Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 28 October 2012

கே நபரால் ஸ்ட்ரைட்டாக முடியுமா?....

கே நபரால் ஸ்ட்ரைட்டாக முடியுமா?.... ஒரு பால் விருப்பத்தை மாற்றி, எதிர்பால் மீது ஈர்ப்பு வருமாறு செய்ய முடியுமா?....
“முடியும்” என்று சொல்கிறது சில அமைப்புகள்.... அவங்க இப்போ சொல்லல, கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அதற்கு சிகிச்சையும் (?) செய்து வருகிறார்கள்.... இதை நான் சொன்னதும், நீங்க இவர்களை லேகியம் விற்கும் ஆசாமிகள் என்று நினைத்து விடாதீர்கள்... சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் பற்றி பார்ப்போம்.... இவர்களுக்கு பொத்தம் பொதுவாக ex-gay movement என்று பெயர்....

ex-gay movement இயக்கங்கள் ஒருபால் விருப்பம் கொண்டுள்ள கே நபர்களை, எதிர்பால் மீது ஈர்ப்பு வரும் அளவிற்கு செய்வது இவர்கள் முக்கியப்பணி...... பேட்டிசன் (E. Mansell Pattison)  என்பவர் முதல் முறையாக எண்பதுகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார், செக்சின் அடிப்படையை மாற்றுவதாகவும் இதற்கு விளக்கம் கூறினார்.... அதன் பின்பு பல அமைப்புகள் இதை வலியுறுத்தி தொடங்கப்பட்டன......

கே உணர்வை குற்றமாகவும், மனித இனத்திற்கும் மதத்திற்கும் எதிரான ஒன்றாகவும் கே பற்றி  பிரச்சாரம் செய்தார்கள் இந்த அமைப்பினர்........  தவறான பழக்கத்திலிருக்கும் நபர்களை மறுவாழ்வு மூலம் மாற்றுவதாகவும், இயற்கையோடு அவர்களையும் மீண்டும் இணைப்பதாகவும் பெரிய அளவில் பரப்புரைகள் செய்தனர்...... முதன்முதலில்  1973இல் Love in Action என்ற அமைப்பு தான் இப்படி தொடங்கப்பட்ட முதல் அமைப்பு.... பின்னர் Exodus International, என்ற அமைப்பு மிகப்பெரிய அமைப்பாக உருவாகி உலகளவில் பிரசித்தி பெற்றது....  சமீபத்தில் இந்த அமைப்பு தன் முப்பத்தி நான்காவது வருடத்து சேவையை தொடங்கியுள்ளது...... அதேபோல மத ரீதியான சில அமைப்புகளும் உருவாகின.....கத்தோலிக்க கிறித்தவர்களுக்காக  Courage International என்ற அமைப்பும், யூதர்களுக்காக ஜோனா என்கிற அமைப்பும் உருவானது.... conversion therapy என்ற சிகிச்சை மூலம், ஒருவர் தன் பால் மீதான விருப்பத்தை முழுமையாக அகற்ற முடியும் என்றும், எதிர்பால் நபர்கள் மீது ஈர்ப்பு உண்டாக்க முடியும் என்றும் இந்த இயக்கங்கள் விளம்பரப்படுத்தின.... இதில் ஒருசில கொடுமைகளும் நடந்தன.... அதாவது பதின் வயது மற்றும் அதற்கு கீழ் வயதுள்ள குழந்தைகளை இந்த அமைப்புகள் நடத்தும் சிகிச்சைக்கு அனுப்பினார்கள் பெற்றோர்கள்.... அந்த சிகிச்சைகள் கேவலமான ரகத்தவை.... கட்டாயமாக அந்த சிறுவர்களை பெண்களுடன் உறவுகொள்ள செய்வது தொடங்கி அது குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமையாக மாறி, பின்னர் சில அமைப்புகள் சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுகினார்கள்.... சில அமைப்புகள் மட்டும்தான் இப்படி செய்தார்கள்.... பெரும்பாலும் இதை மத ரீதியாக மாற்ற முனைந்தவைதான் பல அமைப்புகளும், நிறுவனங்களும்.... ஆனால், சிலர் இயற்கையாக கே விருப்பத்திலிருந்து விடுபட்டதும் உண்டு.... இன்னும் சிலர் மதரீதியாக மாற்றப்பட்டதும் உண்டு.... உதாரணமாக American Journal of Psychiatry செய்த ஆய்வு ஒன்றில் பதினொரு நபர்கள் தங்கள் கே விருப்பத்தை மறந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்களாம்.... அவர்களுக்கு செய்த ஒரே சிகிச்சை பெந்தகொஸ்தே தேவாலயத்தின் தொடர் கலந்தாய்வு மட்டுமே..... தானாக மாறியவர்களும், இப்படி மதம் மூலம் மாரியவர்களும், சூழ்நிலைகளால் தங்களை மாற்றிக்கொண்டவர்களும் தவிர இந்த அமைப்புகள் சொல்லும் சிகிச்சையால் எவரும் மாறியதாக தெரியவில்லை..... இவர்கள் சொல்லும் சில காரணங்களும் யோசிக்க வைப்பவையாக இருக்கிறது......

கே நபர்களில் 85% அதிகமானோர் சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானதால், இப்படி மாறியுள்ளார்கள்... அப்படியானால், மனம் தான் இதற்கு காரணம் என்றால், இதை மனதை வைத்தே மாற்ற முடியுமல்லவா? என்கிறார்கள்.....
Cnversion therapy, reparative therapy போன்று தங்களுக்குள் சிகிச்சைகளை வைத்துக்கொண்டு பெரிய அளவில் பணமும், புகழும் இந்த அமைப்புகள் ஈட்டின என்றுதான் சொல்ல வேண்டும்.....
ஆனால் பல அறிவியலாளர்கள், இப்படி மாறுவது ஆபத்தான விளைவுகளை கொடுக்கும் என்று எச்சரித்தார்கள்.... 2012இல்  Pan American Health Organization இதை மிகக்கடுமையாக தவறென்று சொன்னது... ஒரு கே'வை மருத்துவ ரீதியாக குணப்படுத்த, அந்த எண்ணம் நோய் அல்ல, அது இயற்கையான ஒரு நிகழ்வு என்று கூறுகிறது ... சிகிச்சைகள் மூலம் இதை குணப்படுத்த இது நோய் அல்ல என்றும் இந்த இயக்கங்கள் தலையில் கொட்டு வைத்தது அமெரிக்க சுகாதார அமைப்பு..... அதே போல புகழ் பெற்ற அமைப்பான, American Psychological Association இத்தகைய இயக்கங்களை பற்றி கூறியதாவது, "இந்த இயக்கங்கள் கே'க்களை தத்துவங்கள் மூலமாகவும், மத ரீதியான கருத்துக்கள் மூலமாகவும் , சில எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் உணர்வு ரீதியாக கருத்துக்களை செலுத்தி எதிர்பால் மீது நாட்டம் வர முனைகிறார்கள்....  கே பழக்கத்தால் சமூகம் மற்றும் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட நபர்கள் இத்தகைய இயக்கங்களை வந்தடைந்தனர்.... இத்தகைய இயக்கங்களால் இந்த நபர்களை கே அடையாளத்திளிருந்து மாற்ற முடிந்ததே தவிர, கே விருப்பத்திலிருந்து மாற்ற முடியவில்லை....  “ என்று கூறியது.....

அது உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்....இதற்கு ஒரு நகைச்சுவையான உதாரணம் கூற வேண்டுமானால், ஒரு திரைப்படத்தில் கடவுளை காட்டுவதாக வடிவேலு ஊர் மக்கள் அனைவரையும் ஒரு மலை மீது அழைத்து சென்று ,”எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார்” என்று கூறியதும், அங்கிருக்கும் அனைவரும் கடவுள் தெரிவதாக கூறுவார்கள் அல்லவா?.... அதைப்போலத்தான், இந்த இயக்கங்களும் மதத்தை தங்கள் ஆயுதமாக பயன்படுத்தினர்.....
“தன் பால் மீது ஈர்ப்பு உள்ளவன், கடவுளின் எதிரி..... இயற்கைக்கு எதிரான உறவு இறைவனுக்கு எதிரானது” என்றெல்லாம் மக்களை உளவியல் ரீதியாக மிரட்டி பணியவைத்தனர் என்றே சொல்ல வேண்டும்.... சிலர் இறைவனுக்கு பயந்து மாறினார்கள், சிலரோ மாறவில்லை என்றால் விடமாட்டார்கள் என்று பயந்து மாறிவிட்டதாக கூறினார்கள்... இப்படி மாறியவர்களை வைத்து விளம்பரப்படுத்தி, மேலும் பலரை தங்கள் அமைப்புகளுக்குள் இழுத்தன இத்தகைய அமைப்புகள்.... இது தவறல்ல என்றும், இயற்கைக்கு முரண் அல்ல என்றும், இதற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை என்றும் புரியாத மக்கள் மட்டுமே இத்தகைய சிகிச்சைக்கு சென்று, நொந்து திரும்பினார்கள்.... அப்படியானால் மாறவே முடியாதா? என்றால், சிலர் மாறியதுண்டு என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.... இயற்கையாக ஒருவருக்குள் உண்டான இத்தகைய உணர்வு, இயற்கையாகவே சிலரை விட்டு விலகியதுண்டு.... அதற்கு காரண காரியங்கள் இல்லை.... நான் குறிப்பிட்ட மதத்தை பற்றி தவறாக கூறியதாக நினைக்க வேண்டாம்.... அத்தகைய அமைப்புகள் மேற்குலக நாடுகளில் இருந்ததால், அந்த மதங்களை பற்றி இங்கு கூறவேண்டி உள்ளது.... இன்னும் இந்தியாவிலும், இந்து மதத்தை காரணம் காட்டி இதை எதிர்க்கும் மக்கள் இருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.....இ.பி.கோ 377 சட்டத்திருத்தத்தை நீக்க கூடாது என்று இங்கு போராடும் அமைப்புகள் தங்கள் மத சாயத்தை பூசித்தான் எதிர்க்கிறார்கள்...... சாதி, மதம், நாடு, மொழி எல்லாம் கடந்தது இத்தகைய உணர்வுகள்..... இந்த உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க அந்த இறைவன் தான் அவர்களை வழிநடத்த வேண்டும்.....

இன்னொரு கொசுறு செய்தியையும் சொல்லிக்கொள்கிறேன், இதுவரை வாலிப, வயோதிக அன்பர்களுக்கு நடு நிசியில் அறிவுரை சொன்ன போலி மருத்துவர்கள், இப்போ தங்கள் பார்வையை கே நபர்கள் மீதும் திருப்பி வருகிறார்களாம்..... “கே பழக்கத்தை ஆறே வாரத்தில் போக்கி காட்டுவதாக” கூறி சிகிச்சைக்கு அழைக்கிறார்களாம்..... அந்த ஆசாமிகளிடம் சென்று, பணத்தை இழந்து, நிம்மதி இழந்து தவிக்காதிங்க நண்பர்களே.....”டேய் நாயே, நீ செய்றது தப்புடா..... அறிவில்லையா உனக்கு?.... நாசமா போகப்போற நீ” என்று ஏகமாக பேரப்பிள்ளைகளை திட்டும் அந்த தாத்தா வைத்தியர்கிட்டையும் போய்டாதிங்க.... மன ரீதியாக உங்களுக்கு குழப்பம் இருந்தால், ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கலந்தாய்வு செல்லுங்கள்.... அது போதும்..... இறுதியாக நம் ஹர்ஷ்பீல்ட் சொன்னது போல, “பொதுவாக பலரும் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், சிலர் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பது தவறல்ல.... அதே போல, பலரும் எதிர் பால் மீது விருப்பம் உடையவர்களாக இருப்பதால், சிலர் தன்பால் மீது விருப்பம் உள்ளவர்களாக இருப்பதும் தவறல்ல.... அது ஒரு நோயும் அல்ல...” நாமும் தெளிவு பெறுவோம், மற்றவர்களையும் தெளிவாக்குவோம்..... நன்றி....

Friday 19 October 2012

"பாலியல் நோய்கள்" - ஒரு பகீர் ரிப்போர்ட்.....

-->
ஒரு ஸ்ட்ரைட் ஆணைவிட, ஒரு கே ஆண் பாலியல் நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.... இதற்கு காரணம் ஆண் பெண் உறவின் வித்தியாசம் இல்லை.... ஒரு ஸ்ட்ரைட் ஆண் பெண்ணுடன் உறவு கொள்ளும் எண்ணிக்கையைவிட, ஒரு கே ஆண் சக ஆணுடன் உறவு கொள்ளும் முறை அதிகம்.... அப்படி இருக்கையில், இயல்பாகவே பாலியல் நோய் தாக்கும் ஆபத்து கே'க்களுக்கு அதிகமாகிவிடுகிறது.... வாய்ப்பு கிடைக்கிறது என்றா ஒரே காரணத்தால், செக்ஸ் மட்டுமே வாழ்க்கையாக்கும் மனநிலைக்கு நம்மில் பலரும் வந்துவிடுவதால் இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள நேர்கிறது..... நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை, குறைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்..... அதற்கு அபாய மணி அடிக்கத்தான் இந்த பதிவு... பாலியல் நோய் உங்களை எந்த விதத்தில் தாக்கலாம்? என்று ஒரு எச்சரிக்கை அறிவிப்புதான் இனி உங்களுக்காக.....

இரண்டு வருடங்களுக்கு முன்பு பிளானட் ரோமியோ மூலம் நான் சந்தித்த நபரின் கருத்து என்னை அதிர்ச்சியாக்கியது..... அவர் கூறியது, "நான் ப்ரொபசனல் கோர்ஸ் படிச்சவங்க கூட மட்டும்தான் ரிலேஷன்ஷிப் வச்சிப்பேன். காரணம், அவங்கதான் டீசன்ட்டா இருப்பாங்க.... அதனால அவங்களுக்கு பாலியல் நோய் எதுவும் இருக்காது" என்றார்.... என்னால் இப்போதும் சிரிப்பாக இருக்கிறது அவர் கருத்தை யோசிக்கும்போது..... படித்து, டீசன்ட்டா இருப்பவர்களுக்கு பாலியல் நோய் இருக்காதுன்னு யார் சொன்னது அவருக்கு?... இது ஒரு ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.... ஆனால், அந்த நபரைப்போன்று பாலியல் நோய் பேதம் பார்ப்பதில்லை..... 

உங்களுக்கு அறிமுகம் இல்லாத, உறவுக்காக சமூக வலைத்தளம் மற்றும் டேட்டிங் வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் அத்தனை பேருமே ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும்.... அதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமே இல்லை.... அத்தகைய நபர்களிடம் நீங்கள் உறவு வைத்துத்தான் ஆகவேண்டும் என்று நீங்கள் உறுதியாக இருந்தால் குறைந்தபட்சம் பாதுகாப்புடன் உறவு கொள்ளுங்கள்..... பாதுகாப்பு என்றால், போலிஸ் பாதுகாப்பா?னு மொக்கை ஜோக் அடிக்கக்கூடாது.... உறவுக்கு முன்பும் பின்பும் உடல் உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் (குறிப்பாக உங்கள் கைகளை சோப் போட்டு நன்றாக கழுவுங்க), ஓரல் செக்ஸ் (வாய் புணர்ச்சி), ஆனல் செக்ஸ் (ஆசன வாய் புணர்ச்சி) போன்றவற்றில் ஈடுபடுவதாக இருந்தால் கட்டாயம் ஆணுறை பயன்படுத்துங்கள்.... உமிழ்நீர் மூலம் (salaiva) எயிட்ஸ் பரவாது (மிக மிக அரிதாக அப்படி நடக்கும், அது மிகக்குறைவான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது) என்பதால் ஓரல் செக்ஸ் மூலம் எயிட்ஸ் பரவாதா?னு சிலர் நினைப்பார்கள்.... பரவ வாய்ப்பு குறைவுதான் என்றாலும், ஒருவேளை ஓரல் செக்ஸில் ஈடுபடும் ஒருவரின் பற்களில் ரத்தம் கசிதல், வாய்களில் சிறிய புண் எதுவும் இருந்தால் ஆபத்து அதிலிருந்து வரலாம்.... காரணம், அத்தகைய இடங்களில் உள்ள ரத்தத்தின் மூலம் எயிட்ஸ் பரவலாம்.... அதே போல, ஒருவரின் ஆணுறுப்பில் புண், காயங்கள் எதுவும் இருந்தால், அதில் ஓரல் செக்ஸில் ஈடுபட்டால், அதிலிருக்கும் ரத்தம் மூலமும் எயிட்ஸ் பரவலாம்.... பார்த்ததும் ஒருவருக்கு எயிட்ஸ் இருக்கிறதா? என்பதை நாம் கண்டுபிடிக்க முடியாது..... அந்த நபரால் கூட சில மாதங்களுக்கு பின்னர்தான் தனக்கு எயிட்ஸ் இருப்பதை சோதனைகள் மூலமே அறிந்துகொள்ள முடியும்.... விண்டோ பீரியட் என்று சொல்லப்படும் அந்த சில மாதங்களில் எச்.ஐ.வி தொற்றி இருந்தால் கூட, சோதனையில் அது கண்டுபிடிக்க முடியாது....  சரி எயிட்ஸ் பற்றி பார்த்தாச்சு.... மற்ற பால்வினை நோய்களை பற்றி பொதுவாக பார்த்திடலாம்.... மொத்தம் 25வகையான பால்வினை நோய்கள் (sexually transmitted disease) இருக்கிறது... பாதுகாப்பற்ற உடல் உறவின் மூலம், இந்த நோய்களுடன் சில பொதுவான பாதிப்புகளும் வர வாய்ப்பிருக்கு.... அதனால், பால்வினை சார்ந்த நோய்கள் பட்டியல் இன்னும் நீளலாம்..... பொதுவாக உறுப்பில் புண் , வலி, சிறு கொப்பளங்கள், அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது வலி, துர்நாற்றம், விறைப்பைய்யில் வலி மற்றும் வீக்கம், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வெளியாகுதல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும்.... பெரும்பாலும் 97% நோய்கள் ஆண்ட்டி பயோட்டிக் மருந்துகள் மூலம் சில நாட்களில் குணப்படுத்திவிட முடியும்....

 நீங்கள் மருத்துவரை அணுக தயங்கியோ பயந்தோ இருந்துவிட்டால் விளைவுகள் விபரீதமாகும்.... அதிகபட்சமாக, உங்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் அளவு கூட சிலருக்கு நேர்ந்திருக்கிறது.....  சில நேரத்தில் நீங்கள் உறவு கொள்ளும் நபருக்கு இத்தகைய எந்த அறிகுரியுமே இல்லாமல், அத்தகைய பிரச்சினை உங்களுக்கு வரலாம்.... அப்படியும் நடக்க வாய்ப்புண்டு..... குறிப்பாக chalmydia infection சிலருக்கு இத்தகைய அறிகுறிகளை காட்டாது.... ஆனால், அந்த நபர் அடுத்த நபருடன் உறவு கொள்ளும்போது, புதிய நபருக்கு இந்த தொற்று அறிகுறிகளை காட்டிவிடும்.... அப்படி அறிகுறிகளை காட்டாமல் ஒளிந்து அடுத்தவரை தாக்கும் நிலைக்கு பெயர் sexually transmitted infection..... உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் இருக்கிறது (வாயிலும் இருக்கிறது?), அதனால் அதை நீங்கள்தான் கவனத்துடன் கையாள வேண்டும்..... நான் முதல் பத்தியில் குறிப்பிட்டதை போல, ஸ்ட்ரைட்டை விட, ஒரு கே பாலியல் நோய்க்கு ஆளாகும் வாய்ப்பிற்கு இன்னொரு முக்கிய காரணம், பெரும்பாலான இத்தகைய நோய்கள் ஓரல் மற்றும் ஆனல் செக்ஸ் வழியே பரவுகிறது, இவை இரண்டுமே கே செக்ஸில் பிரதான இடம் வகிப்பதால் இத்தகைய நோய்கள் ஓரின விரும்பிகளை தாக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் சொல்லலாம்....

ஒரு மணி நேர சுகத்தை நினைத்து, பாதுகாப்பற்ற சூழலில் உறவு வைத்து பின்பு அதை நொந்து பல நாட்கள் கவலைப்படாதீர்கள்..... ஏதோ தவறாக தெரிந்தால், தயக்கமின்றி மருத்துவரை அணுகுங்கள்.... மகிழ்வாக வாழ, உடல் மற்றும் மனநலத்துடன் வாழ பாதுகாப்போடு விழிப்புனர்வாக இருங்கள்..... வாழ்த்துகள்....

Tuesday 16 October 2012

கற்பனை திருட்டு - ஓர் எச்சரிக்கை.....

அன்பு நண்பர்களே,

                              சமீப காலங்களாக நான் இங்கே பதிவிடும் சில பதிவுகள், என் அனுமதியின்றி , என் கவனத்திற்கு வராமல் சிலர் தங்களது வலைத்தளங்கள், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதலங்கலான பேஸ்புக்'இல் ஸ்டேட்டஸ் போன்ற வடிவிலும், இவை அவர்களுடைய பதிவை போல பதிந்து வருவதை என் நண்பர்கள் மூலம் அறிந்தேன்...... உலகிலேயே மிகவும் கீழ்த்தரமான, அநாகரிகமான திருட்டு இந்த வகையான "கற்பனை திருட்டுகள்".... என் பதிவுகளை பவிர்வது என்பது வேறு, திருடுவது என்பது வேறு..... பகிர்வது என்றால் என்னிடம் அனுமதி பெற்றோ அல்லது அது என் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற அறிவிப்புடனோ அவர்கள் இங்குள்ள பதிவுகளை பதிவது பகிர்தல் ஆகும்.... அத்தகைய பகிர்தலை நானும் வரவேற்கிறேன்.... ஆனால், இந்த பதிவுகளை தாங்கள் யோசித்து எழுதுவது போன்றதொரு பிம்பத்தை உருவாக்கும் வண்ணம், என் பதிவுகளை அவர்களே பதிவதை போல பதிவது சந்தேகமே இல்லாமல் "திருட்டு" ஆகும்..... நான் முன்பே சிலரிடம், இதைப்போன்ற கற்பனை திருட்டுகளை செய்யாதீர்கள் என்று நான் கேட்டுக்கொண்டபிறகும், சிலர் அதே தவறைத்தான் செய்கிறார்கள்..... பல்வேறு பணிச்சுமை மற்றும் சூழல்களுக்கும் மத்தியில் இத்தகைய பதிவுகளுக்கான தகவல்களை திரட்ட ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது இங்கு எழுதும் ஒவ்வொருவருக்கும் தான் புரியும்.... அத்தகைய பதிவுகளை, எவ்வித மன உருத்தளுமின்றி இப்படி உங்கள் பதிவாக காட்டிக்கொள்ள எப்படி முடிகிறது உங்களால்?..... இனியும் இதுபோன்ற விஷயங்கள் தொடருமானால், அடுத்தமுறை "திருட்டு பக்கங்கள்" என்கிற பெயரில் ஒரு பதிவை தொடங்கி, அதில் இப்படி செய்தவர்களின் , செய்பவர்களின் பதிவுகளின் இணைப்போடு இங்கு பதிந்து, இன்னும் காரமான விமர்சனங்களை  அவர்கள் மீது தொடுப்பேன் என்று கூறிக்கொள்கிறேன்......

                                                                                                          நன்றி,
                                                                                                                   உங்கள் விஜய்.....

Monday 15 October 2012

"மார்'ல சாஞ்சு அழனும்" - சிறுகதை.....


வாசகர்களின் கவனத்திற்கு : இது முழுக்க முழுக்க கற்பனை கதையே.... இதில் குறிப்பிடப்படும் பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே......


நான்கரை வருஷமாக மாணவனாக இருந்த என் கல்லூரியில் இன்று பயிற்சி மருத்துவராக உள்ளே நுழைகிறேன்.... இந்த இறுதியாண்டு தேர்வில் எப்படி தேர்ச்சி பெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை.... காரணம் என்ன பெருசா இருக்கப்போகுது?... என் வயது இளைஞர்களுக்கு வழக்கமாக வரும் பிரச்சினைதான்... ஆம், காதல் தோல்வி.... வழக்கமான பிரச்சினை, கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக நடந்தது..... ரொம்ப குழப்புறேனா?.... வழக்கமான காதல் தோல்விதான் என்றாலும், கொஞ்சம் இயல்பை மீறிய ஓரின காதல்.... நான் சொன்னது சரிதானே?... காதல் தோல்விக்கு என்ன காரணம்? என்று நீங்கள் கேட்டால், சத்தியமாக  அதற்கு பதில் எனக்கு தெரியலைங்க..... கடந்த இரண்டு மாதங்களாகவே அந்த நிகழ்வு என் நினைவை சிதறடித்து இம்சித்தது.... நேற்று இரவும், அந்த ஞாபகத்தால் வெகுநேரம் தூக்கம் வராமல் உலவிய விளைவுதான் இப்போ தலைவலியாக உருவெடுத்து நிற்கிறது.... சரி, வாங்க என் வேலையை பார்ப்போம்.... முதல் போஸ்டிங்கே ஸ்கின் டிப்பார்ட்மெண்ட்.... பெரிய தொந்தரவு இல்லாத டிப்பார்ட்மெண்ட்தான், ஆனாலும் அங்குள்ள எச்.ஓ.டி குமார் சார் கொஞ்சம் இம்சை.... எட்டு மணி ஆகிடுச்சு, முதல் நாளே லேட்டா போகக்கூடாது.... டிப்பார்ட்மெண்ட் ரூம்குள்ள போனேன்.... என்னை பார்த்ததும் கொஞ்சம் குஷியான எச்.ஓ.டி, "ஹெல்லோ சிவா, வா வா..... இன்னும் பதினைந்து நாள் போர் அடிக்காம இருக்கப்போகுது.... ஹ ஹ ஹா...." சிரித்தார்.....
என்னை ஏதோ விளையாட்டு பொருளாக பார்க்கிறாரே என்ற என் கடுப்பை காட்டிக்கொள்ளாமல், பதிலுக்கு சிரித்தபடியே உள்ளே நுழைந்தேன்... ஏற்கனவே இன்னொரு பயிற்சி மருத்துவ பெண்ணும் அங்கு அமர்ந்திருந்தாள்... எதிரில் இருந்த இருக்கையில் என்னை அமர சொன்னார் குமார் சார்...... நான்கரை வருடத்தில் எப்போ அந்த ரூம்'குள்ள வந்தாலும் கை கட்டி நின்றே பழகிய எனக்கு இன்று பயிற்சி மருத்துவரானதும் ஒரே நாளில் இந்த மாபெரும் மாற்றத்தை மனம் கொஞ்சம் ஏற்க மறுத்ததால், அசௌகரியமாகவே அமர்ந்திருந்தேன்.... ஒரு பக்கம் இயல்பாகவே தூக்கமின்மையால் வந்த தலைவலி, மறுபுறமோ எச்.ஓ.டி என்கிற பெயரில் இன்னொரு தலைவலி.... அறையை சுற்றும் முற்றும் பார்த்தேன்.... சுவரில் மாட்டியிருந்த நாட்காட்டியில் "விஷால் ஹாஸ்பிட்டல்" என்ற பெயர் பளிச்சிட்டது.... "விஷால்" அந்த பெயரை பார்த்ததும் மீண்டும் அவன் ஞாபகம் வந்துவிட்டது.... பேஸ்புக்கில் நண்பனாக அறிமுகமான அவன், ஒரு நேரத்தில் காதலனாக மாறுவான் என்று அப்போது நான் நினைக்கவில்லை.... பல காரணங்களாலும் அவன் காதலை நான் முதலில் ஏற்க மறுத்தாலும், ஒருகட்டத்தில் அரை மனதுடன் ஏற்றேன்.... பின்னர் என் இதயத்தின் நான்கு அறைகளிலும் அவன் நினைவே நிரம்பி இருந்தன.... "எனக்கு வேற எதுவும் வேண்டாம் சிவா.... மனசு கஷ்டமா இருக்குறப்போ உன் மார்ல சாஞ்சு அழுதா, அதுவே எனக்கு போதும்" என்று அடிக்கடி சொல்வான்.... எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத இத்தகைய காதலன் கிடைக்க நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும் என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன்.... நாளாக நாளாக அவன் வேறு எதையோ எதிர்பார்த்து கிடைக்காதது போல, தேவையற்ற சண்டைகள் உருவாகின.... ஆரம்பத்தில் அது இயல்பானதோ? என்று நினைக்கும்போது, அந்த சண்டைகள் தீவிரமாகின.... ஒருகட்டத்தில், சுத்தமாக என் தொடர்பையே துண்டித்துவிட்டான்.... இரண்டு மாதங்களாக அவனிடமிருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போனது.... என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் அரும்பியது.... எவரும் அறியாமல் துடைத்துக்கொண்டு, நிமிர்ந்தேன்.... என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் எச்.ஓ.டி.... நான் அழுததை கவனித்திருப்பாரோ? என்று நான் திடுக்கிட்டேன்.....
"என்ன சிவா, பயங்கர ஜாலி மூட்ல இருக்க போல.... நைட்லாம் செம்ம பார்ட்டியா?.... கண்ணெல்லாம் செவந்திருக்கு.... ஹ ஹ ஹா....." இடியென சிரித்தார்.... இப்போதெல்லாம் அவர் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு மற்றவர்களை எதிர்பார்க்காமல் தானே சிரித்திடுறார்.... நல்லவேளையாக அதன்மூலம் அவர் ஜோக்'தான் சொல்கிறார் என்று புரிந்துகொண்டு நாங்களும் சிரித்திடுவோம்.....
இன்று நிஜமாகவே நான் சிரித்துவிட்டேன்...  நான் ஜாலி மூடில் இருப்பதாக அவர் நினைப்பைக்கண்டு சிரிக்க மட்டும்தானே முடியும்.....
"என்ன சிவா யோசிக்குற?.... எப்டி நான் கண்டுபிடிச்சென்னு பாக்குறியா?.... நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சிருக்கேன்பா" என்று சிரித்தார் குமார் சார்.....

"உங்க சைக்காலஜி'ய தூக்கி சாக்கடைல போடுங்க" என்று என்னை சொல்லசொல்லி என் மனது கட்டளையிட்டது என்றாலும், சொன்னால் என்னாகும் என்று அறிவு எச்சரித்து வாய்ப்பூட்டு சட்டம் போட்டது.....
நானும் சிரித்துக்கொண்டே, "இல்ல சார்.... கொஞ்சம் தலைவலிக்குது.... பார்ட்டிலாம் ஒண்ணுமில்ல சார்" என்றேன்....
சரியாக அந்த நேரத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஸ்கின் போஸ்டிங் வந்தார்கள்.... எங்கள் காலேஜ் பசங்கள்ளயே பல நேரம் பெருமூச்சு விடுற அளவுக்கு செம்மையா இருக்கிறது அந்த பசங்கதான்..... பெரும்பாலும் மலையாளி பசங்க, எது எது, எங்க எங்க, எவ்வளவு எவ்வளவு இருக்கணுமோ அது அது, அங்க அங்க, அவ்வளவு அவ்வளவு கச்சிதமா இருக்கும் அந்த பசங்ககிட்ட.... அதுவும் அவனுக பேசும் அந்த "கொஞ்சு தமிழ்" மொழியே நம்மை கொஞ்ச சொல்லி இம்சிக்கும்.....  குமார் சார் இருப்பதையும் மறந்துட்டு, உள்ளே வந்த பசங்களை பார்த்துக்கொண்டு (?) இருந்தேன்....
குமார் சார் அவங்களுக்கு வழக்கமான பாடங்களை சொல்லிக்கொண்டு இருக்க, வரும் சிறு சிறு கேஸ்களை நானும் அந்த இன்னொரு பயிற்சி மருத்துவ பெண்ணும் பார்த்து, பக்கத்து ரூமில் இருந்த மற்ற அஸோசியேட்'களிடம் அனுப்பினோம்.....

அப்போது அந்த அறை வாசலில் ஒரு இளைஞன் தயங்கியபடியே வெகுநேரமாக நின்றுகொண்டிருந்ததை கவனித்த குமார் சார், அந்த இளைஞனை அழைத்தார்.... வழக்கமாக ஸ்கின் டிப்பார்ட்மெண்ட் வரும் நோயாளிகள் நேராக உள்ளே வந்துவிடுவார்கள், ஆனால் பாலியல் சம்மந்தப்பட்ட நோய்கள் தொடர்பாக வருபவர்கள் அப்படி தயங்கி நிற்பது எங்களுக்கு புதிதல்ல..... குமார் சார் அழைத்ததும், கொஞ்சம் தயங்கியபடியே அறை வாசலில் வந்து நின்றான்....
“யார் தம்பி நீ?.... என்ன வேணும் உனக்கு?.... யாரை பாக்கணும்?” பக்குவமாக கேட்டார் குமார் சார்....
அறைக்குள் கூட்டமாக நின்ற மாணவர்களை பார்த்தான், அமர்ந்திருந்த என்னையும், சக பயிற்சி மருத்துவ பெண்ணையும் சுற்றியும் முற்றியும் பார்த்தான்.... எனக்கோ அவனை பார்த்ததும் ஒரு பரிதாபம் உண்டாகியது.... அவன் இவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் தன் பிரச்சினையை கூற தயங்குவது அப்பட்டமாக தெரிந்தது....
ஆனால், குமார் சாரோ, “கேட்டுட்டே இருக்கேன்ல, என்ன ப்ராப்ளம் உனக்கு?.... எனக்கு வேற வேலை இல்லைன்னு நெனச்சியா?” இம்முறை அவர் குரலில் கோபம் தொனித்தது.....
அந்த இளைஞன் மருந்துக்கு கூட வாயை திறப்பதாக தெரியவில்லை, எங்க குமார் சாரும் மரமண்டை மாதிரி அவனை விடுவதாக தெரியவில்லை....

சூழ்நிலை அறிந்து நானே குமார் சாரிடம் தயங்கியபடியே, “சார் செக்சுவலி ட்ரான்ஸ்மிட்டட் டிசிஸ் எதுவும் இருக்கும் போல சார், அதான் தயங்குறான்” என்றேன்....
வந்த முதல் நாளே நமக்கு அட்வைஸ் செய்கிறானே என்ற பார்வையில் என்னை பார்த்தார் குமார் சார்.... இருந்தாலும், ஏதோ ஒரு பூர்வ போஸ்டிங் நற்பெயரால் அவர் கோபத்துக்கு நான் ஆளாகாமல், “ஓகே, பக்கத்து ரூம் கூட்டிட்டு போயி கேஸ் ஹிஸ்டரி எடுத்துட்டு வா” என்றார்....
சற்றும் தாமதிக்காமல் அவனை அழைத்துக்கொண்டு பக்கத்து அறை சென்றேன்.... இப்போ அவன் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தது மாதிரி தெரிந்தது.... அவனை இன்னும் இயல்பாகும் வண்ணம், அவனை பற்றி மற்ற பொதுவான விஷயங்களான படிப்பு, ஊர் பற்றியல்லாம் கேட்டேன்.... அவன் பெயர் முத்து, பொறியியல் கல்லூரி மாணவன்.... அடிப்படை பரிச்சயத்திற்கு பின்பு, மெதுவாக என் மருத்துவ கேள்விகளை கேட்டேன்.....

“என்ன ப்ராப்ளம் முத்து உனக்கு?”
“அண்ணா, அது..... அது வந்து.....”
“தயங்காம சொல்லு...... அண்ணன்னு சொன்னதுக்கப்புறம் என்ன பயம் உனக்கு?.... நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்”
“யூரின் போறப்போ ‘அந்த’ இடத்துல வலிக்குது, அப்பப்போ எல்லோ கலர்ல தண்ணி மாதிரி வருது, விரைப்பை வீக்கமா இருக்கு, அதிலயும் வலியா இருக்கு” இவ்வளவு நான் இயல்பானவனாகவும், தோழமையுடன் அவனிடம் பேசியும், அவன் என்னை இன்னும் ஒரு மருத்துவன் என்ற அளவுக்குத்தான் பார்க்கிறான் என்பது அவன் பதிலிலிருந்து தெரிந்தது..... வரும் நோயாளியிடம் வேறு எதை எதிர்பார்க்கிற? என்று என் மனம் என்னை ஏளனமாக கேட்டது.....
“சரி, சமீபத்துல எப்பவாச்சும் செக்ஸ் வச்சுகிட்டியா?” என்றேன்....

இதை கேட்டதும் அதிர்ச்சியில் என்னை நோக்கினான், நான் அவனை கண்டுகொள்ளாததுபோல என் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருந்தேன்..... அவனிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை....
“உன்னைத்தான் கேக்குறேன் முத்து, கடைசியா எப்பவாச்சும் செக்ஸ் வச்சுகிட்டியா?” என்றேன்....
தயங்கியபடியே, “ஆமா, ஒரு வாரத்துக்கு முன்னாடி” என்றான்....
“நீ ஒழுங்கா சொன்னாத்தான் உனக்கு இங்க சரியா ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க, எதையும் மறைக்காம சொல்லு..... யார்கூட ?” என்று நான் இப்போ ஒரு மருத்துவனாகவே கேட்டேன்...
அவன் யார் கூட செக்ஸ் வச்சுகிட்டான்? என்பதை வைத்து ஒன்னும் ட்ரீட்மென்ட் பார்க்கப்போறதில்லை, என்றாலும் அவன் கே’யா என்ற கேள்விக்கு எனக்கு விடைதெரிய ஆவளாக இருந்தேன்.....
மென்று முழுங்கியபடி அவன், “ஒரு பையன் கூட பண்ணேன்.... ஒரே பையன் கூடத்தான், வேற யார்கூடவும் இல்ல” என்று கூறிய பின்பு அவன் கண்களை கசக்கினான்....

அப்படியே அவனை குமார் சாரிடம் கொண்டு போய் நிறுத்தினால், அத்தனை நபர்கள் மத்தியிலும் இதே கேள்வியை, அவர் பாணியில் இன்னும் அதட்டலுடன் கேட்டால் நிச்சயம் முத்து தாங்க மாட்டான் என்று எண்ணி, இன்னொரு அறையில் இருந்த அஸோசியேட்’டிடம் கூட்டி சென்று, சிகிச்சை அளிக்க உதவி செய்தேன்... மருந்து மாத்திரை வாங்கும் வரை அவனுடனே இருந்தேன்.... ஆனால், அவனோ அங்கிருந்து ஓடினால் போதும் என்று செல்லும் முன் கூட ஒரு வார்த்தையும் சொல்லிக்காம போய்விட்டான்..... “அண்ணன்” என்று சொன்னதனால், அவன் என்னை அண்ணனாகவே நினைக்க வேண்டும் என்ற என் எதிர்பார்ப்பு எவ்வளவு முட்டாள்த்தனமானது என்று என்னையே நொந்துகொண்டேன்.... பின்னர் வழக்கம்போல குமார் சார் அறைக்கு சென்றேன்....
“என்ன சிவா, ஒரே அடியா அவன்கூடவே போய்ட்டியோன்னு நெனச்சேன்.... ஹ ஹ ஹா....”
“இல்ல சார், எனக்கு தெரிஞ்ச பையன் அதான்....” அவரிடமிருந்து தப்பிக்க, இப்படி அடிக்கடி போய் சொல்ல வேண்டி இருக்கிறது....
“என்ன ப்ராப்ளம் அவனுக்கு?”
“கோனொரியா இன்பக்சன்..... பெயின் டூரிங் யூரினேசன், எல்லோ டிஸ்சார்ஜ், ஸ்க்ரோட்டல் ஸ்வேல்லிங் எல்லாம் இருக்கு சார்..... ரஞ்சித் சார் ஆண்டிபையோட்டிக் ப்ரெஸ்கரைப் பண்ணிருக்கார்” வரிசையாக எல்லாவற்றையும் சொன்னேன்.....
“தெரிஞ்சவன்னு வேற சொல்ற, அந்த இன்பக்சன்’கு நீ காரணம் இல்லையே??” இம்முறை அந்த சிரிப்பு என் தலைவலியை இன்னும் அதிகமாக்கியது.... அவர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்து, என் உடன் அமர்ந்திருந்த பெண்ணும் சிரிக்க, எனக்கோ தர்மசங்கடமாக போய்விட்டது.... இரண்டு தலைவலிகளிலும் தற்காலிகமாக தப்பிக்க கேண்டீன் போக முடிவு செய்தேன்.... குமார் சாரிடம் சொல்லிவிட்டு கேன்ட்டீன் சென்றேன்.....  நான் சென்ற நேரம் பொதுவாக கேண்டீனில் அங்கு பணிபுரியும் ஒருசிலரை தவிர யாரும் இருக்க மாட்டாங்க.... அது ப்ரைம் டைம் வகுப்புகள் நடக்கும் நேரம்.... கேண்டீன் உள்ளே நுழைந்ததும், முழுவதுமாக காலியாகி இருந்த மேசைகளுக்கு நடுவில், ஒன்றில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தான் முத்து.... மருத்துவமனையை விட்டு, எங்கோ அவசரமாக ஓடியதை பார்த்தபோது, அநேகமாக ஏர்போர்ட் சென்றிருப்பானோ என்று நினைத்தேன்.... இவ்வளவு அவசரமாக ஓடியது, இந்த காபிக்குத்தானா? என்று எனக்குள் சிரித்துக்கொண்டேன்..... என்னை அங்கு நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான், என்னை கண்டதும் காணாததைப்போல தலையை கவிழ்த்து அலைபேசியை நோன்டிக்கொண்டிருந்தான்..... அப்படி இருப்பதன் மூலம், என் பார்வையிலிருந்து அவன் தப்பித்துவிடுவதாக நினைக்கும் அளவிற்கா அவன் முட்டாள் என்று நினைத்துக்கொண்டே, அவனை காணாததுபோல உள்ளே சென்றேன்.... நான் அவனை க்ராஸ் செய்ததும், தப்பித்ததாய் நினைத்து அவன் விட்ட பெருமூச்சு நடந்து சென்ற எனக்கு துல்லியமாக கேட்டது.... உள்ளே சென்று காபியை வாங்கிவிட்டு, மீண்டும் அவன் அமர்ந்திருக்கும் மேசையில், அவனுக்கு எதிரில் அமர்வேன் என்று அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான்.....
அவனுடைய எந்த செய்கைகளையும் நான் கவனிக்காதவனைப்போல, “ஓ முத்து, நீ இங்கதான் இருக்கியா?” என்று சிரித்தேன்....

“ஆமா...” என்று கூறிவிட்டு அசடு வழிய சிரித்தான்.... அந்த சிரிப்புக்கு பின்னால் புதைந்திருந்த சோகத்தை என்னால் எளிதில் உணர முடிந்தது....
“அந்த மருந்தல்லாம் மறக்காம சாப்பிடு.... அப்புறம், கொஞ்ச நாள் எதுவும் வேணாம்” இப்படி நான் கூறியது அவனுக்குள் பயத்தை உருவாக்கியதை அவன் கண்கள் எனக்கு காட்டிக்கொடுத்தது....
நான் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல், “சரி, நான் கெளம்புறேன்” என்று செல்ல முற்பட்டான்.... ஒரு மருத்துவனுடைய உறவை, மருத்துவமனை வாசலை தாண்டி எடுத்து செல்ல கூடாது என்பதை அவன் தீர்மானமாக யோசித்திருப்பானோ? என்று நான் யோசித்தேன்.....

இருந்தாலும் நான் விடுவதாக இல்லை.... அவனை கொஞ்சம் அதட்டலோடு அமர சொன்னேன், பயத்துடனே அவனும் அமர்ந்தான்...
“ஏன் முத்து என்ன பார்த்து பயப்படுற?.... நான் ஒன்னும் உன்னைய கடிச்சு தின்னுட மாட்டேன்.... நானும் உன்ன மாதிரி ஒருத்தன்தான்” என்றேன்.... நானும் அவனை மாதிரிதான் என்று சொன்னதை அவன் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதை அவன் குழப்பமான முகத்தை பார்த்து தெரிந்துகொண்டேன்....
“புரியலையா?.... நானும் ஒரு கே தான்” இப்படி படாரென்று போட்டு உடைத்தது எனக்கே கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது..... இருந்தாலும் ஏதோ அசட்டு தைரியத்தில் அவனிடம் சொல்லிவிட்டேன்.... அதை கேட்ட அவன் இன்னும் அதிர்ச்சியானான்..... ஏதோ கேட்க தோன்றியும், அவனால் அதை கேட்க முடியாத அளவிற்கு அவன் மனம் அவனை தடுத்ததை உணர்ந்தேன்....

“நெஜமாதான் சொல்றேன் முத்து.... அதனாலதான், நீ ஒவ்வொருதடவையும் ஓடப்பார்த்தாலும், உன்னைய நான் விடாம துரத்துறேன்.... உன் வலியும், கஷ்டமும் எனக்கு புரியும்... என்னை நம்பு” என்று அவன் கைகளை பிடித்தேன்.... கைகள் நடுக்கமுற்று, வியர்த்து சில்லிட்டது.... சட்டென அவன் என் கைகளை விலக்கி விட்டான்.... அவன் செய்கை என்னை குழப்பியது.... ஒருவேளை நான் அவனை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக நினைக்கிறானா?... இருக்காது, அண்ணன் என்று சொன்னபிறகு யாரும் அப்படி நினைக்க மாட்டாங்கன்னு அவனுக்கு தெரியும்... அப்போ, இன்னும் அவன் என்னை நம்பலையா? இருக்கலாம்....
“நானும் ஒரு பையனை லவ் பண்ணி, எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு இப்போ பிரிஞ்சிட்டோம் முத்து....” என்றேன்.... இதற்கும் நிச்சயம் பதில் வராது என்று எனக்குள் தோன்றினாலும், அவனிடம் அதை சொல்ல சொல்லி என் ஆழ்மனம் அழுத்தமாக சொன்னது....
எதிர்பாராத அதிசயமாக அவன் பேச தொடங்கினான், “சாரி அண்ணே, நான் பயந்துட்டேன்.... அதனாலதான் உங்ககிட்ட சரியா பேசமுடியல.... நானும் ஒருத்தரை லவ் பண்றேன் அண்ணே.... கே’ன்னாவே பொதுவா வேற மாதிரி தான் நினைக்குறாங்க.... லவ் பற்றியல்லாம் யாரும் நம்ப மாட்டாங்க.... அதான், நம்மள மாதிரி ஆளுங்கள்ட்டயே நான் லவ் பற்றி சொல்றதில்ல....”
“இவ்வளவு பேசுவியா முத்து நீ?.... எனக்கு ஆச்சரியமா இருக்குப்பா.... சரி, ஒரே ஒருத்தர்கிட்டதான் நீ ரிலேஷன்ஷிப் வச்சுக்கிறன்னா, இது எப்டி உனக்கு?” தயங்கியபடி கேட்டேன்.... ஆனால், அவனோ தயக்கம் எதுவும் இல்லாமல் சொல்ல தொடங்கினான்....
“என் லவ்வர் நல்லவன் தான்... ஆனால், சில விஷயங்கள் எனக்கு பிடிக்கலைனாலும், விருப்பம் இல்லைனாலும் அதை செய்ய சொல்லி கம்பல் பண்ணுவான்.... மற்றபடி, என் மேல ரொம்ப பாசமா இருப்பான்... அதனாலேயே, அவனுக்காக நான் சில விஷயங்களை அக்சப்ட் பண்ணேன்... அதோட விளைவுதான் இது..... உங்க லவ் எதனால அண்ணே ப்ரேக் அப் ஆச்சு?” இப்போது என்னைப்பற்றி கேட்டான்.....

“என்ன காரணம்னு தெரியல .... ஆனால், மூணு மாசத்துக்கு முன்னாடி, ஒரு காரனமுமே இல்லாம என்னைவிட்டு விலக ஆரமிச்சான், அப்டியே மொத்தமா விலகிட்டான்.... அனேகமா, அவன் எதிர்பார்த்ததை என்னால கொடுக்க முடியலையோ என்னவோ” என் கண்கள் என்ன அறியாமல் கலங்கியது....
என் கைகளை இப்போது அவன் பிடித்து, “கவலைப்படாதிங்க அண்ணே.... நிச்சயம் மனசு மாறி, மறுபடியும் உங்களை தேடி வருவார் அவர்....” என்றான்.... அதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்குள் எழாவிட்டாலும், அவன் சொன்னதும் அப்படி நடக்குமோ? என்ற எண்ணம் எனக்குள் துளிர்விட்டு மனதை இலகுவாக்கியது.....
முத்துவை நான் சமாதானப்படுத்த வந்துவிட்டு, இப்போ அவன் எனக்கு சமாதானம் செய்து கொண்டிருப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது.....
“சரி முத்து.... உனக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை உன் லவ்வர் செய்ய சொன்னா, நீ அதை அவருக்கு புரியவைக்கனும்பா.... இப்போ தேவையில்லாம கஷ்டப்படுற பாரு நீ...... இவ்வளவு பாசமா இருக்குற உன் லவ்வர், நிச்சயம் இதை புரிஞ்சுக்குவார்.... அதனால பேசுப்பா” என்று கூறியது அவனை யோசிக்க வைத்தது....
“ஆமாம் அண்ணே.... இந்த விஷயத்துல அவர் ரொம்பவே அடம் பிடிக்கிறார்.... மற்ற நேரத்துல வேற எதுவுமே வேனாம்னும், என் மார்ல சாஞ்சு அழுதா போதும்னும் சொல்வார்.... கடைசிவரை என்கூட இருந்தா போதும், வேற எதுவும் வேனாம்னும் சொல்வார்.... நிச்சயம் பேசுறேன் அண்ணே.... “ அவன் இப்படி அடுக்கடுக்காக பேசிக்கொண்டிருந்தாலும், இப்போ அவன் சொன்ன வார்த்தைகள் என்னை வேறு விதமாக சிந்திக்க வைத்தது.... “மார்ல சாஞ்சு அழனும்”, “கடைசி வரை உன் தோளில் சாஞ்சு ஷார் பண்ணிக்கணும்” இதைப்போல அடிக்கடி சொல்லும் விஷால், என்னிடம் செக்ஸ் விஷயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பான்.... அவன் சொல்வதை கண்டுகொள்ளாமல், நான் எதையோ யோசித்துக்கொண்டிருப்பதை கவனித்த முத்து, “என்ன அண்ணே யோசிக்கிறீங்க?... நான் ரொம்ப போர் அடிக்கிறேனா?” என்றான்....

“இல்ல பா.... உன் லவ்வர் பேர் என்ன?”
“விஷால்” அதிர்ந்து போனேன்.... இருந்தாலும், அது அந்த விஷாலாக இருக்க கூடாது என்று இருக்கும் அத்தனை கடவுளையும் வேண்டிக்கொண்டு , மீண்டும் அவனிடம், “அவர் போட்டோ வச்சிருக்கியா?” என்றேன்....
தன் அலைபேசியின் முகப்பு திரையில் வைத்திருந்தது, அந்த விஷாலேதான்.... அத்தனை கடவுளிடம் வேண்டியதும், அந்த நிமிடமே அர்த்தமற்று போனது.... உடல் நடுக்கம் உண்டாக, வியர்த்து கொட்டியது.... எச்சிலை முழுங்க முடியாதபடி தொண்டை அடைத்தது.... என் இந்த வித்தியாசமான ரியாக்சனை பார்த்து, முத்து பயந்து போனவனாக, “என்ன அண்ணே ஆச்சு?.... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?.... இவரை முன்னாடியே உங்களுக்கு தெரியுமா?” என்று பதறினான்....
விஷால் மீது உயிரையே வைத்திருக்கும் முத்துவை, என் ஒரு உண்மையால் ஏமாற்றிவிட வேண்டாம் என்று நினைத்தேன்.... என்னை பிடிக்காமல் போனவன், முத்து விஷயத்தில் அப்படி இருப்பான் என்று என்னால் எப்படி சொல்ல முடியும்?...

“இல்லப்பா.... தலைவலி... அதான், கொஞ்சம் டையர்டா இருக்கு.... ஆமா, இந்த விஷால் உனக்கு எவ்வளவு நாளா பழக்கம்?” என்றேன்....
“அவரை எனக்கு ஆறு மாசமா தெரியும், மூணு மாசமாத்தான் அவர் லவ்வை நான் ஒத்துக்கிட்டேன்.... இப்போ இந்த மூணு மாசமும் மனசு ரொம்ப இதமா இருக்க” அவன் இதமான மனதை, நான் பதம் பார்க்க விரும்பவில்லை.... எப்போதும் போல் அல்லாமல், இப்போ அவனிடமிருந்து ஏதோ ஒரு அவசர காரணம் கூறிவிட்டு நான் அவனைவிட்டு ஓடினேன்.... இதுவரை என் மனதிற்குள் இருந்த ஒரு விடைதெரியாத கேள்விக்கு, இப்போ முத்து மூலம் ஒரு விடை தெரிந்திருக்கிறது.... ஆம், “எதனால அவன் என்னைவிட்டு பிரிந்தான்?” என்ற கேள்விக்கு, இப்போ ரொம்பவே கேவலமான பதில் கிடைத்திருக்கு..... “வெறும் செக்ஸ் மட்டும்தான் காதல் என்ற எண்ணம் கொண்டவனுக்காகவா இவ்வளவு காலம் மனம் நொந்து கவலைப்பட்டேன்” என்று என்னையே நொந்துகொண்டேன்.... அடுத்த மாடலை பார்த்த பிறகு, ஆளை மாற்றும் அலைபேசி போன்றதாக காதலை நினைத்துவிட்டான் அவன்.... செக்ஸ்’க்காக காதலை விலைபேசியதில் அவனுக்கு பலி கடவாக நானே கடைசியாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்..... அந்த நிமிடமே அவனை என் மனதை விட்டு குப்பையென கசக்கி எறிந்தேன்.....
நாட்கள் உருண்டோடியது..... இன்னும் பதினைந்து நாட்களில் நான் பயிற்சி மருத்துவத்தை நிறைவு செய்ய போகிறேன்.... இறுதி போஸ்டிங்’ஆக சைக்காட்ரி போஸ்டிங் போடப்பட்டிருந்தது.... எனக்கு ரொம்பவும் பிடித்த டிப்பார்ட்மெண்ட்..... இப்போது விஷால் பற்றிய நினைவுகளை முழுவதும் துறந்துவிட்டேன் என்றே சொல்லலாம்....
சைக்கியாட்ரி போஸ்டிங் எப்போதுமே கலகலப்பான போஸ்டிங்.... ஏற்கனவே நன்கு பரிச்சயமானதால், தயக்கமின்றி அமர்ந்திருந்தேன்.... போஸ்டிங் வந்த மாணவர்களுக்கு எங்கள் ப்ரொபசர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்....

“டெல்யுசன் (delusion), இல்லுசன்(illusion) இரண்டுக்கும் என்ன வேறுபாடுன்னா, ஒரு கயிறை பார்த்து அது பாம்புன்னு அடிச்சு சொல்றது டெல்யுசன்.... எதுவுமே அங்க இல்லாதப்போ , பாம்பு வருதுன்னு நெனக்கிறது இல்லுசன்.... எஸ்.ஜே சூர்யா சொல்ற மாதிரி, ஒரு இல்லாத பொருளை இருக்குற மாதிரி நினைக்கிறது இல்லுசன், இருக்குற பொருளை வேற மாதிரி நினைக்கிறது டெல்யுசன்” எப்போதும் போல தன் பாணியில் நகைச்சுவை கலந்து எங்கள் ப்ரொபசர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.... இதை கேட்டு நான் உட்பட மாணவர்கள் எல்லோரும் சிரிக்க, சிரிப்பொலி அடங்கும் முன்னர் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியாக்கியது.... நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், அந்த பெண்ணுடன் ஒரு இளைஞனும் உள்ளே வந்தனர்.... என் அதிர்ச்சிக்கு காரணம், அங்கு நின்ற இளைஞன் தான்.... அவன் பார்ப்பதற்கு, முத்துவை போலவே இருந்தான்.... முத்துவை “போலவே” என்று சொல்ல காரணம் இருக்கிறது.... அப்போ வந்த முத்து, நல்ல வளமாகவும், செழிப்பாகவும், இளமை ததும்பும் அழகுடனும் இருந்தான்.... இப்போ வந்திருக்கிற முத்து போன்றவனுக்கு தேகமெல்லாம் இளைத்து, கண்கள் சுருங்கி, உதடுகள் வெடித்து என்று கிட்டத்தட்ட பரதேசம் சென்று வந்தவனைப்போல காணப்பட்டான்... வந்திருப்பவன் முத்துவா? முத்துவை போன்றவனா? அல்லது, டெல்யுசன், இல்லுசன் போன்று எதாவது கருமமா?.... ஒன்னும் புரியல.... வந்து நின்ற பெண்மணி, கையில் வைத்திருந்த அட்டையை காண்பித்தாள்..... அதில் தெளிவாக “முத்து” என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.... அவன் முத்துவே தான்.... அந்த அட்டையில், அவன் தற்கொலை முயற்சி செய்திருப்பதாகவும், உளவியல் கலந்தாய்வுக்கு பரிந்துரைத்தும் இன்னொரு மருத்துவர் எழுதி இருந்தார்.... எனக்கு இதயம் ஒரு கனம் நின்று போனதைப்போல உணர்ந்தேன்.... முத்துவை, எங்கள் ப்ரொபசர் அருகில் இருந்த இருக்கையில் அமர சொன்னார்.... இப்போது அவன் என் நேரெதிரில் அமர்ந்திருந்தான்.... தலையை குனிந்தபடியே அமர்ந்திருந்தான்.... நிமிர்ந்தால் எதாவது கேட்கலாமா? என்று காத்திருந்தேன், என்னை தவிர்க்கவே அவன் அப்படி தலையை குனிந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.....

“என்ன ப்ராப்ளம் உனக்கு?..... எதுக்காக தற்கொலை பண்ணிக்கனும்னு நினைக்குற?” ப்ரோபசரின் முதல் கேள்வியே எனக்குள் எரிச்சலை உண்டாக்கியது....
அவரை பொருத்தவரை அங்கு வரும் அனைவரும் “கேஸ்”கள் தான்.... முத்துவை தவிர்த்து அங்கு வேறு யாரும் இருந்திருந்தால், என்னை பொருத்தவரை கூட அந்த நபர் வெறும் “கேஸ்”தான்.... அதனால் ப்ரொபசரை குற்றம் சொல்வது தவறென்று உணர்ந்தேன்....
முத்து வாயை திறப்பதாக இல்லை.... மறுபடியும் ப்ரொபசர், கொஞ்சம் கோபத்துடன் கேட்க, மெல்ல வாயை திறந்து, “வயித்து வலி” என்றான்.....
“என்னது?” என்றார் ப்ரொபசர்....
இப்போ கொஞ்சம் சத்தத்துடன், “வயித்து வலி” என்றான்....
“வயித்து வலினா பூச்சிக்கு மருந்து சாப்பிடனும், இப்படி பூச்சி மருந்து சாப்பிட கூடாது” என்று கோபத்துடன் கூறினார் ப்ரொபசர்...
அவர் கோபத்தில் உண்மையான காரணம் இருக்கிறது.... எந்த காரணத்திற்காக தற்கொலை முயற்சி செய்தாலும், உண்மையை மறைத்து இப்படி மருத்துவர்களிடம் பலரும் கூறும் காரணம் வயித்து வலி....

சிறிது நேரம் கழித்து, அங்கு நின்ற மருத்துவ மாணவர்களை அழைத்து, “ஸ்டூடண்ட்ஸ், இவர் கேஸ் ஹிஸ்டரி எடுத்து ப்ரெசன்ட் பண்ணுங்க” என்றதும், அந்த மாணவர்கள் முத்துவை அருகில் இருந்த இன்னொரு அறைக்கு அழைத்து சென்றனர்....
அவர்கள் சென்றதும் என்னை பார்த்த ப்ரொபசர், “இவனுக்கல்லாம் என்ன வயசு, அதுக்குள்ளையும் வாழ்க்கையை வெறுத்துட்டான் பாரு.... என்ன பெருசா காரணம் இருக்க போகுது? லவ் பெய்லியரா இருக்கும்.... கஷ்டம்னாலே என்னன்னு தெரியாம அவங்க பேரன்ட்ஸ் வளர்க்குரதுதான் முதல் தப்பு.... அவன் ஒரு சின்ன காரணத்துக்காக செத்துட்டா, அவன் குடும்பத்தை பற்றி நெனச்சிருப்பானா அந்த இடியட்... வாழ்க்கை முழுசும் அதை நெனச்சு ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருப்பாங்கன்னு அந்த யூச்லஸ்’கு புரியல பார்த்தியா?” என்று ஒரு தந்தை ஸ்தானத்தில் தன் கவலைகளை கொட்டினார்....
நான் அதையல்லாம் கவனிக்க மறந்தவனாக, முத்துவின் இந்த நிலைமைக்கு என்ன காரணமாக இருக்கும்? என்று யோசித்தேன்.... “ஒருவேளை ப்ரொபசர் சொல்றது போல, காதல் தோல்வியா?... அப்படின்னா, அந்த பாவி இவனையும் ஏமாத்திட்டானா?.... அவன் அழறதுக்கு வேற மார்பு தேடி போய்ட்டானா?.... இதை முன்பே அவனிடம் சொல்லி எச்சரிக்காமல் விட்டது என் தப்பா?.... என்னால்தான் முத்து இப்படி ஆனானா?” என்று என் மனதிற்குள் முத்துவை பற்றிய கேள்விகள் என்னை துளைத்து எடுத்தது.... ப்ரொபசரிடம் கேண்டீன் செல்வதாக கூறிவிட்டு, அவசரமாக அடுத்த அறையை நோக்கி ஓடினேன்.... அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது.... லேசாக திறந்திருந்த கதவின் விளிம்பின் வழியே, அந்த பெண்மணி உள்ளே நடப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.... என்னை கண்டதும், அவசரமாக அங்கிருந்து விலகி சென்றார்... கதவை இன்னும் கொஞ்சம் திறந்தேன்.... உள்ளே மாணவர்கள் விடுத்த கேள்விக்கணைகளை, முத்து எவ்வித சலனமும் இன்று தன் மௌனத்தால் மழுங்கடித்துக்கொண்டிருந்தான்......
“எத்தனை வருஷமா தற்கொலை முயற்சி பண்ணுனீங்க?”
“கடைசியா எப்போ அப்டி முயற்சி பண்ணிங்க?”
“என்ன விஷம் சாப்டிங்க?”
இந்த கேள்விகளை எதிர்கொள்ள நேர்ந்தால், சாமானியனும் தற்கொலை முடிவெடுப்பானோ? என்று தோன்றியது... தற்கொலை செய்து கொள்வதை முத்துவின் பரம்பரை தொழிலாக அவர்கள் நினைத்து விட்டார்களோ? என்று தோன்றியது....
இதற்கு மேலும் இந்த மாணவர்களின் பொறுப்பில் முத்துவை விட்டால், அநேகமாக அடுத்த தற்கொலை முயற்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுப்பதை போல ஆகிவிடும் என்று உணர்ந்து, ஏதேதோ காரணம் சொல்லி, அவர்களை அங்கிருந்து அப்புரப்படுத்தினேன்.... அவர்கள் சென்றதும், அந்த அறையின் கதவை அழுத்தி சாத்தினேன்.... நான் அங்கு வந்தது, மாணவர்களிடம் பேசியது, இப்போ கதவை சாத்தியது என்று எதையுமே பொருட்படுத்தாமல், அந்த இருக்கையில் இறுக்கத்துடன், தலையை கவிழ்த்தியபடி அமர்ந்திருந்தான்.....
“முத்து..... என்னை ஞாபகம் இருக்கா?”
“......” இந்த மௌனம் இன்னும் என்னை கோபமூட்டியது....
அதட்டல் கலந்த சத்தத்துடன், “இருக்கா இல்லையான்னு சொல்லு....” என்றேன்....
“ஹ்ம்ம்.... இருக்கு” என்றான்....
“எதுக்காக இப்டி தப்பான முடிவெடுத்த?”
“வயித்து வலி.... அதான்” அவன் பதிலால் நான் பொறுமை இழந்தேன்.... இன்னும் என்னை அவன் நம்பவில்லை, அவனுக்காக நான் சீதையைப்போல தீக்குளித்தா நிரூபிக்க முடியும்.... ஆனாலும், அவனை அப்படியே விட்டு செல்ல மனமில்லை...
அவன் கைகளை பிடித்தேன்.... இன்னும் அதிக நடுக்கத்துடன், சில்லிட்டது....
கைகளை பிடித்தவாறே, “என்ன ப்ராப்ளம் உனக்கு?.... விஷால் எதாவது.......” என்று நான் முடிப்பதற்குள், அவன் கண்கள் அதை ஆமோதிப்பதை போலகசிய தொடங்கியது.... கண்கள் சொல்லும் பதிலை, இன்னும் அவன் வாய் சொல்லவில்லை.....
“தைரியமா சொல்லுப்பா.... உன் கவலை எனக்கு புரியுது.... ஒரு அண்ணன் கிட்ட சொல்ற மாதிரி சொல்லு” இந்த பேச்சு அவனை மனமிழக வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது....
கண்களை துடைத்துக்கொண்டு, “ஆமாம் அண்ணே.... என்னைய ஏமாத்திட்டான் அவன்... ஆறு மாசத்துக்கு முன்னாடிலேந்து, தேவையில்லாம சண்டை உருவாக்குனான்.... கொஞ்சம் கொஞ்சமா பேச்சை நிறுத்தினவன், மூணு மாசமா எந்த தொடர்பும் இல்லாம இருந்தான்.... அவனை பலதடவை தேடிப்போனபோதும், என்னை கண்டுக்காம இருந்தான்.... விடாப்பிடியா நான் காரணம் கேட்டேன், நான் ரொமான்சா இல்லையாம், அவனுக்கு பிடிச்ச மாதிரி இல்லையாம்.... அதனால, என்னைவிட்டு விலகிட்டானாம்.... இதை கேட்டதும் என்னால என்ன பண்றதுன்னே புரியல.... இவ்வளவு நாளும் வெறும் செக்ஸ் மட்டும்தான் அவனுக்கு பெருசா தெரிஞ்சுதா?... செக்ஸ் தான் வேணும்னா, அதுக்கு பல பேர் இருக்குறப்போ, எதுக்காக லவ்’ங்குற பேர்ல என்னைய ஏமாத்துனான்.... புதுசா ஒரு பொம்மையை பார்த்ததும், பழைய பொம்மையை தூக்கி போடுற குழந்தை மாதிரி, என்னைய தூக்கி போட்டுட்டு அவன் அடுத்த தேடலை ஆரமிச்சுட்டான்.... அவனை பழிவாங்கவோ, திருத்தவோ எனக்கு தைரியம் இல்ல.... அதனாலதான் என்ன பண்றதுன்னு தெரியாமல் என்னையே........” என்று வார்த்தையை முடிப்பதற்குள் அவன் விசும்பல் அவனை தடுத்து நிறுத்தியது..... முத்துவின் அத்தனை கேள்விகளும், இத்தனை நாட்களாக என்னையும் உருத்திக்கொண்டிருந்தவைதான்.... பதில் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.... நிச்சயமாக எல்லோரும் என்னை போன்று ஏமாற்றத்தை தாங்குபவர்களாகவும், முத்துவை போன்று தங்களை மாய்த்துக்கொள்பவர்கலாகவும் இருக்க மாட்டார்கள்.... என்றைக்காவது, அவன் யார் மூலமாவது இதை உணரும் சமயம் முத்துவின் கண்ணீருக்கு அவன் பதில் சொல்வான்.....
என்னை பற்றி இனியும் நான் முத்துவிடம் எதுவும் சொல்லப்போவதில்லை.... அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி, கொஞ்சம் மனதை தேற்றினேன்.... விசும்பல் நிற்காத அழுகை அவனை ஆட்கொண்டிருந்தது, அப்படியே என் மார்பில் சாய்ந்து அழத்தொடங்கினான்..... கண்ணீரால் அவன் கவலைகளை கரைத்துக்கொண்டிருந்தான்..... ஒரு அன்னையின் அரவணைப்பை அந்த நேரத்தில் முத்து என் மார்பில் கண்டிருக்கக்கூடும்....


Saturday 13 October 2012

HOW TO SEDUCE A STRAIGHT GUY?

"HOW TO SEDUCE STRAIGHT?"
இந்த தலைப்பை கேட்டதும், நம்மை போன்ற பெரும்பாலானவர்கள் 
ஆர்வத்துடன் வருவார்கள் என்று எனக்கு தெரியும்.... கிட்டத்தட்ட இந்த 
கேள்வியை கேட்காத, மனதிற்குள் தோன்றாத "கே" இருக்கவே முடியாது 
என்றும் சொல்லலாம்.... ஆனால், நாம் எல்லோரும் நம் கண்ணோட்டத்துடன் மட்டுமே இந்த விஷயத்தை பார்க்கிறோம்.... இதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேர் புரிந்துவைத்திருக்கிறோம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.... ஆம், ஒரு ஸ்ட்ரைட் கண்ணோட்டத்தில் இதை குறைந்தபட்சம் நான் என்றாவது யோசித்தாவது பார்த்திருப்போமா?....  உங்களுக்கு பிடிக்காத ஒரு உணவை, அது அமுதமாகவே இருந்தாலும் கூட உங்களுக்கு பிடிக்காமல் அதை உங்கள் மீது திணித்தால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.... சாதாரண ஒரு உணவுக்கே இப்படி என்றால், உடல்உறவுக்கு சொல்லத்தான் வேண்டுமா?.... கிட்டத்தட்ட ஒரு ரேப் போன்ற விஷயம் தான் இதுவும்....  பொதுவாக நம்மை போன்ற கே நபர்களுக்குதங்கள் நண்பர்கள் (ஸ்ட்ரைட் நண்பர்கள்) மீது ஒருவித மோகம் வருவது இயற்கை... உங்களை அதிகம் புரிந்து, மிகவும் நட்பு பாராட்டும் சில நண்பர்கள் மீது உங்களுக்கு காதல் வருவதும் இயற்கை தான்.... நீங்கள் காதலாக பார்க்கும் ஒரு விஷயம், அவருக்கு நட்பு என்ற எல்லையை தாண்டி யோசிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.... ஒரு நேரத்தில் உங்கள் காமத்தை அவர் மீது திணிக்கும்போது உங்கள் மீது உங்கள் நண்பருக்கு வெறுப்புணர்ச்சி உண்டாகும்.... இவ்வளவு நாளும் அவரை நீங்கள் காம கண்ணோட்டத்துடன் பார்த்ததை அவர் யோசிக்கும்போது அந்த வெறுப்புணர்ச்சி பன்மடங்காகும்.... விளைவு, விலை மதிக்க முடியாத நட்பு முறிந்து போகும்.... இறக்கும் வரை இருக்கும் உறவான நட்பு, ஒரு இரவில் மறைந்து போகும்.... இந்த பிரச்சினை நம்மில் பெரும்பாலானவர்கள் கண்ட விஷயம் தான்.... ஆனாலும்மறுமுறையும் பலர் அதே தவறை செய்வதுதான்  தவறாக முடிந்துவிடுகிறது..... இதையெல்லாம் மீறி நான் ஸ்ட்ரைட் நபரைத்தன் காதலிப்பேன், காமத்திற்கு அழைப்பேன் என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு ஒரு அட்வைஸ்...... முதலில் கே பற்றிய அவர் புரிதலை தெரிந்துகொள்ளுங்கள்.... நம் சமூகத்தை பொருத்தவரை பெரும்பாலான படித்தவர்கள், கே பற்றி தரக்குறைவான கண்ணோட்டமே வைத்திருக்கிறார்கள்.... ஒரு மனநலன் பாதிக்கப்பட்டவராகவும்காமக்கொடூரனாகவும், சமூக விரோதி போலவும், மனிதத்தன்மை அற்றவராகவும் மட்டுமே பலர் நினைக்கிறார்கள்.... அத்தகைய நிலைப்பாட்டை கொண்டவராக உங்கள் நண்பர் இருப்பாரேயானால் வேறு வழியே இல்லைநீங்கள் நட்பை காக்க உங்கள் ஆசையை அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும்உளவியல் கலந்தாய்வு சென்று உண்மையை அறிந்து ஆகத்தான் வேண்டும்.....அடுத்த வகை சில நபர்கள், கே பற்றி தெளிவான கண்ணோட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.... இதுவும் இயற்கை என்று புரிந்தவர்களாக இருப்பார்கள்.... அத்தகைய நபர்களிடம், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை விளக்க முயன்று பார்க்கலாம்.... ஆனால், அதையும் அவர் எப்படி எடுத்துக்கொள்வார்? என்று நமக்கு முழுமையாக தெரியாது.... இதுவரை சொன்னது காதலுக்காக மட்டும்தான்..... பெரும்பாலும் பள்ளி, கல்லூரி விடுதிகள், நண்பர்கள் அறை, சுற்றுலா செல்லும்போது தங்கும் விடுதிகள் இங்கெல்லாம் போதையில் இருக்கும்போதோ/உறங்கும்போதோ தங்கள் காம இச்சைகளை தங்கள் ஆசை நாயகர்களிடம் வெளிப்படுத்துவது உண்டு.... பல நேரங்களில், அன்றைய இரவு நெடுநாள் கனவில் பலனாகவே பலருக்கும் இருந்திருக்கும்.... ஆனால், அடுத்த நாள் முதல் அந்த கனவு கானல் நீராக காணாமல் போய்விடும்..... முகத்தோடு முகம் பார்த்து பேசக்கூட உங்கள் நண்பர் விரும்ப மாட்டார், உங்களைவிட்டு விலகி சென்றுவிடுவார்.... ஒருவேளை அடுத்தடுத்த சில நாட்கள், நீங்கள் அவருக்கு சேவை செய்வது தொடர்ந்தாலும் , அவருக்கென்று ஒரு காதலோ, துணையோ வந்துவிட்டால் நீங்கள் அதோகதிதான்.... அப்போது உங்களுக்கு தேவையில்லாத ஏமாற்றமும், மன உளைச்சலும் மட்டுமே மிச்சம்....
அப்போது உங்கள் நண்பர் மீது நீங்கள் கோபப்படுவீர்கள், அரிதாக சிலர் தங்கள் செயலை யோசித்து வருந்துவீர்கள்..... உங்கள் நண்பரை பொருத்தவரை, எப்போ நீங்க அவரை காம கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கிநீர்களோ, அப்போதே உங்கள் மீது அவர் வைத்திருந்த நட்பை இழக்கிறீர்கள்.... “அதற்கு அவனும்தானே உடன்பட்டான்.... அவனும்தானே அதை ரசித்தான்” என்று உங்கள் தரப்பை நியாயப்படுத்த பார்ப்பீர்கள்.... உண்மை அதுவல்ல, நீங்கள் அவரின் உணர்ச்சிகளை கிளர்ச்சி அடைய செய்யும் விதம் சில விஷயங்கள் செய்யும்போது, எந்த ஒரு மனிதனும் அதை உதறித்தள்ளிவிட்டு செல்லும் மகான் அல்ல, அந்த நேரத்தில் அதை ரசிக்கவே செய்வான்....ஆனால், அந்த நிகழ்வுக்கு பிறகு அவன் யோசிக்கும்போது, நீங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறீர்கள் என்றும், அந்த தவறுக்கு அவர் உடன்பட்டதை எண்ணி வருந்தியும் யோசிப்பார்..... அவ்வளவு நாளும் நீங்கள் அவரை நட்பாக அணுகாமல், காம நோக்கத்தில் அனுகியதாகவே அவர் நினைப்பார், இயற்கைக்கு முரணாக நீங்கள் தவறு செய்வதாக யோசிப்பார், உங்களோடு பழகினால் அந்த கே பழக்கம் அவருக்கும் ஏற்படுமோ என்று அஞ்சுவார், தன்னையும் பிறர் தவறாக எண்ணுவார்களோ என்று நினைப்பார், மறுபடியும் அந்த தவறு நடக்கா வண்ணம் ஒதுங்க நினைப்பார்..... இந்த காரணங்கள் எல்லாம் உங்களையும், உங்கள் நட்பையும் துறக்க அவருக்கு போதுமானதாக இருக்கும்.... இவ்வளவு இழந்துதான் உங்கள் ஆசையை நீங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டுமா? என்று யோசித்து அடுத்து முடிவெடுங்கள்....
சரி ஸ்ட்ரைட் நண்பர்களை பற்றி இவ்வளவு நேரம் பேசினோம்.....
அடுத்து சமூக வலைதளங்களில் ஸ்ட்ரைட் நபர்களை செட்யூஸ் செய்கிறேன் பேர்வழி என்று தன் தரத்தையும் இழந்து, சமூகத்தில் கே பற்றியும் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துகின்றனர்....

சமீபத்தில் என் ஸ்ட்ரைட் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன ஒரு செய்தியே அதற்கு உதாரணம்.... யாஹூ சாட்டில் ஒருவருடன் செக்ஸ் சாட்டில் ஈடுபட்டிருக்கிறார் அந்த நண்பர்....சிறிது நேரத்தில் அது ஆண்  என்று தெரிந்ததும், என் நண்பர் தனக்கு விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார்..... கிட்டத்தட்ட அரை மணி நேரம், ஒரு ஸ்ட்ரைடை செட்யூஸ் செய்வதாக நினைத்து அந்த யாஹூ நபர் செய்த அத்தனையும் கேவலமானவை.... கடைசியில் மிகவும் கீழிறங்கி, தான் என்ன வேணாலும் செய்வதாகவும், ஐந்து நிமிடம் சந்தித்தால் போதும் எனவும் சொன்னதை கேட்டு என் நண்பர் இரண்டு நாள் அந்த யாஹூ நபரை கரித்து கொட்டினார்..... என் நண்பரின் கண்ணோட்டம் அந்த தனிப்பட்ட நபரோடு முடியாமல், அவரோடு இணைத்து ஒட்டுமொத்த கே சமூகத்தையுமே அவர் இப்போ வரை மிகவும் தரக்குறைவாக நினைத்து வருகிறார்.... இப்படி ஒவ்வொரு நாளும் சமூகத்தின் மத்தியில் கே பற்றிய புரிதலை நம்மில் பலரே குறைத்து காட்டி வருகிறார்கள்..... உங்கள் பசியை தீர்க்க ஆயிரம் வழிகளும், ;லட்சக்கணக்கான நபர்களும் இங்கிருக்க, எதற்காக இது பற்றிய விருப்பமே இல்லாத ஒரு நபரிடம் உங்கள் ஆசையை திணிக்க வேண்டும்?..... உங்கள் சுயமரியாதையும் இழந்து, கே பற்றிய அவமரியாதையையும் மக்கள் மத்தியில் நீங்கள் புகுத்தி தான்  உங்கள் ஒருநாள் ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டுமா?.....

அதே போல பொது இடங்களில், குறிப்பாக திரை அரங்கங்கள், பேருந்துகள், ரயில் வண்டிகள் போன்றவற்றில் ஸ்ட்ரைட் நபர்களை செட்யூஸ் செய்வதாக நினைத்து, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்த ஸ்ட்ரைட் நபர் கொஞ்சம் அப்பாவியானவராக இருந்தால், எந்த அளவுக்கு தர்ம சங்கடத்தில் நெளிவார் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?.... ஆர்குட்டில் ஒரு நபர், ட்ரெயினில் தான் அப்படி அப்ரோச் செய்த ஒருநபர் பொது இடம் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டியதாகவும், அடிக்க வந்ததாகவும் கவலை பட்டார்..... பிடிக்கவில்லை என்றால் அமைதியாக போயிருக்கலாம் அல்லவா? என்று வருந்தினார்.... அதைப்படித்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.... அந்த மனிதர் பொது இடத்தில் இவரை இப்படி திட்டியது தவறுதான், ஆனால் அதே அளவு தவறை நம்மவரும் செய்திருக்கிறார் என்பதை நம்மில் பலரும் ஏற்க தயங்குவோம்.....
பொது இடங்களிலும் இவ்வாறு நடந்துகொள்ளத்தான் வேண்டுமா?.... நான் சொல்வது சிலருக்கு கோபம் கூட வரலாம், அதில் நியாயம் கூட நீங்கள் கற்பிக்கலாம்.... ஒசாமா பின்லேடன் கூட தான் செய்யும் தவறுக்கு ஒரு நியாயம் வைத்திருப்பான் என்பதால் நாம் அதனை ஏற்க முடியுமா என்ன?.... நான் இதை பெரிய தவறாக சித்தரிப்பதாக நினைக்காதிங்க நண்பர்களே, இதைப்போன்ற சிறு சிறு தவறுகள்தான் , கே பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்தில் பெரிய தவறாக மாறிவிடுகிறது.....
உங்கள் விருப்பங்களை, உங்களை ஒத்த நபர்களிடம் சொல்லுங்கள், செய்யுங்கள்..... எல்லாம் சுபமாக இருக்கும் என்று நம்புவோம்..... நன்றி நண்பர்களே.....

Thursday 11 October 2012

இந்திய ஊடகங்களின் பார்வையில் "கே"
வாள் முனையைவிட பேனா முனையின் கூர்மை அதிகமாக இருந்தால்தான் ஒரு நாடு வளமாகவும், நாட்டு மக்கள் நலமாகவும் இருக்க முடியும் என்று ஒரு சொல்லாடல் உண்டு..... நிச்சயம் அது நூறு சதவிகிதம் உண்மையான ஒன்று.... இங்கு இப்போ நான் கூறப்போவது நம் ஒருபால் விருப்பம் உடைய சமூகத்தினர் பற்றி ஊடகங்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்றுதான்.... பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகிய மூன்றும் கே பற்றி எத்தகைய நிலைப்பாட்டை இத்தனை காலமும் எடுத்துள்ளார்கள் என்பதை கவனித்தால் அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருக்கும்.... இத்தகைய ஊடகங்கள் நினைத்தால் ஒரே நாளில் கோட்சே'வை இந்தியாவின் தேசப்பிதாவாக்க முடியும் அளவிற்கு வலிமை மிகுந்தவை இந்த ஊடகங்கள்.... ஆனால், அதே வேளையில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பல காலமாக சில உண்மைகளை மறைத்து, பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.... ஒரு பொய் சொல்வதற்கு நிகரான தவறு, ஒரு உண்மையை மறைப்பதிலும் இருக்கிறது.... அந்த தவறை செய்யும் இந்த ஊடகங்கள் பற்றி கொஞ்சம் யோசித்து பார்ப்போம்..... முதலில் பத்திரிகைகள்....

படித்தவர்கள் மத்தியிலும் நகர்ப்புறங்களிலும் ஒரு தெளிவான மனநிலையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பத்திரிகை துறையினர் இதை பற்றி செய்திகள் வெளியிடுவதையேதவிர்த்துவிடுகின்றன.... அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இது குடும்பத்தினர் மத்தியில் தங்கள் பத்திரிகைக்கான தகுதி குறைந்துவிடும் என்கிறார்கள்.... அதே பத்திரிகைகள் தான், சிவகாசி ஜெயலட்சுமி யார் யாருடன் உல்லாசமாக இருந்தார் என்பது தொடங்கி, நித்தியானந்தா ரஞ்சிதா விவகாரத்தை அட்டைப்படத்தில் போடுவது வரை தங்கள் சர்க்குலேசனை அதிகரிக்க செய்திகளாக போடுகிறார்கள்..... இத்தகைய ஆபாசமான விஷயங்களை வெகுஜன பத்திரிகைகள் தங்கள் தலைப்பு செய்தியாக்க எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.... ஆனால் ஒரு சமூக விழிப்புணர்வுக்கான, கே உறவு தவறல்ல என்ற உண்மை நிலைப்பாட்டை செய்தியாக்க இவர்கள் தயங்குவது விந்தையான விஷயம் தான்..... ஒரு விஷயம் தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்றால், அது எத்தகைய தரம் தாழ்ந்த செய்தியானாலும் முதற்பக்கத்தில் போட துணியும் இந்த பத்திரிகைகள், இந்த கே பற்றிய உண்மையான நிலைப்பாட்டை கூறினால் தங்கள் விற்பனைக்கு எந்த உதவியும் இருக்காது என்ற எண்ணத்தால் இத்தகைய செய்திகளை தவிர்த்துவிடுகிறார்கள்...... இவர்களுக்கு தங்களின் விற்பனையும், லாபமும் மட்டுமே முக்கியம் என்ற நிலையாகிவிட்டது.... வெங்கட் மோகன் காதலை பற்றியும், வானவில் அணிவகுப்பை பற்றியும், சென்னை தோஸ்த் பணிகளை பற்றியும் எத்தனை பத்திரிகைகள் குறைந்தபட்சம் ஒரு பெட்டி செய்தியாவது போட்டிருக்கும்?.... நான் பொய்யான ஒன்றை திரித்து கூறுங்கள் என்று சொல்லவில்லை, உண்மையை உரக்க சொல்லுங்கள் என்று மட்டும்தான் சொல்கிறேன்..... தவறான ஒன்றை நியாயப்படுத்துங்கள் என்று சொல்லவில்லை, சரியான ஒன்றை சரியாக சொன்னால் போதும் என்று மட்டும்தான் சொல்கிறேன்..... விற்பனையை மட்டுமே நோக்கமாக கொண்டு செய்திகளை வெளியிடாமல், காலாகாலத்திற்கும் உங்கள் பத்திரிகையின் தரம் இந்த நாட்டில் நிலைபெற்றிட இத்தகைய உண்மைகளை சொல்லுங்கள்.....

தொலைக்காட்சிகளும் இதே நிலைப்பாட்டுடன் தான் செய்திகளை தருகிறார்கள்.... பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இப்படி என்றால், மறுபுறம் திரைத்துரையோ நெகட்டிவான கருத்துக்களை ஒருபால் விரும்பிகளை பற்றி பொதுமக்கள் மத்தியில் திணிக்கிறார்கள்..... ஒருபால் விருப்பத்தை மிகப்பெரிய தவறாகவும், கேவலமான ஒன்றாகவும், நகைப்பிற்குரிய ஒரு விஷயமாகவும் ஆக்கிவிடுகிறார்கள்.... அத்திப்பூத்தார்போல ஒருசில திரைப்படங்கள் கே பற்றி வந்தாலும், அதிலும் இந்த விஷயம் கேலிக்கூத்தாக காட்டப்படுவதுதான் வேதனை....  “அவனா நீ?”, “கொரில்லா சிறை”, என்று மிகவும் கேவலமாக கே பற்றி காட்டி, திரைத்துறை தன்னை கீழ்த்தரமாக ஆக்கிக்கொண்டுவிட்டது..... வெகுஜன மக்களும், பாமர மக்களும் எளிதில் ஒன்றை புரிந்துகொள்ள இத்தகைய திரைப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன....

 சுதந்திர போராட்டங்களின் பொது, பல பொது கூட்டங்களில் ஊட்ட முடியாத தேசபக்தியை, ஒரு நாடகத்தில் ஊட்டி மக்களை திரட்டுவார்களாம்.... அத்தகைய தாக்கமும், வலிமையையும் மிக்க இந்த திரைத்துறை பொதுமக்கள் மத்தியில் இப்படி ஒரு தரம் தாழ்ந்த பிம்பத்தை கே பற்றி திணிப்பது நிச்சயமாக சமூக விழிப்புணர்வுக்கு பெரும் தடங்கலாக அமையும்.... கே பற்றி ஹர்ஷ்பீல்ட் உதவியில் ஐரோப்பாவில் வெளியான ஒரு திரைப்படம் தான், ஐரோப்பிய மக்கள் மத்தியில் கே பற்றி நல்ல அபிப்ராயம் வரவழைத்ததை நான் முன்பு கூறினேன்..... ஆனால், நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை வராவிட்டாலும், குறைந்தபட்சம் இதைப்பற்றி தவறான விதைகளை விதைக்காமல் இருந்தாலே சமூகம் மாறிட ஒரு வாய்ப்பாக அமையலாம்.... பத்திரிகையும், தொலைக்காட்சியும் இதைப்பற்றி வாயே திறக்காதது பிரச்சினை என்றால், திரைப்படங்களோ இதைப்பற்றி வாயை திறப்பது பிரச்சினையாக இருக்கிறது..... ஒரு நகைச்சுவை காட்சி மூலம் மக்கள் மனதில் எளிதாக ஒரு கருத்தை நிலைபெற்றிட செய்ய முடியும்.... அத்தகைய நல்ல விஷயத்தால், நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்க முற்படாமல் இப்படி செய்வது வேதனையாக இருக்கிறது.... இப்போதல்லாம் இத்தகைய வலிமையான ஊடகங்களின் பங்களிப்பால், திருநங்கைகள் பற்றி ஓரளவு மக்கள் புரிந்துகொள்ள தொடங்கி இருக்கின்றனர்.... கல்கி, ரோஸ், ஸ்ரீ போன்ற திருநங்கைகளை பற்றிய தெளிவான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து நல்ல முன்னேற்றத்திற்கு வித்தான விஷயத்தை செய்து வருகின்றனர்..... இன்னும் சில காலத்தில் முற்றிலும் அவர்களும் சமூகத்தோடு கலக்கும் நாள் வருமளவிற்கு நல்ல முறையில் நிலைமை உள்ளது..... ஆனால், ஒருபால் விருப்பம் கொண்டவர்கள் விஷயத்தில் இன்னும் தங்களை புதிப்பித்துக்கொள்ளாமல இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.....

 ஒருபக்கம் இ.பி.கோ 377 சட்டத்திருத்தத்தை நீக்கக்கோரி பல்வேறு விதமான சட்ட போராட்டங்கள் நடைபெறும் வேளையில், கூடிய விரைவில் அத்தகைய சட்ட திருத்தம் வந்து “கே உறவு தவறல்ல, கே திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படலாம்” என்ற நிலை வெகுவிரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது நமக்கு.... ஆனால், சட்டத்தின் மூலம் ஒரு சமுதாய புரட்சியை மக்கள் மத்தியில் கொண்டுவர முடியாது..... சட்டத்தை மதித்து உடனே, கே உறவை அங்கீகரிக்க நம்ம மக்கள் ஒன்றும் மாபெரும் பகுத்தறிவாளர்கள் கிடையாது.... இத்தகைய சமூக மாற்றமும், சமுதாய புரட்சியும் வரவேண்டுமானால் நாம் மேற்சொன்ன மூன்று விஷயங்களும் தங்கள் பங்கினை முழுமையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும்..... பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையினர் திறம்பட தங்கள் பணிகளை முறையாக செய்தாலே விரைவில் நம்மை பற்றிய புரிந்துணர்வு மக்கள் மத்தியில் மிக எளிதாக சென்றுவிடும் என்று நம்பலாம்..... நல்ல நாள் பார்த்து, சொந்த பந்தம் சூழ, மணமேடையில் ஒரு கே திருமணம் நடைபெற்றால் கூட அது ஆச்சரியப்பட ஒன்றுமில்லாத அளவிற்கு, எதிர்காலத்தில் இந்த ஊடகங்கள் தங்கள் பணிகளை செய்யும் என்று நிச்சயம் நாம் நம்பலாம்.... எல்லாம் மாறும், காலம் தான் அந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று நம்புவோம்....

Monday 8 October 2012

TOP BOTTOM VERSATILE.....???

-->

ஓரினசேர்க்கையாளர்  என்று தெரிந்ததும், பெரும்பாலும் நம்மிடம் கேட்கும் அடுத்த கேள்வி, நீ டாப்பா? பாட்டமா? வெர்சட்டயிலா? (top, bottom or verstaile) என்பதுதான்.... இதைப்பற்றிய முழுமையான தெரிதலும், புரிதலும் அனைவருக்கும் ஒன்றுபோல இல்லை என்றாலும், இதைப்பற்றி ஆராய்ந்த ஜெஸ்ஸி பெரிங் (Institute of Cognition and Culture at Queen's University Belfast in Northern Ireland என்ற நிறுவனத்தின் இயக்குனர் இவர்.... உளவியல் ரீதியாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர் இவர்) ஒரு தெளிவான ஆய்வின் முடிவை கூறினார்..... அதாவது, "டாப் என்றால் கொடுப்பவன், பாட்டம் என்றால் பெறுபவன்..... 

கொடுப்பது என்றால் புணரும்போது ஆண்மையை உள்ளே செலுத்துபவன், பாட்டம் என்றால் ஆண்மையை தனக்குள் (ஆசனவாய் அல்லது வாய்) உள்வாங்கிக்கொள்வது" என்று ஒரு சிறிய தெளிவான விளக்கம் கொடுத்தார்..... மேலும் சில விளக்கங்களும் கொடுத்தார்..... அதிக இன்பமும், குறைவான கஷ்டமும் அடைபவன் டாப்.... அதே போல, குறைவான இன்பமும், அதிக கஷ்டமும் பெறுபவன் பாட்டம்.... இந்த இரண்டு முரண்களுக்கும் மத்தியில் ஒரு கோடாக பயணிப்பது வெரச்டையில் வகை..... நேரம் மற்றும் சூழலுக்கு தகுந்தாற்போல எல்லாவற்றையும் அனுபவித்து இன்பம் அனுபவிப்பவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள்...... 

இவரே இன்னொரு சந்தேகத்தையும் எழுப்புகிறார்..... புணர்தலில் ஆர்வமில்லாதவர்களை இதில் எந்த பட்டியலில் சேர்ப்பது? என்பதுதான் அவர் சந்தேகம்..... அதேபோல இன்னும் பலர் தங்களை நான் மேற்சொன்ன மூன்று பிரிவுகளுக்குள்ளும் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பாமல் தங்களை "கே" என்று மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்வதையும் ஜெஸ்ஸி பெரிங் குறிப்பிடுகிறார்.... அதனால் இத்தகைய நபர்களை மேற்சொன்ன பிரிவுகளுக்குள் பிரிக்காமல் இருப்பதே சிறந்தது என்றும் கூறுகிறார்..... அதேபோல பாட்டம் நபர்களைவிட டாப் நபர்கள் அதிகமான செக்ஸ் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பதாகவும், பெரும்பாலான நேரங்களை செக்ஸ் பற்றிய சிந்தனையில் மட்டுமே கழிப்பதாக கூறுகிறார்...... அதே நேரத்தில் டாப் நபர்கள் தங்களை ஒரு "கே" வாக காட்டிக்கொள்ள பயந்து (homophobia) , அதனால் பெண்களிடம் செக்ஸில் ஈடுபட்டு அதன்மூலம் தன் கே அடையாளத்தை மறைக்க முயல்கிறார்கள்........ அதே நேரத்தில் பெரும்பாலான பாட்டம்'கள் தாழ்வுமனப்பான்மை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.... உளவியல் ரீதியாகவும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் டாப்'களைவிட பாட்டம்'களே அதிகம்..... இந்த இரண்டு பிரிவுகளிலும் அப்படி சில தவறுகள் இருந்தாலும், மூன்றாவது வகையான வெர்சட்டையில் வகையினர் உளவியல் ரீதியாக மற்றவர்களைவிட பலமானவர்களாகவும், செக்ஸ்'இல் திருப்தி உடையவர்களாகவும் இருப்பதாக ஜெஸ்ஸி கூறுகிறார்..... 

இந்த பிரிவுகள் பெரும்பாலும் இயற்கையாகவே ஒருவருக்கு தோன்றுவதாக இருந்தாலும், பல நேரங்களில் இதை தீர்மானிக்கும் காரணிகளாக ஒருவரின் தோற்றமும், சமூக சூழலும் மற்றும் தேவைகளுமே தீர்மானிக்கிறது..... டாப்பாக இருக்கும் ஒருவர், டாப்பாக செயல்பட மனதளவில் நினைக்கும் ஒருவர், சில சூழல்களால் பாட்டமாக தள்ளப்படுவது நடப்பதுண்டு.... ஒருவர் தொடர்ந்து செக்ஸில் மற்றவர்களால் புறக்கனிக்கப்ப்படும்போது, ஒரு கட்டத்தில் புறக்கணிப்பை தவிர்க்க அடுத்தவர்களுக்கு சேவை (?) செய்யும் பொருட்டு பாட்டமாக மாறிவிடுகிறான்..... அதனால்தான் ஜெஸ்ஸி இதை தீர்மானிக்க முக்கிய காரணியாக ஒருவரின் தோற்றத்தை குறிப்பிடுகிறார்..... மொஸ்கோவிட்ஸ், ரெய்கர் மற்றும் ரோலோப் ஆகியோர் இதில் குறிப்பிடுவது, "இரண்டு ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் இனைந்து காதல் மற்றும் திருமண வாழ்வை மேற்கொள்ள விரும்பினால், இந்த விருப்பங்களை பற்றி முன்னரே பேசிவிட்டு தங்கள் ரோல்’களை தீர்மானித்துக்கொள்வது வாழ்நாள் முழுவதும் தங்கள் உறவுகளை மேம்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையும்.... " என்று கூறுகிறார்கள்.... இரண்டு டாப் மற்றும் இரண்டு பாட்டம் தங்கள் வாழ்வில் அத்தகைய ஒரு வாழ்நாள் உறவை மேம்படுத்த முடியாது என்றும் கூறுகிறார்கள்.....  டாப் என்பவர்கள் கோபமும், ஆத்திரமும் அதிகம் அடையும் மனநிலை உடையவர்கள் என்றும் கூறுகிறார்கள் இவர்கள்..... அதனால் பாட்டம்’களே அதிகமாக சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுப்பதும் நடப்பதாக கூறுகிறார்கள்.....

நாம் மேற்கண்ட மூன்று பிரிவுகளான  (top, bottam, versatile) என்பதை மட்டும் கண்ட நமக்கு தெரியாமல், இன்னும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன..... அவர்களை service top மற்றும் power bottom என்று குறிப்பிடுகிறார்கள்..... இரண்டு டாப்'கள் உறவு கொள்ளும்போது அதில், ஒரு டாப் தன நிலையை மாற்றி பாட்டமாக செயல்படுவான், அவனை சர்வீஸ் டாப் என்று கூறுகிறார்கள்..... அதே போல இரண்டு பாட்டம்கள் உறவு கொள்ளும்போது, அதில் ஒருவர் டாப்'ஆக மாறுவார்கள், அவர்களை பவர் பாட்டம் என்று கூறுகிறார்கள்..... ஆகமொத்தம் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட டாப், பாட்டம், வெர்சட்டையில் என்ற மூன்று நிலைகளுடன், இந்த சர்வீஸ் டாப், மற்றும் பவர் பாட்டம்'களை சேர்த்து மொத்தம் ஐந்து பிரிவுகளாக சொல்லலாம்..... இதில் இந்த ஐந்து வகைகளுக்குள் நீங்கள் உங்களை சுருக்கிக்கொள்வதாக இருந்தாலும், பறந்து விரிந்து சிந்தித்து ஒரு "கே"வாக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வதும் உங்கள் விருப்பம்..... தனிப்பட்ட ஒருவரின் விருப்பங்கள்தான், இருவரின் உறவை தீர்மானிக்க வேண்டுமே தவிர, இதைப்போன்று "சட்டம்" போட்டல்லாம் நம்மை சுருக்க வேண்டாம்.... என்னதான் சொன்னாலும், இந்த ஏற்றத்தாழ்வு இப்போது மாறுமா? என்ற கேள்விக்கு இப்போதைக்கு நமக்கு விடை தெரியாது...... 2003 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மாத்வியூ மெக்லின்ட்டயிர் பல ஒருபால் விரும்பிகளிடம் ஆய்வு செய்து ஒரு முடிவை கூறினார்..... அதில் அவர் எடுத்துக்கொண்ட சாம்பிள் ரொம்ப வித்தியாசமானது.... அனைவருடைய வலது கையின் அச்சு நகல் தான் அந்த சாம்பிள்.... அதிலிருந்து அவர் கூறிய முடிவிற்கு பெயர் 2D:4D effect.... 

அந்த விளைவாவது, "நம் வலது கையின் இரண்டாம் மற்றும் நான்காம் விரல்கள்.... அதாவது, ஆட்காட்டி விரல் மற்றும் மோதிர விரல்களுக்கு இடையிலான அளவின் வேறுபாடு அதிகமாக இருந்தால் அவர் டாப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், அந்த அளவு குறைவாக இருந்தால் அவர் பாட்டமாக இருக்க அதிக வாய்ப்புண்டு " என்றும் கூறுகிறார்.... ஆனால், அவர் கூறிய கருத்து ரொம்ப நாள் நீடிக்கவில்லை, அந்த விளைவு பலராலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்விளைவுகளை நிறைய கூறினர்.... அதனால், அது பொய்யாகிப்போனது.....  ஆய்வு முடிவுகளால் இன்னும் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், நமக்கான தேவைகளை அறிந்து இதை முடிவு செய்வதுதான் புத்திசாலித்தனம்......  

நான் என் பல கதைகளிலும் இந்த வேறுபாடுகளை பற்றி கூறியுள்ளேன்.... எல்லாமும் சேர்த்து மொத்தமாக நான் கூறுவது ஒன்றுதான், இந்த பிரிவினை நிச்சயம் வழுவான எதிர்காலத்தை கே பற்றி இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தாது..... அதனால், இத்தகைய எந்த வகைகளுக்குள்ளும் உங்களை அடக்கிக்கொள்ளாமல், எல்லாவற்றையும் ஏற்று பழகுங்கள்.... தனிப்பட்ட விருப்பங்களை மட்டுமே கணக்கில் கொள்ளுங்கள்.... இன்னும் சிறப்பாக உங்கள் வாழ்வு அமையும் என்று நம்பலாம்....