Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 4 October 2013

உண்மையை திரிக்கும் ஊடக தர்மம் - "பொய்மையே வெல்லும்!"

கே காதலர்கள் தற்கொலை செய்ததை பற்றிய என் முந்தைய கட்டுரையை படித்தபின், நண்பர் கோபி அவர்கள் இரண்டு செய்தி கோப்புகளை எனக்கு அனுப்பியிருந்தார்.... லெஸ்பியன் பெண்கள் பற்றி வெகுஜன பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அவை.... முதலில், அந்த இரண்டு நிகழ்வுகள் பற்றி ஒரு குட்டி முன்னோட்டத்தை பார்த்திடலாம்....
நிகழ்வு 1:
கடந்த ஆகஸ்ட் மாதம் ஓசூரில் நிகழ்ந்த சுவாதி, கௌசல்யா என்ற இரண்டு பெண்களின் தற்கொலை பற்றிய செய்தி... சுவாதி கழுத்தில் இறப்பதற்கு முன்பு கௌசல்யா தாலி கட்டியுள்ளார்... இரண்டு உடல்களும் கட்டிப்பிடிக்கப்பட்டிருந்த நிலைமையில் போலிசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
நிகழ்வு 2:
இரண்டு வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த நிகழ்வு இது... திருமணமான இரண்டு பெண்களும் கணவர்களுக்கு தெரியாமல் லெஸ்பியன் உறவு கொண்டிருந்தனர்... இரண்டு பெண்களின் குடும்பங்களுக்கும் அந்த விஷயம் தெரியவர, பிரச்சினைகள் பெரிதானது.... பிரச்சினைகள் பெரிதாக, வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருச்செந்தூரில் குடியேறினர்... பின்பு இவர்களை காவல்துறை மூலம் கண்டுபிடித்த குடும்பத்தினர், கதறலோடு பிரிக்கப்பட்ட இருவரும் அவரவர் உறவினர்களுடன் அனுப்பப்பட்டனர்....
இரண்டு நிகழ்வுகளையும் வெளியிட்ட ஊடகங்கள் வெகுஜன மக்களால் விரும்பி படிக்கப்படும் பத்திரிகைகள்...
அந்த செய்திகளை பத்திரிகைகள் எந்த கோணத்தில் அணுகி இருக்கிறார்கள் என்ற ஒரு மூடத்தனமான புரிதலை பற்றி இப்போ பார்ப்போம்...
முதல் நிகழ்வில், பக்கத்து வீட்டு பெண்ணை மயக்கி, உறவு வைத்திருந்தாராம் கௌசல்யா...
என்ன முட்டாள்த்தனமான வாதம் இது?... ஒருவரை மயக்கி லெஸ்பியன் உறவில் ஈடுபட வைக்க முடியுமா?... கட்டாயப்படுத்தியோ மயக்கியோ யாரையும் அவர்களின் பாலீர்ப்புக்கு எதிரான உறவில் ஈடுபடுத்த முடியாது..... இந்த பத்திரிகைகளுக்கு ஒருபால் ஈர்ப்பை பற்றிய அடிப்படை புரிதல் இருக்கிறதா? என்பதே எனக்கு புரியவில்லை...
இரண்டாம் நிகழ்வில் திருச்செந்தூர் தப்பி சென்ற இரண்டு பெண்களையும் காவல்துறை, உறவினர்களுடன் மீண்டும் அனுப்பி வைத்தார்களாம்.... எங்கேங்க போச்சு உங்க முற்போக்குத்தனம்?.... “எங்களை பிரித்தால் தற்கொலை செய்துகொள்வோம்”னு சொன்ன பெண்களை கட்டாயப்படுத்தி பிரித்து வைத்த அந்த சம்பவத்துக்கு, ஒரு சம்பிரதாய எதிர்ப்பை கூட உங்கள் பேனா காட்டவில்லையே?.... அப்படின்னா, அந்த பெண்கள் இறந்தாலும் பரவாயில்லை, கலாச்சாரம் முக்கியம்னு சொல்ற அந்த பிற்போக்கு எண்ணத்துக்கு உங்கள் பேனா சாமரம் வீசுதா?..... இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போ அந்த பெண்களின் நிலையை பாலோ அப் கூட நீங்க செய்யவில்லை.... அந்த பெண்கள் இறந்தால் உங்களுக்கென்ன இழப்பா ஏற்பட போகிறது?... மூடத்தனமான கலாச்சார பின்னணியை பத்திரமாக பிடித்துவைத்துக்கொண்டு, உயிர்களை பலியாக்கும் பிற்போக்குத்தனத்தை ஏற்பதில்தான் உங்கள் நடுநிலைமை என்னை வியக்க வைக்கிறது!...
 இரண்டு நிகழ்வுகளிலுமே உறவினர்களால் மறைக்க முடியாதபடி, பாலீர்ப்பு காரணம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது.... இறக்கும் முன் எழுதப்பட்ட கடிதம், கழுத்தில் கட்டப்பட்ட தாலி போன்ற விஷயங்களால் முதல் சம்பவத்தை வேறு காரணம் கூறி சுற்றத்தால் மறைக்கமுடியவில்லை..... அதேபோல இரண்டாவது நிகழ்விலும், அந்த இரண்டு பெண்களின் துணிச்சலால், பொய்யான காரணத்தை  போர்த்தி, அந்த சம்பவத்தை மற்றவர்களால் மறைக்கமுடியவில்லை.... ஊடகமும் அதிகம் அலட்டிக்கொள்ள தேவை இல்லாத ஒரே காரணம் தான், இந்த செய்திகள் கூட லெஸ்பியன் அடையாளத்தோடு வெளியிடப்பட்டு இருக்கிறது...
‘ஒருபக்கம் பாலீர்ப்பு மரணங்கள் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிடவில்லையே’ என்கிற வருத்தம் மேலோங்கினாலும், மறுபக்கம் ‘ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பாலீர்ப்பு பற்றிய செய்திகளை வெளியிடாமல் இருப்பதே நல்லது’ என்றுதான் இப்படிப்பட்ட செய்திகளை படிக்கும்போது நமக்கு எண்ணத்தோன்றுகிறது....
எதிர்பால் காதல் ஈர்ப்புகளை சந்தனம் போலவும், ஒருபால் ஈர்ப்பு காதலை சாக்கடை போலவும் கருதும் உங்களின் இரட்டை நாக்கு தான் எங்களை இன்னும் அதிக அச்சத்திற்கு உள்ளாக்குகிறது.... உங்களை அறிவியலுக்கு முரணாக பேச சொல்லவில்லை... அறிவியலை அறிந்துகொண்டு எழுதத்தொடங்கத்தான் சொல்கிறோம்.... எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கத்தான் நாங்கள் கேட்கிறோம்....
பெண்ணிய உரிமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதியே களைப்பாகும் ஊடக பெண்ணியவாதிகளும் கூட, லெஸ்பியன் உறவை பற்றி வாய் திறக்க மறந்துவிட்டார்கள்... “பெண்ணுக்கு உரிமை வேணும்”னு கேட்கும் நீங்கள், அவங்களோட பாலீர்ப்பு உரிமையையும் கொஞ்சம் மதிப்பது தப்பில்லை....
மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் அப்பட்டமாக வெளியில் தெரிந்த லெஸ்பியன் உறவுகள்... இன்னும் எத்தனையோ சொல்லப்படாத, வெளிப்படாத பெண்கள் பாலீர்ப்பு புறக்கணிப்பால் இறந்துகொண்டும், இருந்தாலும் ஒவ்வொரு நாளும் உள்ளத்தால் இறந்துகொண்டும் உங்கள் பக்கத்து வீட்டிலும், எதிர்வீட்டிலும் கூட இருக்கலாம்... அவர்களின் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டியது நம் கடமைதான்....
ஊடக புலிகளுக்கு இறுதியாக ஒரு கோரிக்கை.... “உண்மையை எழுதவில்லை என்றால் கூட பரவாயில்லை.... தயவுசெய்து, உண்மையை திரித்து மட்டும் எழுதிவிடாதீர்கள்... அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய சேவைதான்!.

No comments:

Post a Comment