Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 29 August 2013

குரல்வளையை நெறிக்கும் "ஊடகங்கள்!"...

இப்போதல்லாம் பேஸ்புக் சண்டை, குழாயடி சண்டையை விட மோசமாகிவிட்டது.... அப்படி நிகழுற சண்டையில் சமீபத்தில் அதிகம் திட்டிக்கொள்ள பயன்படுத்துற வார்த்தை “அவனா நீ?”... இன்னொரு ஆணோடு, ஒரு ஆணை இணைத்து பேசுவதை தான் அவங்க கேவலப்படுத்துறதின் உச்சமாக மக்கள் நினைக்குறாங்க... அப்படி இப்போது ஒரு வாக்குவாதத்தில், அடுத்தவரை கேவலப்படுத்த “ஒருபால் ஈர்ப்பை” பயன்படுத்துற நபர்களின் பட்டியலில் இணைந்திருப்பவர், ஒரு பிரபல வார இதழின் முக்கிய பொறுப்பாசிரியர்.... உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்குற ஒரு பத்திரிகை துறையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த நபரின் இந்த செயலால், ஊடக துறை கூட நம்மை பற்றிய எத்தகைய மனநிலையை கொண்டிருக்கிறார்கள்? என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கு....
தெளிவா அவங்களுக்கு நான் விளக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கு....
அன்புள்ள ஊடக துறை நண்பர்களே,
உங்களுக்கு ஆச்சரியமான ஒரு விஷயத்தை சொல்லட்டுமா?.... நாங்களும் கண்களாலதான் பாக்குறோம், காதாலதான் கேக்குறோம், வாயாலதான் சாப்பிடுறோம்... எங்களுக்கும் ரெண்டு கைகள், ரெண்டு கால்கள்... அப்புறம்... இதுக்கு மேல நான் சொல்ல விரும்பல... எங்களை நீங்க கொம்பு முளைத்த ஏலியன் போல கற்பனை செய்றீங்களா?னு எனக்கு புரியல...
ஒருத்தனை சாதியால ஒடுக்குறதும், மதத்தால பிரிச்சு பாக்குறதும், இனத்தால நசுக்கப்படுறதும் மட்டும் குற்றமா தெரியுற உங்களுக்கு, பாலீர்ப்பு காரணத்தால் கேவலப்படுத்தப்படுறது தவறு’ன்னு மட்டும் ஏன் புரியல?...
ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு நபரை, சாதியின் பெயரை சொல்லி திட்டினாலே “வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்” கீழ் திட்டிய நபருக்கு தண்டனை கொடுக்க முடியும், மதரீதியாக ஒருத்தரை தவறாக பேசினால் அவரை “நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதாக” கூறி வழக்கு தொடுக்க முடியும்... ஆனால், ஒருத்தனை பாலீர்ப்பு காரணத்தால் மட்டும் ரொம்ப எளிதா நீங்க கேவலப்படுத்தி, அந்த விஷயத்தை ரசித்து சிரிக்கவும் உங்களால முடியுறது ஆச்சரியமா இருக்கு....
நான் பிறப்பால் மனுஷன், உணர்வால் தமிழன், பாலினத்தால் ஆண் என்று என்னை நீங்க அடையாளப்படுத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது, “நான் யாருடன் படுக்கிறேன்?” என்ற ஒரு விஷயத்தை நீங்கள் அலசி ஆராய்ந்து என்னை “ஒருபால் ஈர்ப்பு” நபராக நீங்க புறக்கணிக்குறது விந்தையா இருக்கு.... என்னை பற்றி பேச உங்களுக்கு லட்சம் விஷயங்கள் இருக்கையில், என் படுக்கை அறையை பகிரும் பிரச்சினையில் மட்டும் நீங்கள் தலையிடுவது ஏன்?...
அறிவியலும், ஆன்றோரும், பல நாட்டு அரசுகளும் ஒருபால் ஈர்ப்பை தவறில்லை என்று சொல்லி, அங்கீகரிக்க தொடங்கி இருக்குற காலக்கட்டத்துல தான், இன்னமும் எங்களின் பாலீர்ப்பு அடையாளத்தை நகைப்புக்குரிய ஒரு விஷயமாக பார்க்கும் நிலைமை நம் நாட்டில் நடக்கிறது...
அதுவும் நாட்டிற்கு உண்மையை சொல்ல வேண்டிய ஊடக துறை நண்பர்களே இவ்வாறு செய்வது, அபாயத்தின் ஆரம்பமாக தெரியுது.... எங்க உரிமைகளுக்கு குரல் கொடுக்க இங்கே சட்டங்கள் இல்லை, மக்களின் மனநிலை இல்லை, இயல்பான சூழல் இல்லை... இத்தனை “இல்லை”களையும் மாற்றிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்த ஊடக துறையும் கூட, குட்டையில் ஊறிய மட்டையை போல எங்களை நினைப்பது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது...
இப்படி பாவப்பட்டவர்களாக, மன்னிக்க முடியாத குற்றவாளியாக, தீண்டத்தகாதவர்களாக எங்களை நினைக்குற அளவுக்கு நாங்கள் எந்த விதத்தில தரம் தாழ்ந்துவிட்டோம் என்று எனக்கு புரியல... இன்னமும் எங்களுள் பெரும்பாலானவர்கள் தங்களை வெளிப்படுத்தாததற்கு காரணம், இந்த சமூகத்தின் “ஒருபால் ஈர்ப்பு” பற்றிய புரிதலின்மைதான்... மற்றவர்களுக்கு அது புரியவில்லை என்றாலும், ஊடக துறையில் இருக்கும் உங்களுக்கு நிச்சயம் எங்கள் நியாயங்கள் புரிந்திருக்கும்... அப்படி இருந்தும், எங்கள் குரல்வளையை நசுக்கும் விதமாகவே நீங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான காரணம் மட்டும் எனக்கு புரியவில்லை...
இத்தனை ஆண்டுகளில் சில பத்திரிகைகளில் துணுக்கு செய்திகளாக வந்த எங்கள் போராட்டங்களை பற்றிய செய்தியை வைத்தே இத்தனை காலம், நீங்கள் எங்களின் உரிமைக்கு குரல் கொடுப்பீர்கள் என்று அசட்டு நம்பிக்கையில் இருந்துவிட்டோம்... இந்த அசட்டு நம்பிக்கையும், பொறுமையும் இப்போது எங்களை மக்கள் ஒரு “இழிபிறவியை” போல பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது....
நாங்கள் நம்பிய கடைசி அஸ்திரமான ஊடகங்களும் எங்களை கைவிட்டு விட்டதோ? என்று பயமாக இருக்கிறது... இந்த தருணத்திலாவது எங்கள் வருத்தத்தினை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தால்தான் இப்போதும் இதனை சொல்கிறேன்... இனியாவது எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு.....

                                                                             நசுக்கப்பட்ட குரல்வளைக்கு சொந்தக்காரன்...

12 comments:

  1. Yes we dont have laws we dont have support .that is why we are looked down.
    people who speak ill of us should know that we do not see caste we do not see religion/ we are UNIVERSE

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லோரும் உணரும் நாள் நம் காலத்தில் வருமா?னு எனக்கு தெரியல.... கருத்திற்கு நன்றி அண்ணா...

      Delete
  2. விக்கி இது பாலிருப்பால் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்களுடைய கோபம், ஆதங்கம். நிறைய தருணங்களுள தன்னனுடைய உணர்வுகளையும்,ஆதங் களையும் தன்னை சுற்றியிருப்பவர்களுக்கு தெரியபடுத்தனும்னு தோனுது. ஏதோ ஒரு உணர்வு தடுக்குது விக்கி. உங்களைப் போன்ற எழுத்தார்களின் படைப்பாவது சராசரி மணிதனிடம் சேரவேண்டும்,அதை அவர்கள் புரிய வேண்டும். இது ஒருவிதமான ஆசை, ஆதங்கம்,வேண்டுதல் விக்கி.
    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேகர்.... சராசரி மனிதர்களிடமா?.... உங்கள் ஆதங்கத்துக்கு பதில், உங்கள் பதிவுக்கு அடுத்த கருத்திலேயே இருக்கிறது... அதுதான் நம்மை பற்றிய பொதுமக்களின் பார்வை...

      Delete
  3. கே என்றால், அடுத்த ஆணிடம் படுப்பதை பற்றியே சிந்திப்பான் என்கிற மனநிலையின் வெளிப்பாடுதான் உங்கள் கருத்து.... எங்களுக்கு காம எண்ணங்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால் அது மட்டமே எங்கள் எண்ணமாக நீங்கள் நினைப்பதைத்தான் தவறென சொல்கிறேன்....
    தாங்கள் எழுதியுள்ள சில வார்த்தைகளில், பல வார்த்தைகள் எங்கள் மீதான உங்களின் வெறுப்புணர்வை புரியவைக்குது.... உங்களிடம் சொல்வதல்லாம் ஒன்றுதான், நாங்களும் உங்களை போன்றவர்கள் தான்....
    என் படுக்கை அறை பகிரும் உரிமையை நான் தான் முடிவு செய்ய வேண்டும், அதை தீர்மானிப்பது வேறு யாருடைய உரிமையும் இல்லை....

    இவ்வளவு கோபப்படும் நீங்க ஏன் உண்மையான முகத்தில் உங்கள் ஆதங்கத்தை காட்டவில்லை?.... உங்கள் கருத்தில் நியாயம் இருந்தால், தயக்கம் இல்லாமல் உங்கள் கருத்தை சொல்லலாமே?.... ஏதோ ஒரு உறுத்தல் தான் உங்களை, இப்படி பின்வாசல் வழியின் வர வைத்துள்ளது.... அந்த உறுத்தலை ஏன்? என்று உங்களை கேட்டு பாருங்க, எங்கள் நியாயம் உங்களுக்கு புரியும்.... நன்றி...

    ReplyDelete
  4. முகம் தெரியாத நபருக்கு, ஒரு மனிதனாக சொல்லி கொள்ள விரும்புவது இதுதான்:
    நீ ஆணாக இருந்தால் பெண்ணை நேசிப்பதும், பெண்ணாக இருந்தால் ஆணை நேசிப்பதும் எப்படி இயற்கையோ அதுபோல் இதுவும் மனிதனுக்குள் இயற்கையாக விதைக்கபட்ட ஒன்று.. எல்லா மனிதனுக்கும் அது ஆணாக/பெண்ணாக இருந்தாலும் ஒரு கால கட்டத்தில் காமம் அவசியமாகிறது அந்த இச்சையை மனம் போன போக்கில் தீர்த்துக்கொள்ள கூடாது என்பதற்காக இருவரயும் திருமண பந்தத்தில் சேர்ந்து வாழ சொல்கிறார்கள். அப்படி ஒரு கட்டமைப்பு இருந்தும் இங்கே பல ஆண்களும்/பெண்களும் அதை மறந்து விட்டு கூ--கும் /பூ--கும் அலைந்து கொண்டு இருகிறார்கள். நீங்களும் இந்த இரண்டில் ஏதோ ஒன்றுக்கு அலைபவர்தன் என்று சொன்னால் ஏற்று கொள்வீர்கள?..
    ஆண்-பெண்/ஆண்-ஆண்/பெண்-பெண் என்று இயற்கையாக விதைகபட்ட இந்த மூன்று உறவுகளை, வற்றாத அன்பு கலந்த காதலோடு வாழ்பவர்கள் உங்களிலும் இருகிறார்கள் எங்களிலும் இருகிறார்கள்... உறவுகளையும் உணர்வுகளையும் கொச்சை படுத்தி பேசுவதை இதோடு நிறுத்திகொள்ளுங்கள்..

    ReplyDelete
  5. இவ்வளவு கோபப்படும் நீங்க ஏன் உண்மையான முகத்தில் உங்கள் ஆதங்கத்தை காட்டவில்லை?.... உங்கள் கருத்தில் நியாயம் இருந்தால், தயக்கம் இல்லாமல் உங்கள் கருத்தை சொல்லலாமே?.... ஏதோ ஒரு உறுத்தல் தான் உங்களை, இப்படி பின்வாசல் வழியின் வர வைத்துள்ளது.... அந்த உறுத்தலை ஏன்? ///// ithu unkalukum porunthum illaya

    ReplyDelete
  6. ஆண்-ஆண் உறவுவைத் தேடிச் செல்லும் ஒருவரை வேண்டுமானால் விட்டு விடலாம் அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று. ஆனால் ரோட்டில் போறவன் வர்றவனை எல்லாம் துன்புறுத்துவது சரியா????

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே கே ஆண்கள் என்றால், அடுத்த ஆணுடன் படுக்க நினைப்பவன் என்ற எண்ணமே நிறையபேர் மனதில் இருக்கும் உணர்வு... அத்தகைய உணர்வின் வெளிப்பாடுதான் இந்த கேள்வியும்.... உங்கள் கேள்வியின் இருக்கும் ஒரு உண்மையை நான் மறுக்க விரும்பல... இங்கு நிறைய பேர் செக்ஸ் நோக்கத்தில் மட்டும்தான் கே என்பதை அணுகுகிறார்கள்.... அதற்கு காரணம் என்ன?... முறையான பாலியல் கல்வி இல்லை, அவங்களுக்கு கே என்றால் என்ன?என்று கூட தெரியாது.... முறையான வடிகால் இல்லை... தெளிவான மனநிலை இல்லை.... இவ்வளவு இல்லைகளை தாண்டித்தான் எங்களுள் நிறையபேர், காமம் தவிர்த்து சிந்திக்கிறோம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.... ஆனால், இங்கு சராசரி ஆண்களாக நீங்கள் சொல்லும் ஸ்ட்ரைட் ஆண்கள் எல்லோரும் ராமன்களா?... நித்தமும் எத்தனையோ பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் சில ஆண்களை வைத்து, நாங்கள் ஒட்டுமொத்த ஸ்ட்ரைட் ஆண்கள் மீதும் பழிபோடலாமா?.... அத்துமீறும் சில நபர்களை தவிர்த்தே உங்களை நாங்களும், எங்களை நீங்களும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கருத்து....

      Delete
  7. பாதிக்கப்பட்டவனுக்கும், பழியை சுமத்துபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?.... உங்களை போன்றோர் அள்ளி வீசும் சேற்றிலிருந்து தப்பிக்க எங்கள் முகங்களை மறைத்து வாழும் நிலையில் நாங்கள் உள்ளோம்.... உங்கள் கருத்தில் நியாயம் இருக்கும் பட்சத்தில், சொல்லும் பழியில் உண்மை இருக்கும் பட்சத்தில் நீங்கள் நிஜ முகத்தில் வருவது தவறில்லை தானே?.... உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் பொறுப்பில் நான் உள்ளேன்.... அது நியாயமான கேள்வியாகவும், அது சரியான முறையில் கேட்கப்படுவதாகவும் இருக்க வேண்டும் என்கிற இரண்டு கோரிக்கைகளுக்கு உட்பட்டு....

    ReplyDelete
  8. @anonymous
    "ஆனால் ரோட்டில் போறவன் வர்றவனை எல்லாம் துன்புறுத்துவது சரியா????"
    மிகச் சரியான கேள்வி... ரோட்டில் போறவன் வர்றவனை எல்லாம் துன்புறுத்துபவர்களை இங்கே இந்த இடத்தில் மட்டும் "வல்லவர்கள்" என்று குறிப்பிடுகின்றேன். எங்களிலும் சில பல வல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

    இருபாலிணை உறவுகளில் (heterosex), டெல்லி கற்பழிப்பு, மும்பை கற்பழிப்பு, அவ்வளவு ஏன் சமீபத்தில் நடைபெற்ற திருச்சி கற்பழிப்பு சம்பவங்கள் நடந்ததால ஒட்டு மொத்த ஆண் சமுதாயமும் அப்படித்தான்னு சொல்ல முடியுமா? இல்லையே. அங்கயும் சில வல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த காரியங்களை செய்கிறார்கள். பல பொது இடங்களில் எத்தனை ஆண்கள் தன் கண்களால் பல பெண்களை சீண்டுகிறார்கள் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். இன்னும் பல பொது இடங்களில் எத்தனை ஆண்கள் தன் கரங்களாலும் சீண்டுகிறார்கள் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். "நீ அக்கா தங்கச்சியோட பிறக்கலையானு" எத்தனை பெண்கள் கதறியிருப்பார்கள். அதற்காக எல்லோருமே அப்படித்தான் என்று சொல்ல முடியுமா? இல்லையே!!! எத்தனையோ நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனையோ பெண்களுக்கு நல்ல ஆண் நண்பர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஒரு சில பேர்களுக்காக ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்தையே ஒதுக்கி வைக்காதீர்கள்.

    இன்னும் சொல்லப்போனால் இந்த சமுதாயம் ஆண்களுக்கு தனி விடுதலையை கொடுத்திருக்கு. பல இடங்களில் பெண்களைத் தான் குறை சொல்கிறோம். "அவன் ஆம்பலடி. நீ தான் பார்த்து dress பண்ணிக்கணும்" நு எத்தனை பேர் சொல்லிருப்பாங்க. இந்த சமுதாயம் நீங்கள் கண்களாலும் கரங்களாலும் செய்வதை தவறு என்று கூறுவதில்லையே.

    எங்கள் ஓரினச்சேர்க்கை நண்பர்களிலும் பல நல்லவர்களும் பல வல்லவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் வல்லவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறீர்கள். நல்லவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றே கேட்கிறேன்/கேட்கிறோம். இது எங்கள் ஓரினச்சேர்க்கை சமுதாயத்தின் நீண்ட கால வேண்டுகோள்.
    --- Avid Fascination Towards Seraph.
    (http://iamavid.blogspot.in/)

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கேள்வி ராஜு.... நம் அத்தனை பேரின் மனதிற்குள்ளும் கனன்றுகொண்டிருந்த கேள்வி..... பொறுமையாக பதில் சொன்னமைக்கு நன்றிகள்...

      Delete