Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 5 November 2013

"சமூக விரோதிகளின் பிடியில் ஓரினசேர்க்கை தளங்கள்" - அதிர்ச்சி 2...

மூக விரோதிகளின் பிடியில் ஓரினசேர்க்கை தளங்கள் பற்றிய என் முந்தைய கட்டுரைக்கு நான் எதிர்பாராத அளவுக்கு நம் மக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ்... அதுமட்டுமல்லாமல், நான் அதிர்ச்சிக்கு உள்ளாகும்படி “தாங்களும் அதுபோல பாதிக்கப்பட்டதாக” கிட்டத்தட்ட பத்து மின்னஞ்சல்கள் எனக்கு இந்த ஒரு வாரத்தில் வந்துள்ளது... ஏனோ இதுவரை தங்கள் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த உண்மைகளை அப்படி பலர் என்னிடம் பகிர்ந்துகொண்டுள்ளது எனக்கு ஆச்சரியம்தான்... அதில் முக்கியமான இரண்டு அதிர்ச்சிகளை பற்றி உங்களிடம் நான் இப்போ பகிர்ந்துக்கப்போறேன்... இந்த இரண்டு நிகழ்வுகளும் கொலை வரை செல்லவில்லை என்றாலும் கூட, சமூக விரோத கும்பல் ஓரினசேர்க்கை தளத்தில் ஆக்கிரமித்துள்ளதை நிரூபிக்கும் வகையிலான நிகழ்வுகள் இவை...
முதல் மின்னஞ்சல் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் அதிபரிடமிருந்து வந்தது... மிகுந்த தயக்கத்திற்கு பிறகும், குழப்பத்திற்கு இடையிலும் என்னிடம் அவர் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது....
முப்பது வயது சென்னைவாசி, அன்பான மனைவி, அழகான ஒரு வயது குழந்தை, அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கான வியாபார முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும்.... இந்த நிலையில் அவர் மனைவி, உற்ற நண்பர்கள் கூட அறிந்திடாத அவரின் பாலீர்ப்புதான் அவரின் மொத்த சந்தோஷத்தையும் குழிதோண்டி புதைத்துள்ளது...
மனைவி ஊரில் இல்லாத ஒருநாளில், வழக்கமான பிளானட் ரோமியோ மூலம் படுக்கைக்கு ஆள் பிடித்திருக்கிறார்... சில புகைப்பட பரிமாற்றம், அலைபேசி எண் என்று கொஞ்சம் கவனத்துடனேயே கையாண்டு இருக்கிறார்... வீட்டிற்கு அழைக்கப்பட்ட நண்பருடன் குளிர்பானம் அருந்திய பிறகு, உற்சாகம் பொங்க காமத்தில் திளைத்திருக்கிறார்... இதுவரை எல்லாம் சரியாகத்தான் போயிருக்கு... அதன்பின்பு அந்த புதியவன் கிளம்பும் முன்பு, நம் நண்பரை பார்த்து பணம் கேட்டுள்ளான்....
“பணம் கொடுக்குறதா நான் சொல்லலையே?” என்றிருக்கிறார் நண்பர்...
“என்ன சார் விளையாடுறீங்களா?... இதல்லாம் சொல்லனுமா?... முன்னபின்ன யார்கூடவும் சாட் பண்ணதில்லையா?” என்று கொஞ்சம் ஏற்றமான தொனியில் கேட்டிருக்கிறான் புதியவன்...
பிரச்சினையை வளர்க்க விரும்பாத நண்பர், “எவ்வளவு?” என்று கேட்டிருக்கிறார்...
“பத்தாயிரம்...”
“பத்தாயிரமா?” அதிர்ச்சி ஆனாலும், வேறு வழியில்லாமல் பணத்தை கொடுத்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்திருக்கிறார் நண்பர்... ஆனால், அதுதான் அந்த நண்பர் செய்த மிகப்பெரிய தவறு... பணம் கொடுத்தது முற்றுப்புள்ளி அல்லாமல், ஒரு வருடமாக தொடர் புள்ளியாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது.... ஆம், அந்த இளைஞன் கேட்கும் போதல்லாம் பிரச்சினையை வளர்க்க விரும்பாத நம் நண்பர், ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து வருகிறார்... கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த “சாத்வீக மிரட்டல்” தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது... ஆமாங்க, இப்போவரை அந்த இளைஞன் “தான் அடுத்தவரிடம் சொல்லிவிடுவதாகவோ, குடும்பத்தினரிடம் உண்மையை வெளிப்படுத்தி விடுவதாகவோ” சொல்லவே இல்லை... ஆனாலும், மிரட்டல் தொனியிலான பேச்சால், வேறு வழியின்றி இன்றைக்கு வரை பணம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் நம் நண்பர்....
அவருடனான என் ஒருவார மின்னஞ்சல் சாட்’இன் ஒரு பகுதியை இங்கே சொல்கிறேன்...
“ஏன் நீங்க அவனுக்கு பயப்படுறீங்க?... ஒருதடவை பயப்படாம துணிஞ்சு மறுத்து பாருங்களே?” என்றேன் நான்...
“வேண்டாம் விஜய்... என் வாழ்க்கைல நான் ரிஸ்க் எடுக்க விரும்பல... என் வீடு, என் மனைவி பற்றியல்லாம் அவனுக்கு தெரியும் இப்போ... இந்த நேரத்துல அவன் சொல்ற எந்த விஷயமும் என் வாழ்க்கைல பூகம்பத்தைத்தான் உண்டாக்கும்...”
“சரி... எவ்வளவு நாள் இப்டி அவன் பணம் கேட்குற போதல்லாம் கொடுக்கப்போறிங்க?”
“அவன் கேட்காம இருக்குற வரைக்கும் விஜய்...”
“இப்போ உங்களால கொடுக்க முடியுற பணத்தை அவன் கேட்குறான், நீங்க கொடுக்குறீங்க... நாளைக்கே உங்க தகுதிக்கு மீறிய ஒரு தொகையை கேட்டால் என்ன செய்வீங்க?... அப்போ எந்த தைரியத்துல அவன் சொல்லமாட்டான்னு நம்புறீங்க?”
“தெரியல விஜய்... அதைப்பற்றி இப்போ எனக்கு யோசிக்க தெரியல... யார்கிட்டயும் இதைப்பத்தி நான் இதுவரைக்கும் சொல்லல... இப்போ சொன்னதால ஒரு மனசு பாரம் குறைந்த மாதிரி இருக்கு... இப்போதைக்கு அது போதும் விஜய்....”
“தப்பா நினச்சுக்காதிங்க... ஒரு கேள்வி கேட்கணும்... உங்க முதல் உடலுறவுக்கு பிறகு, இந்த ஒரு வருஷத்துல உங்க ரெண்டு பேருக்கும் இடையில அவ்வப்போது உறவு நடந்திருக்கா?”
“உண்மையை சொல்லனும்னா, முதல் தடவை அவனை பார்த்ததுக்கு அப்புறம், நான் அவனை ஒருதடவை கூட மறுபடியும் நேர்ல பார்க்கல... போன்ல பேசி, இவ்வளவு பணம் வேணும்னு கேட்பான்... அவனோட ஏடிஎம் கணக்குல நான் பணம் போடுவேன், அவ்வளவுதான் எங்க ரெண்டு பேருக்குமான தொடர்பே இந்த ஒரு வருஷமும்.. அவன்கூட மட்டுமல்ல, அந்த ஒரு நிகழ்வுக்கு அப்புறம் வேற யார்கூடவும் நான் உறவில் ஈடுபடல...”
இதற்கு பிறகு என்னால் முடிந்த சில ஆலோசனைகளை அவரிடத்தில் சொன்னேன்... எதையும் அவர் செயல்படுத்துவார் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.... நிலைமை அவர் கையை மீறி செல்லும் தருணம் வந்தால், என்னிடம் சொல்வதாக சொன்னார் நம் நண்பர்... அப்படி ஒரு தருணம் அவருக்கு வாய்க்காமல் இருந்திட அந்த இறைவனை பிராத்திப்பதை தவிர நமக்கு வேறு வழி தெரியவில்லை....
நம் நண்பரை மிரட்டிக்கொண்டிருகும் அந்த நபர் ஒருபால் ஈர்ப்பு நபர்தானா? என்பதே இந்த விஷயத்தில் நமக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது... பொதுவாகவே ஒருபால் ஈர்ப்பு நபர்கள் “சென்சிட்டிவ்” மனம் உடையவர்கள்... இந்த நிலையில் அவன் மூலம் தனக்கு ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ? என்கிற தயக்கத்தில்தான் நண்பர் இன்னும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்...
எப்போது அந்த இளைஞனின் அதட்டல் பேச்சுக்கு அடிபணிய தொடங்கினாரோ, அப்போதே மொத்தமாக அவனுக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் அந்த நண்பர்... குறைந்தபட்சம் பதிலுக்கு ஒரு ஏற்றமான தொனியில் நம் நண்பரும் பதில் சொல்லி இருந்திருந்தால் கூட இந்த ஒருவருட நரக வேதனையை அனுபவித்திருக்க மாட்டார்... தன் பயம்தான் எதிரியின் ஆயுதமாக மாறிவிட்டது என்பதை அந்த நண்பர் இன்னும் புரிந்துகொள்ளவே இல்லை...
அடுத்தது இரண்டாம் நபரின் மின்னஞ்சல் பற்றி இப்போ சொல்கிறேன்....
கோவையின் பிரபல கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் சதீஷ்.... சமூக வலைத்தளத்தின் மூலம் வழக்கமான சந்திப்பு சதீஷுக்கு இன்னொரு இளைஞனுடன் நிகழ்ந்தது... அலைபேசி எண் கடைசிவரை அந்த இளைஞன் கொடுக்கவே இல்லை... நேரடியாக சதீஷ் சொன்ன அந்த முகவரிக்கு சென்று நின்றான் அந்த இளைஞன்... அந்த இளைஞன் அனுப்பிய புகைபடத்திற்கும், வந்து நின்ற இளைஞனுக்கும் சம்மந்தமே இல்லை... தான் ஏமாற்றுப்பட்டுவிட்டோமோ? என்று நினைத்துக்கொண்டாலும், “வந்தவரைக்கும் லாபம்” என்று கருதி உறவில் ஈடுபட ஆயத்தமாகி இருக்கிறார் சதீஷ்... அப்போதுதான் சதீஷுக்கு அந்த புதியவன் ஒரு ஆபர் கொடுத்திருக்கிறான்...
“க்ரூப் செக்ஸ் உங்களுக்கு ஓகேவா?... ரெண்டு பேர் இருக்காங்க... அதுல ஒருத்தன் மாடலிங் பண்றான்” என்று கேட்டிருக்கிறான் புதியவன்...
ஆசை யாரை விட்டது?... அதுவும் மாடலிங் பையன் என்றால்?... நம்ம சதீஷையும் விடவில்லை அந்த ஆசை... பல வீடியோக்களில் க்ரூப் செக்ஸை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்ட சதீஷ் உடனே, சரி சொல்லி இருக்கிறார்... அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்திருக்கிறார்கள் இரண்டு நபர்கள்... பிறகென்ன?... வந்த வேகத்தில் சதீஷின் தங்க செயின், மொபைல் போன், பர்ஸ், பணம் எல்லாவற்றையும் உரிமையோடு பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்...
வெளியே சத்தம் கேட்டிடாமல் எவ்வளவு கெஞ்சி, கதறி, அழுது பார்த்தும் கொஞ்சமும் சலனமில்லாமல் கற்பழிக்கப்பட்டது சதீஷின் நம்பிக்கைகளும் ஆசைகளும்...
இந்த நிகழ்வு நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இப்போவரை அவரால் அந்த படபடப்பில் இருந்து வெளிவர முடியவில்லை...
முதல் நிகழ்வை போல அல்லாமல், சதீஷின் விஷயம் முழுவதும் சமூக விரோத கும்பலின் செயல்தான்... நான் முன்பே சொல்லியபடி, அலைபேசி எண் கொடுக்கவில்லை, பொய்யான புகைப்படம் அனுப்பி இருக்கிறான்... அதாவது, நாளைக்கு நம்ம சதீஷ் துணிந்து காவல் துறையை நாடினால் கூட, புகைப்படமோ, அலைபேசி எண்ணோ கொடுத்து மாட்டிக்கொள்ள கூடாது என்கிற முன்னெச்சரிக்கை தான் சமூக விரோதிகள் சதீஷுக்கு மறைமுகமாக கொடுத்த அபாய அலாரம்....
முதலில் சதீஷை சந்தித்த இளைஞன், உளவு பார்க்க வந்தவன்... அதாவது, சதீஷ் எப்படிப்பட்டவன்? அருகில் இருக்கும் வீடுகளுக்கு அஞ்சுகிறானா? பணம், பொருள் போன்றவை நிறைய இருக்கிறதா? போன்ற விஷயங்களை உளவு பார்க்க வந்திருக்கிறான்... வீட்டிற்குள் நுழையும் வரை, அக்கம் பக்கத்தில் யாரும் பார்த்துவிடுவார்களா? என்கிற சதீஷின் அச்சத்தை முதலில் அறிந்துகொண்டுள்ளான் இளைஞன்... அடுத்து, வீட்டில் நல்ல வளம் இருப்பதை நோட்டமிட்டுள்ளான்... அதன்பிறகே சதீஷை மயக்கும் “க்ரூப் செக்ஸ்” ஆபர் அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது....
சதீஷ் விஷயத்தில் ஈடுபட்ட மூவருமே ஒருபால் ஈர்ப்பினர் இல்லை... குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் நவீன களமாக ஓரினசேர்க்கை தளங்கள் மாறிவருகிறது என்பதற்கு இதைவிட தெளிவான சான்று வேறு இருக்க முடியாது....
மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளை மாதங்கள் பலவாகியும் அந்த இரு நபர்களும் வேறு யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ளவில்லை... இத்தனை காலமும் அந்த கொடுமையான நிகழ்வை நினைத்து நொந்து மனம் நைந்து போனவர்கள்... இப்போது இருவரும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்துகொண்டது கூட, அவர்களை போல வேற யாரும் இந்த ஆபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதால்தான்....
கடந்த வார இரட்டைக்கொலை பற்றிய பொதுத்தள ஊடகங்கள், குறிப்பாக நாம் மிகவும் மதிக்கும் ஒரு வார இதழ் “இயற்கைக்கு முரணான உறவுகளால் நிகழும் குற்றங்கள்” என்று அந்த கொலைகளை ஓரினசேர்க்கையின் மீதும், ஒருபால் ஈர்ப்பினர் மீதும் எளிதாக சுமத்திவிட்டது...
ஆழமாக கள ஆய்வு செய்து செய்தி வெளியிட வேண்டிய பத்திரிகைகள், நாளிதழ் செய்திகளை வெட்டி ஒட்டி ஒரு “கவர் ஸ்டோரி” செய்தியாக வெளியிடுவது முறையான பத்திரிகை தர்மம் கிடையாது...
இந்த கொலைகளுக்கும், குற்ற செயல்களுக்கும் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சமூக விரோத கும்பலே செயல்பட்டு வருவதை வெளிப்படுத்தியிருக்க வேண்டிய ஊடகங்கள், பாதிக்கப்பட்ட ஒருபால் ஈர்ப்பு சமூகத்தின் மீதே குற்றத்தை சுமத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது முறையான நியாயம் இல்லை...
பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக திசைதிருப்பிவிட்டிடாமல், இனியாவது உண்மைகளை ஆராய்ந்து எழுத வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்...
ஒருபால் ஈர்ப்பு நபர்களே, இது உங்களுக்கும் சொல்லப்படும் “அபாய” உண்மைதான்... உங்களை சூழ்ச்சி வலைகள் நான்கு பக்கத்திலும் சூழ்ந்து விரிக்கப்பட்டு இருக்கிறது... கவனமாக அதிலிருந்து வெளிவர நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும்... வழக்கத்தைவிட பன்மடங்கு விழிப்புணர்வுடன் இனி வலையுலகில் உலாவுங்கள்... சில காலம் நாமெல்லாம் விழிப்புணர்வோடு இருந்துவிட்டால், “ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும்” என்று சொல்லிவிட்டு, அந்த சமூக விரோதிகளே அந்த தளங்களை விட்டு விலகி சென்றுவிடுவார்கள்...
அதுவரை உங்கள் கவனம்தான் உங்களை காப்பாற்றப்போகும் உன்னத ஆயுதம்....
“எப்போதும் அச்சத்தை தவிருங்கள், சிலநேரம் ரௌத்திரத்தையும் பழகுங்கள்”...

என்றும் உங்கள் நலன் விரும்பும்,
விஜய் விக்கி....

11 comments:

  1. திரு. விஜய் அவர்களே மேல் சொன்ன ரெண்டு நிகழ்வுகளில் நான் முதல் நிகழ்விற்கு சில கருத்துககளை பரிமாற விரும்புகிறேன்.

    அந்த தொழில் அதிபர் நண்பர் முதலாவதாக தனது தொலைபேசி அல்லது அலைபேசி என்னை மாற்றி இருக்கலாம் மேலும் அவர் சொந்த வீட்டில் இருந்தால் ஏதாவது ஒரு காரண்ம் கூறி வேறு ஏரியாவிற்கு குடி போய் இருக்கலாம். வாடகை வீடு எனில் அது மேலும் சுலபம். அதே போல் அவர் மெதுவாக அவரது மனைவியிடம் தான் சிறந்தவன் என்பதையும் தாங்க்கு தொழிலில் உள்ள சில எதிரிகள் எனது இமேஜ் ஐ கெடுக்க சில தவறான நபர்களை வைத்து மிரட்டுவதாக கூறி இருக்கலாம். தவறு செய்து விட்டு மீண்டும் மீண்டும் தவறு புரிகிறார் என்றே எனக்கு தோன்றுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து இது அவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பா... உங்கள் யோசனைகளையும் நண்பரிடம் சேர்த்துவிட்டேன், நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவோம்....

      Delete
  2. Namma vidhi na..
    MCA Friend sonna mathari avar tholil pottiyila ethirigal ennai ematrukirar nu wife ta solli avanai veratti vidalam..

    ReplyDelete
    Replies
    1. இது விதி இல்லை தம்பி, பணத்தாசை பிடித்த பேய்கள் செய்யும் சதி.... அதிலிருந்து நாம் தப்பித்தாக வேண்டும்... உமது கருத்துகளுக்கு நன்றி தம்பி...

      Delete
  3. படிக்கும் போதே மனம் பதறுகிறது...பயனுள்ள தகவல் விஜய்...கண்டிப்பாக விழிப்புடன் மனதையும் அடக்கி இருந்தால் தான் இது போன்ற விஷயங்களை தடுக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாம்...

      Delete
  4. @rajaguru sir,

    vidhi endru sollatheergal. idhu namathu urimai. ipdi panra samooga virodhigala epdi venumnalum sattathin moolam thandikka mudiyum. epdina naama immathiri vishayangala velila therinju panrathilla. so namma pathi oru nalla image society la irukkum podhu atha naama kedayamavum payanpaduthanum. appo appo namma suthi riukkaravanga kitta indha vishyangala vera yarukko nadakkara mathiri solli paavam ipdi nalaavangalum mattikirangale nnu avangala ellathukum thayapaduthanum. idhu futurela namakku romba usefulla irukkum.

    i think u may understand.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பா !!
    தங்களுடிய செய்திகளுக்கு நன்றி!!

    என்னக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இட்தேபோல் நிகல்ழ்ந்தது .. நண்பன் போல் பழகிய ஒரு வஞ்சகன் சென்னை சென்ட்ரல் கு வரசொலி கூடவே ஒரு ஆளையும் கூட்டிகிட்டு வந்து, அந்த ஆள் ஒரு சிபிஐ மாதிரியும் இவன் அவர்கிட்ட மாடிகின்னன்னு சொல்லி என்னையும் போலீஸ் ல ஒப்படைக்கபோறேன் ன்னு என்னைய மீரண்டீங்க என்னோட அடம் கார்டு எல்லாத்தையும் எடுத்துகிட்டு என்னோட அப்பாவுக்கு போன் பண்ணிடுவேன் மீரட்டிங்க.. ஆரம்பத்துல நான் பயந்தாலும் நான் இருதந்து PUBLIC Place.. அதுவும் இல்லம்மா என்ன நடந்தாலும் பரவாஇல்ல ஆனா என்னோட பணத்த மட்டும் பறிகொடுக்க கூடாது ன்னு அந்த சிபிஐ ஆ நடிச்சவன்கிட்ட என்னோட அப்பகிட்ட பேசு இல்ல போலீஸ் ஸ்டேஷன் போகலாம் ஆனா ஓழுங்கு மடிர்யதைய ATM கார்டு ஆ கூடுடான்னு கத்திட்டேன் அங்க வரவங்க போறவங்க எல்லாரும் எங்களையே ஒரு மாதிரியா பார்த்தாங்க அவனும் பயந்து ATM கார்டு கொடுத்துட்டு ஓடிட்டான்!!!


    நான் சொல்லவரது ஒண்ணுதான் ஆபத்து எப்படி வேன்னாலும் வரலாம்
    ஆனா அப்படிவந்த அத நாம எப்படி கையல்றோம் என்பது தான் முக்கியம்
    தப்பு பண்ணறது பண்ணிட்டோம் அதனால எல்லாத்துக்கும் தைரியம்மா இருக்கனும்!!
    அப்படி இல்லன்னாலும் கொஞ்சம் அவசரபடாம யோச்சி முடவு செய்யணும்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பா.... உங்கள் துணிச்சலால் நீங்கள் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இருக்கிறீர்கள்....

      Delete
  6. Thanks for your information. I will follow the line

    ReplyDelete
  7. ada kadavule. ithana vithamana prachana irukkutha ?? nalla vela. i am not going for any such things like this. Even in abroad ! But To Vicky na, how are dating sites working with respect to hetero people ? anga ellam thappu nadakkarathillaya ?

    and how do things work with the male prostitution websites ? Those which look standard and famous, who has modelling people as their call boys, i mean sites like male escort services, how safe are those ? ( i read a topic about this, but you haven't mentioned about this kind of well reputed websites, who have models who charge from 10,000 rs )

    ReplyDelete