“ஹலோ வணக்கம்.... இது வாசகர் வாய்ஸ் நிகழ்ச்சி... நீங்க
யாரு? எங்கிருந்து பேசுறீங்க?”
“வணக்கம்... நான் சென்னைலேந்து சதீஷ் பேசுறேன்...”
“சொல்லுங்க சதீஷ்... நீங்க கேக்க வேண்டிய கேள்வி என்ன?”
“நான் ஒரு கே... இதை நான் புரிஞ்சுக்கவே பல வருஷம்
ஆகிடுச்சு... இதிலிருந்து நான் மீள முடியுமா?”
“சதீஷ்.... நீங்க ஒரு விஷயத்த தெளிவா புரிஞ்சுக்கணும்...
பாலீர்ப்பு என்பது......” இப்படி தொடரும் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளரின் பேச்சு
அறிவியலை அலசி, கலாச்சாரத்தை கலக்கி தெளிவான ஒரு விளக்கத்தை கொடுக்கிறது கேள்வியை
கேட்டவருக்கு... என்னங்க?... நல்ல கற்பனை’னு சொல்றீங்களா?.... இல்லங்க, கற்பனைக்கே
எட்டாத இந்த விஷயத்தை, நிஜத்தில் நிகழ்த்தி காட்டி இருக்கிறது “Q Radio” நிஜமாவே இது செம்ம ஹாட்டுதான் மச்சி....
இந்தியாவில் முதல்முறையாக பாலின சிறுபான்மையினருக்கான
பண்பலையை உருவாக்கி இருக்கிறது பிரபல இணைய பண்பலை நிறுவனமான Radiowalla.in... நம்ம
பெங்களூரிலிருந்து தன் ஒலிபரப்பை தொடங்கிவிட்ட Q Radio, தொடங்கப்பட்ட
சில நாட்களுக்குள்ளே பலமான வரவேற்பை பெற்றுள்ளது...
“சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்குற பாலின மற்றும்
பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான முக்கியத்துவங்கள் பொதுத்தள ஊடகங்களில்
மறுக்கப்படுவது வாடிக்கையான ஒன்று.... அவங்களுக்காகவே, அவங்களை ஒருங்கிணைத்து பேச
வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த பண்பலை.. 2009-ம் ஆண்டு எங்கள்
வானொலியின் டெல்லி நிகழ்ச்சியில் இந்த சமுதாயத்தினர் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை
நான் தொகுத்து வழங்கினேன். அன்றிரவு முதல் அவர்கள் மத்தியில் எனக்கு சிறப்பான
வரவேற்பு கிடைத்தது. ஒரு நிகழ்ச்சியிலேயே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் போது,
இவர்களுக்கு என தனியாக ஒரு சேனலை தொடங்கினால் என்ன ? என சிந்தித்தேன். அது இப்போதுதான் செயல் வடிவம் பெற்றுள்ளது” என்று இந்த
முயற்சியின் மூளையாக செயல்படும் அனில் ஸ்ரீவத்சா கூறுகிறார்...
ஆனாலும், இதை பொதுத்தள மக்களும் கேட்கும் விதமாக,
அவங்களும் பாலீர்ப்பு பற்றி புரிந்துகொள்ளும் விதமாகவே நிகழ்ச்சிகள்
வடிவமைக்கப்பட்டுள்ளது.... 24*7 என்று ஓய்வில்லாமல் ஒலித்துக்கொண்டிருக்கும்
இந்த பண்பலை, தற்போதய சூழலில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும், கொஞ்சம் ஹிந்தியிலும்
நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.... மருத்துவ குறிப்புகள், நேயர் விருப்ப பாடல்கள், பிரபலங்களுடனான சந்திப்பு,
சமூக ஆர்வலர்களின் நேர்காணல்கள், அரட்டை வழியில் விழிப்புணர்வு போன்று ஒவ்வொரு
நிகழ்ச்சியும் விதவிதமான நிறம், வேறுபட்ட தரம்....
காலை முதல் இரவு வரை பாடம் நடத்துவதை போல, நிகழ்ச்சிகளை
ஒலிபரப்பி, கேட்பவர்களை சலிப்பாக்காமல், நிறைய பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை
இணைத்துள்ளார்கள்... சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை அழைத்து, அவர்கள்
மத்தியில் பாலீர்ப்பு புறக்கணிப்பு பற்றி புரியவைக்கிறார்கள்... ஹோமொபோபிக்
சமூகத்தால் பாதிக்கப்பட்ட, வன்முறைக்கு ஆளான ஒருபால் ஈர்ப்பினரை அமரவைத்து, பேச
செய்து அந்த வலியை எல்லோரையும் உணர வைக்கிறார்கள்.... அப்படி, லெஸ்பியன் ஒருவர்
தன் பாலீர்ப்புக்காக மருத்துவர் பரிந்துரைத்த “ஷாக் ட்ரீட்மென்ட்” பற்றி சொல்லி
அதிரவைத்தார்....
இப்படி நிறைய ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான உண்மைகளை
போட்டுடைத்து, ஒருபால் ஈர்ப்பினரின் இருப்பை இந்திய மக்களுக்கு உணர்த்துவதில்
நிச்சயம் இந்த பண்பலை மிகப்பெரிய பங்களிக்கிறது என்று சொன்னால், அது மிகையில்லை...
சமீபத்தில் நடந்த குஜராத் ஒருபால் ஈர்ப்பு பேரணியை, நேரடி
ஒலிபரப்பு செய்து ஆச்சரியப்படுத்தினர்.... இப்படி இன்னும் நிறைய விழிப்புணர்வு
ஆக்கங்களை செய்து, ஊடகங்கள் மத்தியில் பாலீர்ப்பை கொண்டுசேர்க்கும் பணியில் இந்த
பண்பலை பயணிக்க வாழ்த்துவோம்..... கேளுங்க... கேளுங்க.... கேட்டுகிட்டே
இருங்க.... இது நமக்கான பண்பலை “Q Radio”....
(www.radiowalla.in என்ற
தளத்தில் உங்கள் ஜி மெயில் கணக்கு மூலம் இணைந்து, Q
Radio இணைப்பை சொடுக்கினால், நீங்க கேட்க தயார் ஆகலாம், இந்த
பண்பலையின் புரட்சி கீதத்தை....)
நல்ல ஒரு விழிப்புணர்வு... பாராட்ட வேண்டிய ஒன்று...
ReplyDeleteதங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பா...
Delete