Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 17 February 2014

"திடீர் காதல்" வலை விரிக்கும், "டீசன்ட்" திருடர்கள்....


“Looking for a Decent, good looking, well educated & talented guy” என்று ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் வரும் ராதிகாவை போல கண்ட இடத்திலும் காதலன்/காமலன் தேடி விளம்பரம் செய்பவரா நீங்கள்?.. அப்போ உங்களுக்கான எச்சரிக்கை பதிவுதான் இது...
என் நண்பரின் நெருங்கிய நண்பரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு காதல் பயணம் எப்படி விபத்தை நோக்கி சென்றது? என்று சொல்லத்தான் இந்த பதிவு... அந்த நண்பரின் நண்பர் பெயர் சிவா (வழக்கம்போல பெயரை மாற்றித்தான் போட்டுள்ளேன்)... வேறு மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சிவா, திருச்சியில் பிரபல பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்...
கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும் சிவாவின் ஒரே பொழுதுபோக்கு “காதலன் தேடுவது”.... வழக்கமான கே தளங்களில் வெகுநாட்களாக காதலன் தேடி அலைந்துகொண்டிருந்த சிவாவின் கண்களில் அப்போது பட்டவர் மகேஷ் (இது அந்த நபரின் பிளானட் ரோமியோ பெயர்)... புகைப்பட பரிமாற்றம் சுபமாக நிகழ்ந்ததை தொடர்ந்து அலைபேசி எண்கள் அன்பாக பரிமாறப்பட்டன... நான் மேல் சொன்னதை போல மகேஷ் Decent, good looking, well educated & talented guy தான்... தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி என்று பன்மொழி திறமை பெற்றவர் என்பது நம்ம சிவாவுக்கு கூடுதல் மதிப்பை மகேஷ் மீது ஏற்படுத்திவிட்டது...
நித்தமும் காதல் மொழி திகட்டும் அளவிற்கு தேன் போல பரிமாறப்பட்டதன் விளைவாக மகேஷை முழுமையாக நம்பத்தொடங்கினார் சிவா...
“நாளைக்கு நான் திருச்சி வரேன் சிவா... ஹோட்டல் **********லதான் தங்கப்போறேன்... உன்னை நாளைக்கு சந்திக்கப்போறத நினச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு டியர்...” இப்படி மகேஷ் சொன்ன நாளில் சிவாவிற்கு தூக்கம், பசி எதுவும் தேவைப்படவில்லை.... நாளைய பொழுதிற்கான கற்பனைகளை இன்றே அவர் மனம் உதிர்க்க தொடங்கியது...
மறுநாள் விடியலில் பரபரப்பும் படபடப்புமாக காணப்பட்டார் சிவா... மாலையில் சந்திக்கப்போகும் மகேஷிற்காக தன்னை காலை முதலே தயார் செய்ய தொடங்கிவிட்டார்... மகேஷை பார்த்ததும் ‘என்ன பேசனும்?, முக்கியமா என்ன செய்யனும்?’ என்கிற ஒத்திகையை பலமுறை தன் அறைக்குள் அரங்கேற்றிவிட்டார்....
அந்தி சாய்ந்த அந்த மாலைப்பொழுதில் வழக்கத்தைவிட தன்னை அதிகமாக தயார் செய்தவனாக குறிப்பிட்ட அந்த ஹோட்டலை அடைந்தார் சிவா... நெற்றியில் வழியும் வியர்வை கூட, முகத்தின் பூச்சுகளுக்கு இடையூறு செய்யாவண்ணம் கைக்குட்டையால் அடிக்கடி நெற்றியை ஒற்றிக்கொண்டார்...
அறைக்கதவை திறந்த மகேஷ் முகம் நிறைந்த புன்னகையுடன் சிவாவை உள்ளே வரவேற்றான்... புகைப்படத்தில் பார்த்ததை விட நிறம் மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது... எவ்வளவுதான் அலைபேசியில் பேசி இருந்தாலும், மகேஷை நேரில் பார்த்தபோது சிவாவிற்கு பேச்சு வரவில்லை... இருக்கையின் நுனியில் அமர்ந்தவாறே பரபரப்பாக காணப்பட்டார்....
“என்ன சிவா இவ்ளோ டென்ஷனா இருக்க?... கூலா இரு டியர்...” என்று சொன்னபடியே சிவாவின் தோளில் மெல்ல தட்டினான் (இதுதான் சிவாவிற்கும் மகேஷிற்கும் நிகழ்ந்த அதிகபட்ச உடல் தீண்டல்!)... அப்படியே அருகில் இருந்த மேசை மீது தயாராக வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தை சிவாவின் கைகளில் திணித்து, “இதை குடி சிவா... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு, அப்புறம் பேசலாம்... அதுக்கப்புறம்.......” என்று கண்ணடித்து சிரிக்க, சிவாவிற்கோ வெட்கம் மலர அவசரமாக குடித்து முடித்தார் அந்த பானத்தை.....
அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் மகேஷ் ஏனோ தன்னை பற்றியும், தன் திருச்சி வேலையை பற்றியும் தேவையில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.... ஆனால், அந்த ஐந்து நிமிட இடைவெளியை நிரப்பத்தான் மகேஷ் இப்படி சம்மதமில்லாமல் பேசுகிறான்! என்பது சிவாவிற்கு புரிய மறுநாள் ஆகிவிட்டதுதான் கொடுமை....
“சரி, குளிர்பானத்தை குடித்த சிவா அப்புறம் என்ன செஞ்சார்?” னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது.... பானத்தை குடித்த ஐந்தாவது நிமிடம் கண்கள் சொருக, மயங்கிய நிலையில் தன்னிலையை இழந்தார் சிவா....
மறுநாள் காலைதான் கண் விழித்தார்... அதுவும் அலைபேசி வெகுநேரம் அடித்த சத்தத்தின் விளைவாகவே கண் விழித்தார்... அறைக்குள் தன்னை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தார்...
“அப்போ மகேஷ்?”
“அவன் எப்பவோ அறையை காலி செய்துவிட்டு போய்ட்டான்...”
“அப்போ சிவாவுக்கு ஒன்னும் ஆகலைல்ல?”
சிவாவிற்கு மகேஷை காணவில்லை என்கிற அதிர்ச்சியைவிட, தன் கழுத்தில் மாட்டியிருந்த தங்க சங்கிலியும், மோதிரமும் காணவில்லை என்பதில்தான் கூடுதல் அதிர்ச்சி.... வழக்கமாக டேட்டிங் செல்லும்போது நகைகளை அணிந்துகொள்ளாத சிவா, காதலனை பார்க்கப்போகும் ஆர்வத்தில் இப்படி சில பவுன் நகைகளை அணிந்து சென்றார்...
மெல்ல தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை சிவா அப்போதுதான் உணர்ந்தார்...
ஆனாலும் கூட எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு மகேஷின் அலைபேசி எண்ணை தொடர்புகொண்டார்.... இரண்டு முறை அழைப்பை எடுக்காதவன், மூன்றாவது முறையாக அந்த இணைப்பு “switch off” செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது...
“யாரிடம் விசாரிப்பது?... அவன் பெயர் கூட உண்மையான பெயரா? என்பது புரியவில்லை... அவனை பற்றி விசாரிக்கப்போய், இறுதியில் ஹோட்டல் நிர்வாகிகள் தன்னை பற்றி விசாரித்தால் என்னாவது?... பில் கூட கட்டினானா? என்பது தெரியவில்லை” என்று எண்ணியவாறே தலைக்கு வந்த ஆபத்து, தலைப்பாகையோடு போனதாக தன்னை தேற்றிக்கொண்டு வீட்டை நோக்கி நகர்ந்தார் சிவா....
அந்த நிகழ்வு நடந்து பத்து நாள்தான் ஆகிறது... இன்றுவரை மகேஷின் அலைபேசி எண்ணுக்கு எத்தனையோ நூறு முறைகள் தொடர்புகொண்டும் பதில் இல்லை... பிளானட் ரோமியோ ப்ரோபைலின் அஞ்சலுக்கும் கூட பதில் இல்லை... மனம் நொந்து என் நண்பனிடம் இந்த விஷயம் சொல்லப்பட, குறைந்தபட்சம் இதை ஒரு விழிப்புணர்வாகவாவது நம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு என்னிடம் சொன்னார் அந்த நண்பர்....
“அலைபேசி எண், பிளானட் ரோமியோ முகவரி, புகைப்படம்” என்று மொத்தமாக அனைத்து விவரங்களும் என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது... பிளானட் ரோமியோ ஐடிக்கு அவன் வந்தே சில நாட்கள் ஆகிறது, அலைபேசி எண்ணும் கூட இன்னும் தொடர்பு எல்லைக்கு வெளியில்தான் இருக்கிறது... புகைப்படத்தை வலைப்பூவில் வெளியிட எனக்கு விருப்பமில்லை என்பதால், விருப்பப்பட்டவர்களுக்கு விபரங்களை தனி செய்தியில் அனுப்புகிறேன்.... இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா?... பாதிக்கப்பட்ட சிவா வேறு மாநிலத்தில் காவல் துறை அதிகாரியாக பணிபுரிகிறார்... “திருடனுக்கு தேள் கொட்டியதை போல” இந்த உண்மையை தன் குடும்பத்தில் கூட சொல்ல முடியாத சோகத்தில் திளைத்திருக்கிறார் சிவா...
இந்த விஷயத்தில் நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் இருக்கிறது...
ஏமாற்றிய அந்த மகேஷ் உண்மையாகவே “கே”யா? என்பதில் பெரிய சந்தேகம் எழுகிறது... சிவாவுடனான உடல் ரீதியான தொடர்பில் அவன் ஆர்வமோ, ஈடுபடவோ இல்லை... மேலும், மகேஷின் பேச்சு மிகத்தேர்ந்த அனுபவசாலியை போல தெரிந்தது... அவன் குறிக்கோள் நகை மட்டுமே தவிர, அலைபேசி போன்ற தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கும் பொருட்களை எடுக்கவில்லை... மிக நேர்த்தியான முறையில் மயக்கமுற செய்து அவன் திருடிய பாங்கு நிச்சயம் இது முதல் முறை அல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது...
ஆசை வார்த்தை பேசி, முழுவதுமாக நம்ப செய்து இப்படி ஒருபால் ஈர்ப்பாளர்களை தன் வலைக்குள் சிக்க வைத்து திருடும் இந்த “ஹைட்டெக்” திருடர்கள், இப்போது சமூக வலைத்தளங்களின் பக்கம் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டனர்... அவர்களில் பெரும்பாலானோர் “கே” இல்லை...
முன்பொரு கட்டுரையில் நண்பரின் “பைக்”கை திருடிய விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்... இப்போது நகை... இன்னும் உங்களிடம் பகிர்ந்திடாத இதனைப்போன்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன... நீங்கள் ஒருவர் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கான காரணிகளாக “பேச்சு, உடல்மொழி, தோற்றம்” போன்றவைகளை அளவுகோலாக வைத்துள்ளீர்கள்... இப்போது அந்த அளவுகோலுக்குள் தான் இந்த ஆபத்தான நபர்கள் புகுந்துவிட்டார்கள்....
உங்களுக்கு தேவையான ஒரு கைக்குட்டை வாங்கக்கூட ஒன்றுக்கு நான்கு முறை யோசிச்சு முடிவெடுக்குறீங்க... இப்படி காதலை தேடுகிறேன் பேர்வழி என்று ஆபத்துகளில் சிக்கும் முன்னர், கொஞ்சம் யோசித்து நிதானித்து செயல்படுவதில் தப்பில்லை.... இப்போது திருச்சி வரை கிளை பரப்பிவிட்ட அந்த திருட்டுக்கூட்டம், இன்னும் வேரூன்ற வாய்ப்பிருக்கு...
அதற்காக நீங்க பயப்பட வேணாம்... உங்களை நீங்க தற்காத்துக்கொள்ள, முடிவுகளை கொஞ்சம் நிதானித்து எடுங்கள்...
1.      அப்படி முதல் முறையாக சந்திக்கப்போகும் நபர்களின் உண்மை தகவல்களை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்....
2.      உங்கள் முதல் சந்திப்பை விடாப்படியாக நான்கு சுவர்களுக்குள் வைப்பதை மறுத்திடுங்க... பொது இடங்களில் சந்தியுங்கள், பேசுங்கள், அவன் உண்மையை பேசுகிறானா? என்பதை கவனியுங்கள்....
3.      மனதிற்குள் பயம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தைரியமாக உங்கள் முகத்தையும், உடல்மொழியையும் வெளிப்படுத்துங்கள்... உங்கள் பயம்தான் அவர்களின் மூலதனம்... நீங்க துணிச்சலா பேசுவதை அவர்கள் கவனித்தால், நிச்சயம் மேற்கொண்டு காரியத்தை நகர்த்த யோசிப்பார்கள்....
4.      “கண்ணே!... மணியே... கனியமுதே!...”னு அலைபேசியில் எவ்வளவுதான் காதல் மொழி பேசினாலும், முதல் முறை சந்திப்பில் ஒரு பித்தளை மோதிரத்தை கூட தவிருங்கள்....
5.      குளிர்பானமோ, மதுவோ உங்கள் முதல் சந்திப்பில் நிச்சயம் மறுத்துவிடுங்கள்....
மேற்சொன்ன தகவல்களுக்கு இணங்க மறுக்கும் நபர்களை, தயங்காமல் அந்த இடத்திலேயே விட்டுட்டு அடுத்த ஆளை தேட தொடங்குங்க நண்பர்களே!.... அதையும் தாண்டி “ரிஸ்க்” எடுத்துதான் நீங்க “காதல் ரஸ்க்”
சாப்பிடனும்னு நினைச்சா, மேற்கொண்டு நிகழவிருக்கும் ஆபத்துகளுக்கு நீங்களே முழு பொறுப்பு.....
சரிங்க.... சொல்றதை சொல்லியாச்சு, இனி நீங்களாச்சு, அந்த திருடனுகளாச்சு!...

14 comments:

  1. Such people's photos should be shared in all gay sites and blogs and people should be warned . In police stations there would be photos of pick pockets and thieves with beware warning.similarly such beware notices should be lodged on all sites.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரிதான் அண்ணா... ஆனால், புகைப்படத்தை வலைப்பூவில் பரிமாறுவது வேறுவிதமான சிக்கல்களை உருவாக்கும் என்பதால், பதிவேற்றவில்லை... நிச்சயம் விரைவில் அதை வெளியிட நண்பர்களின் ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கிறேன் அண்ணா...

      Delete
    2. I fully support Sundar SGV !!!!!!!!

      Delete
  2. கண்டிப்பாக எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...நீங்களும் PR பற்றி எவ்வளவு சொல்றீங்க...கஷ்டமாக இருக்கு விஜய்...கண்டிப்பாக இன்னும் இது பற்றி நிறைய சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சாம்.... நிச்சயம் தொடர்ந்து இதைப்போன்ற விழிப்புணர்வு கட்டுரைகளை பகிர்கிறேன்....

      Delete
  3. Naan unga blog neraya thadava padichu iruken. Ithu than first time comment panren. Avan photova thayavu seithu prla oru fake profile create panni avana expose pannunga. Athe mathiri orkut facebook ellathulayum avan oru cheater nu expose pannunga. Namba gay nanbargal ellarum orkut fbookla gay account vechu irukanga. Intha maari aalunga epdi namba weak pointa use panrangalo athe mathiri naaamum ivanunga identitya reveal pannanum.


    Neenga kandipa ithai seiyanum. Indiala thappu athigama nadakarathuku kaaranam sariyana thandanai kidaikamal povathu thaan. Athe thappa naama seiya koodathu. Decency, manithavi maanam athu ellam manithargala nadanthu kolbavargaluku mattum thaan kaata vendum. Intha maari kodurargalai naam oru pothum decency enra poiyana thirayitu maraika koodathu. Pr la fake profile and post his pic on orkut and fb and share it calling him a cheater. It will spread to many gay guys and that asshole will also come to know.

    ReplyDelete
  4. Naan solvathu thavaru endru nenaithal orkutla oru poll vaikalam. Ethanai per avan identity thirayai kilika solgirargal endru paarpom. Intha maari saniyangala ipadaiye ellarum vittu vitta aprom innum 100 pera intha maathiri emathuvanga.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவை பதிவதற்கு முன்பாக இதுபற்றி ஒரு முடிவை சொல்லிடுறேன் பிரசாத்.... உங்க கருத்துகளுக்கு என் நன்றிகள்....

      Delete
  5. Nam thedal ,thirudarkalin thedaluku parisa kidaikirathu varuthamathan iruku anna.

    Kadhalana paka pokum pothu ethukaga nagai potutu poganum anna. nagai pota than kadhal kai kooduma?.
    Trichy junctionlaye Evlo per pickup pandratha nenachi laptop, jewel, moneynu yemanthuduranga anna.
    Aanalum namma aalunga intha jewel potukitu pickup pandratha vida matranga.
    Thanks anna!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி... அதீத நம்பிக்கையின் விளைவுதான் இப்படிப்பட்ட ஏமாற்றங்கள்....

      Delete
  6. anna yen friend oruthan yenna love panratha solra .oru vati enna meet panna but avan mela enku konjam santhegama iruku enna panrathu ?

    ReplyDelete
    Replies
    1. சந்தேகத்தை தெளிவுப்படுத்திய பிறகு காதலியுங்கள்... காதல் உருவானால், அங்கே சந்தேகத்திற்கு இடமிருக்கக்கூடாது....

      Delete
  7. நான் என்னுடையே ஏமாற்றத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். முத்து குமர் என்ற ஒருத்தனை நம்பி நான் கொடுத்த விலை அதிகம். வெறும் சாட்டில் காதலித்து அவனை நம்பி அவன் மருத்துவ செலவுகேன்று கூறியதை சற்றும் யோசிக்காமல் நம்பி அயல் நாட்டில் நான் உழைத்து சேர்த்ததை கொட்டினேன்.

    என்னிடம் எதுவும் இனி தேராது என்ற நிலை வந்த போது என் வீட்டில் என்னை பற்றி சொல்லிவிடுவேன் என்று மிரட்டியும், திட்டியும் மனம்நொந்து அழ செய்தான்.
    கடவுள் அருளால் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை காவல் துறையிடம் புகர் செய்வேன் என்று கூறி அடக்கினேன். அன்று நான் இழந்ததைவிட, பல மடங்கு இன்று சம்பாதித்து விட்டேன். ஆனால் காதலின்மேல் உண்டான அவநம்பிக்கையும், கசப்பும் மாறவே இல்லை.

    அமரிக்காவில் வாழும் இருபதுகளின் தொடக்கத்தில் செய்த இந்த முட்டாள்தனத்தால் இன்றும் யாரையும் நம்ப முடியாமல் முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் நான் வெற்றிடமாகவே உணர்கிறேன்.

    அவன் இப்போதும் சில இணைய தலைகளில் உலா வருகிறான் என்பதை அறிந்தேன். முத்து குமார் லக்ஷ்மணன் இல்லை ராஜேஷ் என்று தன்னை அரிமுகபடுதிகொள்வான். நல்ல உயரம், 6.1 அடி, சற்றே மாநிறம், கலையான முகம். முப்பத்தியாறு வயதிருக்கும். அவன் குறி வைப்பது என்னை போன்ற அயல் தேச வாசிகளை தான். தன்னை ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் என்றும் சொல்லிகொல்வன்.

    காதலென்ற வார்த்தை கசந்து, மனைவியிடம் கிட்டாத உடல் சுகங்களை, கம வெறியாட்டங்களை, வேட்கையை தீர்க்க வடிகால் தேடும் சில திருமணமான ஆண்களை கண்டு வெறுத்து, தனியாக வாழ்வதே நிம்மதியாக உணர்கிறேன்.

    பதின்வயது தம்பிகளும், என்போன்று அயல் தேசத்தில் இருந்து காதலை தேடும் நண்பர்களும் சற்றே ஜாக்கிரதையாக இருங்கள்.

    ReplyDelete
  8. Vijay, I like all your stories. Kudus. keep it up...

    ReplyDelete