Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday 2 February 2013

"கே" ஏன் செக்ஸ் மெஷின் ஆனான்?


இந்த கேள்விக்கான பதிலை பார்க்கும் முன், கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்க்கணும்......
உலகின் பழமையான நாகரிகங்களான கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகங்களில் ஒருபால் ஈர்ப்பு என்பது மிகவும் இயல்பான விஷயமாக பார்க்கப்பட்டது.... குறிப்பாக நீங்கள் ஸ்பார்ட்டன்’கள் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.... வீரத்திலும், போர்த்திரத்திலும் உலகம் வியக்கும் அளவுக்கு வெற்றிகளை குவித்ததிலும் பலரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்த அவர்கள் வாழ்ந்த “ஸ்பார்ட்டா” நகர் கிரேக்கத்தில் இருந்தது.... அந்த நகருக்கென சிறப்பான தனிச்சட்டம் இருந்தது.... லைக்கர்கஸ் என்பவர் உருவாக்கிய அந்த சட்டம் ஒருபால் ஈர்ப்பை ரொம்பவே அதிகமாக வலியுறுத்தி சட்டம் இயற்றியது.... ஒருபால் ஈர்ப்பை அவர்கள் போற்றினார்கள்... வீரர்கள் இருவருக்கிடையில் காதல் இருப்பதனால், அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதாக கருதினார்கள்... காதலர்கள் இருவரும் தங்கள் காதலனை காப்பாற்றும் வண்ணம் தீரத்துடன் போரிடுவதை அனைவரும் அறிந்ததால் இதற்கு அதிக களம் அமைத்து கொடுத்தது அந்த அரசு.... ஒருபால் ஈர்ப்பை உலக அளவில் சட்டத்தின் மூலம் அங்கீகரித்தது அவர்கள்தான்.... அவர்களில் நாம் இன்னும் கவனிக்கவேண்டியது, அவர்களுடைய முறையான காதல்... தன் காதலனை தவிர இன்னொரு ஆடவனிடம் உறவு கொள்வதை மிகவும் அசிங்கமாக கருதினார்கள்....
அதே போல கிரேக்கத்தில் இன்னொரு முக்கியமான வழக்கமும் காணப்பட்டது.... பதின்வயதினர் அங்கு பாட்டம் போலவும், மத்திம வயதினர் (பெரும்பாலும் முப்பது முதல் நாற்பது வயதுக்குள் இருக்கும் போர் வீரர்கள்) டாப் போலவும் செயல்படுவார்கள்.... நீங்கள் நினைப்பது போல அந்த “டாப், பாட்டம்” வேறுபாடு என்பது புணர்ச்சியை சார்ந்து இருக்காது.... டாப் என்பவர் ஒரு இன்னொரு தந்தையை போல பதின் வயதினரை வழிநடத்த வேண்டும் என்பது அவர்களின் எழுதப்படாத விதி... அன்பு, காதல் தாண்டி வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் திறமைகளை கற்றுக்கொடுப்பது வரை எல்லாவற்றையும் அந்த “டாப்” போர்வீரனே செய்திட வேண்டும்.... காதல், அன்பு, வழிநடத்தல் ஆகியவற்றுக்கு பிறகுதான் அவர்கள் “உடலுறவு” என்கிற அம்சத்தை நினைத்து பார்த்தார்கள்...
இப்படி பண்டைய நாகரிகங்களில் முறையான வழிநடத்தல்கள்களும், வரைமுறைகளும் இருந்ததனால் அவர்கள் முறைதவறிய உறவை நோக்கி அதிகம் நாட்டம் கொள்ளவில்லை....
பதினாறாம் நூற்றாண்டில் உண்டான ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மக்களின், சமூகத்தின் மனநிலைக்கு பிறகுதான் முறைதவறிய உறவுகள் அதிகமாகின.... சட்டத்தின் மூலமும், சமூக அங்கீகாரத்தின் மூலமும் தங்கள் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால், வேறு தவறான வழிகளை நாடி செல்கிறார்கள்... நான் “செக்ஸ்” என்பதை தவறாக சொல்லவில்லை... மனிதனுக்கு பசி, தூக்கம் போல “செக்ஸ்”உம் ஒரு மனிதனின் அத்திசாவசிய உணர்வுதான்.... ஆனால், அது வரம்பை மீறி, நம்மை மீறி ஆதிக்கம் செலுத்துவதைத்தான் தவறென்று சொல்கிறேன்... ஒரு விஷயத்தை மூடி மறைக்க மறைக்கத்தான் அதன் மீதான ஆர்வம் நமக்கு அதிகமாகும்... அப்படி சமூக மற்றும் சட்டத்தின் புறக்கணிப்பால் அதை தேடி ஓட தொடங்கிவிட்டார்கள் நம்மவர்கள்.... இன்றைய இணையத்தின் வளர்ச்சி அவர்களின் தேவைக்கு அதிகமான தீனிகளை போடுவதால், சதா சர்வகாலமும் செக்ஸ் பற்றிய சிந்தனையில் தங்களை ஆட்படுத்தி கொள்கிறார்கள்....
எளிதாக கே நபர்களுக்கு தங்கள் உடல் தேவையை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தவுடன், அதை தாண்டிய சிந்தனைக்கு செல்வதில்லை.... செக்கு மாடு போல அதை சுற்றியே தங்கள் எண்ணங்களை சுற்ற வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.... மேற்குலகம் மற்றும் அமெரிக்க நாடுகளைவிட இந்தியா போன்ற “விழிப்புணர்வு” இல்லாத நாட்டில்தான் எப்போதும் ஒரு கே, செக்ஸ் பற்றிய சிந்தனையில் இருக்கிறான்....
எழுத்தாளர் கீரா சொன்னதைப்போல, “ஒரு நாளின் பெரும்பகுதியை செக்ஸ் பற்றியே ஒருவன் சிந்தித்துக்கொண்டிருந்தால் அது ‘நோய்’” என்கிறார்.... பசிக்காக சாப்பிடுவதை விடுத்து, இதன்மூலம் ருசிக்காக சாப்பிட தொடங்கினார்கள்.... விதவிதமான உணவுகளை இணையம் வழி அவர்கள் அடைய முடியும் நிலை உண்டாவதால் அதை நோக்கி தங்களை செலுத்துகிறார்கள்....
பொதுவாக ஒருசில பிம்பங்கள் மக்கள் மனதில் உருவாகியபின்பு, அடுத்து வருபவர்களும் அந்த பிம்பங்களை நோக்கியே, அதே கண்ணோட்டத்துடனேயே அந்த விஷயங்களை அணுகுவார்கள்.... ஆங்கிலம் என்பது மொழி என்பதை தாண்டிய, அறிவாக பார்க்கப்படுவதும், வெள்ளை என்பது நிறத்தை தாண்டி அழகாக பார்க்கப்படுவதும் கூட அப்படிப்பட்ட பிம்பங்களின் விளைவால்தான்.... அதே போலத்தான் ஒரு காலத்தில் வேறு வழியின்றி, தங்கள் தேவைகளை தீர்க்க அவ்வப்போது “செக்ஸ்”இல் ஈடுபட்ட கே சமூகத்தினர், இன்றைக்கு அதை தாண்டிய சிந்தனை இல்லாத அளவிற்கு மாறிவிட்டனர்....

இவற்றுக்கு என்னதான் தீர்வு.... முதலில் பாலியல் கல்வி வேண்டும்... அத்தகைய கல்வியில் பாலின ஈர்ப்பு பற்றிய தெளிவான மனநிலை மக்கள் மத்தியில் உருவாகவேண்டும்.... அடுத்து, சட்டமும், சமுதாயமும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் தங்களின் உடல் தேவைகளை தீர்த்துக்கொள்ள முறையான அங்கீகாரத்தை, வாய்ப்பை கொடுக்க வேண்டும்... முறையான வாய்ப்புகள் மூலம் ஒருவன் தங்கள் பாலீர்ப்பின் தேவையை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், முறையற்ற உறவை நோக்கி நம்மவர்கள் செல்லும் நிலை குறையும்... இப்போதுள்ள நிலைமையில் இணையம் ஒருபக்கம் வெறும் உடல் சார்ந்த எண்ணங்களை பூர்த்தி செய்ய களம் அமைத்து கொடுக்கிறது, சமூக சட்டங்களோ பாலின ஈர்ப்புக்கு எதிரான மனநிலை கொண்டு இருக்கிறது... இதேநிலை இன்னும் தொடருமானால் நிச்சயம், இது மனநல பிரச்சினையாக பெரிதாக உருவெடுக்கும் வாய்ப்பும் இங்கே இருக்கிறது.... அதை தடுப்பது அவரவர் கைகளில்தான் இருக்கிறது...
இன்னொரு முக்கியமான விஷயம், “ஒரு விஷயம் தவறென்று சொன்னால், அந்த தவறை பற்றிய சிந்தனையில் எப்போதும் இருந்துகொண்டு, அதையே திரும்ப திரும்ப செய்வதுதான் பதின்வயதின் முக்கிய அம்சம்..... கே பற்றியும் தவறான பிம்பம் சமூகத்தில் இருக்கும்வரை, அது நம் இளைஞர்களை இன்னும் அதிகமான செக்ஸ் பாதையை நோக்கித்தான் அழைத்து செல்லும்”.....
இதை மாற்ற நிறைய செய்யனும்.... அதுவரை நம்மை போன்றவர்களிடத்தில் இருந்து நம்மை நோக்கி வரும் முதல் வார்த்தைகள், “hi, asl, ur likes?, do u hav place?” போன்றவைகளாக மட்டுமே இருக்கும்.....

No comments:

Post a Comment