Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 21 August 2013

அதிர்ச்சியூட்டும் "Call GAY Network"....! உஷார்!!!

சமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...!” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில விஷயங்களை தெரிந்துகொண்டு எழுதுவது என் வழக்கம்.... அப்படி இந்த சிறுகதைக்காக நான் call gays பற்றி தெரிந்துகொள்ள சில முயற்சிகளை செய்தேன்... gigolo என்று சொல்லப்படும் call guys பற்றி நம் சமூகம் நிறைய விஷயங்களை அறிந்திருக்கும்.... ஆனால் அவர்களுள் உட்பிரிவான call gays பற்றி அவ்வளவாக பலர் அறிந்திருக்க மாட்டார்கள்... “கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது” என்று சொல்வார்கள், அப்படித்தான் கதைக்காக நான் தேடப்போன விஷயம் நிறைய அதிர்ச்சிகளை பதிலாக கொடுத்தது....
யாரையும் சார்ந்திடாமல், இணையம் வழியாக இங்கு வாடிக்கையாளர்களை கவரும் கால் பாய்ஸ்’கள் பற்றித்தான் நாம் அதிகம் அறிந்திருப்போம்.... பெரும்பாலும் அப்படித்தான் இருப்பார்கள்....
ஆனால் இங்கே இளைஞர்களின் இரவுகளை தீர்மானிப்பதில் மூன்றாம் நபர்கள் முக்கிய பங்கை ஆற்றுகிறார்கள் என்பதுதான் நான் அறிந்த அந்த  அதிர்ச்சி....  ஒரு நெட்வொர்க்’ஆக செயல்படும் இந்த பாதாள உலகம் பற்றித்தான் இப்போ நான் சொல்லப்போறேன்....
“கிராமப்புறத்து இளைஞன் ஒருவன் கல்லூரி படிப்பிற்காக சிங்கார சென்னைக்கு வருகிறான்... சில ஒருபால் ஈர்ப்பு தொடர்புகள் மூலம் “male escorts” தொடர்பான ஒரு நிறுவனத்தில் பகுதி நேர வேலையில் சேர்கிறான்... நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சகல வசதியும் பொருந்திய வீட்டில், இன்னும் சில இளைஞர்களோடு தங்கவைக்கப்படுகிறான்....
அவன் இரவுகள் யாருடன் கழிய வேண்டும் என்பதை அந்த நிறுவனத்தின் நிர்வாகி நிர்ணயிக்கிறான்.... மூன்று வேளையும் தரமான உணவு,  தினமும் பேட்டா, வரும் வாடிக்கையாளர்களை பொருத்து அன்றைய நாளைய ஊதியம்.... ஆரம்பத்தில் பணத்தை பார்த்ததும், சந்தோஷமாக அந்த வாழ்க்கையை கழிக்கிறான்.... சில நாட்கள் கழித்து, பணம் சலித்துப்போய் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கிறான் அந்த இளைஞன்.... தன் விருப்பத்தை அந்த நிர்வாகியிடமும் தெரிவிக்கிறான்.... ஆனால், இனி அவனால் அந்த நிறுவனத்தை விட்டோ, அந்த தொழிலை விட்டு வெளியாக முடியாத அளவிற்கான மிரட்டல்கள் உருவாகிறது.... வேறு வழியின்றி, அடுத்தடுத்த இரவுகளை நெருப்பின் மீது படுத்து கழிக்கிறான் அந்த இளைஞன்.....” இதுதான் அந்த நெட்வொர்க்கின் மூலம் பெரும்பாலும் நடக்கின்ற நிகழ்வு.....
“உனக்கு என்ன தேவையோ, அதை நாங்க நிறைவேற்றுகிறோம்... ஆனால், எங்களை விட்டு நீ விலக முடியாது” இதுதான் எழுதப்படாத அந்த நிறுவனத்தின் கொள்கை விளக்கம்...
பெரும்பாலும் “male escorts wanted” விளம்பரங்கள் இத்தகைய  ஆபத்துகளை நோக்கித்தான் நம் இளைஞர்களை அழைத்து செல்கிறது.... அப்படிப்பட்ட நிறுவனங்களின் முக்கிய இலக்கே, பொறியியல் முடித்துவிட்டு வேலைக்காக சென்னையில் குடியேறும் இளைஞர்கள் தான்... ஆள் பார்க்க கொஞ்சம் அழகாக இருந்தால், அவனை அந்த நெட்வொர்க்கில் சேர்க்க பயங்கரமான மூளை சலவை செய்யப்படும்... அந்த நிறுவனத்தில் இணைந்தபிறகு, இன்னொரு ஆளை இணைத்தால் அதன் மூலம் தரகுத்தொகை, சேர்த்தவனுக்கு கொடுக்கப்படும்.... அதனால் அப்படி இளைஞர்களை சேர்க்கும் ஒரு தரகர் கூட்டத்தையே பல இடங்களிலும் காணமுடிகிறது...
அப்படிப்பட்ட ஒரு இடத்துக்கு சென்று “பணம் கொடுத்து இன்பம் அடைந்த” ஒரு நண்பரின் அனுபவத்தை அவர் வாயிலாகவே சொல்கிறேன்....
“நண்பர் மூலமா எனக்கு அந்த கால் பாய் காண்டாக்ட் நம்பர் கிடச்சுது..... போன் செஞ்சவுடன், அவங்க என்னைய ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து நிற்க சொன்னாங்க... நானும் போனேன், என்னோட ஆடை அடையாளங்களை கேட்டுவிட்டு ஐந்து நிமிடங்கள் எங்கோ நின்று என்னை கண்காணித்து இருக்கிறார்கள்.... பின்பு ஐந்து நிமிடம் கழித்து, ஒரு இருசக்கர வண்டியில் ஹெல்மட் அணிந்த ஆசாமி ஒருவர் என் அருகில் வந்து வண்டியை நிறுத்தி, என் பெயர் சொல்லி வண்டியில் ஏறுமாறு சொன்னார்..... நானும் ஏறினேன், சில பல வளைவுகளை தாண்டி நாங்கள் நின்ற இடம் என்னால் அடையாளம் காணமுடியாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பு.... அங்கு மூன்றாம் தளத்தில், ஒரு அழகான சொகுசு வீட்டிற்குள் நுழைந்தோம்... உள்ளே நான்கைந்து கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.... அவர்களுள் ஒருவரை என்னை தேர்ந்தெடுக்க சொன்னார்கள்.... தேர்ந்தெடுத்த இளைஞனுடன் என்னை ஒரு தனி அறைக்குள் அழைத்து சென்றனர்.....
அந்த இளைஞனுடன் நான் இருந்த அந்த ஒரு மணி நேரத்தில், நான் நிறைய பேசிக்கொண்டே இருந்தேன்... அவனிடமிருந்து வந்தது ஒரே வார்த்தைதான்.... எல்லாம் முடிந்த பிறகு ‘நேரம் ஆச்சு சார்’ என்பதுதான் அந்த வார்த்தை.... அவன் நிறைய மிரட்டப்பட்டு இருக்கிறான் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது....”.
இப்படி இன்னும் எத்தனை அடுக்குமாடி குடியிருப்புகளில் எத்தனை எத்தனை நபர்கள் தங்கள் வாழ்வை தொலைத்து நிற்கிறார்களோ? தெரியவில்லை...... ஆனால், இப்படி “male escorts required” விளம்பரங்கள் மூலம் ஏமாந்து போனவர்களும் நிறைய உண்டு, அவர்களை பற்றியும் நான் இங்கு சொல்லி ஆகணும்..... சமீப காலங்களில் அப்படிப்பட்ட விளம்பரங்கள் நிறைய தளங்களிலும், நாளிதழ்களிலும் பார்க்க முடிகிறது.... அதை நம்பி அந்த நிறுவனத்தில் தங்களை இணைத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ விரும்பும் ஆண்கள், அதில் முன்பணமாக கட்ட சொல்லப்பட்ட சில ஆயிரம் பணத்தை இழந்தோதோடு தப்பித்தவர்களும் நிறைய.... இப்படி ஏமாந்தவர்கள், இத்தகைய நபர்களிடம் ஏமாந்ததை வெளியில் சொல்லவும் முடியாமல், பணத்தை இழந்ததை எண்ணி வெளிப்படையாக வருத்தப்படவும் முடியாமலும் தவிப்பது நித்தமும் நிறைய நடக்கிறது..... சில நிறுவனங்கள் முன்பணம் வாங்குவதில்லை என்று விளம்பரம் கொடுப்பதுண்டு... அத்தகைய நிறுவனங்கள், இளைஞர்களை பயன்படுத்திக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதும் நடக்கிறது....
அடுத்ததாக இந்த இளைஞர்களை வலை விரிக்கும் “மசாஜ் பார்லர்கள்” பற்றி சொல்லியே ஆகவேண்டும்.... “male to male massage parlour” என்ற விளம்பரத்தை தாங்கி நிற்கும் பெரும்பாலான மசாஜ் பார்லர்கள், படுப்பதற்கு படுக்கை விரிப்புகளாகத்தான் செயல்படுகின்றன.... அங்கு வரும் வாடிக்கையாளர்களை விரல்களால் பதம் பார்த்து, படுக்கைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது அந்த கடைகளின் எழுதப்படாத விதி.... அதனால், உடலுக்கு மசாஜ் செய்வதாக சொல்லி, கிளர்ச்சியூட்டி அவர்களை வழிக்கு கொண்டு வர வைப்பதற்கு அவர்கள் பழக்கப்பட்டு இருப்பார்கள்...
இங்கும் பணத்துக்கு விலை போன இளைஞர்கள் நித்தமும் சீரழிந்து கொண்டு நிற்பதை காண முடிகிறது.....
தத்தமது ஊரை பொறுத்தவரையிலும், பெற்றோரை பொறுத்தவரையிலும் “எம்புள்ள மெட்ராஸ்’ல பெரிய கம்பெனில வேலை பாக்குறான்... கை நிறைய சம்பாதிக்கிறான்” என்று நம்பப்படுகிறது.... ஆனால், படித்த படிப்புகளை மறந்துவிட்டு படுத்தே சம்பாதிக்கும் கொடுமைதான் இங்கே நடக்கிறது....
ஒவ்வொரு நாளும் ;பணத்து ஆசையை காட்டி, இதைப்போன்ற எழமுடியாத படுகுழிகளுக்குள் விழுந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.... அதே நேரத்தில் அப்படி சிக்கும் நபர்களின் மாத வருமானத்தை கேட்டால், பல ஐடி இளைஞர்களே தலை சுற்றி விழுந்துவிடுவார்கள்.... அந்த அளவுக்கு பணம் கொழிக்கும் தொழிலாக இது நடக்கிறது.... இதில் இளைஞர்களிடம் ரொட்டி துண்டுகளை போட்டு, கோடிகளை அள்ளும் முதலைகள் செவ்வனே சிறப்பான வாழ்வை வாழ்கிறார்கள்....
ஒருபால் ஈர்ப்பையே இன்னும் அங்கீகரிக்காத நம் நாட்டில், இப்படி ஒருபால் ஈர்ப்பு காரணத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலான சட்டம் மட்டும் இருக்கவா போகிறது?... இதைப்பற்றி நம் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவே இன்னும் பல ஆண்டுகள் ஆகிடும், அதன்பின்னர்தான்  இதில் பாதிப்புக்கு இழப்பீடு பற்றி யோசிக்கவே தொடங்குவார்கள்.... அதுவரை, நம் நாட்டின் எதிர்கால தூண்கள், விரிசல் விழுந்த மொட்டை சுவர்களாவதை நாம் தலைகீழாக நின்றாலும் தவிர்க்க முடியாது.....

26 comments:

  1. அதிர்ச்சியூட்டும் உண்மை விஜய்.... அன்புடன் திருப்பூர் பாபு

    ReplyDelete
    Replies
    1. கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி பாபு...

      Delete
  2. ரொம்ப அதிர்ச்சியாய் இருக்கிறது அண்ணா.. இப்படியும் மனிதர்களா? வெளியே தன்பாலீர்ப்பைக் கேவலம், பாவம் என்றெல்லாம் முட்டாள்தனமான வீரவசனங்கள் பேசிவிட்டு, கொல்லைப்புறத்தில் இப்படிப் பிழைப்பு நடத்துகிறார்கள். தன் உடலை வைத்து பணம் சம்பாதிப்பதே பாவம். இப்படி அடுத்தவன் உடலை விற்றுப் பணம் சம்பாதிப்பவன் மிகவும் கேவலமான ஒரு ஜென்மம். இவர்களுக்கும் புதைத்த பிணத்தைத் தோண்டித் தின்பவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அதிர்ச்சிதான் தம்பி... ஆனால் உண்மை.... இந்த மனிதத்தன்மையற்ற மிருகங்களை தண்டிக்க சட்டத்தில் கூட வழியில்லை.... என்றைக்கு இந்நிலை மாறுமோ!

      Delete
  3. the true fact vijay
    thanks to share it and aware about the escorts

    ReplyDelete
  4. இந்த பதிவு இன்றய இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கை விக்கி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பா... நிச்சயம் இதன்மூலம் விழிப்புணர்வு அடைவார்கள் என நம்புகிறேன்...

      Delete
  5. இந்த பதிவு இன்றய இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கை விக்கி.

    ReplyDelete
  6. It is really painful to read.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலி புரிகிறது நண்பா..... இந்த வலிகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்? என்பதுதான் தெரியவில்லை...

      Delete
  7. நம்மில் பலருக்கும் தெரியும் மிக பிரபலமான "கே டேட்டிங்" தளத்திலேயே இது போன்ற "Male Escorts", "Male Massage Parlor" என்று பல விளம்பரங்களைப் பார்க்கலாம்! எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் ஒருமுறை இது போன்ற ஒரு இடத்திற்கு சென்று அங்கு PR இல் சாதாரணமாக நட்பு, காதல் தேடுகிறேன் என்று சொல்லும் பலர் "தொழில்" செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்!அதிலும் நன்றாக படித்துவிட்டு, நல்ல வேலையில் இருக்கும் சிலர் கூட இதை செய்து வருகின்றனர் போலும்!

    எனக்கு அந்த செய்தியில் உண்மையிலேயே வலி தந்த விடயம்- என்னை சில மாதங்கள் "காதல்" என்ற வார்த்தை சொல்லி என்னை அடைய நினைத்து நேசிப்பது போல் ஏமாற்றிய ஒருவன் மற்றும் "திருமணம்" எட்ன்றே என்னை என் பதின்வயதில் ஏமாற்றிய ஒருவன் என்று இருவரையும் அங்கு அவர் பார்த்ததாக சொன்னது தான்!

    அதிர்ச்சி!ஏமாற்றம்!வலி!

    நம் காதல் உணர்வுகளுக்கே இங்கு வடிகாலும் இல்லை; அதை புரிந்து கொள்ள யாராலும் முடியவும் இல்லை! இந்த கொடுமையை நாம் யாரிடம் பொய் சொல்லி அழுவது!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது முற்றிலும் சரி நண்பா.... அந்த இணைப்பில் இளைஞர்களை இணைக்க ப்ரோக்கர்'கள் படு தீவிரமான வேலைகளில் ஈடுபடுறாங்க... கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...

      Delete
    2. You're right Chandran. I met my first love in PR only. After he made good money from me he showed his real face and even threatened me once that he will tell about me to my family; the funniest and stupidest of all, I have never met him in person till now. all chatting, calls only.

      It all happened in my early 20s. At-least I don't trust anyone like I did anymore in life, he taught me that. I still think it was my blunder to trust someone like that.

      Delete
  8. Even i chatted with those guys and agency to know about them in PR only.

    you know
    agencies having mostly school,college students and model .

    they said their having price Rance from 1k to 25k per hour .mostly in Chennai Bangalore Mumbai and Delhi

    i worrying where is going on..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பா... இதையல்லாம் கேட்டப்போ எனக்கும் பயமாகத்தான் இருந்துச்சு.... இது எங்கு போய் முடியுமோ?னு தெரியல....

      Delete
  9. இது நமது சமுகத்தில் நடக்கிறது என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் பலவேறு மாறுதலை சந்தித்து கொண்டு இருக்கும் இந்த சுழலில் எதுவும் சத்தியமே என்று என்னவே தோன்றுகிறது. இதில் அறியாமலும் எதோ ஒரு சுழலிலும் சென்று சேர்ந்து பின்னர் வேதனை ஒன்றையே காண்பவர்களை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. இதை போன்ற தகவலை சேகரிக்க செல்லும் போது நீங்களும் கவனமாக இருக்கவும். அவர்களால் எந்த ஒரு தொல்லையிலும் சிக்ககூடாதுதல்லவா.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா... உண்மைதான்... இந்த வலை இணைப்பு பலமான பின்புலனை கொண்டது... பல தகவல்கள் சில பத்திரிகை நண்பர்கள் மூலமும், ஆவணப்பட இயக்குனர்கள் மூலமும், கால் பாய்'கள் மூலமும்தான் தெரிந்துகொண்டேன்.... இன்னும் தோண்டினால் நிறைய அதிர்ச்சிகள் தெரிய வரும்....

      Delete
  10. எனக்கு மும்பை,கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகள் நினைவுக்கு வருகிறது.ஆண்களுக்கும் தயாராகி விட்டது. சென்னையிலும் கண்ணியமாக வேலை செய்ய விரும்பாத இளைகர்கள் , திருநங்கை என்ற போர்வையில், குறி அறுப்பு செய்து கொண்டு ஆடவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கூடமாக மாறி உண்மையான திருநங்கை சமூகத்திற்கு களங்கத்தை தேடி தருகிறார்கள். காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  11. I know that the climax is hurtful, but it's true.

    I have been a call boy for one night, when i had no job, no money to eat. That night was the worst night of my life. He was a old guy. Picked me up in car and took me to a lodge. That was the first time i went to a lodge. I was 19 at that time. Finished UG and was wokring in a small BPO for 3000rs. This all happened in 2011.Next morning he dropped me in bus stand and gave me 500rs.

    My second experience was with another guy.

    That second guy was a middle-aged guy in the same Coimbatore, who said that he would help with my job. But all that he did was, he came in his car. Take me somewhere alone and have sex with me inside of the car.

    No matter what time it is. He will call me at night 2 o clock. I had to go to meet him, because of money. But all that he gave me was 40rs, which helped me for that night food. that's all.

    Some people prefer to be call boys. But some people are chosen to be call boys, who are young and poorer. :'-(

    ReplyDelete
  12. Sorry to hear that Pal, hope your have a better life now...

    ReplyDelete
  13. சார் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எதற்கெல்லாம் யார் காரணம் எது யார் செய்த தவறு அவனையே நம்பி இருக்கும் அவன் குடும்பம் தன் மகன் நம் வறுமை போக்குவான் என்று வறுமையை அவன்மேல் திணிக்கிறார்கள் அவனோ தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்டி முடியு எடுக்கிறான் அவன் சிற்றலிந்து போக அவன் பெற்றோர் மற்றும் கரணம் இல்லை இந்த அரசும்தான் கரணம் உண்மைதான!!!
    நான் தவறாக பேசிருந்தால் மண்ணிக்கையும் சார்.

    ReplyDelete
  14. இந்தியா பொறுத்தவை ஒரு மனிதனிடம் பணம் இல்லை என்றால் அவனை மதிப்பதில்லை அதுவும் அவன் நல்லவனாக இருந்து விட்டால் அவனுக்கு இங்கு இடம் இல்லை நம் மக்கள் மீறி அவன் வாழ்த்தை அவனுக்கு பெயர்...
    பிழைக்க தெரியாதவன்,ஏமாளி,கோல்,பதிப்புஇன்மை,இப்டி பெயர் வைக்கிறார்கள் இவ் உலகில் காசு இல்லை என்றால் அவன் வள தக்காளி இல்லாதவன் என்று நினைக்கிறார்கள் அப்போ அவன் தவர் செய்வது நடக்கிறது

    ReplyDelete
  15. இந்தியா பொறுத்தவை ஒரு மனிதனிடம் பணம் இல்லை என்றால் அவனை மதிப்பதில்லை அதுவும் அவன் நல்லவனாக இருந்து விட்டால் அவனுக்கு இங்கு இடம் இல்லை நம் மக்கள் மீறி அவன் வாழ்த்தை அவனுக்கு பெயர்...
    பிழைக்க தெரியாதவன்,ஏமாளி,கோல்,பதிப்புஇன்மை,இப்டி பெயர் வைக்கிறார்கள் இவ் உலகில் காசு இல்லை என்றால் அவன் வள தக்காளி இல்லாதவன் என்று நினைக்கிறார்கள் அப்போ அவன் தவர் செய்வது நடக்கிறது

    ReplyDelete
  16. சார் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எதற்கெல்லாம் யார் காரணம் எது யார் செய்த தவறு அவனையே நம்பி இருக்கும் அவன் குடும்பம் தன் மகன் நம் வறுமை போக்குவான் என்று வறுமையை அவன்மேல் திணிக்கிறார்கள் அவனோ தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்டி முடியு எடுக்கிறான் அவன் சிற்றலிந்து போக அவன் பெற்றோர் மற்றும் கரணம் இல்லை இந்த அரசும்தான் கரணம் உண்மைதான!!!
    நான் தவறாக பேசிருந்தால் மண்ணிக்கையும் சார்.

    ReplyDelete