Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 11 March 2014

"மிருகம்... மனிதன்.... தெய்வம்...." - நிகழ்கால நிதர்சனங்கள்...





பத்து நாட்களாக பதிவுகளை பதிவேற்ற முடியாததற்கு ஒரு சின்ன வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, இந்த இரண்டு வாரங்களின் நிகழ்வுகளை கொஞ்சம் அசைபோடலாம் நண்பர்களே....
கடந்த வாரத்தில் பெங்களூருவில் இயங்கி வருகின்ற சிங் லங் (Ching Lung bar) மதுபான அரங்கில் மூன்று ஒருபால் ஈர்ப்பு நபர்கள் தாக்கப்பட்ட செய்தி மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு நிகழ்வு... அந்த பார் பொதுவாகவே கே நபர்கள் அதிகம் கூடும் இடமாக அறியப்பட்டிருந்தாலும், அப்படி ஒரு இடத்தில் மூன்று நபர்கள் தாக்கப்பட்ட நிகழ்வு சகிக்க முடியாத கோபத்தை வரவழைக்கிறது... அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட அந்த மூன்று நபர்களும் காவல் நிலையத்தில் புகார் செய்தும் கூட, அந்த புகாரை ஏற்க மறுத்துள்ள காவல் துறையின் செயல் மிக ஆபத்தான முன்னுதாரணமாக இனி வரும் காலங்களில் ஆகிவிடும் சூழல் தெரிகிறது.... இங்கு மட்டுமல்லாமல் கடந்த மாதம், குஜராத்தில் ஒரு காவலரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாக ஒரு இளைஞன் கொடுத்த புகாரை கூட அந்த மாநில காவல் துறை பதிவு செய்ய மறுத்திருக்கிறது.... நம் நாட்டில் “ஓரினச்சேர்க்கை மீண்டும் குற்றச்செயலாக” தீர்ப்பு வெளியான பிறகு இப்படிப்பட்ட சட்ட ரீதியான உரிமைகள் நமக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது வேதனையான உண்மை.... ஆனால், இப்படிப்பட்ட ஒரு மதுபான அரங்கில் நிகழ்ந்த ஒரு சிறு கலவரம் தான், பின்னாளில் அமெரிக்காவை ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மனநிலைக்கு கொண்டு சென்ற “ஸ்டோன்வால் கிளர்ச்சி” என்பதை நாம் இந்த நேரத்தில் மறந்திடக்கூடாது நண்பர்களே...
 “பிறர் அடித்தால் வாங்கிக்கொள்... அழு, அதுவும் சத்தம் வெளிவராமல் அழுது கொள்”என்கிற கொள்கையைத்தான் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான அதிகபட்ச “நியாயமாக” நம் அரசுகள் பார்க்கின்றன....
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த நிலைமை இன்னும் மோசாமாகும் என்றே எனக்கு தோன்றுகிறது.... இப்போதுள்ள அரசியல் சூழலை பொருத்தவரை ஆளும் காங்கிரஸ் அதலபாதாள நிலைக்கு தள்ளப்படும் நிலையே தெரிகிறது... அப்படி உருவாகும் சூழலில் வென்றெடுக்க வாய்ப்புள்ள கட்சியாக நிற்பது பாஜக தான்.... “ஒருபால் ஈர்ப்பு” விஷயத்தில் அவர்களின் நிலைப்பாடு நாம் அறிந்ததுதான்... என்னுடைய அச்சத்திற்கு இன்னொரு காரணம் இருக்கிறது... சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் “ஒருபால் ஈர்ப்பை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம்.... கலாச்சாரத்தை நாங்கள் எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்கிற ரீதியில் தீர்மானங்கள் வெளியாகியுள்ளன... ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைகள் தான் எப்போதுமே, பாஜகவின் ஆட்சியின் செயல்பாடாக வெளிப்படும் என்பது நாம் அறிந்ததே.... அந்த விதத்தில் பார்க்கும்போது, ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், அடுத்த ஓராண்டிற்குள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கடுமையான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வாய்ப்பு தெளிவாக தெரிகிறது.... நடக்கப்போவதை நீங்களோ, நானோ வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும் போல.... 
ஒன்றை மட்டும் நினைவில் வச்சுக்கோங்க.... நீங்க யாருக்கு வாக்கை போடணும்னு நான் சொல்ல மாட்டேன், ஆனால் யாருக்கு வாக்கை அளிக்கக்கூடாது என்கிற விஷயத்தில் தெளிவாக இருப்பது இப்போதைய நமக்கான அவசியம்....
இப்படி ஒரு பக்கம் மதரீதியிலான கருத்துகளால் நாம் ஒடுக்கப்படும் வாய்ப்பிருந்தாலும், ஒரு மதத்தலைவரே “ஒருபால் ஈர்ப்பு திருமணங்களை நான் ஆதரிக்கிறேன்” என்று சொன்னதை நான் ஆச்சரியம் விலகாமல் தான் கவனிக்கிறேன்...
அவர் யார்? என்று சொல்லும் முன்பு, நேற்று நான் பார்த்த ஒரு காணொளியை பற்றி உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்....
தம்பி ரெமோ எனக்கு அனுப்பிய ஒரு காணொளி, மூன்று வருடத்து பழசு என்றாலும் கூட, நான் இப்போதான் அதை பார்த்தேன்... சமூக வலைத்தளங்கள் மூலம் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றி நான் எழுதிய கட்டுரையை படித்ததால் அதை எனக்கு அனுப்பி இருப்பார் என்று நினைக்கிறேன்... ஆமாங்க, TV9 என்கிற செய்தி சேனல் ஒன்று புலன் விசாரணை என்கிற பெயரில், ஆந்திரத்தில் பிளானட் ரோமியோ போன்ற தளங்களில் பொய் கணக்குகள் துவக்கி, அதிலிருக்கும் நபர்களுடன் பேசி, அந்த நபர்களின் முழுத்தகவல்களையும் தங்கள் சேனலில் வெளியிட்டுள்ளார்கள்... அப்படி வெளியிடப்பட்ட தகவல்களை ஒரு இளைஞர் தன் குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தபோது எதேச்சையாக பார்த்துள்ளார்... அப்போதுதான் தான் சிக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து, தற்கொலையும் செய்துகொண்டுவிட்டார்...
இது எப்படிப்பட்ட தனிமனித சுதந்திர மீறல் என்பது இந்த மீடியாக்களுக்கு ஏன் புரியவில்லை?... டீ.ஆர்.பி ரேட்டிங் கூடும் என்றால், அவர்கள் டெல்லி கற்பழிப்பை கூட “லைவ் டெலிகாஸ்ட்” செய்வார்கள் போல... புலன் விசாரணை செய்ய அவர்களுக்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, ஏன் இப்படி அப்பாவிகளை பலிகடா ஆக்குகிறார்கள்? என்று புரியவில்லை...
ஏனோ பத்து நாட்களாக நிகழ்ந்த நிகழ்வுகளை எழுதலாம் என்றால், நடந்த பெரும்பாலானவை எரிச்சலை ஊட்டும் விதமாகவே நிகழ்ந்திருக்கிறது...
சரி, ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான கருத்தை வெளியிட்ட அந்த மதத்தலைவர் பற்றி வருவோம்... அவர் வேற யாரும் இல்லைங்க, திபத்திய புத்த மதத்தலைவர் “தலாய் லாமா” தான்.... 
“இருவர் இணைந்து வாழ்வதில், மூன்றாம் நபருக்கு பாதிப்பு இல்லை என்கிற பட்சத்தில் ஒருபால் ஈர்ப்பு திருமணங்கள் நிச்சயம் தவறில்லை... அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப இப்போது அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்களை நான் ஆதரிக்கிறேன்” என்று சொன்ன தலாய் லாமா அவர்களை மதங்கள் கடந்து தெய்வமாக பார்க்கிறேன்....
(பேசுவேன்.....)

11 comments:

  1. anna, leave Dalai lama, now see our Pope Francis II I started to love him !! he he !!

    http://www.thehindu.com/news/international/world/popes-inclusive-remarks-on-homosexuality-surprise-many/article5541767.ece

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா.... சரிதான் தம்பி... போப்பும் நம் மனதில் ரொம்ப உயர்ந்துட்டார்....

      Delete
  2. தொலைகாட்சிகளின் நேரடி ஒளிபரப்பு வெறி அஸ்ஸாம் தலைநகரில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததை நண்பர் விஜயின் தகவலுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா?... அந்த விஷயம் எனக்கு தெரியாது நண்பா... குரூரத்தின் எல்லைக்கே ஊடகம் சென்றுவிட்டது போலும்....

      Delete
  3. worldla yarume nallavangalum illa, kettavangalum illa.. media karanga ellarum YOGIYANUNGA mathariyum, nama fraud mathariyum nenachikittu than ivlo thollai pandranga..
    BJP, CONG, 3rd front yaru powerku vanthalum namma thalaiya urutti vilayada than poranga.. avinga vittalum SUPREME COURT namma thalai uruttum..
    periya periya thappu pandravangala vittutu, nanga pattuku engaluku pidichavanga kuda valuromnu soldra nammala vachi than vilayaduvanga..
    anyway, ELLAM KADANTHU POGATTUM

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தம்பி.... அரசியல் பகடைக்காய்களாக நம் தலைகள் தான் உருட்டப்படுகிறது..... எல்லாம் மாறும்னு நம்புவோம்...

      Delete
  4. தேர்தல் என்றதுமே ஞாபகம் வந்தது பா ஜ க வும், அதனுடைய மதம் சார்ந்த விஷயங்கள் தான். எனக்கு வேறு சில ஞாபகத்திக்கு வந்தது.

    2014 - ஆட்சி மாற்றம்
    2014 ஜூலை - இந்தியாவின் மிக முக்கியமான கலாச்சார பிரச்சனையான ஓரினசேர்க்கைக்கு விரைந்து முடிவு எடுப்போம். பா ஜ க தலைவர்கள்
    2014 ஆகஸ்ட் - பா ஜ க தொண்டர்கள் ஜோடியாக இருக்கும் ஆண் பொம்மைகளை சாலையில் வைத்து தீயிட்டு கொளுத்தி, காப்போம், காப்போம் 'கல்லா' சாரத்தை காப்போம் என்று கோஷம்.
    2014 செப்டம்பர் - ஓரினசேர்க்கை க்கு எதிரான அமைப்பு மாவட்டம் தோறும் போர்க்கால அடிப்படையில் தொடக்கம்.
    2014 அக்டோபர் - ஓரினசேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு விரைந்து திருமணம் முடித்து 3 மாதத்திற்குள் திருமண பதிவு செய்யவேண்டும். -- -மத்திய அரசு
    2015 - இந்தியா ஓரினசேர்க்கையாளர் அற்ற நாடாக அறிவுப்பு.

    எதிர்மறையான கற்பனை, மன்னிக்கவும். வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டு ஓரின ஈர்ப்பாளர்கள் சிந்திக்கவே வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இசை, ஏன்பா உங்களுக்கு இவ்வளவு விபரீத கற்பனை?... நினைக்கவே கலவரமா இருக்கு.... அப்டி ஒரு நிலைமை வராதுன்னு கடவுளை வேண்டிக்குவோம்....

      Delete
    2. ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவா தீர்ப்பு வந்தப்ப இருந்த அரசியல் சுழ்நிலைய நெனச்சிபாருங்க, இப்ப வந்த தீர்ப்ப நெனச்சி பாருங்க. இத ஆதங்கந்துல தான் சொல்றேன். மதத்த பிடிச்சிட்டு அழற இவங்க இப்படிதான் யோசிப்பாங்க.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Hats off to thalaai lama...... Great!!

    ReplyDelete