Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 22 July 2014

"அபியும் நானும்....!" - விலைமகனுடன் உங்கள் விஜய்....


“அபி என்கிற அபிமன்யூ” என்னுடைய விலையில்லா இன்பம் கதையின் நாயகன்... நிச்சயம் இது ஒரு கற்பனை பாத்திரம்தான் என்றாலும், விலைமகன் பற்றிய ஒரு கதை எழுதுவதற்காக ஆறு மாதத்திற்கு முன்பு நான் தொடர்புகொண்ட பல நபர்களில் ஒருவன்தான் இந்த அபியும்... முதல் பாகம் நான் எழுதியபோது பல விஷயங்கள் உண்மை அபியை மையமாக கொண்டே எழுதியவைதான்... அப்படி நான் அந்த நிஜ அபியுடன் பேசிய சில விஷயங்களைதான் ஒரு நேர்காணல் வடிவில் இங்கே தொகுத்திருக்கிறேன்....
உங்கள பத்தி சொல்லுங்க அபி...
வயசு 22, உயரம் 6 அடி,  எடை 65கிலோ... வெளிர்மஞ்சள் நிறம், கட்டுக்கோப்பான உடல்... அப்புறம்...
ஏய் ஏய்... நான் கேட்டது உன்னைப்பத்தி பொதுவான விஷயங்கள்... என்ன பண்ற? எந்த ஊர்? இப்டி விஷயங்கள்பா....
இதுவரைக்கும் என்னைப்பத்தி கேட்டவங்களுக்கு இப்டியே பதில் சொல்லிட்டதால உங்ககிட்டையும் அப்டி சொல்லிட்டேன்.... பயந்துடாதிங்க.... சொந்த ஊர் ஈரோடு பக்கம்... காலேஜ் படிச்சதெல்லாம் சென்னை... இப்போ வாழ்றதும் சென்னைதான்.... படிச்சதுக்கான வேலை கிடைக்காததால இன்னும் மத்தவங்கள சந்தோஷப்படுத்துற வேலையைத்தான் செஞ்சிட்டு இருக்கேன்....
ஏன் இந்த வழில பணம் சம்பாதிக்குற?... நிச்சயம் எதாச்சும் காரணங்கள் இருக்கணுமே?....
இந்த கேள்வியை முதல் கேள்வியாவே எதிர்பார்த்தேன், நீங்க கொஞ்சம் லேட்.... அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும், தம்பிகளை படிக்க வைக்கணும்.... இப்டி நீங்க நினைக்குற மாதிரி காரனங்களால யாரும் இந்த வேலை செய்றதில்ல.... காலேஜ் படிக்க சென்னை வந்தேன்...  கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம்ங்குறதால என்னோட படிப்புக்கு மட்டும்தான் அவங்களால பணம் செலவு செய்ய முடிஞ்சுது...  முதல் வருஷம் காலேஜ் படிச்சப்போலாம் நூறு ரூபாய்ல நாலஞ்சு நாள் சாப்ட்டு சமாளிச்சிருக்கேன்... வெறும் பிரெட் பாக்கெட் மட்டுமே ஒரு நாள் முழுக்க சாப்பாடா இருந்ததல்லாம் அப்போ சாதாரணம்... அப்புறமா ஒருசில பார்ட் டைம் ஜாப் பார்த்தேன்... படிப்பு, வேலைன்னு சமாளிக்கவே கஷ்டமா இருந்துச்சு, ஒருசில அரியர்கள் தான் மிச்சம்... அடிப்படைல நான் ஒரு கே, அப்பப்போ சந்தோஷத்துக்காக பசங்கள சந்திச்சிருக்கேன்... ஒருகட்டத்துல இதுல கூட பணம் சம்பாதிக்க முடியும்னு இணையம் வழி தெரிஞ்சுகிட்டேன், இப்போ இதுதான் என்னைய பீட்சா முதல் பிரியாணி வரை சாப்பிட வைக்குற தொழிலா ஆகிடுச்சு...
இது தப்புன்னு தோணலையா?...
ஹ ஹா... தப்பா?... இந்த உலகத்துல அந்த அளவுக்கு உத்தமன் ஒருத்தன காட்டுங்க பார்க்கலாம்.... என் போட்டோவ நீங்க பார்த்திருப்பிங்க... இப்போ பணமே வேணாம், வாங்க விஜய்னு உங்கள கூப்டா மறுப்பிங்களா என்ன?... அவனவனும் சந்தர்ப்பம் கிடைக்குற வரைக்கும்தான் உத்தம புருஷன்....
உன்னை நியாயப்படுத்திக்க உலகத்தையே குற்றம் சொல்லுற.... சரி விடு... என்னிக்காவது உனக்கு இப்டி பணம் சம்பாதிக்குறதுல உறுத்தல் ஏற்பட்டதில்லையா?....
எதுக்குங்க உறுத்தனும்?... ஊரை அடிச்சு உலைல போடுறவனல்லாம் உறுத்தலில்லாம வாழறப்போ எனக்கு ஏன் உறுத்தனும்?... ஆனாலும், நண்பர்கள்கிட்ட அடிக்கடி உண்மையை மறைச்சு அப்பப்போ வெளில போறப்போ, பொய் சொல்றதால மனசு குறுகுறுக்கும்.... அவ்ளோதான்... அதுமட்டுமில்லாம இந்த தொழிலை நான் மதிச்சுதான் செய்றேன்.... என் முகத்துல ஒரு சின்ன பரு வந்தா கூட, அந்த மாசத்து ரேட்ல சில நூறு குறைக்க வேண்டி வரும்.... அந்த அளவுக்கு முகத்தை ரொம்ப கவனமா பார்த்துக்கணும்... வாரத்துக்கு ஒருதடவை பார்லர்ல பேஷியல், வீட்ல கூட தினமும் இயற்கை வழில சரும பராமரிப்பு செய்றேன்... வெயில்ல எப்பவும் போகமாட்டேன்... சன் ஸ்க்ரீன், பவுண்டேசன் க்ரீம், ஸ்கரப் அது இதுன்னு மார்கெட்ல விக்குற அத்தனை அழகு சாதன பொருட்களும் என் வீட்ல இருக்கு.... என்னோட ஒரு நாள்ல பல மணி நேரங்களை இதுக்காக செலவிடுறேன்.... அந்த அளவுக்கு இதை ஒரு மதிப்புமிக்க தொழிலா பார்க்குறேன்

 ....
சரி, உன்னோட முதல் அனுபவம் எப்போ?... நிச்சயம் அப்போ மனசு வருந்தியிருப்ப....
அது உண்மைதான்... பசிச்சா கூட நண்பர்கள்கிட்ட பணம் வாங்கினதில்ல அதுவரைக்கும்... அப்படிப்பட்ட நான் என்னோட உடம்பை பேரம் பேசுனப்போ கஷ்டமாத்தான் இருந்துச்சு.... ஆர்குட் வழியா இருநூறு ரூபாய் சம்பாதிச்சதுதான் என் முதல் வருவாய்... நாற்பது வயசு இருக்கும் அவருக்கு.... அதுக்கு முன்ன என்னோட படிக்குற பசங்க கூட சந்தோஷமா இருந்திருக்கேன்... ஆனால், ஒரு புது ஆள்... அதுவும் நாற்பது வயசு... உடம்பல்லாம் நடுங்குச்சு.... நல்ல மனுஷன் அவரு, ரொம்ப இம்சை பண்ணல... அரை மணி நேரத்துல எல்லாம் முடிஞ்சு பணமும் கொடுத்துட்டார்.... 
உறவின் போது பாதுகாப்புக்கு தேவையான விஷயங்கள் செய்வதானே?...
எனக்கும் உயிர் மேல அக்கறை உண்டுதான்.... நூத்துக்கணக்கான கஸ்டமர்களை சந்திச்சுருக்கேன், ஒரு தடவை கூட காண்டம் இல்லாம களத்துல இறங்குனதில்ல.... ரேட் பேசுறதுக்கு முன்னாடியே என்னோட கண்டிஷன்கள்ல ஒன்னு “கட்டாய காண்டம்”தான்... 
இப்போ உன்னோட ரேட் என்ன?
அது ஆளுங்களுக்கு ஏத்த மாதிரி மாறும்... 2000 – 5000ரூபாய்னு ஆளுங்களுக்கு ஏத்தபடி மாறும்.... எனக்கு பிடிச்ச மாதிரி, என் வயசு பசங்களா இருந்தா மினிமம் ரேட் ரெண்டாயிரம்.... வயசான ஆளுங்கன்னா அஞ்சாயிரம்.... உங்களுக்கு வேணும்னா டிஸ்கவுண்ட் தரட்டுமா? ஹ ஹா....

உனக்கு பிடிக்காதபடி ஆட்கள் வர்றப்போ என்ன பண்ணுவ?.. அப்டி அனுபவங்கள் இருக்கா?...
பெரும்பாலும் அப்டிதான் வருவாங்க.... கண்ணை மூடிட்டா எல்லாருமே மன்மதன்கள்தான் விஜய்.... நிறைய பேர் தண்ணி அடிச்சுட்டு தான் படுக்கைக்கு வருவாங்க.... நிதானம் இழந்த நேரத்துல அவங்க முரட்டுத்தனமா சில விஷயங்கள் செய்வாங்க... வலிச்சாலும் அவங்களா விடுறவரைக்கும் அமைதியாத்தான் இருக்கணும், அப்போதான் அடுத்த முறை கூப்பிடுவாங்க... கண்ணை மூடிகிட்டு, பல்லை கடிச்சுகிட்டு ஒரு பத்து நிமிஷம் பொறுத்துதான் ஆகணும்...
நீ சந்திச்ச ஆட்கள் கிட்ட ஏற்பட்ட மறக்க முடியாத கசப்பான அனுபவம் எதாவது இருக்கா?....
நிறைய இருக்கு.... குறிப்பா சொல்லனும்னா வேளச்சேரில ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன்.... அவர் வயசு முப்பதுக்கு மேல இருக்கும்... ஆள் பார்க்க கூட ஓகேதான்.... மூவாயிரம் ரேட் பேசி வீட்டுக்கு போய்ட்டேன்... பெட்ல ஜாலியா இருந்த நேரம் வீட்டுக்கதவை யாரோ தட்டுனாங்க.... என்னைய பாத்ரூம்குள்ள நிக்க சொல்லிட்டு போன அந்தாளு, திரும்பி வர ஒருமணி நேரத்துக்கு மேல ஆச்சு.... அதாவது, டிரெஸ் எதுவுமே இல்லாம பாத்ரூம்குள்ள ஒரு மணி நேரம் நின்னேன்.... தண்ணி தாகம் வேற, கதவை கூட தட்ட முடியாத சூழல்... வாழ்க்கையவே வெறுத்திட்டேன்.... வியர்த்து விறுவிறுத்து, பசி தாகம்னு கலவையான பிரச்சினை வேற.... ஒரு மணி நேரம் கழிச்சு வந்த அந்த ஆளு, ஒரு சின்ன ‘சாரி’ கூட சொல்லாம அப்டியே கட்டிப்பிடிச்சான்.... அவனை பொருத்தவரைக்கும் மூவாயிரத்துக்கு வாங்கப்பட்ட பொம்மை நான்.... பல்லை கடிச்சுகிட்டு அந்த இரவை கழிச்சேன்.... இன்னொரு ஆள் முழுக்க தண்ணி அடிச்சுட்டு என் மேலேயே வாந்தி எடுத்தார்.... அவரையும் சுத்தப்படுத்தி, நானும் குளிச்சுட்டு அந்த நிலமைளையும் அவர்கூட படுக்கத்தான் சொன்னார்...
இவ்ளோ கஷ்டத்தை சந்திச்சும் உனக்கு இதில வெறுப்பு உண்டாகல இல்ல?...
கஷ்டமே இல்லாத தொழில் எதாச்சும் இருந்தா சொல்லுங்க பார்க்கலாம்... கஷ்டம்னு பார்த்தா மூச்சு விடுறது கூட கஷ்டம்தான்... சில வருஷத்துக்கு முன்னாடி பசியால துடிச்ச நாட்களை கம்பேர் பண்றப்போ, இது வலியா தெரியல... இப்போ மூணு நேரமும் சாப்பிடுறேன், ஓரளவு சொகுசாவே வாழுறேன், அப்பப்போ அப்பாவுக்கும் கூட பணம் அனுப்புறேன்.... இது போதும் விஜய், இன்னும் அதிக கஷ்டத்தை கூட தாங்கிக்கலாம்...
எதிர்காலம் பற்றி என்ன ஐடியால இருக்க?... இப்டியே காலம் ஓடும்னு நினைக்குறியா?...
ஓடுற வரைக்கும் ஓடட்டும், நிக்குறப்போ அதுபற்றி யோசிச்சுக்கலாம்... இந்த இளமை இருக்குறவரைக்கும் தான் இதல்லாம்... அதனால வயசு இருக்குறப்போவே அதை பயன்படுத்திக்கறது தப்பில்லைன்னு தோணுது.... முதல்ல என் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கணும், அதுல என்னோட தேவைகளை பூர்த்தி செய்ற அளவுக்கு சம்பளம் கிடைக்கணும்... அப்போ இந்த நம்பரை தூக்கி போட்டுட்டு, என்னோட கஸ்டமர் தொடர்பையல்லாம் துண்டிச்சுட்டு வாழ்வேன்... 
உன்னோட எதிர்கால கனவுகள் என்ன?
ஹ்ம்ம்... அப்டிலாம் ஒன்னும் பெருசா இல்ல... காலைல வேலைக்கு போயிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வந்துட்டு, பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டு, நைட் எதைப்பற்றியும் கவலையில்லாம நிம்மதியா தூங்குற வாழ்க்கை தான் என் கனவு... பேஷியல், பவுண்டேஷன் க்ரீம், ஸ்க்ரப், சன் ஸ்க்ரீன் லோஷன் அது இதுன்னு மூஞ்சியை எதிலாவது முக்கிட்டே இருக்குற வாழ்க்கை போர் அடிக்குது....
கனவுகள்ன்னா நான் கேட்கிறது, உன்னோட வாழ்க்கை பற்றியது... நீ கே’ன்னு சொன்ன, அப்போ காதல், திருமணம் இதல்லாம்?....
ஹ ஹா... காதல்... ஒரு நாலஞ்சு பேர் ப்ரப்போஸ் பண்ணினாங்க, நான் கால் பாய்’னு சொன்னதும் ஓடிடுவாங்க.... கால் கே’வையல்லாம் காதலிக்க இங்க யாரும் நாயகன் படத்து கமல் இல்லை விஜய்.... அதுமட்டுமில்லாம சில பேர் அதையும் மீறி காதலிப்பதா சொல்வாங்க, ஒருதடவை நானும் கூட அவனை நம்பிட்டேன்... கடைசில ஒரு நாள் ஓசி படுக்கைக்கு அந்த நாய் வச்ச பேர்தான் காதல்.... எனக்கும் அதிலல்லாம் பெரிய நம்பிக்கை இல்ல... இப்டியே வாழ்க்கை போறபடி போகட்டும், காதல் கல்யாணம் அதல்லாம் யோசிச்சு கவலைப்பட வேண்டிய நாட்களுக்கு இன்னும் தூரம் நிறைய இருக்கு... அப்போ பார்த்துக்கலாம் அதயல்லாம்.... சரி, என் பேட்டி போடுறப்போ என் போட்டோவையும் போடுவீங்களா?
இல்லையே.... உன் உண்மையான பெயரை கூட சொல்லமாட்டேன்....
சரி சரி.... யாராச்சும் ப்ரெண்ட்ஸ் பார்த்தா பிரச்சினை ஆகிடும்னு கேட்டேன்.... வேணும்னா என் நம்பர் போட்டு, இந்த மாதம் டிஸ்கவுண்ட் தரேன்னு போடுங்க.....
விட்டா ப்ளாக்’ல விளம்பரம் கொடுக்க சொல்வ போல?...
அதல்லாம் இப்ப வேணாம், தேவைப்பட்டால் பார்த்துக்கலாம்.... சரி, எனக்கு ஆறு மணிக்கு டூட்டி இருக்கு... கஸ்டமர்களை காக்க வைக்கிறது தப்பு, நான் கிளம்புறேன் விஜய்.....

(அபியுடனான இந்த நேர்காணல் நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது... இப்போ அவனுக்கு வேலை கிடைத்து ஓரளவு செட்டிலும் ஆகிவிட்டதாக இடையில் ஒருமுறை அலைபேசியில் சொன்னான்... கொஞ்சம் கொஞ்சமாக இந்த கஷ்டங்களிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறான்.... உங்கள் எல்லோரின் அன்பை நான்காம் பாகத்திலும் அவன் பெற்றிருப்பதை சொல்ல சமீபத்தில் அவனை தொடர்புகொண்டேன், அவன் எண் உபயோகத்தில் இல்லை... அவன் உடலும் இனி உபயோகத்தப்படவில்லை என்பதும் எனக்கு புரிந்தது)

10 comments:

  1. அப்படி ஒரு விடுதலை அந்த பையனுக்குக் கிடைச்சிருந்தா சந்தோஷம் தான்!

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நடந்திருக்கும்னு நம்புவோம்!

      Delete
  2. Thank god. He got a good life .

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி நண்பா....

      Delete
  3. இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்தவரு, நான் ஒரு கே னு வீட்டுல சொல்லி அவருக்கு புடிச்ச வாழ்க்கைய வாழ ரிஸ்க் எடுக்கலாம் னு தோணுது இத படிக்கும் போது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அதற்கான தேவை வரும்போது அபி அந்த துணிச்சலான முடிவை எடுப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு இசை.... தங்கள் கருத்துகளுக்கு எனது நன்றிகள்...

      Delete
  4. peatiya arambichathu, mudichathu kalakal, oru anubavamulla RJ or VJ pola irrunthau unga kevigal....

    mothathulaa super..........

    abi oda number ubayogam illatha ponathu, avanoda nalla valiku adithalam

    mathathulaa super nalla mana niraivuu....

    endrum anbudan
    ungal Iniyavan...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்ரீதர்....

      Delete
  5. Ah !happy to hear this thks Vijay

    ReplyDelete