Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday, 1 November 2014

அக்கா.... லட்சுமி அக்கா... "போலீசை கூப்டுவேன்...!!!"

வணக்கம் அக்கா....
“சொல்வதெல்லாம் உண்மை...!” நீங்க நடத்துற நிகழ்ச்சியோட பேர்லயாவது உண்மை  இருக்கட்டும்னுதான் இந்த பேரை வச்சியபோல.... காலம் போன கடைசில கதாயாகிக சீரியல்ல அழுறதுதான் இங்க வாடிக்கை, ஆனா நீங்க மத்தவுகள அழவச்சு வேடிக்கை பாக்குற நிகழ்ச்சியால தமிழ்நாடு முழுக்க கலக்கிகிட்டு இருக்கிய... ரொம்ப அற்புதமான விஷயங்கள பேசி, இப்பவல்லாம் இளைஞர்களுக்கு நீங்கதானக்கா ஒரு ரோல் மாடலு.... “புருஷனுக்கு வெஷம் வச்சுக்கொன்னு, கள்ளக்காதலனோட ஓடிப்போன பொண்டாட்டி”, “ஆறு கல்யாணம் பண்ணி ஏழாவதுக்கு ரூட் விட்டு பிரச்சியாகிப்போன புருஷன்”, “பெத்த மகளையே கற்பழிச்ச குடிகார அப்பன்” இப்டி இன்னும் சொல்லிகிட்டே போகலாம், நீங்க தொலைக்காட்சில காட்டின நம்பிக்கை நட்சத்திரங்கள் பத்தி.... இதுமட்டுமில்லாம சொத்து பிரச்சினை முதலா காதல் பிரச்சினை வரை போலிசாலையே தீர்த்துவைக்க முடியாத பல பிரச்சினைகளை ஒருமணி நேர நிகழ்ச்சில தீர்த்துவைக்குற “பொம்பள சின்ன கவுண்டர்” நீங்கதான்னு ஒரு டாக்’கு ஊருக்குள்ள.... குஷ்பூக்கும், நமீதாவுக்கும் கோவில் கட்டுன நம்ம பயலுக இப்ப உங்களுக்கு இடம் தேடி அலையிறாங்களாம் (கோவில் கட்டதானுக்கா...)...
பொதுவா கட்டப்பஞ்சாயத்து பேசுறது சட்டப்படி குற்றம், போலிஸ் அதுக்கு அனுமதிக்காதுன்னு பலபேரும் சொல்றாக... ஆனா, உங்க நிகழ்ச்சியில “போலிச கூப்டுவேன்!”ன்னு சொல்லியே எல்லாப்பேரையும் மிரட்டுறிய.... அதனால அப்பப்போ எனக்கு ஒரு சந்தேகம் வந்துடுது... போலீஸ் அனுமதிக்காத கட்டப்பஞ்சாயத்து நடத்துற நீங்க, போலிசை சப்போர்ட்டுக்கு கூப்பிடுறத பார்த்தா, “கூப்பிடுற நீங்க லூஸா? பாக்குற நாங்க லூஸா?”ங்குறதுதான் அந்த சந்தேகம்... பெரும்பாலும் சின்ன பிரச்சினையோட வர்ற குடும்பத்த குழப்பி, சண்டைய மேலும் பெருசாக்கி, வர்ற ஆளுகள ஒப்பாரி வைக்கவச்சு, மிரட்டி உருட்டி, அலறியடிச்சு ஓடவைக்குற உங்க நிகழ்ச்சிய பாக்குறப்போ நெஞ்சு நசுங்கி, கண்ணு கசங்குதுக்கா....
சின்ன வயசுலயல்லாம் மத்தவங்கள பத்தி புரணி பேசுனா எங்கம்மா வாய்ல கரண்டிய வச்சு அடிப்பாக.... உங்கம்மா அப்புடி அடிச்சு வளர்த்திருந்தா, இந்நேரத்துக்கு இப்டி ஊர் முழுக்க புரணி பேசிகிட்டு அலஞ்சிருக்க மாட்டிய... உங்கம்மாவ இப்ப நான் பார்த்து, “என்னம்மா இப்டி பண்ணிட்டிங்களேம்மா...!”ன்னு உங்க டயலாக்கையே சொல்லனும்னு ஆசையா இருக்குக்கா... சரி, உங்கள ரொம்பவே புகழ்ந்துட்டேன், இப்ப நம்ம விஷயத்துக்கு வாரேன்....
இவ்வளவு நாளும் நாட்டுக்கு அவசியமான அதிமுக்கியமான டாபிக்கை வச்சு, டீ ஆர் பியை ஏத்தி, லட்சமும் கோடியுமா சம்பாதிச்சிய, நேத்து நீங்க பேசுன விஷயதாலதான் இம்புட்டு விஷயத்தையும் நானும் பேசவேண்டியதாகிருச்சு....
உங்க நிகழ்ச்சிக்கு வந்த ரெண்டு லெஸ்பியன் பொண்ணுகள நீங்க அணுகுண முறையும், அவங்களோட பாலீர்ப்பை ஏதோ கொலைக்குத்தம் ரேஞ்சுக்கு சொல்லி, அப்பாவி பொண்ணுகள குழப்பி அனுப்பின உங்க நல்ல மனசுக்கு, எர்வோமார்ட்டின் தடவுனாலும் உங்க தலைல முடி முளைக்காது... அந்த பொண்ணுக காதலிச்சது தப்பு, அவங்க லெஸ்பியனா இருக்கது தப்புன்னு வரிசையா சொன்னிகளே, அந்த பொண்ணுக செஞ்ச ஒரே தப்பு என்ன தெரியுமா?... வாழ்க்கைல உங்கள அதுக சந்திச்சதுதான் அந்த பெரிய தப்பு... ஒருபால் ஈர்ப்பல்லாம் குடும்ப கலாச்சாரத்துக்கு ஒத்துவராதுன்னு சொன்னிய... உங்க குடும்ப பிரச்சினையே டன் கணக்கா நாறிக்கிடக்குன்னு கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு அடிபடுதுக்கா.... அதைப்பத்தி பொதுவிடத்தில பேச எனக்கு மனசு வரல, அப்டி பேசுனா உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிருமக்கா....
மாற்றுபாலீர்ப்பை ஏதோ மனநல பிரச்சினை ரேஞ்சுக்கு பேசுனியளே, சமபால் ஈர்ப்பல்லாம் மனநோய் இல்லைன்னு உலக சுகாதார நிறுவனம் முப்பது வருஷத்துக்கு முன்னமே நீக்குன விஷயம் உங்களுக்கு தெரியாதா என்ன?... ஒருவேளை உங்க சின்ன வயசுல மண்டைல எதுவும் அடிபட்டு, எழுபதுகளுக்கு முன்னாடி நடந்த எல்லா விஷயமும் உங்களுக்கு மறந்திடுச்சான்னும் எனக்கு தெரியல.... உங்க ஆரோகணம் படத்துல வர்ற நாயகிக்கு “பைப்போலார் டிசார்டர்”னு ஒரு பிரச்சினை வருமே, அதுமாதிரி உங்களுக்கும் எதுவும் பிரச்சினயான்னு முதல்ல நல்ல மனநல மருத்துவரை பாருங்கக்கா....
இவ்வளவு அறிவியல் விளக்கமல்லாம் சொல்ல வேண்டிய அளவுக்கு புத்தியில்லாதவர் நீங்க இல்லைன்னு நினைக்குறேன்... ஆனால், உண்மைகள் தெரிஞ்சும் உங்க தொலைக்காட்சியோட டீ ஆர் பி ரேட்டிங்’க்காக அப்டி பேசுனியளா?ன்னும் எனக்கு புரியல...
பாலீர்ப்பை எளிதா மாத்த முடியும்னு அந்த பொண்ணுக கிட்ட சொன்னியளே, உங்களுக்கு ஒரு சவால் விடுறேனக்கா.... உங்களால ஒரே ஒரு மாசத்துக்கு ஆண்கள் மேல ஈர்ப்பு வராம, பொண்ணுக மேல ஈர்ப்பு வரவச்சு வாழமுடியுமா?... வாழ்க்கை முழுசும் சொல்லலைக்கா, ஒரு முப்பது நாளுக்குத்தான் சொல்றேன்... அப்டி உங்களால முடிஞ்சா சொல்லுங்க, அதை செய்யுங்க... உங்க அதே வழியை பின்பற்றி நம்ம பயலுகள, புள்ளைகள எல்லாத்தையும் எதிர்பால் ஈர்ப்பு உள்ளவுகளா மாத்திக்கறோம்.... முடியலைன்னா, பகிரங்கமா மன்னிப்பு கேட்க நீங்க தயாரா?ன்னும் சொல்லிடுங்க....
சரிக்கா... இப்ப ஒரு முடிவுக்கு வருவோம்....
நீங்க நல்லா பேசுறிய.... ஆளும் கூட மேக்கப், பேஷன் டிசைனிங்’னு நல்லாத்தான் ஜொலிக்கிறிய....
பேசாம அரசியலுக்கு போயிடுங்க, குஷ்பூ அக்கா மாதிரி ஒரு ரவுண்டு வருவீக.... இப்ப உள்ள நிலவரப்படி நீங்க பேசுற குடும்ப கலாச்சாரம் பத்தியல்லாம் மேடைல பேசுனா, கடலைக்காவும், மாங்காய் சுண்டலும் கொரிச்சுகிட்டே கேக்குறதுக்கு நல்லா இருக்கும்...
சரி, தொலைக்காட்சிதான் வேணும்னு அடம் பிடிச்சா தாராளமா பண்ணுங்க....
“லெமன் சோடா வித் லெட்சுமி அக்கா” ன்னு நிகழ்ச்சி நடத்தி இத்துப்போன படத்துல நடிச்ச, செத்துப்போன நாக்கால தமிழை கொல்லுற நடிகைகளை பேட்டி எடுங்க... இல்லைன்னா “கிசுகிசு லட்சுமி”னு ஒரு நிகழ்ச்சி தொடங்கி, “ஆறெழுத்து நடிகைக்கும், விரல் நடிகருக்கும் சம்திங் சம்திங்காம்!”னு உலக நலம் சார்ந்த விஷயங்களை பரபரப்பா பேசுங்க.... நல்லாவே கல்லா கட்டுவீய, வேணும்னா நல்ல சேனல் எதுலயாவது நாங்களே வாய்ப்பு வாங்கி தாறோம்.... அதயல்லாம் விட்டுட்டு எதுக்குக்கா உங்களுக்கு கொஞ்சமும் தொடர்பே இல்லாத அறிவியல் சார்ந்த கருத்தல்லாம்?....
ஒன்னு தெரிஞ்சத பேசனும், இல்லைன்னா தெரிஞ்சுகிட்டு பேசனும்... ரெண்டுமே இல்லாம வாய்க்கு வந்ததயல்லாம் பேசுனா, அப்புறம் உங்க பிரச்சினைகள தீர்க்க இன்னொரு தீபாவளி சிறப்பு “சொல்வதல்லாம் உண்மை” போடுற மாதிரி ஆகிடுமக்கா....
சரிக்கா.... அடுத்த முறை இதல்லாம் மாத்திக்குவியன்னு நம்பிக்கையோட இப்ப கெளம்புறேன்....

நன்றி அக்கா,
உங்களின் அன்புத்தம்பி....

7 comments:

  1. excellent excellent !! nethi adi ! i am going to post this in her fb page, She is active there.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ராஜ்...

      Delete
  2. how come you people watch that programme? there is no sense in the program and everything looks fabricated. The anchor was once in Muscat and her husband RAm was in an automobile group.Even now MUSCAT speaks of her life. That is why when she was invited for a programme in Tamil sangam she cancelled her trip at the last minute saying she broke her leg.( afraid of meeting people here) Rightly said, if we start her family programme we can run it for one year.JP only knows what is TRUTH.

    ReplyDelete
    Replies
    1. அப்த ரகசியத்தை சொல்ல வேண்டாம்னு இருந்தேன், நீங்க போட்டு உடைச்சுட்டிங்களே அண்ணே..... கூடுதல் தகவல்களாக மஸ்கட் விஷயத்தை பற்றி பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி அண்ணா...

      Delete
  3. well said..!! Superb!! indha pombalaiku pesa endha arigadhaium illa... i hope everyone must know about her relationship with JP as sundhar said... ella thellavari thanamum ivanga pannuvanga at the same time ipdi panchayatum pannuvanga!! First indha pombalaya potruka channel ah thookanum.. Really disgusting... "SHE DOESNOT HAS ANY RITES FOR JUDGING THE PEOPLE"
    "Modhalla nee olunga irukayanu pathutu pesu"
    really ketta varthaila thitanum pola iruku...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி....
      கோபப்பட வேண்டாம்பா... சொல்ல வேண்டியதை சிரிச்சுகிட்டே சொல்லிடலாம்...

      Delete
  4. Back when Nirmala Periyasamy was hosting this show, there was one episode where they were showing the life and problems of two lesbian girls. As usual with the Tamil media, I expected the show to show the theor relationship in a bad light, so as to show-off their homophobic stand. Surprisingly, the show was on lines to support them and Nirmala showed politeness and care towards the girls and appealed to the audience to accept them. That was one very bold step to be taken by any of the Tamil media and it was encouraging and heartening to see their views.

    ReplyDelete