Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 2 October 2012

இந்தியாவில் ஓரினசேர்க்கை வரலாறு......மேற்க்கத்திய நாடுகளில் இத்தகைய புரட்சிகளும், போராட்டங்களும் ஓரினசேர்க்கைக்கு நடந்ததை நாம் கேள்விப்பட்டபோது, இந்தியாவில் அப்படி நடக்கவில்லையே என்கிற ஆதங்கம் நமக்கு எழுவது இயற்கைதான்.... அதே நேரத்தில், ஓரினசேர்க்கை எல்லாம் மேற்க்கத்திய கலாச்சாரம் என்றும், அதை பார்த்து நாம் கேட்டுப்போய்விட்டோம் என்று சிலர் சொல்வதை தவறென்று சொல்லத்தான் இந்த கட்டுரை....
கி.பி பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆப்கானிய மன்னர்கள் ஆட்சியில் (மொகாலய ஆட்சிக்கு முன்பு) ஓரினசேர்க்கை இயல்பாக கருதப்பட்டது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?... நம்பித்தான் ஆகனும், அதுதான் உண்மை..... அலாவுதீன் கில்ஜி என்ற மன்னரை கேள்விப்பட்டிருப்பீர்கள்..... அவரை பற்றி ஒரு சிறு முன்னுரை சொல்லிவிட்டு, நான் விஷயத்துக்கு வரேன்.... அந்த அலாவுதீன் கில்ஜி மன்னராக பொறுப்பேற்பதற்காக தன் மாமாவை (மன்னர் ஜலாலுதீன் கில்ஜியை) நயவஞ்சகமாக கொன்றுவிட்டு அரியணை ஏறினான்.... அத்தோடு, மன்னர் ஒருவரையே நான் சொன்ன ஆசை வார்த்தைகளை கேட்டு கொல்ல முயன்றார்கள் என்றால், எப்போது வேண்டுமானாலும் தன்னையும் கொல்ல முயல்வார்கள் என்று நினைத்த அலாவுதீன், தன் சகாக்களையே கொன்றார்.... அத்தோடு நில்லாமல் தன் பதவிக்கு போட்டியாக இருப்பார்கள் என்று நினைத்து. அனைத்து வாரிசுகளையும் (பத்து வயது குழந்தை உட்பட) கொன்றார்.... தன் விசுவாசமான தளபதி ஜாபர் கான், தன்னைவிட அதிக புகழ் பெறுகிறான் என்ற காரணத்தால் அவர் போரில் இறந்தபோது சந்தோஷப்பட்டார்...... போதும் போதும்.... நம்ம அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றை தோண்டினால், அதில் முழுவதும் ரத்தமும், துரோகமும்தான் மிஞ்சி நிற்கிறது.... அப்படி யாரையும் நம்பாமல் இருந்த அலாவுதின் இந்த உலகில் ஒருவரை மட்டும் நம்பினான் என்றால், அது "மாலிக் கபூர்" தான்.... குஜராத்தில் ராஜபுத்திர மன்னர் ராய் கர்ண தேவா என்ற மன்னரை எதிர்த்து போரிட்டு, குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கம், வைரம் நகைகளுடன் இந்த மாலிக் கபூர் என்ற அடிமையும் ஒருவன்.... மாலிக்கை சிலர் அரவாணி என்று கூறுகிறார்கள், அரவாணிக்கும் ஓரின பிரியருக்கும் வித்தியாசம் தெரியாத வரலாற்று ஆசிரியர்கள் மாலிக்கை அரவாணி என்று சொல்கிறார்கள், நிச்சயம் அவன் ஓரின விருப்பம் கொண்ட ஆண் தான் என்கிறார்கள் சிலர்....  சரி, அந்த மாலிக் எப்படியோ இருக்கட்டும், அவன் அலாவுதீன் கில்ஜியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து அடிமையாக இருந்த அவன், பிரதம மந்திரியாக பதவி உயர்ந்தான்.... வீரத்திலும் மாலிக் கபூர் சளைத்தவன் இல்லை.... நம்ம மதுரை வரைக்கும் வந்து போரிட்டு வென்ற ஒரே முஸ்லிம் தளபதி மாலிக் கபூர் தான்.... மாலிக்கின் வருகைக்கு பிறகு அலாவுதீன் கில்ஜியின் புகழும், நிலபரப்பும் விரிவடைந்தது..... வருடங்கள் செல்ல செல்ல மாலிக் வைத்ததுதான் சட்டம் என்னும் நிலைமை ஆகிவிட்டது..... சிலர் மாலிக் பற்றி மன்னரிடம் போட்டுக்கொடுத்து அவர் மனதை மாற்றினாலும், மறுகணமே மாலிக் மன்னரின் அருகில் அமர்ந்து மன்னரை தழுவினால், அத்தனை நினைவுமே காணாமல் போய்விடும்.... அந்த அளவிற்கு மாலிக்கின் ஸ்பரிசத்தில் தன்னை இழந்து கிடந்தார் மன்னர்.... ஒரு கட்டத்தில் மன்னர் அருகில் அமர்ந்து, மன்னரை மெலிதாக வருடி, "மன்னா, உங்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிந்தவுடன், மகாராணியார் மற்றும் இளவரசர் ஆகியோர் உங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள்" என்றான் மாலிக் கபூர்.... இதற்கு பிறகு சொல்லவா வேண்டும், உடனே தன் மனைவி, பிள்ளைகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மன்னர்.... பின்னர் தானே எல்லாமுமாக மாறிவிட்டான் மாலிக்.... எல்லோரையும் வஞ்சகத்தால் கொன்ற அலாவுதீன் கில்ஜியை, ஒருநாள் விஷம் வைத்து கொன்றான் மாலிக் கபூர்.... பின்னர் ஆட்சியை தன் கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டம் போட்ட மாலிக்கை, அவன் தளபதிகளே தீர்த்துக்கட்டி ஆட்சியை இளவரசர் முபாரக் கையில் ஒப்படைத்தனர்.... அலாவுதீன் இறந்து சரியாக முப்பத்தைந்தாம் நாள், மாலிக் கபூரும் அதே போல நயவஞ்சகமாக தீர்த்துக்கட்டப்பட்டான்...... அதைப்போல, ஆட்சிக்கு வந்த முபாரக்கும் ஓரின பிரியன் என்றால், அதுதான் நமக்கெல்லாம் ஆச்சரியம்.... தந்தையைவிட ஓரினசேர்க்கையில் அதிகம் ஈடுபாடுகொண்ட முபாரக் கில்ஜியின் ஆட்சி பெரும்பாலும் அந்தப்புரத்தில் மட்டுமே கழிந்தது.... அந்தப்புரம் என்றால், அங்கு பெண்கள் கூட்டம் இருக்கும் என்று நினைக்காதீர்கள்.... பெரும்பாலும் ஆண்களும், அரவாணிகளும்தான் அங்கிருப்பார்கள்.... அலாவுதினுக்கு ஒரு மாலிக் கபூர் போல, முபாரக்கிற்கும் ஒரு மல்லிக் குஸ்ரு.... மல்லிக் ஒரு இந்து.... அலாவுதினுக்கும் மாலிக் கபூருக்கும் நடக்கும் காம லீலைகள் எல்லாம் நான்கு சுவருக்குள் மட்டும்தான் நடக்கும்... ஆனால், நம்ம முபாரக் - மல்லிக் தம்பதியின் இச்சைகள் எல்லாம் போது இடத்திலும் நடக்கும்.... இதைக்கண்டு பல அமைச்சர்கள் தலையில் அடித்துக்கொண்டு போவார்கள்.... பெரும்பாலும், மல்லிக் பெண்ணுடை தரித்து, மன்னர் முன் ஆட, தன்  உலகையே மறந்துவிடுவான் முபாரக்.... அத்தகைய தருணத்தில் போர் வந்தால்கூட, பிறகு பார்த்துக்கலாம் எனும் அளவிற்கு மன்னர் இன்பத்தில் மூழ்கி இருப்பாராம்..... நாளாக நாளாக அரண்மனை செயலிழந்து, அங்கு விபச்சாரிகளும், காமரசம் சொட்டும் கவிதைகள் பாடும் புலவர்கள் மட்டுமே நிரம்பி இருப்பார்களாம்.... இறுதியில் அலாவுதினுக்கு நேர்ந்ததைப்போல, முபாரக்கிற்கும் நயவஞ்சகமாக உயிர் பறிக்கப்பட்டது.... கொஞ்ச நாட்களில் மல்லிக்கும் அதே போல கொல்லப்பட்டான்.... பொதுவாக ஆப்கானிய மற்றும் மொகாலய மன்னர்களின் ஆட்சியை பற்றி படித்தால், அதில் ஆட்சித்திறனை விட அதிகமாக பழிவாங்கல் தான் இருக்கும்.... அது போல, அலாவுதீன் மற்றும் முபாரக்கின் வாழ்வையும் நாம் எடுத்துக்கொண்டாலும், இந்த மன்னர்கள் கே என்பதால், இத்தகைய விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டனவா? என்பதும் நமக்கு தெரியவில்லை.... சிறந்த நிர்வாகம் என்றால் அது அலாவுதீன் கில்ஜியின் நிர்வாகம் என்று பலர் கூறுகிறார்கள், பஞ்சத்தில் கூட மக்கள் வறுமையில் வாடாத அளவிற்கு கில்ஜி செம்மையாக ஆட்சி செய்ததாக கூறினாலும், ஏனோ இந்த மன்னர்களின் கொலைகளும், அந்தரங்கங்களும் மட்டும்தான் பெரிதாக பேசப்படுகிறது..... நிச்சயம் அவர்கள் கே என்றதுமே , அவர்களை பற்றி எழுதுபவர்களுக்கு அந்த மன்னர்கள் நயவஞ்சகர்கள் என்ற எண்ணம் தோன்றியதன் விளைவுதான் இவ்வளவு விஷயங்களுக்கும் காரணமாக இருக்குமோ? என்றும் யோசிக்க தோன்றுகிறது..... சரி, ஆனாலும் அநேகமாக உறுதிப்படுத்தப்பட்ட ஓரினசேர்க்கையாளர்கள் பற்றிய தகவலால், மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது என்று நமக்கு புரிகிறது..... ஆனால், தமிழ் மன்னர்கள் எவரை பற்றியும் இப்படி ஒரு தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லை.... நிச்சயம் அப்படி எதுவும் நடந்திருந்தாலும், அதை நம் வரலாற்று ஆசிரியர்கள் மூடி மறைத்திருக்கவே அதிக வாய்ப்பு உண்டு.... சரி, இப்போ இந்தியாவில் இதைப்பற்றிய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள புராணங்களை பார்ப்போம்.....
மகாபாரதத்தில் அரவானுடன் கிருஷ்ண பகவான் புணர்ந்ததும் நாம் அறிந்ததே......
அய்யப்பன் என்கின்ற கடவுள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
பதினான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத, பெங்காலி இலக்கியங்கள் (இன்றளவும் மிகப்பிரபலமான கீர்த்திவாச ராமாயணம் உட்பட) பாகிரத மன்னன் (கங்கை நதியைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தவன்) இரண்டு விதவைப்பெண்களுக்குப் பிறந்ததாகக் கூறுகிறது. பாகிரதன் என்ற பெயரே இரண்டு பெண்ணுறுப்புகளுக்குப் பிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது. (Bhaga - Vulva) இந்து மருத்துவ நூல்களும் முதல் நூற்றாண்டிலிருந்தே பால், பால்வேறுபாடு, ஓரினச்சேர்க்கை விருப்பம் ஆகிய அறிவியல் ரீதியான பாகுபாடுகளை விளக்குகின்றன.
காமசூத்ரா நூலும் ஓரினச்சேர்க்கையை மூன்றாம் இயற்கை என்று வருணிக்கிறது.
கணிதமேதை சகுந்தலா தேவி எழுதிய ‘The world of Homosexuals’ (1977) நூலில், திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சீனிவாச ராகவாச்சாரியார் அளித்த பேட்டியில், ஓரினக் காதலர்கள் முன்ஜென்மத்தில் மாற்றினக் காதலர்-களாகத் தான் இருந்திருப்பார்கள். இப்பிறவியில் பால் மாறியிருந்தாலும், அவர்களுடைய ஆன்மாவின் ஈர்ப்பு அப்படியே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
திருமணம் என்பது ஆன்மாவின் கலப்பு, இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்த சைவ அர்ச்சகரின் கருத்து இது.
பண்டைய மன்னர்கள் கட்டிய கோவில்கள் (குறிப்பாக கஜுஹாரோ) சிற்பங்கள் பலவற்றிலும் ஓரின சேர்க்கை தொடர்பான சிற்பங்கள் இருந்ததை வைத்து பார்க்கும்போது அப்போது இது சட்ட விரோதமான செயல் இல்லை என்று புரிகிறது.... அதாவது இதை ஒரு பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்..... ஏனோ இப்போ உள்ளவர்கள்தான் இதை குற்றமாக பார்க்கிறார்கள்....... இனியாவது ஓரினசேர்க்கை தவறென்று சொல்லும் பழமைவாதிகளுக்கு இதை சொல்லி புரிய வையுங்கள் நண்பர்களே.....

4 comments:

 1. COool man ..!

  ReplyDelete
 2. Hai anna, Srinivasa Ragavasariyar & Alavutheen Kilgi informations super, Mallik Gushru pathi nan padisu irukken, avar natural name Kushru Khan nu ninaikkaren...

  ReplyDelete
 3. அன்பு நண்பருக்கு என் வயது 38. என் அலுவல் விவரமாக நான் கோயம்புதூருக்கு இரவு நேர பேருந்தில் பயணப்பட்ட போது ஒரு கல்லுரி மாணவர் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து என் ஆண்மையை உசுபேற்றி 2 முறைக்கும் மேலாக என் ஆண்மையை சுவைத்தார்... ஆனால்...அவருக்கு பிறப்புறுப்பு என்பது மிகவும் சிறியதாக இருந்தது...அவர் தான் உடலில் ஒரு பெண்ணாகவும் மனதில் கூட பெண்மையின் நினைவுகளுடனும் ஆனால் பார்பதற்கு ஆண் போன்றும் இருப்பாதாக கூறினார்...அவர் ஓரின சேர்கையாளாரா இல்லை திருநங்கை இனத்தைச் சேர்ந்தவரா என்பது புரியவில்லை...உங்களால் முடிந்தால் விளக்கம் அளிக்கவும்... உங்களது நல்ல வலைதளத்திற்கு என் அன்பு வாழ்த்துக்களுடன் இப்படிக்கு எ.ராஜ்

  ReplyDelete
 4. ஆதாரம் குடுங்க

  ReplyDelete