான் எத்துணை தாழ்வு மனப்பான்மையில் இருந்தேன் என்பது அந்த கடவுளுக்குத் தான் தெரியும். என்னை அந்த எண்ணத்திலிருந்து வெளிக்கொணர்ந்து இது சாதரண விசயம்தான் என்று என்னை உணர வைத்தவர் தாங்கள். ஆண்கள் மீது ஈர்ப்பு இருந்தாலும் நான் இன்றுவரை காதலிப்பது என் உயிருக்கும் மேலான என் உயிர் நண்பனைதான். ஆரம்பத்தில் அவனுக்கு பிடித்த இந்த உறவு இப்போது பிடிக்கவில்லை போலும். ஆனாலும் என்னால் அவனைத் தவிர யாரையும் ஏற்க முடியவில்லை. காதலில் வெற்றி அடைவது மட்டும் வெற்றியல்ல..யாரை காதலித்தோமோ அவரை கடைசி வரை தொடர்ந்து காதலிப்பதே காதலில் வெற்றி என்ற உங்களது உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்(கள்வனின் காதலன்) என்னுள் ஆழமாக பதிந்துவிட்டன.என்றும் அவனுக்காக காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. மிக்க நன்றி.

      Delete
    3. இதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு நண்பா.... தாழ்வுமனப்பான்மை என்கிற கொடுமையான விஷயத்திலிருந்து மீளவேண்டிய அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன்... அப்படி மீண்டு தெளிவு பெற்றிருப்பதாக நீங்கள் கூறுவது எனக்கு ரொம்ப மகிழ்வா இருக்கு.... ரொம்ப நன்றி நண்பா...

      Delete
  7. unmaiyagave oru iniya seidhi...vaazhthukkal Vijay..menmelum pala vetrigalai kuvikka vaazthukkal...

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் படைப்புகள் மென்மேலும் உயர மனமார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா....

      Delete
  9. மிக்க மகிழ்ச்சி விக்கி. இது நமக்கு கிடைத்த அங்கிகாரம். இதற்கு உங்களது முயற்ச்சியும் தன்னம்பிக்கையும் தான் காரணம். ஒரு தேங்கிய நீரைப்போல் இருந்த எண்ணால் தெளிவு பெற்று முன்னோக்கி செல்ல முடிகிறது என்றால் உங்களது எழுத்தும் இந்த வலைப்பூவும் ஒரு முக்கிய காரணம். ரொம்ப நண்றி விக்கி. இண்னும் நீங்க நிறைய எழுதனும், உங்களது எழுத்துக்கள் அனைத்து மக்களயும் சென்றடைய இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் விக்கி.
    -சேகர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சேகர்.... நிச்சயம் நிறைய எழுதுவேன், உங்கள் ஆதரவோடு....

      Delete
  10. ரொம்ப சந்தோசம் விஜய்....இது உங்களுக்கு மட்டும் கிடைத்த அங்கீகாரம் அல்ல நீங்கள் எடுத்து சொல்லும் ஓரின உணர்வின் அங்கிகாரத்துக்கான ஆரம்பபும் கூட.....
    மனமார்ந்த வாழ்த்துக்கள்..... - கதிர் & மனோ

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா... உண்மைதான்... இது நிச்சயமாக எனக்கோ,இந்த வலைப்பூவிற்கோ கிடைத்த அங்கீகாரம் இல்லை... நாம் எடுத்து செல்லும் நம் உரிமைகளை பொது ஊடகங்கள் அங்கீகரித்ததர்கான வெற்றி..... இது உங்களின் வெற்றியும் கூட...

      Delete
  11. Hi Vijay,
    Congratulations!!!! Really a happy news..You really deserve this!!! Enakkula irundha inferiority complex a poga vachadhay ungaloda ezhuthukkal thaan...idha vida innum neraya perum pughazul ungalukkaaga kaathukittu irukku...Heary wishes for you..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... இப்படிப்பட்ட வார்த்தைகள் தான் நான் இன்னும் எழுத உத்வேகமாய் உள்ளது..... எனக்கு இன்னும் அதிக புகழல்லாம் வேணாம், உங்களை போன்றோரின் இப்படிப்பட்ட வார்த்தைகள் தொடர்ந்து கிடைத்தால் போதும்.... நன்றி...

      Delete
  12. வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுத இது மிக பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பர் ஜீவன் சிவம் அவர்களே.... உங்களை போன்றோரின் ஆதரவும் எனக்கு தொடர்ந்து தேவை...

      Delete
  13. congrats vicky.. correct selection.. you really deserve this..

    ReplyDelete
  14. வாழ்த்துகள் நண்பரே..இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்

    Congrats dear
    I know you are busy and spending time for one community during little available leisure hours is great. I have read almost all, I agree your view. some times I have surprised that your words and my words are same..i.e. same thinking at some places. I am tamil. I want to type in tamil. I love it reading in tamil. when you read in your own language it reaches heart. if you read in other languages it may reach more people but the main concept will not reach their heart. That what I feel your blog is great. You are a great writer. Please continue, so everybody will get clear idea...
    Thanks. thanks a lot.....

    ReplyDelete
  15. Hi vijay anna.. This is Sat... I hope u remebered me.. And my heartly wishes to u na.. u have reached a new milestone.. Congrates... and keep going.....

    ReplyDelete