Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 7 December 2012

"காதலன் வேண்டும்" - வளர்ந்துவரும் நாகரிக ஸ்டேட்டஸ்....

-->


"உண்மையான காதலன் வேண்டும்", "உண்மையான வாழ்க்கைத்துணைவன் வேண்டும்".... இப்படி நம் கே மக்கள் சமீப காலமாக சொல்வது அதிகரித்து வருகிறது.... இது ஒரு நாகரிக ட்ரெண்டஆக மாறுகிறதோ? என்றும் குழப்பமாக இருக்கிறது.... "இது என்ன தப்பு?... நல்ல முன்னேற்றம்தானே?" அப்டின்னு நீங்க கேட்பது புரியுது..... ஆனால், இந்த "உண்மையான" காதலன், வாழ்க்கைத்துணைவன் போன்ற விஷயங்களை எதிர்பார்க்கும் நம்மவர்களில் எத்தனை பேர் இப்போவே உண்மையாக இருக்க தொடங்கி இருக்காங்க?.... இது நிச்சயம் யாருக்கும் புரியாத கேள்விதான்... அடுத்தவனிடம் ஒன்றை எதிர்பார்க்கும் நாம், அவனிடம் எதிர்பார்க்கும் முன்பு நாம் அப்படி இருப்பதுதானே முறை.... இங்கே எத்தனை பேர் அப்படி இருக்காங்க?.... நீங்க கேட்பது, எதிர்பார்ப்பது எல்லாம் சரிதான்.... அப்படி ஒரு உண்மையானவன் கிடைத்த பின்பு நீங்க உண்மையானவனா மாறுவீங்கன்னு எப்படி நம்பமுடியும்?.... உடலுறவு என்பது போதை.... அந்த போதை பொதுவாக கே'க்களுக்கு ரொம்ப எளிதாக கிடைத்துவிடுகிறது.... பின்பு அதிலிருந்து விடைபெற்று, இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது ரொம்ப சிக்கலான விஷயம்.... அதுவும் இந்த "பிளானட் ரோமியோ"வில் இப்படி சொல்லும் நபர்களை பார்த்தபோது பற்றிக்கொண்டுதான் வந்தது.... அது வெறும் செக்ஸ் கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தளம்.... அங்கு காதலனை எதிர்பார்ப்பது என்பது "பாலைவனத்தில் சுனை நீர் தேடுவது" போன்றது.... 

“dick size, fucking, position” இதெல்லாம் பிளானட் ரோமியோவில் ஒரு உறுப்பினருக்காக கேட்கப்படும் அத்தியாவசிய அடிப்படை கேள்விகளாக இருக்கிறது.....இதை கொஞ்சம் யோசித்து பார்த்தாலே, அந்த தளத்தின் நோக்கம் உடலுறவுதான் என்பது தெளிவாக தெரியுது.... பின்பு அங்கு போய்தங்களுக்கு காதலன் வேண்டும்என்று கேட்பது எப்படி சரியாகும்?... அப்படியானால் நான் சொல்வதைப்போல இதுபாலைவனத்தில் சுனைநீர்தேடும் கதைதானே?....
பின்பு எங்கு தேடுவது காதலனை?” உங்கள் கேள்வி எனக்கு புரியுது.... காதலனை தேடிப்பெற முடியாது.... நான் முன்பே ஒருமுறை சொன்னது போல, “பார்த்தவுடன் வருவது ஈர்ப்பு, அது வெறும் இனக்கவர்ச்சி..... பழகியவுடன் வருவது நட்பு.... இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு புள்ளியில் தோன்றும் உணர்வுதான் காதல்”..... அதை தேடி அடைவது என்பது சரியாக இருக்காது.... அப்படி தேட விரும்பினாலும், அதற்கான சரியான களத்தில் தேடுங்க....
முதலில் பிளானட் ரோமியோவில்மற்றவிஷயங்களுக்கு நாள் குறிப்பதை நிறுத்திவிட்டு, உங்களை முழுமையான காதலுக்கு உகந்தவனாக ஆக்கிவிட்டு அடுத்து காதல் தேடலில் இறங்குங்கள்....
செக்ஸ் தேடலை நான் தவறாக சொல்லவில்லை... அதுவும் ஒரு மனிதனின் இயல்பான உணர்வுதான்..... அது எல்லை மீறி, மற்ற உணர்வுகளை ஒதுக்கிவிட்டு ஒரு அவலநிலையில் கே சமூகத்தை ஆக்கிவிட்டது என்பதால்தான் இதை சொல்கிறேன்....
காதலிக்கும் எண்ணம் வந்துவிட்டால், நீங்கள் முதலில் செய்ய வேண்டிய ஒரு விஷயம்உங்கள் பிளானட் ரோமியோ அக்கவுன்ட்டை டெலிட் செய்யுங்க”.....
அடுத்து, காதலனை தேட முடிவெடுத்துவிட்டீர்கள், சரி.... காதலுக்கான முதல் தகுதியாக நீங்கள் நினைப்பது எதனை?.... பலரும் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், இங்கு காதலன் தேடலில் இறங்கும் பலரும் முதலில் முக்கிய தகுதியாக எதிர்பார்ப்பதுஅழகு”..... அழகை ஒரு தகுதியாக வைத்து காதலனை தேடுவது தவறல்ல.... ஆனால், அழகை மட்டுமே தகுதியாக வைத்து காதலனை தேடுவதில்தான் பிரச்சினை....
காரணம் இருக்கிறது.... முதலில், எது அழகு? என்பதை உங்களால் சொல்ல முடியுமா?.... எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது..... “அழகு என்பது ஒன்றோடு ஒன்று இணைத்து பார்ப்பது.....” என்பார் பாலகுமாரன்.... அதில் உள்ள உண்மையை நீங்கள் உணர்கிறீர்களா? என்று தெரியவில்லை... அழகு என்பது ஒன்றோடு மற்றொன்றை தொடர்பு படுத்தி பார்ப்பதுதான்... உதாரணமாக, ரோஜாவை பார்க்கும் வரை மல்லிகைப்பூ அழகாக தெரியலாம், ரன்வீர் கபூரை பார்த்த பிறகு ஆர்யா அழகு குறைந்ததாக உணரலாம்.... அதனால், அழகு என்பது நம் தற்காலிக கண்ணோட்டம்.... நித்தமும் அது மாறும் இயல்புடையது...
அழகை மட்டுமே தகுதியாக பார்த்து காதல் கொள்ளும்போது, இன்னொருவன் அழகனாக நமக்கு தெரியும்போது, அவன் மீதான காதல் உங்களுக்கு குறைந்துவிடுகிறது.... அந்த வெற்றிடத்தை நிரப்ப எப்போதும் உதவுவது ஒருவனுடைய குணம்.... பல ஓரின காதல்கள், மாதங்களை கூட தாண்டாத நிலைக்கு இதுதான் காரணம்.....
சரி, காதலித்த பிறகு அதனை தக்கவைப்பதில்தான் முக்கிய விஷயம்....
எப்படி தக்கவைப்பது?..... பொதுவாக ஆண்களுக்கென சில குணாதிசயங்கள் உண்டு.... அதிகம் பேசமாட்டான், விதிகளை மீறுவதில் ஒரு இன்பம் கொள்வான்..... விதிகளை மீறுவது என்பதுதான் பல காதல்களுக்கும் சிக்கலாக இருக்கிறது.... செக்ஸ் மயமாகி போன நம் கே உலகில் ஒருவன் எளிதாக இச்சைக்கு ஆளாவது ரொம்பவே எளிமையான விஷயம்... அப்படிப்பட்ட சூழலில், காதலுக்கென இருக்கும் விதிகளை மீறி, அதன்மூலம் த்ரில் அனுபவம் அடைவது ஆணுக்கு இயல்பான விஷயமாக ஆகிவிடுகிறது.... அதில்தான் அதிக சிக்கல்.....
விட்டுக்கொடுப்பதும், எதையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசுவதும், எந்த உண்மையான இருத்தலை அவனிடமிருந்து எதிர்பார்க்கிறோமோ, அந்த உண்மையோடு நீங்கள் உங்கள் காதலனிடம் இருக்க வேண்டும்...
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொன்ன ஒரு கருத்தை கேளுங்கள்.... “காதல் என்பது வெறும் அன்புதான் என்றால், நீ காதலிக்க ஒரு நாய்க்குட்டி போதும்.... காதல் என்பது வெறும் காமம்தான் என்றால், நீ காதலிக்க ஒரு விலைமாது போதும்.... இந்த இரண்டு கோடுகளும் இணையும் ஒரு புள்ளிதான் காதல்....”
இந்த உண்மையை புரிந்து காதலின் உண்மை நிலையை புரிந்து, காதலனுக்காக காத்திருங்கள்....
வெறும் செக்ஸ் மட்டுமே பிரதானமாக மாறிப்போன இந்த கே உலகில், ஆங்காங்கேகாதலன் வேண்டும்என்ற தேடுதல் ஒரு ஆரோக்கியமான மாற்றம்தான்.... அதை முறையாக, நல்ல மாற்றத்தோடு கொண்டு செல்வது என்பது இன்னும் ஆரோக்கியமான காதலையும், கே சமூகத்தையும் நிச்சயம் உருவாக்கும்....
சிலருக்கு என் கருத்தில் மாற்றுக்கருத்து இருக்கலாம்.... “உங்களில் ஒருவன்என்ற உரிமையில்தான் இவ்வளவையும் சொல்கிறேன்....

1 comment:

  1. you are correct vijay after reading your description i deleted my pr account.....thank you nanba

    ReplyDelete