Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 14 August 2013

"எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம்!...."

சமீபத்தில் ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் நான் அவருக்கு அனுப்பிய கடிதம் பற்றியும், அதற்கு பதிலாக அவர் எனக்கு அனுப்பிய பதில் கடிதம் பற்றியும் ஒரு பதிவை போட்டிருந்தார்....
கொஞ்சம் பாராட்டு, கொஞ்சம் ஆலோசனை, கொஞ்சம் அறிவுரை என்று ஒரு கலவையான பதில்தான் அது என்றாலும், நான் ரொம்பவும் மகிழ்ந்தேன்....
அதற்கு காரணம் நிறைய உண்டு.... ரொம்ப காலமாக எழுதும் எங்களை போன்ற எழுத்தாளர்கள் இதுவரை ஒரு குறுகிய வட்டத்தில் மட்டுமே பேசப்பட்டோம், படிக்கப்பட்டோம், பாராட்டப்பட்டோம்... முதல்முறையாக ஒரு பொதுத்தளத்தில் எங்களின் எழுத்தை அங்கீகரிக்கும் ஒரு பதிவை பார்த்தது முதல் மகிழ்ச்சி.... பொதுத்தளத்தின் சில எழுத்தாளர்களிடம் பேசி இருக்கிறேன்.... “இது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான் தோழரே!” என்று சொல்வதோடு, அவர்கள் சாதியத்துக்கு எதிராகவும், இந்திய ஒருமைப்பாடு பற்றியும் பேசப்போய்விடுவார்கள்... இன்னும் சிலரோ, நான் பேச விழையும் விஷயத்தை முன்கூட்டியே அறிந்தததனால், நம்முடன் பேசுவதையே தவிர்த்து விடுவார்கள்.... “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்” பதிவு செய்வதால் மட்டுமே எல்லோரும் “முற்போக்கு” எழுத்தாளர்கள் ஆகிவிடுவதில்லை.... அந்த “முற்போக்கு எண்ணம்” அவர்கள் மனங்களில் இருக்க வேண்டும்....
அப்படி ஒரு முற்போக்கான கருத்துகளை வெகுகாலமாக துணிந்து சொல்வது ஜெயமோகன் அவர்களின் இயல்பு.... ஒருபால் ஈர்ப்பை பற்றிய விளக்கத்தை எப்போதோ அவர் யோசித்து பேசத்தொடங்கிவிட்டார்....
இப்போது எங்கள் உலகம் பற்றியும் அவர் சொல்லி இருக்கும் விஷயம், நிச்சயம் பொதுத்தளத்தின் இலக்கிய வட்ட நபர்களால் பார்க்கப்படும், அது கவனிக்கப்படும்....
இன்னொரு மகிழ்ச்சிக்கு காரணம்,ஜெ அவர்கள் பயன்படுத்திய தலைப்பு... “ஒருபாலுறவின் உலகம்...” என்ற தலைப்பு.... இதுநாள்வரை ஓரினசேர்க்கை என்ற பதமே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டது (ஜெ அவர்களே கூட சில இடங்களில் அப்படித்தான் பயன்படுத்தி இருப்பார்கள்).... இப்போது “ஓரின சேர்க்கை” என்பது “ஒருபால் உறவு” என்று மாறியது பெரிய விஷயம்.... இதன் உள்ளார்ந்த அர்த்தம் எல்லோருக்கும் புரியுமா? என்பது எனக்கு தெரியவில்லை... அதாவது “இது வெறும் உடல் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல, இது உறவு மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம்” என்பதை இனி மக்கள் புரிந்துகொள்வதற்கான முதல் படிதான் இது....
இன்னும் எங்கள் ஒருபாலுறவு உலகத்தில் வெளியில் தெரியாத எத்தனையோ அற்புத படைப்புகள் புதைந்து கிடக்கின்றன.... நிச்சயம் அவை வெளிவந்து அங்கீகரிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மட்டும் என்னால் உணரமுடிகிறது....
இது எங்கள் அங்கீகாரத்தின் முதல் படியாகத்தான் நான் நினைக்கிறேன்.... இன்னும் ஆயிரம் படிகள் நாங்கள் உயர சென்றாலும், முதல் படியாய் எங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சேர்த்த “ஜெயமோகன்” அவர்களை என்றைக்கும் மறக்க மாட்டோம்.... மீண்டும் ஒருமுறை எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, அடுத்த பதிவோடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்....
நன்றி....
இப்படிக்கு,
உங்கள், விஜய் விக்கி....

8 comments:

 1. விக்கி முதலில் உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லனும்.நம்ம உணர்வுகளை ஜெயகாமோகன் அவர்களிடம் எடுத்து சென்றதற்கு. அவரின் கருத்துகளையும் படித்தேன். நம் உணர்வுகளை புரிந்துகொண்ட அவருக்கு நன்றி. கண்டிப்பா உங்களது முயற்சிக்கு கிடைத்த நம் அங்கீகாரத்தின் முதல்படிதான்.
  வாழ்த்துகள். நன்றி விக்கி.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா...

   Delete
 2. இது உங்களால் சத்திய பட்ட ஒன்று தல!! வாழ்த்துகள்!!

  ReplyDelete
 3. விக்கி இது உங்களாலும் இங்கு இருக்கும் அனைவருக்கும் கிடைத்த பெரிய வெற்றி, இதில் உங்களின் பங்கு மறக்கப்பட முடியாதது. யாருமே தொடாத ஒரு விஷயத்தினை நீங்கள் கைகளில் எடுத்து உலகம் அறிய ஒரு மேடையினை அமைத்து உலக ஒரு பால் மனிதர்களிற்கு ஒரு பேர் உதவி செய்து கொண்டு இருகின்றீர்கள், நீவீர் வாழ்க பல்லாண்டு.,

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி விஜய்.... உங்களை போன்ற ஆதரவு நண்பர்கள் இல்லாமல் நிச்சயம் இது சாத்தியமாகி இருக்காது.....

   Delete
 4. Jeya mohan sir ta pesi innum neraya help kekkalame..

  ReplyDelete