கமு... கபி...
--- Avid Fascination Towards Seraph...
இந்த கதையோட ஹீரோவோட பேரு செபாஸ்டியன் @ பாஸ்... வயசு 30. திருச்சில பாலக்கரை பக்கம் வீடு... கார் விக்கிற கம்பெனில
வேலை பார்க்கிறாரு... சராசரி உயரம்... மாநிறம்... செதுக்கின உடம்பு... லேசா
எட்டிபார்க்கிற இளம் தொப்பை... தலைல முன் பக்கம் மட்டும் நிறைய முடி... அதுவும் மீடியம்
ப்ரௌனையும் கோல்ட் கலரையும் மிக்ஸிங் போட்டு ஹேர்கலரிங் செய்யப்பட்டது... கர்ணன்
கவச குண்டலத்தோட பொறந்தாரோ என்னவோ, நம்ம ஹீரோ பாக்கெட்
சீப்போட தான் பொறந்தாரு... இவன் ஏன் இப்படி சொல்றான்னு கேக்குறீங்களா... ஏன்னா, அவரோட
வாழ்க்கைல அதிகமா அவர் செஞ்ச வேலைனா அது அவரு தலைய அந்த பாக்கெட் சீப்ப வச்சி
சீவுறது தான்... பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை அந்த பாக்கெட் சீப்பு, அவரோட
பாக்கெட்ட விட்டு வெளிய வந்துட்டு போகும்... வெளிய வரும் போது மட்டும் இல்ல,
வீட்டுக்குள்ள டீ.வி பார்க்கும் போது கூட... அதே மாதிரி, வெளிய வரும் போது கூலிங்
க்ளாஸ் இல்லாமயும் நம்ம ஹீரோ சார் வர மாட்டாரு...
அடுத்தது, அவரோட டிரெஸ்ஸிங்... வேலை
பார்க்கிற இடத்தில கட்டாயம் ஃபார்மல்ஸ் தான்னாலும், நம்ம ஆளு அந்த ஃபார்மல்ஸ்லயே
அவரோட முன்னழகு பின்னழகு எல்லாம் தெரியிற மாதிரி தான் டிரெஸ் பண்ணுவாரு...லீவன்னிக்கு
பண்ற அட்டூழியத்த கேக்கவே வேணாம், கண்டிப்பா ஜீன்ஸ்க்கு வெளிய ஜாக்கி ஜட்டி
தெரியும்... அதுக்கு நான் கேர்ரன்ட்டி... நம்ம ஹீரோ ஒரே ஒரு ஜீன்ஸ் பேன்ட் எடுக்க
எப்படியும் குறைஞ்சது 7 மணி நேரமாவது ஆகும்... கிட்டத்தட்ட திருச்சில இருக்கிற
சாரதாஸ், சென்னை சில்க்ஸ், அஹ்மத் & கோ, ஃபெமினா இப்படி எல்லா கடையவும் ஒரு
ரவுண்டு அடிச்சிருப்பாரு... அப்படியேன் இவ்ளோ நேரம், இவ்ளோ கடைன்னு நீங்க
யோசிக்கலாம்... அதை நானே தீர்த்து வக்கிறேன்...
“என்ன சார்
பார்க்குறீங்க...”
“ஜீன்ஸ்”
“என்ன டைப் சார் பூட்
கட்டா, நார்மல்லா...”
“நார்மல் தான்...”
“சைஸ் சார்”
“32”
“இந்த rack ஃபுல்லா
பாருங்க சார்...”
“அந்த ப்ளூ எடுங்க...”
“இந்தாங்க சார்...
ட்ரையல் பார்க்குறீங்களா சார்...”
“ம்ம்ம்... குடுங்க
செக் பண்றேன்...”
“டிரெஸ்ஸிங் ரூம் இங்க
இருக்கு சார்...”
“ஓகே...”
“என்ன சார் ஓகே வா...”
“தைஸ்ல (தொடைல) இந்த
இடம் ஃபிட் பத்தல... ரொம்ப லூசா இருக்கு...”
“சரி சார்... நான் வேற எடுத்திட்டு
வர்றேன்... ட்ரை பண்ணிப்பாருங்க சார்...”
“என்ன சார் ஓகே வா...”
“இந்த இடம் ஓகே தான்...
ஆனா ஹிப் கொஞ்சம் டைட்’டா இருக்கு...”
“ஒஹ்... ஓகே சார்... வேற கொண்டு
வர்றேன்...”
“என்ன சார் ஓகே வா...”
“ஹிப் ஓகே... தைஸ்
ஓகே... இந்த கால்கிட்ட ரொம்ப அகலமா தெரியுது... அது கொஞ்சம் அசிங்கமா இருக்கு...”
“அப்படிங்களா சார்... நான் வேற
கொண்டு வர்றேன் சார்...”
“என்ன சார் ஓகே வா...”
“ஃபிட் ஓகே தான்...
ஆனா, இந்த டிசைன் என்கிட்ட ஏற்கனவே இருக்கு... வேற டிசைன் இருக்கா...”
“நான் செக் பண்ணி பார்க்கிறேன்
சார்...”
“என்ன சார் ஓகே வா...”
“இந்த டிசைன் ஓகே... ஆனா,
எனக்கு ப்ளூ கலர் தான் வேணும்...”
“சார், இது கூட ப்ளூ
கலர் தான் சார்...”
“இது ப்ளூ மாதிரியா
இருக்கு... ப்ளாக் மாதிரில இருக்கு... நான் ஃபஸ்ட் காமிச்சேன்ல அந்த ப்ளூல தான்
வேணும்...”
“இந்த கலர் இங்க அது ஒண்ணு தான்
சார் இருக்கு... நான் கோடவுன்ல இருக்கான்னு பார்க்கிறேன் சார்...”
“ஸாரி சார், அந்த கலர் இல்ல சார்...”
“ஒஹ்... சரிங்க ஓகே... தேங்க்ஸ்...”
இது தாங்க எப்பவும் எல்லா கடைலயும்
நடக்கிறது... அவர் மைண்ட்ல ஒன்ன ஃபிக்ஸ் பண்ணி வச்சிட்டு அப்படித்தான் வேணும்னு
அலையுறது தான் நம்ம ஹீரோவோட வாடிக்கை... கூடயே ஒரு அப்பாவியவும் பழனி மலை
படிக்கட்டுல ஏத்தி எறக்குற மாறி, எல்லா கடைக்கும் ஏத்தி எறக்குவான்... அந்த
அப்பாவி வேற யாரும் இல்ல... நான் தான்...
நம்ம ஹீரோ இப்படி ட்ரெஸ்
தேடியலைறதுக்கும் இவ்ளோ ஸ்டைல் பண்றதுக்கும் ஒரே காரணம், நெறைய லட்டு ஃபிகுர்ஸ் அவர
கரக்ட் பண்ணனும்’கிற ஒரே காரணம்... அதாவது,
அந்த ஃபிகரே வந்து இவர்கிட்ட வழியனும்... இவரா போயி வழிய மாட்டாரு... எல்லாம் நேரம்... அவர
பொருத்தவரைக்கும் ரெண்டே ரெண்டு ஃபிகர்ங்க தான் இருக்கு... ஒண்ணு லட்டு ஃபிகர்,
இன்னொன்னு அட்டு ஃபிகர்... ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... நம்ம ஹீரோ கண்ணுல
ஃபிகர்னாவே அது பசங்க தான்... தப்பித்தவறி ஏதாவது பொண்ணு “ஐ லவ் யூ”
சொல்லிருச்சின்னா, உடனே சிம்பிள்ளா ஒண்ணே ஒண்ணு தான் சொல்லுவார்... “இந்த
லவ்வெல்லாம் சரிப்பட்டு வராதுங்க... எங்க அம்மா கைய காட்ற பொண்ண தாங்க கட்டிக்குவேன்...”
அப்படின்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவார்...
இந்த விஷயத்த ஏன் நான் இவ்ளோ நேரம்
பேசிட்டிருக்கேன்னு நீங்க கேக்கலாம்... இப்படிப்பட்ட நம்ம ஹீரோவுக்கு ஆறு
மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு... கல்யாணத்துல பாத்ததுக்கப்புறம், எனக்கு
வேலை கிடைச்சு நான் வெளியூர்க்கு வந்துட்டேன்... அப்பப்போ ஃபோன்ல பேசுறதோட சரி... இன்னைக்கு
தான், நான் மறுபடியும் என்னோட ஹீரோவ... ஸாரி கதையோட ஹீரோவ பார்க்க போறேன்... சர்ப்ரைசா
இருக்கட்டுமேன்னு இன்னும் அவர்கிட்ட கூட சொல்லல... சரி... ஹீரோகிட்ட ஃபோன் பண்ணி
சொல்றேன்...
“வணக்கம்
சார்... எப்படி இருக்கீங்க...”
“நான்
நல்லாருக்கேண்டா... நீ எப்டி இருக்க?”
“நான்
நல்லாருக்கேன்டா... அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?”
“நல்லா
இருக்காங்கடா...”
“நீ இப்போ எங்க
இருக்க?”
“நான் ஆபீஸ்ல தாண்டா இருக்கேன்... என்ன
விஷயம்டா...”
“நான் திருச்சி வந்துட்டு இருக்கேன்... இன்னும்
பத்து நிமிஷத்துல வந்திடுவேன்... சார், ஃப்ரியா? வர முடியுமா?”
“ஏய் என்னடா கேள்வியிது? இதோ கெளம்பிட்டேன்... சென்ட்ரல்
பஸ் ஸ்டான்ட் தானே?”
“ம்ம்ம்... ஆமாம்டா...”
“சரிடா, நீ இறங்கி வெயிட் பண்ணு...”
“நான் ஃபெமினா
வந்துடுறேன்... நீயும் அங்கேயே வந்துடு...”
“ம்ம்ம்... ஓகே டா...”
“ம்ம்ம்... ஓகே டா...”
என்னோட ரோமியோகிட்ட சொல்லியாச்சு. பஸ்ல வந்ததால என்னோட
மூஞ்சி கொஞ்சம் தொங்கலாக இருக்கிறதால, நான் ஃபெமினால போய், ஹீரோ வர்றதுக்குள்ள, லைட்டா
என்னோட மூஞ்சிய பட்டி டிங்கரிங் பார்த்து ரெடியாகி அங்க இருக்கிற ஐஸ்கிரீம்
ஸ்டால்கிட்ட உட்கார்ந்தேன்... அட என்னோட ஹீரோ வந்துட்டார்... ஆனா, இப்போ ஹீரோவ
பாத்தா ஜீரோவால தெரியுறார்... தொல தொலன்னு ஒரு பேண்ட்டும் அதுக்கு தொல தொலன்னு ஒரு
சட்டையும்... ஐய்யோ கடவுளே என்ன கொடுமை இது...
“டேய், என்னடா ஆளே மாறிட்ட?”
“ஆமாம்டா... கல்யாணம் ஆகிடுச்சுல... அதான்...”
“உண்மைய சொல்லு, உன்னோட ஒயிஃப் ப்ரெக்னன்ட்டா
இல்ல நீ ப்ரெக்னன்ட்டா?”
“ஏய் ரொம்ப ஓட்டாதடா...”
“இல்ல, எவ்ளோ பெரிய வயிறு... அதான் கேட்டேன்...”
“ஒவ்வொரு சொந்தக்காரங்க வீட்லயும்
கல்யாணச்சாப்பாடு போட்டாங்களா... இப்படி ஆகிட்டேன்டா...”
“ஓசில கெடைக்கிதுன்னு புகுந்து வேலையாடிட்டியோ?”
“சும்மா இருடா நீ வேற...”
“அது சரி, எந்த நாய்கிட்ட கொண்டு போய் உன்
மண்டைய கொடுத்த?”
“டேய், என்னடா சொல்ற?”
“இல்ல, உன் மண்டைய பார்த்தா ஏதோ நாய் கருமின
மாதிரியே இருக்கே... அதான் கேட்டேன்...”
“இல்லடா முடிய ஷார்ட்டா வெட்டினா அழகா
இருக்கும்னு சொன்னாங்க... அதான்... ஏன்டா, இது நல்லாத் தானே இருக்கு...”
“ஆமா ஆமா, இது ரொம்ப அழ்ழ்கா இருக்கு... யாரு
இந்த ஐடியா கொடுத்ததுங்க பாஸ்...”
“அம்மு தான் சொல்லுச்சு...”
“ஓ... உன் ஒய்ஃபா? அப்போ நல்லா தான் இருக்கும்...
வா நாம, ட்ரெஸ் பார்க்க போலாம்...”
“ம்ம்ம்... போலாம்... நானும் ட்ரெஸ்
பாக்கணும்...”
“உனக்கா, ஐய்யய்யோ, இன்னைக்கு அப்போ நாள்
முழுக்க காலியா?”
“டேய் அப்படியெல்லாம் இல்லடா...”
“பார்க்கதானே போறேன்...”
என்னால நம்பவே முடியல... என்னோட ஹீரோவா இப்படின்னு...
வெறும் 15 நிமிஷத்துல ட்ரெஸ்ஸ
செலக்ட் பண்ணிட்டார்... அதுவும் தொல தொலன்னு... இத்தனைக்கும் அவர் விரும்புற
மாதிரி ஃபிட்டா ட்ரெஸ் கிடைச்சது... ஆனா, எடுக்கல... விசாரிச்சப்போ தான்
தெரிஞ்சது, டைட்டா ட்ரெஸ் போடக்கூடாதுன்னு மேலிடத்து உத்தரவாம். ஹீரோவோட நடவடிக்கையெல்லாம் மொத்தமாவே மாறியிருந்தது...
சும்மா ரோட்ல போறவன சைட் அடிச்சி கிண்டல் கேலி பண்ற என் ஹீரோ அமைதியா வர்றதப்
பார்க்கும் போது எனக்கே அவ்ளோ ஆச்சர்யம்... ஹோட்டல்ல சாப்பாட்ட விமர்சிக்கிற
என்னோட ஹீரோ, பனானா லீப்ல இன்னைக்கு சாப்பிடும் போது அவ்ளோ கப்சிப்... எப்படி
இருந்த என் ஹீரோ இப்படி... அவனோட உடம்பில இருந்த மாற்றத்த விட மனசில இருக்கிற
மாற்றங்கள் என்னை புல்லரிக்க வச்சது... சீறி வரும் காளையா இருந்த என் ஹீரோ, பொட்டிப்பாம்பா
அடங்கினதுக்கு ஒரே காரணம், எல்லாராலையும் சேர்த்து வைக்கப்பட்ட திருமணம்
அப்படிங்கிற பந்தம் தான்... அந்த பந்தம் உருக்குலைஞ்சிடக் கூடாதுங்கிறதுல நம்ம
ஹீரோ காட்டுற அக்கறை, அவரோட சந்தோஷத்துக்காக இல்லன்னாலும் இந்த சமுதாயத்தோட
நிர்பந்தத்தினால தான்னு புரிஞ்சது... இப்போ என் ஹீரோகிட்ட பாக்கெட் சீப்பும் இல்ல,
கூலிங் கிளாஸ்ஸும் இல்ல... ஆனாலும் எனக்கு அவன் ஹீரோ தான்...
(பி.கு: முன்னல்லாம் வாயோடு வாய் வச்சி முத்தம் கொடுக்க ரொம்ப
யோசிப்பாரு... இப்போ, யோசிக்கவே மாட்டேங்கிறாரு...)
திருமணமான கேகளின் வாழ்கையை பிரதிபலிகிறது ...
ReplyDeleteமுதல் முயற்சி என்று கூறமுடியாதபடி இருக்கிறது எழுத்து நடை...
வாழ்த்துக்கள்...
தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திரு. Sakthi V.
Deleteஎழுத்து நடை அத்புதம். பல படைப்புகள் பதிய வாழ்த்துக்கள். திருமணமான கே க்களின் நிலைதனை எடுத்தியம்புவதாக உள்ளது. திருமணமான பின்பும் தன் பழைய நிலையினை தொடரலாமா? பல அன்பர்களிற்கு கேள்விக்குறியாகவே உள்ளது இது. ஆகவே நண்பர் விஜய் விக்கி அவர்கள் இது குறித்து கதையாகவோ, இல்லை பதிவாகவோ பதிய விழைகின்றேன் ... வாழ்க நீவீர்...............
ReplyDeleteதங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திரு. vij ay,
DeletePost marital Stress Disorder.. Post Marital Syndrome.. Post Marriage Syndrome.. Post Nuptial Depression... எப்படிவேணா சொல்லிக்கோங்க.. இதெல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல.. கேங்களுக்கும் உண்டுன்னு உங்க ஹீரோ நிரூபிக்கிறார்.. ஆனா அதுலயும் உங்களுக்கு ஒரு ஆதாயம் இருக்கு பாருங்களேன்... நீங்க ஆசப்பட்ற.. “வாய்தா” முத்தம்... ஜமாய்!! :D
ReplyDeleteநன்றி ரோத்தீஸ் அண்ணா... எப்படியோ எனக்கு பல விஷயங்களை புரிய வச்சதுக்கு உங்களுக்கு பற்பல நன்றிகள் அண்ணா ...
Deleteநல்லா இருக்கு....உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது ன்னு நினைக்கிறேன்...இன்னும் கொஞ்சம் நீளமா இருந்திருக்கலாம்...முதல் முயற்சி என்பதால் பரவாயில்ல....நல்ல எழுத்து நடை....வாழ்த்துக்கள்.
ReplyDeleteதலைவரோட தளத்துல நான் போடும் முதல் கருத்து இது ன்னு நினைக்கிறேன்.......