ஆயிரம் புத்தகங்களால் உண்டாக்கமுடியாத ஒரு
மனமாற்றத்தை வரலாற்றில் அரிதாக சில புகைப்படங்கள் உண்டாக்கியதுண்டு... “இறக்கும்
தருவாயில் தடுமாறும் ஒரு குழந்தையின் இறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் கழுகு”
புகைப்படம் தான் உலகத்திற்கு சூடானின் நிலையை விளக்கியது.... நிர்வாணமாக ஓடிவரும்
ஒரு சிறுமியின் புகைப்படம் நமக்கெல்லாம் வியட்நாம் போரின் உக்கிரத்தை
விளக்கியது.... அதேபோல ஆர்ம்ஸ்டிராங் நிலவில் காலடி எடுத்துவைத்த புகைப்படம் நவீன
அறிவியல் வளர்ச்சியின் முதல் படி எனலாம்...
சரி, எதற்கு இவன் சம்மந்தமே இல்லாமல் இப்போ
புகைப்படங்களை பற்றி பேசிட்டு இருக்கான்?ன்னு நீங்க நினைப்பது புரியுது....
சொல்கிறேன்...
சமீப நாட்களாக இணையத்தில் காட்டுத்தீ போல
ஒரு புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு, மனம் நெகிழப்பட்டு வருவதை நீங்கள்
கவனித்திருக்கலாம்....
பெண்ணொருத்திக்கு குழந்தை பிரசவிக்கப்பட்ட நிலையில்,
பிறந்த குழந்தையை தன் மார்போடு ஏந்திய இரண்டு ஆண்கள்... மேலாடை இல்லாமல் ஒரு
தாய்க்கே உரிய அரவணைப்போடு அந்த குழந்தையை தாங்கிய அந்த ஆணின் கண்கள், ஆயிரம்
புத்தகங்களால் சொல்லமுடியாத ஒரு ஆணின் தாய்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது....
இந்த காட்சி அமைப்புகளை கொண்ட
புகைப்படம்தான் பலராலும் பகிரப்பட்டு வருகிறது... ஒருபால் ஈர்ப்பு நபர்கள்
மட்டுமல்லாது, “அன்பிற்கு பாலின வேறுபாடு கிடையாது!” என்கிற வாசகத்தோடு
பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்பு நபர்களால்தான் அதிகம் பகிரப்பட்டு வருவது
ஆச்சரியமான உண்மை... அந்த உண்மைக்கு பின்னால் மறைந்துள்ள அவர்களின் வாழ்க்கையை
பற்றி ஒரு சின்ன விளக்கத்திற்குதான் இந்த கட்டுரை...
தன் பிறப்பின் முதல் நிமிடத்திலேயே இப்படி
வரலாற்று நாயகனாக உருவாகிவிட்ட அந்த குட்டிக்குழந்தையின் பெயர் “மிலோ”...
பிரான்க் மற்றும் பீஜே இருவரும் கனடாவை சார்ந்த
ஒருபால் ஈர்ப்பு தம்பதிகள்... காதலித்த நாட்கள் முதலாகவே இருவருக்கும் குழந்தை
வளர்க்க வேண்டும் என்பதில் ஒரே கருத்துதான்... பின்பு தம்பதிகள் சகிதம்
வாழத்தொடங்கிய காலகட்டத்திலும், தங்கள் வாழ்க்கைக்குள் குழந்தை வருவதற்கான சரியான
காலகட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்...
பொருளாதார ரீதியாகவும், பணி சார்ந்த
குழப்பங்கள் அகன்று வாழ்க்கை தெளிவான பாதையில் போவதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு
இருவரும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்....
முதலில் டொராண்டோவில் ஒருபால் ஈர்ப்பு
அமைப்பினர் மூலமாக குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெறுவதை பற்றிய தெளிவான விளக்கத்தை
பெற்றனர்... பின்பு, ஒரு நிறுவனத்தின் மூலம் கேத்தி என்கிற வாடகைத்தையை
தேர்ந்தெடுத்து, குழந்தை பெறுவதற்கான சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்டது....
கடந்த ஆண்டே ஒருமுறை கருவுறும் முயற்சி
தோல்வியில் முடிய, இரண்டாம் முயற்சியில் வெற்றிகரமாக கரு உருவானது.... இப்படி
கேத்தியை ஒரு வகையில் குழந்தை பெற்றெடுக்க எவ்வளவு முனைப்பு காட்டினார்களோ, அதே
அளவிலான முனைப்பை தாங்கள் வளர்ப்பதற்கான பயிற்சி எடுப்பதிலும் காட்டினார்கள்
பிரான்க் மற்றும் பீஜே.... குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய சிறப்பு வகுப்பிற்கு
இருவரும் சென்றனர்....
இப்படி குழந்தைக்கான எல்லா
எதிர்பார்ப்புகளும் கடந்த மாதத்தில் நிறைவேறியது....
ஆம், ஜூன் 27இல்
அந்த குழந்தையும் பிறந்தது...
கேத்திக்கு பிரசவமாகும் போது அருகிலிருந்தே
தங்கள் குழந்தையின் பிறப்பை படபடப்புடன் நின்று பார்த்தனர் இரண்டு அப்பாக்களும்...
பிரசவ வலியை பொறுத்துக்கொண்டு அந்த தருணத்தில் கேத்தி அமைதியாக இருந்தாலும்,
அப்பாக்கள் இருவரும் பதற்றத்தில் தவித்ததை இப்போது நினைத்து சிலாகிக்கிறார்கள்
இருவரும்...
குழந்தை பிறக்க இருந்த ஒருசில
நிமிடங்களுக்கு முன்புதான் பிரசவம் பார்த்த பெண்மணி ப்ராங்கை சட்டையை கழற்றுமாறு
கூறினாள்.... சரியாக குழந்தை பிறந்த மறுநிமிடமே அக்குழந்தை பிராங்கின் மார்போடு
சேர்த்து வைக்கப்பட்டது... கையில் நடுக்கத்துடன், தன் மார்போடு ஒட்டியிருந்த
குழந்தையை பார்த்ததும் ப்ராங்க் அழ, அதை பார்த்து பீஜே அழ.... ஒருகட்டத்தில் அந்த
பிரசவ அறையே நெகிழ்ச்சியால் நிரம்பிவிட்டது.... நல்ல ஆரோக்கியத்துடன், எவ்விதமான
குறையும் இன்றி பிறந்துவிட்டான் மிலோ...
“இந்த வருஷம் நாங்க ப்ரைடை எங்க
குட்டிப்பையன் மிலோ’வோட கொண்டாடுவோம்”னு சொன்ன அந்த அப்பாக்கள் முகத்தில்தான்
அத்தனை பெருமிதம்.... ஆம், இப்படிப்பட்ட ப்ரைடைதானே நாமும் எதிர்பார்க்கிறோம்!
இந்த செய்தியோடு சமீபத்தில் பிரபல
ஆராய்ச்சியாளரான சைமன் க்ரவுச் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை பற்றியும் கொஞ்சம் சொல்ல
நினைக்கிறேன்.....
·
எதிர்பால் ஈர்ப்பு தம்பதிகளின்
குழந்தைகளைவிட, ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளின் குழந்தைகள் ஆரோக்கியமாகவும்,
மகிழ்ச்சியாகவும் குடும்பத்தோடு அதிக பினைப்புடனும் உருவாகிறார்கள்....
·
“ஆண்கள் வேலைக்கு போகணும்,
பெண்கள் வீட்டை பார்க்கணும்” போன்ற சமுதாய கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிடாமல்,
இரண்டு பெற்றோரும் ஒருசேர குழந்தையின் வளர்ப்பில் பங்கெடுப்பதால் குழந்தைகள் நிறைய
கற்றுக்கொள்கிறார்கள்....
·
இத்தகைய குழந்தைகள் அதிக
தன்னம்பிக்கையும், எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதிலும், மற்றவர்களோடு
பழகுவதிலும் சிறப்பான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்...
இப்படி
ஆய்வு முடிவுகளிலும், வேறு நாட்டவர்கள் வாழும் முறைகளையும் மட்டுமே பார்த்து
நெகிழும் காலம் அகன்று, என்றைக்கு நம் நிலையும் அவ்வாறு மாறும் என்ற எதிர்பார்ப்பு
எல்லோருக்கும் உள்ளது.... குட்டிப்பையன் “மிலோ”வின் பிறப்பாவது நமக்கு நல்ல
விடியலை கொண்டுவரும்னு நம்புவோம்...
அருமையான முன்னுரை ! நல்ல பதிவு !
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteஉண்மை பதிவை வெளியிட்தமைக்கு நன்றி... அந்த மாற்றம் வரும்வரை காத்திருப்போம்....நம் சந்ததிகள் ஆவது நிம்மதியாக வாழட்டும்...
ReplyDeleteமிக்க நன்றி சக்தி...
DeleteWow! Great"! When will i have my baby like this?
ReplyDeleteநன்றி பாலாஜி.... நிச்சயம் இந்த நிலை இங்கும் உருவாகும்னு நம்புவோம்...
DeleteOn a lighter note , inimey thttratha irunda "amma per theriyatha payyan" nu thaan thittanum
ReplyDeleteஹ ஹா... அப்படி நிலைமையும் வந்தாலும் வரலாம் அண்ணா....
DeleteReally Hatsoff to Them... I wish them to Live a Happy Life....
ReplyDelete