கே, பைசெக்சுவல் தாண்டி பலதரப்பட்ட
பாலீர்ப்புகள் அண்மைய காலங்களில் அதிகம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது...
நமது வலைப்பூவிலேயே இதற்கு முன்பு ஏசெக்சுவல், பான் செக்சுவல் பற்றியல்லாம்
படித்திருப்பீர்கள்... அந்தவகையில் அதிகம் வெளிச்சத்திற்கு வராமல், அண்மையில்
அதிகம் பேசப்பட்டு வரும் ஈர்ப்புதான் ‘க்ரேசெக்சுவாலிட்டி”..
அதென்ன க்ரேசெக்சுவாலிட்டி?... நல்லா கதை
விடுறான்!ன்னு நினைக்காதிங்க...
சரி, எளிமையா சொல்றேன் கேளுங்க..
ஒரு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா
சொல்வாரே “இருக்கு... ஆனா, இல்ல” இதுதாங்க
க்ரேசெக்சுவாலிட்டி.. ஒரு பேச்சுக்காக இதனை உதாரணமா சொன்னாலும், அதுதாங்க நிஜமான
விளக்கமே.. ஒரு நபர் சிலநேரம் பாலீர்ப்பு கொண்டவராகவும், சிலநேரம் பாலீர்ப்பு
அற்றவராகவும் இருக்கக்கூடிய நீர்மை நிலைதான் க்ரேசெக்சுவல்...
இவர்களை பாலீர்ப்பு இல்லாத ஏசெக்சுவல்
பிரிவிலும் சேர்க்க முடியாது, வேறு ஏதேனும் ஈர்ப்பு வகைக்குள்ளும்
உள்ளிடமுடியாது...
இதனோடு டெமிசெக்சுவாலிட்டியை நாம்
குழப்பிக்கொள்ளக்கூடாது.. ஒரு நபர்மீது உணர்வுப்பூர்வமாக ஒட்டுதல் அதிகமாகி,
அதன்பின்னர் அவர்மீது ஈர்ப்பு ஏற்படுவதுதான் டெமிசெக்சுவல்...
“அவன் நேத்து நல்லா க்ளோஸாதான் இருந்தான்...
இன்னிக்கு என்னமோ பிடிக்காம போறான்” என்று பிறரை குழப்பிவிடும்
க்ரேசெக்சுவல் சற்று வித்தியாசமானதுதான்...
இயக்குனர் கிறிஸ்டோபர் ஸ்டவ்ட் இயக்கிய “ஐ ஆம்
க்ரேசெக்சுவல்” என்கிற
ஆவணப்படம்தான், பொதுவெளியில் இப்படியோர் பாலீர்ப்பு இருப்பதை முதலில்
விளக்கியது...
அந்த ஆவணப்படத்தில் தன்னைப்பற்றி விவரிக்கும்
ஒரு இளைஞன், “பல நபர்களோடு நான் பழகியும், என்னால் ஒரு அளவிற்குமேல் அவர்களோடு
ஒட்டுதலாக இருக்கமுடியவில்லை... சிலநேரம் அதிகம் நெருக்கமாகிறேன், சிலநேரம் விலகி
நிற்க விரும்புகிறேன்... என்னை சந்தர்ப்பவாதி என்றுகூட சொன்னவர்கள் உண்டு...
ஆனால், எனக்கிருக்கும் ஈர்ப்பினை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை...
என் காதலனோடு ஆரம்பநாட்களில் உடலுறவில் விரும்பி
ஈடுபட்டேன்... ஆனால், திடீரென ஒருநாள் அந்த ஈர்ப்பு காணாமல் போனது.. என்ன காரணம்
என்பது அப்போது புரியவில்லை.. எனது உணர்வை காதலனிடம் எப்படி வெளிப்படுத்துவது
என்றும் தெரியவில்லை... நிறைய குழப்பங்களுக்கு பிறகு, அந்த உறவு முறிந்தும்”
நமக்கு மத்தியிலும் எத்தனையோ க்ரேசெக்சுவல்
நபர்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம்... இதனை படிக்கும் சிலரே கூட இத்தனை காலம் தனக்கு
ஏதோ பிரச்சினை இருப்பதாக நினைத்திருக்கலாம்... ஆனால், உண்மை என்பது, அதுதான்
இயற்கை... அவர்களின் இயல்பு... இதனை உணராமலேயே திருமணம் செய்தும்,
காதலித்துக்கொண்டும் தங்களை குழப்பிக்கொண்டிருக்கும் நபர்கள், இப்படியோர்
ஈர்ப்பும் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..
காதலிலோ, கமிட்மென்ட் வாழ்விலோ
ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நபர்கள், இதனை தெளிவாக தமது காதலனிடம் விளக்கவேண்டியது
அவசியம்.. இதைப்பற்றி பேசிக்கொள்ளாமலேயே சமாளித்துவிடலாம் என்று கருதும்
பட்சத்தில், அவர் பலதரப்பட்ட காரணங்களை கற்பனை செய்துகொண்டு சர்ச்சைகளுக்கு
வழிவகுக்கும் சிக்கல்களும் உண்டு...
இந்த க்ரேசெக்சுவாலிட்டி உடன் மருத்துவ
ரீதியிலான ஈர்ப்பு குறைபாடுகளை குழப்பிக்கொள்ளவும் கூடாது... சிலவகையான மருந்துகள்
(குறிப்பாக மன அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளும் உளவியல் மாத்திரைகள்) உடலுறவின்
மீதான ஈடுபாட்டினை இயல்பாகவே குறைக்கும் வாய்ப்புண்டு... இதனோடு இயல்பான
க்ரேசெக்சுவல் பாலீர்ப்பினை குழப்பிக்கொள்வது தவறு..
க்ரேசெக்சுவல் போன்ற பாலீர்ப்புகளால் தங்களை
அடையாளப்படுத்திக்கொள்வது நமக்கு சற்று சிரமமான விஷயம்தான்... ஒரு கே, லெஸ்பியன்,
பைசெக்சுவல் போன்ற பாலீர்ப்பு உடையவர்கள் எளிதில் தங்கள் பாலீர்ப்பினைப்பற்றி ஒரு
முடிவுக்கு வரக்கூடிய சூழலில், க்ரேசெக்சுவல் நபர்களால் அது சாத்தியமில்லை..
பல்வேறு குழப்பங்களை தாண்டிதான், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்..
இத்தகைய நபர்களுக்கு இதன்மூலம் சொல்லிக்கொள்வது
என்பது என்னவெனில்,
*க்ரேசெக்சுவல் இயற்கையானதே, அது சந்தர்ப்பவாதம்
கிடையாது...
*இது உங்களுக்கு மட்டும் உண்டாகியிருக்கும்
பிரச்சினையாக கருதவேண்டாம்.. இந்த ஈர்ப்பு நம் உலகத்தில் பலரிடத்திலும் இயல்பாக
காணப்படுவதுதான்...
*உங்களின் ஈர்ப்பினை முதலில் நீங்கள் அடையாளம்
கண்டு, ஏற்றுக்கொள்ளுங்கள்... காதலிக்கும் பட்சத்தில், இதனைப்பற்றி காதலனிடமும்
விபரமாக விளக்குங்கள்...
மீண்டும் அடுத்த ஆக்கத்தில் உங்களை
சந்திக்கிறேன்!