ஒரு இளைஞனின் சமபாலீர்ப்பை மாற்றிட,
பெற்ற தாயுடனே கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளவைத்த மிகக்கேவலமான செய்தி அண்மையில்
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வெளியானது... ஒரு மனிதனின் பாலீர்ப்பை மாற்றிட
இப்படி குடும்ப உறுப்பினர்களுடன் கட்டாயப்படுத்தி உறவுகொள்ளவைக்கின்ற
(கற்பழிக்கப்படுகிற) இழிசெயலுக்கு பெயர்தான் “கரெக்டிவ் ரேப்” (Corrective
rape)...
இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் பல இடங்களிலும் காணப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள்
வெளியாகியுள்ளன...
கடந்த ஐந்து ஆண்டுகளில், தெலுங்கானா
மாநிலத்தில் மட்டும் இத்தகைய பாலீர்ப்பு மாற்று கற்பழிப்புகள் 15 நபர்களுக்கு
நடந்துள்ளதற்கான ஆதாரத்தை அங்குள்ள சமூகநல அமைப்பு உறுதிசெய்துள்ளது.. அந்த
கொடுமைகள் தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறிய இளைஞர்கள் கொடுத்த வாக்குமூலங்களின்
அடிப்படையில் மட்டுமே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது... வீட்டிற்கு பயந்து
இன்னும் வெளிவராத எண்ணற்ற குற்றங்கள் இப்படி நிறைய நடப்பதாகவும் அந்த அமைப்பு
கூறியுள்ளது... எத்தனையோ பாலீர்ப்பு சிறுபான்மை இளைஞர்களின் தற்கொலைகள் கூட இதன்
நீட்சியாக தொடர்வதையும் நம்மால் அறியமுடிகிறது...
ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்த கொடுமைகள் நிறைய நடக்கிறது... பெண்ணுக்கான
திருமணப்பேச்சு நடக்கும்போது, அவள் லெஸ்பியன் என்று தெரியவரும் சூழலில், அவளுடைய
முறைப்பையனைக்கொண்டே அந்த பெண்ணை கற்பழிக்கசெய்வது தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மிக
இயல்பாக நடக்கும் விஷயமாம்... எப்படியாவது தங்கள் மகளுடைய பாலீர்ப்பு மாறவேண்டும்
என்கிற எதிர்பார்ப்போடு, மகளின் கற்பழிப்பு வைபவத்தை பெற்றோர்களே முன்னின்று
நடத்திவைப்பதுதான் வேதனையின் உச்சம்... முறைப்பையன், மாமா தொடங்கி சகோதரி, அம்மா
வரையிலும் கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாத கற்பழிப்புகளை ‘சிகிச்சை’ என்கிற பெயரில் நம் சமூகம் நடத்திவருகிறது...
இந்த “கரெக்டிவ் ரேப்” என்று
சொல்லப்படுகிற வார்த்தை நமக்கு வேண்டுமானால் புதியதாக தெரியலாம்... ஆனால், இது
தென்னாப்ரிக்காவில் அழுத்து சலித்த விஷயம்.. தாய்லாந்து, ஜிம்பாவே, ஈக்வாடார்,
உகாண்டா போன்ற நாடுகளிலும் இப்படிப்பட்ட கற்பழிப்புகள் நடந்ததற்கான புகார்கள்
எழுந்துள்ளன...
ஒருகாலத்தில் தென்னாப்ரிக்காவில் எயிட்ஸ் நோய்க்கு தீனிபோட்டதே இந்த வகையான
கற்பழிப்புகள்தான்... தங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை மாற்றிட சிகிச்சைபோல அடுத்த
நபர்களை கற்பழிக்க செய்ததன் விளைவுதான் எச்.ஐ.வி தாக்கத்தின் பெருக்கம்... ஒரு
நபர் கற்பழித்தபிறகும் தங்கள் மகன்/மகளின் பாலீர்ப்பு மாறவில்லை என்றால், தங்கள்
முயற்சியில் சற்றும் தளராத பெற்றோர் அடுத்தடுத்து ஆட்களை இறக்கி கற்பழிக்க
விடுவார்களாம்... எயிட்ஸ் நோய் வந்தோ, உடல் மற்றும் மனதளவில் காயப்பட்டோ
இறக்கும்வரையில் சில பெற்றோர் அந்த முயற்சியை கைவிட்டதில்லையாம்... சிம்பாவே
நாட்டை சேர்ந்த ஹராரே என்கிற பெண், “என்னை ஒரு தனி அறையில் பூட்டிவைத்து தினமும்
யாராவது ஒரு நபரை அனுப்பி கற்பழிக்க வைத்தார்கள்... நான் கருவுறும் வரையில்
தினமும் இந்த நிகழ்வு நடந்தது.. நான் கர்ப்பமான பிறகு, ஒரு ஆணுக்கு
கட்டாயத்திருமணமும் செய்துவைத்தார்கள்...” என்கிறாள்...
அப்படி கற்பழிப்பதற்கு முன்பு ஒரு சடங்கும் இருக்கிறதாம்... கற்பழிக்கப்பட
இருக்கிற அந்த நபரை மிகக்கேவலமான முறையில் அவருடைய பாலீர்ப்பை சொல்லி
திட்டுவார்களாம்... காதால் கேட்கமுடியாத அளவிற்கு திட்டியபிறகுதான், சிகிச்சையை(?)
தொடங்குவார்களாம்..
பத்து வருடங்களுக்கு முன்புவரை ஒரு வாரத்தில் பத்து கற்பழிப்புகளாவது இப்படி
தென்னாப்ரிக்காவில் நடந்துள்ளது... இன்றைக்கு அங்கே சூழல் ஓரளவு மாறியுள்ளது,
பாலீர்ப்பு பற்றிய விழிப்புணர்வு கிடைத்தும் வருகிறது... அவர்கள் அப்போவிட்ட
பணியைத்தான் நம் நாட்டில் சிலர் இப்போ தொடங்கியுள்ளனர்.. மருந்து மாத்திரைகள்,
மின்னதிர் சிகிச்சை என்று வழக்கமான சிகிச்சை முறைகளை மட்டுமே அறிந்த நமக்கு
இப்படிப்பட்ட சிகிச்சை என்கிற பெயரில் நடக்கின்ற கொடூரமான வன்செயல்கள் ஒருவித அச்ச
உணர்வை இயல்பாகவே உண்டாக்குகிறது...
தன் மகனுக்கு விளம்பரம் கொடுத்து மாப்பிள்ளை தேடும் தாய் இருக்கிற அதே
நாட்டில்தான், ஒரு தாய் கற்பழிப்பதன் மூலம் மகனின் பாலீர்ப்பு மாறிடும் என்கிற
மிகவும் பிற்போக்குத்தனமான கருத்தியலையும் காணமுடிகிறது... ஓரினச்சேர்க்கையை
தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கின்ற இந்திய ஜனநாயகம் இதற்கென்ன பதில்
சொல்லப்போகிறது? என்பது தெரியவில்லை..
டெல்லியில் நிர்பயாவை கற்பழித்து கொன்றபோதுகூட, அதற்கும் “அவள் இரவில் எங்கு
போனாள்?, உடன்சென்ற இளைஞன் யார்?” என்ற காரணங்கள் கூறி அந்த இழிசெயலுக்கு
சிலர் நியாயம் கற்பிக்க முயன்ற சமூகத்தில்தானே வாழ்கிறோம்... இனி வரும் காலங்களில்
அப்படி கற்பழிப்பவர்கள், தாங்கள் “கரெக்டிவ் ரேப்” செய்து இந்திய கலாச்சாரத்தை
காப்பாற்றிவிட்டதாக வாக்குமூலங்கள் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை... இந்தியாவில்
தண்டனைக்குரிய குற்றமான ஓரினச்சேர்க்கையை தடுக்கும்விதத்தில் கற்பழிப்பதாக
தங்களுக்கு வீரதீர செயலுக்கான விருதுகள்கூட கேட்க வாய்ப்பிருக்கிறது...
வேறென்ன சொல்லமுடியும்... வாழ்க இந்திய ஜனநாயகம்! வளர்க இந்திய கலாச்சாரம்!...
நாம் எந்த அளவு பிற்போக்குத்தனமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு இதுவே சான்று... நிச்சயம் அதனை மாற்றிட மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் அவசியம்... அது நாளடைவில் நடக்கும் என்று நம்புவோம் தம்பி... தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஇனி சமபால் ஈர்ப்பு நபர்கள், "எப்போ கற்பழிப்பனோ? எவளோட படுக்க சொல்வங்களோ?" பயத்திலும் வாழ வேண்டியதுதான்.
ReplyDeleteஏற்கனவே பாலீர்ப்பு பற்றி குழப்பத்தில் இருக்கும் நம்மை இது போன்றே சம்பவங்கள் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளக்குகிறது.
ஆம் பிரபு... அப்படியோர் அச்சம் இயல்பாகவே எழுகிறது... என்றுதான் இந்நிலை மாறுமோ தெரியல...
DeleteI cant believe this na... ipdi pata kevalamana oru natula naama irukonu nenachave kastama iruku.. epo dha indha government nalla rule kondu varuvangalo nu therila na... homosex kevelam nu soldrangale ipdi ivanga pandradhu yokiyama?? kevalamana jenmanga.. ketta varthaila thitanum pola iruku na
ReplyDelete