Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 3 February 2014

"ஊடலும் ஊடல் நிமித்தமும்..." - குட்டிக்கதை...







அலைபேசியை கையில் எடுத்து, அதன் திரையை அழுத்திய அகிலன்,  ஹெட்செட்டை காதில் வைத்துஹலோ தமிழ் இருக்காரா?... நான் இங்கிலீஷ் பேசுறேன்...என்றான்...
சாரி... சிரிப்பு வரல....
ஹலோ தமிழ்... ஒரு காதலன் ஜோக் சொன்னா அனுபவிக்கணும், இப்டி ஆராயக்கூடாது... இது எழுதப்படாத காதல் விதி தெரியுமா?”
தெரியாது...பிடிகொடுக்காத பதில்...
இன்னிக்கு என்னடா உனக்கு ப்ராப்ளம்?... நல்லாத்தானே இருந்த?”
நான் எப்பவும் ஒரு மாதிரி தான் இருக்கேன், உன் பார்வைதான் அடிக்கடி மாறிட்டு இருக்கு.... பத்திரிகைகாரன், அதான் வித்தியாசமா யோசிக்குற போல...
மறுமுனையில் மீண்டும் பிடிபடாத பேச்சு, மனதிற்குள் எரிச்சல் மேலோங்கியது அகிலனுக்கு....
தயவுசெஞ்சு என்னன்னு சொல்லு, இப்டி உயிரை வாங்காத....
நான் பேசுறது உயிரை வாங்குற மாதிரிதான் இருக்கும் உனக்கு... காலைல ஆறு மணிக்கு நீ ஒரத்தநாடு வந்துட்ட, இப்போ சாயந்திரம் மணி ஆறு... இப்போதான் என் ஞாபகம் வருதுல்ல உனக்கு?.. அதுவும் போன்ல பேசுற அளவுக்கு நான் அடுத்தவன் ஆகிட்டன்ல?”... எல்லாம் புரிந்தது அகிலனுக்கு... இதற்கு மேலும் அலைபேசியில் சமாதானம் பேசி பயனில்லை... அலைபேசியை துண்டித்துவிட்டு, கண்ணில் பட்ட ஒரு பேன்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறினான் அகிலன்...
என்ன மாப்ள, சர்க்கஸ்க்கு எதுவும் போறியா?... மஞ்சள் கலர் சட்டை, பச்சை கலர் பேன்ட்.... கலக்குறஹாலில் படுத்தபடியே அதிரசம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாமாவின் கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு, வாசலை நோக்கி விரைந்தான்....
ஆத்தாடி... கைப்புள்ள கோவமா போறத பாத்தா, இன்னிக்கி எத்தன தல உருளப்போகுதோ?” மாமாவின் கிண்டல் வாசல் வரை தொடர, அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்ய தொடங்கினான் அகிலன்....
வீட்டிற்குள்ளிருந்து வேகமாக வெளிவந்த அம்மா, “டேய், பலகாரம் எதாச்சும் சாப்புட்டு போடா.... மாமா, காரைக்குடி பலகாரம் வாங்கிட்டு வந்திருக்கு....பைக்கிற்கு அருகே வந்துவிட்டாள் அம்மா....
வந்து சாப்பிடுறேன்.... நான் நிலாவுக்கு போகலம்மா, இங்க பக்கத்துலதான் போறேன்....சொன்னபடியே வண்டியை எடுத்த அகிலன், வேகத்தில் பறந்தான்....
வயல்வெளிகளை கடந்து போனபோது, முன்பனி காலத்தின் பனிப்பொழிவை எதிர்கொள்ள பயந்ததை போல முற்றிய நெல் மணிகள், தலை குனிந்து நிற்கின்றது... அந்த குளிர் பொலிவையும் பொருட்டாக மதிக்காமல் இருட்டும் வரையில், தண்ணீருள் சூட்டினை தணித்துக்கொண்டிருக்கும் எருமைகள்... சில நேரம் ஊடல் உண்டாகும்போது நெல்மணியை போல சகிப்புத்தன்மையோடும், எருமையை போல பொறுமையாகவும் இருந்தால்தான் காதலில் வெல்ல முடியும்போல!...
செல்லும் வழியில் மருத மரத்தின் அருகில் கண்ணில் பட்ட இந்திரன் கூல்டரின்க்ஸ்கடையை பார்த்ததும், அங்கு நிற்காமல் போக அகிலனுக்கு மனம் வரவில்லை... வண்டியை அகிலன் நிறுத்தியதை பார்த்த கடைகாரர், “வாப்பா.... பாதாம் கீர் போடசொல்லவா?” என்றார்... தலையை ஆட்டிவிட்டு, “பார்சல்...என்று மட்டும் சொன்னான்... மின்னல் வேகத்தில் பார்சல் செய்யப்பட்டு, அதை வாங்கி வண்டியை எடுக்கப்போன அகிலனை நிறுத்தியது ஒரு கை...
வணக்கம் தம்பி... நல்லா இருக்கியளா?... போன மாசம் நம்மாழ்வாருக்கு இரங்கல் கட்டுரை எழுதிருந்திங்க... ரொம்ப அழகா இருந்துச்சு....
நன்றிங்க....
இனிமே இரங்கல் கட்டுரை எழுதுறப்போ, மறக்காம அவங்கள இழந்து வாடுற குடும்பம் பத்தியும் எழுதுங்க... அப்புறம், இறந்தவரோட நண்பர்கள் பத்தியும் எழுதுங்க....மணியை பார்த்தான் அகிலன், இருட்டிக்கொண்டு இருக்கிறது... கடிகாரத்தின் சிறிய முள், ஏழினை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது... பத்திரிகை வாசகர் விடுவதாக இல்லை...
எரிச்சலான அகிலன், “சரிங்க.... செஞ்சுடலாம்... அடுத்த தடவை உங்களுக்கு எழுதுறப்போ எல்லாத்தையும் சரியா செஞ்சிடுறேன்...என்று மட்டும் சொல்லிவிட்டு, அவர் யோசிக்க தொடங்கிய மணித்துளிகளில் வண்டியை விரைவாக செலுத்தி, தமிழின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்... வாசலில் விதை நெல் காயப்போட்டிருக்க, காக்கைகள் சில அவற்றை கொத்திக்கொண்டு போவதில் ஆர்வம் காட்டிக்கொண்டு இருந்தன.... அகிலனை பார்த்ததும் அருகிலிருந்த மரத்தில் தற்காலிக தஞ்சம் அடைந்தன காக்கைகள்....
கதவை திறந்த தமிழின் அம்மா, வழக்கமான உற்சாக வரவேற்பை கொடுத்துவிட்டு, தமிழ் இருக்கும் அறை நோக்கி அகிலனை அனுப்பி வைத்தாள்... காலைலேந்து இஞ்சி தின்ன கொரங்காட்டம் இருக்கான்பா.... என்ன கேட்டாலும் எரிஞ்சு விழறான்...இந்த கூடுதல் தகவல் அகிலனை இன்னும் கலவரப்படுத்தியது.... ஆனாலும், மனதிற்குள் கடவுளை வணங்கிய அகிலன், “முருகா!... இன்னிக்கு கலவரம் எதுவும் நடக்காம நீதான் காப்பாத்தணும்....அறைக்குள் சென்றான்...
கட்டிலில் சாய்ந்தபடி பசுமை விகடனை புரட்டிக்கொண்டு இருந்தான் தமிழ்.... கண்களில் கனல் புகைந்தது, முகத்தின் சிவப்பு கடும் கோபத்தை பிரதிபலித்தது...
ஹாய்டா.... இந்தா பாதாம் கீர், உனக்காக வாங்கிட்டு வந்தேன்...என்றவாறே தமிழின் ரியாக்சனை நோக்கினான்... தமிழின் கண்கள் அருகிலிருந்த மேசையை பார்க்க, அதை அகிலனும் பார்த்தான்... மேசை மேல் இருந்த குவளையில் பாதாம் கீர், ஆனால் அது புளித்த தயிர் போல இருக்கிறது... எறும்புகளும், ஈக்களும் போட்டி போட்டுக்கொண்டு அதை நுகர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தன....
புரிந்தது, அகிலனின் வரவுக்காக காலை முதல் காத்திருக்கிறது போல அதுவும்.... அகிலன் உள்மூச்சை இழுத்து விட்டான்... மிகப்பெரிய யுத்தத்திற்கு தயார் ஆகிவிட்டான் என்று பொருள்....
என்ன தமிழ் உனக்கு பிரச்சினை?”
இவ்வளவு நேரம் ஆகியும் உனக்கு புரியலையா?”
இல்லடா.... வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்திருந்தாங்க... அதான் வெளில வரவே முடியல... அதுவும் ஆறு மாசம் கழிச்சு ஊருக்கு வந்ததுல அவங்க ரொம்ப பிருசு பிடிச்சாங்க, அதான்...தமிழின் அருகிலேயே அமர்ந்தான் அகிலன்....
ஹ்ம்ம்... உனக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க... என்ன பாக்கவோ, பேசவோ கூட நேரமிருக்காது... ஆனால், சிரிக்கும்போது நான் சிரிக்கணும், நீ காதல் மொழி பேசுறப்போ நானும் பேசனும்ல?”
அப்டி இல்ல தமிழ்.... உனக்கப்புறம் தான் மத்த எல்லாரும் எனக்கு... புரிஞ்சுக்கோ...தமிழின் கைகளை பிடித்தான்... அந்த பிடிப்பிலிருந்து அவசரமாக தன்னை விடுவித்துக்கொண்டான் தமிழ்....
நான் முட்டாள் இல்ல அகி... உனக்கு உங்க மாமா பொண்ணை கல்யாணம் செஞ்சு வைக்க தீவிரமா வேலை நடந்துட்டு இருக்கிறது எனக்கு தெரியும்... உங்க ரெண்டு பேர் ஜாதகமும் கும்பகோணம் ஜோசியர் வரைக்கும் போய் பொருத்தம் பார்த்துட்டு வந்ததும் எனக்கு தெரியும்.... இது எந்த விஷயத்தையும் நீ என்கிட்ட சொல்லல... நடக்குற எந்த விஷயத்தையும் நீ வீட்ல எதிர்க்கல... அப்டின்னா என்ன அர்த்தம்?”
அகிலனுக்கு விஷயம் இப்போதான் புரிகிறது... இன்று காலைதான் ஜாதக விஷயம் அகிலனுக்கே தெரிந்தது, அதற்குள் விஷயம் தமிழ் காதுகளுக்கு வந்தது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.... அவசரப்பட்டு எதுவும் பேசினால், இது பெரிய விளைவை உண்டாக்கும் விஷயம் என்பதால் பொறுமையாக பேசத்தொடங்கினான் அகிலன்...
அவங்க ஜாதகம் பாத்த விஷயம் எனக்கு இன்னிக்கு தான் தெரியும்.... வந்ததும் சண்டை போட விரும்பாததால நான் அமைதியா இருந்தேன்... நிச்சயம் அம்மாகிட்ட பேசுறேன் தமிழ்... உன்னவிட்டுட்டு நான் வேற வாழ்க்கைய நினச்சு கூட பார்க்கல... இப்போ என்ன ஜாதகம் தானே பாத்தாங்க?... தேதியே வச்ச மாதிரி ஏன் டென்ஷன் ஆகுற?”
இன்னும் பத்து படிய தாண்டனும்லனு நீ சந்தோஷப்படுற.... அவங்க ஒரு படியை தாண்டிட்டாங்கன்னு நான் இங்க பயந்து போய் இருக்கேன் அகி... அப்பா, அம்மா, மாமா, அத்தைன்னு எதாச்சும் காரணம் சொல்லி நீ போய்டுவியோன்னு பயமா இருக்கு....கண்கள் கலங்கியது தமிழுக்கு....
ச்சி லூசு.... அப்டி ஒரு நிலைமை வந்தா, எல்லாரையும் தூக்கி போட்டுட்டு உன்கூடத்தான் நான் வருவேன்....
அப்டித்தான் நானும் நெனச்சேன்... ஆனால், இன்னிக்கு ஊர்லேந்து வந்ததும் நீ என்னை பார்க்க வராம, உன் சொந்தங்கள் தான் முக்கியம்னு அங்கேயே இருந்தத பாக்குறப்போ பயமா இருக்கு....
இப்போ நான் என்ன பண்ணினா நீ நம்புவ தமிழ்?... தீ குளிக்க சொல்றியா? மாடிலேந்து குதிக்க சொல்றியா? கோவில்ல பூ மிதிக்க சொல்றியா?” அகிலனின் வார்த்தைகளில் அவனை மீறிய கோபம் வெளிப்பட்டது....
அப்டி உன்ன கஷ்டப்படுத்தி என்னை நம்பவைக்கனும்னு அவசியம் இல்ல...  உங்க சொந்தக்காரங்க சந்தோஷத்துக்கே நீ வாழு... என்னைய விடு....வேகமாக எழுந்த தமிழ் மேசை மீது இருந்த குவளையை தட்டிவிட, கீழே கீர் ஆறுபாய்ந்தது..
அகிலனுக்கும் கோபம் மேலோங்க, வேகமாக அங்கிருந்து வெளியேறினான்... வீட்டிற்கு செல்ல மனமில்லை... வழியிலிருந்த பாலத்தின் திட்டினருகே வண்டியை நிறுத்தி, அங்கு அமர்ந்தான் அகிலன்... நிலவொளியை தவிர வேறு ஒளியில்லை, மெல்லிய காற்றில் வயல்களில் பயிர்கள் நளினமாக ஆடிக்கொண்டு இருக்கின்றன.... இந்த ரம்மியமான சூழல் அகிலனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது... மன்னிப்பு கேட்டிடலாம் என்ற எண்ணத்தில், அலைபேசியை கையில் எடுத்த அகிலன், டயல் செய்ய எத்தனிக்கையில், “ஆனந்த யாழை மீட்டுகிறாய்... என்ற ரிங்டோன் ஒலித்தது.
தமிழிடமிருந்துதான்....
ஹலோ அகி....
ஹ்ம்ம்... சொல்லு...
சாரிடா...
ஹ்ம்ம்...
ஐ லவ் யூ டா...
ஹ்ம்ம்...
ஐ லவ் யூ சொன்னா திருப்பி ஐ லவ் யூ சொல்லனும்னு ஒரு அடிப்படை காதல் விதி உனக்கு தெரியாதா?” சிரித்தான் தமிழ்....
சிரித்தபடியே அழைப்பை துண்டித்தான் அகிலன்....
அழைப்பை துண்டித்த மறு நொடி, அவசர அவசரமாக ஒரு குவளையை எடுத்த தமிழ், அதில் பாதாம் கீரை ஊற்றி மேசை மீது வைத்தான்... வாசலில், பைக் வேகமாக நிறுத்தப்படும்க்ரீச்சத்தம் கேட்க, அம்மாவின் குரலில் வாப்பா அகிலா... எங்க போன திடீர்னுகுரலும் ஒலிக்க, மறு நிமிடத்தில் அறைக்குள் நுழைந்தான் அகிலன்.... நுழைந்தது அறைக்குள் மட்டுமல்ல, அவனுக்குள்ளும் தான்.... (முற்றும்/தொடரும்)
(இந்த கதை ஒரு வித்தியாசமான முயற்சிக்காக எழுதப்பட்டது... ஆழமாக பயின்றவர்கள் அதை கண்டுபிடித்திருக்கக்கூடும்... இந்த கதை முழுக்க “மருதம்” திணையை மையமாக வைத்து எழுதப்பட்டது... அதாவது அந்த திணைக்கே உரிய முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் எல்லாமும் பெரும்பாலும் ஆங்காங்கே கதைகளுக்குள் தெளிக்கப்பட்டிருக்கும்.... இது வித்தியாசம் இல்லங்க.. நிஜமாகவே ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து, ஐந்து திணைகளிலும் இந்த கதை பயணிக்கும் வண்ணம் எழுதவே முயற்சித்தோம்... அதன் முதலாகவே என் பங்காக மருத நிலத்து பகுதிக்கான கதையை நான் எழுதினேன்... முறைப்படி இதன் அடுத்த தொடர்ச்சியாக முல்லை, நெய்தல், பாலை, குறிஞ்சி எல்லாம் அந்தந்த எழுத்தாளர்கள் எழுத வேண்டும்... ஏனோ இடையில் ஏற்ப்பட்ட தடங்களால் முழுப்பயணமும் மேற்கொள்வதில் சிக்கல் உண்டாகிவிட்டது.... அதன்பொருட்டே என் பகுதியை மட்டும் நான் இங்கே பதிந்துள்ளேன்.... ஒருவேளை மற்ற நால்வரும் அவரவர் பகுதியை எழுதி இதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் வாய்ப்பு உண்டானால், நிச்சயம் முழுக்கதையையும் இங்கு பதிகிறேன்.... அதுவரை இதை ஒரு தனியான சிறுகதை என்ற அளவிலேயே படித்து, பொறுத்தருள்க!)

24 comments:

  1. wow..good try...but sorry...ஐவகை நிலம் மட்டும் தெரியும்...அதற்குரிய மற்ற எதுவும் தெரியாது...முடிந்தால் next அதை கதையில்...hightlight செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாம்..... நிச்சயம் அதற்குரிய இணைப்பை தருகிறேன்...

      Delete
  2. intha kathayain erkanave padiththu vittom. kathai thalam thaan maari ullathu.

    ReplyDelete
  3. very nice, but muruga kapathunu kurinchi nila kadavula koopittathukku bathila, verum kadavulennu mattum solli irukkalam....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா... நீங்கள் சொல்லுற அளவுக்கு நான் யோசிக்கல நண்பா... ஆனாலும் மருத நிலத்தின் கடவுளான "இந்திரன்" பெயர் கதைக்குள் வந்திருக்கும்...

      Delete
    2. yes, i saw that...keep writing..by the way i wish to meet you when i come to India. Can i have ur appointment??

      Delete
    3. சந்தர்ப்பமும், தருணமும் அமைந்தால் சந்திக்கலாம் நண்பா...

      Delete
    4. Sure viji, bye the way a kind req. I want u to write a thanking article on Googles boldness for gay rights doodle for winter olympics, plz!!! http://metro.co.uk/2014/02/07/google-doodle-goes-rainbow-for-gay-rights-ahead-of-sochi-winter-olympics-2014-4294426/

      Delete
    5. நீங்க சொன்னபடி நமக்காக குரல் கொடுத்த கூகுளுக்கு தனி கட்டுரையில் நன்றி சொல்லியாச்சு நண்பரே.... இப்படி தங்களை போன்றோரும் வழங்கும் ஆலோசனைகள் இருந்தால்தான் நானும் நம் குரலை இன்னும் வலிமையாக சொல்ல முடியும்.... உங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பா...

      Delete
  4. அசத்திட்டிங்க விஜய்.. :)

    ReplyDelete
  5. http://anbaithedi.activeboard.com/t54871801/topic-54871801/

    ReplyDelete
  6. கதை மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்ரீதர்...

      Delete
  7. good try vijay... kathai sooper... if u dont mind, pls expalin the salient features of marutham thinnai, then it will be more interesting for readers like me...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாலா... மருத நிலம் குறித்த மொத்த தகவல்களையும் இந்த இணைப்பில் பார்க்கலாம்...

      http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

      Delete
  8. நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கத்தை கொடுக்க விரும்புகிறேன்....

    இந்த கதை ஏற்கனவே ஆர்குட், அன்பைத்தேடி போன்ற தளங்களில் "ஐங்கரன்" (ஐந்து நபர்களின் கரங்களால் எழுதப்படுவதால்) என்கிற பெயரில் பதியப்பட்டிருன்தது.... ஆனால், மூன்று கரங்களில் பதிவுகள் வந்ததோடு அந்த தளங்களில் கதை பாதியாக நின்றுவிட்டது... அதனை தொடர்ந்தே என் பகுதியை மட்டும் நான் இங்கு பதிந்துள்ளேன்....

    சிலருக்கு நான் ஐங்கரன் என்கிற நபரின் கதையை திருடிவிட்டதாக ஒரு சந்தேகம்.... சந்தேகமே வேண்டாம், அந்த ஐங்கரன் எங்கள் ஐந்து பேரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம் மட்டுமே....

    ஒருவேளை மற்ற இரண்டு நபர்களும் கதையை எழுதிவிட்டால் முழுமையான கதையை நிச்சயம் இங்கு பதிவேற்றுகிறேன்..... நன்றி...

    ReplyDelete
  9. really really really superb... well try....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி...

      Delete
  10. Super anna! ithu oru nalla muyarchi. kaathalarkalukul nadakum oodala intha storyla sollirukeenga. aan, pen kaathalarkaukulla nadakura mathirithan iruku. finishingla rendu pethukum ulla understanding theriyuthu. finishing super.

    marutha nilatha pathi sollirukeenga. but avangalukum, marutha nilathukum love attachment illathathu mathiri iruku. for example avanga vayal-la pathukura mathiri kooda illa. poluthum karuthum onnu serala anna.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி....
      நீ சொல்றது சரிதான்... நான் அகப்பொழுதில் மட்டுமே கவனம் செலுத்தியதால், மற்ற கருப்பொருட்களை அகத்தோடு இணைக்கவில்லை.... இது முதல் முயற்சிதானே, இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செய்ய முனைகிறேன்...

      Delete
  11. மருத மரம், எருமை, வயல் வெளி, நெற்கதிர், இந்திரன், குளிர், ஆய்ச்சியர் போன்ற கூறுகளுடன் மருதத் திணையின் ஊடலும் அழகூட்டுகிறது. எனினும் காலை வேளையின் ஊடல் மாலை பொழுதில் இடம் பெயர்ந்து தற்கால இயல்பு வாழ்வையும் சித்தரித்து உள்ளது. இறும்பூதான முயற்சி! அனைத்து திணையிலும் பாகுபாடின்றி (தலைவியின் காதலோ/தலைவனின் காதலோ) இரு அகத்தின் உணர்வுகளையும் நாநூறாக பெருக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete