Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 10 April 2013

ஒருபால் ஈர்ப்புக்கான அடையாளங்கள்!!! - எப்படி கண்டுபிடிப்பது?


பார்த்ததும் ஒரு கே’யை அடையாளப்படுத்தி விட முடியுமா?.... இந்த கேள்வி நிச்சயம் ஒருமுறையாவது உங்க மனசுக்குள்ள எழாமல் இருந்திருக்காது... அப்படி பார்த்ததும் கண்டுபிடிக்க முடிஞ்சுட்டா, இங்கே கோடிக்கணக்கான முதலீட்டில் தொடங்கியிருக்கிற டேட்டிங் வலைத்தளங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கும்... ஆமாங்க, பார்த்ததும் “இவர் கே” என்று அடையாளப்படுத்துவது என்பது இயலாத காரியம்... அதே நேரத்தில், அப்படி பார்க்கும் நபரை கொஞ்சம் நன்றாக “கவனித்து” பார்த்தால் ஓரளவு நம்மால் கண்டுபிடித்திட முடியும்... அது எப்படி?னு பின்னாடி பார்க்கலாம்... இப்போ, எதற்காக இந்த கேள்வி எனக்குள்ள எழுந்துச்சு?னு ஒரு சின்ன பிளாஷ்பேக்.... நண்பர் ஒருவரிடம் சில நாட்களுக்கு முன்னால் பேசியபோது, “விஜய், நான் வித்தியாசமா தெரியுறேனா?... பஸ்’ல போகும்போதும், வேற எங்கயாச்சும் வெளில போகும்போதும் கரெக்டா என்னை சில பசங்க அப்ரோச் பண்றாங்க... நான் கே’தான்னு அவங்களுக்கு எப்டி தெரிஞ்சிருக்கும்?.. என் நடை, பேச்சு, உடல் மொழி போன்றவற்றில் எதாச்சும் மாற்றம் தெரியுதா?” என்று வருத்தத்தோடு சொன்னார்....
அவருடைய பயத்துக்கு காரணம், மற்றவர்களைவிட ஏதோ ஒரு விஷயத்தில் தான் வித்தியாசப்பட்டிருப்பதாக அவர் நினைக்கிறார்... இது வெகு காலமாக அவருக்குள் இருக்குற, உறுத்திக்கொண்டு இருக்கிற ஒரு கேள்வி... அவருக்கு சந்தேகமெல்லாம் “தன் நடையில் பெண்மை தெரிகிறதா? பேசும்போது என்ன வித்தியாசம் தெரியுது? உடல் மொழியில் நளினம் தெரிகிறதா?” என்பவைதான்... எப்போதோ ஒருமுறை அவர் சிரிக்கும்போது அவர் நண்பர் “என்னடா  பொம்பள மாதிரி சிரிக்குற?” என்றாராம்... அன்றிலிருந்து சிரிப்பை கூட ரொம்ப கவனமாக கையாள்கிறார்.... இப்படி ஒவ்வொரு நிமிடமும் ஒருவித தயக்கத்தில், பயத்தில் மற்றவர்களோடு பழகுவதில் அவர் ரொம்பவே சிரமப்பட்டார்... நம்ம சமூகம் “ஆண் என்றால் இப்படித்தான் இருக்கணும், பெண் என்றால் இப்படித்தான் இருக்கணும்” என்று சில முட்டாள்த்தனமான வரையறைகளை வகுத்து வைத்துள்ளது... நம்ம சினிமா நாயகர்கள் கூட (நாளைய முதல்வர்கள்’னு கூட சொல்லலாம், நம்ம ஊர்லதான் எது? எந்த நேரத்துல நடக்குது?னு புரியவே மாட்டேங்குது) “போலிசாவே இருந்தாலும் நீ பொம்பள, தப்பே பண்ணாலும் அவன் ஆம்பள” என்று போலீசிடம் கூட ஆண்மை பற்றி பாடம் எடுக்கிறார்கள்.... சரி, நம்ம விஷயத்துக்கு வரேன்...
அப்படி பெண்களின் குணாதிசயமாக நம்மவர்கள் வரையறுத்துள்ள விஷயங்கள் ஆண்களிடம் காணப்பட்டால் அவன் வித்தியாசமாக பார்க்கப்படுகிறான்... ஆனால், நான் மேற்சொன்ன நண்பரிடத்தில் அத்தகைய எவ்விதமான பெண்மைக்குரிய குணாதிசயத்தையும் நான் பார்க்க முடியல... கே என்பவர் “பெண் தன்மை உடையவர்” என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது.... அந்த கருத்தின் அடிப்படையில்தான் அந்த நண்பரும் குழம்பியுள்ளார்... நிச்சயமா அது தவறான கருத்து....
நான் முன்பே சொன்னதைப்போல ஆண்மைக்கு உதாரணமாக இன்றைக்கும் உலகம் பேசும் “மாவீரன் அலெக்சாந்தர்” ஒரு கே, உலகையே மிரட்டிய ஹிட்லரையே பல நாட்கள் பயத்தால் பதறவைத்த ஹிட்லரின் நாஜிப்படையின் தளபதி “எர்னஸ்ட் ரோம்” ஒரு கே... இன்னும் எத்தனையோ நபர்கள் சிறிதும் பெண்தன்மை இல்லாமல் உலகில் கே நபர்களாக அறியப்பட்டவர்கள்... ஒரு மனிதனின் பாலீர்ப்புக்கும் அவன் உடல் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.... பெண் தன்மை உடைய பலர் ஸ்ட்ரைட் நபர்களாக இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.... அதனால், யாரும் உடல் மொழி, உடல் அமைப்பு ஆகியவற்றோடு தங்களின் பாலீர்ப்பை குழப்பிக்கொள்ள வேண்டாம்....
அடுத்து, பத்து நபர்களுக்கு மத்தியில் இருக்கும் கே’யை இன்னொரு கே’யால் ஓரளவு கண்டுபிடித்திட முடியும்... அது எப்படி?... “பாம்பின் கால் பாம்பறியும்” என்பதை போலத்தான் அதுவும்... உங்க மற்ற பத்து நண்பர்களோடு ஒரு பொது இடத்தில் நீங்க நிற்கிறீர்கள், அப்போது ஒரு கல்லூரி மாணவி உங்களை க்ராஸ் செய்து போகிறாள் என்றால், அந்த பத்து பேரில் உங்களை தவிர மற்ற ஒன்பது பேரின் பார்வையும் அந்த பெண்ணை நோக்கும்... அடுத்த சில நிமிடங்களில், நல்லா ஜம்முன்னு ஒரு பையன் அதே போல க்ராஸ் செய்கிறான் என்றால், அந்த பத்து பேரில் நீங்கள் மட்டும் அவனை உற்று பார்ப்பீர்கள்... அப்படி நீங்கள் பார்ப்பதை, உங்கள் நண்பர் பார்த்து உங்களிடம் அதுபற்றி கூட கேட்டிருக்க வாய்ப்புண்டு... உங்கள் பார்வைதான், உங்களை மற்றவர்களிடத்தில் வித்தியாசமாக காட்டும் ஒன்று...
விகடன் அட்டைப்படத்தில் ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்த ஆர்யாவை ஓரிரு நிமிடங்கள் நான் வெறித்து பார்த்ததையே என் நண்பன், “என்னடா ஆர்யாவை போய் இப்படி பார்த்துட்டு இருக்க?” என்று என்னை அதிசயமாக பார்த்தான்... அப்படி நம்மை அறியாமல் அவங்க மத்தியில நாம வித்தியாசப்பட்டிருப்போம்... அப்படியானால் அது தவறா?னு நீங்க நினைக்காதிங்க... இந்த சமூகத்தின் பார்வையில் நீங்களும் நானும் வித்தியாசப்பட்டிருப்பதை போல தெரியலாம், ஆனால் அது ஒரு மாய எண்ணம்.... நான் முன்பு சொன்னதை போல, “பெரும்பான்மையானவர்கள்” செய்றதுதான் சரி என்ற ஒரு முட்டாள்த்தனமான கருத்து நம் சமூகத்தில் வேரூன்றி புதைந்துவிட்டது.... அதை நம்மால் அவ்வளவு எளிதாக மாற்றிட முடியாது... அதற்காக நம்மை நாம் மாற்றிக்கொள்ளனும்னு அவசியம் இல்லை...
அவங்க பார்வையில இருக்குற குறைபாட்டிற்காக நாம் கவலைப்பட தேவையில்லை... மறைஞ்சு வாழ்றதை விட, தன்னை மறைத்து வாழ்வது ரொம்ப வேதனையான ஒன்று... நாமே நம்மை மற்றவர்களிடத்தில் வித்தியாசமாக உணர வேண்டாம்.... நீங்கள் இயல்பானவர் என்பதை நீங்கள் முதல்ல நம்புங்க... உங்களுக்குள் இருக்குற “வித்தியாசமாக தெரிகிற” விஷயங்களும் இயல்பானதுன்னு நம்புங்க... காலம் எல்லாத்துக்கும் ஒரு கெடு வைத்திருக்கும், நீங்க நம்புறதை இந்த உலகமும் நம்புற நாள் வரும்போது எல்லாம் சுபமாக முடியும்னு நம்புவோம்....
இப்படி இயற்கையான அடையாளங்கள் நமக்குள் இல்லாததால், மேற்குலக நாடுகளில் செயற்கையாக தங்களுக்கென சில அடையாளங்களை நம்ம மக்கள் உருவாக்கி இருந்தார்கள்... சமூகத்துக்காக பயந்து தங்களை மறைத்துக்கொன்டாலும், தம்மை ஒத்த நபர்களை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் உருவாக்கிய சில அடையாளங்கள் இன்றைக்கு பொதுவான சமூகத்தின் மத்தியில் ஒரு நாகரிக விஷயமாக மாறிவிட்டதுதான் ஆச்சரியம்...  குறிப்பிட்ட சில ஆபரணங்கள், ஆடைகள் அப்போதல்லாம் ஒருபால் ஈர்ப்பு நபர்களால் கடைகளில் "ஸ்டாக் இல்லை" என்ற அளவுக்கு விற்றுத்தீர்ந்தது... அந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறிப்பாக "பச்சை" நிறம் கே நபர்களின் அடையாளமாகவே மாறிப்போனது... பச்சை ஆடை அணிந்து சாலையில் சென்றால் அவன் "கே"தான் என்று பொதுவாகவே எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு உண்டான ஒரு "பசுமை புரட்சி" அப்போ நடந்தது....  அதே போல "சியூட்" என்ற ஒருவகை ஷூ கே அடையாளமாக பார்க்கப்பட்டது... நம்ம ஊர்ல கண்ணை பார்த்து கண்டுபிடிக்க நான் சொன்னதைப்போல அவங்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை, கீழே குனிந்து காலில் "சியூட்" ஷூவை பார்த்தால் போதும், "ஹாய் மச்சி..."னு பேச ஆரமிச்சிடுவாங்க....
இன்றைக்கு நம்ம ஊரில் நாகரிக அடையாளமாக பார்க்கப்படுற தலை முடிக்கு கலரிங் செய்வது, ஒற்றை காதில் தோடு போடுவது, இறுக்கமான பேன்ட் அணிவது,ஒட்ட முடிவெட்டுவது போன்ற விஷயங்கள் எல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கே நபர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தங்களுக்கான அடையாளங்கள்.... ஆரம்பத்தில் கே ஆண்கள் தங்கள் அடையாளங்களாக உருவாக்கிய பல விஷயங்கள் இன்று பல தளத்திலும் பலராலும் பயன்படுத்தப்படும் அம்சங்களாக மாறிவிட்டது...... ஒருபால் ஈர்ப்பை தவறென்று சொல்லும் பலரும், இன்று ஒருபால் ஈர்ப்பாளர்கள் தங்கள் பாலின ஈர்ப்பு அடையாளத்தை வெளிக்காட்ட உருவாக்கிய நாகரிகத்தைதான் பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மையை அறியாமலேயே அவற்றை பயன்படுத்துகிறார்கள்.... ஒருபால் ஈர்ப்பின் அடையாளத்தை விரும்பி ஏற்கும் மக்கள், அவர்களையும் ஏற்கும் நாள்தான் இனி உருவாக வேண்டும்....

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. enakum antha AANANTHA VIKATAN anubavum undu vijay anna.. college libraryla SPORTS nu oru magazine varudhu.. adhula neraya players photos potrupanga.. nan antha magazine enga irukunu thedi eduthu padipen.. antha magazine-oda center pagela players-oda flow-up picture irukum.. adha yarukum theriyama kilichitu vanthuruven.. idhai romba nala en class mate and library friend note panni kettutanga..

    ReplyDelete
  3. ஆசை உள்ளவர்கள் அழையுங்கள்
    8668004914

    ReplyDelete