(சமீபத்தில்
மின்னஞ்சலில் வந்த கேள்வி இது.... இந்த கேள்வியின் நியாயமும், பதிலின் அவசியமும்
நம் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மின்னஞ்சலையும், அதற்காக நான்
எழுதிய பதிலையும் இணைத்து இங்கு பதிந்துள்ளேன்...)
ஹலோ
விஜய்,
நான்
நடிகர் விஜய் பற்றி கூளில் தேடியபோது உங்கள் தளத்தை பார்க்க நேர்ந்தது. உங்கள் சில
பதிவை நான் படித்தேன். அதனால் உங்களிடம் ஒரு சில சந்தேகங்கள்.
நான் 4 வருட பொறியியல் படிப்பில் 2 வருடம் விடுதியில் தங்கி
பயின்று வந்தேன்.புதிய இடம் என்பதால் முதல் மூன்று மாதம் வரை யாரும் அவ்வளவாக
பழகவில்லை.போக போக ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றியும் பள்ளி வாழ்க்கை பற்றியும்
பேசினார்கள். அனைவரும் நண்பர்களானோம்.
விடுதி
வாழ்க்கை பற்றி அனைவரும் அறிவர்.பத்து பதினைந்து பேர் ஒரே அறையில் கிண்டல்,கேலி என்று இருப்போம்.சில தடவை அங்கேயே
உறங்குவோம்.அப்படி இருக்கையில் முதல் வருட இறுதில் ஒரு நெருங்கிய நண்பன் அறையில்
அரட்டை அடித்தி விட்டு அங்கேயே தூங்கினேன்.அன்றிரவு அவன் என் காதருகே வாயால் உதுவது,என் தலைமுடியை இழுப்பது என பண்ணிக்கொண்டிருந்தான்.ஒன்று,இரண்டு வாரம் அவன் அவ்வாறே பண்ணினான்.
நான்
அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.நாட்கள் கழிய,ஒருநாள் இரவு அவன் அறையில் இருந்த நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.நான்
அவன் அறையில் உறங்கினேன்.அவன் வழக்கம்போல் செய்தான் அதனை பெரிதாக எடுத்துக்
கொள்ளவில்லை.அதன் பிறகு அவன் எனது ****** தடவி, எனது உதட்டை கடித்தி இழுத்தான். எனது ஆண்மையை எழுப்பிவிட்டான்.என்னால்
அதனை தட்டிவிட முடியவில்லை.
அவனது
கையால் எனது ****** பிடித்து ***
வெளியேற்றிவிட்டான் சிறிது நேரத்தில் அவனை தட்டிவிட்டு எனது அறையில் வந்து
படுத்தேன்.அன்றிரவு முழுதும் அவன் அவ்வாறு செய்தான் என எண்ணி எனக்கு தூக்கம்
வரவில்லை.
அடுத்த
நாள் முதல் அவனிடம் நான் பேசவில்லை.நாட்கள் ஆக ஆக எங்களது நண்பர்கள் நீ ஏன்
அவனிடம் பேசவில்லை என் கேட்டார்கள். என்னால் ஒன்றும் சொல்ல முடியவிலை.மூன்றாம்
வருடம் நான் விடுதியை விட்டு வெளியில் தங்கினேன். இறுதியாக நாங்காம் வருட இறுதில்
அவன் என்னிடம் வந்து பேசினான்.நான் அவனிடம் பேசவில்லை.கல்லூரி முடிந்து அனைவரும்
அவர் அவ்ர் வாழ்க்கை பார்க்க தொடங்கிவிட்டனடர்.இதுவரை நான் அவனிடம்
பேசவில்லை.நீங்கள் தான் எனது சந்தேகத்தை தீர்ககவும்.. .நான் அவனிடம் நடந்து கொண்டது சரியா?உங்க்ள் பதிலை எதிர்பார்க்கிறேன்
நன்றி
அன்புடன்
ஸ்ரீனிவாசன்....
அன்பு
நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்களே,
முதலில்
உங்களுக்கு ஒட்டுமொத்த கே சமூகம் சார்பாக நன்றிகள்.... இந்த தளத்தை நிறைய பொது சமூக மக்கள்
பார்க்குறாங்கன்னு எனக்கு தெரியும்.... சிலர் இதை பார்த்து ஒதுங்கி செல்வார்கள்,
சிலர் பெயரளவில் வாழ்த்து சொல்வார்கள், இன்னும் சிலர் தரக்குறைவாக
விமர்சிப்பார்கள்.... ஆனால், உங்களுக்கு தொடர்பில்லாத ஒரு விஷயமானாலும், என்றைக்கோ
செய்த ஒரு செயலை நினைவு கூர்ந்து நீங்கள் கேள்வி கேட்டிருப்பது மகிழ்ச்சி.....
“உங்கள் நண்பர் ஒரு கே, அவருக்கும் ஒரு ஆண் மீதான ஈர்ப்பு இருக்கும்” என்ற விஷயம்
உங்களுக்கு இப்போ புரிஞ்சிருக்கலாம்.... அதன் விளைவாகத்தான் இந்த கேள்வியை நான்
பார்க்கிறேன்.... ஒரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதும், ஆணுடன் உறவு கொள்வதும் நிச்சயம்
தவறு இல்லை....
ஆனால்,
செட்யூஸ் செய்வதாக கூறி உங்களை போன்ற ஒரு “ஸ்ட்ரைட்” நபருடன் உறவு கொண்டது
நிச்சயம் தவறான செயல்பாடுதான்.... ஆனாலும், ஒரு விஷயத்தை நீங்க
புரிஞ்சுக்கணும்.... அப்போ அப்படிப்பட்ட செயலை செய்த உங்க நண்பருக்கும், உங்களை
போலவே தான் செய்வதின் தவறு புரியாமல் செய்துள்ளார் என்பதுதான் உண்மை.... நிச்சயமாக
இவ்வளவு காலமும் உங்கள் மௌனம், அவரை ஒவ்வொரு நாளும் சித்திரவதை செய்திருக்கும்....
நீங்கள்
வெளிப்படையாக திட்டி இருந்தால் கூட, அவர் அந்தளவுக்கு நொந்திருக்க மாட்டார்....
உங்கள்
நண்பரை போல செட்யூஸ் செய்து ஸ்ட்ரைட் நபர்களை அடைந்து, பின்பு நட்பினை பிரிந்து
நித்தமும் துன்பப்படும் பலர் இங்க இருக்காங்க.... அவர் தவறை நான் நியாயப்படுத்தல,
ஆனால் அந்த தவறுக்கு பின்னால் நொறுங்கி இருக்கின்ற அந்த மனிதனின் மனதையும் நீங்க
பார்க்கணும்னு தான் சொல்றேன்..... அந்த நண்பருக்காவது, தான் நடந்துகொண்ட விதம்
சரிதானா?னு யோசிக்குற உங்களை போல ஒரு தெளிவான நண்பர் இருக்கிறார்.... இன்னும்
நண்பனின் மௌனத்தை தண்டனையாக பெற்ற எத்தனையோ கே இளைஞர்கள், நித்தமும் நொந்து கொண்டு
இருக்கிறார்கள்.....
அதனால்,
உங்க நண்பருக்கான தண்டனை காலம் முடிந்ததாக கருதி, அவருடன் நீங்கள் பேசிட வேண்டும்
என்பது எனது வேண்டுகோள்.... நிச்சயம் இனி உங்களை அப்படி ஒரு கண்ணோட்டத்தில் தன்
வாழ்நாள் முழுக்க அவர் பார்க்கமாட்டார் என்பது மட்டும் உறுதி.....
நீங்கள்
செய்தது தவறல்ல.... ஆனால், உங்கள் நண்பர் செய்த தவறை நட்பிற்காக நீங்கள்
மன்னிப்பது தவறில்லை என்பதுதான் கருத்து... விரைவில் உங்கள் நட்பு மீண்டும் மலர்ந்து,
நல்லதொரு அத்தியாயம் உங்கள் நண்பரின் வாழ்வில் தொடங்கவேண்டும் என்பதுதான் என்
ஆசை.....
பொதுவாகவே
ஸ்ட்ரைட் நபரை செட்யூஸ் செய்வதை தங்கள் சாதனையாக சில கே நபர்கள், அதனை தங்கள் வாழ்நாள் சாதனையாக நினைக்கிறார்கள்...
ஒரு ஸ்ட்ரைட் நபரான உங்களுக்கு வந்துள்ள இந்த புரிதல், என்றைக்கு கே இளைஞர்களுக்கு
வரப்போகிறதோ? என்று எனக்கு புரியவில்லை.....
தாங்கள்
முன்வந்து, உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்....
அன்புடன்...
விஜய்
விக்கி....
supper
ReplyDeletethank u ravi
ReplyDeleteSuperb
ReplyDeleteநன்றி அண்ணாச்சி...
DeleteYour answer is correct. Definitely he will realise and accept his friend.
ReplyDeleteநன்றி சேகர்... அப்படியே நடக்கும்னு நம்புவோம்...
Deletenalla purithalukku vazhi vagukattum
ReplyDelete