Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 27 May 2016

தொடுவானம் - தொடர்கதை (பாகம் 4)

நாள் - ஜூன் 6, 2020
நேரம் – காலை 7 மணி..
“என்னங்க இதுதான் முகூர்த்தத்துக்கு வர்ற நேரமா?.. சரி, உக்காருங்க முதல்ல.. சாப்ட்டுதான் போகணும்!..  அப்புறம், நல்லா இருக்கிங்களா?... உங்களையெல்லாம் பார்த்து நாலு வருஷமாச்சு, ஆளே மாறிப்போய்ட்டிங்களே!.. என்னது?.. நான் யாருன்னு கேட்குறீங்களா?... நான்தாங்க வாசு.. கதைல விருந்துக்கு வைக்குற ஊறுகாய் போல அப்பப்போ வந்துட்டு போனேனே, மறந்தாச்சா?..
“சரி, திலீப் மகி இவங்கள மறக்கலதானே?.. ஆனா, முன்ன மாதிரி இப்போ மகியை வாடா, போடானல்லாம் கூப்பிட முடியாதுங்க.. அவரு இப்போ எம்பி, அதான் நாடாளுமன்ற உருப்பினருங்க.. டெல்லி பாராளுமன்றத்துல, ‘ஆப்கி பார்... அம்பாஸிடர் கார்ன்னு டைமிங்ல ரைமிங் பேசப்பழகிட்டான்... ஒரு அஞ்சாறு மாசத்துக்கு முன்ன, “சட்டப்பிரிவு 377க்கு எதிரான தனிநபர் மசோதாவை முன்மொழிந்து, ஓரினச்சேர்க்கையை குற்றப்பட்டியலிலிருந்து நீக்கச்செய்த எம்பி மகிழன்ன்னு பேப்பர்ல செய்தி வாசிச்சிருப்பிங்களே, அது நம்ம மகியேதான்..
“மகிதான் அவ்ளோ பெரிய ஆளா ஆகிட்டான்னு நெனச்சிடாதிங்க... மறுபக்கம் நம்ம ஹீரோ திலீப் இப்போ கோலிவுட்டோட மோஸ்ட் வான்ட்டட் ஹீரோ... தொட்டதெல்லாம் பொன்னாகும்னு சொல்வாங்கல்ல, அதுபோல நம்ம திலீப் கமிட் ஆன படமெல்லாம் ப்ளாக் பஸ்டர்தான்.. இதுவரைக்கும் நடிச்ச எட்டு படங்களுமே, ரெக்கார்ட் ப்ரேக்தான்.. இன்னொரு பெரிய காமெடி என்னன்னா, உதிஷாவுக்கு பிரபல தொழிலதிபர்கூட கல்யாணம் ஆகிட்டதால, மார்க்கெட் டல் ஆகிடுச்சு.. இப்போ ஒரு படத்துல திலீப்புக்கு அம்மாவா நடிக்குற அளவுக்கு விதி அவங்க வாழ்க்கைல விளையாடிடுச்சு பாவம்.. ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் ஜோடியா நடிச்சு, நம்ம குமார் இயக்கின படம் நேஷனல் அவார்ட் வாங்குற வரைக்கும் போயிடுச்சுன்னா பாருங்களே... கிட்டத்தட்ட அஞ்சாறு விருதுகளைகூட அந்த படம் அள்ளிருச்சு... மறுபக்கம் நம்ம ராயல் ப்ரொடக்சன்ஸ் எம்டி தொடர்ந்து ஆறு படங்கள் தோல்வி அடைஞ்சதால, கடன் தொல்லை தாங்காம எங்கயோ தலைமறைவா இருக்காராம்.. தான் ஜெய்க்கனும்னு நினைச்சதவிட, அடுத்தவன அழிக்கனும்னே கங்கணம் கட்டிட்டு வாழ்ந்த அந்த  மனுஷன் இப்போ மாறுவேஷத்துல பிரபல சாமியார் மடத்துல சேர்ந்துட்டதா ஒரு பேச்சு ஓடுது..
“அப்புறம் முக்கியமான ஒரு ஆளை மறந்தாச்சு பார்த்திங்களா?... மாணிக்கம் மாமாவுக்கு இப்போ அழகான பெண் குழந்தை பிறந்திருக்கு... அதைவிட முக்கியமா இப்போவல்லாம் அவர் வீட்டுல மிக்ஸி, கிரைண்டர், டிஷ்னு எதுவும் ரிப்பேர் ஆகுறதில்ல.. போன மாசம்தான் அவர் கடையோட கிளையை கொளத்தூர்ல திறந்து வச்சாரு லோக்கல் மினிஸ்டர்... இப்போ டை அடிக்குறத விட்டுட்டு, பெரிய மனுஷன் தோரணைல கல்லால உட்காந்திருக்கத சைதாப்பேட்டை பக்கம் போனிங்கன்னா பாருங்க!...
“‘பழம் கனிந்துவிட்டது, அது பாலில் விழுந்துவிடும்னு காத்திருந்த கார்த்தி இப்போ வேற ஒரு பையன் கூட கமிட் ஆகிட்டான்.. எவ்வளவுநாள்தான் இலவுகாத்த கிளியா தனியாவே உக்காந்திருப்பான், அதான் பேஸ்புக்ல ப்ரப்போஸ் பண்ண ஒரு பையனுக்கு ஓகே சொல்லிட்டு செட்டில் ஆகிட்டான்... அப்பப்போ அவங்க குடும்ப சண்டைக்கு பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்குறது சந்தியா அக்காதான்... சந்தியா அக்கா இப்போவல்லாம் கே தம்பதிகளுக்கு பஞ்சாயத்து பேசற ‘சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி மாதிரி பாப்புலர் ஆகிட்டாங்க...
“சரி இவ்ளோ பேசுற நான் என்ன பண்றேன்னு கேட்குறீங்களா?... அப்டி இப்டின்னு கம்பெனிகள்ல வேலை பார்த்து இப்போதான் சமீபத்துல ஐபிஎம்ல பிளேஸ் ஆகிருக்கேன்... இப்போ முகூர்த்தமாச்சும் எனக்குதான்னு தெரியுமா தெரியாதா?.. பத்மினி வீட்ல பேசி அவங்கள சம்மதிக்க வைக்குறதுக்குள்ள தலையால தண்ணி குடிக்க வேண்டியதாகிப்போச்சுங்க.. ஒருவழியா என்னென்னமோ பேசி, இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு...
‘டக்.. டக்.. டக்.. கதவு தட்டப்படுகிறது... பதறிப்போய் எழுந்த வாசு, நேரத்தை பார்த்தான்... ஐயோ, ஏழரை ஆகிடுச்சா?...
ஓடிசென்று கதவை திறக்க, வெளியே கடுப்புடன் நின்றுகொண்டிருந்தான் மகி...
“உன்னைய ட்ரஸ் சேஞ் பண்ண ரூமுக்குள்ள போகச்சொன்னா, அரைமணி நேரமா என்னடா பண்ற?... உள்ள பேச்சுக்குரல் கேட்டுச்சே, தனியா புலம்ப ஆரமிச்சுட்டியா? சிரித்தான்...
“அதல்லாம் ஒண்ணுமில்ல, நம்ம நலம்விரும்பிகள்கிட்ட நாலு வருஷ நிகழ்வுகளை சுருக்கமா சொல்லிட்டு இருந்தேன்.. இதோ அஞ்சு நிமிஷத்துல ட்ரெஸ் மாத்திடுறேன்.. ஆமா, நீ என்ன வேஷ்டி சட்டைல இருக்க?.. டெல்லி எம்பிக்கள் போல குர்தா போடலாம்ல!
“டெல்லிக்கே போனாலும் நான் தமிழன்தான்டா... பாரம்பரியத்த விட்டுக்கொடுக்க மாட்டேன், நீ அவிழாம ஒழுங்கா வேஷ்டிய கட்டிட்டு வரப்பாரு! உள்ளே அனுப்பி, கதவை சாத்திவிட்டு மீண்டும் மண்டபத்திற்குள் சென்று வந்தவர்களை உபசரிக்க தொடங்கினான் மகி..
“எங்கப்பா மாப்பிள்ள, இன்னும் காணுமே? பதற்றமாக வினவினார் பத்மினியின் அப்பா...
“இதோ ரெடி ஆகிட்டிருக்கான்ப்பா, வந்திடுவான்! அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகிடாமல் பக்குவமாய் ஓரிடத்தில் அமரவைத்துவிட்டு, திலீப்பை தேடி நகர்ந்தான்..
திருமணத்திற்கு வந்திருந்த ரசிகைகளிடம் செல்பி எடுப்பதில் தீவிரமாக இயங்கினான் திலீப்... இன்னும் அவன் மாறவே இல்லை.. மெலிதாய் சற்று உடலில் சதை போட்டிருக்கிறான்.. கன்னங்கள் கூட சற்று பூசினாற் போல ஆகியிருந்தது... ரசிகைகள், ‘ச்சோ சுவீட்..!னு கிள்ளி கொஞ்சிட அதுவும் வசதியாய்தான் இருக்கிறது..
“திலீ.. அருகில் சென்று அப்பெண்களின் கூட்டத்தில் அகப்பட்டுக்கொள்ள விரும்பாமல், விலகியே நின்று அழைக்கிறான்..
ஒருவழியாய் ரசிகைகளின் அன்புத்தொல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மகியை நோக்கி விரைந்தான்... மகியின் பட்டு வேஷ்டி காஸ்ட்யூமை பார்த்ததும், பூரிப்பதை போல முகபாவனையுடன், “ஏய் மகி... செம்மையா இருக்க... உன்ன இந்த காஸ்ட்யூம்ல பாக்குறப்போ, நாமளும் இன்னொருமுறை கல்யாணம் பண்ணிக்கலாமோன்னு தோணுது! கன்னத்தை பிய்த்து வாயில் போட்டுக்கொண்டான்...
“அதல்லாம் பண்ணிக்கலாம்.. முதல்ல நீ போய் ட்ரஸ் சேஞ் பண்ணு மாமா...
“ஏன், இந்த ட்ரெஸ்க்கு என்னவாம்?
“ஒன்னும் இல்லையே... பச்சை சட்டை, மஞ்சள் பேன்ட்... சூப்பர் கலர் காம்பினேஷன்.. அப்டியே ஸ்டேஜ்ல போய் ஒரு டைவ் அடிச்சின்னா, ஜம்போ சர்க்கஸ்லாம் தோத்திடும்!...
“பொறாமைடா உனக்கு... நான் அழகா இருக்கேன்னு பொறாம!
“என் மாமா அழகுதான்... யார் இல்லைன்னது?... அந்த அழகுக்கு பட்டு வேஷ்டி கட்டினாத்தான இன்னும் அழகா தெரியும்!... முகூர்த்தத்துக்கு நேரமாச்சு, ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு சீக்கிரம் வாசுவையும் கூட்டிட்டு வா.. நான் போய் சமையல் வேலை முடிஞ்சிடுச்சான்னு பார்த்துட்டு வரேன்!
ஒருபுறம் நாதஸ்வரம் இசை இன்னிசைத்துக்கொண்டிருக்க, நண்பர்களும் பழக்கப்பட்டவர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள்... வரவேற்பில் நின்று பன்னீர் தெளித்துக்கொண்டிருப்பவர் மகியின் அப்பாதான், மணமேடையில் விளக்கின் திரியை சரிசெய்துகொண்டிருப்பார் அம்மா... அவர்களை கடந்து சமையல் நடக்கும் இடத்தை அடைந்தபோது, நெய்யின் வாசனை வாயிற்கதவை தாண்டியும் கசிந்துகொண்டிருந்தது...
“சாம்பார்ல கொஞ்சம் உப்பு பத்தல.. அதை கவனிங்கப்பா.. மாணிக்கம் மாமா வேஷ்டியை மடித்துக்கட்டியபடி நளபாக சக்கரவர்த்தியிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்... சமையல் பணிகள் இறுதிகட்ட வேலைகளில் மும்முரமாகியிருந்தன...
“மாணிக்கம் மாமா... முகூர்த்தத்துக்கு நேரமாச்சு... தாலி கட்னவுடனேயே பந்தி தயார் ஆகிடனும்.. இப்பவே இலை போட்டு ரெடி பண்ணச்சொல்லுங்க.. மகி கடிகாரத்தை பார்த்துக்கொண்டான்...
“அதல்லாம் ரெடி மாப்ள... ஒன்னும் லேட் ஆகிடாது... சாம்பார்ல உப்பை போட்டு இறக்கிட்டா மொத்த வேலையும் ஓவர்...
“சரி நீங்க வாங்க ஸ்டேஜுக்கு... தாலி கட்டுற நேரமாச்சு.. மாணிக்கம் மாமாவை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு மேடையை நோக்கி விரைந்தான் மகி..
“சந்தியா அக்கா எங்க மாமா?
“அந்த கார்த்தி பையன் ஏதோ பிரச்சினைன்னு கூட்டிட்டு போனான், எங்க உக்காந்து பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு இருக்காளோ... குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தாளான்னு கூட தெரியல! சிரித்துக்கொண்டார் மாணிக்கம்...
மேடையில் வாசு தயாராக அமர்ந்திருக்கிறான், பத்மினியும் வந்துவிட்டாள்... இன்னும் சற்று நேரத்தில் தாலி கட்டும் வைபவம் நடந்தேறிவிடும்...
‘இந்த நேரத்தில் மண்டபத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து வெடித்தாலோ, கரண்ட் ஷாட் சர்க்யூட் ஆகி தீப்பற்றி எரிந்தாலோ, எதிர்க்கட்சி மதவாதிகள் மகியை கூலிப்படை வைத்து தாக்கினாலோ எப்படி இருக்கும்?
ஹ ஹா... வேண்டாம்... எதுவும் வேண்டாம்... நான் பேசுறதை நீங்க கவனித்துக்கொண்டிருக்கும்போதே, அங்க வாசு பத்மினியின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டான்... எல்லாம் சுபம்தான்... எல்லாரும் மறக்காம சாப்பிட்டுவிட்டு போங்க மக்கா!...
பாவம் திலீப்பைத்தான் இந்த மீடியாக்காரர்கள் எங்கு சென்றாலும் நிம்மதியாய் விடுவதில்லை.. இப்போகூட உருட்டுக்கட்டை நீள மைக்கை நீட்டிக்கொண்டு, குதர்க்க கேள்விகளால் அவனை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டார்கள்...
“உங்களோட அடுத்த படம் என்னன்னு சஸ்பென்சா வச்சிருக்கிங்களே, இன்னிக்காவது சொல்லக்கூடாதா? அட்டைப்பட சங்கதிக்கு வழிதேடிக்கொண்டிருக்கிறாள் ஒரு பெண் நிருபர்...
“என் அடுத்த படம் ஒரு கே லவ் சப்ஜெக்ட்... கே லவ்ங்குறதும் ஒரு இயல்பான விஷயம்தான்னு இந்த படம் எல்லாருக்கும் நிரூபிக்கும்.. என் சொந்த பேனர்லதான் இந்த படம் வெளிவரும்... டைரக்டர் புதுப்பையன்.. டைரக்டர் குமார் கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தவர், விஜய் விக்கின்னு பேரு...
“கே லவ் சப்ஜெக்ட், புது இயக்குனர்... தொடர்ந்து ஹிட் படங்களா கொடுத்திட்டு, இந்த விஷப்பரிட்சைகள் இப்போ அவசியமா?
“அதை எப்டி வேணாலும் எடுத்துக்கோங்க... இது என்னோட வாழ்க்கைல ரொம்ப முக்கியமான படம்... அதைவிட முக்கியமா என்னோட வாழ்க்கைல நடந்த உண்மை சம்பவங்கள மையமா வச்சு உருவாக்கப்பட்ட கதை... படம் ரிலீஸ் ஆகுறப்போ என்னைப்பற்றிய அத்தனை காசிப்களுக்கும் அதுவொரு முற்றுப்புள்ளியாகூட இருக்கலாம்... இந்த படம் எடுக்குறதால என்னோட சக்சஸ் ரேட் குறையும்னா, இந்த படமே எனக்கு கடைசி படமா இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்
“படத்தோட டைட்டில் என்ன சார்?

“தொடுவானம்...! (நிறைந்தது)

3 comments:

  1. Nalla ending Vijay Anna... ithu verum kathai alla.. Nammala mathiri paiyanga kathukura paadangal neraya iruku.. Nijamave Tamil le 'Thoduvanam' padam release aaganumnu wait panra. Super anna.. u r great

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ...

      Delete
  2. No words to say,I love this story
    Dear writer Vijay Vicky I have a wish to see you
    I want to ask so many questions
    Please reply me

    ReplyDelete