Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 31 July 2014

Mr Gay India 2014 - உலக அழகனாய் வெல்வாரா சுஷாந்த்?...










“சுஷாந்த் திவ்கிகர்” – சில நாட்களாக இந்திய ஒருபால் ஈர்ப்பு நபர்களால் அதிகம் பேசப்பட்ட நபர்... தமிழர்களுக்கு இவர் அதிகம் பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த அழகனை பற்றிய ஒரு சின்ன பதிவுதாங்க இது... “அழகன்” என்று நான் சொன்னது வெறும் வாய் வார்த்தை மட்டும் இல்லை நண்பர்களே... இந்த சுஷாந்த் தான் சமீபத்தில் Mr Gay India 2014 பட்டம் வென்ற இந்திய பேரழகனும் கூட... 

நமக்கு இவர் புதியவராய் இருந்தாலும் கூட, வட இந்தியாவில் சுஷாந்த் ஏற்கனவே ஒரு பிரபலம் தான்... அதற்கு காரணம், இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் என்ற எளிய மக்கள் அடையாளமாகக்கூட இருக்கலாம்... அதுமட்டுமல்லாது இவருக்கு பாடகர், உளவியல் கலந்தாய்வு ஆலோசகர் போன்ற பன்முகங்கள் உண்டு என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்...

ஒருபால் ஈர்ப்பு சமூகத்தின் பல முன்னெடுப்புகளிலும் முன்னின்றவர்... குறிப்பாக மும்பையில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் முக்கிய பங்காக திகழ்ந்தவர்... அதுமட்டுமல்லாமல், இவர் உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதால், குழப்பங்களில் தவித்த பல ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கும் கலந்தாய்வு கொடுத்திருக்கிறார்...

இந்த வெற்றியை கொண்டாடிய மகிழ்வோடு அவர் சொன்ன வார்த்தைகளும் கூட கவனிக்கத்தக்கவை.... “மிகப்பெரிய பொறுப்பும் மதிப்பும் எனக்கு கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்... இந்த வாய்ப்பை நிச்சயம் ஆக்கப்பூர்வமான வழியில் எடுத்து சென்று, நம் நாட்டின் பாலீர்ப்பு சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி உலக அரங்கில் வெளிப்படுத்துவேன்... ஒருபால் ஈர்ப்பை குற்றமென சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு மீண்டும் நம்மீதான சட்டரீதியான இறுக்கத்தை கொடுத்திருக்கும் இந்த தருணத்தில் எனக்கு கிடைத்திருக்கும் இப்படி ஒரு வாய்ப்பை நிச்சயம் பொறுப்பான முறையில் பயன்படுத்துவேன்” என்று கூறும் சுஷாந்த்தின் வார்த்தைகளே மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது....

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்... Mr Gay India 2014 என்ற பட்டம் சுஷாந்திற்கு ஒரு தொடக்கம் மட்டுமே... இந்த பட்டம்தான் அவருக்கு இந்த மாதத்தில் நடக்க இருக்கின்ற Mr Gay World 2014 போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள கிடைத்திருக்கும் நுழைவுச்சீட்டும் கூட... அதனால் இந்த ஆண்டு ‘உலக கே அழகன்’ போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றால், நிச்சயம் இந்தியாவில் பறிக்கப்பட்டிருக்கும் ஒருபால் ஈர்ப்பு உரிமைகள் பற்றி உலக அரங்கில் விவாதிக்கப்பட ஒரு சிறந்த களம் கிடைக்கும்... 

இந்த ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற இருக்கின்ற இந்த போட்டியில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒருபால் ஈர்ப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்... இதுவரை ஐந்து முறை இதைப்போன்று போட்டிகள் நடந்துள்ள நிலையில் 2 முறை நியூசிலாந்து,  2 முறை ஆஸ்திரேலியா மற்றும் 1 முறை அயர்லாந்து நாடுகளை சேர்ந்த அழகன்கள் வெற்றிபெற்றுள்ளனர்.... இந்த ஆண்டு இந்த போட்டியில் கலந்து கொள்ளும் சுஷாந்தின் வெற்றி, நிச்சயம் நமக்கு அவசியமான ஒன்றும் கூட...
உலக அரங்கில் நம் உரிமைக்குரலை உரத்து குரல் கொடுக்க சுஷாந்த் நிச்சயம் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையோடு அந்த பேரழகனை வாழ்த்தி மகிழ்கிறேன்....

(போட்டி முடிந்து அநேகமாக இணைய வழியே நாமும் வாக்களிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றே நினைக்கிறேன்... அப்படி கொடுக்கப்படும் தருணத்தில் நிச்சயம் சுஷாந்திற்கு வாக்களிக்க வேண்டிய வழிமுறைகளை இங்கே பதிகிறேன்)....

இந்த கட்டுரையோடு உங்களுக்கு இணைக்கப்பட்ட சுஷாந்தின் புகைப்படங்கள் முழுக்க முழுக்க உங்களை மகிழ்விக்கவே.... வெகுநாட்களாக கஷ்டங்களையே அதிகமாக பகிர்ந்துவிட்டதன் காரணத்தால், இப்படி ஒரு செய்தி வழியே கொஞ்சம் உங்களை மகிழ்விக்கத்தான் இந்த தகவலும் கூட.... ரசிப்பதோடு மட்டுமல்லாமல் சுஷாந்த் வெற்றிபெற உங்கள் வாழ்த்துகளையும் மறக்காமல் சொல்லிடுங்க மக்களே!....

6 comments:

  1. arumai arumai arumai !! wonderful ! Good luck to Divgikar ! it has been one year since i read an article about Nolan Lewis the 2013 award winner. Health minister is in strong support of us and is personally a good man. Lets hope the discussions should soon begin in the future lok sabha sessions !

    ReplyDelete
    Replies
    1. கருத்துகளுக்கு மிக்க நன்றி ராஜ்....

      Delete
  2. super super super

    nalathu nadakum endra nambikaiyudanum, vallthukaludanum.............

    Iniyavan Sri

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்ரீதர்... நீங்க சொல்வது போல நல்லதே நடக்கும்னு நம்புவோம்...

      Delete
  3. Wow!! I Really Excited.. My Best Wishes to Sushanth... Lets Rock the World... Again my Best Wishes buddy... And I amExpecting for the
    new Dawn from our Government and the Supreme Court....

    ReplyDelete
    Replies
    1. நம் வாழ்த்துகள் பலித்து அவர் வெல்வார் என்று நம்புவோம்.... கருத்திற்கு நன்றி தம்பி..

      Delete