Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 19 March 2014

"சமீப நிகழ்வுகள், உங்கள் விஜய் பார்வையில்...." - இது தேர்தல் ஸ்பெஷல்...



 


பரபரப்பாக வந்த மாணிக்கம் மாமா, பயணக்களைப்பில் “உஷ்ஷ்...” கொட்டியபடி இருக்கையில் அமர்ந்தார்....

களைப்பின் பின்னணியில் இருக்கும் காரணத்தை கேட்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தேன் “என்ன மாமா இவ்ளோ லேட்டு?... நீங்க லேட் பண்ணதால் நேத்து பதிய வேண்டிய பதிவை இன்னைக்குத்தான் பதியப்போறேன்....” உரிமையான கோபத்தில் சீண்டினேன்....

“அட பரவால்ல விடுப்பா... மணிப்பூர் போயிட்டு வர்றதுல கொஞ்சம் லேட் ஆச்சு.... லேட் ஆனாலும், லேட்டஸ்ட் தகவல்களை கொண்டு வந்ததை பாராட்டு மாப்ள...” என்றார் காலரை தூக்கிவிட்டபடி....

“சரி... சரி.... சுயபுராணத்தை நிறுத்திட்டு விஷயத்துக்கு வாங்க...”

“ஹ்ம்ம்... மணிப்பூர் தலைநகர் இம்பால்’ல ஞாயிற்றுக்கிழமை நடந்த கே ப்ரைடு ரொம்ப சிறப்பா இருந்துச்சு... ஆயுதப்படைகள் ஆதிக்கத்துல இருக்குற வடகிழக்கு மாநிலங்கள்ல நடக்குற முதல் ப்ரைடு இது... பெரிய அளவுல விளம்பரங்கள் இல்லைன்னாலும், பலரும் சார்ட் பேப்பர்கள்ல ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான கருத்துகளை எழுதிய பதாகைகளை தாங்கிட்டு வந்ததை பாக்குறப்போ ரொம்ப நிறைவா இருந்துச்சு....”

“பதாகையை மட்டும்தான் பார்த்துட்டு வந்தியா மாமா?... ரொம்பவே திருந்திட்ட போல?”

“அட ஆமா மாப்ள.... ரோட்லையே சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் சர்வசாதாரணமா போனதை பார்த்துட்டு ஜெர்க் ஆனதால அங்கல்லாம் நான் வேற எதையும் பார்க்கல.... ஆனால், சட்டம், போலிஸ்’னு யாரை கண்டும் அஞ்சாம அங்க பேரணிக்கு வந்த பாலீர்ப்பு சிறுபான்மையினர் மக்களை பாக்குறப்போ ஆச்சரியமாத்தான் இருந்துச்சு...” இன்னும் ஆச்சரியம் விலகாமல்தான் பேசினார் மாமா...

“உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவு இல்ல, தொடக்கம்தான்’ன்னு நாம உணரும் விதமா இருக்கு பாத்திங்களா?... ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படி நடக்குற நல்ல விஷயங்களை பாக்குறப்போதான் சந்தோஷமா இருக்கு.... அதே நேரத்துல இந்தியாவுல ஹோமோபோபியா'ன்னு சொல்லப்படுற ஒருபால் ஈர்ப்பாளர்கள் மீதான வெறுப்புணர்வு மனநிலையால ஒரு வருஷத்துக்கு முப்பதாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்படுறதா உலக வங்கி ஒரு ஆய்வு செஞ்சிருக்கு....”

“அடேங்கப்பா....! அவ்வளவு நஷ்டமாகுதா?... நாட்டுக்கு எவ்ளோ நஷ்டமானா என்ன? எவன் கஷ்டப்பட்டா என்ன?... இந்த கலாச்சாரம் பேசும் புண்ணியவான்கள், திருந்த மட்டும் மாட்டாங்க.... நல்லா இருக்கட்டும்...” நொந்துகொண்டார் மாணிக்கம் மாமா....

“இதுவரைக்கும் உலக வங்கி உகாண்டா நாட்டுக்கு கொடுத்து வந்த ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதியை நிறுத்திடுச்சாம் தெரியுமா?”

“ஏன்?.... அந்த நாடும் வளர்ச்சி அடையாத நாடாச்சே?... எதுக்கு நிறுத்துனாங்களாம்?”

“உகாண்டா அரசு ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கு எதிரா சட்டத்தை இயற்றி, அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க ஏற்பாடு பண்ணுதாம்.... இதை கண்டிச்சுதான் உலக வங்கி இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்குச்சாம்....”

“ஹ்ம்ம்... இப்படிப்பட்டவங்களுக்கு இதுதான் சரியான பதிலடியா இருக்கும்... உகாண்டா சட்டம் போட்டு கொல்ல பாக்குது, இந்தியா சட்டம் போடாம கொல்லப்பாக்குது.... ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் இல்ல மாப்ள” என்று கோபத்தில் நெளிந்தவரை சாந்தப்படுத்தும் விதமாக, தேநீரை அவர் கையில் கொடுத்தேன்....

“என்னப்பா வெறும் டீ தானா?... விகடன்’ல வர்ற கழுகாருக்கல்லாம் முந்திரி பக்கோடா, நெல்லை அல்வா’ன்னு விதவிதமா கொடுக்குறாங்க.... நீ டீ’யை மட்டும் கொடுத்தே வேலைய வாங்குற....” சொன்னாலும் அவசரமாக தேநீர் குவளையை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டார் மாணிக்கம் மாமா....

“விகடன்’லாம் பெரிய ஆளுங்க மாமா.... நம்ம ரேஞ்சுக்கு டீ போதும்...” எப்போதும் போல இப்போதுமே அதை இயல்பாக எடுத்துக்கொண்ட மாமா, அடுத்த செய்திக்கு தாவினார்....

“பிரபல பாலிவுட் இயக்குனர் ஓனிர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.... வர்ற தேர்தலில் களமிறங்கப்போகும் அவர்தான் பிரதான கட்சியின் சார்பில் முதன்முதலாக தேர்தலில் களமிறங்கும் வெளிப்படையான ஒருபால் ஈர்ப்பாளர்.... பாலீர்ப்பு சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கப்போவதாக சொல்லும் நம்ம இயக்குனர், தேர்தலில் நின்று வெற்றிவாகை சூட வாழ்த்துவோம்...”

“பெரிய விஷயம் தான் மாமா.... வெளிப்படையான ஒருபால் ஈர்ப்பு நபர்களும் நாடாளுமன்றத்தில் கால் எடுத்து வச்சாதான் நமக்கான உரிமைகள் டெல்லியில் வலிமையாக ஒலிக்கும்.... ஆம் ஆத்மி இந்த விஷயத்தில் எல்லாம் பாராட்டப்பட வேண்டியவங்கதான்....”

“ஆமா.... கன்னியாகுமரியில் ஆம் ஆத்மி சார்பா களமிறங்கப்போகும் உதயகுமார் கூட ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து கருத்து சொன்னவர்தான்.... அதுமட்டுமல்ல, வெளிப்படையாவே ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவாக கட்டுரை எழுதும் பிரபல பத்திரிகையாளர் ஞானி கூட ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.... அவரும்கூட சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடப்போவதா சொல்றாங்க....” செய்திகளை கொட்டினார் மாணிக்கம் மாமா...
“அடடே... அப்போ, தமிழ்நாட்டுல கூட ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட வேட்பாளர்கள் களமிறங்கி இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.... நேபாளத்துல ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவா போராடுற சுனில் பாபு பான்ட் போல இங்கயும் நிறைய அரசியல்வாதிகள் வந்தாதான் நம்ம பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்....” ஆதங்கமாக சொன்னேன்....


“உண்மைதான்பா.... நம்ம சுனில் பாபு பான்ட் கூட சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறவிருக்குற பரிசீலனை பட்டியல்ல முக்கியமான இடத்துல இருக்காராம்....” உற்சாகமாக சொன்னார் மாமா...

“அடடே... ஆச்சரியம்தான்... போப் ஆண்டவர், மலாலான்னு பரிந்துரைகள் பட்டியல்ல பல பிரபலங்களுக்கு மத்தியில் சுனில் பாபு பான்ட் உடைய தேர்வு எந்த அளவுல சாத்தியமானது?”

“உண்மைதான்... நோபல் கமிட்டி பிரபலமானவங்களை மட்டும் பார்க்குறது கிடையாது... அந்த வகையில சுனில் பாபு உடைய வெற்றி வாய்ப்பு ரொம்ப பிரகாசமாவே இருக்கு... சுனில், போப் ஆண்டவர், மலாலா மூன்றில் ஒருவருக்குத்தான் இந்த வருஷ சமாதானத்திற்கான நோபல் பரிசுன்னு பலர் சொல்றாங்க.... பார்க்கலாம்....” மாணிக்கம் மாமா அகில உலக அரசியலையும் அலசி பதில்சொன்னார்....

“கடந்த வார பதிவுல தலாய் லாமா பற்றி பாராட்டினேன் அல்லவா?... அதுக்கு தம்பி ரெமோ ஒரு இன்னொரு முக்கியமான தகவலையும் சொன்னார்... தலாய் லாமாவுக்கு முன்பே ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக இன்னொரு மதத்தலைவர் சொல்லிட்டாராம்.... இப்போ நாம நோபல் பரிசுக்கான பரிந்துரை பட்டியல்ல பேசுன அதே போப் பிரான்சிஸ் அவர்கள்தான் அந்த மதத்தலைவர்... ஆக, நோபல் பரிசு இந்த வருஷம் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவருக்குத்தான்’ன்னு நாம தெளிவா சொல்ல முடியும் போல...”

“வழக்கம்போல பஞ்ச் வச்சு கட்டுரையை முடிச்சுட்ட போல?”

“ஆமா... இந்த வார பதிவில் அரசியல் வாடை கொஞ்சம் அதிகமாவே நெடி ஏறிடுச்சு.... அடுத்த முறை வித்தியாசமான செய்தியோட வாங்க” என்று மாணிக்கம் மாமாயை ஒருவழியாக அன்போடு வழி அனுப்பி வைத்தேன்....
(பேசுவோம்....)

(இந்த பகுதியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் மாணிக்கம் மாமா, என் “நெஜமாவா சொல்றீங்க” கதையில் வரும் பாத்திரம்தான்.... மாணிக்கம் மாமாவை இந்த பகுதிக்கு சிபாரிசு செய்த நண்பர் “அவிட் (எ) ராஜு” அவர்களுக்கு நன்றிகள் பல!...)

15 comments:

  1. very nice விஜய்...நிறைய விஷயங்களை யதார்த்தமாக சொல்லும் ஜு.வி. ஸ்டைல் நல்லாருக்கு...மாணிக்கம் மாமாவின் சேவை தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாம்... இன்னும் வேறு மாற்றங்கள் தேவைப்பட்டால் சொல்லவும், உங்க ஆலோசனைகள் எப்போதும் எனக்கு தேவை...

      Delete
  2. Thats cool anna, but the official information regarding the nominees of nobel prize will not be let out for 50 years after the actual awarding ceremony. That means, if people are nominated and were not given the prize, we will actually come to know this officially only after 50 years - information from the official website, once read it.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தம்பி... இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லைதான் என்றாலும், பரிந்துரை பட்டியல் உண்மைதானாம்.... சிலரால் கசியவிடப்பட்டுள்ளது.... கருத்துகளுக்கு நன்றி தம்பி...

      Delete
  3. Also anna, i was thinking to tell you this from a long time.. Those stories village based ones, are really really informative, for people like me, who was brought uo in very developed parts of tamil nadu in the western districts, i actually had no clue about how people in other parts of tamil andu living, their names, their life styles, their cultural uniqueness, the diffenrence in the tamil slang, etc.. at times i could see these in your stories.. particularly in the aingaran story.. super.. go ahead.. i may not be giving comments for all your posts, but will always look at this page to check for any new updates :) keep going anna !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அத்தகைய மண்வாசனை கதைகளையும் நான் எழுதுறேன் தம்பி..... கதை மூலம் எங்கள் பகுதி வழக்கங்களை காட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே,...

      Delete
  4. எனக்கு இந்த தேர்தலில் ஓட்டு இருக்கிறதா என்று தான் தெரியவில்லை! :( இருந்தால் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சிக்கு தான்! நமக்காக நிச்சயமாக எந்த காலத்திலும் அந்த டவுசர் பாய்ஸ் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் குரல் கொடுக்கவும் மாட்டார்கள், எந்த மாற்றமும் கொண்டு வரவும் மாட்டார்கள்! கேஜ்ரிவால் அவர்களின் சில செயல்கள் விமர்சிகும்படி இருந்தாலும் அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானவை! இப்போது வரை மோடி மஸ்தான் பதில் சொல்லாமல் தான் டிமிக்கி கொடுத்து வருகிறார்! சூப்பர் அண்ணா! கலக்கிடீங்க!

    ReplyDelete
  5. அண்ணா, உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள்! ஆர்க்குட் முன்பு போல் பிரபலமாக இல்லை! முகநூளில் உங்கள் கணக்கில் இந்த சிறுவனையும் இணைத்துக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் அங்கு எதுவும் பதிவுகள் ஷேர் செய்து நானும் அந்த பதிவுகளை பரவச் செய்வேன்! தயவு கூர்ந்து முகநூளில் என் நட்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சந்திரன்.... வாக்களிக்கும் உங்கள் முடிவை நான் வரவேற்கிறேன்... தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் சில கூடுதல் தகவல்களை சொல்கிறேன்.... பேஸ்புக்கில் கோரிக்கை அனுப்பு தம்பி, நிச்சயம் ஏற்கிறேன்....

      Delete
  6. ஓரின ஈர்ப்பாளர் அல்லாத ஒருவர் ஓரின ஈர்ப்புக்கு ஆதரவா பேசுறதில் தான் இருக்கு நமக்கான வெற்றி. ஞானி ஓரின ஈர்ப்புக்கு ஆதரவா பேசுறவரு தெரிவும். ஆனா உதயகுமார் அவர்கள் பேசுனத எப்படி மிஸ் பண்ணணு தெரியல. நல்ல செய்தி. ஒரு குறிப்பிட சித்தாங்கள பிடிச்சிட்டு அழரவங்களுக்கு ஓரின ஈர்ப்பு பற்றி புரியவைக்கிறது மிகக்கடினம். அந்த வகைல உதயகுமார் அவர்கள், எளியவன், இயற்கை, மனிதன், மனித மனத்தை நேசிப்பவர். ஓரின ஈர்ப்புக்கு ஆதரவு என்பதை தாண்டி உதயகுமார் அவர்கள் நம் நாட்டிற்கு தேவை. கட்டுரை அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இசை.... இப்போதான் ஞானி அவர்கள் ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செய்தியை அறிந்தேன்.... நல்ல தொடக்கமாக அது இருக்கும் என்று நம்புவோம்... உதயகுமார் அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான சமயத்தில் அதை எதிர்த்து கருத்து தெரிவித்தார்.... அவர் இருக்கும் சூழலில் இத்தகைய நமக்கான ஆதரவே பெரிய விஷயம்தான்... உங்க கருத்துகளுக்கு மிக்க நன்றி இசை...

      Delete
  7. super vicky. now a days your thoughts are very different and superb. 1 request vicky, please write more........

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அரசு... நிச்சயம் நிறைய எழுதுறேன்....

      Delete
  8. nice post vijay anna.. Virudhunagar consituencyla yaruku vote poda..?

    ReplyDelete
    Replies
    1. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தொகுதிவாரியாக என்னுடைய வேட்பாளர்கள் விருப்பப்பட்டியலை வெளியிடுகிறேன் தம்பி... நிச்சயம் அப்போது என் நிலைப்பாட்டை தெளிவாக எல்லோருக்கும் விளக்குகிறேன்...

      Delete